Monday, July 04, 2016

திரு வண்புருஷோத்தமன் திருக்கோவில் , திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 55)

அடுத்த ரெண்டாவது நிமிட்டில் 700 மீட்டர் கடந்ததும் புருஷர்களில் உத்தமனை ஸேவிக்கலாம்.  வெளிப்ரகாரத்திலேயே  தரையெல்லாம் ப்ளிச்!  டைல்ஸ் போட்டு நல்லா வச்சுருக்காங்க. கொடிமரம் கிடையாது. பலிபீடமும், பெரிய திருவடிக்கான சந்நிதியும் உண்டு.

சின்னதா அழகா ஒரு  குட்டித்தேர்!  சப்பரம் என்றும் சொல்லலாம்.

திருமங்கை ஆழ்வாரின் பத்துப் பாசுரங்களும்  பளிங்குக் கல்வெட்டில்!
முரளிதர  ஸ்வாமிகளின் கைங்கர்யம்.

கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன் கதிர்முடி யவைபத்தும்

அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு அளித்தவ னுறைகோயில்

செம்ப லாநிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள்சூழ்

வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.


மூலவர் புருஷோத்தமன் ராமனல்லால் வேறு யாருமில்லைன்னு  பாடி  மங்களாசாஸனம் செஞ்சுருக்கார், நம்ம திருமங்கை ஆழ்வார்!

வழக்கம்போல் பத்து பாசுரங்கள்! (  1258-  1267 -10 பாசுரங்கள்.)
சென்னை ஸில்க்கின் சம்பாவனை லிஸ்ட் தொட்டடுத்து. எதோ இந்தவரையாவது  தர்மங்கள் செய்ய மனம் இருப்பது சந்தோஷமே!
கோவில் நிலத்துக் குத்தகைகளில் இருந்து வந்த நெல்லைக் காயப்போட்டுருந்தாங்க, அங்கங்கே!  அந்தக் காலங்களில்  சும்மாக்  கோவிலைக் கட்டிவிட்டுடாமல், இடைவிடாத பராமரிப்பு, தினசரி பூஜை மற்ற காரியங்களுக்காக ஆகும் செலவை சமாளிக்க நிலபுலன்களையும் கோவிலுக்கு எழுதி வைக்கறதுதான் அரசர்கள் கடமை.

நிலம் என்றால் பெருமாளேவா வந்து பயிர் வைக்க முடியும்? குத்தகைக்கு எடுத்து பயிர்பச்சை வச்சு, அறுவடை ஆனதும் பெருமாளுக்கு உரிய பங்கைக்கொண்டு வந்து அளந்து கொடுப்பாங்க.  இதிலெல்லாம் நேர்மை இருந்தது அப்போ!  கோவில்களும், பட்டர் ஸ்வாமிகளும் செழிப்பா இருந்தாங்க. வயித்துப் பாட்டுக்குக்  குறை ஏதும் இல்லாததால்... பகவத் சேவைகளில் முழு மனசுடன் ஈடுபாட்டோடு நடந்தாங்க.  தவிர சனமும் சாமிக்குன்னு வாரிக்கொடுத்துச்சு!   இப்போ.....  கலி முத்திப்போச்சே  :-(


மூலவர் புருஷோத்தமப் பெருமாள் நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார். பட்டர் ஸ்வாமிகள் , தீபாராதனையுடன் நல்லா தரிசனம் செஞ்சு வச்சு தீர்த்தம், சடாரி ஆச்சு.



கோவிலின் முன்மண்டபத்துலேயே   நம்ம ஆஞ்சியின் சந்நிதி.  அவர் பார்வை போகுமிடத்தில் ஸ்ரீராமர்,  சக்ரவர்த்தி திருமகன் சந்நிதி. உள்ளே சீதையும் லக்ஷ்மணனும், ஹனுமனும் இருக்காங்க. மண்டபத்தின் சுவற்றிலும் சிறிய திருவடிக்குக் குட்டியா ஒரு சந்நிதி.   அட!  மொத்தம் மூணு நம்ம ஆஞ்சிக்கு!!!  பேஷ் பேஷ்!

நம்மாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள், சேனை முதலியார் சந்நிதிகளுடன் சின்னதா  ஆண்டாளும் ஒரு சின்னூண்டு சந்நிதியில். மண்டபம் தாண்டி கருவறைக்குப் போகுமிடத்தில் என்பதால் க்ளிக்கலை.

கோவிலை வலம் வர்றோம்.    தாயார் புருஷோத்தம நாயகி, தனிச்சந்நிதியில்  அமர்ந்த திருக்கோலத்தில்.



பாலகன் உபமன்யூவுக்குக் காட்சி கொடுத்த பெருமாள்.

கணவரின் தங்கை ஒரு கிண்ணம் (ஞானப்)பால் சீர்காழியில்         கொடுத்தால், அண்ணியாகப்பட்டவர் இங்கே  ஒரு பாற்கடலையே கொடுத்துட்டாராம்!  அது என்ன கதை?  ஆங்....

வியாக்ரபாதர் என்றொரு முனிவர் இருந்தார்.  இவர்தான் தில்லையம்பலத்தானை வேண்டி, தனக்குப்  புலிக்கை வேணுமுன்னு  கேட்டவர். எதுக்காம்?  தினம் சாமிக்குப் புத்தம் புதுசாப் பூப்பறிச்சு வழிபாடு  செய்வாராம்.  காலையில் இவர் நந்தவனத்துக்குப் போகும்போது ஏற்கெனவே மலர்ந்து நிற்கும் பூக்களில் இருந்து தேன் சேகரிக்க தேனீக்களும் வண்டுகளும் வந்து  பூவை  முகர்ந்து, எச்சில் பண்ணி தேனை எடுத்துக்கிட்டுப் போயிருதாம்.  எச்சிலான பூக்களை எப்படி சாமிக்குப் போடறதுன்னு அவருக்குக் கவலை.

பூ மலர்ந்தால்தானே உடனே  தேனீக்கள் வண்டுகள் எல்லாம் வந்துருது. ஜஸ்ட் மலர்வதற்கு  முன்  வந்து பறிச்சுக்கலாமுன்னா இருட்டில் கண் வேற சரியாத் தெரியலையே....  உச்சாணிக்கிளையில் இருக்கும் பூக்களைப் பறிக்கவும் கஷ்டமாப் போயிருதேன்னு யோசிச்சவர்,  புலிக் கையும் கண்ணும் வேணுமுன்னு கேட்டார்.  இருட்டிலும் கண் நல்லா பளிச்ன்னு தெரிவதோடு, புலி நகங்களால் மரத்தில் ஏறிப்போய்ப் பூப்பறிக்கவும் முடியுமாம்!

அப்படியே ஆச்சு. அவரைப் புலிக்கால் முனிவர்னு சொல்வாங்க. ஒருநாள்  நந்தவனத்தில் பூப்பறிக்க வந்தப்ப, மகன் உபமன்யூவையும் கூடவே கூட்டி வந்துருக்கார்.  ஒரு இடத்தில் உக்காரவச்சுட்டு இவர் உள்ளே போய் தன் வேலையைப் பார்க்கிறார்.  இருட்டில் தனியா உக்கார்ந்துருந்த குழந்தைக்கு  பயம் வருது. கூடவே பசியும்...........

" என்னங்க குழந்தை அழுதே....    ஒன்னும் செய்யாம இப்படித் திருப்பாற்கடலில் தாய்ச்சுண்டு இருந்தால் என்ன அர்த்தம்?"

"என்ன செய்யணும், சொல்லு லக்ஸ். தாயாரே நீதானே...  ஒரு சொம்பு பாலைக்  கொண்டுபோய்க் கொடேன்"

"ஆமாம்...நான் போற வேகத்துலெ கையில் இருக்கும் பாலெல்லாம் கொட்டித்தான் போகும். பேசாம  குழந்தை இருக்குமிடத்தில் ஒரு பாற்குளம் உருவாக்குங்கோ. நான் போய் அதிலிருந்து  எடுத்துக்  குழந்தைக்குத் தரேன்"

"அப்படியே செஞ்சால் ஆச்சு. இதோ........."

  விநாடிக்கும் குறைவான நேரத்தில் குளமும்,  அதை நிறைச்சுப் பாலும் ரெடி!

(என்னம்மா நாத்தனாரே....   ஹாஹா....  இத்தைப் பார்த்தியோ!   மைண்ட் வாய்ஸ் ஆஃப் லக்ஷ்மி! )
உபமன்யூவுக்குப் பாலமுது ஊட்டினாள் புருஷோத்தமநாயகி!


தமிழ்நாட்டுலே இருக்கும்  திவ்ய தேசக்கோவில்களில் புருஷோத்தமன் என்ற பெயரில் மூலவர் இருப்பது இங்கெ இந்தக் கோவிலில் மட்டும்தானாம்!

ஹாஹா   அப்படியா?   அப்ப நாம் திருக்கரம்பனூர் கோவிலில் தரிசித்தவர் யாராம்?  திருக்கரம்பனூர் என்றதும் திகைக்கவேணாம். உத்தமர் கோவில்னு திருச்சியாண்டை சொல்றமே அதே உத்தமர், நம்ம  புருஷோத்தமரேதானாக்கும் :-)



18 comments:

said...

//என்னம்மா நாத்தனாரே.... ஹாஹா.... இத்தைப் பார்த்தியோ! //
நியூசிலாந்து நாரதருக்கு (I mean நாரதியாருக்கு) நமஸ்காரங்களும் நன்றியும் - நாத்.

said...

வியாக்ரபாதர் என்றொரு முனிவர் இருந்தார். இவர்தான் தில்லையம்பலத்தானை வேண்டி, தனக்குப் புலிக்கை வேணுமுன்னு கேட்டவர்.
PAdam - leg. HE was called the 'tiger feet'

said...

குழந்தை பசிக்கு பாற்குளம்...புருஷோத்தமனின் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்...தொடர்கிறேன்...

said...

பாற்குளம், புலிக்கால் [கை] எத்தனை எத்தனை விதமாய் தகவல்கள்......

படங்களும் தகவல்களும் நன்று.

தொடர்கிறேன்.

said...

சன்னதியில் படம் எடுக்க அனுமதித்தார்களோ?

said...

Did u notice the goat scratching in the wall?


The animals scratches itself using its rear legs only.
Many places of its body cannot be reached by its rear legs. What can that poor animal do then? It cannot tell us to do it either as it has no means of expression, being 'Vayilla Jivan' – 'வாயில்லா ஜீவன்'. So what is done is to install firmly on the ground some stone pillars of irregular edges at suitable places in the open where it will be convenient for the cattle to scratch their bodies as they wish! It is pathetic that in a country like ours, where we took pains to cater for even such small things as enabling the animal to scratch itself as a Dharma enjoined on the human being in the past, nowadays we are letting them roam about as virtual skeletons, under nourished and uncared for and letting them be killed for beef!


The above is from Deviatin Kural of Maha Periyava.
http://advaitham.blogspot.com/2013/10/deivathin-kural-56-vol-7-dated-25-oct.html

said...

வாங்க விஸ்வநாத்.


ஆஹா.... நன்றி !

said...

வாங்க Strada Roseville.

புலிக்காலா!!!!

ஆஹா..... காலைக் கையா நினைச்சுக்கிட்டேனோ!!!

நன்றி.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

தொடர்வருகைக்கு நன்றிப்பா!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நம்ம ஊரில் கோவில் கதைகளுக்கா பஞ்சம்?

ஒரு பெயருக்கே பல கதைகள் வந்துருமே!

தொடர் வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

சில கோவில்களில் அனுமதி உண்டு. சிங்கை சீனிவாசனை படமெடுத்துத் தள்ளலாம். இந்தப் பதிவில் சில படங்கள் வைஷ்ணவம் பக்கத்தில் கிடைத்தது.

படமெடுத்தால் மூலவர் சக்தி போய்விடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவ்ளோ வீக்காவா இருப்பார் சாமி?

said...

வாங்க Strada Roseville.

சின்ன வயசில், பிள்ளைகளும் முதுகு அரித்தால் சுவரில் உராய்ந்து கொள்ளுமே! நானும்கூட அப்படிச் செஞ்சுருக்கேன். இப்ப நம்ம வீட்டில் பூனைக்கு ஸ்க்ராட்ச் போஸ்ட் இருக்கு:-)

said...

லக்ஸ், நாத்தனார் சிண்டு முடியல், கற்பனைகள் அபாரம். கட்டுரையும் அபாரம்.

said...

இந்த முரளீதர சுவாமிஜி தொடர்ந்து வரிசையா நாலஞ்சு கோயில் கல்வெட்டுகள்ள இருக்காரே.

தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ் அமுதம்னா.. ஆண்டவனுக்கும் தம்வண்டு சிறுவாய் அளாவிய மலர் அமுதம்னு வியாக்ரபாதருக்குப் புரியாமப் போச்சே. அது புரியாம புலிக்கால் கேட்டிருக்காரே. ம்ம்ம்ம்!

குழந்தை அழுதா மொதல்ல கவனம் ஈர்க்கப்படுவது பெண்களோட காதுகளாத்தான் இருக்கும். மனிதன் தோன்றியதில் இருந்து நடக்குற விஷயமில்லையா. அதுனாலதான் சீர்காழியில தாய் கொடுத்தாள். இங்கே திருமகள் கொடுத்தாள்.

said...

Super.. நல்ல தகவல்கள் ... கூடவே நானும் வரேன் :)

said...

வாங்க பித்தனின் வாக்கு.

அப்பப்பக் கொஞ்சம் சிண்டும் முடியவேண்டித்தானே இருக்கு :-)

ரசிச்சதுக்கு நன்றி !

said...

வாங்க ஜிரா.

முரளிதர ஸ்வாமிகள் இந்தப் பக்கங்களில் கோவில் புனரமைப்புக்கு நல்ல திருப்பணி செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கார். என்ன ஒன்னு.... சரியாக்கிக் கொடுத்தபின் அதை நல்லமுறையில் மெயின்டெய்ன் செய்யாமல்.... பழையபடி ஏனோ தானோன்னு போட்டு வச்சுடறாங்க :-(

வியாக்ரபாதர், அவருக்குத் தோணியதுபோல சாமி கும்பிடறார். நாம்? நமக்க்த் தோணியதைப் போல! சுதந்திரமா செய்யறது நல்லாத்தான் இருக்கு!

இந்த பால் சமாச்சாரத்துலேதான் கைக்குழந்தைகளுன்னா சரி. பெரிய குழந்தைகளுக்கு வேற தின்பண்டம் கொடுத்து பசி ஆற்றி இருக்கப்டாதோ?

சீர்காழி கோவிலில், திருமுலைப்பால் உற்சவம்வேற கொண்டாடுறாங்களாம் !!!!

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

கூட வருவதற்கு நன்றிகள்!