Wednesday, June 12, 2013

39


சரியா போனவாரம், இதே புதன் கிழமை.  நம்ம முப்பத்தியொன்பதுக்கு  பத்துமலை முருகனைப் பார்க்கப்போனால்...... வெங்கியும் அம்லுவும்  'வா இங்கே'ன்னு கூப்பிட்டு ஏகாந்த சேவை  சாதிச்சுட்டு, மருமகனைப் பார்க்கப்போன்னு  சொன்னாங்க.



முருகனின் அழகை விவரிக்க வார்த்தை இன்னும் அகப்படலை!!!!

தோழி நாச்சியார் போனவாரம் பதிவு போட்டு சிறப்பிச்சுருக்காங்க.நெஞ்சம் நிறைந்த நன்றி. அவர்களின் அன்புக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.


'நுப்பத்தியொம்போது'  வருசம் தொல்லைகளைப் பொறுத்துக்கிட்டக் காதல் கணவருக்கு எப்படி , என்னன்னு நன்றிசொல்வது?????

பொழைச்சுக்கிடந்தால்  அடுத்த வருசம் ரூபி:-)





33 comments:

said...

முப்பத்தியொன்பது வருட இல்லற வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள்!

said...

வாழ்த்துகள் துளசிமா. என்றென்றும் ஆரோக்கியமும் அன்பும் சேர்ந்து மகிழ்ச்சி நிறைந்த வாழ்வுக்கு ஆசிகள்.

said...

வாழ்த்துக்கள்...!

said...

இனிய வாழ்த்துகள்:)!

said...

அடுத்த வருசம் ரூபி:-)

மன நிறைவான வாழ்த்துகள்...

said...

//பொழைச்சுக்கிடந்தால் அடுத்த வருசம் ரூபி:-)//

"ரூபி"ணியான டீச்சரை விடவா ரூபி? - அப்படின்னு சொல்லிடுவாரு:)

இனிய மணநாள் வாழ்த்துக்கள், கோபால் சார் & டீச்சர்!
வடிவாய் வல மார்பினில் வாழ்கின்ற "மங்கை-மணாளணாய்" பல்லாண்டு!

//பத்துமலை முருகனைப் பார்க்கப் போனால்//

பத்து மலை முருகன் = பத்தாத மலை முருகன்!
எத்தனை முறை பார்த்தாலும் பத்தாது!

said...

அந்த யானைச் சவாரி படம் அழகோ அழகு!
பார்ப்பதற்கு Youthful யானையாத் தான் தெரியுது; So cute:))
-------

ராணி மகா ராணி
துளசி தள ராணி
யானை மேல சாஞ்சி வந்த
துளசி மகா ராணி
:))


said...

முப்பத்தியொன்பது வருட இல் வாழ்க்கை மேலும் மேலும் இனிதாக வளர வாழ்த்துகள்.
வல்லி அவர்களுடன் நாங்களும் அப்போதே வாழ்த்து சொல்லியிருந்தோம், வந்திருக்கும்.
இப்போது இன்னொரு முறை இனிய நல் வாழ்த்துகள்!

said...

நுப்பத்தியொம்போதுக்கு இனிய வாழ்த்துகள்..

இந்த தினத்துக்கு என் லைஃபிலும் ஒரு முக்கியத்துவம் உண்டே :-))

said...

மணநாள் வணக்கங்களும் வாழ்த்து(க்)களும் :-)

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் நன்றிகள்.

said...

வாங்க நடனசபாபதி ஐயா,

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் நன்றிகள்.

said...

வாங்க வல்லி.

அன்புக்கும் ஆசிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்,



வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் நன்றிகள்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் நன்றிகள்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ரூபி ஒட்டியாணம் நல்லா இருக்குமான்னு பார்க்கணும்:-))))

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் நன்றிகள்.

said...

வாங்க கே ஆர் எஸ்.

ரூபின்ற பெயருள்ள ஒரு பூனையோ நாயோ கிடைச்சாலும் சரி:-)

ஒட்டியாணம் லட்சியம். நாய்க்குட்டி நிச்சயம் என்றால் எவ்ளோ நல்லா இருக்கும் இல்லே???

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் நன்றிகள்.

யானைக்கு என் வயசுலே பாதிதான். மன்னிப்பு கேட்டுக்கிட்டேன். கணேஷி என்னை மன்னி:-)

ஆமாம்.... ஏன் தனிமடல் லாங் ஆப்ஸென்ஸ்ன்னு திரும்பி வருது?

said...

வாங்க ரஞ்ஜனி.

அங்கும் இங்கும் வாழ்த்திய அன்புள்ளத்துக்கு எங்கள் இனிய நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஹேப்பி பர்த் டே!!!!! நல்லா இருங்க.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் நன்றிகள்.

said...

வாங்க பாலராஜன் கீதா.

ஆஹா..... ரொம்ப நாளைக்கு ரொம்ப நாளு!!!!

வணக்கம் நலமா?


வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் நன்றிகள்.

said...

தங்களுக்கும் கோபால் சாருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் டீச்சர். நுப்பத்தியொம்பது என்பதைப் படிக்கையில் ஐ ஸ்லிப் ஆகி நூத்தியொம்பது என்று படித்து கொஞ்சநேரம் குழம்பித் தெளிந்தேன். :)

said...

எனக்கு வாழ்த்த வயதில்லை என்றாலும் மனதார வணங்குகின்றேன். எனது பிறந்த நாளில் தெய்வ தரிசனங்களை வழங்கிய உங்கள் பதிவுக்கு நன்றி...

said...


///'நுப்பத்தியொம்போது' வருசம் தொல்லைகளைப் பொறுத்துக்கிட்டக் காதல் கணவருக்கு எப்படி , என்னன்னு நன்றிசொல்வது?????//

காதல் கணவர்....[காதலித்தபின்] கணவர் ஆனா மாதிரி தெரிகிறது! ஒரு யூகம் தான்.

எப்படி இருந்தாலும் வாழ்க காதல்..!
வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.

said...

வாங்க கீத மஞ்சரி.

நூத்தியொம்பது.....தாங்கமாட்டாருப்பா! பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்குல்லே?:-)))))

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க ஜயராஜன்,

வாழ்த்த வயசு எதுக்கு? மனம் இருந்தால் போதாதா?

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

உங்கள் பிறந்தநாளுக்கு எங்கள் ஆசிகளை மீண்டும் இங்கே வழங்குகின்றோம்!!!

said...

வாங்க நம்பள்கி.

சொன்னது ரொம்பச் சரி.
காதல்+கணவர்தான்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

பயணத்தில் தினம் மூணு முறை உங்களை நினைச்சுக்கிடோம் ரெண்டு பேருமே:-)))))

நம்புங்க. இப்போ நம்பள்கின்னு கோபாலே சொல்ல ஆரம்பிச்சுட்டார், சாப்பாட்டை படம் எடுக்கும்போது!!!!!

said...

39 - இனிய வாழ்த்துகள் டீச்சர்.

மேலும் பல்லாண்டுகள் சீரும் சிறப்புமாய் இணைந்து வாழ எல்லாம் வல்லவனை பிரார்த்திக்கிறேன்.....

said...

வாழ்த்துக்கள் துளசி ,கோபால் தம்பதியருக்கு !! உங்களிருவரின் போட்டோ அருமை !!! என்றும் இதே அன்புடனும் சந்தோஷத்துடனும் . சிரிப்புடனும் இருக்க வாழ்த்துக்கள் . 40க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வாழ்த்துகளுக்கு எங்கள் இனிய நன்றிகள்.

said...

வாங்க சசி கலா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

அட்வான்ஸ் வாழ்த்துகளுக்கும் நன்றி. ரூபி ஒட்டியாணம் எங்கே கிடைக்குதுன்னு விசாரிச்சுச் சொல்லுங்க:-)))))

said...

இனிய வாழ்த்துகள்.

said...

வாங்க மாதேவி.

நன்றீஸ் நன்றீஸ்.