Friday, March 07, 2014

ஒரு நாள் போதுமா?

ஊஹூம்.........   போதவே போதாது:(  கொட்டிக்கிடக்கும் சிற்பங்களை அணுஅணுவாக ரசிக்கணும் என்றால் ஒரு வாரமாவது வேணும்!
நின்று, இருந்து கிடந்துன்னு மூன்று திருக்கோலங்களிலும் சேவை சாதிக்கிறார் வைகுண்டப்பெருமாள் என்னும் பரமபதநாதர்! இங்கத்துத் தாயார் பெயர் வைகுந்த வல்லி.

பாண்டவதூதர் கோவிலில் இருந்து ராஜவீதி வழியா  பரமேச்வரவிண்ணகரம் ஜஸ்ட் ரெண்டே கிலோமீட்டர் தூரம்தான்! ஏழே  நிமிசப்பயணம்.  நெஞ்சை நிறைப்பது போல் ஹோ....   ன்னு இருந்துச்சு முதல் பார்வையிலேயே! தொட்டடுத்து  ஒரு மசூதி வேற !

தொல்லியல் துறையின்  கண்காணிப்பில்  இருக்கு கோவில். ஏழாம்  எட்டாம்  நூற்றாண்டுகளில் கட்டி இருக்கலாம் என்றுதான் எனக்கு சேதி கிடைச்சது.  பல்லவர்கள்  ஆண்ட காலம்.

அப்ப  இந்தக்கோவிலை டிஸைன் செஞ்சவர் நம்ம ஆயன சிற்பியாத்தான் இருக்கணும்:-)  கைலாசநாதர் கோவிலும் இதே சமயம் ஜஸ்ட் ,சில பத்து  வருசங்களுக்கு முன்னாலேதான் கட்டி இருப்பாங்க.

இந்தமுறை கைலாசம் போகலை. போனமுறை போனது இங்கே.


வாசல் கேட்டைக் கடந்துபோனால்  பெரிய (காய்ஞ்சு போன) புல்வெளி.நடுவில் அகலமான நடைபாதை. முன் வாசல்  கதவுக்கு முன்னே நாலு பூக்கள் இருந்தன. பஞ்சாபில் இருந்து  கல்விப்பயணமாம்.  நாங்க  ஹிந்தியில் விசாரிக்க ஆரம்பிச்சதும்  அவுங்களுக்கு ஏகப்பட்ட குஷி:-) சௌத் இண்டியா ரொம்ப நல்லா இருக்காம். நாங்க கூட இப்ப  மத்ராஸி ஆகிட்டோமுன்னு சொல்லி  தலையில் வச்சுக்கிட்டு இருந்த  பூச்சரத்தை எடுத்துத் தோளில் போட்டுக் காமிச்சாங்க.!   நாலுபேரையும் சேர்த்து படம் எடுத்துத்தரச் சொல்லி 'அங்கிளை' அவுங்க  கேட்டுக்கிட்டாங்க.  ஆண்ட்டி சும்மா இருக்கலாமா?  நானும் என் பங்குக்கு  அவுங்களைச் சுட்டுத் தள்ளினேன்:-) அதில் ஒரு பூ, மஞ்சள் சாமந்திப் பூச்சரத்தைத் தலையில் வச்சுக்கிட்டு இருந்தது. உடனே  கொஞ்சம் கொசுவத்தி ஏத்துனது  என் மனசு.

சரியான பூ பிசாசு நான். அக்காக்களைப்போல்  இல்லை. அவுங்க நாசூக்கா மல்லி,  கனகாம்பரம் வச்சுப்பாங்க.  வாழைப்பூ தவிர எனக்கு பூவில் பேதமே இல்லை. அதன் கனமும் பொருட்டில்லை. பாரம் தாங்காமல் தலையே  கீழே விழும் அளவுக்கு  புரட்டாசி மாசச் சாமந்திப் பூவையும்  விட்டுவச்சதில்லை.   இப்ப  அதெல்லாம் குறைஞ்சு போச்சு:( ஆனாலும்  சென்னை வரும்போது  பூவைக் கண்டால் விடமாட்டேன். ஜஸ்ட் ரெண்டே முழம்தானாக்கும் கேட்டோ!

வெளியே பார்க்க படுசிம்பிளாத்தான் இருக்கு.  உள்ளே நுழைஞ்சவுடன்  கண்ணுக்கு நேரா பலிபீடம், கொடிமரம், பெரியதிருவடிக்கான சின்னச் சந்நிதி வழக்கம்போல். முன் மண்டபத்தைக் கடந்து  உள்ளேபோனால்  சுத்திவர ஓடும் அகலத்திண்ணை.  நாலுபடி இறங்கினால் கீழே  பிரகாரத்தின் நடுவில்  கருவறையும் மண்டபமும். ஆனால் நாம் கீழே இறங்காமல்  திண்ணையையும்  கருவறையையும் இணைக்கும் சின்ன கல்பாலம்  மேல்  நாலடி  நடந்து கருவறை மண்டபத்துக்குள்  போய் மூலவரை தரிசிக்கலாம்.  வீற்றிருந்த திருக்கோலம்.  படங்கள் எடுத்துக்கலாமான்னு கேட்டதுக்கு   வெளியே தாராளமா எடுத்துக்குங்கோன்னார் பட்டர்.



மாடக்கோவில் வகை என்றபடியால்  ரெண்டாம் அடுக்கில்  கிடந்தும்,  மூன்றாம் அடுக்கில் நின்னும் ஸேவை சாதிக்கிறாராம் எம்பெருமாள்.

மாடிக்குப்போகணுமுன்னா ஏகாதசி நாளா இருக்கணும்.  அன்றைக்குத்தான்   அனுமதி.   வைகுண்ட ஏகாதசிக்கு  காலை அஞ்சுமுதல் இரவு எட்டுவரை  ஸேவை உண்டு.  அதுக்காக 12 நாட்கள் அங்கேயே இருக்கமுடியுமா என்ன:( இன்னிக்குத் தேதி  டிசம்பர் 29 தான்!  பெருமாள் வடக்கே தலை வச்சுக் கிடக்கிறாராம்!

மூணாம்  மாடியில் 'நிற்பவரை' யாரும் கண்டுக்கறதே இல்லை. அவருக்கு பூஜையோ அட்லீஸ்ட் ஒரு விளக்கு  வைக்கறதோகூட  இல்லைன்னதும்  மனசுக்குக் கஷ்டமாப்போச்சு.

 திண்ணைன்னு சொன்னேன் பாருங்க........    ஒடுக்கமா இல்லாம நல்ல அகலமாத்தான் இருக்கு. அதன்  வலது பக்க ஓரங்களில்  யாளித்தூண்களா வரிசை கட்டி நிக்குது. பல்லவர்களின்  ட்ரேட் மார்க்  யாளிகளாத்தான் இருக்கும்போல!  எல்லாத்துக்கும்  நம்ம கோகி யின் முகச்சாடை வேற ! குழந்தை  அங்கே  வைகுண்டத்தில்தான்  இருப்பான். கோபால க்ருஷ்ணன் இல்லையோ:-)

இடதுபக்கச் சுவர்கள் முழுசும் சிற்பங்கள், சிற்பங்கள்!!!  நெடுகப் பார்த்துக்கிட்டே போகலாம்.  அங்கங்கே மின்விளக்கு போட்டு வச்சாலுமே  கொஞ்சம் இருட்டாத்தான் இருக்கு. ஒவ்வொன்னையும்  நின்னு நிதானமாப் பார்க்க  ஒரு வாரமாவது வேணும்!


கருவறையின் வெளிச்சுவர் முழுக்க மூணு பக்கத்திலும்  இன்னும் ஏராளமான சிற்பங்கள்.  என்ன ஒன்னு.....மூக்கும் முழியும்  காணோம்:(

காற்று இன்றுவரை கரைத்து  வைத்திருக்கும்  சிற்பங்களின் எச்சத்தைத்தான் பார்க்க வேணும்.

கடல்மல்லையில் உப்புக்காத்து. அதான் அரிச்செடுக்குதுன்னு  சொல்றோம். ஆனால் இங்கே? இது கல்லைக் கரைக்கும் காற்று.

கருவறையின்  பின்பக்க வெளிப்பக்கச்சுவரில் (சரியா  உள்ளே மூலவர்  இருக்குமிடத்துக்குப்பின் சுவர்) கம்பிக்கதவுக்குப்பின்   அதே போஸில் இருக்கார்! இவரைத் தரிசிக்கன்னே திண்ணைக்கும்  இவர் வாசலுக்கும் இன்னொரு  கல் பாலம் கூட போட்டுருக்கு!  பாலம் முடிஞ்சு மூணு படி ஏறிப்பார்க்கணும்.
2508


இந்தக்கோவிலில் இருந்து  அரண்மனைக்கும், கைலாசநாதர் கோவிலுக்கும்  போறமாதிரி சுரங்கப்பாதை  இருந்துருக்கு. ஆங்கிலேயர் ஆட்சியில்  இந்த ரகசியம்  வெளிப்பட்டதும் அதைத் தோண்டிப்பார்க்க முடிவு செஞ்சுருக்காங்க. ஊர்சனம் முழுக்கக்கூடி இதை எதிர்த்து நின்னப்ப,  இஸ்லாமிய அன்பர்  அலி முஹம்மது  கான் என்பவர்  மக்களுக்கு  ஆதரவு தெரிவித்து கூட நின்னு  போராடினார். இவர் ஒரு பெருமாள் பக்தரும் கூட !


ஸோ...  நம்ம வைகுந்த நாதனுக்கு அடுத்த வீட்டில்  மசூதி இருப்பது ஒரு ப்ரச்சனையே இல்லையாக்கும்,கேட்டோ!

அதுக்குப்பின் சுரங்கப்பாதையை அடைச்சுட்டு  இடைப்பட்ட வெளியில்  நேராக் கருவறைக்குப்போகும்படி கல்பாலம்  கட்டுனதா ஒரு தகவல்  கிடைச்சது. சுமார்  250 வருசத்துக்கு முந்தி நடந்த சம்பவமிது.  உண்மையாக(வும்) இருக்கலாம்.


சிலைகளைப் பழுது  பார்க்கிறோமுன்னு அங்கங்கே சிமெண்ட் வச்சுப் பூசி இருக்காங்க யாரோ:(

உள்பிரகாரம் விட்டு வெளியே வந்து  வெளிப்பிரகாரம் வலம் வந்தோம்.  பரவாயில்லாம, சுமாரா, நல்லாத்தான் இருக்கு கோவில் நந்தவனம்.  வெளிபிரகாரச் சுவரில் கூட அங்கங்கே யாளிகள். மரத்தடி மேடையில் சேஷன்கள்!

அங்கேயும் புல்தரைகள் இருந்தாலும்  எல்லாம் வறண்ட  நிலம்.  உயிரைக்கையில் பிடிச்சுக்கிட்டு வாடும் புற்கள். ஓரமாக வரிசையில் இருக்கும் செடிகள் பரவாயில்லை.  ஒருவேளை அந்தச் செடிகளுக்கு மட்டும் தண்ணி காமிக்கிறாங்களோ?

கோவில்குளம் இன்னும் பாவம்:(

தண்ணீர் கஷ்டம் இருக்கு என்பதை  நாம் வரும் வழியில் பார்த்த வறண்ட பாலாறு  சூசகமாச் சொல்லத்தானே செஞ்சது.இல்லையா?

நல்லவேளையாக, 1958 இல்   தொல்லியல் துறையின் கண்  இந்தக் கோவிலின்  மேல் விழுந்தது!  மேலும் சிதிலமாகாமல் காப்பாற்ற அவர்கள்  விஞ்ஞான முறையில் ஏதேனும்   செஞ்சா நல்லது என்ற எதிர்பார்ப்போடு இருக்கேன். 'எங்க  கவனிப்பில் வந்து   அம்பத்தி ஆறு வருசம்தான் ஆச்சு.  இன்னும் கொஞ்சநாள்  போகட்டுமே' ன்னு இருக்காங்களோ என்னவோ:(

உடனே செய்யணும் என்ற அவசரப்பட்டியலில்  இருந்தால் தேவலை.  இதைப்போல் ஒன்னு நம்ம ஆட்சியில் கட்டமுடியுமான்னு  அரசு ஒரு  விநாடி நினைச்சுப் பார்த்தால்.............

ஹூம்....நினைச்சுட்டாலும்........:(  எப்போதான்  சரித்திரம் எவ்வளவு முக்கியம் என்பதை உணரப்போறோமோ!

இருட்ட ஆரம்பிக்குதே....  இன்னொருக்கா என்ற பட்டியலில்  சேர்த்துட்டுக் கிளம்பினோம்.

தொடரும்..........:-)






12 comments:

said...

இன்றைக்கு எதுவுமே முக்கியம் இல்லாமப் போச்சி...!

அழகிய படங்களுடன் விளக்கம் அருமை அம்மா... நன்றி...

said...

கண்ணாடி புகைப்படம் ரொம்ப ரொம்ப அற்புதமாக இருக்கு. தேவியர்கள் எங்களுக்கு இதே போல ஒரு கண்ணாடி வேண்டும் என்கிறார்கள். போதும் தானே?

said...

பூ!!!! :-))

said...

எத்தனை எத்தனை சிற்பங்கள்..... பல சிற்பங்கள் உடைந்து இருப்பதைப் பார்க்கும்போது பழமையை பாதுகாக்காத நம் மீதே கோபம் வருகிறது. சமீபத்தில் தான் தி.கொ.போ. சீனு பக்கத்தில் சிற்பங்கள் செய்யும் கற்கள் இரண்டு வகை எனப் படித்தேன் - ஆண் கல், பெண் கல்...... பெண் கல்லில் செய்யப்பட்ட சிலைகள் காலப்போக்கில் கரைந்து, சிதைந்து போவதாக எழுதி இருந்தார்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

உண்மைதான். காசுதான் முக்கியமுன்னு இருக்கு. உலகம் போற வேகத்தில் நின்னு பார்க்க ஏது நேரம்?

said...

வாங்க ஜோதிஜி.

இது குளியலறைக் கதவு.வெளிப்புறம்.

சின்ன இடமா இருந்தால் கண்ணாடிக்குன்னு தனியிடம் தேடவேண்டாம்:-)

வீடுகளில் வார்ட்ரோப் கதவுகளுக்கு இப்படிக் கண்ணாடி போட்டுட்டால் ரொம்பவே வசதி.

said...

வாங்க குமார்!

பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ!

நியூஸியில் தலைப்பூதான் இல்லை:(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


அப்ப கோவில்களில் முழுசும் பெண்கல்தானா !!!!!


இயற்கையும் பெண்களுக்கெதிரா சதி செஞ்சுருச்சே!

சீனு சொன்னது உண்மைதான். நானும் முந்தி எங்கோ வாசிச்சு இருக்கேன்.

மென்மை என்றாலே பெண்கள்தான்:-)))

said...

படங்கள் அனைத்தும் அருமை . கோவிலின்,அழகு சுத்தம் மனதிற்கு இதம் .மக்கள்ஸ் இல்லாததால்
ஜிலோன்னு இருக்கு . அமைதியா இருந்துருக்கும்ன்னு நினைக்கிறேன் .பூ அழகு !!

said...

"ஏராளமான சிற்பங்கள். என்ன ஒன்னு.....மூக்கும் முழியும் காணோம்:("

said...

வாங்க சசி கலா.

பழமையான கோவில்களை மக்கள் விரும்பவதில்லையோன்னு ..... தோணுது:(

பூ, அழகுதான்:-)

said...

வாங்க மாதேவி.

காலம் கரைத்த மிச்சம் அவை:(