Wednesday, October 19, 2011

குலுக்கல்கள் பலவிதம் .........( சிங்கை சந்திப்புகள் 2011 பகுதி 10 )

சீனக்கோவிலுக்குள்ளே போனோம். சந்நிதிக்கு முன் அந்த பெரிய ஹாலின் நடுவில் பெரிய கம்பளம் விரிச்சு வச்சுருந்தாங்க. நேத்து அங்கே என்ன நடக்குதுன்னு பார்க்காமல் நான் நேரா மூலவர்களை நோக்கிப் பறந்துருந்தேன். அந்தக் கம்பளத்தில் கால்களை மடிச்சு முழங்காலிட்டதுபோல் பலர் உக்கார்ந்து கையில் ஒரு சிலிண்டர் வடிவக் குடுவையை ஆட்டிக்கிட்டே இருக்காங்க. அதுலே இருந்து சரசரன்னு ஒரு சப்தம். 'சீனக் கலாச்சார நிபுணர்' கூட வரும்போது விடமுடியுங்களா?
இது ஒருவகை ஆரூடம். நமக்கு வேணுமுன்னால் பார்த்துக்கலாமுன்னு சொன்னதும் மூலவருக்கு ஒரு வணக்கம் போட்டுட்டு ஹாலின் ஒரு பக்கம் இருந்த கவுண்ட்டரில் போய் நின்னதும் வரிசையா சுவர்பக்க ஷெல்ஃபில் இருந்த குடுவைகளில் ரெண்டு எங்கள் கைக்கு வந்தன. குடுவை குலுக்கிகள் கட்டாயம் கம்பளத்துக்கு மேல் அமர்ந்துதான் குலுக்கணும். குடுவையில் மெலிஸான ச்சொப் ஸ்டிக்குகள் போல ஒரு கைப்பிடி அளவு குச்சிகள். நூறு இருக்கும். குடுவையை கொஞ்சம் சாய்ச்சுப்பிடிச்சபடியே குலுக்கணும். குச்சிகள் எல்லாம் வெளியில் தெறிச்சு விழும்படி வேகமாக் குலுக்கக்கூடாது. நிதானமான அளவில் சீராக் குலுக்கிட்டே கடவுளிடம் நமது கோரிக்கையை வைக்கணும். கிளி ஜோசியத்தில் சிலருக்குக் கிளி சட்னு சீட்டை எடுத்துப்போடும் சிலருக்கு ஒவ்வொன்னா எடுத்துக் கலைச்சு, அப்புறம் களைச்சுப்போய் கடைசி சீட்டு எடுத்துப்போடுமே அதைப்போல சிலர் குலுக்க ஆரம்பிச்ச சில நிமிசங்களில் எழுந்து போறாங்க. சிலர் கை சோர்வாக ஆகும்வரை குலுக்கிக்கிட்டே இருக்காங்க. கோரிக்கைகளின் வெயிட் அனுசரிச்சு குலுக்கும் நேரம் கூடுதோ என்னவோ?

முழங்காலிட்டுக் குலுக்கினோம். இதெல்லாம் வேணுமான்னு மனசு கேக்கும்போது ஒரு குச்சி எல்லாத்தையும்விடக் கொஞ்சம் முன்னாலே வந்துச்சு(அப்டீன்னு நினைக்கிறேன். முன்னால் உக்கார்ந்திருந்த சிலருக்குக் குச்சி அப்படியே குதிச்சு வெளியில் வந்து விழுந்ததையும் கண்டேன்) வெளியில் தலை நீட்டிய குச்சியைத் தனியாக் கையில் எடுத்துக்கிட்டுப்போய் இன்னொரு கவுண்டரில் குச்சிகள் இருந்த குடுவையையும் கையில் வச்சுருந்த குச்சியையும் கொடுத்தோம். ஒவ்வொரு குச்சியிலும் எதோ எண்கள் சீனத்தில் எழுதி இருக்கு. நாம் கொடுத்த குச்சியை வாங்கிப்பார்த்துட்டு அந்த எண்ணுக்குண்டான ஒரு சின்ன ஸ்லிப் கையில் கொடுத்துட்டு அந்தக் குச்சியை நாம் திருப்பிக் கொடுத்த குடுவையில் போட்டு கவுண்டரின் மறுபக்கம் வச்சவுடன் இன்னொருத்தர் அதைக் கொண்டுபோய் குடுவைகள் வழங்கும் இடத்தில் உள்ள ஷெல்ஃபில் கொண்டு வச்சார். எல்லாம் ரொம்ப சிஸ்டமேட்டிக்கா நடக்குது.

எனக்குக் கிடைச்ச காகிதத்துண்டில் நமக்கு வந்த எண்ணுக்கான பலன் சுருக்கமா இருக்கு. அந்தக் கவுண்ட்டரின் ஒரு பக்கம் கையளவு சைஸில் நிறைய புத்தகங்கள் இருக்கு. எல்லா எண்களுக்கும் விரிவான பலன் அச்சடிச்சது. அதுலே ஒன்னும் எடுத்துக்கிட்டுப்போய் ஒரு பக்கமா உக்கார்ந்து இன்னும் விலாவரியா எண்ணுக்குண்டான பலன்களைப் படிச்சுக்கலாம். திரும்பப் புத்தகத்தைக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வச்சுறணும்,ஆமா.

மனுஷ மனசுக்கு எப்படியெல்லாம் சமாதானங்கள் வேண்டி இருக்கு பாருங்க. இதை நிறைவேத்தித்தரத்தானே மதங்களும் கடவுளர்களும். இல்லையா? வளாகத்தைக் கடந்து எதிர்ப்பக்கம் போய் சீன வாஸ்த்துகள் விற்கும் கடைக்குள் வேடிக்கைப் பார்த்துக்கிட்டேச் சுற்றினோம். கண்ணாடியில் செஞ்ச மிளகாய்ச்சரம் அருமையா இருக்கு. எல்லாம் பழுத்த மிளகாய்கள். பச்சைக் காம்புகளுடன். வெளிச்சம் ஊடுருவும்போது அட்டகாசமா ஜொலிக்குது. கோபாலுக்கு மிளகாய் (சாப்பிடப்) பிடிக்கும். வாங்கலாமான்னு யோசனை. கொஞ்சம் ஆறப்போட்டேன்.
வெளியில் மீன் தொட்டிகளுக்கும் பூச்செடிகளுக்கும் இடையில் போட்டு வச்சுருந்த இருக்கைகளில் உக்கார்ந்து கூட்டத்தை வேடிக்கைப் பார்த்துக்கிட்டே கொஞ்சம் வீட்டு விஷயங்கள். சொந்தக் கதைகள், கதைக்குண்டான கருப்பொருட்கள், அடுத்து எழுத உத்தேசிப்பது இப்படிப் பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ ஒரு வயசான சீனர் வந்து கை நீட்டினார். எனக்கு ஒரே திகைப்பு. இங்கேயா? சிங்கையிலா? சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சுன்னார். ஜெயந்தி சட்னு ரெண்டு வெள்ளியை அவர் கையில் வச்சாங்க. அரசாங்க உதவிகள் கிடைக்குதான்னு தெரியலை....... கொஞ்சம் இதை விசாரிக்கணும். சீனக்குடும்பங்கள் நம் இந்தியக் குடும்பங்கள் போலத்தான். வயதான தாத்தா பாட்டி அப்பா அம்மாவையெல்லாம் வச்சுப் பராமரிக்கும் வழக்கம் உண்டு. இப்படி ஒரு கலாச்சாரம் புழங்கும் ஊரில்........... இதே சம்பவம் இந்தியாவில் ஏராளமாப் பார்த்திருந்தாலும் எனக்கென்னவோ சிங்கையில் (கௌரவ)பிச்சை கண்டது இதுவே முதல்முறை!

சரி வந்த வேலையைப் பார்க்கலாமுன்னு ஸ்ரீகிருஷ்ணன் கோவிலுக்குள் போனோம். கோவில் கருவறை மூடி இருக்கும் நேரம். கருவறைக்கு வெளியே நின்னு வணக்கம் போட்டுட்டு, திருப்பாவை சிற்பங்கள் 'காணலை'யேன்னு கண்ணனிடம் குறை சொல்லிட்டு வெளிப்பிரகாரம் கூட்டிக்கிட்டுப்போய் 'நம்மாட்களை'க் காமிச்சேன். இன்னிக்கு மீண்டும் சந்திச்சதில் நம்ம தண்டபாணிக்கு மகிழ்ச்சின்னு அவர் முகம் சொல்லுச்சு. நேற்றுச் செஞ்ச யானைகளை தூண்களைச் சுத்தி நடக்க வச்சுக்கிட்டு இருந்தார். பிரகாரத்தில் இருக்கும் மற்ற எல்லா சிலைகளையும் என்னமோ நானே செஞ்சு வச்ச பெருமையில் அதன் அழகையெல்லாம் அனுபவிச்சுச் சொல்லிக்கிட்டு இருந்தேன். நல்ல வேளையா இங்கே கூட்டிவந்தீங்க. இல்லைன்னா இந்தப் பக்கம் எல்லாம் வரவே எனக்கு நேரம் கிடைச்சுருக்காதுன்னாங்க ஜெ. அதானே....உள்ளூர்லேயே அழகெல்லாம் கொட்டிக் கிடந்தா யார் கவனிக்கப்போறா?


அங்கிருந்து கிளம்பி திரும்ப பொடி நடையா நடந்தே போய் சையத் ஆல்வி தெருவில், அதான் அந்த முஸ்தாஃபா தங்க நகைக்கான கட்டிடம் தாண்டி (அதை சட்டையே செய்யாமல் நடந்தோமாக்கும்!) தெருவில் இன்னும் கொஞ்சம் உள்ளே போனதும் நம்ம சரவணபவன் கண்ணில் பட்டுச்சு. அதானே.... அது என்ன பொழுதன்னிக்கும் கோமளவிலாஸ் ?

யாருமே இல்லாமல் காலியா இருந்த இடத்தைக் கொஞ்சம் நிரப்பினோம். சிற்றுண்டி சாப்பிட்டு முடிச்சு காஃபி, ஃபில்டர் தானான்னு உறுதிப்படுத்திக்கிட்டுக் குடிச்சேன். வீட்டுக்குப்போய் சமைக்கவேணாமேன்னு இங்கேயே கொஞ்சம் சாப்பாடு வாங்கிக்கிட்டாங்க ஜெ. அப்பதான் கோபால் செல்பேசியிலே கூப்பிட்டு தான் அறைக்கு வந்துட்டதாகவும், நாங்க அவசரமே இல்லாமல் சுத்திட்டு நிதானமா வந்தால் போதுமுன்னும் சொன்னார். அப்படியெல்லாம் சொன்ன பேச்சைக் கேக்கமுடியாதுன்னு அவருக்கும் ஒரு காஃபி பார்ஸல் வாங்கிக்கிட்டு மூணே நிமிச நடையில் அறைக்குப் போய்ச் சேர்ந்தோம். ' சரி. முஸ்தாஃபா கோல்ட்லே நிதானமாச் சுத்திப் பார்த்துட்டு கொஞ்சம் 'எதாவது' வாங்கிண்டு வரேன்'னுமட்டும் சொல்லி இருந்தால்............ அலறி அடிச்சுண்டு ஓடி வந்துருப்பர்:-)

தாய்லாந்து தொழிற்சாலைக்குப் போவதற்காக நேற்றுப் பகல் நியூஸியில் இருந்து கிளம்பி இங்கே சிங்கைக்கு வந்த 'தலை' இப்படியே திரும்பி நியூஸிக்கேப் போறாராம். ஊருலே நிலை ரொம்பவே மோசமாம். பிள்ளைகளை வாரி எடுத்துக் காரில் போட்டுக்கிட்டு மனைவி வடக்குத்தீவை நோக்கிப் போய்க்கிட்டு இருக்காங்களாம்.

பத்தரை மணிப் பயணம் முடிச்சுட்டு நல்லாத் தூங்கி ஓய்வெடுத்துக்கிட்டு இருந்தவரை நியூஸி நிலநடுக்கம் அங்கிருந்தே ஆட்டி வச்சுருக்கு. சிங்கைக்கும் நியூஸிக்கும் அஞ்சு மணி நேர வித்தியாசம் இருக்குன்னு முந்தியே சொல்லி இருந்தேன்லெ? சிங்கையில் காலை எட்டு மணியானப்ப, நியூஸியில் ரெண்டு கட்டிடம் முழுசா இடிஞ்சு விழுந்து அதுலே இருந்த மக்களில் 90 சதவீதம் பரலோகம் போயிட்டாங்க. மனைவிக்கு நலம் சொல்ல கூப்பிட்டவரின் 'தலை'யில் இடிவிழுந்தாப்போல!

ஒரே குலுக்கலா குலுங்கி நிற்காம, நாலு நிமிசத்துக்கு ஒன்னு, அஞ்சு நிமிசத்துக்கு ஒன்னு, ஏழு நிமிசத்துக்கு ஒன்னுன்னு அட்டவணை போட்டு வச்சுக்கிட்டு இருந்த மாதிரி அந்த நாள் மட்டுமே 156 முறை சின்னதும் பெருசுமாக் குலுங்கி நாட்டையே கலவரப்படுத்தி இருக்கா பூமித்தாய்.

மக்கள்ஸ் அலறி அடிச்சுக்கிட்டு வேறிடம் தேடி ஓடும் களேபரத்தில் ஏர்ப்போர்ட் முழுசும் கூட்டம் நிறைஞ்சு வழியுது. ஆனால் எந்த ஊருக்கும் விமானச்சீட்டு கிடைக்கும் வழி இல்லை. எல்லாமே ஃபுல்லு! காரில் ஊரைவிட்டு ஓடும் மக்களால் நேஷனல் ஹைவேக்களில் ட்ராஃபிக் ஜாம்.
அப்படியே காரில் ஓடினாலும் பிக்டன் என்ற ஊர்வரைதான் போகமுடியும். அங்கிருந்து தீவைக் கடக்க ஒரே வழி கடல்தான். எல்லா ஃபெர்ரி சர்வீஸுகளும் சுநாமி எச்சரிக்கை இருப்பதால் ஓரங்கட்டி உக்கார்ந்துருக்கு,

திடமனதோடு நிலநடுக்கத்திற்கு நடுங்காம உள்ளூரிலேயே இருக்கும் மக்களுக்கு தண்ணீரும் மின்சாரமும் இல்லை. மரண எண்ணிக்கை முன்னூறுக்கு மேலே இருக்குமுன்னு ரேடியோ ஒரு பக்கம் அலறிக்கிட்டே கிடக்கு. பக்கத்து பேட்டைகளுக்கு உறவினர் நண்பர்கள் வீடுகளுக்குப் போகலாமுன்னா ஊர் முழுக்க சாலைகளில் பிளவு. அரசு அவசர நிலை அறிவிச்சுருச்சு. எந்த நிமிசமும் விமானநிலையத்தையும் இழுத்துப் பூட்டலாம். ரன்வேக்களில் விரிசல்.

காலை 1151க்கு கிறைஸ்ட்சர்ச் நகரில் இருந்து கிளம்பிய சிங்கை விமானம், சரியா ஒரு மணி நேரம் கழிச்சு நகரில் நடந்த பேரழிவைப் பயணிகளுக்கு அறிவிச்சு இருக்கு. கையறு நிலையில் பயணிகள். அதே விமானம் சிங்கை நேரம் மாலை 7.50க்குத் திரும்பிப் போகும். அதுலே ஊர்திரும்பறார் 'தலை' இவர் போய்ச் சேரும்போது விமானநிலையம் திறந்திருக்குமான்றது கூட சந்தேகம்தான்.

கோபால் சொல்லச் சொல்ல நானும் தோழியும் வாயடைச்சுக் கேட்டுக்கிட்டு இருக்கோம். இருட்டப் போகுதேன்னு தோழி ஜெ கிளம்பிப் போனாங்க. இப்படியும் ஒரு குலுக்கலான்னு சிந்திக்கும் சமயம், நாளைக்கு நீ கிளம்பி நியூஸிக்குப்போய் என்ன ஆச்சுன்னு பார்த்துட்டு, வீட்டுக்கு பழுது பார்க்கணுமுன்னா ஏற்பாடு செஞ்சுரு. நான் இந்தியாவுக்குப் போய் சிலவேலைகளை முடிச்சுட்டு ரெண்டு வாரத்தில் நியூஸிக்கு வரேன்னு அவசர முடிவு எடுத்தார் கோபால்.

தொடரும்...............:-)


21 comments:

said...

கோவில், உணவகம், நிலநடுக்கம் என்று எல்லாம் கலந்த பகிர்வு நன்று.

யானைகளை தூணில் வைத்த பிறகு இன்னும் அழகாய்த் தெரிகிறார்....

said...

//மனுஷ மனசுக்கு எப்படியெல்லாம் சமாதானங்கள் வேண்டி இருக்கு பாருங்க. இதை நிறைவேத்தித்தரத்தானே மதங்களும் கடவுளர்களும். இல்லையா?//

உண்மைதான் மேடம்.
நல்ல பகிர்வு.

said...

விலாவரியா எண்ணுக்குண்டான பலன்களைப் படிச்சுக்கலாம்./

நல்ல பலன்கள் வந்ததா???

said...

குடுவை குலுக்கல்கள் கண்டுகொண்டோம். :))

சீனப் பொருட்கள் வித்தியாசமாக எல்லாம் தயாரிக்கிறார்கள்.

அண்மையில் நண்பி வீட்டில் உடல்வலிக்குத்தேய்க்கும் உருளை, தலைஇடி நோவுக்குத் தேய்க்கும் கம்பிகளாலான பொருள் நுனியில் தலையை உராயாமல் இருக்க குமிழ்கள் இருக்கின்றன. எனப்பல சீனப்பொருட்கள் காட்டினார்கள். பலன் இருக்குதோ இல்லையோ தேய்ப்பதில் சுகம் என்றார்கள்.:)

said...

ஒரு நல்ல படம் என்ன பண்ணும் தெரியுமா? அதீத இன்பத்தையும் அதீத துன்பத்தையும் மாத்தி மாத்திக் குடுக்கும். மக்கள் உணர்ச்சி வசப்பட்டு ரசிப்பாங்க. உங்க பதிவில் இருக்கும் கலவை அப்படித்தான் இருக்கு.

முருகா, எல்லாரையும் காப்பாத்து.

சிங்கை சரவணபவன்ல எவர்சில்வர் கப்புலதான் காப்பி டீ வரும். சரியா? :)

said...

குலுக்கல்களைப் பத்தி வாசிக்கிறப்ப இப்பவும் பகீர்ன்னு இருக்கு.

கஜராஜரின் நுணுக்கமான வேலைப்பாடுகள் அசத்தலா இருக்கு.

said...

குலுங்கல் பற்றி இங்கு பேச்சு மூச்சே காணுமே!!

said...

உங்கள் குலுக்கல்களுக்கு நல்ல பலன் கிடைக்கட்டும் துளசி.
முன்ன எப்பவோ பார்த்த ஒருத்தர் கூட இங்க வந்திருக்காரே:) ராமா!!

said...

இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்

said...

தாமதமான பதிலுக்கு மன்னிப்பு வேண்டுகின்றேன்.

said...

வாங்க வெங்கட்.

யானை இருந்தாலும், நடந்தாலும், நின்னாலும் தூணில் வைத்தாலும் அழகோ அழகுதான்:-)

வாழ்க்கையே கலந்துகட்டித்தானே நிக்குது:-)

said...

வாங்க அருள்.

உங்க பதிவு பார்த்தேன். எல்லாமே இதுவரை அறியாத புதிய சேதிகள்! நன்றி

said...

வாங்க ராம்வி.

ராசி பலன் படிக்கும்போது கூட நல்லதாச் சொல்லி இருந்தா அதை நம்பலாம். கெட்டதா இருந்தால் அது எனக்கில்லை:-)

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ஒன்னும் சரியாப்புரியாத (ஆங்கில மொழிமாற்றம்) நிலையில் சொல்லி வச்சுருக்கு.

இன்று மாலை மழை பெய்யலாம். பெய்யாமலும் இருக்கலாம் என்பதைப்போல!

நல்லதுன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்:-)

said...

வாங்க மாதேவி.

உலகம் முழுக்க எல்லாத் தயாரிப்புகளும் இப்ப சீனாவில்தான்.

மேட் இன் சீனா இல்லாத சாமான்களை மார்கெட்டில் பார்ப்பது அபூர்வம். நாகரத்தினம் போல:-))))))))

said...

வாங்க ஜீரா.

எல்லாம் கலந்ததுதானேப்பா வாழ்க்கையும்!

டபரா டம்ப்ளர் செட்டில் காஃபி கிடைச்சது எனக்கு. தோழிக்கு பீங்கான் கப் டீ:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

இன்னும் அடங்கலையேப்பா:( தினம் ஒரு ரெண்டு மூணு வந்து 'நலமா?'ன்னு விசாரிச்சுட்டுல்லே போகுது!

அந்த யானை இன்னும் கண்ணுலேயே நிக்குது. சின்னக் கம்பியில் பரபரன்னு அலங்கரிச்சுக்கிட்டே போறார் நம்ம தண்டபாணி! ஈர சிமெண்ட்டில் அச்சுப் போட்டுக்கிட்டே போகுது அந்தக் கம்பி!

said...

வாங்க குமார்.

பெரிய குலுக்கல்கள் வந்து மக்கள் பரலோகம் போனால்தான் தொலைக்காட்சிக்குத் தீனி:(

சண்டிகர் திரும்பியபின் நியூஸி நிலநடுக்கத்தை தொலைக்காட்சியில் கொஞ்சம் காண்பித்தார்கள். அதை பின்தள்ளிட்டு ஜப்பான் சுநாமி முன்னுக்கு வந்துருச்சு.

said...

வாங்க வல்லி.

ராமா... ராகவான்னு சொல்றீங்க:-)

said...

வாங்க ஏஞ்சலீன்.

நன்றிங்க. உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

உங்கள் பயணக் கட்டுரைகள் பற்றி இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்

http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_09.html