Saturday, October 05, 2013

கடவுள் இருக்காண்டா கொமாரு!!!!!

இன்னும்  நாலுநாள்தான் இருக்கு. இதுவரை படிகட்டும் வேலையைப்பத்தி யோசிக்கவே  இல்லை. அதான் போன வருசத்து கேஸட்ஸ் (செங்கல்) ப்ளாக்ஸ் எல்லாம் அப்படிக்கப்படியே இருக்கே!   நம்ம ஹேண்டிமேன் கிட்டே சொல்லி ஒரு கொலுப்படிக்கட்டு செஞ்சு நிரந்தரமா(???)  வச்சுக்கணும் என்று கொள்ளை ஆசை. அதான் இன்னும் நாளிருக்கே.... செஞ்சுறலாம் செஞ்சுறலாமுன்னு சொல்லியே நாட்கள் கடந்து போயிருந்தன.

இதுக்கு நடுவில் நம்ம கல்பட்டார் ஐயா, அவருடைய மருமான் வீட்டுக் கொலுப்படி செய்முறைப் படங்களை அனுப்பி வச்சார்.  சமயத்துக்கு ப் பயன்படுத்திட்டுக் கழட்டி எடுத்து வச்சுடலாம். அவ்வளவா இடம் பிடிக்காதுன்றது ஒரு ப்ளஸ் பாய்ண்ட்.

மேலே உள்ள படங்கள்,  உபயதாரர்  கல்பட்டு ஐயாவுக்கு என் நன்றிகள். 


டாக்டர் அப்பாய்ண்ட்மெண்டை முடிச்சுட்டு வரும்போது , மனசுலே  தோணுச்சு ஈக்கோ ஷாப் போயிட்டுப்போகலாமுன்னு.  இது நம்ம சிட்டிக் கவுன்ஸில் நடத்தும் ரீசைக்ளிங் சென்டர்.  வீட்டுவீட்டுக்கு வேண்டாத சாமான்கள் வருசாவருசம் எப்படியோ சேர்ந்து போகுது பாருங்க. அதை ஸ்ப்ரிங் க்ளீனிங் என்ற பெயரில் கழிச்சுக்கட்ட டம்ப்( DUMP)க்குக் கொண்டுபோய்  காசு கட்டிட்டுப் போட்டுட்டு வர்றதுதான் வழக்கம். அங்கே பயனுள்ள, உடையாத சாமான்களை பிரிச்செடுத்து  மறுசுழற்சிக் கடைக்கு அனுப்புவாங்க. சிலபல சமயங்களில்  புத்தம்புதுசான பொருட்கள் கூடக் கிடைக்கும்.   வியாபாரம் திவாலாச்சுன்னா.... அங்கிருக்கும் பொருட்களை இதுக்குத் தானமாக் கொடுக்கும் வியாபாரிகளும் இங்கே ஏராளம்.  வீடு கட்டிக்க உதவும் செங்கல் (நிஜம்) முதற்கொண்டு, டைல்ஸ்,  கப்போர்டுகள், பாத் டப்ஸ் இப்படி  வந்தா அடுக்கடுக்கா விற்பனைக்குக் கிடைக்கும்.  எல்லாம் புதுசு வேற!

அங்கெபோய் ச்சும்மா ஒரு சுத்து சுத்திவந்தால் நமக்குத் தேவையான(??!!) ஒன்னு  எதாவது கண்ணில் ஆப்டாமப்போகாது. (கண்ணுலே படற பொருளைத் தேவையானதா நினைச்சுக்குவேன் என்பதையும் தனியாச் சொல்லணுமாக்கும்!)

இன்றையத் தேடல் மாடிப்படி(!!)  கிடைக்குதா என்பது!  அஞ்சு இல்லை ஏழு படி கிடைச்சால் போதும்.

கருநீலத்துணி போட்டு வச்சுருந்த சின்ன படிக்கட்டு ஒன்னு கண்ணில் ஆப்ட்டது. சரியா அஞ்சு படிகள்.  ஆனால்; இது மாடிப்படிக்கட்டு இல்லை. சின்னதா க்யூட்டா இருக்கு.  கோபாலிடம் இதை வாங்கறோமுன்னு  சொன்னேன்:-) கடைக்கார ஆட்களில் ஒருத்தர்  கை வண்டியில் வச்சுத்தள்ளிக்கொண்டு வந்து காரில் ஏத்திவிட்டார்.  இந்தக் கடையில் வேலை செய்யும் அத்தனைபேரும் தன்னார்வலர்கள் என்பதைச் சொல்லியே ஆகணும்.   சாமான்கள் வித்துக் கிடைக்கும் காசு முழுசும் தர்மக்காரியங்களுக்கே போகுது.


வீட்டுக்கு வந்ததும் நான் கேமெரா கொண்டு வர்றதுக்குள்ளே  இவர் தடதடன்னு அந்த நீலத்துணியைப் பிய்ச்சு எடுத்துட்டார். (கொஞ்சம் அழுக்காத்தான் இருந்துச்சு. நல்லா ஸ்ட்டேப்பிள்  பண்ணி நீட்டா வச்சுருந்தாங்க.) உள்ளே பளீர்னு புது ஜொலிப்போடு  மரத்தில் அம்சமாச் செஞ்சுருக்கும்  படிக்கட்டு ஷெல்ஃப்.

படிகளின் அகலம்தான் ரொம்பச் சின்னது.  85 செமீ நீளம், 10 செமீ அகலம்தான். போயிட்டுப் போகுது. நம்ம வீட்டு பொம்மைகளும் சின்னதுதானே? சரியாத்தான் இருக்கும்,இல்லே?  கொஞ்சம் ஃபர்னிச்சர் பாலீஷ்  ஸ்ப்ரே செய்து துடைச்சதும் இன்னும் பளீர்.

இன்னும்கூட நம்பவே முடியலை.....  வேணுங்கறது எப்படி சரியான நேரத்துக்குக் கிடைச்சதுன்னு!  எதுக்காக இதை செஞ்சுருப்பாங்க.  எதாவது டிஸ்ப்ளே செய்யவோ?  வெள்ளைக்காரன் கொலு வைப்பானா என்ன?  நதிமூலம் ரிஷிமூலத்தோடு இதையும் சேர்த்தேன்:-)

மேலே துணிகூடப் போர்த்தவேண்டாம். மரத்தின் அழகே நல்லா இருக்குன்னு முடிவு செஞ்சோம்(!)

கடவுள் உனக்கு நல்லா ஹெல்ப் பண்றாருன்னு கோபால் சொல்றார்.

"எனக்கா? எனக்கா? உங்களுக்குத்தான் உண்மையான ஹெல்ப் பண்ணி இருக்கார். இல்லேன்னா படி கட்டுறேன் பேர்வழின்னு கேஸட்ஸ் செங்கல் வச்சு மரப்பலகை, அது இதுன்னு அமர்க்களப்பட்டு இருக்கும்."

" ஆமாம்.... கூடவே  உங்கிட்டே பா(தி)ட்டு வேறு வாங்கிக்கணும். "

"அது...படிகட்டக் கிடைக்கும் கூலியும் போனஸூமில்லையோ":-))))

"அப்டீங்கறே?"

"கடவுள்  இருக்காண்டா கொமாரு!!!"


அமாவாசைக்கு  நைவேத்தியம் சமர்ப்பியாமின்னு சக்கரைப்பொங்கலும் வெண்பொங்கலுமாச் செஞ்சு  மரப்பாச்சிகள் ரெண்டையும் அழகுபடுத்தி  சாஸ்த்திர சம்ப்ரதாயப்படி  ரெண்டு பேரையும் தாயாரும் பெருமாளுமா மேல்படியில் நிக்க வச்சாச்சு.  மற்றபடிகளை நம்ம துளசிவீட்டுச் சம்ப்ரதாயப்படி யானைகளும் பூனைகளுமா  வந்து இடம்பிடிச்சு இப்போ கொலு ரெடி. முதல் விஸிட்டரா நம்ம 'ராஜலக்ஷ்மி' வந்து பார்த்தார். (என்னவோ நடக்குது மர்மமா இருக்குது.....)

 மூவர் சிங்கையில் இருந்து வந்தாங்க. சீனர்கள் எவ்ளோ அம்சமாப் பண்ணி இருக்காங்கன்னு பாருங்களேன்!!!!

மாடர்ன் அடுக்களை இந்தியன் ஸ்டைல்:-)  இது மட்டும்  இன்டராக்டிவ் சமாச்சாரம்.  என்னென்ன இருக்குன்னு கையில் எடுத்துப் பார்த்து ரசிக்கலாம். நாட்டுலே இப்போதைக்கு முக்கியம் எதுன்னு குறிப்பால் உணர்த்துது.  மூணு வாட்டர்ஸ் !!!  ஃபில்ட்டரில் கேண்டில் கூட இருக்கு.பேஷ் பேஷ். (சண்டிகரில் வாங்கினேன்)

கீழே:  சென்னை ஸ்பெஷல். மஹாபலிபுரம் செட்.  அடுக்குனதுதான் கொஞ்சம் கீக்கிடமாப்போச்சு:(  மகாபலிபுரம் என்றொரு புத்தகம் வாங்கியாந்தேன்.  நல்ல சமயத்தில் அதை காணோம்!  பஞ்சபாண்டவர் ரதம் அடுக்குனதில் பிழை உண்டு:(

நம்ம வீட்டுக் கும்பவாஹினி!!!!


பதிவுலக அன்பர்கள் அனைவரும் ஒரு நடை வந்துட்டு போங்க.

இன்றைய ஸ்பெஷல் வேர்க்கடலை சுண்டல்.

அனைவருக்கும் நவராத்ரி பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்.


PIN குறிப்பு : பாட்டு நான் பாட மாட்டேன். யாரும் பயமின்றி வரலாம்:-)


என்னம்மா இவ்ளோ லேட்டு?

உன்னை மாதிரியா ரஜ்ஜூ?  ட்ரெஸ் பண்ணிவர வேணாமா?


46 comments:

said...

துளசியம்மா, கொலு அருமை.

அன்னையின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.
கோபால் அவர்களுக்கும்,தங்களுக்கும்
இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.

said...

ஜாமய்த்துவிட்டீர்களே
நீங்கள் தலைப்பிட்டது சரிதான்
அந்த ஊரில் அதுவும் மிகச் சரியாக நவராத்திரி
சமயத்தில் ஒத்தப்படையில் இத்தனை
நேர்த்தியாக படிக்கட்டுகள் அமைகிறது என்றால்...
அம்பாளுக்கு உங்கள் வீட்டிற்கு வரவேண்டும்
என்கிற ஆசை வந்திருக்கும்...
வாழ்த்துக்கள்

said...

தாயார், பெருமாள் & மூவர் ,மாடர்ன் அடுக்களை,
மஹாபலிபுரம் செட் ,கும்பவாஹினி என அனைத்தும் அழகோ அழகு.

கொலு பொம்மைகள் மிக மிக அழகு அருமை.
வேர்க்கடலை சுண்டல் ருசியோ ருசி.

இனிய நவராத்திரி வாழ்த்துகள்.

said...கச்சிதா , அழகா ஒரு கொலு! பொருத்தமாக விரைவில் அமைத்தது!
அருமை! படங்களும் நன்று!

said...

ஆமாம்.... கூடவே உங்கிட்டே பா(தி)ட்டு வேறு வாங்கிக்கணும். "

"அது...படிகட்டக் கிடைக்கும் கூலியும் போனஸூமில்லையோ":-))))

அருமையான அரேஞ்மேண்ட் ... கொலுவுக்குப் பாராட்டுக்கள்..!

said...

வெகு அருமை துளசி.இடத்திற்கு ஏற்ப படி கிடைத்த்து.
ஸோ டாக்குட்டர் வீட்டுக்குப் போயிட்டு வரும்போது கண்ணில பட்டதா.ஹ்ம்ம்ம்.ஜுரம் சரியப் போயிடுத்தா.

மாவலிபுரம் நல்லாதான் இருக்குப்பா.நம்ம வீட்டுப் பொண்ணைக் காணுமே .இன்னும் ட்ரெஸ் செய்து முடிக்கலியா.

வேர்க்கடலை சுண்டல் கண்ணை அள்ளிப் போகுதே........

said...

நவராத்திரி நல்வாழ்த்துக்கள் .வேர்கடலை சுண்டல் சூப்பர் . அம்சமான கொலு. அதனால ஒனபது நாளும் வருவோம் . ஒன்பது வகை சுண்டல் ரெடி பண்ணிடுங்க துளசி .

said...

கொலு நன்றாக உள்ளது.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்.

said...

வேர்க்கடலை சுண்டல்ல கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் missing!

பேசாம நீங்க, "கடவுள் இருக்கண்டா கோபாலு" என்று பெயர் வைத்து இருக்கலாம்.

said...

நல்ல மனசோட பண்ணினா நல்லாவே வரும்ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க!!! கண்ணுக்கும் மனசுக்கும் இதமான கொலு. சுண்டல் அருமை. ஆசிர்வாதமும் பண்ணுங்க மேடம்.

said...

//பாட்டு நான் பாட மாட்டேன்//

இந்த வரி வரும்வரை வருவது பற்றி யோசிக்கவேயில்லை. இதைப் படித்தபின்பும் இப்போதைக்கு (நான்) வருவதாக இல்லை என்றாலும், வரப்போகிறவர்களைக் குறித்து ஒரு ஆறுதல்!! :-)))))))))

said...

படிக்கட்டு கிடைத்தது ஆச்சரியம் தான் மேடம்..
கொலு அழகாக இருக்கிறது. கிட்சன் செட் அருமை.

said...

படி நல்ல அம்சமாய் இருக்கிறது. கடவுளுக்கு நன்றி கண்டிப்பாய் சொல்ல வேண்டும் கோபால் சார், படிக்கட்டும் வேலை மிச்சம் தான்.
கொலு மிக அழகு .
கும்பவாஹினி
அழகோ அழகு.
நவராத்திரி வாழ்த்துக்கள்.

said...

புதுப் படிக்கட்டு சூப்பர். பொம்மைகள் கனகச்சிதமாய் அதில் அடங்கி விட்டன பாருங்கள்! அழகு:)! நவராத்திரி வாழ்த்துகள்!

said...

கொலு சூப்பர்.

said...

super we all are intrested

said...

super

said...

அழகோ அழகு. அந்தப் படிகளே அழகுதான். நல்ல தரமான மரப் படிகள்.

பொம்மைகளை எவ்வளவு அழகா வெள்ளங்காரங்க மாதிரி ஒழுங்கா அடுக்கியிருக்கிங்க!!!!! நீங்களும் வெள்ளக்காரங்க தானே :)

கோபால் சார் சொன்ன மாதிரி கடவுள் உங்களுக்கு உதவி செய்றாரு.

said...

நம்பள்கி, கடவுள் இருக்காரு துளசின்னு கோபால் கண்கலங்க சொன்னதா நீயூஸ் :-)

படி அருமை துளசி!

said...

நவராத்திரியை இன்று வரை மறக்காமல் இருக்க காரணம் தேவியர்கள் வந்த மாதம்.

said...

Happy Navarathri!

said...

வாங்க கைலாஷி.

உங்கள் வரவும் ஆசிகளும் வாழ்த்துகளும் கிடைக்க நம்ம கொலு கொடுத்து வச்சுருக்கு.

மனமார்ந்த நன்றிகள்.

said...

வாங்க ரமணி.

எல்லா வருசமும் படிகட்டவே பெரும்பாடாக இருக்கும். இந்த வருசம்தான் ஈஸி பீஸி:-)

இந்த வருசக் கொலு ஸ்பெஷலே இந்தப் படிகள்தான்!

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க வேல்.

என்ன இருந்தாலும்ஃபாரின் கொலு பாருங்க:-)))))

ரசித்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க புலவர் ஐயா.

நமக்கு என்னவேணுமுன்னு 'அவன்'ஒரு கணக்கு வச்சுருக்கான்!!!
வருகைக்கு நன்றி.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

முந்தியெல்லாம் படி கட்ட ஆரம்பிச்சதும் நம்ம கோகி வந்து மேற்பார்வை செய்வார். இப்போ மூணு வருசமா அவன் நினைவு கொலு சமயத்தில் இம்சை செய்யுது:(

பாராட்டுகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க வல்லி.

நம்ம வீட்டுப்பொண்ணுக்கு இருப்பதே ரெண்டு புடவைகள்தான். அதையும் கட்டிக்க நேரமாகிருச்சு.

இப்ப வந்துட்டாள்.கடைசியில் படங்கள் ரெண்டு கூடுதலா இணைச்சிருக்கேன்.

said...

வாங்க சசி கலா.

ஒன்பது நாளும் சுண்டலா? கொஞ்சம் கஷ்டம்தான். அதான் ரெண்டாம் நாளுக்கு சுலபமான சுகியன், மூணாம் நாளான இன்று வெள்ளைக் கொண்டைக் கடலை.

நாளைக்கு நெய்யப்பம்,ஓக்கேவா?

said...

வாங்க கும்மாச்சி.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

said...

வாங்க நம்பள்கி.

இப்பெல்லாம் கூடியவரை நோ தாளிப்பு.
எதுக்கெடுத்தாலும் எண்ணெய் வேணுமா?

தலைப்பு ஐடியா சூப்பர்.எனக்குத் தோணலை பாருங்க. (அப்படி ஒரு மருவாதையாக்கும்)

said...

வாங்க டாடி அப்பா.

நலமா? ரொம்ப நாளா ஆளை நம்ம பக்கம் காணோமே!

கொலுவுக்கு வந்ததுக்கும் ரசித்தமைக்கும் மனம் நிறைந்த ஆசிகள்.

said...

வாங்க ஹுஸைனம்மா.

பாட்டு மட்டும்தான் இல்லையாக்கும். நாட்டியம் உண்டு:-))))

சீக்கிரமாக் கிளம்பி வாங்க.

said...

வாங்க தியானா.

வெள்ளைக்கார கிச்சன் செட் கிடைக்குது. அதுலே நம்ம 'டச்' மிஸ்ஸிங்.

ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க கோமதி அரசு.

வெளியூர்லே இருந்தும் விடாம, எதோ செய்யறோம் என்பதே மனசுக்கு ஆறுதல்தான்.

உங்க கொலுவும்ஃபாரின் கொலுவாச்சே! இனியவாழ்த்துகள்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

படிக்கட்டுதான் சூப்பர் ஸ்பெஷல்.

ரசித்தமைக்கு நன்றீஸ்.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

வருகைக்கும் ரசனைக்கும் நன்றிகள்.

said...

வாங்க மாசியண்ணா.

வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றீஸ்.

முதல் வருகைக்கு மகிழ்ச்சி.

said...

வாங்க ஜிரா.

கிடைக்கணும் என்பது (26 வருசங்களுக்குப் பின்) கிடைக்காமல் போகாது:-)))

இருக்கும் கொஞ்ச பொம்மைகளை நிரவி வைக்கணும். நம்ம வீட்டில் நித்ய கொலு இருப்பதால் அதிலிருந்து ரெண்டு மூணை நைஸா இங்கே வச்சுடணும்:-)

said...

வாங்க உஷா.

படிகள்தான் அட்ராக்‌ஷன் இந்த வருசம்:-)

said...

வாங்க ஜோதிஜி.

தேவியர் நால்வர் இருக்கும் வீட்டில் நவராத்திரியை மறக்கமுடியுமா?":-))))

said...

வாங்க தெய்வா.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

****துளசி கோபால் said...

வாங்க நம்பள்கி.

இப்பெல்லாம் கூடியவரை நோ தாளிப்பு.
எதுக்கெடுத்தாலும் எண்ணெய் வேணுமா?***

என்ன டீச்சர் இது? தாளிச்சாத்தானே அதுக்குப் பேரு சுண்டல்? இல்லைனா வெறும் அவிச்ச பயறுதானே அது?
வேற்கடலையில் உள்ள கொழுப்புச்சத்துப் போதும்னு வெகு கவனமா எண்ணெயை கழட்டிவிட்டுட்டீங்க போல.

இப்போலாம் என் சாப்பாட்டுக் கணக்கு என்னனா..எண்ணய் இல்லாத சுண்டல் 100 கிராம் சாப்பிடுவதுக்கு பதிலா தாளிச்ச மணத்துடன் எண்ணைகலந்த சுண்டல் அளவா 20 கிராம் சாப்பிடுவது..

ஆமா, குமாருட்ட சொன்ன மாரி, அதான் கடவுள் இருக்காரு இல்ல? அப்புறம் எதுக்கு தாளிக்கிற எண்ணெயைப் பார்த்து பயம், மருவாதியெல்லாம்? அவர் பார்த்குக்க மாட்டாரா? :)

கொலு, பூஜைனா எனக்கு பிடிச்ச பகுதி, அந்த வரைட்டி ரைஸும், தாளிச்ச சுண்டலும், நீங்க பாடாத பாடலும்தான். :)

said...

கொலு மிக அருமை.

said...

வருஷம் தவறாமல் கொலு படைக்கும் டீச்சர் வாழ்க..! வாழ்க..! வாழ்க..! என் பெயரைச் சொல்லி நீங்களே சாப்பிட்டுக்குங்க..!

said...

என்ன அம்சமா ஒரு படிக்கட்டு! வெறுமனே வைத்தால் கூட அழகா இருக்கும் போலிருக்கே!
ரஜ்ஜுவின் மேற்பார்வையில் கொலு அழகாக இருக்கிறது.
நவராத்திரி நாயகியரின் அருள் என்றென்றும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தவருக்கும் கிடைக்கட்டும்.

said...

மிகவும் அருமையாக இருக்கிறது.

அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். நவராத்திரி வாழ்த்துகள்.