Monday, September 03, 2012

நோகாமல் வடை 'சுடுவது' எப்படி?

என் சொல்பேச்சு கேக்காத பலகாரங்களில் எப்பவும் முன்னுக்கு வந்து நிற்பது இந்த வடைதாங்க. அதிலும் உளுந்துவடைதான் சரியான தகராறு பிடிச்சது. 

நமக்கு ஃபேவரிட் சமாச்சாரம் மசால்வடைதான். போன ஜென்மத்தில் எலியாக இருந்ததன் விளைவு. அதுக்காக மத்த வடைகளைப்  புறம் தள்ளக் கூடுமா?

 உளுந்தை ஊறப்போட்டு எவ்வளவுதான் பக்குவமா அரைச்சாலும் சுடும்போது அது போண்டா! சரி...பதிவர் சந்திப்புக்கு ஆச்சுன்னு வச்சுக்கலாம்தான். ஆனால் சக பதிவருக்கு எங்கே போறது?

 நேயடுவுக்கு வடை மாலை போடணுமுன்னா கடைசியில் அது போண்டா மாலையாத்தான் முடியும்! அவர் கொடுத்து வச்சது அவ்ளோதான். அதுக்கு யார் என்ன செய்ய முடியும், சொல்லுங்க?

 வடைவரலைன்னு புலம்புனதைக்கேட்ட தோழி (இலங்கைத்தமிழர்) ஓசைப்படாம ஒரு நாள் வடைமாலை கொண்டுவந்து நம்ம அனுமனுக்குப் போட்டார். வடிவம் அளவு, நடுவில் உள்ள ஓட்டை எல்லாம் சரியாவே இருந்துச்சு. ஆனால் இது வடைமாலைக்கான (அப்ரூவ்டு )வடை அல்ல. ருசி அருமை. இதுக்குத்தான் நேயடு வீட்டில் இருக்கணும். அவர்தயவில் நமக்கு வடை கிடைச்சுருது பாருங்க;-)

 தோழியும் வடை ரகசியங்கள் பலதையும் சொல்லிக் கொடுத்தாங்க. மாவு அரைச்சு அதை ஃப்ரிஜ்ஜுலே ஒரு மணி நேரம் போல வச்சுட்டா கெட்டிப்பட்டுரும். வடை தட்ட எளிது.

 இன்னொரு சமையல் குறிப்பில் இருந்துச்சு, அரைமணி நேரம் மட்டுமே உளுந்தை ஊறவைக்கணும். இப்படி வடைக்குறிப்பை எங்கே பார்த்தாலும் ஆவலோடு படிச்சுருவேன். அப்படியாவது வடைகலை கைக்கு வருதான்னு.

 ஊஹூம்....... 

ஒரு சமயம் இங்கே புதுசா ஒரு இண்டியன் கடையில்( வந்து ரெண்டரை வருசமாச்சுதாம். ஆனால் அப்போ நான் நாட்டில் இல்லை!) ஃப்ரீஸர் செக்‌ஷனில் காய்களைத் தேடும்போது பளிச்ன்னு கண்ணில் ஆப்ட்டது ரெடி டு ஈட் உளுந்துவடை. ஆஹா...... இப்படியெல்லாம் வர ஆரம்பிச்சுருச்சா என்ன?

 அந்தப்பகுதியை நிதானமா ஆராய்ஞ்சதில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் எனக்காகவே இருக்கு! பருப்பு வடை, உளுந்துவடைன்னு வடைகளில் ரெண்டு பிரிவு. கேரளாவில் இருந்து வரும் ஐட்டம்ஸ். சாம்பிள் பார்க்க ரெண்டும் வாங்கியாந்தேன்.

 உளுந்துவடையுடன் தேங்காய்ச் சட்டினி. பேஷ் பேஷ்! பேக்கெட்டில் ஆறு வடைகள். ஒவ்வொன்னும் குண்டு குண்டாய் பெரூசு! உறைஞ்சு போய் கிடக்கு. ஒரு மணி நேரம் வெளியில் எடுத்துவச்சு ரூம் டெம்ப்ரேச்சருக்கு வந்ததும் கொஞ்சம் எண்ணெயில் இன்னொருக்கா ஒரு ரெண்டு நிமிசம் பொரிச்செடுக்கணும். லேசா ஒரு கரகரப்போட வரும். இல்லைன்னா மைக்ரோவேவில் சூடாக்கலாம். க்றிஸ்ப்பா இருக்காது. வடிவம் எல்லாம் பொதிக்குள்ளே அமுங்கி கொஞ்சம் இப்படி அப்படின்னுதான் இருக்கு. ஆனால் ருசி ஓகே! கையால் கொஞ்சம் அமுக்கினால் எண்ணெய் கூடுதலா இருப்பது தெரியுது. இவ்ளோ எண்ணெய் எதுக்கு? உடம்புக்கு நல்லதில்லையே:( அடங்கு மனசே..... தினமுமா தின்னப்போறே? என்றைக்காவது ஒரு நாள்தானே? வடை ஆசையையும் ருசியையும் மறக்காமல் இருக்க ரெண்டு மாசத்துக்கு ஒருக்கா போதுமே!

 பருப்புவடை என்னவோ கொஞ்சம் மென்னியைப் பிடிக்குது. ஊஹூம்..... சும்மாத்தின்ன கஷ்டம். பேசாம மோர்க் குழம்புலே தூக்கிப்போட்டேன். அருமை!

 மற்ற அவைலபிள் ஐட்டம்ஸ் பற்றி அப்பப்பச் சொல்வேன் கேட்டோ! பதிவு சமாச்சாரம்:-)))

 நிலநடுக்கம் வந்து ஊர் அழிஞ்சபின் சிட்டியில் இருந்த வீட்டு உபயோகத்துக்கான மின்சார சாதனங்கள் கடைகள் எல்லாம் போயே போச். அதுக்காக வியாபாரத்தை மூட முடியுமா? தாற்காலிகமா ஒரு இடத்தில் கடை போட்டு இருக்கும் பொருட்களையெல்லாம் ஸேலில் வித்துக்கிட்டு இருக்கு ஒரு நிறுவனம். நாப்பது டாலர் சமாச்சாரங்கள் எல்லாம் பதினாலுக்குப் போட்டுருக்கு. இப்படியே மற்ற எல்லா பொருட்களும் நல்ல தள்ளுபடியில் 65 இஞ்சு டிவி ஒன்னு நல்ல மலிவு. அதுக்கு ஏற்ற சுவர் நம்மிடம் இல்லை:( டோனட் மேக்கர் ஒன்னு பார்த்தேன். நான் அதைக் கையில் எடுத்ததும் 'வடையா?' என்றார் கோபால். அப்பாடா..... வாங்கும் பொருளை நியாயப்படுத்த வியாக்கியானம் கொடுக்கும் வேலை மிச்சம்:-)

 முதலில் நோகாம ஒரு சொந்த சாஹித்த்யத்தில் செஞ்சு பார்த்துட்டு அப்புறமா பாரம்பரிய சமையலுக்குப் போகலாமேன்னு..........

 முயற்சி திருவினை ஆக்குமுன்னு சும்மாவாச் சொல்லி இருக்காங்க!!

 மகள் வந்ததும் ஓசைப்படாம எடுத்து நீட்டுனேன். மனசுக்குள்ளே மட்டும் திக் திக். கினிபிக்கை சமாளிச்சுடலாம். ஆனால் ஃபுட் க்ரிட்டிக்கை? ஒன்னும் சொல்லாம சாப்பிட்டு முடிச்சாள்.

 எப்படி இருந்துச்சு?

 வாட் ஸ்பெஷல் அபௌட் இட்? யூ ஆல்வேஸ் மேக்.

 ஆஹா....வெற்றியோ வெற்றிதான்.

 இன்னும் கொஞ்சம் dos and don'ts தெரிஞ்சுக்கணும் அனுபவம் பெரிய பாடம்:-)

 வாங்க, செய்முறை பார்ப்போம்.

 தேவையான பொருட்கள்:

 ஒரு கப் ரெடிமேட் உளு(த்தம்)ந்து மாவு.
 பெரிய வெங்காயம் 1 (பொடியா நறுக்கிக்கணும்)
 பச்சை மிளகாய் 4 ( பொடிசா அரிஞ்சது)
 கருவேப்பிலை 1 இணுக்கு ( இதயும் பொடியாவே அரிஞ்சுகுங்க)
 உப்பு முக்கால் டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் ரெண்டு சிட்டிகை
 எண்ணெய் அரைக் கப்

 ஆக்கம்:-)

 மேலே சொன்ன பொருட்கள் எல்லாத்தையும் ஒன்னாச்சேர்த்து தண்ணீர் விட்டு வடை மாவு பதத்துக்குக் கலக்கி வச்சுக்குங்க.

 நம்ம வடை மேக்கரை (?!!) ப்ளக்கில் பொருத்தி ஆன் செஞ்சுருங்க. டேஞ்சருன்னு சிகப்பு விளக்கு ஒளிரும்:-) அஞ்சு நிமிசத்தில் சூடாயிருச்சுன்னு விளக்கு அணைஞ்சுரும்.

 கலக்கி வச்சுருக்கும் வடை மாவை ஒர் ஸ்பூனால் கோரி வடைக்குழியில் ஊத்திட்டு மூடியை கவுத்துடலாம்.. அஞ்சாறு நிமிசங்களில் திறந்து பார்த்தால் டடா............ முக்கால்வாசி வெந்து மேற்புறத்தில் வெள்ளை மாவு தெரியும். லேசா திருப்பிப்போட்டு மூடியைக் கவுத்தால் போதும். நாலு நிமிசத்தில் இப்படி இருக்கும்.

 மேற்படி அளவு மாவுக்கு, பாந்தமா பனிரெண்டு வடைகள் வந்துச்சு. சுட்ட எண்ணெய் மீதியாகும் சங்கடம் ஒன்னும் இல்லையாக்கும் கேட்டோ:-)

63 comments:

said...

/ போன ஜென்மத்தில் எலியாக இருந்ததன் விளைவு. //

சரியாத்தான் சொன்னீக. அதன் கோபாலு பூனை போல சத்தம் போடாம‌
உங்க பின்னாடியே வந்திட்டு இருக்காரா இந்த ஜன்மத்திலே !!

மீ. பா.
http;//vazhvuneri.blogspot.com

said...

எங்க வீட்டிலேயும் இது நடந்திச்சு!

said...

வாவ்...

உளுந்து வடை மஹாத்மியம் எழுதிட்டீங்க! :)

எங்க வீட்டிலும் அம்மணிக்கு உளுந்து வடைன்னாலே பேஜார் தான்! ஹெல்ப நான் போகணும்! :)))

said...

ஹைய்யோ.. இந்த வடை மேக்கர் நல்லாருக்கே..

said...

ஆகா.. :)
நல்லா இருக்கு கண்டுபிடிப்பு..
ஆனா எனக்கு வடை செய்ய வந்துருச்சு ..
ஆஞ்சநேயர் வடை மாலை சூப்பர்..

ஒரிஜனல் வடைமாலை வடை தான் செய்யக்கத்துக்கனும்.. நாமே செய்து நாமே சாப்பிடலாமா..?

said...

muthuletchumi amma !! // ஆஞ்சநேயர் வடை மாலை சூப்பர்..

ஒரிஜனல் வடைமாலை வடை தான் செய்யக்கத்துக்கனும்.. நாமே செய்து நாமே சாப்பிடலாமா..?//

சாப்பிடலாமே ஆனா ஒரு கன்டிஷன்.
என்னைப்போல ஒரு ஆஞ்ச நேயருக்கு தானம் ( அதாவது ஒரு பத்து பதினிரண்டு) கொடுத்துவிட்டுத் தான் சாப்பிடணும்.

சுப்பு தாத்தா.
http;//vazhvuneri.blogspot.com

said...

பாட்டி எனக்கு கொன்சம் பிரஸர்,சர்க்கரை(போதூம்?)வந்ததால வடை கட்........ தினமும் 4 இல்லைன்னா 5 வடையும் பழைய சோறும் காலை உணவு.............எங்க ஊருல வடை சூப்பரா இருக்கும்.........ஆமா விக்கரகம் வீட்டுல வச்சுறீக்கீங்க ...என்னன்ன செய்ரீங்க தனியா ஒரு பதிவு போடலாமே.....நானும் சாமிய சரியா வச்சுறுக்கேன்னான்னு தெரின்சிக்குடுவேன்....

said...

சூப்பர் ஐடியாவில் சூப்பர் வடை!

said...

துள்ஸ்! அனுமார் பாவம் :-) இந்த டோனட் வடையா அவருக்கும் ? ஆனா பார்த்தா நம்ம யூஷூவல்
வடை மாதிரி இருக்கே?

said...

/என் சொல்பேச்சு கேக்காத பலகாரங்களில் //

யாரெல்லாம் கேட்டுப்பாங்கன்னு சொல்லிட்டா ஈஸியா இருக்கும். என் லிஸ்டைவிட உங்க லிஸ்ட் பெரிசா, சிறுசான்னும் பார்த்து அல்ப சந்தோஷம் கிடைக்குமே!! :-)))))

வடை தகராறாத்தான் இருந்துச்சு. ஆனா, கொஞ்சம் அரிசிமாவும் சேர்த்து செய்ய ஆரம்பிச்ச பின்னாடி சரியாகிடுச்சு. (ஆ, உங்களுக்கே டிப்ஸா!!) :-)))

//தேவையான பொருட்கள்://
இதெல்லாம் இருக்கு, ஆனா டோனட் மேக்கருக்கு எங்க போறதாம்!! :-))))

அப்புறம்.. அப்பூறம்... வடைன்னா அப்பிடியிப்பிடி வட்டம்(னு பேருக்குச் சொல்லிக்கலாம்) மாதிரி, ஓட்டை இருக்கும் ஆனா இருக்காது... இப்பிடியே பாத்து பழகிட்டதாலேயோ என்னவோ, காம்பஸ் வச்சு வட்டம் போட்டமாதிரி அழகா இருக்கிற ‘டோனட் வடை’யைப் பாத்தா உளுந்துவடைன்னே சொல்லத் தோணலை!! ;-)))))

said...

வடையில் மெத்தானது உழுந்தவடை.

நீங்க சொன்னது போல மாவு பதமா இல்லைன்னா.. வடை போண்டாவாயிரும்.

டோனட் மேக்கர் நல்ல ஐடியா. அந்த மேக்கரை இந்தியாவுக்கு ஒன்னு பார்சல் பண்ணுங்களேன். :) காம்பஸ் வெச்சிப் போட்டது மாதிரி நாங்களும் வடை சுடுறோம்.

அனுமாருக்குப் போடும் வடையில் ஒரு நேக்கு இருக்கு. அதுக்கு உழுந்தை ஆட்டக்கூடாது. லேசாச் சிவக்க வறுத்து மாவா அரைச்சு வெச்சுக்கணும். கலவையெல்லாம் போட்டு அளவா நீர் விட்டுப் பிசைஞ்சு தட்டனும். உருட்ட வந்தாலும் உருட்டலாம். செய்முறை லேசுதான். மிளகாய் கூடாது. வெங்காயம் கூடாது. வெறும் மிளகு சீரக உப்பு பெருங்காயம்தான்.

said...

சரியாப் போச்சு போங்க, செப்டெம்பரில் வரீங்க இல்லை. வடைமாலை போட்டுட்டாப் போச்சு! தனி உளுந்து வடை நாங்க சிராத்தம் அன்னிக்குத் தான் செய்வோம். மற்ற நாட்களில் ஆழாக்கு உ.பருப்புன்னா ஒரு டேபிள் ஸ்பூன் து.பருப்பு, 2 டீஸ்பூன் க.பருப்பு, ஒரு கைப்பிடி அரிசி சேர்த்து ஊற வைக்கணும். அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரம் ஊறினால் போதும். களைஞ்சு ஊற வைச்சதை வடிகட்டிக் கொண்டு கிரைன்டரில் போட்டு அரைக்க வேண்டும். பாதி அரைக்கும்போது உங்களுக்குத் தேவையான காரம்,மி.வத்தல் அல்லது ப.மி அல்லது மிளகு, உப்பு, பெருங்காயம் சேர்க்கணும். ஆஞ்சநேயர் வடைமாலைக்கு மிளகு, உப்பு, கறிவேப்பிலை தான். பெருங்காயம் கூட நோ தான். சேர்த்து நன்கு அரைத்தால் மாவு பொங்கி புசுபுசுவென வரும்போது எடுத்து எண்ணெயைச் சூடாக்கி வடைகளாய்த் தட்டிச் சாப்பிட வேண்டியது தான்.

அப் கோர்ஸ் ஆஞ்சநேயர் கண்ணில் காட்டிட்டுத் தான். :)))

said...

|| நமக்கு ஃபேவரிட் சமாச்சாரம் மசால்வடைதான். போன ஜென்மத்தில் எலியாக இருந்ததன் விளைவு. அதுக்காக மத்த வடைகளைப் புறம் தள்ளக் கூடுமா ||

அது !

|| நம்ம வடை மேக்கரை (?!!) ||

எப்டி இப்டி..வல்லவனு(ளு)க்குப் புல்லும் ஆயுதம்னு சொல்லாமல் சொல்றீங்க..

அசத்தல்..

said...

அதெல்லாம் சரி...அனுமார் வடை வெயிட் தாங்காமல் குப்புற அடிச்சுடுவார் போலருக்கே...மாமேரு அஞ்சனை மைந்தனை வடைக்குள்ள தேட வேண்டியிருக்கே..

said...

|| அப் கோர்ஸ் ஆஞ்சநேயர் கண்ணில் காட்டிட்டுத் தான். :))) ||

கீத் பாட்ஸ்..எதுக்கு அதெல்லாம்..சூடாறிடாது?!

வடையைப் பொறிச்சு எடுக்கும் போதே அங்கிங்கெனாத படி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே, இந்த எண்ணெய்ச் சட்டியிலும் இருக்கிறாய்..உனக்கு பொரிந்து கொண்டிருக்கும் வடை சமர்ப்பணம்' அப்படின்னு வணக்கம் வைச்சாப் பத்தாது?!

said...

நல்ல ஐடியாவா இருக்கே...

said...

அறிவன், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P:P:P:P:P

said...

வாங்க மீனாட்சி அக்கா.

பூனை கையில் ஆப்ட எலின்னு இப்படி உண்மையைப் போட்டு உடைச்சிட்டீங்களேக்கா:-)))

said...

வாங்க கணேஷ்.

ஆஹா.... பார்த்து எவ்ளோ நாளாச்சு!!!

நல்லா இருக்கீங்களா?

வீட்டுக்கு வீடு வடை இப்படின்னு புதுமொழி உண்டாக்கிடலாமா:-)))))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உதவி பண்ணியே எக்ஸ்பர்ட் ஆகி இருப்பீங்களே!!!

உள்ளங்கையில் வச்சுத் தட்டாம நாலுவிரலில் வச்சுத்தட்டி கட்டைவிரலால் அழகாத் துளை போட்டு சர்ன்னு எண்ணெயில் விழும் வடைகள் இப்பவும் எனக்கு அற்புதமே!!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

வடை மேக்கர் மட்டுமா?

குட்டியா மஃப்பின் மேக்கர் வந்துருக்கு. அதுலே பணியாரம் செஞ்சு பார்க்கணும் ஒரு நாளைக்கு!

said...

வாங்க கயலு.

ஒரிஜனல் வடை ஃபார் ஹனுமன் கொஞ்சம் சுலபம்தான்.

நம்ம ஜெயஸ்ரீ தாளிச்சு விட்டதின் சுட்டிகள் இதோ;-)))

http://mykitchenpitch.wordpress.com/2007/08/09/anumaar-vadai-suseendhram/

http://mykitchenpitch.wordpress.com/2007/08/09/milagu-vadai-kaalahasthi/

பார்ஸேல் (எனக்கு) அனுப்புங்க.

said...

வாங்க சுப்பு ஐயா.

தாத்தான்னுட்டு பத்து பனிரெண்டு கேட்டால் எப்படி?

ஒரிஜனல், பல்லைப் பதம் பார்த்துடுமே:-))))

said...

வாங்க நான்.

எனக்கு சாமி வந்த விவரம் தெரியாதா? அச்சச்சோ..... ச்சும்மா விடலாமா?

http://thulasidhalam.blogspot.com/2005/10/blog-post_24.html

ஆமாம்... அதுக்குள்ளே என்ன ப்ரஷரும் ஷுகரும்?

அதுவும் பேரனுக்கு?

ஒருவேளை மாமாதாத்தான்னு சொல்வதுபோல பேரத்தாத்தாவா?????

said...

வாங்க குட்டன்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க உஷா.

அனுமாருக்கென்னப்பா ஒரே ஜாலிதான்:-))))

நீங்களே சாப்பிடுங்கோன்னு கொடுத்துட்டார். மாலை இலங்கைத்தோழியின் உபயம்.

டோநட் வடைமாலை வேணுமுன்னா ஒருநாள் சாத்திப்புடலாம்-)))

said...

வாங்க ஹுஸைனம்மா.

அநேகமா என் லிஸ்ட் பெருசா இருக்கலாம்.

ஸோன்பப்டி, அதிரசம், மோதகம்(கொழுக்கட்டை)ன்னு என் லிஸ்ட் அனுமன் வால்:-)))

தின்ன ஆளில்லைன்னு இப்பெல்லாம் அடுப்படி சோதனைச்சாலையை மூடவேண்டியதாப்போச்சு:-)

அநேகமா உங்க ஊரில் கிடைக்கலாம் இந்த டோநட் மேக்கர். விண்டோ ஷாப்பிங்கில் கண்ணைத் திறந்து வச்சுக்குங்க. தேடினால் கண்டடைவீர்கள்!

said...

வாங்க ஜீரா.

அனுமன் பாடு யோகம்தான். புது ரெசிபிக்கு நன்றி.

மேலே நம்ம கயலுக்குச் சொன்னதையும் பாருங்க.

said...

முயற்சி திருவினையானது:)! சூப்பர் வடைகள்! போன ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள் என்பதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறதே:)!

said...

வாங்க கீதா.

அடையார் அனுமனுக்கு ஆசைக்கு ஒரு வடைமாலை சாத்தியாச்சு. நம்ம கோகி & கப்புவுக்கான நேர்த்திக்கடன்.

நல்ல தட்டை போல மொறுமொறுன்னு இருந்தது.
ஒரு பெரிய மாலை ப்ரசாதமாக் கிடைச்சது. அங்கேயே வச்சு எல்லாருக்கும் விநியோகிச்சேன்.

கட்டணம் அடைச்சுட்டாக் கோவிலில் செஞ்சுடறாங்க.

நமக்கு இங்கே ஒரு கப் உளுந்துக்கு க்ரைண்டரில் ஆட்ட சோம்பல்:(

தண்ணீர் தெளிச்சு ஆட்டுனா கடைசியில் வழக்கம்போல் மைசூர் போண்டா:-))

said...

பேசாம பதிவர் சந்திப்புக்கு லேடீஸ்க்கு மட்டும் வடை மேக்கர் ப்ரசண்ட்னு கொடுத்திருங்க. நானும் வடையோட போராடி ஒரு மாதிரி கரைதட்டி விட்டேன்.
ஆட்டுரல் இருக்கிறவரைக்கும் இந்தப் பிரச்சினை வந்ததில்லை. மிக்ஸி வந்தப்புறம்தான் போண்டாவாப் போச்சி. ஜீரா சொல்லியிருக்கிற மிளகு வடை என் பெண் பிரமாதமா செய்வா. நேயடு பக்தை:)
வடை வந்திச்சேன்னு இனிமே சொல்லலாம் துளசி.

said...

வாங்க அறிவன்.

என்ன ஆச்சு எண்களுக்கு? சங்கப்பலகையில் இடம் இல்லையா? அச்சச்சோ.....

நிற்க,

சஞ்சீவி மலையைத் தூக்கிக்கிட்டே பஏஅந்து போனவனுக்கு இந்த ஏழே வடைகள் ஒரு சுமையா???

அஞ்சே நிமிசத்தில் கழட்டிக் கொடுத்துட்டான்:-))))

உளுந்து ஊறப்போடும்போதே... நைவேத்தியம் சமர்ப்பியாமி சொல்லிட்டா இன்னும் விசேஷம்! உப்புக்கூட பார்க்கலாம் இல்லை:-)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அவசியத் தேவைதானே கண்டுபிடிப்புகளின் தாய்:-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

போன ஜென்மம் ஒன்னு மட்டுமா இருந்துருக்கும்? பலதில் ஒன்னு எலி:-)))))

said...

வாங்க வல்லி.

சின்னதா ஆட்டுரல் கிடைக்குமான்னு தேடணும்ப்பா.

சென்னையில் இருந்து வரச்சான்ஸ் இல்லாமல் போச்சே....... கண்டெயினரில் ஏத்தி இருப்பேனே! ஆட்டுக்கல், அம்மிக்கல் எல்லாம் லிஸ்ட்டுலே இருந்துச்சு.

பதிவர் சந்திப்பு வடை, ஐடியா ஜோர்:-)))))

said...

வர வர உங்க பதிவுக்கு வைக்கும் தலைப்புகள் ரொம்பவே கவர்ச்சிகரமாக இருக்கு டீச்சர்.

இந்த பதிவை படங்களை வீட்டில் ரசித்தார்கள்.

said...

சேம் ப்ளட் :))

வடை சரியா வந்தா அன்னைக்கு அந்த சாமிக்கு நல்ல நேரம்னு நினைச்சுப்பேன். :))

டோநட் மேக்கரில் வடை. மைண்ட்ல வெச்சுக்கறேன்.

said...

இதெல்லாம் இருக்கு, ஆனா டோனட் மேக்கருக்கு எங்க போறதாம்!! :-))))//

அது மேட்டர். :))
(இந்தியாவுக்கு வந்திரும்)

said...

டீச்சர், நீங்க சொன்ன பிறகுதான் கவனிச்சுப் பார்த்தேன்... :))

கூகிளார் கூட்டணி வச்சுக்க, கூட்டணி வச்சுக்க அப்படின்னு, கணக்குல நுழையறப்ப எல்லாம் ஒரே பிக்கல்..சரி தொலையுதுன்னு ப்ளஸ் ஆயிட்டா, வரிசையா எல்லாத்துக்கும் சரி சரி போலாம் ரைட்டுன்னு அடிச்சு வெரட்டி சேமிச்சுட்டேன்..

பிறகு பார்த்தால் பதிவு அப்டேட் ஆகும் போதே ஏதோ வித்தியாசமா இருக்கேன்னு யோசனை செய்தாலும் கவனிச்சுப் பார்க்க மனமோ,நேரமோ இல்லாததால விட்டுட்டேன்..

இப்ப கொண்டு வந்துட்டம்ல..எண்ணும் எழுத்தும்'னு முதல்ல எண்'தானே வச்சுருக்காரு நம்ம தாத்தன்..நம்ம கணக்குப் படிச்சதுக்கும் ஒரு அர்த்தம் இருந்தால்போல இருக்கும்..

ஆனா, வியப்பு..என்னமா கவனிக்கிறீங்க !!

said...

ஹா...ஹா... எலி எல்லாம் வடையை தூக்கிக் கொண்டு போய்விட்டது.:))))

வடைமாவு நீர்த்துவிட்டால் கொஞ்சம் அரிசிமாவு கைகொடுக்கும்.

said...

கடைசிலே டோனட் மேகர் தான் சொல்வீங்கனு நெனச்சேன்.

வடை தான் நம்பள் பேவ்ரிட் கூட. இந்தியா திரும்பினால் வடைகடை திறக்கலாம்னும் ஒரு ஐடியா இருந்துச்சு. எங்கப் பாத்தாலும் இட்லிக்கடை, ஸ்வீட்கடை, அட.. பிரியாணிக்குக் கூட கடை வந்தாச்சுப்பா.. வடைகடையைக் காணோம். நம்ம கடைல விதவிதமான வடைகள் கிடைக்கும். எல்லாம் அப்பச் செஞ்ச சூட்டோட. தேங்காய், தக்காளி, வெங்காயம், புதினா, கொத்சு , மற்றும் சாம்பாருடன். ஆல்வேஸ் ப்ரஷ். (ஹ்ம்ம்)

அது என்ன வடைமாலைக்கு அப்ரூவ்ட் வடை?

said...

சென்னையிலேயே டோனட் மேகர் பார்த்தேன் புதுகைத்தென்றல். தி.நகர் உஸ்மான் ரோடில் ரங்கநாதன் தெருவுக்கு நேர் எதிராக பலமாடிக் கட்டிடம். கடை பெயர் மறந்து விட்டது. சென்னை போனா செக் பண்ணுங்க.

said...

ஆஹா.. வடை மெஷின்! சென்னையில் கிடைக்குதான்னு பார்க்கணும். எங்கள் வீட்டில் நாங்கள் வடை என்று செய்வதில்லை. செய்தபின் அதற்குப் பொருத்தமான பெயர் வைத்துக் கொள்ளுவோம்! வடை அயர்ன் செய்தார் போல வரும்! :))

நன்றி அப்பாஜி ... அங்கே விசாரித்துப் பார்க்கலாம்!

said...

@ ஸ்ரீராம்,

எங்கே கிடைக்கிறது எனத் தெரிய வந்தால் விவரத்தை அனைவருக்கும் அறியத் தாருங்கள்.

said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்!! பின்னூட்டங்களைப் பார்த்ததில், அநேகமா எல்லா பதிவுலக சீனியர்ஸுக்கும் உ.வடைக்கும் தகராறுதான் போலருக்கு. ஆனா, எனக்கு நல்லா வருது(ன்னு நான் நினைச்சுகிட்டிருக்கேன்). அப்படின்னா அது (நான் செய்வது) வடைதானா? எனக்கே டவுட் வருதே!! அவ்வ்வ்வ்வ்வ்.....

ஸ்ரீராம் சார், அடுத்த ‘எங்கள் ப்ளாக்’ போட்டியில், (நான் ஜெயிச்சா) பரிசு ‘டோனட் மேக்கர்’தான், சரியா!! :-)))))

said...

ஹூசைனம்மா, வடை சுடுவதில் எக்ஸ்பர்ட்னு நானும் காட்டிட்டு இருக்கேனாக்கும். :))))) ஆகையாலே அடுத்த எங்கள் ப்ளாக் போட்டியிலே பரிசு எனக்கும். :)))))

எங்கே? வரும்னு சொன்னதே வரலையாம். :P:P:P:P:P

said...

// ஆனா, எனக்கு நல்லா வருது(ன்னு நான் நினைச்சுகிட்டிருக்கேன்). அப்படின்னா அது (நான் செய்வது) வடைதானா? எனக்கே டவுட் வருதே!! அவ்வ்வ்வ்வ்வ்....//

ஹுஸைனம்மா... சந்தடி சாக்குல உங்களுக்கு வடை நல்ல செய்ய வருதுன்னு விளம்பரப் படுத்தறீங்க சரிதானே... :)) நாங்கள்ளாம் வடை போச்சே கேஸ்தான்! ஆனால் நான்லாம் பார்வையாளன்தான். எங்க வீட்டம்மாதான் வடையை அயர்ன் பண்ணித் தருவது! நான் இறங்கி தயாரித்தால் நல்லா தயாரிப்போமாக்கும்! உக்கும்... (கனைப்பு)

ராமலக்ஷ்மி... நிஜம்மாவே கேக்கறீங்கன்னா தெரிந்த பிறகு அவசியம் பகிர்கிறேன்! கொஞ்சம் லேட் ஆகும்!!! :))

கீதா மேடம்... //எங்கே? வரும்னு சொன்னதே வரலையாம். :P:P:P:P:ப//
என்னது லட்சம் வராகனா?!!!! :))

said...

@ ஸ்ரீராம்,

நிஜமாதான். ஹிஹி.. நமக்கும் இங்கே வடை ஷேப் அப்படி இப்படித்தான்:))!

நாட்களானாலும் பரவாயில்லை. பார்த்தால் சொல்லுங்க. நிச்சயம் இதற்காகத் தாய்க்குலம் உங்களை வாழ்த்தும்:)!

said...

//வடை நல்ல செய்ய வருதுன்னு விளம்பரப் படுத்தறீங்க//

இல்லைங்க, இப்பத்தான் நான் வடைதான் செய்தேனான்னு சந்தேகம் வருது. ஏன்னா, எங்கூட்டுக்காரரும் உங்களை மாதிரி, பார்வையாளர்தான். கருத்தே சொல்லவிடமாட்டேன்.

//வடையை அயர்ன் பண்ணி//
மறுபடி மறுபடி இதைச் சொல்லிப் புலம்புவதிலிருந்து உங்க வேதனை புரியுது. ஏதோ எனக்குத் தெரிஞ்ச முறையைச் சொல்றேன். சரியா வந்தா சொல்லுங்க. (வரல்லைன்னா அந்த வடையை எடுத்து அடிக்கக்கூடாது!!)

எனக்கும் ஆரம்பத்துல சொல்லித்தந்தவங்க வடைக்கு அரைக்கும்போது தண்ணியே விடக்கூடாது, மாவு கட்டியா இருக்கணும்னுதான் சொன்னாங்க. அந்த முறையில் நான் செஞ்ச வடை டென்னிகாய்ட் ரிங்காகப் பயன்படுத்தலாம்!!

தண்ணிவிடாம அரைக்கும்போது மிக்ஸி ரிப்பேராகிடுமோன்னு வேற பயமாருக்கும். (யெஸ், மிக்ஸியில்தான் அரைப்பேன். கிரைண்டரெல்லாம் யார் கழுவிகிட்டு...) நல்லா தேவைக்கு தண்ணி விட்டு கொஞ்சம் லூஸாவே (மாவுதான்) இருக்கும்படி அரைச்சுகிட்டு, அப்புறம் ஓரளவு பச்சரிசிமாவு சேத்து கலந்துக்குவேன். இப்படி செஞ்சா //உள்ளங்கையில் வச்சுத் தட்டாம நாலுவிரலில் வச்சுத்தட்டி கட்டைவிரலால் அழகாத் துளை போட்டு// போட வசதியா வரும்.

அதேபோல உளுந்தை ஊறவைப்பதற்கு நேரக்கணக்கெல்லாம் இல்லை எனக்கு. குறைந்தது ஒருமணிநேரம்; இணையத்தில் மூழ்கிட்டேன்னா, மறந்துபோய்டுவேன். அதுபாட்டுக்கு ரெண்டு மணிநேரம்கூட ஆகிடும். அதெல்லாம் கண்டுக்கறதில்லை.

(பூஜை, நைவேத்ய விதிகளுக்கு ஒருவேளை இந்த முறை சரிவராதாயிருக்கும். மற்றபடி சாதாரண நாளில் செய்யும்போது, முயற்சிக்கலாம்.)

ஆனா, எனக்கு இனி வடை ஒழுங்கா வருமா? :-)))

said...

வாங்க ஜோதிஜி.

வடை எப்படி எல்லோரையும் இழுத்து வருதுன்னு வியப்புதான்:-))))

குடும்பத்துக்கு நன்றிகள்.

said...

வாங்க புதுகைத்தென்றல்.

எங்கூட்டுப் பிள்ளையாருக்குத்தான் நேரம் சரியாவே அமையமாட்டேங்குது. ஒவ்வொரு சதுர்த்திக்கும் நான் படைக்கும் கொழுக்கட்டையாப் பார்த்து அவருக்கு அழமாட்டாக்குறை!

பேசாம வடையை வச்சு(அவருடைய வாகனத்துக்குத்தான்) சரிக்கட்டணும் இனி:-)

சென்னையில் கிடைக்குதான்னு பார்க்கட்டுமா?

said...

வாங்க மாதேவி.

இஸ்சோ வடை நிபுணி சொன்னாச் சரியாத்தான் இருக்கும்:-))))

அரிசி மாவு தோணலையே! செஞ்சுருவோம்:-)

said...

வாங்க அப்பாதுரை.

வடைக்கடை!!!! சூப்பர் ஐடியா. பிஸினஸ் பார்ட்னரா கோபால் சேர்ந்துக்கவான்னு கேக்கறார்.

செஞ்சவடைகளை டேஸ்ட் செய்சு சரியா இருக்கான்னு சொல்லும் வேலைக்கு எனக்கு முன்னுரிமை கொடுங்க:-)

கோவிலில் மிளகுவடைபோல தட்டையா கொஞ்சம் மொறுமொறுன்னு இருக்கும் வடையைத்தான் வடைமாலைக்கு அப்ரூவ் செஞ்சுருக்காங்க. நோ வெங்காயவடை:(

நீங்க சொல்லும் அந்த கடை ஒருவேளை சரவணா ஸ்டோர்ஸ் ஆக இருக்க வாய்ப்பு உண்டு. சென்னைப் பயணத்தில் விவேக் கடையிலோ இல்லை ஹோம் சென்ட்டர்(லைஃப் ஸ்டைல்) கடையிலோ தேடிப்பார்க்கிறேன். அங்கே வாங்குன ஒரு நான்ஸ்டிக் வாணலி மூணரை வருசமாகியும் நல்லாவே இருக்கு (டச் வுட்)

said...

வாங்க ஸ்ரீராம்.

போற போக்கைப் பார்த்தால் நான் பேசாம வடை மேக்கர் ஏஜன்ஸி எடுத்துறலாம் போல!!!!

இனிமே வடை மேக்கருக்கு துளசிதளத்தில் ஆர்டர் செய்யவும் என்று போர்டு போடலாம்:-)))

said...

ஹுஸைனம்மா.

பதிவுலக எலிகளை எல்லாம் வசியம் செஞ்சு இழுத்துவந்த வடை வாழ்கன்னு வாழ்த்துகின்றேன் :-)

said...

நெஜமாவே எண்ணெய் இல்லாத வடையா? நம்பவே முடியலையே! (வ)கிடைக்குதான்னு பார்க்கறேன்!
- இப்ப‍டிக்கு உளுந்து வடை விரும்பும் யானை ரசிகை...

said...

சுட்ட எண்ணெய் மீதியாகும் சங்கடம் ஒன்னும் இல்லையாக்கும் கேட்டோ:-)//
நல்ல விஷயம் ஆச்சே ! வாங்கிவிட வேண்டியது தான் வடை மேக்கர்.
துளசிதளத்திற்கு ஆர்டர் செய்து விட்டேன்.

said...

ஆஹா, வடை போச்சே!

இந்த உளுந்து வடை படுத்தும் பாடு இருக்கே... என் பையனுக்கு அதுதான் பிடிக்கும். எங்க வீட்டுல அது பண்றது ரொம்ப கஷ்டம். பையனை உங்க வீட்டுக்கு அனுப்பிடறேன்.

said...

வாங்க பொன்ஸ்.

நீங்கள் இருக்கும் இடத்தில் இந்த மெஷீன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

(கடைகளில்)தேடுங்கள் கண்டடைவீர்கள்!!!

said...

வாங்க கோமதி அரசு.

டிமாண்டைப் பார்த்தால் பேசாம நானே ஏஜன்சி எடுத்துடலாமான்னு ஒரு தோணல்:-)))

said...

வாங்க நாகு.

பையனை ஜனவரி- ஃபிப்ரவரிகளுக்கிடையில் அனுப்புங்க.

சம்மர்வடை சுட்டுடலாம்:-))))

said...

நோகாமல் வடை சாப்பிடத்தெரியும், சுடத்தெரியாது.

said...

அன்பின் சென்ற ஜென்மத்து எலியே - துளசி - உழுந்து வடை சுடுவது அவ்வளவு கடினமா ? ம்ம்ம்ம் - யானைக்கும் அடி சறுக்கும் போலே ! வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - ஆஞ்சநேயருக்கு வட மாலை சாத்திட்டு போண்டா மாலன்னா எப்படி ?

அட்டகாசமா சொல்லிக் குடுக்கறீங்க - வடை மேக்கர் வேறயா - சூப்பர் - இத சாப்புடறது வேணா நோகாம சாப்பிடலாம் - சுடறதும் நோகாமா சுட முடியுமா

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா