Friday, March 11, 2016

வோட்டுப் போட்டாச்!

மாற்றம்  வேணுமா வேணாமா?

மனசில் இருப்பதைச் சொல்ல முஹூர்த்தம் குறிச்சாச்சு. இன்னும் 12 நாட்கள்தான் இருக்கு. மார்ச் 21க்குள் அனுப்பிருங்க. மார்ச் 24 தான் கடைசித்தேதின்னாலும் எல்லாமே போஸ்ட்டல்  வோட்டு என்பதால் மூணுநாளைக்கு முன்னால் அனுப்பச் சொல்லி இருக்காங்க.

மறுநாள் மார்ச் 25க்கு முடிவு சொல்லிருவாங்க.

அப்புறம் எண்ணி முப்பத்தியோராம் நாள் ஏப்ரல் 25 எது ஜெயிக்குதோ அது கொடி ஏறும். எங்க நாட்டுக் கொடிநாள் ஏப்ரல் 25 என்பதால் அன்றுமுதல் புதுசு!

ஏற்கெனவே கொடிமாற்றம் பற்றி சொல்லி இருக்கேன். இது ஒரு சரித்திர நிகழ்வுன்னு! எடுத்தேன் கவிழ்த்தேன்னு  செய்யற சமாச்சாரமில்லை இது. ஓட்டுப்போடும் உரிமையுள்ள நாட்டு மக்கள் அனைவரையும் கேட்டே  செய்றதால்  நிதானமாத்தான்  முடிவெடுக்க முடியும்.

ஏராளமான டிஸைன்கள் வந்து அதில் இருந்து அதுலே இருந்து வடிகட்டி எடுத்த ஒரு நாற்பது டிஸைன்கள் இங்கே.



அப்புறம் அந்த நாற்பதை இன்னும் வடிகட்டி அஞ்சாக்குனது இங்கே.


அதுலே ஜெயிச்சது என்னன்னும் சொல்லி இருக்கேன்.

இப்ப  கடைசியா ஒரு  கருத்துக்கணிப்புக்கு வோட் போடணும். வோட்டிங் பேப்பர்கள் மார்ச் 3 முதல்வீடுகளுக்கு வரத் தொடங்கியாச்சு.

இதுக்கிடையில் போன கருத்துக்கணிப்பில் ஜெயிச்ச கொடியை ஆதரிச்சு ஒரு கூட்டம் பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சு இருக்கு.  தெருமுனையில்  மேடை போட்டோ, பேட்டைக்குப் பேட்டை  போக்குவரத்தை பேஜாராக்கிக் கூட்டம் போட்டோ இல்லையாக்கும். இதுவும் நம்ம தபால்பெட்டிக்குத்தான் வந்து சேர்ந்துச்சு.

மாற்றத்துக்கு வோட் போடுங்க.

நாட்டின் முக்கிய நபர்களில் யார் யார் புதுக் கொடியை ஆதரிக்கறாங்கன்னு ஒரு பட்டியல்

 மாற்றத்துக்கான நாலு முக்கிய காரணங்கள்.

வியட்நாம் போரில் கலந்துகொண்ட நியூஸி  படை வீரர் LT.Col. Chris Mullane ONZM, MBE. President of  Devonport RSA  அவர்களின் கருத்து.


இப்படி  காரணங்களை அடுக்கி  ஒரு ப்ரோஷர்.

 நாம் அஸ்ட்ராலியாக்காரங்க இல்லை. பெருமைமிக்க கிவிக்கள்.அதனால் மாற்றத்துக்கு  வோட்டு போடுங்க.

இப்ப நடப்பில் இருக்கும் கொடி  நியூஸி மக்களால் தேர்ந்தெடுக்கப்படலை. கிடைச்ச சான்ஸை இப்பக் கோட்டை விட்டுட்டீங்கன்னா  இன்னும் பல தலைமுறைகள் காலம் வரை காத்திருக்கவேணும்.

இப்ப நடப்பில் இருக்கும் கொடியைப் பார்த்தால்  யாரும் சட்னு அஸ்ட்ராலியாக் கொடி சொல்லிருவாங்க. அப்படி ஒரு குழப்பம் இருக்கு. நம்மைவிட கூடுதலா 2 நக்ஷத்திரம் இருக்கே தவிர மற்றதெல்லாம் அப்படிக்கப்படியே:-(

புதுக்கொடியில் இருக்கும் பெரணி இலை பல வருசங்களா நம்மை  நியூஸி மக்கள்னு அடையாளப்படுத்தும் சமாச்சாரம். நாட்டுக்காக போரில் உயிர்துறந்த நம் மக்களின் கல்லறையில் கூட  பெரணி இலைச்சின்னம்தான் பொறிச்சுருக்கு. கவனிச்சுப் பாருங்க.




Silver Fern சின்னம்வெள்ளையர்கள் இந்த நாட்டில் வந்து குடியேறுனதுக்கு முன்னே இருந்த காலக் கட்டத்துலேயே   நம்ம மவொரி இனத்துடன் சம்பந்தப்பட்டது.


இப்படி காரணகாரியங்களைப் படிச்சுப் பார்த்தால்  நியாயமாத்தான் இருக்கு!கொஞ்சூண்டு யோசனை செஞ்சு பார்த்தால்.........   எங்க பாஸ்போர்ட்லேகூட முகப்பு அட்டையில் இருப்பது  ஸில்வர் ஃபெர்ன் இல்லையோ!!!!




அரசு அனுப்பிய வோட்டுச் சீட்டு அடங்கிய கவரில் ரெண்டு கொடிகளுக்கும் பாகுபாடு இல்லாமல் ஒரே அளவில்  கொடிகளைப் பற்றியும், அவை சொல்லும் சேதிகள் குறித்தும் சொல்லி இருக்காங்க.



எல்லாத்தையும் சீர்தூக்கி ஆராய்ஞ்சதில் நடப்பில் இருக்கும் கொடியை விட  புதுக்கொடிதான் நியூஸியின் சமூகத்தைப் பிரதிபலிக்குது என்று உணர்ந்ததால்

மாற்றம் வேணுமுன்னு வோட்டுப் போட்டுட்டேன்! தபால் செலவு கூட இல்லை!


PINகுறிப்பு: இன்னும் எண்ணி ரெண்டே வாரத்தில் புதுசா பழசான்னு  தெரிஞ்சுபோயிரும். அப்போ மீண்டும் சந்திக்கலாம்.



9 comments:

said...

புதுசா ..பழசா ...நாங்களும் பார்க்க ஆவலா இருக்கோம்..

என்னோட தொடர் பதிவில் உங்க தளத்தையும் குறிப்பிட்டு இருக்கேன் ..நேரம் கிடைக்கும்போது பாருங்க .....

said...

ஒரு கொடிக்கான வாக்குப்பதிவா வெரி இண்டெரெஸ்டிங்

said...

எங்க ஊரில் ஒட்டு போடும் பிரச்னை இல்லை. நான் போடா விட்டால் யாரேனும் அதை போட்டு விடுவார்கள்!

said...

நல்ல முடிவு. நாட்டின் உண்மையான பண்பாட்டையும் அடையாளங்களையும் பிரதிபலிக்கின்ற புதிய கொடிக்கு என்னுடைய ஆதரவுகள்.

said...

நாட்டின் கொடிக்கு வாக்குப்பதிவுகள்...புதிய பழைய கொடிக்கான வேறுபாடுகள், ஏன் என்பதற்குக் காரணங்கள் என்று கலக்கல் போங்க..சுவாரஸ்யமும் கூட. இங்கெல்லாம் அப்படியா ஹும்...நாங்க வைச்சதுதான் சட்டம் அப்படின்ற மாதிரில்ல..
இங்க இப்படி போஸ்டல் வோட்டிங்க் வந்துருச்சுனா ட்ராஃபிக்ல மாட்டிக்காம வீட்லருந்தே சுகமா ஓட்டுப் போட்டுருலாம்...

புதிய கொடி ஜெயிக்கட்டும் காத்திருக்கிறோம் மாற்றத்தைக் காண...

said...

அருமையான சாய்ஸ். ஃபெர்ன் மிகவும் பிடிக்கும். கொஞ்சம்
ஸ்டார்ஸைவிட்டு வெளியே வந்ததற்குப் பாராட்டுகள்.

said...

எத்தனை நல்ல விஷயம் இது! தங்களது நாட்டு கொடியை மாற்ற அனைவரிடமும் வாக்கு எடுப்பது!

புதிய கொடி தான் எனக்கும் பிடித்திருக்கிறது!

said...

அடடா ..பழைய கொடிக்கே 57 சதவிதம் வோட்டாமே ...

said...

நியூஸ் படிக்கும் போது உங்க நியாபகம் வந்துச்சு ...அடடா நமக்கும் உலக அறிவு வளருது ..!