Wednesday, September 02, 2009

மாவேலியை இங்கோட்டு வரான் பறயூ............

என்னைத்தேடிக்கிட்டு அங்கே போயிட்டாருன்னா? இந்த வாரம் முழுசுமே ஓணம் விழாவுக்கான ஏற்பாடுகள்தான். ரெண்டு மாசமா ப்ரின்ஸ் ஜூவல்லரி, 'புடவை தரேன்'னுக் கூவிக்கிட்டு இருக்கு. 'சரிக்கும் பறஞ்ஞால் ஈ புடவை தருன்னதுக்கு வேற ஒரு அர்த்தம் உண்டு கேட்டோ'!!! ( சிறுப்பக்காரிகள் கிட்டே கேட்டுறாதீங்க. விழும் அடிக்கு நான் பொறுப்பில்லை)

வள்ளுவர் கோட்டத்தில் ஓணம் ஷாப்பிங் திருவிழா. வாசலில் பூக்களம் பிரமாதம்.புட்டும், அப்பமும், பழம்பொரியும், ச்சாயயும், கோப்பியும் கூடி விற்பனைக்கு வச்சுருந்தாங்க.
'கேரளாவில் வீடு வாங்கிக்கோ, ஃப்ளாட் வாங்கிக்கோ, ஜாலியாப் படகு வீட்டில் போயிட்டு வா'ன்னு ஆனமட்டும் கூப்பிட்டு பார்த்தாங்க.....நாங்க அசரலை. மசாலாப்பொடிகள், தலைவலி போகும் அக்கு ப்ரெஷர், தண்ணிக்குழாயில் செருகிவச்சால் குழாயைத்திறந்து தண்ணீர் கொட்டும்போது கூடவே சுழன்றாடும் சாதனமுன்னு வழக்கமான எக்ஸிபிஷன் சமாச்சாரங்கள்தான் அதிகம். கேரளான்னு சொல்லிட்டதால் ஆயுர்வேத மருந்து, எண்ணெய், லேகிய வகைகள் சில ஸ்டால்களில்.


இன்ஸ்டண்ட் ரங்கோலின்னு சல்லடைத் தட்டு இருக்கு பாருங்க, அதுலே பலவித டிசைன். வேண்டாத இடத்தை அடைச்சுட்டா, வேண்டும் இடத்தில் கோலப்பொடி புகுந்து புறப்படுது. வெவ்வேற வர்ணம் போட்டால் ரங்.....கோ...லி.
பழம்பொரி
புட்டு


தேங்காய் நாரில் நம்ம ஆளு.நல்லாத்தான் இருந்தார். ஆனால் நான் வாங்கிக்கலை.
வெறிச்சோடிக்கிடக்கும் புத்தக ஸ்டால். அடிச்சு வெளியே துரத்திட்டாங்களோ? வெராந்தாவில் அம்போன்னு நின்னது.
கோட்டத்தில் கம்பீரமான தேர். அழகா நிக்கும் ரெண்டு யானைகள். பார்வையில்லாத மூவர் வந்து , உள்ளே போய்த் தொட்டுப் பார்க்கமுடியுமான்னு கேட்டப்ப...மனசுக்குச் சங்கடமாப் போச்சு. கிட்டே போகமுடியாதபடி தடுப்பு இருந்துச்சு. யானையைத் தொட்டுப் பார்க்க முடியலை(-:


வீட்டுலே ஆக்கித் தின்ன காலம்போய் இப்பெல்லாம் ஓணவிருந்து ஓட்டலில்தானாம். நியூஸியில் இருந்தால் இந்தச் சான்ஸ் கிடைச்சுருக்காது. எங்க கேரளா அசோஸியேஷனில் நாங்களே 21 வகைகள் சமைச்சுருவோம்.
எங்கே போகலாமுன்னு தேடுனதில் நாலைஞ்சு இடம் இருக்குன்னு தெரிஞ்சது. சஞ்ஜீவனம் போகலாம். ஆனால் ஆக்கிப்போடுவாங்களா இல்லை ஆக்காமலா? தொலைபேசி எதுக்கு இருக்கு? ஆக்கித்தானாம்.
உங்க உடம்புக்கு என்ன? எந்தெந்த உணவு சாப்பிடலாம், எப்படி ஆரோக்கியமான வாழ்வு வாழலாமுன்னு சொல்ல அங்கேயே மருத்துவர்கள் வர்றாய்ங்களாம். இந்த டிகிரியெல்லாம் என்னன்னே எனக்குத் தெரியலை. அதைப் பத்திக் கொஞ்சம் விசாரிச்சுப் பார்க்கணும்.


ரொம்பச் சாதாரணமான கட்டிடம். ஆரோக்கிய உணவு (தான்) கிடைக்குமாம்.


மூங்கில்தட்டிகள் வச்சு அலங்கரிச்ச உள் அலங்காரம். சுவரில் யானைக்கு ஒரு முகபடாம். (சீஸனல்?) சின்ன ஹால்தான். ஆனால் கூட்டம் இருந்தது. சம்பிரதாயமான ஓண சத்யா. ரெண்டு வகைப் பாயசம். சாப்பாடு ருசியும் பரவாயில்லை. ஆனால் ....சர்வீஸ்.....கூட்டம் அதிகமாயிருக்குன்னு குழம்பிட்டாங்க போல. ஒருவேளை, விருந்து 'நான் ஹெல்த் ஃபுட்' ஆனதால்.... (சீச்சீ... இருக்காது)
குடிக்கான் கிட்டிய ஜீரகவெள்ளத்தோடு கூடி 26 ஐட்டம். ஆரோக்கிய உணவுன்றதால் பருப்புக்கு நெய் கிடையாது!!!!

அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஓணம் ஆசம்ஸகள்.

39 comments:

said...

//மாவேலியை இங்கோட்டு வரான் பறயூ............"//

டீச்சர் நான் அவ்விட போயி சொல்லிட்டு வாரேன் :

ஓணம் வாழ்த்துக்கள் :)))

said...

// இந்த டிகிரியெல்லாம் என்னன்னே எனக்குத் தெரியலை. அதைப் பத்திக் கொஞ்சம் விசாரிச்சுப் பார்க்கணும்.//

இவக எல்லாம் கேரளாவிலே ஆயுர்வேதம் காலேஜிலே படிச்சு டிகிரி வாங்கினவங்க..

சோழ்யில் சஞ்சிவனம் நிறுவனம் தான் மெடிமிக்ஸ் சோப் தயாரிக்கும் கம்பெனி. இவங்க, சஞ்சீவனம்
இருமல் மருந்தும் தயார் பண்ராங்க.

http://www.cholayilsanjeevanam.com/

கபத்தினால இருமல், வறட்டு இருமல், எல்லாவற்றிற்கும் அதே தானாம் ! நல்லா இருக்கும்போது
குடிச்சா இருமல் வந்துடுமோ ?

அத வாங்கிப்பாத்தா, அட ! துளசி, ஆடுதொடா இலை, மிளகு, இஞ்சி, தான் இருக்குது !

இவங்களோட ஒரு வெப் ஸைட்டுக்குள்ளே போக் க்ளிக் செய்தேன். உள்ளே போகாதே ! வைரஸ்
இருக்குது ! அப்படின்னு என்னோட ஆன்டி வைரஸ் சொல்லுது. !

பன்றிக்காய்ச்சல் வைரஸ் எதுனாச்சும் கம்பூயூட்டர் வந்துடுமோன்னு பயத்திலே மூடிட்டேன்.

Onam Greetings to Thirumathi Thulasi Gopal and family members.
All the Best.

மீனாட்சி பாட்டி.

Anonymous said...

//பழம்பொரி//

நேந்திரம் பழ சிப்ஸ் வாசனையும் சுவையும் ஆஹா

ஓணம் வாழ்த்துக்கள்!!

said...

வாங்க ஆயில்யன்.

அப்பம் பாருங்க, ஒரே ஆயில்!!!!

இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க மீனாட்சி அக்கா.

வைரஸா? அச்சச்சோ...அது 'ஆரோக்கியமான சைட்' இல்லையா?

அங்கே ப்ளேஸ் மேட்டாப் போட்ட தாளில் விளம்பரம் பார்த்தேன். துள்சி இருக்கு:-)

துள்சி இஞ்சி தனியா காப்பி!

நம்மூர்ச் சுக்குக்காப்பிதானே?

வாழ்த்துகளுக்கு நன்றிக்கா.

said...

BAMS = bachelor in ayurvedic medical science

இது ஆயுர்வேதப் பட்டப் படிப்பு, ஹோமியோபதிக்கு BHMS சித்தா NSMS இதிலேயே சர்ஜரிக்குத் தனியான ஒரு பட்டம் இருக்கு, மறந்துட்டேன்! :))))))
//DNYS &BNYS =alchoholic preventive medicine//
அப்படினு கேள்விப் பட்டநினைப்பு, யாராவது விஷயம் இன்னும் நல்லாத் தெரிஞ்சவங்கதான் சொல்லணும். ஆயுர்வேதப் படிப்பு தமிழ்நாட்டிலே இல்லை, ஆனால் கேரளாவிலும், குஜராத் ஜாம்நகரிலும் இருக்கு. ஜாம்நகர் ஆயுர்வேதப் பல்கலைக்கழகம் ஆசியாவிலேயே பெரிசுனு சொல்லுவாங்க. இப்போத் தெரியலை. சென்னையிலேயே ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, சித்த மருத்துவக் கல்லூரி இருக்கு. அண்ணா நகரில் அண்ணா மருத்துவமனையில் ஒரு துறை ஆயுர்வேதம் சொல்லிக் கொடுக்கிறதாக் கேள்வி. அப்பாடா, ஓணத்தைத் தவிர மத்தது சொல்லியாச்சு, யாரும் அடிக்கிறதுக்குள்ளே வரேன் நானு! :))))))))))

said...

வாங்க சின்ன அம்மிணி.

சிப்ஸ் அங்கே பொரிக்கலைப்பா. பழம்பொரிதான் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.

இந்தப் பழம்பொரி ஒரு கொசுவத்தி ஏத்திவச்சது. அப்புறம் கதைகளில் சேர்த்துக்கணும்:-)

நெய்யும் வெளிச்செண்ணெயும் கலந்து பக்கெட்டில் வச்சு, அப்பம் சுட்டுக்கிட்டு இருப்பதை உங்களுக்கான ஸ்பெஷலா இங்கே சேர்த்துருக்கேன். எஞ்சாய்:-)

said...

வாங்க கீதா.

விவரத்துக்கு நன்றிப்பா.

ஓணம் அதுவுமா தலையைப் பிச்சுக்க இருந்தேன்:-)

said...

தில்லி நைவேத்யம் ஹோட்டல் மாதிரியே இருக்கே .. ஓனம் விஷ்ஷஸ்..:)

said...

//உங்க உடம்புக்கு என்ன? எந்தெந்த உணவு சாப்பிடலாம், எப்படி ஆரோக்கியமான வாழ்வு வாழலாமுன்னு சொல்ல அங்கேயே மருத்துவர்கள் வர்றாய்ங்களாம். இந்த டிகிரியெல்லாம் என்னன்னே எனக்குத் தெரியலை. அதைப் பத்திக் கொஞ்சம் விசாரிச்சுப் பார்க்கணும்//

மேடம் நான் நுங்கம்பாக்கத்தில் உள்ள சஞ்சீவனம் சென்று இருக்கிறேன்.. காமெடியா இருக்கும். வரிசைப்படி தான் சாப்பிடனும்..மாற்றி எல்லாம் சாப்பிடக்கூடாது. தினமும் எல்லாம் சாப்பிட முடியாது..வாரம் ஒரு முறை சாப்பிடலாம்.. சில வருடங்கள் முன்பு 100 ருபாய் தற்போது எப்படி என்று தெரியவில்லை.

வித்யாசமான அனுபவம்..முயற்சி செய்யலாம்

said...

Happy onam.

ஓணம் சத்யா நல்லா இருந்துச்சு

said...

டீச்சர் அடிபுலியாயிட்டு ஓணத்தின ஆகோசிச்சுல்ல...

ஞனக்கு இன்ன அவதியானு இவிட :)

//யானையைத் தொட்டுப் பார்க்க முடியலை(-://

உங்களையே தொட விடலயா? துளசி தளம் உங்களோடதுன்னு சொன்னீங்களா? சொல்லியிருந்தா அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு யானைகள் மேல் பிரியத்தை.. :)

said...

ഓണ ആസംസകള്‍ !!

said...

ஒருத்தரால சாப்பிடமுடியுமா. ஏகப்பட்ட ஐட்டம் இருக்கே!!
சென்னை நிகழ்ச்சிகளை கவர் செய்ய துளசியை யாரும்
மீற முடியாது.

said...

வாங்க கயலு.

'பத்தியம்' என்ற பெயரில் ஒரு ஹோட்டல் தொடங்கிறலாமான்னு யோசனை:-)))

said...

வாங்க கிரி.

ஊரில் எல்லோரும் நலமா?

நம்ம தோழியின் மகளும் அங்கே போய் சஞ்ஜீவன ஸ்பெஷல்ன்னு ஒரு முறை சாப்பிட்டாங்களாம்.

எடுத்ததும் நாலு கப்களில் ( குட்டியூண்டு சைஸ்) ஏதேதோ ஜூஸ். அப்புறம் என்னென்னவோ...
ஒன்னும் நாக்குக்கு ருசி இல்லேன்னாங்க.

அப்பக் கட்டாயம் அது ஆரோக்கிய உணவுதான் இல்லே!

ஒரு அனுபவத்துக்குப் போய்வரலாம்:-))))(பதிவுக்கும் மேட்டர் தேத்திக்கலாம் என்பது கூடுதல் வரவு)

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ஹேப்பி ஓணம்.

விருந்துன்னாவே நல்லாத்தானே இருக்கு:-)

said...

ஓணம் வாழ்த்துக்கள் :)))

said...

துளசிக்கு,
ஓணம் வாழ்த்துக்கள்.



ஓணம் பண்டிகை கொண்டாடும் அணைவருக்கும் வாழ்த்துக்கள்.

said...

ஓணம் வாழ்த்துக்கள் !!!

said...

ரீச்சர்! இனிய ஓண ஆசம்ஸங்கள்! ஓணம் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

said...

கலர்ஃபுல் கலாட்டாவா இருக்கே :0))

said...

டீச்சர்:

சம்மந்தமில்லாத பின்னூட்டத்திற்கு மன்னிப்புடன் உங்களால் முடிந்தால் இந்த தொடர்பதிவில் கலந்துக்க தாழ்மையுடன் கேட்டுக்கிறேன்.

http://timeforsomelove.blogspot.com/2009/09/blog-post_2112.html

நன்றி,

வருண்

said...

ok good, dont forgot to make sweets and karams for kogulastami, still 9 days are there. and send us photos.

said...

இப்போதைக்கு ஓணம் வாழ்த்துக்கள் ;))

said...

ஓண ஆசம்சகள் டீச்சர்!! நானும் ஓண பதிவு ஒண்ணு தயார் பண்ணி வெச்சிருக்கேன்...

said...

வாங்க நான் ஆதவன்.

யானையைத் தொடமுடியாம வருந்துனது நான் இல்லைப்பா. பார்வையற்ற சில அன்பர்கள் வந்துருந்தாங்க. எனக்கு அவுங்களைப் பார்த்ததும் மனசுக் கஷ்டமாப் போயிருச்சு(-:

அவுங்களுக்கு 'எதையும்' தொட்டுப் பார்த்தால்தானே உணரமுடியும்?

said...

வாங்க மணியன்.

பண்டிகைக்குப் பண்டிகைதான் உங்களைப் பார்க்க முடியுது.

நல்லா இருக்கீங்களா?
உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்

said...

வாங்க வல்லி.
அதெல்லாம் சாப்பிடலாம்.

எல்லாம் ஒவ்வொரு ஸ்பூன்தான்.
அதுலேயே நமக்குப் பிடிக்காத, ஆகாத ஐட்டங்களை விட்டுட்டா (அது ஒரு நாலைஞ்சு) சமாளிச்சுறலாம்:-)))

said...

வாங்க நன்மனம்.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

உங்களுக்கும் இனிய விழாக்கால வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க கோமதி அரசு.

உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க சதங்கா.

ஹேப்பி ஓணம்.

said...

வாங்க இலா.

உங்களுக்கும் இனிய விழாக்கால வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க அதுசரி.

கலாட்டா இல்லாம விழாவா?

ஹாஹா

வருகைக்கு நன்றி.

said...

வாங்க வருண்.

அழைப்புக்கு நன்றி.

நேரம் கொஞ்சம் டைட்தான். ஆனாலும் பார்க்கலாமென்று பார்க்கிறேன்:-)

said...

வாங்க பித்தன்.

சென்னையில் போனமாசமே கிருஷ்னஜெயந்தியைப் பலர் கொண்டாடிட்டாங்க. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தயவில் நாமும் செஞ்சுறலாமுன்னு நினைச்சேன்.

விநாயகச் சதுர்த்திக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்பெஷல் பேக் வாங்குனதில் தெரிஞ்சுக்கிட்டது ....அவ்வளவு நல்லா இல்லை. பேசாம நாமே ஒன்னு ரெண்டு செஞ்சுறலாமுன்னு.

பார்க்கலாம் என்ன செய்யமுடியுங்கறதை:-)

said...

வாங்க கோபி.

எப்போதைக்கும் ஓணம் வாழ்த்து(க்)கள்தான்:-)))))

said...

வாங்க சிந்து.

எழுதிவச்சுட்டா?

சீக்கிரம் போடுங்க.

ஓணம் முடிஞ்சுருச்சு. மாவேலிக்கு வெயிட் பண்ண டைம் இல்லை:-)))

said...

//விநாயகச் சதுர்த்திக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்பெஷல் பேக் வாங்குனதில் தெரிஞ்சுக்கிட்டது ....அவ்வளவு நல்லா இல்லை. பேசாம நாமே ஒன்னு ரெண்டு செஞ்சுறலாமுன்னு.//

பலரும் புரிஞ்சுக்கறதில்லை, உண்மையை உரக்கச் சொன்னதுக்கு நன்றி. என்னைப் பொறுத்த மட்டில் சிறிய அளவிலாவது நம் கையால் செய்வதே சிக்கனம், சாப்பிடும்படியும் இருக்கும், பண்டம் வீணாகாது. மொத்தமாய் இரண்டு மணி நேரம் கூட ஆகாது!