Thursday, June 15, 2006

எல்லாம் காலம்!


கடுமையான குளிர்காலம்.

ஒரு வீட்டில் தாயும், மகளும் உரையாடுகின்றனர்.

ஏம்மா வெளியே போறயா?

ஆமாம்மா.

ரொம்பக் குளுரா இருக்கே?


பரவாயில்லைம்மா.

அதுக்கேத்த மாதிரி கம்பளி உடுப்புப் போட்டுக்கிட்டுப் போம்மா.

சரிம்மா. இதைப் போட்டுக்கறென்.குளிர் தெரியவே தெரியாது.

மொட்டையா இருக்கு பாரு, காது கழுத்தெல்லாம். கொஞ்சம் நகை போட்டுக்கோ.

சரிம்மா, இப்பப் பாருங்க. இதெல்லாம் போட்டுக்கறென். போதுமா?

மறக்காமச் சின்னதையும் கொண்டு போ.

அதெப்படிம்மா மறக்க முடியும். என்னோட உயிராச்சே அது.


அதுக்கும் கொஞ்சம் நகையெல்லாம் போடும்மா. எத்தனை டிசைன் அதுக்குன்னே வந்திருக்கு பார்த்தியா?


சரிம்மா. இன்னிக்கே வாங்கி போட்டுவிடறேன்


கூடவே பனிக்குல்லாயும் போட்டுவிடு. குளிருலே நடுங்கப்போகுது.


கட்டாயம் வாங்கிப் போடறென்மா. என் ஜீவனாச்சே.இதில்லாமல் ஒரு நிமிஷம்கூடஎன்னாலே உயிரோடு இருக்க முடியாது. என் செல்லம். உனக்காகவே என்னென்ன கண்டுபிடிச்சிருக்காங்க பார்த்தியா? இப்பவே வாங்கிறலாம், வா.
---------

19 comments:

said...

இது என்னபா? இப்படிக் கூடவா மனுஷங்க இருக்காங்க?
அதிசயமா இருக்கே.

said...

ஆமாம் இந்த செல் பைக்களுக்கு எல்லாம் செல் பை டேட் உண்டா?

:)

said...

மானு வாங்க.

எல்லாம் கிடந்து ஆடுதுங்கப்பா.

said...

கொத்ஸ்,

இன்னும் ஒரே மாசத்துலெ எண்ட் ஆஃப் த சீஸன்னுட்டு ஸ்ப்ரிங்கை வரவேற்கத் தயாராயிருவோமுல்லே:-)

said...

மாக்ஸ்ன்னா மொபைல் ஸ்வெட்டரா?

சரி குளிருக்கு ஸ்வெட்டர் மாதிரி கோடைக்கு மெல்லிசா சீ த்ரூ ட்ரெஸ் இருக்கா?

said...

என்னங்க டிபிஆர்ஜோ,

ஸீ த்ரூவா? :-))))

வந்தாலும் வரும். கோடை காலம் வரட்டும். என்னன்னு பார்த்துச் சொல்றேன்.

said...

எப்படித் தான் உங்களுக்கு இப்படிப் பட்ட விஷ்யங்களுக்கெல்லாம் பதிவு போட முடியுதோ..:)
செல்லுக்குப் பை, தோடு, ஜிமிக்கி எல்லாம் தினப்படி பார்க்கிறது தான்.. ஆனா, இது மாதிரி தோண மாட்டேங்குது பாருங்க.. துளசி அக்கா.. சூப்பர் :)

said...

பொன்ஸ்,

//எப்படித் தான் உங்களுக்கு இப்படிப் பட்ட விஷ்யங்களுக்கெல்லாம் பதிவு போட முடியுதோ..:)//

இதுலே 'உள்குத்து' எதுவுமில்லைன்னு
நம்பறேன்:-)))

said...

இது தெரிந்த செய்தி தான்.
ஆனா விலை ரொம்பவே அதிகமாக இருக்கே........
இந்தியாவில் செம மலிவான விலையில் வாங்கலாம்.

said...

துளசிக்கு பார பட்சமே கிடையாது. தனக்கு போட்டுக்குற அளவு கைதொலைபேசிக்கும் எத்தனை சிரத்தையா தேடுறாங்க பாருங்க!!

said...

சிவா,

இங்கே எல்லாம் கொள்ளைதான்:-)
இப்பத்தானே புதுசா வந்துருக்கு.
போகப்போக ச்சீப்படும்:-)

said...

தாணு,

இந்த மாதிரி ஒண்ணு வந்துச்சுன்னா போதும்.
ஸ்கூல் பசங்க முக்கியமாப் பொண் குழந்தைகள் வீட்டுலே வம்பு பிடிச்சு வாங்கிரும். இல்லேன்னா எப்படி.peer pressure கூடுதல்ங்க.

said...

//பொன்ஸ்,

எப்படித் தான் உங்களுக்கு இப்படிப் பட்ட விஷ்யங்களுக்கெல்லாம் பதிவு போட முடியுதோ..

இதுலே 'உள்குத்து' எதுவுமில்லைன்னு
நம்பறேன்:-)))///

பொன்ஸ் இப்பெல்லாம் ரொம்ப தேறிட்டாங்க... ஜாக்கிரதை வ.வா சங்க ஆளுங்க கிட்ட...

said...

//பொன்ஸ் இப்பெல்லாம் ரொம்ப தேறிட்டாங்க... ஜாக்கிரதை வ.வா சங்க ஆளுங்க கிட்ட... //
மனசு, என்ன சொல்றீங்க?!! எனக்கு ஒண்ணுமே புரியலை :)

[பி.பி.கு(பின்னூட்டத்திற்கு பின் குறிப்பு): எல்லாப் பதிவிலும் போய் என்னை நாரதர்(தி?) ஆக்க முயற்சி செய்யறீங்க.. இதெல்லாம் சரியில்லை.. சொல்லிட்டேன் :)]

said...

மனசு & பொன்ஸ்,

நீங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்கப்பா:-)))

said...

என்னது இப்பிடியா நடக்குது !

என்ன காலம் இது.
நல்ல காலமா ?
கலி காலமா ?

:)

said...

வாங்க பச்சோந்தியாரே.
நலமா?

கலி ரொம்பவே 'முத்தி'ப்போச்சாம்.

பசங்களுக்குன்னு என்னென்ன 'கண்டுபிடிப்பு' வருது பார்த்தீங்களா?

இவுங்களொட மெயின் டார்கெட் இந்த டீனுங்கதான்.

said...

விட்டா போனை சாமி ஆக்கி கும்பிட ஆரம்பிச்சுடுவாங்க போல:-))

Technology is God.How true?

said...

$செல்வன்,

ஹை, இது நல்ல ஐடியா. பேசாமா செல்ஃபோன் சாமியாரா(ரிணி?)யா ஆயிரலாம்.
சாமியோடு டைரக்ட் கனெக்ஷன் இருக்குப்பா.

இப்பத்தான் ஒரு படத்துலே 'பல்பு சாமியார்' பார்த்தேன்:-)