Friday, July 27, 2007

வீடு 'வா வா' ங்குது பகுதி 1

எண்ணி நாலு வார்த்தைகளில் சொன்னால் 'வீடு கட்டிக் குடி போனோம்'! நாலு அதிகமுன்னு தோணுச்சுன்னா இதோ மூணு. 'புதுசா வீடு கட்டினோம்'. இதுவும் அதிகமுன்னா 'வீடு கட்டினோம்'. இதுக்கும் சுருக்கமாச் சொல்லமுடியாது.

கட்டினோம்?

'கட்டிறலாம், இனியும் தள்ளிப் போடக்கூடாது'ன்ற ஞானம் கிடைச்ச 'போதி மரம்' எங்கூர் ஆஸ்பத்திரி. உடல்வருந்த, ரத்தம் சிந்த உக்கார்ந்துக்கிட்டு இந்த யோசனை. மனுசன் எப்ப எதைப் பத்தி நினைக்கிறான் பாருங்க!

ஒவ்வொரு நாட்டிலும் 'கட்டும் முறை' வேறுபடுது. இங்கே நியூஸியில் வீடு கட்டுறது/கட்டியது எப்படின்னு 'கொஞ்சம்'பார்க்கலாம்.

ஆலாபனை போதும். கச்சேரிக்கு வரலாம்

வீடு 'வா வா' ங்குது பகுதி 1
விவாதம் இல்லாம ஒரு வேலையும் செய்யறதில்லை. பின்னே 'எண்ணித் துணிக கருமம்' எதுக்கு இருக்கு?ஆமா.... இப்ப இருக்கற வீட்டுக்கு என்ன குறைச்சல்? ஒண்ணுமில்லே! நல்ல வீடுதான். கடை, கண்ணிகளுக்கு ரொம்பப் பக்கம். கார் வேண்டியதே இல்லை! நடந்தே கடைகளுக்குப் போகலாம். நிறைய கனமான சாமான்கள் வாங்கணுமுன்னா மட்டும் காரை வெளியே எடுக்கலாம். பொழுதுபோக்கா நடக்கணுமா,'விண்டோ ஷாப்பிங் செய்யணுமா, அவசரத்துக்கு ஒரு பாலோ, பூனைக்கு சாப்பாடோ எதுவேணுமுன்னாலும் ஐந்து நிமிஷ நடையில் கடை. அது மட்டுமா, நம்முடைய 'டாக்டர் க்ளினிக்', கப்பு, ஜிக்குக்கு 'வெட்னரி க்ளினிக், நமக்கு உடல் பிடிப்பு, சுளுக்கு வந்தால் போக வேண்டிய இடமான'பிஸியோதெரபி'( இது நம்முடைய பக்கத்து வீடுதான்) எல்லாம் 1 நிமிஷ நடை. இது போதாதென்னு, நம் வீட்டு வாசலிலேயே 'பஸ் ஸ்டாப் இந்த மாதிரி வசதி வேறெங்காவது கிடைக்குமா? அதுமில்லாமல் இப்ப ஒரு ஐந்து வருஷத்துக்கு முன்னேதானே நிறைய செலவழித்து, வீட்டை மேம்படுத்தினோம்?

அப்ப எதுக்கு வேற வீடு?

எதுக்குன்னா, இப்ப இருக்கற வீடு ரொம்ப பழசு.இப்பல்லாம் புதுசாக் கட்டற கட்டடங்களிலே வீட்டின் கதகதப்பு, ஹீட்டரினால் உண்டாக்கப்படும் சூடு, உஷ்ணநிலைகுறையாமலிருக்க 'பிங்க் பெய்ட்' என்னும் சாதனம் உபயோகப்படுது. மேலும் கட்டடங்களில் ஒரு வித பாதுகாப்பு 'wrap' வேற சுத்தறாங்க.இது ஒரு கம்பளிப் போர்வைபோல முழுவீட்டையே மூடுது. இதனாலே வீட்டுக்குள்ளே இருக்கும் உஷ்ண நிலை அதிகம் குறையாமல் குளிர் காலத்திலும் கதகதப்பாகவே இருக்கும். இந்த வசதிகள் எல்லாம் அந்தக்காலத்துலே கண்டே பிடிக்கல்லை. நம் வீடோ ஐம்பது வருடப் பழசு.

அப்ப எதுக்கு இவ்வளொ செலவு பண்ணி மராமத்து செஞ்சோம்?

உன் பிடுங்கல் தாங்காமத்தான்.

ஏன் சொல்ல மாட்டீங்க..... அப்ப பெயிண்ட்க்கு நல்ல ஸேல் வந்துச்சுல்லே:-)
நமக்கும் வயசாகிகிட்டே போகுது. குளிரையெல்லாம் முன்புபோலத் தாங்க முடியல்லே! மேலே மேலே இந்த வீட்டுக்கு செலவழித்தாலும் இதோட மதிப்பு உயராது.பின்னாலே வீட்டை விற்கும்போது, நாம் செலவழித்த பணம் எல்லாம் வீண்தான். முக்கியமாக, வயதானபிறகு நம்மைக் காப்பாற்ற யாரும் இல்லை.('அரசாங்கம்தான் நமக்கு 'ஆம்புளைப்புள்ளை'ன்னு நினைக்கலாமுன்னா இனிமே அதுவும் முடியாதாம். ஓய்வு ஊதியக் காசை நீயே இப்ப சேமிச்சு வச்சுக்கோ அதெல்லாம் இனிமே கிடையாதுன்னு அப்பப்ப தம்கி குடுக்குது இப்ப இருக்கற அரசு.' ) புது வீட்டிற்கு இதே காசைச் செலவழித்தோம் என்றால் அதன் மதிப்பு கூடும். வயதான பிறகு அந்த வீட்டை வித்துட்டு, முதியோர் இல்லத்துக்கு அந்தக் காசைக் கட்டிட்டு அங்கேபோய் சேர்ந்துக்கலாம்.

ஓ...................கதை இப்படிப் போகுதா?

இதெல்லாம் நினைச்சுப் பார்த்துத்தான் புதுவீடு ன்னு முடிவு செஞ்சோம்.
இன்னொன்னு, புதுவீடு என்றால் எந்த ஏரியாவில்? ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடா? அல்லது நம்முடைய சொந்த டிஸைனா? நல்ல நல்ல வீடுகள் உருவாகிவரும் ஏரியான்னா, ஊருக்கு வெளியே போகணும். நம்ம 'வேலை' இருக்கும் இடத்திலிருந்து அதிக தூரம். மேலும் அங்கே போய்ட்டா, வீட்டில் 'கொட்டு கொட்டு' என்று தனியாக நாள் முழுசும் இருக்கணும். இப்ப நம்ம வீட்டுலேயே ஒரு வீடியோ லைப்ரரி நடத்தறமுல்லே அதுக்கு எப்பப்பாத்தாலும்,நேரம் காலம் இல்லாமல் ஆளுங்க வந்துகிட்டே இருப்பாங்க. இதுலே பாருங்க, அவுங்களுக்கெல்லாம் எப்படித்தான் மூக்குலே வேர்க்குமோ,கரெக்டா 'டீ' குடிக்கற நேரம்( சரியாச் சொன்னா சூடோட இருக்கற டீயை, வாய்கிட்டே கொண்டுபோவமே அப்ப) அது இல்லேன்னா, சோறு சாப்பிட உக்கார்ந்து, சரியா குழம்பை ஊத்திப் பிசையற போது வருவாங்க! 'ஐயோ.. சாரிங்க'( வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சதிலேரொம்ப உபயோகமான, அடிக்கடி மனசுலே ஒண்ணும் கலங்காம, உணர்வே இல்லாத குரலில் சொல்ற சொல்லு இதுவாத்தான் இருக்கும்) நானும், சரி, தர்ம காரியங்களுக்குப் போற காசுன்னுட்டு கையை முதுகுக்கு பின்னாலே ஒளிச்சுகிட்டு நிப்பேன்!சரி, வீட்டுக்கு வருவோம்!

நம்ம ஊர் அந்தக் காலத்துலே செய்யறமாதிரி ஒரு ரூம்லே ஆரம்பிச்சு அப்படியே கட்டிட்டு போகமுடியாதுல்லே. நமக்கு ஒரு ஆர்கிடெக்ட் வேணுமே! இதுக்கு முன்னாலேஒருமுறை, பழைய வீட்டுலே ஒரு ரெண்டு ரூம் அதிகப்படியாப் போடலாம்னு ஒரு 'ஆர்கிடெக்சுரல் ட்ரா·ப்ட்ஸ்மேன்' அப்படின்னு ஒரு ஆளைப் போய் பார்த்தோம்.அவர் பேர் எனக்கு நினைவில்லை. ஆளு ஆட்டுத்தாடி வச்சிருந்தார். நாங்க எங்க தேவை என்னென்னன்னு எல்லாம் விளக்கமாச் சொன்னோம்.ஆ.தா. கவனமாக் கேக்கறமாதிரி தலைய ஆட்டினார். சில நாட்களுக்கு பிறகு எங்களை வரச்சொன்னார். போய்ப் பார்த்தா, நான் சொன்ன டிஸைனைப் பத்திக் கொஞ்சம் கூட கவலைப்படாம தனக்குத் தோன்றியபடியே ஒரு டிஸைனைப் போட்டு வச்சிருந்தார். மறுபடி, நாங்க எங்க மனசில இருக்கற டிஸைனைச் சொன்னோம். அப்புறமும் பழய கதைதான்.இந்த மாதிரி மூணு முறையான பிறகு இனி ஆ.தா. வை நம் வேலைகளுக்குக் கூப்பிடக்கூடாதுன்னு ஏக மனதாக ( வாழ்க்கையில் முதல் முறை) முடிவு செய்தோம். ஆ.தா.வுக்குப் போன ஜென்மக் கடன், கட்டியாச்சு.

எனக்கு 'மாடி' வீடுதான் ரொம்ப இஷ்டம். ஆனா அதுக்கு செலவு ரொம்பக் கூடும். 'பட்ஜெட்'க்கு மேலே ஒரு 50% கூடிடுமாம். நம்மகிட்டஇருக்கற 'ஐவேஜ்'க்கு சாதாரண வீடே ஜாஸ்தி. இதுலே மாடி வீட்டுக்கு ஆசைப்பட்டா முடியுமான்னு இவர் சொல்றாரு.எதுக்குன்னுதான் சண்டை போட்டு, மூஞ்சியைத் தூக்கி வசிக்க முடியும்? சரி.தொலையட்டும்னு இருந்துட்டேன். அடுத்த ஜன்மத்தில் கட்டாயம் மாடி வீடுதான்னு இப்பவே முடிவு எடுத்தாச்சு!

இங்கே,வீடு கட்டிக் கொடுக்கும் பல நிறுவனங்கள் இருக்குதான். அவுங்க எல்லாம் 'ஷோ ஹோம்' ன்னு சில வகைகளைக் கட்டிப் பார்வைக்காக வைத்திருக்காங்க.. அநேகமாக எல்லா நாளும் திறந்திருக்கும். எல்லா நிறுவனங்களிலும்' சேவை' ஒரே மாதிரி தான் இருக்கும்.அங்கே வெவ்வேறு அளவுள்ள பலவிதமான வீடுகளின் டிஸைன்கள் அச்சடித்து வைத்திருப்பாங்க.நமக்கு எத்தனை அறைகள், எத்தனை குளியலறைகள், வேறு என்ன தேவை என்று சொன்னால் அதற்கேற்ற மாடல் ட்ராயிங் ஒண்ணுகூடத் தருவாங்க. அதில் அறைகளின் அளவு, வீட்டின் மொத்தப் பரப்பளவு என்று எல்லா விவரங்களும் அடங்கியிருக்கும். அதில் கட்டிடம் கட்ட உபயோகிக்கும் சாமான்கள், அடுப்பங்கரை உபகரணங்கள் அடுப்பு, டிஷ் வாஷர், வேஸ்ட் மாஸ்டர், புகைபோக்கி போன்றவைகளின்( எந்த ப்ராண்ட் என்ற ) முழு விவரமும் இருக்கும்.அதுக்கெல்லாம் சேர்த்து ஒரு விலை போட்டிருப்பாங்க.

ஆனா ஒண்ணு, இந்த மாதிரி வீடுகளில் நாம் ஒன்றை 'செலக்ட்' பண்ணி அச்சு அசலாய் அப்படியெ வாங்கினோம்னா நிஜமாவே விலை மலிவுதான். ஆனா ஒரு சுவத்தைக் கொஞ்சம் தள்ளி வைக்கணும், இல்லேன்னா ஒரு ஜன்னலை இடம் மாத்தணும்னு சொன்னீங்க போச்சு!மேற்கொண்டு நிறைய காசு கொடுக்கணும்.

முக்கியமாகச் சொல்ல வேண்டியது, எல்லாவித 'இன்·பர்மேஷன்'களும் இலவசம். இதுபோல பல இடங்களில் இருந்து விவரங்களைச் சேகரித்துக் கொண்டு, நாமே 'மிக்ஸ் & மேட்ச்' செய்து டிஸைனும் செய்யலாம். சில மாதங்கள் எல்லா வார இறுதிகளிலும் இதே வேலையாகஅலைந்து எல்லா விவரங்களும் சேகரித்தோம். அந்த வீட்டு 'ஸிட்டிங் ரூம் நல்லாயிருக்கு, ஆனா 'கிச்சன் ரொம்ப சின்னது. ஒரு 'பெட் ரூம்' பரவாயில்லை, மத்த ரெண்டும் ரொம்பவே சின்னது. பூஜைக்கு ஏத்தமாதிரி இடம் இல்லையே! வீட்டுக்குள்ள வந்தவுடனே செருப்பு விட ஒரு இடம் வேணாமா? இப்படியெல்லாம் யோசித்துகிட்டேஏஏஏஏஏஏஏஏஏ இருந்தோம்!

தொடரும்...............

18 comments:

Anonymous said...

புது வீட்டுகள்ல இன்சுலேஷன் ரொம்ப நல்லா இருக்கும். எங்க வீடும் ஷோ ஹோமா போட்டிருந்தாங்க பில்டர்ஸ். 5 வருஷத்துக்கு முன்னாடி வாங்கினோம். சும்மா சொல்லக்கூடாது. நேத்து 8 டிகிரி குளிருக்கு ஹீட்டர் தேவையிருக்கல. ஆனாலும் ஹீட் பம்ப் போடலாமான்னு ரங்கமணி யோசிக்கறார். 5 வயசு கூடிருச்சில்ல இப்ப நமக்கு.
2 லெவல் வீடுன்னா ஹீட்டிங் கொஞ்சம் செலவாகும்னு சொல்றாங்க. நம்மளது ஒரே லெவல் தான்

Anonymous said...

உங்க வீடு முன்னால கன்செர்வேடரியோட ரொம்ப நல்லாருக்கு.

said...

ஆஹா, அருமையான ஆரம்பம். சீக்கிரமே எதிர்பார்க்கிறோம் அடுத்த பகுதியை..

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

'ஷோ ஹோம்' எப்பவுமே நல்லாத்தான் இருக்கும். அதுதானே தூண்டில்:-)))

எங்களுக்கு என்னமோ பயங்கரமா வருதுபோல இருக்கு. நாலு நாளா
15, 17ன்னு நல்லாத்தான் இருக்கு. அதுவும் இந்த சீஸன்லே!!

ஹீட் பம்ப் நல்லா இருக்குங்க. ரங்கமணி பேச்சை ( இப்பவாவது) கேளுங்க:-))))

படத்துலே கன்சர்வேட்டரியோட இருக்கறது நம்ம பழைய வீடு. பதினேழரை வருசம்
அங்கெ இருந்தோம். இப்பக்கூட ரொம்ப மிஸ் பண்ணறேன் அதை(-:

மேம்பாட்டுலே ஒண்ணுதான் இந்த கன்சர்வேட்டரி:-)

said...

வாங்க இளா.

அருமையான ஆ.....'ரம்பம்'னு சொல்லலைன்னு நம்பறேன்:-))))

said...

ரீச்சர், ச்சீ, டீச்சர், (சரி வேணும் அப்படின்னு நினைக்கிறதை எல்லாம் செஞ்சு சாதிக்கறீங்களே, ரீச்சர் அப்படின்னே இருக்கட்டும்!)

இது ஒரு டைமிங் பதிவு போல!! ஸூப்பர்!! :)

said...

வாங்க கொத்ஸ்.

காணொமுன்னு வல்லியம்மா கவலைப்படறதைப் பார்த்தீங்களா?

ஆமாம். உ.கு. இல்லாமப் பேச எப்பத்தான் படிக்கப் போறீங்களோ? :-))))

said...

கையை முதுகுக்கு பின்னாலே ஒளிச்சுகிட்டு நிப்பேன்!
நாங்க வந்தாக்கூடவா?
காலையில் திறந்த போது சின்ன அம்மினி பின்னூட்டத்துடன் நின்று போய்விட்டது.
வந்த கோபத்தில் வேறு CPU வை தூக்கிவைத்து இதை எழுதுகிறேன்.
குளிர் உள்ள வீடுகளில் என்னென்ன செய்வார்கள் என்று தெரிந்துகொள்ள முடிந்தது.

said...

வாங்க குமார்.

இந்தப் பதிவைப் போடும்போது உங்களைத்தான் நினைச்சேன். கட்டுமானத்துறை
ஆளா உங்களுக்கு இந்தப் பதிவுலே விவாதிக்க நிறைய விஷயங்கள் இருக்குமோன்னு!

//கையை முதுகுக்கு பின்னாலே ஒளிச்சுகிட்டு நிப்பேன்!
நாங்க வந்தாக்கூடவா?//


நீங்க படம்(?) வாங்க வந்தீங்கன்னா உங்களுக்கும்தான்.

ஆனா விருந்தினராத்தான் வருவீங்கன்னு பக்ஷி சொல்லுது:-)))

said...

நல்லா ஆரம்பம்...ஆரம்பம்தான் நல்லா கவனிங்க..

காலையில் இருந்தே சின்ன அம்மினி பின்னூட்டத்துக்கு மேல காண்பிக்க மாட்டேங்குது உங்க பதிவு..
சரின்னு வெறுமே உங்க ப்ளாக் பேர் மட்டும் அடிச்சு அங்க 9 கமெண்டை கிளிக்செய்து இப்ப பின்னூட்டம் போட்டேன்.

said...

வாங்க முத்துலெட்சுமி.

வீடு பதிவுக்கு 'வாஸ்து' சரியில்லை போல இருக்கு. சரியாக் காமிக்காமத்
தகராறு செய்யுது:-)

வாசப்படியை வேற இடத்துக்கு மாத்திறலாமா?

said...

கொஞ்சம் லேட்தான்.. இல்ல இல்ல ரொம்பவே லேட்தான்.. பழைய பதிவுகளை யாருமே படிக்காதபோது நான் மட்டும் படிக்கிறதில் ஒரு தனி ருசி. :-D

//எண்ணி நாலு வார்த்தைகளில் சொன்னால் 'வீடு கட்டிக் குடி போனோம்'! நாலு அதிகமுன்னு தோணுச்சுன்னா இதோ மூணு. 'புதுசா வீடு கட்டினோம்'. இதுவும் அதிகமுன்னா 'வீடு கட்டினோம்'. இதுக்கும் சுருக்கமாச் சொல்லமுடியாது.
//

ஆரம்பமே அசத்தலா இருக்கு. இந்த தொடரை படிச்சு முடிக்கும்போது எனக்கும் வீடு கட்டுற ஆசை வருமா டீச்சர்??

said...

//அடுத்த ஜன்மத்தில் கட்டாயம் மாடி வீடுதான்னு இப்பவே முடிவு எடுத்தாச்சு!//

advance congraulations. ;-)

said...

வாங்க மை ஃப்ரெண்ட்.

ஆறுதலாப் படிக்கலாம். வீடு என்ன ஓடியாப் போயிரும்?:-)
அடுத்த ஜென்ம வீட்டுக்கு உங்களுக்குத்தான் முதல் கிரகப்பிரவேச அழைப்பு. என்ன...? உங்க மெயில் ஐடியை மறக்காம
'அங்கே' சேவ் செஞ்சு வச்சுக்கணும்.

படிச்சு முடிச்சதும், 'விட்டேனா பார்' ன்னு வீடு கட்டக் கிளம்பிருவீங்க:-))))

said...

இன்னிலேந்து ஒவ்வொன்னா படிக்கறதுன்னு முடிவு செஞ்சிருக்கேன். பாக்கலாம்.

முதல் பகுதி அறிமுகப் பகுதி. நல்லாக் கொண்டு போறிங்க. அருமையான பின்னூட்டங்கள். ம்ம்ம்ம்ம்ம் - பொறாமையா இருக்கு .. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ( இது கீதாவோட ஒரு பின்னூட்டத்திலேந்து காப்பி)

ஆமா பூனை நாய் எல்லாம் வளக்கிறீங்களா என்ன ? கப்பு, ஜிக்கு ????

said...

வாங்க சீனா.

பூனை & பூனைதான் நம்ம கப்பு & ஜிக்கு.

ஜிக்குவின் முழுப் பெயர் கோபால கிருஷ்ணன்,

ஜிகேன்னு சுருக்கிக்கூப்பிட்டு, இப்போ ரொம்பச் செல்லமா ஜிக்கு ஆகி இருக்கு:-))))

கப்பு இப்ப இல்லை.(-:

சாமிகிட்டெ போயிருச்சு.

said...

முதல் பகுதி அறிமுகப் பகுதி. நல்லாக் கொண்டு போறிங்க. அருமையான பின்னூட்டங்கள். ம்ம்ம்ம்ம்ம் - பொறாமையா இருக்கு .. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ( இது கீதாவோட ஒரு பின்னூட்டத்திலேந்து காப்பி)

வலைச்சர அறிமுகத்தின் போது சீனா அவர்கள் எனக்கு ஒரு என்றும் நினைவில் இருக்கக்கூடிய பின்னோட்டம் வேர்ட்ப்ர்ஸ் ல் தந்து இருந்தார்.

அதற்குப் பிறகு இது போன்ற அவரின் விமர்சனத்தை பலவற்றையும் பார்த்த வகையில் இங்கு உங்களுக்குத் தான் கொடுத்துள்ளார்.

said...

வீடு கட்டுவது என்பது கனவாக இருக்கும் போது ஒன்றுமே பிரச்சனை இல்லை.

ஆனால் நீங்கள் ரசிக்கக்கூடிய நடையில் எழுதி உள்ள விசயங்களை என்னால் ரசிக்க முடியவில்லை.

காரணம் காயங்கள்.

நிறைய பேச வேண்டும் போல் உள்ளது. இது சரியான இடம் இல்லை.