Monday, November 28, 2011

சீத்தலை சாத்தள்

சரியா ரெண்டு வாரம் மனசை அலைபாயவிட்டுட்டு அதன்போக்கிலேயே போய்வந்தாச்சு. இனி அடங்கிருமுன்னுதான் நினைக்கிறேன்:-)

எழுதலையே தவிர........ வாசிப்புகளைக் குறைச்சுக்கலை. இத்தனைநாள் திடீர்னு எடுத்துக்கிட்ட விடுமுறையும் தோட்டவேலை, சமையல், ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் இப்படி நல்லாதான் போச்சு. Neat bug caught me. ஆனால்....மனக்குரங்கு மட்டும் ஒரு மூலையில் உக்கார்ந்து பிராண்டிக்கிட்டே இருந்துச்சுன்றதை ஒத்துக்கறேன். அதுவும் பகல் 2 மணி ஆனதும் கை பரபரக்கும், பொழுது விடிஞ்சுருச்சுன்னு! (இந்திய நேரம் அப்போ காலை ஆறரை) வாளாவிருந்தால் ஒரு மணிநேரத்தில் எல்லாம் ஆ(டி)றி அடங்கிப்போகும்.

அதை அடக்கவோ, இல்லை எழுதலாமுன்னு நினைச்சதை எப்படி ஆரம்பிக்கணுமுன்னு முடிவு செஞ்சுக்கத் தலை சொறியவேண்டியோ என்னவோ ...........இப்படி ஒரு பொருள்.

புதிரா இருக்கா? படம் பார்த்து என்னன்னு சொல்லுங்க:-)

24 comments:

said...

படத்துல இருக்கறது கிராமங்களீல் கைத்தறி பாவுக்கு நீவி விட பயன் படுத்தும் கருவி

said...

என்ன அது? தெரியலையே மேடம்!!

said...

எதாச்சும் பின்னிட்டிருக்கீங்களா .. உல்லன் ல..

said...

சீத்தலை சாத்தனார் தான் எழுதுவதில் தப்பு ஏற்பட்டால் எழுத்தாணியால் குத்திக் கொள்வார் தலையை என்பார்கள்.

இது எழுத்தாணி போல் தெரியவில்லை. தலைமுடியை சிக்கு எடுக்க பயன் படுத்தலாம் போல் உள்ளது.

said...

சுத்தப் படுத்தும் கருவியாகவும் இருக்கலாம்.

said...

சிரமமான புதிராய் இருக்கிறதே. கிச்சனின் பயனாகும் ஒரு கருவி:))?

said...

ஆஹா!!.. படப்புதிர் வந்து ரொம்ப நாளாச்சுல்லே :-))

உங்களுக்கு விருப்பமானது.. அதான்.. அதேதான். அடுக்களைக் கருவி :-))

அடுக்களைக்கு உபயோகப் படுத்தப் போறதில்லை, சும்மாதான் வாங்கியாந்தீங்கன்னா தலையும் சொறிஞ்சுக்கலாம். ஆக மொத்தம் டூ இன் ஒன் :-))

said...

சீப்பை சுத்தப்படுத்தும் கருவியோ?

அப்படித்தான் நினைக்கிறேன்.

சீக்கிரம் சொல்லிடுங்க இல்லைன்னா நாங்கள்லாம் சீத்தலை சாத்தனார் ஆகிடுவோம்....

said...

ஒரு tool,Paper quilling comb

said...

ஒரு tool ,onion holder,இதை வெங்காயம் மேலே வச்சு அழுத்தி பிடிச்சிட்டே கத்தியால் வெட்டலாம் .இது கிச்சன் பயன்பாட்டுக்கு .இது மாதிரி பேப்பர் க்விலிங் டூல் craft செய்யவும் விற்கிறது

said...

தலைல சிடுக்கு எடுக்கறது. கொஞ்சம் பதம் பார்த்துட்டாத் தலை புண்ணாயிடும்.

said...

முடி சிக்கு எடுக்கும் கருவி. பேன் பார்ப்பதற்கும் பயன்படுத்துவார்கள்.

said...

உருளை கிழங்கை சீவ பயண்படும் என்று நினைக்கிறேன்.

said...

வாங்க டீச்சர்..

நீங்க வெறுமனே எழுதினாலே புரியாம படம் காட்டச் சொல்ற ஆள் நான்.. இப்ப படம் காட்டி என்னன்னு கேட்கறீங்க :-)

இந்தப் பொருள், பூச்சாடிகள்ல இருக்குற பூ மர வேர்களின் வளர்ச்சிக்காக மண்ணைக் கிளறிவிடுற ஒரு பொருளாக இருக்கணும்..இல்லேன்னா கூந்தல் அழகுக்கு பயன்படுத்துற பொருளாக இருக்கணும்...சரியா? :-)

said...

தலையைச் சொரியப் பயன்படுத்தினா அவ்வளவுதான்!

என்னன்னு புரியலையே! :)

said...

Isn't that a needle holder?

said...

இல்லைன்னா,ஸ்பானிஷ் பெண்கள் தலை அலங்காரத்துக்கு வச்சுப்பாங்களே அந்தச் சீப்பா.
சாப்பாடு எடுக்கறதுக்கு பயனாகுமா:)

said...

பூ தொட்டிகளில் உள்ள பனியையும், மண்ணையும் கிளறி விட கூடிய கருவியாய் இருக்கலாம்.

said...

ரிஷான் சொல்லியிருப்பது சரியோ எனத் தோன்றுகிறது:)! பூந்தொட்டி கிளற. கோமதிம்மாவும் சொல்லியுள்ளார்கள்.

இல்லேன்னா மைக்ரோவில் அவிக்கும் முன் உருளைக் கிழங்கை ஆங்காங்கே துளை போட...:))?

அடுத்த நாளே விடை சொல்வீர்களெனப் பார்த்தால் வரும் பதில்களின் சுவாரஸ்யத்தால் தாமதபடுத்துறீங்க போலயே:)!!

said...

வாங்க என் அன்புகளே!
விதவிதமான ஐடியா கொடுத்து 'தூள்' கிளப்பிட்டீங்க!

விடை படத்துடன் பதிவாப் போட்டுருக்கேன். ஒரு எட்டு பார்த்துட்டுச் சொல்லுங்க!

said...

சீத்தலை சாத்தல் இரண்டு பதிவுகளையும் இப்போதுதான் பார்த்தேன். வெங்காயம் நறுக்குவதற்கு நல்ல ஒரு கருவிதான். ஆனால் பின்னுட்டங்களை படித்து மண்டை கைய வேண்டும் போல. தலையை சொரிவதைக் கூட விடுங்கள், உருளைக் கிழங்கு சீவ பயன்படும் என்று எழுதியிருக்கும் வடுவூர் உருளைக் கிழங்கை பார்த்திருக்கிறாரா என்றே தெரியவில்லை.

said...

வாங்க அமர பாரதி.

புதிரே வேடிக்கையான பதில்களுக்காகத்தானே:-))))

ஒரு வேளை வெந்த முழு உருளைக்கிழங்கை கம்பியில் குத்தி பிளந்து நறுக்கலாமுன்னு நினைச்சிருக்கலாம்:-)

பேன் பார்க்கன்னு ஒருத்தர் சொல்லி இருக்காங்க. பேனைப்பார்த்ததும் கம்பியால் அப்படியே ஒரே சதக்:-)

said...

இது பூந்தோட்டக் கருவி என்று தான் நினைக்கின்றேன்....
அடுத்த பதிவை பார்க்கின்றேன் :)

said...

வாங்க மாதேவி.

ஊஹூம்..... நோ ச்சான்ஸ்:-))