Tuesday, June 13, 2006

நியூஸிலாந்து பகுதி 43


இன்னிக்கு ஒரு கதை சொல்லப்போறேன். இதுக்கும், நம்ம இந்தியப் புராணக்கதைகளுக்கும்கூட லேசுபாசா ஒரு தொடர்பு இருக்கறதாத்தான் தோணுது.



நியூஸியிலே தென் தீவுலே மேற்குப்பக்கமா ஒரு மலைத்தொடர் இருக்குதுங்க. ஐரோப்பாவுலே ஆல்ப்ஸ் மலைத்தொடர் இருக்கு பாருங்க. அதே ஞாபகத்துலே, இதுக்கு 'சதர்ன் ஆல்ப்ஸ்'ன்னு பேர். இங்கே ஏற்றவும் உயர்ந்தசிகரத்துக்கு 'மவுண்ட் குக்'ன்னு பேர். கேப்டன் குக் தானேங்க இந்த நாட்டைக் 'கண்டு பிடிச்சார்'. அவர் நினைவாத்தான்இந்தப் பேர் வச்சாங்க. நல்ல உயரத்துலே இருக்கறதாலே எப்பவுமே கோடையானாலும் சரி அங்கே பனி உக்கார்ந்துக்கிட்டு இருக்கும்.


மவோரிகளுடைய நம்பிக்கையின் படி அவுங்களுக்கு பூமிதான் தாய். வானம் தான் தகப்பன்.Ranginui (the Sky Father)
இந்த ஆகாய அப்பாவான ராங்கிநூஇ க்கு நாலு ஆம்பிளைப் பசங்க இருக்காங்க. அதுலே மூத்தவன் ஆவ்ராகி (Aoraki) யும் மத்த பசங்களுமாச் சேர்ந்து அம்மாவை பூமி மாதா (Papatuanukuthe Earth Mother) சுத்திப் பார்க்கலாமுன்னு கிளம்பறாங்க. எதுலே? ஒரு நீளமான படகுலே. இந்தப்படகு canoe போற வழியிலே ஒரு புயல் காத்துலே மாட்டிக்கிச்சு. இவுங்க எப்படியோ தப்பி ஒரு reef லே இறங்கிடறாங்க.


அப்ப கடுமையான குளிர் காத்து தெக்காலெ இருந்து அடிக்குது. குளிருக்குப் பயந்து படகுலே இருந்த ஆவ்ராகியும், அவன் தம்பிகளும், இன்னும் கூட வந்த மத்த ஆட்களும் ஒரு பக்கமா சேர்ந்து நிக்கிறாங்க.தனித்தனியா அங்கங்கே நிக்கறதைவிடக் கும்பலா ஒரே இடத்துலே இருந்தா குளுருலே இருந்து தப்பிக்கலாமுன்னு.


காத்தோ இன்னும் கடுமையா வீசிக்கிட்டே இருக்கு. இந்த ஆளுங்க எல்லாருமே அப்படியே கொஞ்சம் கொஞ்சமா உறைஞ்சு போயிக் கற்சிலைகளா ஆயிட்டாங்க. எல்லாரையும் விட ரொம்ப உயரமானவனா இருந்த ஆவ்ராகியைச் சுத்தி மத்தவங்கன்னு சேர்ந்து ஒரு மலைத்தொடரா மாறிடறாங்க. அவுங்க ஏறிக்கிட்டு வந்த படகுஒரு நிலப்பரப்பா மாறிடுது. அதுதான் இப்ப தெற்குத்தீவு.


இந்த மலைத்தொடருலே 30 சிகரங்கள் இருக்குன்னாலும், 19 சிகரங்கள்தான் 3000 மீட்டருக்கும் மேலேஉயரமா இருக்கு. இதுலேஉயரம் அதிகம் கூடிய சிகரம்தான் நம்ம ஆவ்ராகி 3754 மீட்டர். மத்ததெல்லாம் அவனோட தம்பிகளும், கூட வந்த மத்த ஆட்களும்.


வெள்ளைக்காரங்க இங்கே வந்தபிறகு இந்த மலைமேலே உயரமான சிகரத்துலே ஏறிப்போறதெல்லாம் மவோரிகளுக்குச் சுத்தமாப் பிடிக்கலை. இவுங்களைப் பொறுத்தவரை இது புனிதமான இடம்.அவுங்க முன்னோர்களின் தலைகள்தானே இப்பச் சிகரமா நிக்குது. அங்கே போய் கால் வைக்கறதான்னு இவுங்களுக்கு ஒரே கோவம்.( ஏங்க கைலாச மலைச் சிகரத்துக்கும் இப்படித்தானே இந்துக்கள் சொல்லிக்கிட்டு இருக்காங்க?)


மொதலாவது இந்த மலைச்சிகரத்துக்கு 'மவுண்ட் குக்'குன்னு பேர் வச்சதே தப்பு. எங்க முன்னோர்கள் பேர்தான் வைக்கணுமுன்னு போராடி, சமீபத்துலே 1998லேதான் இந்த சிகரத்துக்கு Aoraki/Mount Cookனு பேரை மாத்தி இருக்காங்க. மவோரிகள் அந்தக் காலத்துலே மகாராணியோடு செஞ்சுக்கிட்ட ஒப்பந்தப்படி மவோரி பேர்களை மாத்தக்கூடாதுதான். ஆனா எல்லாத்துக்கும் போராட வேண்டியில்லே இருக்கு. இந்தAorakiஎன்ற பேருக்கே அர்த்தம் "Cloud Piercer". 'மேகத்தைத் துளைப்பவர்'அவ்வளோ உயரம்னு அர்த்தம்.


மேகத்தையும் துளைச்சுப்போகும் உயரமாம். அம்மாடியோ....

( எனெக்கென்னவோ அந்தக் காலத்துலே அமெரிக்காவுலே அடுக்குமாடிகள் வச்சுக் கட்டின கட்டிடங்களையெல்லாம்ஸ்கை ஸ்க்ராப்பர்னு சொல்லிக்கிட்டு இருந்தது ஞாபகம் வருது)


எப்பவும் இந்த சிகரத்தோட முகட்டுலே பனி தொத்திக்கிட்டு இருக்குன்னு சொன்னேன் இல்லையா. காலங்காலமா இப்படி பனி விழுந்து விழுந்து 1991 ஆம் வருசம் இந்த சிகரத்தோட மேல் முடி அப்படியே பெயர்ந்து வுழுந்துருச்சு. 20 மீட்டர் உயரம் குறைஞ்சு போயிருச்சு. ஆனாலும் இதுதான் இப்பவும் இந்த நாட்டின் உயரமான சிகரம். ஆனாப் போச்சு 65 அடி(-:


ஒருவேளை 'மலைக்கு அடியிலே பூகம்பம் வந்திருக்கலாமுன்னும், பனிப்புயல் அடிச்சு மலைச்சரிவு ஏற்படறப்ப அதோட வேகத்தாலே இப்படி ஆயிருக்குமுன்னும், பனி சேர்ந்து கனம் கூடிப்போய் வுழுந்துச்சு'ன்னும் ஏகப்பட்ட கதைகள் சொல்லிக்கிட்டு இருக்காங்க. (பீலிப்பெய் சாகாடும் அச்சிறு அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்' குறள்ஞாபகம் வந்து தொலைக்குதேங்க. உடனே, ஆஹா....வள்ளுவர் அப்பவே சொல்லிட்டுப் போயிட்டாருன்னு சொல்லாதீங்க)


மலைக்கு அடிவாரத்துலே 7000 ஹெக்டேருக்கு மேலே (173000 ஏக்கர்) பரந்த இடம் இப்ப நேஷனல் பார்க்கா ஆகி இருக்கு.மரங்கள் கிடையாது. எல்லாமே ஆல்ப்பைன் செடிகள்.காடு போல நிறைஞ்சு இருக்கு. 72 glaciers பனிப்பள்ளத்தாக்குங்க இருக்கு. கொஞ்சம் சுலபமாப்போய் பார்க்கற செளகரியத்தோட. இதுலே ரொம்பப் புகழ்( ரோடுக்குச் சமீபமா) பெற்றது ஃபாக்ஸ்ம், ஃப்ரான்ஸ் ஜோசஃப்ம்.(Fox Glacier & Franz Josef Glacier) ஒவ்வொரு வருசமும் ரெண்டு மலைகளுக்கு நடுவிலே இருக்கற பள்ளத்தாக்குலே பனி விழுந்து கொஞ்சம் வெய்யில் வந்தவுடன் லேசா உருகி ஐஸ்கட்டியாகி அப்படியே நின்னு போயிருது. வருசாவருசம் புதுசு புதுசா அதும்மேலேயே பனி பெய்ஞ்சு உறைஞ்சு உறைஞ்சு கெட்டிப்பட்டு அப்படியே பள்ளத்தாக்கு ரொம்பி வழிஞ்சுகிடக்குது. இதைத்தான் க்ளேஸியர்ன்னு சொல்றாங்க.


இந்த மலைத்தொடர் இருக்கற இடத்துக்குப்பேர் மெக்கன்ஸி கண்ட்ரி.1850லே இந்த ஜேம்ஸ் மெக்கன்ஸ்ஸி( James McKenzie) சட்டத்துக்குப் புறம்பான காரியம் செஞ்சுக்கிட்டு இருந்தார். இவர் கிட்டே ஒரு நாய் இருந்துச்சு. அதும்பேரு வெள்ளிக்கிழமை( Friday)


அங்கங்கே ஆட்டுமந்தைகள் மேயுதுல்லெ அதுலெ இருந்து அப்பப்ப ஆடுங்களைத் திருடுவார். இதுக்குக் கூட த்துணை போனது இந்த வெள்ளிக்கிழமை.இதுதான் ஷீப் டாகாச்சே. நைசா ஆடுங்களை மந்தையிலே இருந்து பிரிச்சுத் தனியாக்கொண்டு வந்துரும். அப்புறம் அப்படியே தூக்கிக்கிட்டு ஓடிறதுதான்.எவ்வளவோ முயற்சி செஞ்சும் இவரைப் பிடிக்க முடியலை. போலீஸ் பார்த்துக்கிட்டே இருந்து இவரை ஒரு சமயம் கைது செஞ்சிருச்சு. ஆட்டுக்கள்ளன். அஞ்சு வருசம் திருடுன ஆட்டுக்கள்ளனை 1855 லெ பிடிச்சாங்க. ஒரு வருசம் ஜெயில்லே போட்டுட்டாங்க.

ஜெயிலுக்குள்ளேயும் ச்சும்மா இல்லாம பலமுறை தப்பிக்கறதுக்கு முயற்சி செஞ்சு பலனில்லாமப் போச்சு. இதுக்கிடையிலே ஆளுக்குச் சீக்கும் வந்துருச்சு. அதுக்கப்புறம் வெளியே வந்த ஆள், அப்படியே காணாமப்போயிட்டார். எங்கே ஏதுன்னு ஒரு அடையாளமும் இல்லையாம்!


இவரு ஞாபகார்த்தமா இந்த ஏரியாவுக்கு இவர் பேரையும் வச்சு, இவரோட ஃப்ரைடேக்கு ஒரு சிலையும் வச்சுருக்கு ஜனங்கள். இங்கே இருக்கற பெரிய ஏரிதான் லேக் டெக்கெபொ. ஏரி எங்கே இருக்குன்னு யாராவது கேட்டப்ப, 'தெக்காலே போ'ன்னு யாரோ சொல்லி இருப்பாங்க போல. தெக்கெபோன்னு ஆயிருச்சு. இங்கே இருந்து பார்த்தா இந்த மவுண்ட் குக் அருமையாத் தெரியும். தெனாலி சினிமா பார்த்தீங்கல்லெ? அதுலே கமலும் ஜோதிகாவும் (என்ன சொல்லி என்னைச் சொல்ல)பாடி ஆடறாங்கல்லே அந்த இடம்தான். இங்கே ஒரு அழகான சர்ச் இருக்கு. குட் ஷெப்பர்ட் சர்ச். பொருத்தமான பெயர்தானே?


இங்கே இருக்கற ஜன்னலிலே இருந்து பார்த்தா, ஆடாம அசையாம இருக்கற நீலக் கலர் ஏரித்தண்ணி, அதோட பின்புலத்துலே மலைத்தொடர்கள்ன்னு மூச்சே நின்னுபோயிடறது போல ஒரு இயற்கைக் காட்சி. அப்பப்பா.... கொடுத்துவச்சிருக்கணும் இதையெல்லாம் பார்க்க.


பி.கு: நேத்து ஒரு தோழியும் அவர் கணவரும் வீட்டுக்கு வந்திருந்தாங்க, நம் புது(?!) வீட்டுக்கு முதல்முறையாக வந்ததால் ஒரு அன்பளிப்புடன். திறந்து பார்த்தவுடன் எனக்கும் மூச்சு நின்னுபோச்சு. லேக் தெக்கப்போ! அருமையானபடம்.( கிடைக்கணுங்கறது....)

இந்த[ப் பதிவுலே ஒரு படம் டெக்கபொ ஏரி. இன்னொண்ணு ஃபாக்ஸ் க்ளேஸியர்.

நண்பர் சமீபகாலமா ஃபோட்டோக்ராஃபியை ஹாபியா வச்சுக்கிட்டு இருக்கார். படங்களுக்காகவே ஒரு ப்ளொக் தொடங்கற ஐடியா இருக்காம்.

20 comments:

said...

உள்ளேன் டீச்சர்.

ஆடு திருடினவங்க பெயரெல்லாம் ஊருக்கு வைக்கிறாங்களா? கூட உதவினா சிலையா? இதையெல்லாம் வெளிய சொல்லறீங்களே. நம்ம தலைவர்கள் படையெடுத்து வரப் போறாங்க.

(கொஞ்சம் யோசிச்சா, அதெல்லாம் இங்கையே கிடைக்குதே. வரமாட்டாங்க. தப்பிச்சீங்க நீங்க.)

said...

துளசி நல்லா இருக்குப்பா படமும் கதையும்.அங்கே வரணும்னு ஆசையாக இருக்கு.ஏன் ஆடு திருடினவங்களுக்கு சிலை வைக்கிறாங்க? அப்படியே நம்ம புராணம் மாதிரியே இருக்கு.தேடிப்போறதும்,சிலையாகிறதும்!ஸ்கை ஸ்கைஸ்கிரேப்பர் ரொம்ப நல்ல உதாரணம்.அதான் நம்ம எவெரெச்டையாவது பிடிக்கலாம்னு ஹில்லரி வந்தார் போல.

said...

கொத்ஸ்,

'கிளாஸ் லீடர்'ன்றதை மறுபடியும் நிரூபிச்சுட்டீங்க.

1. இந்தப் பனியிலும் ஆஜர், அதுவும் முதல்லே.

2, 'கேள்வியும் நானே , பதிலும் நானே' வாக
இருக்கறதும்:-))))

said...

மானு,

நம்ம கொத்ஸ் சொன்னதைப் பார்த்தீங்கல்லே? சிலைகள் வைக்கற காரணங்கள்
பலவிதம்.

said...

"+"

said...

நன்மனம்,

நன்றி.
ஆமாம் , தேங்க்ஸ்க்கு எதாவது '....ஆன்' இருக்கா?
சிரிப்பான்,அழுவான் மாதிரி.

கொத்ஸ்கிட்டேதான் கேக்கணும்.

said...

இந்த ..ஆன்களுக்காக (சரியா படியுங்க. ஆண்களுக்காகன்னு படிச்சிட்டு வராம போயிடப் போறீங்க) ஒரு பதிவு போடச் சொல்லி சிபி உத்தரவு போட்டு இருக்கார்.

வேணுங்கிறதைச் சொன்னால் ஆவன செய்யப்படும்.

said...

அம்மா,
அதனால தான் அந்த ஊர்ல ஆடுகள் நெறய இருக்கோ.

//ஏரி எங்கே இருக்குன்னு யாராவது கேட்டப்ப, 'தெக்காலே போ'ன்னு யாரோ சொல்லி இருப்பாங்க போல. தெக்கெபோன்னு ஆயிருச்சு. //

கற்பனையின் சிகரம்.

said...

"அச்சிறும் அப்பண்டம்...."
[அச்சு + இறும் =அச்சிறும்]

said...

டீச்சர் கைடு ஆயிராலாம்.

நியுசியும் ஆஸியும், இந்தியா பாகிஸ்தான் போலயாமே?

said...

சிவமுருகன்,

//கற்பனையின் சிகரம்//
இது + ஆ, இல்லை - ஆ?

said...

சி.ஜி,
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தமிழார்வத்தைக் காமிக்கிறேன்னு வள்ளுவரைத் தப்பா எழுதிட்டெனே(-:

ம் விட்டதுக்காக இம்போஸிஷன் மேலே எழுதிட்டேன்.

இதுக்குத்தான் இங்கே நம்மாளுங்க, மேற்கோள் காட்டுறப்ப முழுசா எழுதறதில்லை.
அப்படி எழுதுனா அதுக்குப் பொருள் சொல்ல வேணுமாம்:-)

said...

மனசு,

என்னங்க இந்தியா பாக்கிஸ்த்தானா?

அதெல்லாம் இல்லீங்க. யாரோ வேண்டாதவங்க கோள் மூட்டியிருக்காங்க.

ஆ..... ஒரு பெரிய நாடு. ஒரு கண்டம் முழுசும் அவுங்களே.

நி.... ஒரு ச்சின்ன புள்ளி.

அது அண்ணன் அக்கான்னா இது தம்பி தங்கச்சி. வீட்டுலே சின்னப் பசங்களை பெருசுங்க விரட்டறதில்லையா
அப்படி. இல்லாட்டா பெருசுங்க தம்பிதங்கைகளை ச் சட்டையே செய்யாதுங்க , இப்படித்தான்.........

இங்கே பதவுரை.

பெருசு= அக்கா, அண்ணன்மாருங்க.

said...

நியூசி சுற்றுலா வாரியம் உங்களுக்கு பதவியோ பரிசோ கொடுக்க வேண்டும். அனைவரையும் இங்கே வா வா என்று படம் காட்டுகிறீர்களே. இதில் கமல், ஜோ வேறா, வந்தால் புண்ணியமும் கிடைக்கும் போலிருக்கிறதே :)
இவை நேற்று எடுத்தப் படங்களா, பனியின் சாயையே காணவில்லை.

said...

மணியன்,

வாங்க. நேத்து இருந்த காலநிலைக்கு வெளியே தலை காட்டி இருக்க முடியுமா?
இந்த லேக் தெக்கபோ, நம்ம ஊர்லே இருந்து ரெண்டரை மணி நேர ட்ரைவ்.

எல்லாம் நம்ம டூரிஸம் படங்கள்தான்.

said...

படங்க ரெண்டுமே ரொம்ப அருமையா இருக்கு. அவர சீக்கிரம் பளாக தொடங்க சொல்லுங்க:)

அவரோட படமும் ஒங்க வர்னணையும் நல்ல காமிபினேஷனாருக்கும்..

said...

வாங்க டிபிஆர் ஜோ,

இது நண்பர் எடுத்த படங்கள் இல்லை.

அவர் பரிசாத் தந்ததுதான் ( ஃப்ரேம் போட்டு) தெக்கெபோ படமுன்னு சொன்னேன்.

அவ்வ்ர் ப்லொக் ஆரம்பிச்சதும் சொல்றேன்.

said...

யோகன், நீங்க சொன்னது சரி. இங்கே ஒரு காலத்துலெ ஃப்ரெஞ்சு மக்களும் வந்து
இடம் பிடிக்கப் பார்த்தாங்க.

இங்கே நம்ம ஊருக்குப் பக்கத்துலே இருக்கற அக்கரோவா என்ற இடத்துலே இன்னும் ப்ரெஞ்ச் ஸ்டைல்
கட்டிடம், தெருக்களுக்குப் ஃப்ரெஞ்சுப் பேர்ன்னு இன்னும் ஒரு ஃப்ரெஞ்சு டவுனாத்தான் இருக்கு.

said...

என்ன அழகாயிருக்கு அந்த ரெண்டு படங்களும்.

இந்த வருசம் எப்படியும் சிங், மலேசியா போறதுன்னு முடிவு செஞ்சாச்சி. அடுத்த வருசம் நியூசி பக்கம் வரப் பாக்கனும்.

said...

ராகவன்,

சிங்கை, மலேசியா வலை மாநாடா?

எப்ப வர்றதா இருக்கீங்க? இதுலேயே தாய்லாந்தைக்கூட சேர்த்துக்கலாம்.

ஜமாய்ங்க. ஆனா நியூஸியை மறந்துறாதீங்க.