Friday, July 19, 2013

யானைக்குக் கரும்பு வேண்டாமாம்!!!! (பாலி பயணத்தொடர் 15 )

கைக்கட்டு கால்கட்டு போட்டு நிற்பவர்களும்,  உருகி உருகி எலும்புக்கூடாவே ஆனவர்களும் இருக்குமிடத்தைக் கடந்து தோட்டத்தில் கால் வச்சோம். இதோ ஒரு யானை ம்யூஸியம் கூட இருக்கு, அதை திரும்பிவரப்போ வச்சுக்கலாம். முதலில் ஃபஜரைப் பார்க்கணும்.

டிக்கெட்டு பரிசோதிச்சு உள்ளே அனுப்பும் பணியாளர்,  நீங்க யானைகளை வேடிக்கை பார்த்துக்கிட்டு  இருங்க.  யானை சவாரிக்கு உங்களைக் கூப்பிடுவாங்க'ன்னு சொன்னதும், ஐயோ காட்டுக்குள்ளே போயிருந்தோமுன்னா அவுங்க கூப்புடறது காது கேக்காதேன்னு எனக்குக் கவலையாப் போச்சு.

தென்னையும் கமுகுமா ரெண்டு பக்கமும் இருந்த நடைபாதையின் ஒருபக்கம்  தங்கமீன்களோடு சின்னதா ஒரு குளமும்,  குழப்பமா ரெண்டு யானைகள் சிற்பமும் இருந்துச்சு.

கண் எதிரே பெரிய குளம்.  அதுக்கு அப்பால் சின்னக்கூட்டமா யானைகளும் மனிதர்களும்.  குளத்தின் இடக் கரையோரம் அகலமான பாதை.    அங்கே ஒரு ரெஸ்ட்டாரண்டு. அதை அடுத்து  சின்னக்குடிலில் ஒரு ஃபோட்டோ ஷாப்.  இதெல்லாம் இருக்கட்டுமுன்னு கூட்டத்தை நோக்கிப் போனேன்.

ஒரு ட்ரம்மில் கரும்புத் துண்டுகளை வெட்டிப்போட்டு வச்சுருக்காங்க. அதை எடுத்து எதிரில் வரிசையா நிக்கும் யானைகளுக்கு நாம் கொடுக்கலாம்.  சின்னதும் பெருசுமா ஒரு அஞ்சு பேர்!. அநேகமா வயசு,  ஒரு நாலு  முதல்  இருபதுவரை இருக்கலாம்.  ஹாஃப் க்ரோன்.  அப்புறம் ஒரு  இளைஞர்  வந்து சேர்ந்துக்கிட்டார். வயசு அம்பது இருக்கலாம். பெரிய தந்தந்தங்கள்.

கோபால் கொடுத்த கரும்புத் துண்டங்களையெல்லாம் சின்னவர் அழகா வாங்கித் தின்னார். நம்ம டர்ன் என்று  மகிழ்ச்சியாக் கரும்பை அள்ளிக்கிட்டுப் போனேன். ஒவ்வொன்னா வாங்கிக் கீழே தரையில் போட்டதும்  கோபாலுக்கு  ரொம்பச்  சிரிப்பு.  'நீ கொடுத்தால் சாப்பிடமாட்டான்'  என்கிறார்.

'யானைக்காரி மானத்தை வாங்காதேடா'ன்னு  அழுது கெஞ்சுனதும் போனாப்போகுதுன்னு  ஒரே ஒரு துண்டை வாங்கி வாயில் தள்ளினான்  சின்னவன். நாலு வயசுதான். அப்புறம் இன்னும் கொஞ்சம் பெரியவனுக்கு  கரும்பு ஊட்டப்போனால்..... தும்பிக்கையை உயர்த்தி சலாம்  போட்டுட்டு  சிரிச்ச முகத்தோடு கரும்பை வாங்கிக் கீழே போட்டான்!   வெறும் கரும்பே தின்னு போரடிச்சுப்போச்சு:(




இந்தப் பக்கம் நாலைஞ்சு படிகள் வச்ச நீள மேடையின்  அந்தப்பக்கம் இருக்கும் கம்பித்தடுப்பைப் பிடிச்சுக்கிட்டு  அடுத்த பக்கம் பார்த்தபடி சிலர் நின்னுருக்காங்க. என்னத்தைப் பார்க்கறாங்கன்னு  போய்ப் பார்த்தால்  யானை சவாரி மேடை அது. யானைகள்   மண்டி போட்டு உக்கார்ந்து  ஆட்களை ஏத்திச் சிரமப்பட்டு எழுந்து நடக்க வேணாம்!  


ஆஹா.... இதைத்தான் நேத்துப்பூராவும்  யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.  பாவம் பசங்க.... உக்கார்ந்து எழுந்துன்னு எப்படி முழங்கால் வலிக்கும் :(  ஏணி போட்டு ஒரு பரண் கட்டி இருந்தால் நாம் நேரடியா ஏறி உட்காரலாமேன்னு இவர்கிட்டே சொல்லிக்கிட்டே இருந்தேன்.





அநந்தகோடி வணக்கம், ஆளை விடும்மா.........

கம்பித்தடுப்பில்  இன்  & அவுட் ன்னு ரெண்டு திறப்புகள்.   யானை வந்து அவுட் கேட்டில் நின்னு   சவாரி செய்யும் ஆட்களை இறக்கி விட்டுட்டு கொஞ்சம் முன்னோக்கி நாலடி நகர்ந்து  இன்  கேட்டில் தயாரா நிற்கும் ஆட்களை ஏத்திக்கிட்டுப்போகுது!



சவாரி ஏற்பாடுகளை கவனிக்கும் பணியாளர்  சவாரிக்குச் சீட்டு வாங்கிய  மக்களைப்  பெயர்  சொல்லி  மைக்கில் அழைக்கிறார். அவுங்க ஆஜர் ஆனதும் இன் கேட்டுக்குப் பக்கத்தில் போய் நிக்கச் சொல்றார்.  அடுத்து வரும் யானை அவுங்களுக்கு!

பெரிய கொம்பன் ஒருவன் ஆடிஆடி அழகா வந்தான்.  நமக்கு இவன் கிடைச்சால் கொள்ளாம் என்ற ஆசை இருந்துச்சு. இதுக்கு நடுவில்  நம்ம எடையை  யானை தாங்குமா என்ற பயம் வேற!  அங்கே பார்  உன்னைவிட எதை கூடுதல் மக்கள்ஸ் வர்றாங்கன்னார் இவர்.   ரொம்பப்பெரிய  சைஸுன்னா தனித்தனி யானைகளில் ஏற்றிக்கொண்டு போறதையும் கவனிச்சேன்.

கரும்பு தின்னும் வரிசைக்கு யானைஸ்  புதுசு புதுசா  வர்றதும் தின்னு போரடிச்சதும்   கிளம்பிப் போறதுமா இருக்கு. அதுலே ஒன்னு ரெண்டு நேராக் குளத்துக்குப் போய்  குளியல் போட்டன.  நேரங்காலமில்லாம  வெளியேற்றும் லத்திகளை  உடனுக்குடன் வாரி எடுத்து இடத்தைச் சுத்தம் செஞ்சுக்கிட்டே இருக்காங்க.  குளத்தில்  'இருந்தால்'   வலைக்கூடையை வீசி பிடிச்சுப் போட்டுடறாங்க.

ரெண்டு மூணு ரவுண்டு சவாரி முடிச்சதும்  அந்த யானைக்கு  கொஞ்சநேரம்  ரெஸ்ட்.  நேராத் தண்ணீருக்குப்போய்  விளையாடவோ, இல்லை  நொறுக்ஸ்  திங்கவோ கொண்டு போறாங்க.   அங்கங்கே யானைகளைக் கட்டிப்போட புல்தரையில் பெரிய வட்டங்களா சிமெண்ட்  போட்டு வச்சு நடுவில் இரும்புச் சங்கிலிகளை பதிச்சுருக்காங்க.  ஒரு காலில்  சங்கிலியை மாட்டி விட்டால் அது  வட்டத்துக்குள்ளேயே  வட்டம் போட முடியும். ஆனாலும் பாவம் இல்லையோ!!!! புல்தரையா இருந்தால் காலுக்கு மெத்துன்னு இருக்குமில்லே?

ஃபஜர் எங்கேன்னு கேட்டதுக்கு   மேடைக்கு எதிர்ப்புறமாக் கையைக் காமிச்சார்  ஒரு  பாப்பான்.(மாவுத்தன்)  கண்ணை ஓட்டினால் ஓடித் திரியும் பிஞ்சு. அன்றைக்கு அதன் வயசு  72 நாட்கள்.  அம்மாவைக் கட்டிப் போட்டுருந்தாங்க.  அவர் பெயர்  Yanti  (யாந்தி என்றால்  பார்வதி அம்மன்  என்று பொருளாம்.  காடெஸ் பார்வடி! )  அட! அப்ப புள்ளையாரின் அம்மா!!!


காஃபி ப்ரேக்குன்னு  போகும் பெரிய யானையை கம்பிக்குக்கிட்டே வந்து நின்னு பார்க்கும்  ஃபஜர். Small Talk?

அங்கே இங்கேன்னு ஓடாம அம்மாகிட்டே நில்லேன்....


குழந்தை பாட்டுக்கு அங்கும் இங்குமா ஓடி ஓடிப்போகுது.  அம்மாவை விட்டு எங்கேயும் போயிடப் போகுதோ என்ற கவலையுடன்  அது போகும் திசையெல்லாம் தன்னுடம்பைத் திருப்பிக்கிட்டு பார்க்கும் தாய்.  அம்மான்னால் சும்மா இல்லே!

குளிக்க டைம் ஆச்சுன்னு  அம்மாவைக் கூப்பிட்டுப் போனாங்க.  எல்லா இடமும் தனக்குத் தெரியும் என்ற தோரணையுடன் காலை வீசிப்போட்டு நடக்கும் குழந்தை!




புள்ளையாரே காப்பாத்து.......


யானைக்காரர் வந்து பேச்சுக் கொடுத்தார். எந்த ஊரு?  இந்தியா. (கோபால் எப்பவும் யார் கேட்டாலும்  இந்தியான்னே சொல்வார்.  இப்ப இருக்கறது எந்த ஊருன்னு கேட்டால்தான் சரியான பதில் வரும்.)

"ஷாருக் கான்"

"அட!  ஷாருக் கான் தெரியுமா? ஹிந்தி படம் பார்ப்பீங்களா?"

"ஒன்னுவிடாமப் பார்த்துருவேன். எனக்கு  ஷாருக் ரொம்பவே பிடிக்கும்.  அதுவும் பாட்டுன்னா...."

தேரே   ப்யார் மே(ய்)ன்...ன்னு பாட ஆரம்பிச்சார்.  கூட சேர்ந்து ஒரு வரி பாடுனதும் அந்த முகத்தைப் பார்க்கணுமே அப்படி ஒரு மகிழ்ச்சி:-)

"யானை சவாரி ஆச்சா?"

"இன்னும் இல்லே."

"கொஞ்சம் பொறுங்க உங்க  வரிசை வருது."

முந்தி ஒருகாலத்துலே  முக்கியமா ரஷ்யா போற இந்தியர்கள் கிட்டே அங்குள்ள மக்கள்ஸ் ராஜ் கபூர் பற்றி விசாரிப்பாங்களாம்.  ஆனா இப்ப  ரஷ்யர் மட்டுமில்லாம  உலகமெங்கும் ஷா ருக் கான். எல்லாம் க்ளோபல் ஆனதுபோல் சினிமாவும் ஆகி இருக்குல்லே:-)


பிரமாண்டத்தைப் பற்றி எழுத ஆரம்பிச்சால் ஒரு இடுகையோடு அடங்குவதில்லையாக்கும்......

37 comments:

said...

யானை ஃபஜர் சூப்பர்... படங்கள் பிரமாதம்...

said...

பிரம்மாண்டத்தை ரசிக்கத்ந்த அருமையான பகிர்வுகளோ..பாராட்டுக்கள்..

said...

ரஜனி.. விஜய் பத்தியெல்லாம் கேக்கலையா? என்ன க்ளோபலைசேஷன்!

said...

கோபால் ரிட்டையர் ஆய்ட்டார் போல? அதான் தம்பதி சமேதரா சுத்தி வரேள். அதுவும் ஆஃப் ட்ரவுசர்ல கோபால் மைனர் மாதிரின்னா இருக்கார்.. ஜமாய்க்கிறேள்.பொறாமையா இருக்கு:(

said...

அந்த குட்டியானையை பார்த்தபோது அன்னை ஓர் ஆலயம் பாட்டான அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே பாட்டு ஞாபகம் வந்திச்சு.

கொழும்புவில் ஒரு தடவை கச்சேரி ஒன்றுக்கு ஷாருக் வந்திருந்தார். அவருடன் டின்னர் சாப்பிட 25,000 இலங்கைப்பணம். அதையும் நிறைய்ய பேர் வாங்கியிருந்தாங்க. ஓம் சாந்தி ஓம் ரிலீஸ் போது அங்கதான் இருந்தேன். செம ரஷ்
:)

said...

படங்களும் பயணமும் அருமைங்க...

said...

கொம்பு முளைக்காமலேயே பட்டணமெல்லாம் பறந்தோடுது குட்டியானை.

அந்த ஊர்ல வாழைப்பழம், தென்னையோலை ஒண்ணுமே கிடையாதா?. கரும்பையே போட்டுப்போரடிக்கிறாங்க அதுகளை.

ஒரு வயசுக்குட்பட்ட சின்னக்குழந்தைகள் பொருட்களை வீசுவதும், நாம் எடுத்துக்கொடுத்தா திருப்பியும் வீசுவதுமா விளையாடும். யானை நீங்க கொடுத்த கரும்பைக் கீழே போட்டதும் அதான் ஞாபகத்துக்கு வந்துச்சு :-)

said...

படங்கள் பிரமாதம்...

said...

கரும்பும் கசக்கும் :)

குட்டியார் படு சுட்டியாக இருக்கிறார்.

நிறைந்த படங்களுடன் பிரமாண்டம்.

said...

குட்டி யானை ரொம்பவே அழகா இருக்கு...

அங்கேயும் ஷாரூக்கா...:))

said...


I was waiting for fazars photo .thank you !!


fazar கொள்ளை அழகு !!! எவ்ளோ இன்னொசென்ட்டா இருக்கு முகம் . ஆனா தனியா நடக்கும்போது ஒரு தெனாவட்டு நடை வேற ! ரம்யாவின் கமெண்ட்: fazar பாத்து ஒரு முத்தம் கொடுத்து ஜுஜ்ஜு குட்டி .குச்ச்சிபாப்பா ....etc etc

. உங்கரெண்டு பேரோட போட்டோக்கு போஸ் குடுக்கும்போது யானையார் முகத்திலயும் உங்கரெண்டு பேரோட முகத்திலயும் என்ன சந்தோசம்!!!

//யானைக்காரர் வந்து பேச்சுக் கொடுத்தார். எந்த ஊரு? இந்தியா. (கோபால் எப்பவும் யார் கேட்டாலும் இந்தியான்னே சொல்வார். இப்ப இருக்கறது எந்த ஊருன்னு கேட்டால்தான் சரியான பதில் வரும்.)//

:)))) ரொம்ப திருப்தியான பதில்

said...

nice akka

said...

அந்த யானைக்குட்டி.... வாவ்.... என்ன அழகு! :)

எல்லாவற்றையும் ரசித்தேன்....

said...

நல்ல அனுபவம்:)! குட்டி யானை ஃபஜர் ரொம்பக் க்யூட்!

said...

யானைக்குட்டியும் குட்டியானைகளும் அழகு. நேரிலே பார்ப்பதைப்போன்ற நல்ல அழகான தெளிவான படங்கள். முதல் படத்தில் கட்டுப்போட்ட யானைக்குட்டி பார்க்க பாவமாய் உள்ளது.

என் இந்தோனேஷியத் தோழிக்கு இந்தியா என்றாலே அமிதாபும் ஷாருக்கானும்தான் தெரிவார்கள்.

said...

யானைகள் நீரில் விளையாடுவது அழகு! நீரில் 'இருந்தால்' - ரொம்பவும் ரசித்தேன் உங்கள் நகைச்சுவையை!

துறுதுறுன்னு குட்டியானை - குழந்தையைப் பற்றிக் கவலைப் படும் அம்மா யானை - ஷாருக்கான் பற்றி பேசி முகம் நிறைய மகிழ்ச்சியுடன் நிற்பவர் - புகைப்படங்கள் ரசிக்க வைத்தன.

said...

படங்களை பார்க்கும்போது கேரளாவிற்குள் இருப்பது போல தோன்றுகின்றது.

மின் அஞ்சல் சோதிக்க

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஃபஜர்தான் அங்கே இப்போதைய சூப்பர் ஸ்டார்:-)

வருகைக்கு நன்றி.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

நன்றீஸ்.

said...

வாங்க தருமி.

ஆமாங்க..... மம்முட்டி, மோஹன்லால் பற்றிக்கூட நோ மூச் நோ பேச்!!!

வடக்கு மட்டும்தான் வாழ்கிறது, அன்றும் இன்றும்!!

said...

வாங்க டி பி ஆர் ஜோ!

நம்ம பக்கத்தில் ரிட்டையர்மெண்ட்ன்னு தனியா ஒன்னும் இல்லை;

said...

வாங்க டி பி ஆர் ஜோ!

நம்ம பக்கத்தில் ரிட்டையர்மெண்ட்ன்னு தனியா ஒன்னும் இல்லை! 65 வயசு வரை பொதுவா எல்லோரும் வேலை செய்யறாங்க. அதுக்குப்பிறகும் போதுமுன்னு தோணுச்சுன்னால் ரிட்டையர் ஆகிக்கலாம்.

இது ஒரு ரெண்டு வார ப்ரேக்தான். சம்மர் என்றதும் முதலில் தேடி எடுப்பது அரை டவுசர்தான்:-))))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

அன்னை ஓர் ஆலயம் பார்க்கலைங்களே:( வலையில் கிடைக்குதான்னு தேடப்போறேன்.

சினிமா மோகம் யாரை விட்டது சொல்லுங்க!!!!

said...

வாங்க சங்கவி.

ரசித்தமைக்கு நன்றீஸ்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

இது ஜஸ்ட் ஸ்நாக் டைம்! சாப்பாடு அப்புறம் தருவாங்க. ஏராளமான தென்னை கமுகு எல்லாம் இருக்கு. தொட்டப்பகுதி முழுசும் யானைத் தீனிப்பயிர்கள் போட்டு வச்சுருக்காங்க.

பார்வையாளர்களுக்கு எடுத்து நீட்ட சுலபமா இருக்கட்டுமேன்னு தான் கரும்பு.

பசங்க எல்லாம் விளையாட்டு புத்திதான்:-))))

said...

வாங்க சமுத்ரா.

ரசனைக்கு நன்றீஸ்.

said...

வாங்க மாதேவி.

பாலும் கசக்கும் படுக்கையும் நொந்து போகுமாம்:-))))

வெரெய்ட்டி இல்லேன்னா போர் அடிக்காதா?

குட்டியார் தான் சூப்பர் ஹீரோ!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

இங்கே நியூஸியிலே கூட பாலிவுட் டான்ஸ்ன்னா நிறையப் பேருக்குத் தெரியுதேப்பா!

குழந்தை கொள்ளை அழகு!

said...

வாங்க சசி கலா.

ரம்யாவுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். கொஞ்சத்தானே தோணுது, இல்லையோ!!!!

said...

வாங்க சிஜி.

ஆயுசு நூறு!!!!

எங்கே கனகாலமாக் காணோம்?

குழந்தை அழகா இருக்காள்தானே!!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசித்தமைக்கு நன்றீஸ்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

இன்னிக்கும் யானைதான். பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.

சுட்டிக்குட்டி செம க்யூட்:-)

நன்றீஸ்ப்பா.

said...

வாங்க கீதமஞ்சரி.

காட்டுத்தீ சுட்ட யானை(யாம்) அது :(

ஐயோன்னு இருந்துச்சு எனக்கும்.

இந்தியான்னாவே இந்தியன் சினிமாதான் !!

இந்தியாவின் மிகப்பெரிய தொழில்!

said...

வாங்க ரஞ்ஜனி.


ஆஹா ஆஹா.... ரசித்தமைக்கு நன்றீஸ்.

said...

வாங்க ஜோதிஜி.

உண்மைதான். எனக்கும் அப்படியே!

ஊரும் வீடுகளும்கூட கேரளத்தை நினைவுபடுத்துது.

said...

ஆயிரம் சொல்லுங்க... குரங்கையும் யானையையும் பாக்கும் போது உண்டாகும் மகிழ்ச்சி வேறெந்த விலங்குகிட்டயும் உண்டாறதில்லை. ஒவ்வொரு படமும் அழகோ அழகு.

said...

வாங்க ஜிரா,

சொன்னது சத்தியம்.!