Monday, February 27, 2012

கட்டுச்சோறு, கல்யாணம், கடவுள் இன்னபிற.....

தோழியின் வீட்டில் இது கடைசிக் கல்யாணம். ரெண்டாவது மகளின் திருமண ஏற்பாடுகள் ஒரு வருசமா ஜரூரா நடந்துக்கிட்டு இருக்கு. மணமக்கள் ஒரு தேதியைத் தீர்மானிச்சுட்டு அன்றைக்கு நாள் நல்லா இருக்கான்னு கேட்டு மெயில் அனுப்புனாங்க. தோழி வீட்டுக்கு நாந்தான் 'அன் அஃபீசியல் ஜோதிடர்':-)

அப்ப சண்டிகரில் இருந்தேன். அடுத்த வருசப் பஞ்சாங்கம் வரவே இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. அதுவும் சண்டிகரில் கிடைக்குமான்னு தெரியாது. அதுக்காக ...நம்புனவங்களை நட்டாத்துலே விட முடியுதா? பெருமாள் மேல் பாரத்தைப் போட்டுட்டு நல்ல நாள். கவலைப்படாதீங்க. எதுக்கும் புதுப் பஞ்சாங்கம் கிடைச்சதும் இன்னொருக்காப் பார்த்துச் சொல்றேன்னேன்.

வைகாசிக் கடைசியில் சென்னைக்குப் போனபோது மறக்காம பஞ்சாங்கம் வாங்கிக்கிட்டேன். கல்யாணத்தேதி பார்த்தால் நல்லா(வே) இருந்துச்சு. வெள்ளிக்கிழமை!!! நியூஸி வந்து சேர்ந்தபின் கல்யாணப்பொண்ணே பலதடவை கேட்டுட்டாங்க நாள் நல்ல நாள்தானேன்னு. நம்ம ஸ்வாமிநாராயண் கோவிலில் சாமிச்சிலைகள் (வரப்போகுதுன்னு முந்தி சொல்லி இருந்தேன் பாருங்க....) பிரதிஷ்ட்டை செய்வதை முன்னிட்டு அந்த வெள்ளி சனி ஞாயிறுன்னு மூணு நாள் உற்சவம். கவலையே படாதே. நாள் ரொம்ப நல்லா இருக்குன்னுதான் கோவில் விசேஷமே வச்சுருக்காங்கன்னேன்.

அழைப்பிதழ் கொண்டுவந்து கொடுத்துட்டுக் கட்டாயம் கல்யாணத்துக்கு வந்தே தீரணுமுன்னு வாக்கு வாங்கிக்கிட்டுப் போனாங்க அம்மாவும் பொண்ணுமா. பத்திரிகையை வாங்கிப் பார்த்துட்டு சாமியறையில் கொண்டு வச்சேன். மூணுமாசமா அது அங்கே இருக்கு.

கல்யாணத்தேதியைச் சொல்லி அன்னிக்கு ஊரில் இருக்கணும். ஆஃபீஸ் வேலை அது இதுன்னு போனீங்க தெரியும் சேதின்னு கோபாலைக் கொஞ்சம் மிரட்டி வச்சுருந்தேன். மாப்பிள்ளை ஊர் டிமரு என்றபடியால் விசேஷம் அங்கேன்னு முடிவாகி இருந்துச்சு. எப்படியும் ரெண்டரை மணி நேர டிரைவ்.

சொல்லிவச்ச மாதிரி(யே) அவசர அலுவலக வேலைகள் வந்துருச்சுன்னு ரெண்டு வாரம் அஞ்சாறு நாடுகளுக்குக் கிளம்பிப்போயிட்டார். எப்படியும் கலியாணத்துக்கு முதல்நாள் வந்துருவேன் என்னும் வாக்கோடு. ராத்திரி பனிரெண்டரைக்கு வீடுவந்து சேர்ந்து தூங்கி எழுந்து காலை ஒன்பதுக்குப் புறப்பட்டுப் போய்க்கிட்டு இருக்கோம்.

இந்தப்பக்கங்களில் பயணம் செஞ்சே கனகாலம் ஆகி இருக்கு. நியூஸியின் முகமே மாறுதோன்னு எண்ணும்படி...... ஆட்டு மந்தைகளைக் கண்ணுலேயே காணோம். ஆளுக்கு 12ன்னு இருந்தது பத்தாச்சு இப்ப என்னென்னன்னா....ரெண்டு கிடைச்சாலே வரம்தான்போல:-) அதுக்காக ஒன்னுமே இல்லாதவங்கன்னு எங்களை நினைச்சுக்காதீங்க. ஒரே ஒரு எழுத்து வித்தியாசத்துலே ஆளுக்கு ஆறுன்னு மாடுகள் இருக்கும்! ஏகப்பட்ட மாடுகள் மந்தை மந்தையா மேய்ஞ்சுக்கிட்டு இருக்குதுங்க. அதுவும் ஏதோ ஆரம்பப்பள்ளி வகுப்புகள் போல ஆறுமாசம், ஒருவயசு, ஒன்னரைவயசுன்னு தெருவோர வயக்காடுகளில் தனித்தனிக் குழுக்கள்!
ஆடு போய் மாடு வந்தது டும்டும்டும்

பாலில் நல்ல காசுன்னு பலரும் ஆட்டை விட்டுட்டு மாட்டுக்கு மாறிட்டாங்க. அப்படியும் உள்ளுரில் பால் விலை குறையலை:( ஆனால் ஒரு நல்ல சமாச்சாரம் ஆரம்பப்பள்ளிகளில் எல்லாக் குழந்தைகளுக்கும் இலவசப்பால் அரசாங்கம் கொடுக்க ஆரம்பிச்சுருக்கு. இந்த அழகில் இங்கிருக்கும் பெரிய பால்பண்ணைகள் சிலதை சீனநாட்டு ஆட்கள் வாங்கினதை எதிர்த்து மவோரிகள் கிளர்ச்சி பண்ண ஆரம்பிச்சுருக்காங்க. வரவர வெளிநாட்டு மக்களுக்கு எதையெதை விக்கலாம் என்ற விவஸ்தையே இல்லாமல் அரசு எல்லாத்தையும் விக்க ஆரம்பிச்சுருக்கு. எங்களையெல்லாம் கூட சீக்கிரம் வித்துருவாங்களோ?
சாலைகள் எல்லாம் வழக்கம்போல நல்ல பாராமரிப்புடன் இருக்கு. அங்கங்கே ஏகப்பட்ட பாஸிங் லேன்கள். 'ரோட் ரேஜ்' வராம இருக்க நல்ல ஏற்பாடு! வெள்ளிக்கிழமை, வேலைநாள் என்றபடியால் போக்குவரத்து(ம்) கூடுதல். அஞ்சாறு வண்டிகள்!
429 பேர் வசிக்கும் டன்ஸண்டெல் என்ற கிராமத்தைக் கடக்கும்போது அருமையான சர்ச் ஒன்னு கண்ணில் பட்டது. நூறு வருசப்பழசு. அடுத்துவந்த ஊர் ரக்கையா. இந்த ஊரில் ஒடும் நதிக்கும் இதே பெயர்தான். நியூஸியின் பெரிய நதிகளில் இதுவும் ஒன்னு. மீன் புகழ் கொண்ட ஊர். ஸால்மன் மீன்களுக்கு தலைமையகம்! ஊருக்குள்ளே நுழையும்போது மீன்தான் நம்மை வரவேற்கும். வண்டியில் இருந்தபடியே ஒரு க்ளிக்.
டோண்ட் பீ ஸோ மீன்:-)

ஆஷ்பர்ட்டன். இங்கே ரயில்வே ஸ்டேஷன்தான் சரித்திரம் படைச்சது. அந்தக்காலத்தில் நியூஸியின் தென்கோடிவரை போட்ட ரயில்பாதைகள் இப்பவும் பயன்படுதுன்னாலும் வெறும் சரக்கு வண்டிகளுக்கு மட்டுமேன்னு .....ஒன்னே ஒன்னு கண்ணேகண்ணுன்னு ஓடிக்கிட்டு இருந்தபயணிகள் வண்டியை பத்து வருசத்துக்கு(2002) முன்னே நட்டம் அதிகமாப் போச்சுன்னு நிப்பாட்டிட்டாங்க:(
ரயில்வே ஸ்டேஷன் கட்டிடம் பழுதாகிப்போச்சாம். இப்போ பயனும் இல்லையாம். இடிக்கப்போறோமுன்னு மிரட்டிக்கிட்டு இருக்காங்க.


எங்கூர்லே பஸ்களில் பலசமயங்களில் ஒரே ஒரு பயணி மட்டும் போறதைப் பார்த்தால் வயிறு எரிஞ்சு போயிரும். நட்டக்கணக்குதானே? இதைப்போல வீம்புக்காக ரயிலை ஓட்ட முடியுமா? என்ன நாஞ்சொல்றது?

ஆஷ்பர்ட்டனில் ஒரு பதினெட்டாயிரம் பேர் வசிக்கறாங்க. கொஞ்சம் பெரிய டவுன்தான். நியூஸி நாட்டில் பஸ் கட்டும் வேலை இங்கே மட்டுமே நடக்குது. விலை உயர்ந்த கார்களான பெண்ட்லி, ரோல்ஸ் ராய்ஸ் வண்டிகளைப் பழுதுபார்த்துச் சீரமைக்க இந்த ஊரை விட்டா வேறு இடம் இல்லை நாட்டிலே!

ஊருக்கு நடுவிலே அழகான தோட்டம், அதுலே ஒரு மணிக்கூண்டு. கடிகாரத்தின் பல்சக்கரங்கள் எல்லாம் வெளியே தெரியும்படி கண்ணாடிக் கூண்டிலே 'ஆடி'க்கிட்டே இருக்கும்.

வீட்டுச்சாப்பாடு இல்லாம ரெண்டுவாரம் செத்த நாக்கை சோதிக்கவேணாமுன்னு புளியோதரை, ததியன்னம் தொட்டுக்க உருளைக்கிழங்குக் கறின்னு செஞ்சு எடுத்துக்கிட்டுப்போறேன். கல்யாணம் பகல் ரெண்டரைக்கு. மாப்பிள்ளை வீட்டுலே இருந்து பஸ் ஒன்னரைக்குப் புறப்படுது.

ரொம்ப அலைச்சலா இருக்குமேன்னு டிமருவில் ஒரு மோட்டல் பதிவு செஞ்சுருந்தோம். செக் இன் பகல் 2 மணிக்காம். 'சரிப்படாது கல்யாணத்துக்குப் போகணு'முன்னு சொன்னதுக்கு 'நீங்க வாங்க ஏற்பாடு செஞ்சுதரேன்'னு மோட்டல் வரவேற்பில் சொல்லி இருந்தாங்க. பதினொன்னே காலுக்குப்போய்ச் சேர்ந்தால் அறைச்சாவி எடுத்துக் கொடுத்தாங்க. பால் வேணுமான்னதுக்கு வேணாமுன்னு சொல்லிட்டு அறைக்குப்போனால்.... சுத்தம் செய்யாமக் கிடக்கு. சொன்னதும் ரெண்டுபேர் வந்து பதினைஞ்சு நிமிசத்தில் சுத்தம் செஞ்சு கொடுத்துட்டுப் போனாங்க. படுக்கை விரிப்புகளை மாத்தி, சலவை விரிப்புகளை போடுவது சரியாச் சொன்னால் ஒரு கலை! ஆஸ்பத்திரிகளிலும் ரெண்டு பேர் வந்து படுக்கைவிரிப்புகளை மாத்துவதை பலமுறை கவனமாக் கவனிச்சாலும் வீட்டில் அதைப்போல் செஞ்சுக்க வர்றதில்லைப்பா:(

காஃபி போட்டுக்கலாமான்னு தோணல். பாலை வேணாமுன்னு சொல்லிட்டமேன்னு .....ரிஸப்ஷனுக்குப்போய் பால் வாங்கிக்கிட்டு அப்படியே செயிண்ட் டேவிட் சர்ச் எங்கே இருக்குன்னதுக்கு தெரியாதுன்னு பதில் வருது. 'கேவ்' என்ற இடம்? தெரியாதாமே:( அடராமா..... என்ன மோட்டல் நடத்துறாங்க? உள்ளூர் விவரம் தெரிஞ்சுவச்சுக்க வேணாமா?

அப்போ அங்கே வந்த எதிர் அறை விருந்தாளி, நாங்களும் கல்யாணத்துக்கு வந்தவங்கதான். ஒன்னேகாலுக்குக் கிளம்பி அங்கேதான் போறோம். நீங்க உங்க வண்டியில் எங்களைத் தொடர்ந்து வாங்கன்னு சொன்னாங்க.

இந்த 'குகை' எங்கே இருக்கு? இனிமேல் 'வாயிலெ இருக்கு வழி' என்ற பழமொழியைக் கடாசிட்டு, 'கூகுளில் இருக்கு வழி' என்ற புதுமொழியைப் பிடிச்சுக்குங்க. ப்ளாக்பெர்ரியில் கூகுளிச்சுப் பார்த்தால் 35 கிலோமீட்டர் தூரத்துலே இருக்கும் வேறொரு ஊர்! அதான் பஸ் யாத்ரையா? கூகுளாண்டவர் வழி சொல்லிட்டாரே.... நாமே நேரடியாப்போயிரலாமுன்னு தீர்மானிச்சோம். கட்டுச்சோத்தைப் பிரிச்சுத் தின்னோம். பிக்னிக் போறதைப்போல் தட்டு கரண்டி எல்லாம் கொண்டுபோனது வசதியா இருந்துச்சு. மோட்டலில் பாத்திரபண்டங்கள் எல்லாமும் வச்சுருப்பாங்கதான். ஆனால் வழியில் எங்காவது நிறுத்திட்டு சாப்பிடணுமுன்னா நாம் கொண்டுபோனால் நல்லது. மீதி இருந்த உணவை ஃபிரிஜ்ஜுக்குள்ளே வச்சுட்டு நிதானமா வேஷம் மாறிக் கிளம்பினோம்.
ப்ளெஸண்ட்பாய்ண்ட் சர்ச்

ஊருக்குள்ளே தேசிய நெடுஞ்சாலை ஒன்னில் வந்த வழியாவே ஒரு 6 கிமீ போய் இடப்பக்கம் திரும்பி அரவமே இல்லாத தேசீய நெடுஞ்சாலை எட்டில் போய்க்கிட்டே இருக்கணும். ப்ளெஸண்ட் பாய்ண்ட் என்ற ஊரைக் கடக்கும்போது அழகான சர்ச் ஒன்னும் தொட்டடுத்து சின்னதா ஒரு ரயில்வே ஸ்டேஷனும்.. ரோட் ரயில் ஒன்னு ஓடுதாம். கொஞ்ச தூரத்தில் பலகைவச்சு அடிச்ச சின்னச்சின்ன ஷெட் ஒரு வயல்பூராவும் சிதறிக்கிடக்கு. உத்துப் பார்த்தால் பயங்கர உறக்கத்தில் வராகங்கள். பன்றிப்பண்ணை!
ஒருவழியா குகைக்குப் போனோம். வரவேற்புக்கு ஒரு பப். ரெண்டு பெண்களும் மூணு ஆண்களுமா வாசலில் பெஞ்சில் உக்கார்ந்து தாகசாந்தி. சர்ச் எங்கேன்னதும் ஒரே சமயத்தில் ஐவரும் கையை உயர்த்தி 'அதோ'ன்னு காமிச்சாங்க. பத்து எட்டு! கிட்டப்போய்ப் பார்த்தால் ஆள் அரவமில்லை. ஆல்செயிண்ட்ஸ் சர்ச்ன்னு பேர் போட்டுருக்கு. திரும்பிவந்து இது இல்லை. டேவிட் சர்ச்க்குப் போகணுமுன்னோம். கொஞ்சம் யோசனை..... ஒருத்தர் உள்ளே போய் விசாரிச்சுக்கிட்டு வந்தார். நேராப்போய் இடதுபக்கம் சாலையில் திரும்பி வளைஞ்சு வளைஞ்சு போகணும் என்பதைச் சொன்னாங்கன்னு நினைக்கிறேன். ஐவரும் வெவ்வேற திசையில் கைகளை உயர்த்தி கோபாலுக்கு வழி சொல்லிக் காமிக்கிறாங்க. போச்சுடா...... ஒருவேளை நாம்தேடிவந்த குகை இதுவாக இல்லைன்னா...... ராத்திரி டின்னர் & டான்ஸ் முடிய 12 ஆகிரும். அதுக்குள்ளே தேடிப் போய்ச் சேர்ந்துடமாட்டோமா?
வார் மெமோரியல்

ஐவர் காட்டிய வழியில் போனோம். கைகாட்டி மரத்தில் செயிண்ட் டேவிட் சர்ச்ன்னு போட்டுருக்கு. மலைப்பாதையில் வண்டி ஏறுது. திருப்பதியில் கல்யாணம் வச்சுக்கிட்டாங்களா என்ன? வளைஞ்சு போகும் பாதையில் ஒரு இடத்தில் ஓரமாப் பெரிய பாறை! கல்(வெட்டு) வார் மெமோரியல்! உலகப்போர்களில் ஈடுபட்டவர்கள் பெயர்களும், வீரமரணம் அடைந்தவர்களின் பெயர்களும். ஆன்ம சாந்தி கிடைக்கட்டுமுன்னு ஒருவிநாடி பிரார்த்தித்தேன். ஒரு ரெண்டு கிலோமீட்டர் போனபிறகு வலப்புறம் திரும்பும் பாதையைக் காமிக்கும் கைகாட்டியில் சர்ச் பெயரும் 'வெட்டிங்'ன்னு எழுத்தும். ஆஹா.....
குன்றின்மேல் சர்ச்

பாதையில் வண்டியை விரட்டினால் கொஞ்ச தூரத்தில் ஒரு சின்னக் குன்றின்மேல் ஒரு சர்ச். அக்கம்பக்கம் ஈ காக்கா இல்லை:( இவர் சரசரன்னு சரிவுப்பாதையில் காரை ஏத்தி மேலே கொண்டுபோறார். ஒரே ஒரு ஆள் கையில் கேமெராவுடன் சர்ச்சுக்கு வெளியே .............

தொடரும்................:-)

30 comments:

said...

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா!!
ஒரு கல்யாணம்.
போகிற வழியெல்லாம் தகவல்கள் தரும் இடங்கள். கண்ணுக்கினிய காட்சிகள். அதை விளக்கமாகச் சொல்லும் துளசிம்மா. உங்களுக்கு இன்னும் நிறைய பயணங்கள் வாய்க்கணும். எங்களுக்கும் சுவையான
தகவல்கள் கிடைக்கணும்.

said...

படங்களும் விளக்கங்களும் நாங்களும் கூடவே
பயணிப்பதைப் போல இருந்தது
அந்த பயன்படாத ரயில்வே ஸ்டேசன் எங்கள் ஊர்
பயன்பாட்டில் உள்ள ஸ்டேஷனைவிட
ரொம்ப நல்ல இருப்பது போல்பட்டது
தொடர்ந்து வருகிறோம்
(அந்த ஊர் கல்யாணத்தைப் பார்க்க ரொம்ப ஆசை )

said...

அட உங்க ஊர்ல நம்ம ஊர் கல்யாணம்...

போகிற வழியெல்லாம் விவரித்துச் சொல்லும் உங்கள் பாணி மிக அழகு டீச்சர்.....

ரசித்தேன்....

said...

உங்க ஊரில் ஆள் அரவம் இல்லைன்னு சொல்றிங்க, இங்க திரும்பின பக்கமெல்லாம் மனித தலைகள், ஒண்ணும் இல்லேன்னானும் கஷ்டம் அதிகமாகப் போனாலும் தொல்லை.

:)

நியூசி நெடுஞ்சாலைகள், கிராமங்கள் அழகாகப் பிடிச்சுப் போட்டிருக்கிங்க

said...

உங்க பயணத்தை மிகவும் அழகாக விளக்கியிருக்கீங்க..படங்கள் எல்லாம் கண்ணுக்கு விருந்தாக இருக்கு.

முக்கியமான இடத்துல தொடரும் போட்டுவிட்டீங்களே! சரியான சர்ச் க்குத்தான் போனீங்களா இல்ல??

said...

ரொம்ப திரில்லான பயணம்...

said...

நல்லாவே இருக்கு கல்யாண ஊர்வலம் :-))

said...

ஜோசியரினியாவும் ஓர் அவதாரமா உங்களுக்கு?

நல்ல வர்ணனையுடன் சிறந்த படங்கள்...

இந்த படுக்கை விரிப்பு சமாச்சாரம்..same blood.. எத்தனை முயன்றாலும் வருவதில்லை...

said...

உங்க ஊர்ல நடக்கற கல்யாணம்....போகும் வழியெல்லாம் சுத்தமான சாலைகள்....

நாங்களும் கூடவே வருகிறோம்.

said...

அடுத்தது என்னங்க??

said...

//ஆனால் வழியில் எங்காவது நிறுத்திட்டு சாப்பிடணுமுன்னா நாம் கொண்டுபோனால் நல்லது//

இதைத்தான் எங்கூட்ல நானும் தலைப்பாடா அடிச்சுக்கிறேன். சிறுசுகள் பெருசுகளானப்புறம், "திங்கிறதுக்குன்னு ஒரு இடத்துக்குப் போனா அது பிக்னிக்கா? போங்கம்மா,.. நீங்களும் உங்க பிக்னிக்கும். அதை வீட்லயே சாப்பிட்டுக்கறோம்"ன்னு கலாய்க்குதுங்க. ஒரு வெஜிடபிள் பிரியாணி,தொட்டுக்க சாலட், கொஞ்சம் குருமா, அப்றோம் இவ்ளூண்டு பழங்கள், கடிச்சுக்க ஸ்நாக்ஸுன்னு கொண்டு போனா தப்பாங்க?.. ஒன்னும் புரியலை. அவ்வ்வ்வ்வ்வ்..

said...

பக்கத்திலேயே அமர்ந்து பயணிப்பதைப் போன்ற உணர்வு. போகும் பாதையின் நுண்ணிய விவரங்களையும் தந்து அசத்துறீங்க. திருமணம் பற்றி அறிய ஆவலோடு காத்திருக்கிறேன் மேடம்.

said...

வாங்க வல்லி.

கூடவே வாங்கப்பா.

பயணங்கள் (ஒருபோதும்) முடிவதில்லை!!!!

said...

வாங்க ரமணி.

அட்டகாசமான அருமையான கட்டிடங்களைக்கூட அதனால் ஏதேனும் ஆபத்து மனித உயிர்களுக்கு வந்துருமோன்ற அதீத பயத்தில் இங்கே இடிச்சுத் தள்ளிடறாங்க. அதுவும் சமீபத்து நிலநடுக்கத்தால் அழிஞ்சது பாதின்னா இவுங்க அழிக்கறது மீதி:(

உங்களுக்காகத்தான் விலாவரியா இன்னிக்கு உள்ளூர் கலியாணம் போட்டுருக்கேன். போய்ப்பார்த்துட்டுச் சொல்லுங்க.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இந்த ஊர்லே நாங்க தமிழ்க்காரர்கள் எல்லோரும் சேர்ந்து முந்தி ஒரு கல்யாணம் நடத்தி இருக்கோம். உள்ளூர் ஹரே க்ருஷ்ணா பண்டிட்டுக்கு நம்மூர் கல்யாணக்கேஸட்டைப் போட்டுக்காட்டி இதுக்காக பயிற்சி கொடுத்தோமுன்னா பாருங்க:-)))

said...

வாங்க கோவியாரே.

மனிதக்கூட்டம் அதிகம் இருப்பதும் ஒரு வகை ஆபத்துதான்,இல்லையோ?

நாலுபேருக்கு மேல் அஞ்சாவது ஆள் நின்னாவே இங்கே பயங்கரக் கூட்டமுன்னு சொல்லிருவேன்:-)

said...

வாங்க ராம்வி.

அதே சர்ச்சுதாங்க. இன்னிக்கு பதிவுலே போட்டுருக்கேன்.

வருகை தந்து ஆதரவு தாரீர்:-)

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

அன்னிக்கு அப்படித்தாங்க ஆகிருச்சு. கல்யாணம் இங்கேதான் என்றதுக்கு ஒரு அடையாளம் இல்லே பாருங்க:(

நம்மூர்லே அட்லீஸ்ட் ரெண்டு வாழைமரமாவது கட்டிவிட்டுருப்பாங்க!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஊர்வலம் பார்த்தால் போதுமா?

இன்னிக்கு வந்து 'மொய்' எழுதிட்டுப் போங்கப்பா:-)))))

said...

வாங்க பாசமலர்.

சிலதை எத்தனை முறை பார்த்தாலும் மனசுலே பதியறதில்லைப்பா:-)))))

இதேதான் துணிகளைப் பொட்டி போடும்போதும்! அயர்ன் செய்ய மட்டும் கத்துக்கவே இல்லை.
'தெரியாத்தனமாக் கத்துக்கிட்டால் உனக்கே பிற்காலத்தில் ஆபத்துன்னு மூளைக்குத் தோணிப்போய் எச்சரிச்சு இருக்கு':-))))

said...

வாங்க கோவை2தில்லி.

கூடவே வருவதற்கு நன்றிப்பா.

said...

வாங்க தெய்வசுகந்தி.

அடுத்தது..... தாலி கட்டுனவுடன் குடியும் கும்மாளமுமாய் விருந்துதான்:-))))

said...

என்னங்க அமைதிச்சாரல்...பிள்ளைகளுக்கு விளக்குங்க...நேரத்துக்குச் சாப்பிடணும். கையோடு கொண்டு போயிட்டால் நேரம் தவறாது பாருங்க.

முந்தியெல்லாம் பகல் 4 மணி ஆச்சுன்னா கட்டாயம் டீ குடிச்சே ஆகணும் எனக்கு. பகலில் வீட்டைவிட்டுக் கிளம்புனா கையோடு ப்ளாஸ்குலே டீ தயாரிச்சு எடுத்துக்குவேன்.

உள்ளூர் பயணங்கள் செய்யும்போது வெந்நீர், சக்கரை, பால் தேயிலைன்னு காரில் மினி காஃபி/டீ பார் இருக்கும். நாலுமணிக்கு எந்தக் காட்டுப்பகுதியில் ட்ரைவ் பண்ணிக்கிட்டுப்போனாலும் 'ஷ்டாப்'தான். டீக் குடிச்சுட்டுத்தான் வண்டி கிளம்பும்:-))))

said...

வாங்க கீதமஞ்சரி.

விளக்காம இருக்க முடியலைங்க::-)))))

'தொணதொணப் பதிவுக்கு துளசிதளம்'ன்னு விளம்பரம் பண்ணிறலாமா?

said...

மற்றவர்களின் தொணதொணப்பு எரிச்சலை கொடுக்கும். உங்களின் தொணதொணப்பு படிக்க தூண்டுகிறது.
Very interesting blog. I love to read your posts.

said...

\\துளசி கோபால்said...

வாங்க கீதமஞ்சரி.

விளக்காம இருக்க முடியலைங்க::-)))))

'தொணதொணப் பதிவுக்கு துளசிதளம்'ன்னு விளம்பரம் பண்ணிறலாமா?\\

தொணதொணப்பா? இது ஒரு வரம். இந்த வரம் எல்லோருக்கும் அமைவதில்லை. அழகா எழுதறீங்க மேடம், படிக்கிறவங்களையும் உங்களுடனேயே பயணிக்கவைக்கிறீங்க... நீங்க இன்னும் நிறைய எழுதணும், நாங்களும் அவற்றையெல்லாம் படிக்கணும்.

said...

கட்டுச்சோற்றுடன் பயணிப்பதும் ஆனந்தமே.

கல்யாணக் காட்சிக்கு வருகின்றோம்....

said...

வாங்க கமல்.

ஆஹா..... அப்படியா!!!!!

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தித்தான் உடம்பெல்லாம்......:-)))))

கள் குடித்த குரங்கானேன்!!!

said...

வாங்க கீதமஞ்சரி.

பள்ளி நாட்களில் 'ஒரு பக்கத்து மிகைப்படாமல் எழுதுக'ன்னு வந்தப்பெல்லாம் அரைப்பக்கத்துமேல் தாண்டமுடியாமல் முழிச்சதுக்கு இப்பப் பழிவாங்கிக்கிட்டு இருக்கேன்:-))))))

said...

வாங்க மாதேவி.

இன்னிக்கு அரியர்ஸ் க்ளியரிங் டேவா:-)))))