Saturday, June 24, 2006

எவ்ரிடே மனிதர்கள் - 6

எவ்ரிடே மனிதர்கள் 6

Betty- பூனைப் பாட்டி

----------------
" ஹல்லோ டார்லிங். ஹவ் ஆர் யூ ? யூ ஆர் ஸோஓஓஓஓஓஓஓஓஓ ப்யூட்டிஃபுல். ஆர்ன்'ட் யூ?"


ஏதோ முணுப்புச் சத்தம் கேட்டு ஜன்னல்வழியாக எட்டிப் பார்த்தால், ஒரு வெள்ளைக்காரப் பெண்மணிநம்ம வீட்டு, கேட்டுப் பக்கம் குனிஞ்சு நின்னுக்கிட்டு இருக்காங்க. யார் கிட்டே பேசறாங்கன்னு புரியலை.ஜன்னலை இன்னும் நல்லாத் திறந்து எக்கிப் பார்த்தால்.........

அவுங்க முன்னே நின்னுக்கிட்டு, வாலை செங்குத்தாக் கொடி உயர்த்திக்கிட்டு நிக்குது நம்ம வீட்டுப் பூனை!

ஆஹா.... நம்ம பூனைதான் மத்த ஆட்களைக் கண்டாவே ஓடிருமே. இதென்ன அதிசயம்? வாசக் கதவைத்
திறந்து வெளியே போனேன். 'ஹாய் ஹாய் ' குசலவிசாரிப்பு எல்லாம் முடிஞ்சது. இங்கே பக்கத்துலேதான்
இருக்காங்களாம். கடைக்குப் போறவழியில் நம்ம வீட்டுப் பூனை, நம்ம 'ட்ரைவ் வேயில்' உக்கார்ந்திருந்ததைப்
பார்த்தாங்களாம்.


இப்படி ஆன பரிச்சயம்தான். பெட்டி வீட்டுக்கும், ஷாப்பிங் செண்ட்டருக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.சரியாப் பாதி வழியிலே நம்ம வீடு இருக்கு. நம்மைக் கடந்துதான் போகணும் வரணும்.

பூனைன்னா அசாத்தியப் பிரியமாம். அதனாலே போற வழியிலே எங்கெல்லாம் பூனையைப் பாக்கறாங்களோ,அங்கெல்லாம் ஒரு ஸ்டாப் போட்டுக்கிட்டே போய் வருவாங்களாம். அட.. இது நல்ல ஐடியாவா இருக்கே!


நல்ல ஒல்லியான உருவம். உயரம் ரொம்ப இல்லேன்னாலும், ஒல்லியா இருக்கறதாலேயே கொஞ்சம் கூடுதல்
உயரமாத் தெரியுது. வயசு 72. பெயர் எலிஸபெத். இந்தப் பேரோட சுருக்கம்தான்,'பெட்டி'. ஹூம், என்ன பேர்
இருந்தென்ன? இவுங்களுக்கு எங்க வீட்டுலே வச்ச பேரு 'பூனைப் பாட்டி'.

இளவயசுலே அழகா இருந்திருப்பாங்க.பல்லெல்லாம் வரிசையா ஒண்ணுபோல பளிச்சுன்னு அழகா இருக்கும்.'
பூனைப் பாட்டி, இங்கே அரசாங்கக் குடியிருப்புலே இருக்காங்க. வசதி ரொம்ப இல்லை. எப்பவும் நடந்துதான்'கடைகண்ணிக்குப் போவாங்க. அதுவும் ஒரு நாளைக்கு ஆறேழு தடவை. இந்த நடையே அவுங்களை ரொம்பஃபிட்டா வச்சுருக்கு.வீட்டுக்காரர், அவ்வளவாக உடம்பு சரியில்லாதவராம். வெளியே போகவே அவருக்கு அவ்வளவாப் பிடிக்காதாம்.இத்தனைக்கும் அவருக்கு வயசு 61 தான்.'


தினமும் பலமுறை நம்ம வீட்டுவழியாப் போனாலும். வாரம் ஒரு நாள் மட்டுமே வீட்டுக்குள்ளே வந்து உக்காந்து பேசிட்டுப் போவாங்க. மத்த நாட்களிலே, நான் வாசல் பக்கம் இருந்தா ஒரு அஞ்சு நிமிசம் அங்கேயே நின்னு பேசறதோட சரி.


ஒவ்வொரு வியாழக்கிழமையும் பதினொரு மணிக்கு வருவாங்க. நாங்க உக்கார்ந்து பேச ஆரம்பிச்சவுடனே நம்ம பூனை, (எங்கிருந்துதான் பார்க்குமோ) ஓடிவந்து சபையிலே உக்கார்ந்துக்கும். நான் ஒருக்கா எங்கியோ இந்த பூனைகளைப் பத்திய விவரம் படிச்சது இப்ப ஞாபகம் வருது பாருங்க. பூனைங்க யாரைப் பார்த்து பயமில்லாமல் சிநேக உணர்வைக் காமிக்குதோ, அவுங்களை நாம நம்பலாமாம். நல்லவங்களாத்தான் இருப்பாங்களாம். பூனை ஜோஸியம்?


ஒரு டீ மட்டும் போட்டுக் கொடுப்பேன். கிட்டத்தட்ட மதியம் ஒருமணிவரை இருப்பாங்க. சிலநாள் சமையல் முடிஞ்சிருக்காது. சப்பாத்தி செய்யறதா இருந்தா, அடுக்களையிலே ஒரு நாற்காலியை அவுங்களுக்குப் போட்டுருவேன்.பேசிக்கிட்டே வேலை நடக்கும். சப்பாத்தி சுட்டு எடுக்கறதை ஒரு அதிசயமாப் பாப்பாங்க. ஒரு நாள் சாப்புட்டுப் பார்க்கறீங்களான்னு கேட்டதுக்கு சரின்னாங்க. சப்பாத்தியை மெல்லும் போது,பற்கள் முழுசா அசையற மாதிரி எனக்குத் தோணுச்சு. பழக்கம் இல்லாததாலே பல்லிலே ஒட்டிக்கிட்டதை நாக்கைச் சுழட்டிச் சுழட்டி எடுக்க முயற்சி செஞ்சப்பத்தான் தெரிஞ்சது அந்த 'அழகான பல்வரிசை'களின் ரகசியம்!


இதுவரை, இப்படி இந்திய உணவு எதையுமே சாப்புட்டது இல்லையாம். இது அப்புறம், இட்டிலி, தோசைன்னு கொஞ்சம் விரிவடைஞ்சிருச்சு. சாப்பாடு மட்டுமில்லே, எந்த இந்தியர் வீட்டுக்கும் போனதெ இல்லையாம். அப்ப, இங்கே அவ்வளவா நம்ம ஆட்கள் வராத காலம். நம்ம வீட்டுலெ இருக்கற ஒவ்வொரு பொருளும், முக்கியமா சமையல் பாத்திரங்கள் அவுங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சாம். புட்டுக்குழாய், இட்டிலித்தட்டுன்னு அதிசயங்கள் ஏராளம்.


சிலநாள், எங்க இவர் சீக்கிரமாப் பகல் சாப்பாட்டுக்கு வந்துருவார். அவரோட அவசரம் அவருக்கு. ரெண்டு வார்த்தை அவுங்களோட ஒரு மரியாதைக்குப் பேசிட்டு, நாலுவாய் அள்ளிப் போட்டுக்கிட்டுப் போயிருவார். கையாலே எடுத்துப் பரபரன்னு சாப்புடறதைப் பார்த்தும் அதிசயப்பட்டுப் போவாங்க. 'உன் கணவர் ரொம்ப ஹேண்ட்சம். கவனமா இரு.யாராவது தட்டி எடுத்துக்கப் போறாங்க'ன்னு சொல்றப்ப எனக்குச் சிரிப்பா வரும்.


இந்திய திருமண முறைகள், கூட்டுக் குடும்பம் இப்படி எதாவது விவரம் கேட்டுக்கிட்டே இருப்பாங்க. சிலநாட்களிலே முகம் கொஞ்சம் சோகமா இருக்கும். எதிர்வீட்டுப் பெண்மணி, இவுங்களை ரொம்பக் கேவலமாப் பேசுனாங்கன்னு சொல்வாங்க. பூனைப்பாட்டியின் வீட்டுக்காரர் ரே. அவர் பாட்டியைவிட இளைய வயசுன்றதாலே பாட்டியோட காசுக்காக மட்டும் கூடவே இருக்கார்னு சொன்னாங்களாம். அந்தக் குடியிருப்பில் அநேகமா எல்லாருமே அரசாங்க உதவியில் இருக்கறவங்கதான். இங்கே முந்தி இருந்த ஒரு பிரதமர், கணவன் மனைவியில் யாருக்கு 60 வயசானலும் ஓய்வுஎடுத்துக்கலாம். அப்ப ரெண்டு பேருக்கும் அரசாங்கம் ஓய்வு ஊதியம் கொடுக்குமுன்னு ஒரு சட்டம் கொண்டுவந்தார்.அதும்படி, இங்கே ஒரு கார்பெட் செய்யற கம்பெனியிலே வேலை செஞ்சுக்கிட்டு இருந்த பெட்டியும், ரேவும் ரிட்டயர்ஆகிட்டாங்க. ரே விரும்பி இருந்தா வேலை செஞ்சிருக்கலாம். ஆனா அவருக்கு உடல்நிலை அவ்வளவா சரியில்லை.


பாட்டிக்கும் இப்ப வயசாயிட்டதாலே, ரே தான் வீட்டுவேலைகள் முடிஞ்சவரை செய்வார். கடைகண்ணிக்குப் போய்வர்ற வேலையைப் பாட்டி எடுத்துக்கிட்டாங்க. சில நாள் பாட்டி வரும்போதே டென்ஷனா வருவாங்க. நான் ஒண்ணும் கேக்கலைன்னாலும் அவுங்களா ஆரம்பிப்பாங்க. 'இன்னிக்கு வெல்ஃபேர் ஆஃபீஸுக்குப் போய் வந்தேன். எதாவது வசதிகளுக்கு உதவி கேட்டா, 'யூ ஆர் ஆல்ரெடி அபவ் த லிமிட்'ன்னு சொல்றாங்க. எது லிமிட்டுன்னே சொல்லமாட்டேங்கறாங்க.இதுமட்டுமில்லை, எப்பப் போனாலும் பார்ட்னர் விவரம் எல்லாம் கேக்கறாங்க. ரே என்ன எனக்குப் பார்ட்னரா? அவர் என்னோட ஹஸ்பெண்ட். இப்பப் புதுசா இந்த 'பார்ட்னர்'னு ஒரு சொல்லை வச்சுக்கிட்டு இருக்காங்க. எனக்கு அது ரொம்பக் கேவலமா இருக்கு.'


"அது என்னவோ இப்ப இந்த லிவிங் டுகெதர் பழக்கம் கூடிப்போச்சுன்னு இப்படி மாத்திட்டாங்க அரசாங்கத்துலே. ஆமாம்.உங்க கல்யாணம் நடந்து எத்தனை வருசமாச்சு?"


"24 வருசம்"

நான் ஒண்ணும் சொல்லாம இருந்தேன். 'என்னை மனநிலை சரியில்லாதவ' ன்னு ஹோம்லே சேர்த்துட்டாங்கன்னு ஆரம்பிச்சதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு. ஏன்? எப்படி? யார் சேர்த்துட்டாங்க?


எனக்கு 10 வயசா இருந்தப்பவே, என்னோட அப்பா இறந்துட்டார். அதுக்கப்புறம் அம்மா இன்னொரு கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. எனக்கு அந்த ஆளைப் பிடிக்கலேன்னு சொல்ல முடியாது. ஆனா, என்னன்னு தெரியலை. என்னை ஒரு ஹோம்லே கொண்டு போய் விட்டுட்டாங்க என்னோட அம்மா. அதுக்கப்புறம் என்னைப் பார்க்க யாருமே வரலை.


நான் அங்கேயே இருந்தேன். எனக்கு 30 வயசான பிறகும்கூட அங்கேதான் இருந்தேன். அப்ப ஒருதடவை அஸ்ஸெஸ் செய்யறவங்க வந்து பேசி, உனக்கு மனநிலை எல்லாம் சரியாத்தான் இருக்கு. எப்படி நீ இங்கெ வந்தேன்னே தெரியலை.நீ வெளியே போய் இருக்கறதா இருந்தா இருக்கலாம்னு சொன்னாங்க. நான் எங்கே போறதுன்னு தெரியாம அங்கேயேவேலை செஞ்சுக்கிட்டு சில வருசங்கள் இருந்தேன். அப்புறம் ஒரு இடத்துலே அவுங்களே வேலைக்குச் சேர்த்து விட்டாங்க.


நான்பாட்டுக்கு வேலை செஞ்சுக்கிட்டு ஒரு சின்ன வீட்டுலே இருந்தேன். அப்புறம் வேலை இந்த ஊர்லே கிடைச்சதுன்னுஇங்கே வந்தேன். இங்கேதான் ரேவை சந்திச்சேன். அவரும் நானும் ஒரே இடத்துலே வேலை செஞ்சோம். ரொம்பவருசம் கழிச்சுத்தான் கல்யாணம் செஞ்சுக்கலாமுன்னு தோணுச்சு.

ரேவோட அக்கா ஒருத்தர் இருக்காங்க. அவுங்களோடத்தான் தங்கி இருந்தார். பெருசான்னு சொல்ல முடியாது. பக்கத்துலே ஒரு சர்ச்சுலே சட்டப்படி கல்யாணம் ஆச்சு.


'சரி. கவலைப்படாதீங்க. இப்ப சந்தோஷமா இருக்கீங்கல்லே. அதுதான் முக்கியமு'ன்னு சொன்னேன். கொஞ்ச நேரம் ஏதும் பேசாம ச்சும்மா உக்கார்ந்துக்கிட்டு இருந்தவங்க திடீர்னு,' நீ டான்ஸ் க்குப் போயிருக்கையா?'ன்னு கேட்டது,முதல்லெ எனக்கு விளங்கலை.


'இளவயசுலே நடக்குற ஒருவித வேடிக்கை விநோத அனுபவங்களும் இல்லாமயே என் இளவயசு போயிருச்சு.'


எல்லோருக்கும் இப்படி எதாவது ஒரு சோகம் அடிமனசுலே பதிஞ்சிருக்கோ? ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் இப்படித்தான் 'சட்'ன்னு வெளியே வருமோ?


கிறிஸ்மஸ் வரப்போகுதுன்னாலே பாட்டிக்கு இன்னொரு விதமான கவலை. நவம்பர் தொடக்கத்துலேயே ஆரம்பிச்சிரும்.பண்டிகை கொண்டாட நாத்தனார் வீட்டுக்குப் போகணும். அது ஒண்ணுன்னா, இன்னொண்ணு நாத்தனார் வீடு இருக்கறது வெலிங்டன்லே. பாட்டிக்குப் பறக்க பயம். வெறும் 35 நிமிஷ ஃப்ளைட்தான். கண்ணை மூடிக்கிட்டுத்தான் எப்பவும் ப்ளேன்லே உக்கார்ந்திருப்பேன்னு சொல்வாங்க. வருசாவருசம் இதே கவலைதான். ஆனா இந்தக் கவலைக்கெல்லாம்ஒரு முடிவு வந்துச்சு.


சில்வியா ( நாத்தனார்) வீட்டுக்கே போயிரலாம்னு ரே சொல்லிக்கிட்டு இருந்தாராம். பாட்டிக்குக் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.தள்ளிப் போட்டுக்கிட்டே வந்திருக்காங்க. கடைசியில் கணவர் விருப்பத்துக்கு சரின்னு சொல்லிட்டாங்க.


போயிட்டுவரேன்னு சொல்லிட்டுப் போகவந்த அன்னிக்கு, நம்ம பூனையைத் தடவிக்கிட்டே ஒரே அழுகை. இந்த வயசுலே நாத்தனார்கிட்டே பயப்படணுமுன்னா? அதுவும் இங்கே, இந்த நாட்டிலே?


எனக்கும்தான் வருத்தமா இருந்துச்சு. ஒண்ணா ரெண்டா பதிநாலு வருசப் பழக்கமாச்சே.
------------

அடுத்தவாரம்: நாயினம்மா

25 comments:

said...

யாருக்கென்றும் அழுத உள்ளம் தெய்வம் ஆகலாம்

said...

//பூனைங்க யாரைப் பார்த்து பயமில்லாமல் சிநேக உணர்வைக் காமிக்குதோ, அவுங்களை நாம நம்பலாமாம். நல்லவங்களாத்தான் இருப்பாங்களாம். பூனை ஜோஸியம்?//
பூனை யாரைப் பார்த்து பயமில்லாம இருக்கோ, அவங்களைப் பூனை நம்புதுன்னு இல்லை நான் நினைச்சிகிட்டு இருந்தேன் ?!! :)

//எல்லோருக்கும் இப்படி எதாவது ஒரு சோகம் அடிமனசுலே பதிஞ்சிருக்கோ? //
அதென்னவோ உண்மைதான்.. ஏதாவது ஒரு நிறைவேறாத ஆசை எல்லாருக்கும் இருக்கத் தான் செய்யுது..

அந்த நாட்ல இருந்துகிட்டு ப்ளைட்ல போகுறதுக்கு பயந்துகிட்டு, பூனையை நேசிச்சிகிட்டு.. இந்த பூனை பாட்டி ரொம்ப வித்தியாசமான மென்மையானவங்களா இருப்பாங்க போலிருக்கு.. அட அதனால தானே அக்காவோட எவ்ரிடே மனுஷி ஆயிருக்காங்க!! .

said...

//அந்த 'அழகான பல்வரிசை'களின் ரகசியம்!//

72 வயசு, அழகான பல் வரிசைனு சொன்னப்பவே யுகிச்சேன், கன்பர்ம் பண்ணிட்டீங்க.

நல்ல மனிதர்.

said...

சிஜி,

இன்னிக்கு 'கண்ணதாசன்' நினைவுநாள்.

அதான் பாட்டு பலமா வருதோ?

said...

பொன்ஸ்,

இங்கே நிறையப்பேருக்கு ஃப்ளைட்லே போக பயம் இருக்கு.

எதோ ஒரு ஃபோபியா?

நல்ல பாட்டிதான்.

said...

நன்மனம்,

'முத்துப்பல்' என்னுடைய ஆசையும்தான்.

நம்ம டெண்டிஸ்ட்கிட்டே கேட்டேன்,
இப்படி பல் வச்சுக்கவான்னு. சிரிக்கறார். இன்னும் நிறைய வருஷம் காத்துருக்கணுமாம்(-:

said...

பூனைப்பாட்டி?
நல்லா இருக்கு.
ஒரு சின்ன வேண்டுகோள்! உங்க வலை எழுத்து கருப்பு வெள்ளை ஊன்றி படிக்கும் போது என் கண்ணை ஏதோ செய்கிறது.இது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை.கலர் பின்புலம் இருந்தால் நன்றாக இருக்கும்.

said...

குமார்,

வாங்க. நீங்கதான் முதல்முறையா இப்படிச் சொல்லி இருக்கீங்க. ஆமா வெள்ளையில் கறுப்பு எழுத்துதானே உங்களுக்குத் தெரியுது? இல்லே வெள்ளெழுத்தா?

என்னன்னு கொஞ்சம் ஆராயணும், இல்லையா?

said...

//பூனைங்க யாரைப் பார்த்து பயமில்லாமல் சிநேக உணர்வைக் காமிக்குதோ, அவுங்களை நாம நம்பலாமாம். நல்லவங்களாத்தான் இருப்பாங்களாம். பூனை ஜோஸியம்?//

அப்ப யானை?!?!?!

//இந்த வயசுலே நாத்தனார்கிட்டே பயப்படணுமுன்னா? அதுவும் இங்கே, இந்த நாட்டிலே?//


குழந்தைக்கு தாமதமாவதால் இரண்டாம் மணம் செய்ய வற்புறுத்தும் தாயோடு சண்டையிடும் என் நைஜீரியா colleague!!!

எல்லா ஊர்களிலும் மனிதர்கள் ஒன்று தானோ?

நல்ல எழுத்து நடை.

said...

//பூனைங்க யாரைப் பார்த்து பயமில்லாமல் சிநேக உணர்வைக் காமிக்குதோ, அவுங்களை நாம நம்பலாமாம். நல்லவங்களாத்தான் இருப்பாங்களாம்//

என்னங்க இப்படி சொல்லறீங்க. இப்போ சமீபத்திலதான் எலியை வச்சு பாருங்க. அது சரியா சொல்லிச்சுன்னா பார்ட்டி நம்பிக்கையான பார்ட்டிதான்னு சொல்லிக் குடுத்தாங்க. இப்போ நீங்க பூனையை வச்சு நம்பச் சொல்லறீங்க. ஒரே கன்பியூஷனா இருக்கே.....

said...

மனசு,

தேசங்கள் தோறும் பாஷைகள் மட்டுமே வேறு.

மனுஷர் உலகம் பூராவும் ஒண்ணு.

said...

கொத்ஸ்,

இப்படி கன்ஃப்யூஸ் பண்ணிக்கக்கூடாது.

எலிக்குட்டி -கணினி( நிழல்)க்கு
பூனைக்குட்டி- நிஜம்( மனிதருக்கு)

இதுலே மனசு வேற யானை? ன்னு கேட்டுருக்கார்.

வீட்டுவீட்டுக்கு யானை வளர்க்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் சொல்லணும்:-)))

said...

அம்மா
அசத்திட்டீங்க :) , பூனைப்பாட்டி உண்மையிலேயே மனதைத்தொட்ட பாட்டிதான் :) எனக்கும் அப்படி ஒரு வலைத்தோழி இருந்தார், வில்லி ஜாய்ஸ் அப்படின்னு , அமெரிக்காவில், அவரின் வயது 43, அவர் கணவர் வயது 29, இருவரும் வலையுலகில் அரட்டையில் சந்தித்து வாழ்வில் இணைந்தவர்கள்,அவர் கானா நாடு, அவங்க அமெரிக்கா, நன்றி அம்மா :)
ஸ்ரீஷிவ்...:)

said...

வாங்க சிவா.

//வலையுலகில் அரட்டையில் சந்தித்து வாழ்வில் இணைந்தவர்கள்,//

நல்லா இருக்கட்டும். வலையாலெ ஏற்படும் நன்மைகள்னு சொன்னா அதுலே இதுவும் ஒண்ணு:-)

said...

'உன் கணவர் ரொம்ப ஹேண்ட்சம். கவனமா இரு.யாராவது தட்டி எடுத்துக்கப் போறாங்க'ன்னு சொல்றப்ப எனக்குச் சிரிப்பா வரும்.//

ஆஹா.. சந்தடி சாக்குல..

ஆமா. இப்ப பார்த்தப்பக்கூட அப்படித்தான் இருக்கார்.. வீட்டை எதுர்த்துக்குட்டு காதல் வந்ததுக்கு அதுவும் ஒரு காரணந்தானே:)

said...

இதுல ஏதோ உள்குத்து இருக்கற மாதிரி தெரியுதே!
இப்பத்தான் ஒருத்தர் யானையைக் கொண்டு வந்திருக்காரு!
நீங்க வேற யானையை வெச்சுக்கிட்டு இருக்கீங்க!
:))

மத்தபடி, எங்க ஊரிலயே ஃப்ளைட்டுல போகாத ஆளுங்க நெறயப் பேரு இருக்காங்க!

அது சரி, இப்ப எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!
அவங்க நாத்தனார் வீட்டுக்குப் போறோமேன்னு அழுதாங்களா, இல்லை,....
உங்க இட்லி, தோசை, சப்பாத்தியையெல்லாம் விட்டுட்டுப் போறோமேண்ணு அழுதாங்கள?

said...

டிபிஆர்ஜோ,

இதுவும் ஒரு காரணம்தான் ரெண்டு பக்கத்துலேயும்:-))

அப்ப ரொம்ப ஒல்லி ரெண்டுபேரும். இப்பத்தான் குண்டடிச்சு கிடக்கோம்:-)

நம்பலைன்னா சொல்லுங்க . ஒரு படம் போட்டுறலாம்.

said...

என்னங்க SK,

// இட்லி, தோசை, சப்பாத்தியையெல்லாம் ...//

இந்த ஆங்கிளில் யோசிக்கலையே(-:

ஒரு வேளை இருந்தாலும் இருக்கும்:-)

said...

ஹரிஹரன்,

//Valaippathivu ulagin Mahaaraani //

இது கொஞ்சம்' டென் மச்' ஆயிருச்சேங்க. ஆனாலும் கேக்க நல்லாத்தான் இருக்கு.
'உண்மையான மகாராணிகள்' வந்து விளாசும் வரை நைஸா இதை வச்சுக்கறேன்:-)

எல்லாம் இந்த இணையம் தந்த கொடைதான். இல்லேன்னா எங்கேயோ அத்வானத்துலே
இருந்திருபேன்.

அதுலேயும் இந்த 'தமிழ்மணம்' எல்லாரையும் சீக்கிரம் ஒரு வட்டத்துக்குள்ளே
கொண்டுவந்துருச்சு.

Circle of friends:-)))

said...

//எதோ ஒரு ஃபோபியா?//
பிளேனோ போபியாவா இருக்கும்

//இப்படி பல் வச்சுக்கவான்னு. சிரிக்கறார். இன்னும் நிறைய வருஷம் காத்துருக்கணுமாம்(-: //
இது எல்லாம் மேட்டரே இல்ல, வாய்க்கு ஒரு தடவை வெத்தலை பாக்கு போட வச்சா, உங்க ஆசையை நிறைவேத்தி விடலாம். :)

said...

சிவா,

இந்த வெத்தலை பாக்கு என்ன ரகம்?

'குமட்டுலே குத்துனா வெத்தலைபாக்கு போட்டுக்குவே' ஒரு டயலாக் இருக்கே அதுவா?

இல்லே, சாதாரண வெத்தலையும் பாக்குமா?

ஒருதடவை(1989லே) சிங்கப்பூர் கோமளவிளாஸ்லே பீடா வச்சிருந்ததைப் பார்த்து ஆசைபட்டு
வாங்கிப்போட்டு, தலை சுத்தி அங்கேயே ரோட்டோரமாகொஞ்ச நேரம் குந்திக்கிட்டு
இருந்தோம் நாங்க ரெண்டு பேரும்.

ரோட்டு ஓரத்துலே துப்பிவச்சதுக்கு நல்லவேளை மாட்டிக்கலை.

said...

//'குமட்டுலே குத்துனா வெத்தலைபாக்கு போட்டுக்குவே' ஒரு டயலாக் இருக்கே அதுவா?//
அதே! வெறும் கொட்டை பாக்கை மென்றாலும் சரிதான்.

//ரோட்டு ஓரத்துலே துப்பிவச்சதுக்கு நல்லவேளை மாட்டிக்கலை. //
அதுனால என்ன இப்ப தான் வாக்குமூலம் குடுத்துட்டீங்கள... வேலை காட்டிட வேண்டியது தான். :)))

said...

சிவா,

அருமையான ஐடியாக் கொடுத்ததுக்கு நன்றி. இப்பத் தெரிஞ்சு போச்சு யூஎன் என்னெல்லாம்
ஐடியா மத்த தேசங்களுக்குக் கொடுக்குதுன்னு:-))))))

இதைக் கடைப்பிடிச்சா, முதல்லே வாயச் சரியாக்க செலவழிக்கத்தான்
இருக்கும். பல் செட்டுக்குக் காசு? (-:

said...

//எனக்கும்தான் வருத்தமா இருந்துச்சு. ஒண்ணா ரெண்டா பதிநாலு வருசப் பழக்கமாச்சே.// ஆமா இதுக்கு என்ன அர்த்தம்? பூனையோடயா இல்ல நாத்தனாரோடயா?

அப்புறம் இ.ப.ச.பி: ஆறு விளையாட்டுல இ.கொ உங்களை இழுத்துவுட்டுருக்காறே ஆறாம போய் பாருங்க.

said...

சுரேஷூ,

//...பூனையோடயா இல்ல நாத்தனாரோடயா? //

ரெண்டுமில்லை. பூனைப் பாட்டியோடு:-))))