Thursday, December 13, 2012

வூட்டாண்டை வந்துருச்சு இப்ப எல்லாமே!


எல்லாம் இந்த ரெண்டு வருசமாத்தான்.  நகர மையம் அழிஞ்சு போச்சு பாருங்க அப்போதிருந்துதான்.  ஊர் போயிருச்சுன்னு  மூலையிலே உக்காந்து அழுதுகிட்டே இருந்தா என்ன பயன்? நடக்கவேண்டியது நடந்தாகணுமே!

ஸேண்ட்டா க்ளாஸ் மக்களுக்கு கிறிஸ்மஸ் ஸ்ப்ரிட்டை ஊ(ற்ற)ட்ட  வழக்கமா பண்டிகைக்கு ஒரு மாசம் முந்தி வர்றதுண்டு. அதைப்பார்த்ததும்தான்  ஐயோ...பண்டிகை நெருங்கிருச்சே....இன்னும் வாங்க வேண்டியதை வாங்கலையேன்னு கடைகளுக்கு மக்கள் ஓடுவாங்க.  முக்கியமா பரிசுப்பொருட்கள்.  பரிசுப்பொருட்கள் வாங்கி, அழகா  கிறிஸ்மஸ் தீம் உள்ள  கிஃப்ட்பேப்பரில் பொதிஞ்சு கிறிஸ்மஸ் மரத்தடியில்  வச்சுடணும்.  மத்தபடி  நடுராத்திரியிலோ  இல்லை காலையிலோ சர்ச்சுக்குப்போய் சாமி கும்பிட வேண்டிய அவசியம் எல்லாம் இல்லையாக்கும் கேட்டோ!!!


 அலங்காரவண்டிகள் ஊர்வலம் நடக்கக் கட்டக்கடைசியில் ஸேண்ட்டா தன்னுடைய ரெயின்டீர் இழுக்கும் வண்டியில் வருவார்.  அநேகமா எல்லா வருசமும் ஒரேமாதிரி வண்டிகள்தான் ஊர்வலத்தில் வரும்.  அலங்காரங்களை எடுத்துப் பத்திரப்படுத்தி வச்சுக்குவாங்க. இதுக்குன்னே ஒரு ட்ரஸ்ட் உண்டு.  யாரு அதிகமா  டொனோஷன் கொடுக்கறாங்களோ அவுங்க பெயரைப் போட்டுக்குவாங்க. எல்லாம் ஒரு விளம்பரம்தான். இந்த வருசம் ஸ்மித் சிட்டிக்காரங்க.


சிட்டிக்கவுன்ஸிலுமொரு நல்ல தொகையை ட்ரஸ்ட்டுக்குக் கொடுக்குது.  உள்ளுர் பத்திரிகைகள்  பெரிய அளவில் விளம்பரம் கொடுத்து மக்களுக்கு  இன்ன தேதி, இந்த நேரம் என்று நினைவூட்டிக்கிட்டே இருப்பாங்க.  எந்த சாலையில் புறப்பட்டு  எந்த  சாலையில் ஊர்வலம் வரப்போகுது, எங்கே முடிவு, எத்தனை மணிக்குக் குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும், அணிவகுப்பு  நடக்குமுன் ரெடியா  வரிசை கட்டி நிற்கும் வண்டிகள் எந்தத் தெருவுக்கு எப்போ வந்து சேரணும் என்றெல்லாம் விவரமாப் போட்டுருவாங்க.அணிவகுப்பு வண்டிகள் நிற்கும் அந்தக் குறிப்பிட்டத் தெருவுக்குப் போக்குவரத்து அன்றைக்குக் காலை 8 மணி முதல் ரத்து. அங்கே வசிக்கும் மக்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.


 ஊர்வலம் ரெண்டு மணிக்குத் தொடக்கமுன்னா அது போகும் வழியில் போக்குவரத்து ஒரு மணி  நேரத்துக்குமுன்னேயே நிறுத்தப்படும்.  மக்கள் வந்து கூட நேரம் எடுக்குமில்லே?  பார்க்கிங் கிடைக்காம சைடு தெருக்களில் நிறுத்திட்டு குஞ்சு குளுவான்களையெல்லாம் இழுத்துக்கிட்டு வரணுமா இல்லையா?


நாங்களும் ஒரு ஒன்னரைக்குப்போய்ச் சேர்ந்தோம்.  சாலையின் ரெண்டு பக்கங்களிலும் மக்கள்  உக்கார்ந்துருந்தாங்க. எங்கூரில் தெருவிலே தைரியமாத் தரையில்  'உக்காரலாம்' :-))  இருக்கைகள் கொண்டு வந்த பாக்கியவான்கள்  இன்னும் மஜாவா இடம் பிடிச்சு இருந்தாங்க.  வீட்டுப்பின்பக்கத்தில்  வைக்கும்  அவுட்டோர் ஏரியா அம்பர்லாவைக்கூட ஒருத்தர் கொண்டு வந்துருந்தார்.  பெரிய குடும்பி!!!

எங்க கோடைகாலம் நேத்துதான் ( டிசம்பர் 1) ஆரம்பிச்சுருக்கு. இன்றைக்கு 25 டிகிரி வரப்போகுதுன்னதும்  முன் ஜாக்கிரதையாத்தானே இருக்கணும்! ஏன்னா....இங்கே  நிலவரம் இப்படி. ஏகப்பட்ட  (melanoma)ஸ்கின் கேன்ஸர். ஓஸோன் லேயரில் பெரிய பொத்தல் எங்க தலைக்கு மேலே இருக்காம்.

Slip, Slop, Slap  என்ற ஸ்லோக(ம்)ன் எங்கள் வேதம்.  Slip on a shirt, Slop on the 30+ sunscreen, Slap on a hat, Seek shade or shelter, Slide on some sunnies. - "Slip, Slop, Slap, Seek, Slide"   sunglasses இல்லாம வெளியே போகாதே!!!! கேன்ஸர் சொஸைட்டியின் எச்சரிக்கை!


ஒன்னரைவயசு அலெக்ஸ் நம்ம பக்கத்தில் இருந்தார்.  முழு வளர்ச்சி அடைந்த வர்தான். ஆனால் நம்ம கோகியைவிடச் சின்ன உருவம்!
காவல்துறை மகளிர் அணி முழுப்பொறுப்பும் எடுத்துக்கிச்சு.


வந்தார், ஆசனத்தில்  அமர்ந்தார் பார்த்தார்:-)


சரியா ரெண்டு மணிக்கு  ப்ராஸ் பேண்ட் இசை முழங்க பரேடு ஆரம்பிச்சு நம்ம பக்கம் வரும்போது ரெண்டு அஞ்சு.  மிஸஸ் ஸேண்ட்டா வீட்டு அடுக்களைக் கரடிகள்,  கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முதல்நாள் ராத்திரி எப்படி சிம்னி வழியா ஸேண்டா பரிசுப்பொருட்களைக்கொண்டு வந்து நல்ல பிள்ளைகளுக்குத் தர்றார்ன்னு (பசங்க இன்னுமா இதை நம்புது?????) சேதி  சொல்லும் காட்சிகளுடன் ஊர்வலம் நகருது.

நாட்டுக்கு ராணுவம் எவ்ளோ முக்கியமுன்னு  காமிக்க  எங்க ஊர்ப்பக்கம் இருக்கும் ராணுவமுகாம் வீரர்கள் ஊர்வலத்தில் முதல்முறையாக வந்தாங்க. நிலநடுக்கம் வந்தவுடனே அழிவில் இருந்து ஆட்களை மீட்க  அவசரநிலை அறிவிப்பு வந்தவுடன் ஆரம்பிச்ச இவுங்க வேலைகள் இன்னும் இங்கே முடியலை.  மிடுக்கோடு மிடுக்கா ரெண்டு சின்னப்பிள்ளைகளைத் தோளில் சுமந்து போனது எனக்குப் பிடிச்சுருந்துச்சு. நாளைய ராணுவ வீரர்கள்!!!

அடுத்து வந்தவங்களும் ஆபத்துதவிகளே. தீயணைக்கும் படை!  தீமட்டும் அணைக்காம  சாலைவிபத்துகளுக்கும் இவுங்க உதவி தேவைப்படுது.


உள்ளுர்  பாலே நடனப்பள்ளிகள்,  ம்யூஸிக் ஸ்கூல்ஸ் எல்லாம் இடைக்கிடைக்கு வந்துக்கிட்டே இருந்துச்சு.  குழந்தைகளுக்கு பரிச்சயமான தொலைக்காட்சி கேரக்டர்ஸ் ,மிஸ் பிக்கி, பனானா இன் பைஜாமாஸ், சூப்பர்மேன், த்ரீ லிட்டில் பிக்ஸ், பினொக்கியோ, பீட்டர் பேன்,  ஹாண்டட் ஹௌஸ் என்னும் பேய் வீடு, லைஃப் எஜுகேஷன் ட்ரஸ்ட் லோகோ ஒட்டகச்சிவிங்கி , உள்ளுர் விலங்கியல் பூங்காவான ஒரானா பார்க் வாசிகள் இப்படி.

Star wars  Return of the Jedi மவுசு இன்னும்தீரலை!

பிள்ளைகள் கைதட்டி ஆரவாரத்தோடு எல்லோரையும்  கவனிச்சுப்பெயர் சொல்லிக் கூப்பிடுதுங்க.

பெரியவங்களுக்கு இப்போதைய ஆர்வம்  சிமெண்ட் மிக்ஸ் வண்டிகளும் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி வண்டிகளும்தான்.  ஊரை திரும்பக்கட்டி எழுப்பும்  வேலை நடந்துக்கிட்டு இருக்கே!  சின்ன சின்ன பில்டிங் கம்பெனியெல்லாம் கூட இப்பச் செழிப்பா வளர்ந்துபோச்சு.  எலெக்ட்ரீஷியன்களுக்கும் ப்ளம்பர்களுக்கும்  பயங்கர டிமாண்ட்.  உலகின் பலநாடுகளில் இருந்து தாற்காலிகமா வந்து இங்கெ வேலை செய்யறாங்க.

jesus the great christmas present னு ஒரு அலங்கார வண்டி.
புது சர்ச் ஒன்னு ஆரம்பமாகி இருக்கு போல. இதுவரை  நான் பார்க்காத ஒன்னு. என்ன ஏதுன்னு விசாரிச்சால்..... இது(வும்)  இங்கிலாந்து சமாச்சாரம். 1990 கடைசியில்  அங்கே சில மக்களால் தொடங்கப்பட்டு பத்தே வருசத்தில் கடல்கடந்து வந்துருக்கு. இங்கே ஏற்கெனவே  பாரம்பரியமா இருந்து வரும் சர்ச்சுகளை  வேணாமுன்னு விலக்கி புதுசுபுதுசா  வெவேற பெயரில்  உருவாகிவரும்  சர்ச்சுகள்  உண்டு.

டெஸ்டினி சர்ச்சுன்னு ஒன்னு 1998 லே தொடங்கி நடந்துக்கிட்டு இருக்கு இந்த நாட்டில்.  (இதைப்பற்றிச் சொல்ல ஏராளமா இருக்குன்னாலும் இப்போ இங்கே வேணாம்.பின்னொருக்கில் கேட்டோ!)  கும்பிடுவது ஒரே சாமி. ஆனால் இதுலே ஆயிரத்தெட்டு பிரிவுகள். என்னமோ போங்க!
சுருக்கமாச் சொன்னா நம்மூர்  ஆஸ்ரமங்களும் மடங்களும் நினைவுக்கு வந்தாச் சரி.


இங்கிருக்கும் வெவ்வேற தேச மக்கள் அவுங்கவுங்க நாட்டுக்கொடிகளும் அலங்காரமுமா  ஊர்வலத்தில் போனாங்க. இந்தியமக்கள் மிஸ்ஸிங். ரெண்டே பேர் வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் இருந்தாங்கன்னு சொல்லிக்கலாம். பிலிப்பீனோஸ், கம்போடியன்ஸ்,ஜாப்பனீஸ், இந்தோநேஷியன்ஸ், ரஷ்யன்ஸ்னு  நல்லத்தான் இருந்துச்சு.  ஆனால் பெரிய அளவில்  கூட்டமாக் கலந்துக்கிட்டவங்க சீனர்கள்தான்.   வெவ்வேறு குழுவா விதவிதமான உடைகளிலும் விதவிதமான இசைக்கருவிகளோடும்  அலங்கார வண்டிகளும் கால் நடையுமாக(!)வும் பிரமாண்டமான சீனக்கொடி பிடிச்சுப்போனாங்க.   எங்கூர் மக்கள் தொகைக்கணக்கில் பார்த்தால் அடுத்த வருசம் பரேடில்  75% , அதுக்கடுத்தவருசம் 100%  இவுங்கதான் இடம்பிடிக்கப்போறாங்க கேட்டோ!

சீனத்து சின்னமேளம்!


சிகப்பும் மஞ்சளும் வெள்ளையுமா மூணு சிங்கங்கள் ஜல்ஜங் ஜல்ஜங்ன்னு கொட்டுமேளத்தோடு வண்டியிலே ஆடிக்கிட்டே போனதுகள். எனக்கு இந்த சிங்க ஆட்டம் ரொம்பப்பிடிக்கும்.  ரசித்தேன்.

ரெண்டு ட்ராகன்கள் வேற  வளைஞ்சும் நெளிஞ்சும் பறந்தும் ஆடுனதுகூட எனக்குப்பிடிச்சது.


சீனாவில் தடை செய்யப்பட்ட ஃபலூன் டாஃபா குழுவினர்   இங்கே இதுவரை காணாத அளவில் பெருகி இருக்காங்க. மேளதாளத்தோடு  படை திரண்டு போறாங்க!!!


எங்கூர்லே என்ன விசேஷமுன்னா, நம்ம ஹரே கிருஷ்ணா கோவில் தேரும் இந்த ஊர்வலத்தில் வரும். சின்மயானந்தா குழுவினரும் அட்டகாசமாப் புடவையெல்லாம் கட்டிக்கிட்டு வருவாங்க. இந்த வருசம் இவுங்களைக் காணோம். கோயிலே இடிஞ்சு விழுந்து இப்பத்தான் இடிபாடுகளை எடுத்துக்கிட்டு இருக்கும் நிலையில் ஊர்வலம் வான்னு கூப்பிட்டால் அநியாயம் இல்லையோ?

கம்போடியாக்குழுவினர் கொடியில்  அங்கோர்வாட் படம் போட்டுருந்துச்சு.  அழகான அலங்காரத்தோடு ஊர்வலத்தில்  வந்தாங்க.

சாலை முழுசையும் பொதுப் போக்குவரத்துக்கு மூடி வச்சுருக்காங்களே..... ஜாலியா நடு ரோட்டில் போகக்கூடாது?  இப்பவும் ஒழுங்கு குலையாம ஊர்வல வண்டிகள் எல்லாம் இடது பக்கம் நடுக்கோட்டைத் தொடாமல் போகுது பாருங்க.  எல்லாரையும் இந்தியாவில் கொண்டு போய்விடணும்.

நியூஸிலெண்ட் வின்டேஜ் மெஷினரி க்ளப், பழையகாலத்து சைக்கிள்கள் (பென்னி ஃபார்த்திங்)  எல்லாம் ரசிக்கும்படி இருந்தாலும்,   காவல்துறையின் கென்னல் க்ளப் (போலீஸ் டாக்ஸ்) அணிவகுப்பு சூப்பர். எல்லாம் சிங்க நாய்கள்! (அல்சேஷியன்ஸ்க்கு நம்மூட்டுச் செல்லப்பெயர்)



உள்ளூர் ரக்பி ஆட்டக்குழு 'க்ருஸேடர்ஸ் ' குதிரைகளோடு தோன்றியதும் பலத்தவரவேற்பு. முக்கியமான ஆட்டக்காரர்கள் எல்லாம் நடந்தே போய்  கையில் உள்ள ரக்பி பந்துகளை   குழந்தை ரசிகர்களுக்குப் போட்டுப்பிடிச்சு வேடிக்கை காட்டிக்கிட்டே போனது பிடிச்சிருந்துச்சு. நாட்டின் தேசிய விளையாட்டை விட்டுடமுடியுதா என்ன?


குதிரைன்னதும்  என்னோட ஃபேவரிட் குதிரை வகைகளான க்ளைட்ஸ்டேல் ஹார்ஸஸ் பூட்டிய  வண்டியை இழுத்துக்கிட்டுக் கம்பீர நடையில் போனதுகள்.  என்ன திடமான கால்கள்!! நல்ல கொண்டை போட்ட வால்!!!! சூப்பர்ம்மா:-)))

ஊர்மக்களை விட்டுக்கொடுக்காம  நம்ம டவுன் க்ரையர், நம்மூர் விஸர்ட்  எல்லாமும் பங்கெடுத்துக்கிட்டது  எங்க எல்லோருக்கும் மகிழ்ச்சியே! உள்ளுர் இன்ஷூரன்ஸ் கம்பெனி, ரேடியோ ஸ்டேஷன்ஸ், அந்தக்கால  அண்ட் இந்தக்கால ஆம்புலன்ஸ் வண்டிகள்,  செயிண்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் சர்வீஸில் பணிபுரியும் மக்கள், கேர்ள் கைட்ஸ், பாய்ஸ் ஸ்கௌட் ன்னு  நீண்டுகிட்டே போன ஊர்வலம் கடைசியா ஸேண்ட்டா வண்டியில் ஜிங்கிள் பெல்ஸ் பாடிக்கிட்டே  வந்து மக்களுக்கு  கை உயர்த்தி ஆசி வழங்குனதோடு முடிஞ்சது. சரியா ஒன்னேகால் மணி நேரம்.


சேண்ட்டா வண்டிக்குப்பின் போலீஸ் வண்டி அதுக்குப்பின் குப்பை அள்ளும் வண்டி  ஊர்வல விநியோகத்தில் பறந்து விழுந்த மிட்டாய்த்தாள்களையும், விளம்பரத்தாள்களையும் பெருக்கிப்பொறுக்கிப் போட்டுக்கிட்டே  போய் ஊர்வலம் முடிஞ்ச அஞ்சாவது நிமிசம்  சாலை எல்லாம் பளிச் பளிச்.


கடைசி காமணி நேரத்துலே என் கெமெரா பேட்டரி மண்டையைப் போட்டுருச்சு:( அதான் கோபால் கெமெரா இருக்குல்லேன்னு பார்த்தால்.... கார்ட் ஃபுல் ஆகிருச்சும்மான்றார்.


ரெண்டு பேரும் எடுத்த படங்களை இங்கே ஒரு ஆல்பத்தில் போட்டு வச்சுருக்கேன். எடிட் பண்ணிக்கலை. ரெண்டு செட் கூடுதல்தான்.  எப்படியும் இன்னும் ஒரு வாரத்துலே உலகம் அழிஞ்சுறப் போகுதாம். அப்புறம் அம்மான்னா வருமா ஐயான்னா வருமா?  இப்பவே பார்த்து ரசிச்சுக்க வேண்டியதுதான்.

பொழைச்சுக்கிடந்தா எல்லோருக்கும் மெர்ரி க்றிஸ்மஸ்:-)))








32 comments:

said...

குப்பை அள்ளும் வண்டி ஊர்வல விநியோகத்தில் பறந்து விழுந்த மிட்டாய்த்தாள்களையும், விளம்பரத்தாள்களையும் பெருக்கிப்பொறுக்கிப் போட்டுக்கிட்டே போய் ஊர்வலம் முடிஞ்ச அஞ்சாவது நிமிசம் சாலை எல்லாம் பளிச் பளிச்.//

இதை படிக்கும் போது நம் நாட்டிலும் இது மாதிரி வந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணச் சொல்கிறது.

நாளை நமதே! என்ற நம்பிக்கையில் கிறிஸ்த்மஸ் வாழ்த்துக்கள்.

நாங்களூம் கிறிஸ்த்மஸ் விழாவை உங்கள் அருகிலிருந்து பார்த்து விட்டோம்.

said...



//இன்னும் ஒரு வாரத்துலே உலகம் அழிஞ்சுறப் போகுதாம். அப்புறம் அம்மான்னா வருமா ஐயான்னா வருமா? இப்பவே பார்த்து ரசிச்சுக்க வேண்டியதுதான்.

பொழைச்சுக்கிடந்தா எல்லோருக்கும் மெர்ரி க்றிஸ்மஸ்:-)))//

என்னங்க இது !! நீங்களுமா இதெல்லாம் நம்பற மாதிரி இருக்கீக....
ஒண்ணு சொல்லிப்போடணும்க...
யூ பிகம் வாட் யூ பிலீவ் அப்படின்னு சொல்வாங்க இல்லயா...
நாமே இந்த உலகம் அழிஞ்சு போயிடும் அப்படின்னு நம்பிட்டோன்னு இருந்தா, அந்த உலகம் அழியறதுக்குண்டான‌
எல்லாத்தையுமே மனுசங்க செய்ய ஆரம்பிச்சுடுவாங்க...

கம்பூயுடர் பெர்சனல் அப்படின்னு பி.சி. துவங்கிய காலத்துலே எல்லாருக்கும் முதல் பாடத்துலே சொன்னாக.
கம்புயுடருக்கு அப்படின்னு தனியா ஒரு மூளை அப்படின்னு கிடையாது.
நம்ம என்ன சொல்றோமோ ப்ரோக்ராம் பண்றாமோ அத செய்யும் அப்படின்னு சொன்னாக.

அதுக்கு அவங்க GIGO அப்படின்னு பேர் வச்சாங்க...
Garbage In Garbage Out அப்படின்னு அர்த்தமாம்.

1991 லே நினைக்கிறேன். நான் எழுந்துக்கினு சொன்னேன்.
ஐயா, முதல் வகுப்பிலேயெ கம்புயூடர் கத்துக்கணும் அப்படின்னு வந்து இருக்க்ரவங்க கிட்ட
garbage அப்படின்னு ஏன் பேசறீங்க...

GIGO அப்படின்னா
Good Things in.. Good Things Out அப்படின்னேன்.
என்னா அது அர்த்தம் அப்படின்னாரு வாத்தி.
நல்லதையே மனசுலே நினையுங்க.. நல்ல வார்த்தைகளே வரும். என்றேன்.

25. 12. 2012 துளசி அம்மாவும் கோபால் ஐயாவும் க்ருஸ்மஸ் விழாவை தங்கள் உறவினர்களுடனும்
நண்பர்களுடனும் லட்சோப லட்சம் ரசிகர்களுடனும் கொண்டாட இந்த சுப்பு ரத்தினம்
அந்த அடையார் அனந்த பத்ம நாபனை வேண்டுகிறான்.

ஹாப்பி க்ருஸ்மஸ்.

சுப்பு ரத்தினம்.
www.vazhvuneri.blogspot.com

said...

பதிவு முழுவதுமே பளிச் பளிச்.
அந்த ஸ்கேட்டர் மேல் உட்கார்ந்திருக்கும் படத்தில் தெரியும் சாலையை பாருங்கள்...15 ~ 20 MM Thickness க்கு சாலை போட்டிருக்காங்கா அது காலப்போக்கில் தேய்ந்து போனால் அதை மட்டும் சுரண்டிப்போட்டு விட்டு அதன் மீது மீண்டும் புது சாலை போடுவாங்க இதனால் அனாவசிய வேலையும்/ செலவும் இருக்காது. FB யில் நம்ம சர்வேசன் இங்குள்ள நிலமையை பற்றி புலம்பியுள்ளார்.

said...

வாகனம்+ஆசனம் நல்ல ஐடியா.

ட்ராகன் டான்ஸ் பார்க்கவே ரொம்ப கலர்ஃபுல்லா இருந்துருக்குமே.

போட்டோக்களும் அருமை

said...

படங்கள அருமை, நாங்களும் அங்கே வந்து பார்த்தா மாதிரி ஒரு ஃபீலிங்க்.

என்னிய பொறுத்தவரை நாளை நமதுதான். :)

said...

அமர்க்களமான கிறிஸ்துமஸ் பகிர்வுகள்.. வாழ்த்துகள் !1

said...

வண்ண மயம்! மற்ற ஃபோட்டோக்களும் சுட்டியில் சென்று பார்த்தேன். அனைத்தும் அருமை. சிரத்தையுடன் எடுத்துப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

மெர்ரி கிறுஸ்துமஸ்!

said...

எங்க கோடைகாலம் நேத்துதான் ( டிசம்பர் 1) ஆரம்பிச்சுருக்கு. இன்றைக்கு 25 டிகிரி வரப்போகுதுன்னதும் முன் ஜாக்கிரதையாத்தானே இருக்கணும்! ஏன்னா....///

அக்கா நலமா இருக்கீங்களா .

awwwwww its -8 here in our city .

அழகான படங்கள் வர்ணனை எல்லாம் சூப்பர்

சிங்கம்ஸ்/ ..உண்மையில் ஒரு ராயல் நடை போட்டுதான் நடக்கிறாங்க :))

said...

துளசிம்மா.சூப்பர்.என்னே அழகா போட்டோ கவர் பண்ணி இருக்கிங்க.கிருஸ்துமஸ்ஸுக்கு முன்னமேயே இவ்வளவு அமர்களமா?பலே...கிருஸ்துமஸ் கொண்டாட்ட‌த்தையும் மறக்காமல் நிறைய போட்டோக்களுடன் பகிருங்கள்.கூடவே உங்கள் வீட்டு கிருஸ்துமஸ் பலகாரத்தை வாய் வரைக்கும் கொண்டு போக முடியாவிட்டாலும் கண்வரைக்குமாவது காட்டிடுங்கோ.மறக்காமல் கேமரா பேட்டரியை ஃபுல்லா சார்ஜ் பண்ணி வச்சுக்குங்க.எக்ஸ்ட்ரா பேட்டரிஒண்ணு வைத்துக்கொண்டால் நலமே.கேட்டோ...?

said...

படங்களும், பகிர்வும் அழகா இருந்தது. என்ன சுத்தம்...இங்க சத்தியமா வரவே வராது...

கிறிஸ்மஸ் வாழ்த்துகள் டீச்சர்.

said...

சேண்ட்டா இருக்காரான்னு அன்னிக்கு சபரி கேட்டான்..ஏன் உனக்குத்தெரியாதா நான் தானே கிப்ட் வாங்கி வீட்டு அட்ரெஸ் கொடுக்கிறேன்னு.. கேட்டேன்.. இல்ல டூத் ஃபேரி கூட அன்னிக்கு அர்ஜூனுக்கு பைசா கொடுத்துச்சாம்ன்னான்.. அவங்கம்மா வச்சிருப்பாங்க தானே..

இருக்காரோ இல்லையோ கிப்ட் கொடுக்கிறது நாங்க தான்னு மட்டும் சொல்லிடனும்..

said...

வூட்டாண்டை!

நான் தமிழ் எவ்வளவு நன்றாகப் பேசினாலும்...நான் வீட்டாண்டை போகாலாம் என்று சொல்வதை என் மனைவி அடிக்கடி கிண்டலடிப்பர்கள்,"நீங்களும் உங்க தமிழும். அது என்ன வீட்டாண்டை" என்று.

said...

வாங்க கோமதி அரசு.

எல்லாம் நம்ம நாட்டு மக்கள் மனசு வைக்கணும். நம்ம நாடு நம்ம ஊரு நம்ம தெருன்னு ஒரு அன்பும் பரிவும் இருக்கவேணாமோ?

ஜனநாயகமுன்னா இஷ்டப்படி இருப்பேன் என்று நினைச்சால் இப்படித்தான்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

பொதுவா நமக்கு நம்பிக்கைகள் கூடுதல்தான். இல்லேன்னா மறுநாளைக்கு இட்லி செய்ய இன்னிக்கே மாவு அரைப்போமா:-)))

எங்கூர்லே கிறிஸ்மச் ஸ்பெஷலுன்னு எலெக்ட்ரானிக் சாமான்கள் கடையில் பலத்த ஸேல் போகுது. இப்ப வாங்கிக்கிட்டு 2014 லே காசு கொடுத்தால் போதுமாம்.

மக்கள் அள்ளுவதைப் பார்த்தால் 21 டிசம்பர் உண்மைதான் போல:-))))

said...

வாங்க குமார்.

//15 ~ 20 MM Thickness க்கு சாலை போட்டிருக்காங்க//

தூண்டில்காரருக்கு மிதப்பு மேலே கண்ணு:-))))

இது தாற்காலிகமா, பழுது பார்க்கப்போட்டது. அதான் நிலநடுக்கத்தில் சாலைகளில் விரிசல் விழுந்துருச்சே.

இங்கே பழுதான சாலைகளை எல்லாம் முழுசுமா புதுசாப்போட்டுக்கிட்டு வர்றாங்க. இதுக்கும் வேலை ஆரம்பிச்சு நடக்குது.

கொஞ்சம் பெரிய சாலை என்பதால் (4.5 KM) ரெண்டு வாரம் ஆகலாம். இரவில் மட்டுமே பணி நடக்குது.

said...

வாங்க அமைதிச்சாரல்.

யார் தருவார் இந்த அரியாசனம் பாட்டு அவருக்குத் தெரிஞ்சுருக்க வாய்ப்பே இல்லை:-)))

எனக்கு ட்ராகனை விட சிங்கம்தான் ரொம்பப்பிடிக்கும்.

said...

மெர்ரி டொடே மெர்ரி ஆல்வேய்ஸ்.நிதானமா வரேன்:)

said...

மிக அருமையான பதிவு

said...

படங்களும் விடயங்களும் படு ஜோர்

"..இப்பவும் ஒழுங்கு குலையாம ஊர்வல வண்டிகள் எல்லாம் இடது பக்கம் நடுக்கோட்டைத் தொடாமல் போகுது பாருங்க.,." எப்பதான் நாம் ஒழுங்குகளைப் படிக்கப்போகிறோமோ?

said...

வாங்க வல்லி.

அப்பாலிக்கா வர்றீங்களா? நாச்சியாருக்கு இல்லாத துளசியா!!!!

வாங்க எப்ப வேணுமுன்னாலும் வாங்க:-)

said...

வாங்க புதுகைத் தென்றல்.

அதே அதே

நாளை நமதே என்ற நம்பிக்கையில்தான்
நேத்து அரிசி மூட்டை வாங்கியாந்தேன் :-))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்கள் ரசிப்புக்கும் நன்றி.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நாட்டுநடப்பை நீங்கள் ரசித்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க ஏஞ்சலீன்.

யானைக்கு (இப்போ) ஒரு காலம் என்றால் பூனைக்கும் ஒரு காலம் வந்துரும்ப்பா.

இன்னும் ரெண்டே மாசம்தான் எங்க கோடை. அப்புறம் குளிர் ஆரம்பிச்சுரும்:(
இந்தக் கோடையில் கூடப்பாருங்க..... சதர்லீ வந்தால் போச்:(

நலம் விசாரிப்புக்கு நன்றிப்பா.

டேக் கேர்.

said...

வாங்க ஸாதிகா.

அந்த எக்ஸ்ட்ரா பேட்டரியை எங்கே வச்சோமுன்னுதான் ஒரு மாசமாத் தேடிக்கிட்டு இருக்கேன்ப்பா:(
(இந்தியாவுக்கு வந்துச்சு. இப்பக் காணோம்!)

நம்மூர்லே கிறிஸ்மஸ் பலகாரங்கள்ன்னா
டேனிஷ் குக்கீஸ், ப்ளம்புட்டிங்தான். சூப்பர்மார்கெட்டில் கொட்டிக்கிடக்கு.

கிறிஸ்மஸுக்கு மறுநாள் வாங்கினா 50% விலை குறைவு. அமெரிக்காகூடச் சேர்ந்து கொண்டாடினால் தப்பா:-))))

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

இந்த வருசம் ஸேண்ட்டா வருவதைப் பார்க்க முடியும். வைகுண்ட ஏகாதசிக்குக் கண்முழிச்சால் துவாதசிக்கு கிறிஸ்மஸ்!!!!

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க கயலு.

அதென்னப்பா தில்லிக்காரங்க எல்லாம் ஒரேமாதிரி இருக்கீங்க!!!!

என் தோழி ஒருத்தர் அவுங்க தில்லி மாமியார் கதைகள் சொல்லும்போது

பிள்ளைகளுக்கு எதை வாங்கிக் கொடுத்தாலும் உனக்காக உன் ஆசைக்காக இவ்ளோ காசு போட்டு வாங்கிக் கொடுத்துருக்கோமுன்னு ஒவ்வொரு பொருளுக்கும் சொல்வாங்களாம்!

கடைசியில் மகன், அப்பா அம்மாவுக்கு செலவு வைக்க வேணாமுன்னு காதல்கல்யாணம் பண்ணிக்கிட்டார்:-))))

















said...

வாங்க நம்பள்கி.

நம்ம ராஜாஜிகூட ராமாயணக்கதையில் ராவணன் ஆசிரமத்தாண்டை வந்தான்னு எழுதி இருக்கார்.

வீட்டுக்கு அண்மையில் என்பதுதான் வீட்டாண்டைன்னு உங்க தங்ஸ்க்குச் சொல்லுங்கோ:-)

said...

வாங்க மாற்றுப்பார்வை.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிகள்.

said...

வாங்க டொக்டர் ஐயா.

//....ஒழுங்கு....//

ஊஹூம்.... இந்த ஜென்மத்தில் காணக்கிடைக்குமுன்னு எனக்குத் தோணலை:(

வருகைக்கும் ரசனைக்கும் நன்றிகள்.

said...

அழகிய ஊர்வலம் இப்போதுதான் ஒவ்வொன்றாக பார்த்து ரசித்தேன்.

அனைத்தும் அருமை.

said...

நான் உங்க வீட்டாண்டை வரத் தாமதமாகிவிட்டது. 'மாப்பு!'

கிறிஸ்த்மஸ் கொண்டாட்டங்கள் படங்களுடன் பார்க்க மிக அருமை!