Wednesday, July 28, 2010

தாய்லாந்து முழுசும் ஒரே நாளில் பார்க்க........................(தாய்லாந்து பயணம் பகுதி 8)

'புன்னகை'யுடன் இன்னிக்குப் பூராவும் சுத்தப்போறேன். நேத்தே இதுக்கான அடிக்கல் நாட்டியாச்சு. பதினொரு மணிக்கு வந்துடறேன்னு சொன்னாங்க. டேனி ரொம்ப உற்சாகமா வரவேற்றார். முதலில் டேனியின் அண்ணன் படிக்கும் பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்த்துட்டு போகலாமுன்னு அவுங்க அம்மா
சொன்னதும் மகிழ்ச்சி ரெட்டிப்பா ஆயிருக்கு அவருக்கு. பள்ளிக்கூடத்துக் கோடை விடுமுறைக் காலம் அங்கே.

'உங்க சம்மர் ஸ்கூலுக்கு இன்னிக்கு லீவா'ன்னா.... பதிவர் வருகையை முன்னிட்டுப் பள்ளிக்கூடம் லீவு:-)))))

சீக்கியர்கள் நடத்தும் பள்ளி இது. தாய் சிக் இண்டர்நேஷனல் ஸ்கூல். பெரிய வளாகம். செக்யூரிட்டியிடம் சொல்லிட்டு உள்ளே போகணும். நல்ல பாதுகாப்பு. விடுமுறை காலமுன்னாலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விசேஷ வகுப்புகள் நடக்குதாம். இடைவேளை நேரமுன்னு பசங்கள் விளையாடிக்கிட்டு இருந்தாங்க. அதுலே அண்ணனைப் பார்த்ததும் எங்ககூட வராம அங்கேயே வேடிக்கை பார்க்க நின்னுட்டார் டேனி.
அலுவலகம் வரை போனோம். ப்ரின்ஸியிடம் ஏதோ கேட்க சாந்தி உள்ளெ போனாங்க. நான் அக்கம்பக்கம் சுத்திப் பார்த்தேன். அருமையான கட்டிடங்கள். மொட்டைவெயிலில் பசங்க விளையாடவேணாமேன்னு வலைத்துணியில் கூரை போட்டு வச்சுருக்காங்க. நல்ல ஐடியா!!!!

ஆசிரியர்கள் யார் யார் என்னென்ன பிரிவுன்னு அவுங்க போட்டோக்களுடன் ஒரு தகவல் பலகை. 'தாய்' சொல்லித்தரும் ஆசிரியரைத்தவிர பாக்கி எல்லோருமே இந்தியர்கள். முக்கால்வாசிப்பேர் வட இந்தியர்களாவும் காவாசி தென்னிந்தியர்களுமா இருக்காங்க. ரெண்டு பேர் கேரளர்கள்!!!!

கட்டிடமும் சூழ்நிலையும் அமைப்புமே சொல்லுது கல்வித்தரம் குறைவில்லைன்னு. கேம்ப்ரிட்ஜ் பாடத்திட்டமாம்.
ஆசிரியர் குடி இருப்பு

பள்ளிக்கூட வகுப்பறைக் கட்டிடங்கள். ஹால் இதையெல்லாம் விட என் கண்ணைக் கவர்ந்தது அங்கிருந்த அழகான அடுக்ககம். ஆசிரியர்களுக்கான இருப்பிடங்களாம்!!!!! இதுக்குள்ளே சாந்தி வந்துடாங்கன்னு கார் நிறுத்தம் வரும்போதே கண்களில் கண்ணீர் பொங்க விம்மும் உதடுகளோடு டேனி எதிரே ஒரு காலை விந்தி நடையும் ஓட்டமுமா வர்றார். கீழே விழுந்துட்டாராம். அச்சச்சோ..........வீரன் டேனிக்கு வலிக்குமா என்ன? அம்மா 'ப்ரேவ் பாய்'ன்னதும் நொடியில் கண்ணுக்குள்ளே போயிருச்சு அங்கிருந்த வந்த கண்ணீர்!!!! அண்ணனைத்தான் பார்க்க முடியலை. விளையாட்டு நேரம் முடிஞ்சு வகுப்புக்குப் போயிட்டாராம்.

கிளம்பி எரவான் ம்யூஸியம் வழியா வந்து 'ச்சாவ் ப்ராயா' நதிப் பாலத்தைக் கடந்து 13297 சுகும்விட் ரோடில் போய்க்கிட்டே இருக்கோம். ம்யூஸியத்துக்குள்ளே போய்ப் பார்க்கவேண்டிய அவசியத்தை எனக்கு வைக்காமத் தேவையான விஷயத்தை வெளியிலேயே வச்சுருக்காங்க புண்ணியவான்கள்.
சரியா 33 கிமீ தூரத்தில் 'ஏன்ஷியண்ட் சயாம்' நுழைவுப் பாலம் வந்துருது. பெரிய இடமாத்தான் இருக்கணும். யானைக்கொடி பறக்கும் வளாகத்தில் நுழைஞ்சோம். கார் பார்க்கில் வண்டியைப் போட்டுட்டு உள்ளே போனோம். கட்டணம் உள்ளுர்க்காரர்களுக்கும் வெளியூர்க்காரகளுக்கும் வெவ்வேறு. ( இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எங்க நியூஸியில் இப்படி இல்லை . எல்லாருக்கும் ஒரே ரேட்தான். கொள்ளை அடிச்சுருவாங்கன்னு பொருமுவேன் எப்போதும்)
வரிசையா கோல்ஃப் கார்ட் நிக்குது. 2, 4, 6 ன்னு பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மணிக்கு இவ்வளொன்னு கட்டணம். ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு வடகை கட்டினோம். நம்ம டிரைவிங் லைசன்ஸை வாங்கி வச்சுக்கறாங்க . உள்ளே போலீஸ் பிடிக்காது:-)))) பேட்டரியால் ஓடும் வண்டி. எது 'ஆன், ஆஃப், ரிவர்ஸ், ப்ரேக்'ன்னு ஒரு நிமிஷம் விளக்கினார் அங்கிருந்த உதவியாளர். சாந்திதான் நமக்கு ஓட்டுனர். டேனிதான் 'ரைட் ரைட் போலாம்' சொல்லும் நடத்துனர். நான் வெறும் பயணி. ச்சீச்சீ..... ஃபோட்டோகிராஃபர் னு கௌரவமாச் சொல்லிக்கலாம்.

ட்ராம் மாதிரி ஒன்னு இருக்கு. அதுக்கு ஒரு கட்டணம் கட்டி அதுலேயே போய் சுற்றிப் பார்க்கலாம். இதுலே போனால் நம் விருப்பத்துக்கு நேரம் செலவிட முடியாது. க்ரூப் டூர் போறது போல:( சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சா சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கலாம்.


320 ஹெக்டேர் நிலத்தை வளைச்சு எழுப்புன பழங்கால நகரம் இது. இப்போதைக்கு 200 ஏக்கரில், தாய்லாந்தில் இருக்கும் 116 முக்கிய இடம்/ கோவில்களைக் கட்டி வச்சுருக்காங்க. வெறும் மாடல்னு சொல்ல முடியாது. அசலுக்கும் நகலுக்கும் வித்தியாசம் கொஞ்சம்கூட இல்லை. கொஞ்சமே கொஞ்சம் அளவு சின்னது. ஆட்கள் நுழைஞ்சு பார்க்கலாம்.

மூணுவிதமான நிர்மாணம். அச்சு அசலா செஞ்சு வச்சுருக்கும் வகை, பழைய இடங்களில் இருந்து அப்படியே கல்கல்லாகப்பெயர்த்து எடுத்துவந்து முன்னே இருந்த அதேமாதிரி மீண்டும் அந்தக் கற்களைக்கொண்டே கட்டிவச்சுருக்கும் வகை, க்ரியேடிவ் டிஸைனாக கலைஞர்களைக் கொண்டு கட்டிவச்சவை சிலதுன்னு இருக்கு.
ராமாயணத் தோட்டமுன்னு ஒன்னு ஒரு நீர்நிலைக்குள் இருப்பது அற்புதம். எல்லாமே வெள்ளை நிறமான சிலைகள். ராம ராவண யுத்தம், ஹனுமன் கடலைத் தாண்டிப் போகும்போது நிழல்பிடி பூதத்தோடு சண்டையிட்டது, சீதா தீக்குளித்தல், அஸ்வமேத யாகத்துக்கான குதிரையுடன் லவனும் குசனும் இப்படி முக்கிய காட்சிகள் எல்லாம் பலே ஜோர்.
ரெண்டு பக்கமும் அழகான மரங்கள் அடர்ந்த தார் ரோடு போட்டு வச்சுருக்காங்க. அங்கங்கே வழிகாட்டும் தகவல்கள். காட்சிக்குண்டான விவரங்கள் இப்படி எல்லாமே அருமை. பழைய அயூத்தியா நகரத்திலிருந்து கொண்டுவரப்பட்டவை பிரமாதம். 1767 வது ஆண்டு பர்மாவின் தாக்குதலுக்கு உட்பட்டு அழிஞ்சுபோன அயூத்தியாவைக் கண்முன்னே பார்க்கும்போது மனசுக்குக் கொஞ்சம் சங்கடம்தான். இப்போதும் வழிபாடும் நடக்கும் கோவில்களும், இடிபாடுகளுமா வேற ஏதோ உலகத்தில் இருப்பது போல அருமை.
மொத்த வளாகமே தாய்லாந்து நாட்டை முழுசா வரைபடத்தில் பார்க்கும் விதத்தில் அமைஞ்சு இருக்கு. கட்டிடங்கள் காட்சிகள் எல்லாம் ஏறக்கொறைய ஒரிஜனலா தாய்லாந்து நாட்டில் எந்த பகுதியில் இருக்குமோ அதே போல இங்கேயும்!!!! பருந்துப் பார்வையில் பார்க்க முடிஞ்சா அட்டகாசமா இருக்கும்.

தரையில் பாம்பு, மலையில் பாம்பு நதியில் பாம்புன்னு பாம்புன்னா அப்படி ஒரு ப்ரேமைன்னு தான் நினைச்சுக்கணும். கைப்பிடிச் சுவர்களில் எல்லாம் அஞ்சுதலைப்பாம்பு இருக்க அஞ்சாமல் படியேறி விறுவிறுன்னு போறார் டேனி. பாவம் குழந்தை. அஞ்சுவயசுப் பாலனை நம் ஆட்டத்துக்கு அலைக்கழிக்கும்படியா ஆச்சேன்னு எனக்கு அப்பப்ப வரும் எண்ணம், ' ஐயோ.... அருமையா இருக்கு'ன்னு அவர் அப்பப்பச் சொல்வதைக் கேட்டால் காணாமப்போயிருது. எனக்கேத்த ஜோடி:-))))) கள்ளம் புகாத உள்ளத்தில் எல்லாத்தையும் ரசிக்கும் சுபாவம் ரொம்பவே பிடிச்சுப்போச்சு எனக்கு.
இந்த இடத்துக்கு மட்டுமேன்னு ஒரு நாள் பூராவும் செலவு செய்யலாம். பதிவும் ஒரு ஆறேழு போடலாம். அவ்வளோ இருக்கு. ஆனா கொளுத்தும் வெய்யிலில் சுற்றுவது கொஞ்சம் அசதிதான். எழுத்திலோ சொல்லியோ முழு அனுபவத்தையும் விளக்க முடியாதுன்னு படங்களா ஒரு ஐந்நூற்றிச் சில்லறை எடுத்துவச்சேன். 'கண்டவர் விண்டிலர்' இங்கேயும் செல்லும்.
மிதக்கும் கடைவீதிக்குள்ளே நுழைஞ்சு கடைகளைப் பார்த்துக்கிட்டே நடந்தும் வரலாம். இன்னொரு பக்கம் நதியில் நிற்கும் ஓடங்களை ரசிக்கலாம். பத்துமலை முருகன்போல அசப்பில் ஒரு இந்துச் சாமிச்சிலை.

புத்தர். த்வாரவதி (Dvaravati )ஸ்டைல்

சில இடங்களில் புதுசா சில காட்சிகளைக் கட்டிக்கிட்டு இருக்காங்க. சிலதில் பராமரிப்பு வேலை நடக்குது. அங்கங்கே சில புத்தர் உருவங்கள். சின்னக்குன்றின் மேல் இருக்கும் கோவில்கள், ஓய்வறைகள் இப்படி கவனமாப் பார்த்துப் பார்த்துச் செஞ்சு வச்சுருக்காங்க. வருங்காலச் சந்ததிகளுக்கும் சமூகத்துக்கும் செய்யும் சேவையா இதை நடத்தி வருது ஒரு ட்ரஸ்ட். 47 வருசப் புதுசுன்னுதான் சொல்லணும். 1963 இல் ஆரம்பிச்சதாம்.
யோகா செய்யும் நிலையில் சிற்பங்கள். 80 போஸ்களில்

தினமும் காலை எட்டு மணி முதல் மாலை அஞ்சு வரை திறந்து வைக்கிறாங்க. என்னதான் ஓட்டமா ஓடினாலும் நாங்கள் வெளியே வந்து வண்டியை ஒப்படைக்க ரெண்டரை மணி நேரம் ஆகிருச்சு. ஒன்னும் சொல்லாம அரைமணிக்கான 50 பத் வாங்கிக்கிட்டு சாந்தியின் ஓட்டுனர் உரிமத்தைத் திரும்பக் கொடுத்தாங்க.

கிளம்பி போனவழியே திரும்பிப் பயணிச்சு ஒரு ஷாப்பிங் மாலில் இருக்கும் உணவுக்கடைகளில் பகலுணவை மாலை 4 மணிக்கு முடிச்சுக்கிட்டு டேனியின் வீட்டை ச்சும்மா எட்டி ஒரு பார்வை பார்த்துட்டு அறைக்குத் திரும்பினோம். மாலை மணி ஆறாகப் போகுது. இனி அவுங்க வீட்டுக்குத் திரும்பிப்போக ஒரு மணி நேரமாவது ஆகும். அது அப்படி ஒரு பிஸியான போக்குவரத்துக்கான நேரம்.

களைச்சுப்போன டேனி காருக்குள்ளே தூங்க ஆரம்பிச்சுட்டார். பாவம் குழந்தை.


தொடரும்...............:-)

14 comments:

said...

வேற ஏதோ உலகத்தில் இருப்பது போல அருமை.//
ஆமாம் ஆமாம்

டேனிய பாராட்டினது சரிதான்.. குட் பாய்..

இருடா இங்கருந்தே தாய் சுத்திப்பாத்துட்டிருக்கேன்னு சொல்லும்போதே
உங்க அண்ணாத்தை ,நல்லா இல்ல வா அங்க போய் கார்டூன் பாக்கலாங்க்றான்.. :(

said...

வாங்க கயலு.

அண்ணாத்தை புள்ளையாமாதிரி:-)))

'தன் தாயை' சுத்திப் பார்த்தால் போதுங்கறார்!!!!

said...

"கட்டணம் உள்ளுர்க்காரர்களுக்கும் வெளியூர்க்காரகளுக்கும் வெவ்வேறு." ...ம்ம்ம் நம்ம ஊர்ல இப்படி இருந்தா, நம்ம ஆளுங்க வாடகைக்கு எடுத்து வெளியூர்க்காரகளுக்கு வாடகைக்கு விட்டு....ந்ல்லா காசு பாத்திருவாங்க.

படங்கள் அருமை. அத்தான் வரலையா? எப்படி இதெல்லாம் miss பண்ண அவருக்கு மனசு வருது?!!!

said...

ரொம்ப அழகா படங்களோட எழுதியிருக்கீங்க அம்மா.

டேனிக்கு சமமா நீங்களும் விடாமல் படியேறியதும் , ஒவ்வொரு இடமா நடந்து சென்று ஆர்வமா புகைப்படங்கள் எடுப்பதும்...


ஆச்சர்யப்படுத்தினீர்கள் என்னை..


தாய்லாந்தை பற்றி நானே இத்தனை அழகா எழுதினதில்லை...


சுத்தி போடணும் உங்களுக்கு..:))

said...

அப்பா எவ்வளவு பெரியது அந்த மூன்று தலை யானை பார்க்க கம்பீரமாக உள்ளது டீச்சர். அனைத்து கோவில் மாடல்களும் அழகாக உள்ளது டீச்சர்.

said...

என்னப்பா,ராமர் கதையெல்லாம் இங்க நடந்த மாதிரியே கோவில்களேல்லாம் இருக்கு.இதுக்கு என்ன பேஸ்? அதையும் நீங்க சொல்லத்தான் போறீங்கன்னு நினைக்கிறேன்:) டேனி லுக்ஸ் வெரி ஸ்மார்ட். கோவில்களையும் ,தாய் நாட்டு உழைப்பையும் பற்றிச் சொல்லி முடியாது. ரொம்பவே அசர வைக்கிறது.

said...

ஹை... அப்ப தாய்லாந்து குறுக்குவழிதானா :-)))))))

படங்களும் விவரிப்பும் வழக்கம்போல அருமையோ அருமை.

said...

வாங்க டாடி அப்பா.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கனும்.

நெட் கனெக்ஷன் வெள்ளாடுது இங்கே:(


அத்தானுக்கு இதுக்கெல்லாம் ஏது நேரம்? அவரும் பதிவைப் பார்த்துத்தான் நான் என்ன செய்ஞ்சேன்னு தெரிஞ்சுக்குவார்.

இப்பெல்லாம் நம்ம ரெகுலர் வாசகர் இவர்தான்:-)))))

said...

வாங்க புன்னகை தேசம்.

நீங்கதான் இதுக்கு 'மூலவர்'. நீங்க மட்டும் சொல்லலைன்னா இப்படி ஒன்னு இருப்பதே தெரிஞ்சுருக்காது.

நன்றியை நாந்தான் உங்களுக்குச் சொல்லணுமாக்கும்.

நன்றியோ நன்றி.

said...

வாங்க சுமதி.

கிட்டக்கப்போய்ப் பார்க்கலைன்னு கொஞ்சூண்டு வருத்தம் இருக்கு. அடுத்தமுறை ஜமாய்ச்சுடலாம்:-))))

said...

வாங்க வல்லி.

இதுக்கே இப்படின்னா இன்னும் வரப்போற இடுகைகள்?

கூடவே வாங்கப்பா.

said...

வாங்க அமைதிச்சாரல்.

'திஸ் இஸ் த ஒன்லி குறுக்குவழி' ன்னு கன்ஃபர்ம் ஆகுதேப்பா:-)))))

said...

மிதக்கும் கடைவீதிகள் ஆகா ரொம்ப அருமை.படங்கள் அழகு.

said...

வாங்க மாதேவி.

நன்றிப்பா.