Wednesday, June 14, 2006

ஆ.............விரல்!!! 1.கறுப்புப் பனி.

பின்குறிப்பாக எழுதப்பட்ட ஒரு முன்குறிப்பு உங்களுக்காக. நேரம் சரியில்லாத ( அதாவது உங்களுக்கு)காரணத்தினால்இதுவரை ஒளிந்து கொண்டிருந்தது வெளியில் வந்தேவிட்டது.

பி.கு: இந்த எழுத்து நடை, நீங்கள் இதற்குமுன் படித்த பதிவுகளில் இருந்து மாறுபட்டிருக்கிறது. அப்போதுதான் எதாவது எழுதலாமேஎன்று நினைத்து, சுயப்பரிசோதனையை ஆரம்பித்த நேரம். 'மரத்தடி'கூடப் பரிச்சயமில்லாத காலக்கட்டம். எப்படி,எந்த நடை என்று புரியாமல் வெவ்வேறு நடைகளில் நடந்து பார்த்ததில் இதுவும் ஒன்று. ( போடு ப்ளேடை!!)

----------


இது நடந்தது மூன்று வருடம்முன்பு, இதே போல ஒரு குளிர்காலப் பனி நாள்! முழு சம்பவத்தையும் சொன்னால்தான் இதன் தீவிரம்(!) புரியும்!2003 வருடம். நானும் என் நண்பரான ஒரு மலேசிய நாட்டைச் சேர்ந்த பெண்மணியும் சேர்ந்து இங்கேநம் ஊரான 'கிறைஸ்ட்சர்ச்'சில் பெண்களுக்குத் தேவைப்படுமோ(!) என்று ஒரு இந்திய ஆடை அணிகலன்,கலைப் பொருட்கள் விற்கும் கடையை ஆரம்பித்தோம். இதன் திறப்பு விழாவை சிறப்பாகவும் செய்தோம்.இங்குள்ள இந்திய, தமிழ், குஜராத்தி சங்கங்களின் அப்போதையத் தலைவர்களையும், நமது 'ஸிடி கெளன்சில்' எத்னிக்' குழுவின் தலைவரையும் அழைத்திருந்தோம். இந்தியப் பண்பாட்டின்படி குத்துவிளக்கு ஏற்றி கடவுள் வழிபாட்டுடன் திறப்புவிழா நல்லமுறையில் நடந்தது. கடையின் பெயர் 'கோலம்'.


இங்கே இது போன்ற கடை இது ஒன்றுதான் என்பதால் எங்களுக்குப் போட்டியாளர்களே இல்லை.நாங்களும், ஒரு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே கடையைத் திறப்போம். வியாழனும் வெள்ளியும் பிற்பகல் ஒன்று முதல் மாலை ஆறு மணிவரையும், சனி, ஞாயிறுகளில் காலை பத்து முதல் மாலை நான்குவரையும்தான் எங்களது கடை நேரம்.


குளிர்காலம் நடந்துகொண்டிருந்தது. என் கணவர் கோபால் இங்கே ஒரு தொழிற்சாலையில் வர்த்தகப்பிரிவில், மேலாளராக இருக்கிறார். அவருக்கு எப்போதும் அயல் நாட்டுப் பயணங்கள் இருக்கும்.ஜூலை மாதம் பனிரெண்டாம் தேதி, சனிக்கிழமையன்று காலை நான் வழக்கம்போல கண்விழித்தேன்! முதல் நாள் இரவு பனிமழை அதிகமாக இருந்தது. காலையில் பார்த்தபோது ஊரெங்கும்வெள்ளைப் போர்வை போர்த்தியிருந்தது. ஜப்பானுக்குப் போயிருந்த கோபால் அன்று காலை 'ஆக்லாந்து'நகரில் வந்திறங்கி, அன்று பிற்பகல் நம் ஊருக்கு வருகிறார். என் மகள், அப்பா வரும்போது வீட்டில் இருப்பதாகச் சொல்லியிருந்ததால் நான் சமையலை முடித்துவிட்டு கடை திறக்கச் சென்றேன்.


சூரியனும் எட்டிப் பார்க்கப் பனி உருக ஆரம்பித்தது. ஆனால் குளிர் காற்றும் கடுமையாக வீசிக்கொண்டிருந்தது. சாலைகளில் கார்களில் பயணிக்கும்போது இதுபோன்ற நேரங்கள் கொஞ்சம் ஆபத்தானவைதான். பனி உருகி வர ஆரம்பித்தவுடன் வீசும் குளிர்காற்று பனியை மீண்டும் 'ஐஸ்'ஸாகி உறையச் செய்துவிடும்!


நானும் கவனமாகவே காரைச் செலுத்திக்கொண்டிருந்தேன். வரிசையாக பத்துக் கடைகள் இருந்த ஒரு இடத்தில்தான் எங்கள் கடை இருந்தது. கடைகளுக்குப் பின்புறம் அவரவர் கடையின் பின்கதவருகில் அவரவருக்கு கார் நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டிருக்கும். வழக்கமான இடத்தில் நான் காரை நிறுத்தினேன்.எஞ்சினை அணைத்துவிட்டு 'ஹேண்ட் ப்ரேக்' போட்டுவிட்டு காலை 'ப்ரேக்'கிலிருந்து எடுத்தேன்.

இன்னும் வரும்.

32 comments:

said...

நிஜமாவே உங்க தற்போதைய பாணியிலிருந்து ரொம்ப மாறுபட்டிருக்கிறது.. இப்படி சஸ்பென்ஸ்ல விடறீங்களே!!

நியூசில எல்லா விதமான கடையும் பாத்திருக்கீங்க போல

said...

எப்ப வரும்??

said...

ரொம்ப முன்னவே எழுதின பதிவு போல இருக்கு. இல்லைன்னா முதல் வரி 'இது நடந்தது சமீபத்தில் மூன்று வருடம்முன்பு,' என்றல்லவா வந்திருக்கும்.

//எஞ்சினை அணைத்துவிட்டு 'ஹேண்ட் ப்ரேக்' போட்டுவிட்டு காலை 'ப்ரேக்'கிலிருந்து எடுத்தேன்.//

கையால் ப்ரேக்கைப் போட்டுவிட்டு காலால் ப்ரேக்கை எடுத்தீர்களா? ஆனாலும் ரொம்ப ஃபிட்டா இருந்தீங்களா? (டமாஸு. சிரிக்கணும்.)

முதல் வரி , கடைசி வரி ரெண்டுத்தையும் பத்தி சொல்லியாச்சு. பதிவு முழுதும் படித்ததற்கான ஆதாரம் இது. ஓக்கேவா? :)

said...

வாம்மா பொன்ஸ்.

அக்கா ஒண்ணையும் விட்டு வைக்கலை.

ச்சும்மா இருக்கற ஜென்மமா இது?:-)

said...

SK,

ஏங்க பயந்துட்டீங்களா இன்னும் வருமுன்னதும்?

நாளைக்கே போட்டாப் போச்சு.

said...

கொத்ஸ்,

அப்படியா? நீங்க சொன்னாச் சரி:-)

said...

//கையால் ப்ரேக்கைப் போட்டுவிட்டு காலால் ப்ரேக்கை எடுத்தீர்களா? ஆனாலும் ரொம்ப ஃபிட்டா இருந்தீங்களா? (டமாஸு. சிரிக்கணும்.) //

:-))))))

மிஸ், பதிவ தவிர கமெண்ட்ஸ்ஸயும் கவனிச்சாச்சு ஒ.கே வா.:-)

said...

அட! சரியான நேரத்தில்தான்(எனது நேரம்தான்) ஆரம்பித்து உள்ளீர்கள். என்னையும் இங்கே ஒரு தோழி துணிக்கடை ஆரம்பிக்க ஆசை காட்டிக் கொண்டுள்ளாள். ஏதற்கும் உங்களது இந்த தொடரை முழுக்க படித்துவிட்டு அவளுக்கு முடிவு சொல்கிறேன்.

said...

//எஞ்சினை அணைத்துவிட்டு//

சுடவில்லையா...???

//காலை 'ப்ரேக்'கிலிருந்து எடுத்தேன்//

மாலை???

-:)))))))))))))

said...

அடுத்த பகுதி எப்போ வரும்...??

said...

முன்னுரை,பின்னுரை,பதவுரை,பொழிப்புரை..எல்லா உரைகளும் சேர்த்து மொத்தம் 38 ஏ [A அல்ல] வரிகள்.
அய்யகோ......

said...

பொன்ஸ் யானை நடையும்....உங்க யானை ஆட்டமும் த்தூள் கிளப்புகின்றன

said...

நன்மனம்,

எல்லாம் ஒண்ணு விடாமப் படிச்சாச்சா? அப்பன்னா சரி. உக்காந்துக்கலாம்.:-)))

said...

கஸ்தூரிப்பெண்,

அங்கே சிட்னின்னா கூட்டம் இருக்கே. ஆரம்பிச்சா நல்லாதான் போகும்.

said...

மனசு,

வாங்க.

என்ன பதிலுக்கு பதில் ப்ளேடா?:-))))

said...

செந்தழல் ரவி.

நாளைக்குப் போடறேன். எல்லாம் ரெடியாத்தான் இருக்கு:-)))

நீங்க பயந்துக்கிட்டு கேக்கலைதானே?:-))))

said...

சிஜி,

எல்லாம் ச்சின்னச்சின்னப் பதிவுகள்.
சிறகடிக்கும் பதிவுகள்.

இங்கே யானைங்களுடைய அட்டகாசம் கூடிப்போச்சுல்லே?:-))))

said...

துளசி,மாறுதலா இருக்கு. நல்லாவும் இருக்கு.ஏதோ திரில்லர் ரேஞ்சுக்குப் போகிறதே. யானைகளின் அட்டகாசமா!!குட்டி யானை வந்தாக்கூட நல்லா இருக்கும்.

said...

வாங்க வல்லி.

த்ரில்லர்ன்னு சொல்ல முடியாது. ஆனா கொஞ்சம்,'திடுக்' இருக்கு.

said...

மாறுபட்ட நடையில் துளசி டீச்சர் மிரட்டும் ஆ...விரல்!!!.

இன்றே படிக்கத் தவறாதீர்கள் ஆ...விரல்!!!

உங்கள் பதிவுக்கு இன்றே முந்துங்கள்.

ஈஸ்ட்மென் கலரில் வண்ணப்படங்கள் நிறைந்த ஆ...விரல்!!!

நீயூசிலாந்தின் எழில் கொஞ்சும் காட்சிகள் நிறைந்த ஆ...விரல்!!!

ஆ...விரல்! ஆ...விரல்! ஆ...விரல்!

டொட்டடொய்ங்........

said...

ஹம்....

ஹம்....

ஹம்....

ஆங் அப்புறம்....

என்னங்க துளசி, கதையை பாதியில் நிறுத்து வீட்டீர்கள். Continuity மிஸ் ஆகுதுல...

ஹோ... சஸ்பென்ஸா அப்ப சரி,...

said...

எஞ்சினை அணைத்துவிட்டு 'ஹேண்ட் ப்ரேக்' போட்டுவிட்டு காலை 'ப்ரேக்'கிலிருந்து எடுத்தேன்.//

இது ரொம்ப அநியாயங்க.. துளியூண்டு போட்டுட்டு இனி வரும்னா என்ன அர்த்தம்..? சரியேயில்லை:(

ஏமாற்றத்துடன்

said...

துளசி நீங்க பேசாமா தமிழ்நாடுக்கே வந்திருங்க, அந்த கடையை வச்சு பணம் அள்ளரத விட இங்க TV மெகா தொடர் script எழுதி கலக்கலாம் போல இருக்கு! சின்ன மேட்டரான காரு எடுத்துகிட்டு கடைவரைக்கும் போனதேயே ஒரு FULL EPISODE ஆக்கியிருக்கீங்களே...

//*னை அணைத்துவிட்டு 'ஹேண்ட் ப்ரேக்' போட்டுவிட்டு காலை 'ப்ரேக்'கிலிருந்து எடுத்தேன்.*//

என்னமா Episode One முடிச்சு இருக்கீங்க!! தூள் தூள்!!! ஒரு மெகா தொடர் effect இருக்கு, எப்படா நாளைக்கு Episode Two வருமுன்னு டென்ஷனா இருக்கு...

//*இதே போல ஒரு குளிர்காலப் பனி நாள்!*//

ஏங்க சென்னையில இருக்கரவங்க வயித்தெரிச்சல கொட்டிக்க்ரீங்க...

said...

ராகவன்,

எல்லாரும் இப்படி வற்புறுத்துனா நான் கட்டாயம் டிவி சீரியல் எடுத்துருவேன் போல இருக்கே:-)
நீங்கதான் விளம்பர இலாகா.

said...

நாகை சிவா,

சஸ்பென்ஸ் ன்னு பெரிய வார்த்தையெல்லாம் போடாதீங்க :-)

said...

என்னங்க டிபிஆர்ஜோ,

இது ரொம்ப 'மினி' சீரியல்ங்க. ஒரு பக்க மினித்தொடர்:-)
அதான் நான் பதிவுகள் எல்லாம் நீளமாப் பெருசா எழுதறேன். படிக்கிறவங்களுக்கு அலுப்பு ஏற்பட
வாய்ப்பு இருக்குன்னு ஒருத்தர் விமரிசனம் செஞ்சுருக்கார் பார்த்தீங்களா?

said...

We the people,

//இருக்கு, எப்படா நாளைக்கு Episode Two வருமுன்னு டென்ஷனா இருக்கு... //

ஏங்க அங்கே அடிக்கிற வெய்யிலுக்கு இப்படியெல்லாம் டென்ஷன் ஆனா எப்படிங்க?
கொஞ்சம் இங்கே வந்து 'ஜில்'ன்னு நில்லுங்க.

அப்படியே கார் ஸ்டார்ட் ஆவுறதை ஜூம்( விஜயகாந்த் சொல்றமாதிரி படிங்க)பண்ணிக்
காமிக்கணும். கார் போகுது ஒரு 13 கிலோ மீட்டர். அது போதாதுங்களா, ஒரு எபிஸோடுக்கு?:-)
அப்புறம்தான் ப்ரேக் வருது கை, காலுன்னு.சரியா வரும்போல இருக்கேங்க. ஏங்க இப்படி
ஆசையைக் கிளறிவிடுறீங்க?:-))))

said...

நன்றி சிவஞானம்ஜி.. யானையைப் பாராட்டினதுக்கு...

said...

ஹூம், இந்த நடையும் நல்லத்தெ..ன் இருக்கு. ராஜேஷ் குமார் ரேன்ச்க்கு... லெட் மி கெஸ்... நீங்க ஹாண்ட் பிரேக் போட்டுட்டு கால எடுத்தீங்க இருந்தும் கார் பின்னாலே நகர்ந்து போயி இன்னொரு காரு மேலே முட்டிகிச்சு... இதெ எப்படி கீது.... சஸ்பென்சு அவுட்டு :-)))

said...

தெ.கா,

//ராஜேஷ் குமார் ரேன்ச்க்கு//

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத்தெரியலையா?:-))))

'உசுப்பிவிட்டே உடம்பு ரணமாயிருது'ன்னு இங்கே ஒரு புதுமொழி உலாத்துது, தெரியுங்களா?

said...

Whe[n]re is part II???????????

said...

SK,
போட்டாச்சு.