Thursday, June 29, 2006

லவ்வர்ஸ்

மாதவனும் ஜோதிகாவும் இருக்காங்கன்னு டைட்டில் பார்த்தப்பவே அட, நாம பார்க்காத படமாச்சேன்னு நினைச்சேன்.


கம்ப்யூட்டர் காலத்துலே 'அறம் செய்ய விரும்பு'ன்னு சொல்லித் தர்ற மாதவனின் அப்பா(வாம்)


வேக்குவம் க்ளீனர் விக்கற சேல்ஸ் மேன் வேலை மாதவனுக்கு. ஒரு வீட்டுலேவாடகைக்குக் குடி போறார். வீட்டு உரிமையாளர் செளகார் ஜானகி.
அவுங்களுக்கு கம்ப்யூட்டர் ஹோம்வொர்க் செஞ்சு கொடுக்கறது ஜோதிகா. பீட்ஸாபார்லர்லே பார்ட் டைம் வேலை. கம்ப்யூட்டர் படிச்சுட்டு அமெரிக்கா போகக் காத்திருக்கற பொண்ணு.


பணக்கார அப்பாவான நாஸர், அவர் பொண்ணு ஷோபனா, பேரன் ஒரு குட்டிப் பையன்.நாஸரோட மருமகன் கே.எஸ். ரவிகுமார்( டைரக்டர் ரவிகுமார்தான்) டிவோர்ஸ் கேஸ் நடந்துக்கிட்டு இருக்கு ஷோபனாவுக்கும் ரவிக்கும்.


செளகார் வீட்டுலே அவுங்க வயசுப் பாட்டிங்க பட்டாளம்.
சினிமா மேலே இருக்கற ஆசையாலே குறும்படம் எடுத்துக்கிட்டு, பூனா பிலிம் இன்ஸ்ட்டிட்யூட்லே டீச்சரா இருந்த ஒருத்தர். செஸ் பிரியர். மாதவனும் செஸ்லே கில்லாடி(யாம்)


இப்படி வித்தியாசமான கூட்டத்தைப் பார்த்தவுடன் நல்ல படம் மாட்டியிருக்குன்னு ஏகப்பட்ட குஷி.


முதல் பாதிவரை பலே பேஷ் பேஷ்......அதுக்கப்புறம் ஒரே சொதப்பல். மாதவன், மும்பை தாதாவாம்! அங்கே ஒரு பொண்ணைக்கல்யாணவீட்டுலே பார்த்துட்டு ஒரே லவ்வாம். அந்தப் பொண்ணு ரொம்ப சுமார். அதெயெல்லாம் நாம கண்டுக்கக்கூடாது, இல்லே?

ஜோதிகா அப்பாவுக்குச் சின்ன வீடு இருந்துருக்காம். அந்த 'வீட்டையே' விக்கறாங்களாம்.குழந்தையைக் கடத்தறது, ஹார்ட் அட்டாக் இப்படி இன்னும் சில சில்லரை சமாச்சாரம் வேற.

மின்னலே படத்துலே வர்றதுபோல நாயகி மழையிலே கார்லே இருந்து இறங்கி ஆடுது.

மாதவனோட ப்ளாஷ்பேக் சொல்றதுக்கு மும்பையிலே இருந்து வர்ற சங்காதி......

தலைவாசல் விஜய்- போலீஸ் இன்ஸ்பெக்டர்( சொந்தமா யூனிபாரம் தச்சு வச்சுக்கிட்டார் போல)

நல்ல நடிகர்களை வச்சுக்கிட்டு படத்தை எப்படி வேஸ்ட் செய்யணுமுன்னு சொல்லித்தந்திருக்காங்க.

பேசாம முதல் பாதியை மட்டும் பார்த்துட்டு, நம்மளே ஒரு கதையை மனசுலே முடிச்சு வச்சுருக்கலாம்.

ரொம்பப் பழைய படமோன்னு நினைச்சா.......

சென்னையிலே வந்த சுநாமி..... இப்படி ஒரு வசனம்.

காதல் படத்துலே வந்த மெக்கானிக்..... இப்படி ஒரு வசனம்

படம் வந்த(???) காலக்கட்டத்தை இப்படிச் சரித்திரப்பூர்வம் ஆராயணுமா?


ஹூம்.... விதி யாரை விட்டது?

34 comments:

said...

//மின்னலே படத்துலே வர்றதுபோல நாயகி மழையிலே கார்லே இருந்து இறங்கி ஆடுது.//

துளசியக்கா,

லேட்ட்ஸ்ட் படம்னு ஞாபகப் 'படுத்த' மழை படத்தின் சீனை வைத்திருக்கிறார்கள். நீங்கள் மின்னலே படக் காட்சி என்று 'தாக்கி' விட்டீர்கள்.
//பேசாம முதல் பாதியை மட்டும் பார்த்துட்டு//
எல்லோரும் 'ஜோ'வுக்கு 'ஓ' போட்டுட்டு ஓடி வந்துடுங்க என்று சொல்கிறீர்கள் :)

said...

இப்படி ஒரு படமாக்கா? எப்போ வந்துதோ.. மாதவன் - ஜோதிகா என்னோட பேவரிட் காம்பினேஷன்.. ஆனா அவங்களை வச்சி இப்படி ஒரு படம் வந்ததே தெரியலை..

said...

அப்படி 'ஜோ'வுக்கும் ஓட்டுப்போட முடியாது.

என்னமோ தூக்கத்துலே இருந்து எந்திருச்சு வந்தமாதிரி தலையும் முகமும். ஹூம்.....

said...

பொன்ஸ்,

வேற என்ன படம் வந்துருக்கு இந்த காம்பினேஷன்லே?

எல்லாம் இப்ப வந்த படமாத்தான் இருக்கணும்.

பார்க்க: வசனங்கள்:-))))

said...

கேள்வியே படல... நியுசிலாந்தில் மட்டும் ரீலீஸா?

உங்க ஊர் இந்திய தூதர் (டோக்ரா?)இடத்த காலி பண்ணமாடேங்கிறாராமே?
வீட்டுக்கு கூப்பிட்டு இட்லி தோசை கொடுத்திருந்தீங்களோ?

said...

வாங்க மனசு.

இங்கே எங்கூர்லே எனக்கு மட்டும் ரிலீஸ் ஆகி இருக்குங்க:-))))

இவரைப் பத்தி இங்கே சொல்லியிருக்கு.

இட்டிலித் தோசையாலேயே விரட்டிறலாமா?

said...

Hi akka your writings are superb. I dont know to use tamil fonts so i am writing in english. I have read your posts in marathadi. From yesterday i am continously reading your previous post in your blog. It is really interesting.

said...

வாங்க மீனாப்ரியா.

தமிழ்த் தட்டச்சுதானே வரலை? தமிழ் படிக்க வருதுல்லே. அது போதும்( இப்போதைக்கு!)

(ஆஹா..... இப்படியும் ஒரு ரசிகை.)

நீங்க வந்தது சந்தோஷமா இருக்கு.

said...

மாதவனோட ப்ளாஷ்பேக் சொல்றதுக்கு மும்பையிலே இருந்து வர்ற சங்காதி......//

பாத்தீங்களா அது ஆடற ஸ்டைல பார்த்து ஒங்களுக்குக் கூட எழுத்து குளறுது.. சங்கதி, சங்காதியானத சொல்றேன்..

அப்போ இளவட்டங்களுக்கு எப்படி இருக்கும்:)

said...

'வயசுப் பசங்க', 'கும்மாளம்', இப்போ லேட்டஸ்டா வந்த 'மது' வரைக்கும் ஆர்டிஸ்ட், டைரக்டர்னு எந்த பாரபட்சமும் இல்லாம எல்லா படமும் பாத்துகிட்டு இருக்கேன்... இந்த படத்த எப்படி விட்டேன்?! :(

ம்.. முடிஞ்சா CD எடுத்து பாக்கணும்!

said...

எப்டீங்க இதெல்லாம் உங்க கண்ணில படுது....எங்களுக்கே தெரியாது இந்த மாதிரி படம் வந்தது..........
மீனாப்ரியா டோண்ட் வொர்ரி
முதல்லே நானும் தங்கிலீஷ்லதான் எழுதினேன்..ட்டீச்சர் புண்ணியம் இப்ப தமிழ்ல எழுதரேன்
ஆமா ட்டீச்சர் ஆர் தெரியுமோ?

said...

வாங்க டிபிஆர்ஜோ.

அதுவா சங்கதி?

ஆனா......இது 'சங்காதி'தாங்க. தோழன். என்னமோ வார்த்தை
மலையாளத்துலே வந்து விழுந்துருச்சு.

said...

அருள்குமார்,

'சிங்காரச்சென்னை' பார்த்தீங்களா?

said...

சிஜி,

அதுவாத்தாங்க கண்ணுலே வந்து விழுது.

உங்களை ட்டீச்சரின் கொ.ப.செ.வாப் போடலாமான்னு ஒரு யோசனை இருக்கு. பார்க்கலாம்:-)))

said...

//'சிங்காரச்சென்னை' பார்த்தீங்களா?//


ஆஹா... நீங்க எனக்கும் ஒரு படி மேலே இருப்பீங்க போலிருக்கே!

said...

அருள் குமார்,
அதையேன் கேக்கறீங்க. நமக்கு வர்ற படங்கள் பல இந்தியாவில் ரிலீஸ் ஆகியே இருக்காது.
எனக்குன்னே எடுத்த படங்களோன்னு நினைப்பேன். இப்ப நீங்க துணைக்கு இருக்கறது கொஞ்சம்
தைரியமா இருக்கு. ( தனிமனுஷி(ஷ)ன்னா பயமா இருக்காதா?)

said...

....இந்தியாவில் ரிலீஸெ ஆயிருக்காது...//

இதிலென்ன ஆச்சரியம்? இந்தியாவில் இன்னமும் எடுக்காத படங்களைக்கூட
எங்க ட்டீச்சர் பார்த்திருக்காங்க{10 much

said...

சிஜி,
//இந்தியாவில் இன்னமும் எடுக்காத படங்களைக்கூட //

ரொம்பச் சரி.
வெளிநாட்டுலே எடுத்ததைத்தானே சொல்றிங்க?

நிறையவே பார்த்திருக்கேன்:-)

said...

ஜோ படமா.......... அப்ப மிஸ் பண்ண கூடாதே..........
நம்ம கண்ணுல எப்படி படாம போச்சு.........

said...

துளசி, மாதவன் ஜோ படம் டும் டும் டும் வந்ததே.நல்லாதானே இருந்தது! உங்க விமரிசனமே படம் பார்த்த மாதிரி ஆச்சு.
சந்திரமுகி பண்ண கையோட ஜோ இதை செய்திருக்கும்.அதுதான் ஒரே தூக்கம்.:-))

said...

நாகை சிவா,

என் கண்ணுலே எப்படிப் பட்டுச்சு?

வர்றது வழியிலே நிக்காது:-)

said...

மானு,

ஆமாம். இந்த டும்டும்டும் மறந்தே போச்சு.

//சந்திரமுகி பண்ண கையோட...//

:-))))))))))))))0

said...

அக்கா, உண்மையிலேயே இப்படி ஒரு படம் வந்ததா? மாதவனோட இணைய தளத்திலயும் (http://www.rmadhavan.com/movies.htm) இது பத்தி தகவல் இல்லையே. இதுக்கு யார் இயக்குனர் இசையமைப்பாளர் தகவல் தருவீங்களா? please.

said...

துளசியக்கா,

அட்லீஸ்ட் அருவா இல்லாத படமா?
ஒரே ரத்த வாசம் சமீபத்திய தமிழ் ஹீரோயிஸப் படங்களில்.

அன்புடன்,

ஹரிஹரன்

said...

வாங்க சிவராமன்.

என்னங்க இந்தமாதிரி இக்கட்டான கேள்வியெல்லாம் கேக்குறீங்க?

ஒருவேளை மாதவன்'மறந்து போகணுமுன்னே' இந்தமாதிரிப் படம்
பண்ணாரோ?

உங்களுக்காக ஒருதடவை டைட்டிலைக் கவனிச்சேன்.

ஆஹா.... எங்கியோ பார்த்திருக்கேனே இந்த முகங்களைன்னு நினைச்ச ரெண்டு பேர்
பற்றியும் தெரிஞ்சது.
அந்த குறும்படம் எடுக்கறவர்,பூனா பிலிம் இன்ஸ்டிட்யூட் - பிரதாப் போத்தன்
அந்த மும்பை 'அழகி' - தியா மிர்ஸா

சரி, இப்ப நீங்க கேட்டது.
ம்யூசிக் 3 பேர். ரஞ்சித் பரோட் ( Ranjit Barod), ஹாரீஸ் ஜெயராஜ் ( 1 பாட்டாம்) & மதுசூதன்
இயக்கம்- சிவா.
தயாரிப்பாளர்- திரு.வீரபாண்டியன்

said...

ஹரிஹரன்,

அருவா இல்லை.சும்மா டிஷ்யூம் டிஷ்யூம் தான்.
சொல்ல மறந்துட்டேனே.... ஸ்டண்ட் விக்ரம் தர்மா.

said...

ஒருவேளை கடனை அடைக்கமுடியாமல் ரிலீசாகாத படமோ ?

said...

டாப் 10 விமர்சன ஸ்டைலில்
'லவ்வர்ஸ் - பாதிக்கு மேல் பீதி.'

said...

துளசி
நீங்களா இப்படி படம் தேடி எடுக்கறீங்களா இல்ல அங்க இந்த மாதிரி படம்தான் கிடைக்குதா? எப்படியோ ஒருத்தராவது பார்த்த திருப்தி.

said...

மணியன்,

//.....கடனை அடைக்கமுடியாமல்.... //

ஒருவேளை இப்படியும் இருக்குமோ?

said...

ரமணி,

பின் பாதி சரி. அதுக்கு ரைமா முன்பாதி என்னவா இருக்கும்?:-))))

said...

வாங்க பத்மா.
நலமா? என்ன ரொம்ப நாளா ஆளைக் காணலை?

//நீங்களா இப்படி படம் தேடி எடுக்கறீங்களா...//

ஏது, நானே இந்தப் 'படம் எடுத்தேன்'னு சொல்லிருவீங்கபோல இருக்கே(-:


//எப்படியோ ஒருத்தராவது ...//

அதுதான் இல்லை. நம்ம வீட்டுலே ரெண்டு பேர் பார்த்தோம்( நானும் ஜிகேவும்)

நன்மனம் வேற இந்தப் படத்தைப் பார்த்துருக்கார்.

ஹை!!! எப்படியோ இன்னொருத்தரும் பார்த்துட்டாரே:-))))))

said...

என்னுடைய விமர்சனம் இங்கே மேடம்,

http://vinaiooki.blogspot.com/2011/07/blog-post.html

said...

வாங்க வினையூக்கி.

ஆஹா...... இந்தப் படம் பார்த்த அஞ்சாவது தைரியசாலி நீங்கதான்:-))))))