Wednesday, August 29, 2012

அத்தம் துடங்கி பத்தாம் நாள்.............

சரியாச் சொன்னால் இது கேரளா தசரா!! பத்து நாள் பண்டிகை இந்த ஓணம்.

 சிங்க மாசம்.... அட ..பயந்துட்டீங்களா? ஒன்னுமில்லைங்க. நாம் சித்திரை வைகாசின்னு ஆரம்பிச்சு பங்குனின்னு தமிழ் மாசப்பெயர்களைச் சொல்றோமில்லையா. இதுவே கேரளத்தின் மலையாள மொழியில் பனிரெண்டு ராசிகளை வச்சு மேஷம் முதல் மீனம் வரை. இங்கேயும் பாருங்க நாம் மேஷம் என்று சொல்றோம். அவுங்க மொழியில் அது மேடம்! (எஸ் மேடம்?)

 மேஷம் = மேடம் - சித்திரை
 ரிஷபம் = இடவம்-   வைகாசி
 மிதுனம் = மிதுனம்  -ஆனி
 கடகம்  =  கடகம் - ஆடி
 சிம்மம் =    சிங்கம் -ஆவணி
 கன்னி = கன்னி -   புரட்டாசி
 துலாம் =   துலா -   ஐப்பசி
 விருச்சிகம்  = விருச்சிகம் -  கார்த்திகை
 தனுசு = தனுர்  - மார்கழி
 மகரம்   =மகரம்  -  தை
 கும்பம்  = கும்பம்  - மாசி
 மீனம் =   மீனம் -பங்குனி.

 சிங்க மாசம் அத்தம் நாளில் ( ஆவணி மாச ஹஸ்தம் நட்சத்திரம் வரும் தினம்) ஓணத்திருவிழா ஆரம்பிக்குது. இன்றிலிருந்து பத்தாம் நாள் திருவோணம் நட்சத்திரம் வரும் தினம் ஓணப்பண்டிகை. மொத்தம் பத்து நாள் கொண்டாட்டம்.

நாள் நட்சத்திரமுன்னு சொல்றோம் பாருங்க.... இங்கே கேரளத்தில் இது ரொம்ப  முக்கியம். கொஞ்சம் வயசான பெரியவங்க  (முத்தச்சிமார்) நம்மை முதல்முதல் பார்த்துப் பரிச்சயம் செஞ்சுக்கும்போது , நாம் பேர் சொன்னதும் ,  'நாள் ஏதா?'ன்னு வாங்க.  விசாகம்ன்னு சொல்வேன்:-)

 மாவேலித் தம்புரான் தன் மக்களையெல்லாம் பார்க்க பாதாளத்திலிருந்து புறப்பட்டு வர்றார் என்பது ஐதீகம். ஏழு சிரஞ்சீவிகளில் மாவேலி(மஹாபலி)யும் ஒருவர் (மற்ற அறுவர்? வேத வியாஸர், பரசுராமர், அஸ்வத்தாமன், விபீஷணன், ஹனுமன், கிருபர். எட்டாவதா மார்க்கண்டேயன்கூட இந்த லிஸ்ட்டுலே சேர்ந்துக்கலாம். )

 மஹாவிஷ்ணு, தர்மசீலனாகிய அரக்க அரசர் மாவேலியை வஞ்சகமா 'கீழே' அனுப்பிய கதை உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்தானே? மெய்யாலுமே தெரியாதுன்னா கொஞ்சம் இங்கே போய்ப் பாருங்க. நம்ம வீட்டில் எழுதிவச்சதுதான். உள்ளே வந்து பாருங்க.

  எண்டே பொன் ஓணம்

  மாவேலி வருந்ந திவசம்

  மாவேலி நேரத்தே வந்நூ

  மாவேலியை இங்கோட்டு வரான் பறயூ

  கண்ணீரு கொண்டொரு கறிவைப்பு.

 மகாபலியை வரவேற்க வீட்டு முற்றத்து வாசலில் போடும் பூக்களம்ன்னு சொல்ற அலங்காரம் பண்டைய நாட்களில் ஹஸ்த்தம் ( அத்தம்) நட்சத்திரம் வரும் நாளில் ஆரம்பிக்குமாம். விழாவின் முதல்நாள் இது. குடும்பத்திலே இருக்கும் ஆண்பிள்ளைகள் அத்தப்பூன்னு பூக்களை சேகரிச்சுக்கிட்டு வருவாங்களாம். அதைத்தான் பூக்களத்துலே முதல்லே வைக்கணும். அப்புறம் தினமும் வெவ்வேறு பூக்களைச் சேகரிச்சு அலங்கரிச்சுக்கிட்டே இருப்பாங்களாம்.இப்படியே 10 நாள் ஆனதும் அந்தக் கோலம் பிரமாண்டமாய் பெரூசா இருக்குமாம்.

 அடிக்கிற வெயிலுக்கு மொத நாள் வச்ச பூ வாடாம இருக்கணுமே!

 அந்தக் காலக் கொண்டாட்ட சமாச்சாரங்களைக் கொஞ்சம் பார்க்கலாம் இப்போ!

 அத்தத்தின் மறுநாள் சித்திர (சித்திரை நட்சத்திரம்) வீடெல்லாம் சுத்தப்படுத்தும் வேலை. பூக்களத்தில் இன்னும் ரெண்டு நிறமுள்ள பூக்கள் சேர்க்கப்படும்.

 மூணாம் நாள் சோதி (ஸ்வாதி நட்சத்திரம்) புதுத்துணி, நகை நட்டுன்னு ஷாப்பிங். பூக்களத்தில் இன்னும் நாலைஞ்சு பூ வகைகள்.

 நாலாம் நாள் விசாகம்(விசாகம் நட்சத்திரம்) பண்டிகைக்கு வேண்டிய புது அரிசி போன்றவைகளை வாங்கிக்கும் மார்கெட் டே! அறுவடை முடிஞ்சு உழவர், தங்கள் பொருட்களையெல்லாம் சந்தைக்குக் கொண்டு வரும்நாள் இது. பூக்களம் இன்னும் கொஞ்சம் பெருசாகும்.

 அஞ்சாம் நாள் அனிழம் (அனுஷம் நட்சத்திரம்) வள்ளம் களின்னு சொல்லப்படும் படகுப்போட்டிகளுக்கு தயாராகும் நாள். பூக்களத்துக்கு இன்னும் சில வண்ண மலர்கள் சேர்க்கை.

 ஆறாம் நாள் த்ரிக்கேட்ட ( கேட்டை நட்சத்திரம்) வெளியூரில் இருப்பவர்கள் எல்லோரும் வந்து சேரும் நாள். குடும்பமும் பூக்களம்போல் விரிவடையும்.

 ஏழாம் நாள் மூலம் (மூல நட்சத்திரம்) வீடுகளும் மற்ற ஸ்தாபனங்களும் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். குடும்ப அங்கத்தினர்கள் நிறையப்பேர் வந்துட்டதால் விசேஷ விருந்து சாப்பாடு. பாவம் அங்கே என்னத்தை சாப்பிட்டாங்களோ? எதெல்லாம் கிடைக்கலையோன்ற ஆதங்கம் பெரியவர்களுக்கு இருக்குமே! புலி வேஷம் போட்டு ஆடுதல், திருவாதிரக்களின்னு பெண்கள் வீட்டு முற்றத்தில் கூடி நிலவிளக்கு(குத்து விளக்கு) ஏத்தி வச்சு சுத்தி நின்னு ஆடுதல் எல்லாம் நடக்க ஆரம்பிக்கும் நாள்.
விழா களைகட்டத்  தொடங்கிரும்:-)

எட்டாம் நாள் பூராடம் (பூராடம் நட்சத்திரம்) இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாராவது வீட்டில் இருந்தால் இன்று அவர்கள்தான் ஹீரோஸ். வீட்டில் உள்ள சிறிய மகாபலி, வாமனர் சிலைகளை நீராட்டி ஹீரோக்கள் கையால் அரிசி மாவு தடவி பூக்களத்தின் நடுவில் கொண்டு போய் வச்சு பூஜிக்கணும். இன்று முதல் அந்த சிலை(கள்) ஓணத்தப்பன். பூராட நட்சத்திரத்தில் பிறந்த யாரும் இல்லையா? நோ ஒர்ரீஸ்.... சின்னப்பசங்க எப்படியும் எல்லா வீடுகளில் இருப்பாங்கதானே? அவுங்களுக்குச் சான்ஸ் கொடுத்தால் ஆச்சு.

 ஒன்பதாம் நாள் உத்திராடம் (உத்திராடம் நட்சத்திரம்) ஓணத்தினு தலே திவசம். விருந்துக்கு வேண்டிய காய்கறிகள் வாங்கிக்கணும். பூக்களம் இன்னும் பெரூசா ஆகும். இந்த நாளை ஒன்னாம் ஓணம் என்று சொல்வாங்க.
 என்றும் சிரஞ்சீவியான மாவேலித் தம்புரான் பூமிக்குக் கிளம்பும் நாள்.

 பத்தாம் நாள் திருவோணம் (திருவோண நட்சத்திரம்) ரெண்டாம் ஓணமுன்னு சொன்னாலும் இன்னிக்குத்தான் மெயின் டே! ஓணசத்ய என்னும் ஓண விருந்து இன்னிக்கு குறைஞ்சது 21 அயிட்டத்தோடு தூள் பறக்கும். காணம் விற்றும் ஓணம் உண்ணனும் என்று பழஞ்சொல்லு.  விழா இத்தோடு முடிஞ்சுருச்சுன்னு நினைச்சுக்கப்பிடாது.

பதினொராம் நாள் அவிட்டம் நட்சத்திரம் மூணாம் ஓணம். இன்னிக்குப் பூக்களத்துலே நடுவில் இருக்கும் ஓணத்தப்பனை எடுத்து புழையில் நீராட்டி வீட்டுக்குக் கொண்டு வரணும். புலி டான்ஸ் எல்லாம் ஆடி முடிச்சு , பூக்களத்தையும் கலைச்சு எடுக்கும் நாள்.

 நாலாம் ஓணமான சதயம் நட்சத்திர நாள். பண்டிகைக்கு எடுத்த எல்லா சாமான்களையும் பாத்திரங்களையும் சுத்தம் செஞ்சு அடுக்கி வச்சுன்னு வீட்டு வேலை பெண்டு நிமிர்த்தும் நாள். இதுவும் ஒரு கொண்டாட்டமே! அப்பாடான்னு நிம்மதி கிடைக்கும் நாளாச்சே!

 திருவனந்தபுரம் அரசர் சம்பந்தப்பட்ட அரண்மனைக் கொண்டாட்டங்கள் எல்லாம் நாலாம் ஓணத்தோடு முடியும்.

 இதெல்லாம் இப்படி இருக்க நியூஸியில் நாங்க எப்படி இந்த வருச ஓணம் பண்டிகை கொண்டாடுனோமுன்னும் சொல்லணும்தானே:-)
ஈஸ்ட்டரைத் தவிர எந்த விழான்னாலும் வார இறுதிக்குத்தான். எங்க மேல் பரிதாபப்பட்டு விழாநாள் சனிக்கிழமைகளில் அமைஞ்சா சந்தோஷம். முதல்நாள் இரவு ஒன்பது மணி போல் போய் சமையலுக்கு உதவி செஞ்சுட்டு வந்தோம். காய்கறிகளை வெட்டும் வேலை முடிஞ்சதும் ஒரு பத்தரை போல நாங்க திரும்பிட்டோம். ஆனால் சமையல் பொறுப்பு ஏத்துக்கிட்டவர் வேலைகளை முடிக்கும்போது நாலுமணியாம்.
சுந்தரக்குட்டன்மார் பூக்களம் ஒருக்கான் தய்யாராயி:-)

 என் வகையில் ரசம் செஞ்சுக்கிட்டுப் போகணும். 120 பேருக்கு வர்றமாதிரி. காலையில் கொஞ்சம் சீக்கிரமா எழுந்து வேலையை ஆரம்பிச்சேன். பருப்பு ரஸம் கேட்டோ:-))))
வேட்டியை  மடிச்சுக்கட்டு.....  தானாவே வந்துருது  பாருங்க:-))))

வண்டியில் வச்சுக் கொண்டு போகும்போதுதான் கொஞ்சம் பேஜாராப்போச்சு. தளும்பி விழாமல் கொண்டு போகணுமே! முப்பதுலே ஓட்டச் சொன்னால் பழக்க தோஷத்தில் ரெண்டே வினாடிக்குப்பிறகு அம்பதுக்குப் போயிடறார்:(

 பூக்களம் ஜொலிபோடு இருந்துச்சு. விளக்கை நடுவில் வைக்கலை. போயிட்டுப்போறது. விளக்கு உபயம் யாருன்னு விசாரிக்க மறந்துட்டேன். வழக்கமான வாழைப்பூ விளக்கில்லை:(

 எண்ணெய் ஊத்தித் திரியெல்லாம் போட்டு தயாராக்கினேன். நம்ம க்ளப்பில் இந்துக்கள் வகையில் ரெண்டு மூணுபேர்தான் இருக்கோம். விஐபி திரியைக் கொளுத்த ஒரு மெழுகுத்திரி வேணுமுன்னு தேடுனதில் நீளக்கேண்டில் ஒன்னை சர்ச் ஆல்ட்டரில் இருந்து அபேஸ் பண்ணினோம். கடன்தான். திருப்பி ஓசைப்படாம வச்சுட்டோமே!
சுந்தரக்குட்டன்மார் ஒருக்கிய பூக்களம்:-))))) எங்கூர் ஸ்ப்ரிங் ஃப்ளவர்ஸும் தேங்காய்ப்பூவும்.

 இன்றைய முக்கிய விருந்தாளி நியூஸி பார்லிமெண்டின் உள்ளூர் அங்கம். நிக்கி வாக்னர் ( கிறைஸ்ட்சர்ச் செண்ட்ரல் தொகுதி) தாலப்பொலியொடு வரவேற்பு கொடுத்ததும் பிரமிச்சுப் போயிட்டாங்க:-)))))



 கம்பெனி கொடுக்க வேண்டியதாப் போச்சு. பூக்களம் பார்த்து இன்னொரு பிரமிப்பு. சின்னப்பேச்சில் கொஞ்சம் பண்டிகையைப் பற்றிச் சொன்னேன். சரியான அரசியல்வாதின்னு அடுத்த பத்தாவது நிமிசம் நிரூபணமாச்சு. குத்துவிளக்கை ஏத்தச் சொல்லி, எப்படின்னு காமிச்சுக் கொடுத்த சேஷம் மேடை ஏறினாங்க. சின்னப்பேச்சில் நான் சொன்னதெல்லாம் அப்படியே தன்வாய்மொழி!!!!!
ஓணம் கதை சொல்லி வரவேற்பு முடிஞ்சதும் வழக்கம்போல் க்ளப் அங்கத்தினரின் நடனம் பாட்டுன்னு போனாலும் விசேஷ நிகழ்ச்சியா இருந்தவைகளை மட்டும் சொல்றேன்.
மாவேலித் தம்புரான் தங்கக்குடை பிடிச்சு வந்தார். நாட்டுமக்களை விஸிட் செய்யும் திவஸமல்லே இது:-))))) அவரை மேடையில் இருத்தினோம். எங்க பசங்களுக்கு க்ரியேட்டிவிட்டி இருக்கு. ஆனால் அதை மிகச்சரியாக் கொண்டுவரத்தெரியலை:( ராஜாவு தானேவா குடைபிடிச்சுக்குவார்? ஆள் அம்போட வரவேணாமோ? அட்லீஸ்ட் குடை பிடிக்க ஒரு பணியாள்?

 இதே சென்னையா இருந்தால் ஒரு சிம்மாசனச்சேர் வாடகைக்குப்பிடிச்சு ராஜாவை உக்காரவச்சுருக்கலாம். (அதான் விழாக்களில் மந்திரிகளெல்லாம் ராஜாவாட்டம் போஸ் கொடுக்கறாங்களே ) இங்கே..... நோ சான்ஸ். உள்ளது கொண்டு ஓணம் என்றாச்சு.

திருவாதிரைக்களி, வள்ளங்களி பாட்டு, பரத நாட்டியம் இன்னும் சில பழைய பாட்டுகள் ஆனதும் மாவேலித் தம்புரானைக் கடத்திக்கிட்டுப் போயிட்டாங்க. ஒய்????? க்ரிஷ்ணனே அறியும்:-))))

 CKA Boys ( Christchurch Kerala Association) நிகழ்ச்சியில் கன்ஃப்யூஷன் தீர்க்கணுமேன்னு கிருஷ்ணன் வந்து கோபிகைகளுடன் ஆடினார்:-)))) உங்களுக்காக அது இங்கே:-))))க்ளப்புக்கு ஒரு வெப்ஸைட் தொடங்கி இருக்கு.






பிள்ளைகளுக்கு மலையாளம் சொல்லிக்கொடுக்க வகுப்பு தொடங்கி இருக்காங்க.,. ஆசிரியருக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கினார் மூத்த அங்கத்தினர்:-)))

 ஸ்போர்ட்ஸ் பிரிவில் (பேட்மின்ட்டன்) ஜெயித்தவர்களுக்கு தங்கப்பதக்கம்!!!! ஒலிம்பிக் சீஸனாச்சே:-))))

'கிறைஸ்ட்சர்ச் கானகந்தர்வன்'  ஆலன் ஃபிலிப், சரியான வில்லனா மாறி இருக்கார். நடிப்பு ஏ ஒன், கிறைஸ்ட்சர்ச் சல்மான் கான், ஷான் இப்போ யூனி மாணவர். அவருடைய இயக்கத்தில் ஒரு குறும்படம் எடுத்து அதையும் மக்கள்ஸ்க்குப் போட்டுக் காமிச்சாங்க. படத்தின் பெயர் ப்ளாட்டர்.
நடுவில் இருப்பவர் ஷான் த  இயக்குனர்:-)

ஒவ்வொன்னா நிகழ்ச்சிகள் முடிய ரெண்டேகாலாயிருச்சு. இலையில் விருந்து சாப்பாடு . கட்டாயம் இருந்து சாப்பிட்டுட்டுப் போங்கன்னு எம்.பியிடம் சொன்னதுக்கு சரின்னாங்க. இவ்ளோ நேரம் ஆகுமுன்னு எனக்குத் தெரியாதே:( ஒன்னரை ஆனப்போ பசிக்குதான்னு கேட்டேன். ஆமாம்ன்னு தலையாட்டுனாங்க. எனக்கே பாவமாப் போயிருச்சு.


கடைசி ஐட்டமா  எல்லா மொழிப்பாடல்களையும் கொஞ்சம் கொஞ்சம் கலந்துகட்டி மெட்லி மாதிரி ஒன்னு.   'அடி என்னடி ராக்கம்மா,   நான்தாண்டா பால்காரன், இப்படி.... அதுலே பாதி வரும்போதே  சபையில் உள்ள இளைஞர்களும் , இளைஞிகளுமா சேர்ந்து கூட ஆடி ஹால் முழுக்க ஓடின்னு ஒரே கலாட்டா.

திருதிருன்னு முழிச்ச  விஐபிக்கு  எங்க நாட்டுலே 22 அஃபிஸியல் லேங்குவேஜ் இருக்கு. அதனால்  வீ ஹேவ் மோர் ச்சாய்ஸ்ன்னதும் 22 ஆ...........  வாய் பிளந்தாங்க. நியூஸியில்  இங்லீஷ், மவொரின்னு  ரெண்டு இருந்து இப்ப சமீபமா மூணாவதா ஸைன் லேங்குவேஜைச்  சேர்த்துருக்காங்க.


பாலடப்ரதமன், பருப்பு பாயஸம் சேர்த்து பதினாறு ஐட்டங்களோடு ஓண சத்ய.
 எதெது என்ன, எப்படி சாப்பிடணுமுன்னு சொல்லிக் கொடுத்துக்கிட்டே என் வேலையைக் கவனிச்சேன். ரொம்ப சமத்தா என்னைக் காப்பி அடிச்சாங்க. ஆனால் விரல்நுனி பளிச்சுன்னு இருந்துச்சு:( ஃபிங்கர் லிக்கிங் டேஸ்ட்:-))))

  ஓணம்  இன்னு வந்நல்லோ.......... எல்லாவர்க்கும் மங்களம் நேரிடுந்நு.

 பதிவுலக மக்கள் அனைவருக்கும் மனம் நிறைஞ்ச இனிய ஓணம் ஆசம்ஸகள்..

34 comments:

said...

சிறப்பான பகிர்வு... வாழ்த்துக்கள்...

நானும் சொல்லிக்கிறேன்...

அனைவருக்கும் மனம் நிறைஞ்ச இனிய ஓணம் ஆசம்ஸகள்... நன்றி...

said...

சிறப்பான கொண்டாட்டம். அருமையான பகிர்வு:)! நண்பர்கள் அனைவருக்கும் எனது ஓணம் வாழ்த்துகள்!

said...

இனிமே உங்களை அம்மான்னு கூப்பிடுறதா / அம்மே ன்னு கூப்பிடுறதான்னு ஒரே குழப்பமாக இருக்கு. அவரு அச்சன் ஆகலைன்னு தெரியுது.

:)

said...

http://youtu.be/5jPmr1KaRLw

கடைசி படத்துக்கு துளசி மேடமும் கோபாலும் இந்த பாட்டு
பாடராமாதிரி இருந்தது.

சுந்தரி நீயும்
சுந்தரன் நானும்
சேர்ந்திருந்தால்
திரு ஓணம்


மீனாட்சி பாட்டி.
பின் குறிப்பு: உங்கள் மடல் கிடைத்தது. வருவேன்.
சுப்பு தாத்தா: ஞானும் அதே அதே

said...

ஓணம் பத்தின விளக்கங்கள்,(நோட்ஸ் எடுத்துகிட்டாச்சு டீச்சர்) அருமையான படங்கள் பகிர்வுக்கு நன்றி

அனைவருக்கும் ஓணத்திருநாள் வாழ்த்துக்கள்

said...

சிறப்பான ஓணம் கொண்டாட்டம்...

விளக்கங்கள் நன்று. ஓணம் சத்யா இன்னிக்கு யாரு கூப்பிடப் போறாங்கன்னு வெயிட்டிங்... :)))

said...

அமர்க்களம்தான். பிரமாதமான பதிவு. வல்லிய ஒற்றுமை கண்டூ.
எல்லோருக்கும் பொன்னோண வாழ்த்துகள்.

said...

விரல் மட்டுமா இலையே க்ளீன் செய்திருக்காங்களே மேடம்..:)

said...

//வேட்டியை மடிச்சுக்கட்டு..... தானாவே வந்துருது பாருங்க:-))))//

ஆஹா ஜூப்பர்.

//ரொம்ப சமத்தா என்னைக் காப்பி அடிச்சாங்க. ஆனால் விரல்நுனி பளிச்சுன்னு இருந்துச்சு//

விரல் மட்டுமா அவங்க சாப்பிட்ட இலையுமில்லே பளிச்சுனு சுத்தமா இருக்கு. விருந்து ரொம்பப் பிடிச்சிருக்குது போல :-))

இன்னிக்குக் கொஞ்ச நேரம் மானசீகமா அப்டியே நாஞ்சில் நாடு பக்கம் போயிட்டு வந்துட்டேன். எங்க பக்கம் அத்தப்பூ கிடையாதே தவிர மத்ததெல்லாம் உண்டு. அத்தப்பூவுக்குப் பதிலா ஊஞ்ஞல் களி உண்டே. பத்து நாளும் ஆடித்தீத்துருவோம்.

எல்லாவர்க்கும் ஓண ஆஷம்ஸகள்..


said...

ஓணம் திருநாள் வாழ்த்துகள்.

ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா இருந்திருக்கே. மலையாளிகளுக்கு தங்கள் பாரம்பரியத்தை எப்படி எடுத்துச் செல்வது என்பது நன்றாகத் தெரிந்திருக்கிறது.

நம்ம ஆளுகளுக்கு நாலு பேர் சேந்து பொங்கல் வெச்சாலே நானூறு பங்கு பிரிக்கனும். ஓணம் கொண்டாட்டங்களைப் பாக்குறப்போ கொஞ்சம் பொறாமையாத்தானிருக்கு :)

திருவாதிரைக்களின்னா தமிழ்நாட்டுல ஒரு பொருள். கேரளத்தில் ஒரு பொருள். நம்மூர்ல திங்குற பொருள். நாட்டில் ஆடுற பொருள். திருவாதிரையில் சிவன் பார்வதியைத் திருமணம் செய்ததை ஆடிக் கொண்டாடி மகிழ்கிறார்கள். நாம தின்று கொண்டாடி மகிழ்கிறோம். :) என்ன இருந்தாலும் நாம நாமதான்.

said...

ரீச்சருக்கும் சக க்ளாஸ்மேட்டுகளுக்கும் பொன்னோணாசம்ஷகள்!

said...

ரீச்சர், இந்த சுட்டியை இங்கு போட அனுமதி வேண்டுகிறேன். நன்னி!!

pic.twitter.com/OQAIMEpO

said...

ரொம்ப நல்லாயிருக்கு, இன்றைக்கு குடும்பமே அம்மே அச்சன் இருவரையும் பார்த்து ரசித்தார்கள்.

நன்றி கோவி கண்ணன்,

said...

அமர்க்களம். ஓணம் வாழ்த்துக்கள்.
மகாபலி-ஓணம் தொடர்பு இன்னி வரைக்கும் தெரியாது, ரொம்ப நன்றி.

உத்திராடத்துல பொறந்தவங்களாம் அப்ப என்ன ஜீரோவா?

சாப்பாட்டு சீன் போட்டோவில ஒரு படத்துல இருக்குறது வாழைப்பழமா மஞ்சள் புடலங்காயா? ரெண்டடி இருக்கும் போலிருக்கே?

120 பேருக்கெல்லாம் எப்படி சமைக்கறீங்க? இதைத் தனியா ஒரு பதிவா போடலாமே? எத்தனை தக்காளி, எத்தனை ஸ்பூன் பொடிலந்து... விஷயம் சுவாரசியமா இருக்கும் போலிருக்குதே?

ஓணம் பண்டிகையைப் பத்தி எதுவுமே தெரியாது. எங்க பக்கத்து வீட்டுப் பாலக்காட்டுக் குடும்பம். ஓணத்தன்னிக்கு ப்ரதமன் செஞ்சு எங்க வீட்டுல குடுத்துட்டுப் போவாங்க. பாத்திரத்தைத் திருப்பித் தரும் பொழுது, "வருஷா வருஷம் ப்ரதமன் மட்டும் சாப்பிடறியே, அது என்ன விஷயம் ஏன் எதுனா கேக்குறியா?" என்பார் மாமி. மாமியோட பெண் நான் வீட்டில் இல்லைன்னா மறுபடியும் நான் வந்தப்புறம் ஒரு சின்ன டப்பாவில ப்ரதமன் கொண்டு வந்து குடுப்பா. எங்க வீட்டுல ரெண்டே நிமிசத்துல எல்லாம் காலியாயிடும், அத்தனை பேர் - அதனால எங்கே எனக்குக் கிடைக்காம போயிடும்னு நெனச்சு தனியா ஒருதடவை கொண்டு வந்து குடுப்பா. (இப்ப எங்கே இருக்காளோ, என்ன செய்யுறாளோ!)

said...

ஆஹா! 2-வது மற்றும் 5-வது படம் அருமை. விருந்தினரை வரவேற்பதில் நாம் மிகச் சிறந்தவர்கள்.

said...

வாங்க தனபாலன்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நன்றி.

said...

வாங்க கோவியாரே!

என்ன... அவர் அச்சன் ஆகலையா????

பள்ளியிலே அச்சன் ஆயிட்டிலேன்னு மாத்ரம்.

அம்மே மதி:-)

said...

வாங்க மீனாட்சி அக்கா.

அந்தப்பாட்டை ரெண்டு ஜோடி பாடறமாதிரி ஷூட் செய்யணும்.

உங்களைத் தொடந்து நாங்கள்:-)))

ஆவலோடு உங்கள் வருகையை எதிர்பார்க்கின்றோம்.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

வகுப்புலே நீங்கமட்டும்தான் கவனமா இருக்கீங்க போல!

இனிய பாராட்டுகள். போனஸ் மார்க் பத்து:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சத்ய கிட்டியோ?

காலபோற போக்கைப் பார்த்தால் இந்தியாவில் ஹொட்டேல் ரெஸ்ட்டாரண்டில் தான் இனி ஓணசத்ய.

எங்களுக்கு வேற வழி இல்லைன்னு நாங்களே ஆக்க வேண்டியதாப்போச்சு:-)

said...

வாங்க வல்லி.

அடிச்சுக்கிட்டாலும் புடிச்சுக்கிட்டாலும் ஒண்ணாச் சேர்ந்துக்கறா... ஓணசத்யயை விளம்பிக்கறா.....:-)))

said...

வாங்க கயலு.

க்ளீன் போல்ட்!

அவுங்க ரெண்டாவது முறை சாதம் வாங்கியதும், ரசத்தை வெரி ஸ்ட்ராங் ஃப்ளேவர்ன்னு சொல்லி கப்பில் வாங்கி உறிஞ்சியதும் எனக்கும் வியப்புதான் கேட்டோ!

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஊஞ்சல் இல்லாத ஒரு ஓணக்களியா?

பஸந்த்பஹார்!!!

ஆஸம்சகலுக்கு நன்னி:-)

said...

வாங்க ஜீரா.

இங்கே நம்மது இல்லாம இன்னும் நாலஞ்சு குழுக்கள் இருக்கு.

அஞ்சு மனுஷ்யர் இருந்தால் ஆறு குழுக்கள்!!!

நாம் தின்னும் களிப்போம். அவுங்க ஆடியும் களிக்கிறாங்க.
அவரவருக்கு எது மகிழ்ச்சியோ அது;-)

said...

வாங்க கொத்ஸ்.

உள்ளது கொண்டு ஓணம் என்ற பழஞ்சொல்லுக்கேத்தாற்போல் இருப்பதைக் கொண்டு சிறப்பாக் கொண்டாடி இருக்கீங்க!!!!! க்ரேட்:-))))

தமிழேன்ட்டா....... தமிழன்!!!

said...

வாங்க ஜோதிஜி.

ஆஹா... குடும்பத்துக்கு ஈ அம்மெ அண்ட் அச்சன்டெ ஆசிகள்.

said...

வாங்க அப்பாதுரை.

ரொம்ப ஃபீலிங்ஸா? உத்திராடம் எல்லாம் உத்தரத்துலே ஊஞ்சல் கட்டி ஆடுவாங்கன்னு சேர்த்துடவா?:-)))

இலையில் விளம்பணுமேன்னு தேடித்தேடி இருப்பதில் சின்னப்பழமா வாங்கினோம். நம்புங்க:-)

இங்கே வாழைப்பழம் இல்லை. குளிர், வளராது. எல்லாம் இறக்குமதிதான். எங்க பொட்டானிக்கல் கார்டன் க்ளாஸ் ஹவுஸில் ஒருக்கா குலைதள்ளிப் பழுத்து இருந்ததைக் கண்ணால் தின்னதோடு சரி.

நம்ம வீட்டில் எட்டு வருசமா ஒரு வாழை தொட்டியில் வளருது.

துளசி விலாஸில் ஒரு காலத்தில் அம்பதுபேருக்கு அஸால்ட்டா விருந்தே சமைச்சுருக்கேன். எழுதி வச்சுருந்துருக்கலாம் இல்லே?

மாமி பொண்ணுக்கும் ஓணதிவசம் உங்க ஓர்மை வந்துருக்கும் கேட்டோ:-)

said...

வாங்க பத்மா.

விருந்தோம்பலில் நமக்கு நிகர் உண்டோ!!!!

said...

போனஸ் மார்க் பத்து:-)//

சந்தோஷம்

said...

உள்ளது கொண்டு ஓணம்

அருமையான படங்கள் பகிர்வுக்கு நன்றி

said...

வாங்க இராஜராஜேச்வரி.

வருகைக்கு நன்றிகள்.

said...

சிறப்பான ஓணம் பண்டிகை.

பண்டிகை பற்றி விரிவாக அறிந்துகொண்டோம்.

said...

வாங்க மாதேவி.

ஓணம் கழிஞ்ச பத்தாம் நாள் பதில் சொல்றேனே:(

வருகைக்கு நன்றிப்பா.