Monday, June 12, 2006

சுடச்சுட முதல் பனி
குளிர்காலம் ஆரம்பிச்சுச் சரியா இன்னிக்கு 12வது நாள். நேத்துப் பகல் வெய்யில் இருந்தது. கொடுங்காற்று வருதுன்னு வானிலை அறிவிப்பு இருந்துச்சு தான். ஆனா,ஹெட்ஜ்ஹாக் காலநேரம் தெரியாமப் பகலிலேயே வந்து உக்காந்திருந்தார்.

ராத்திரி வந்துட்டுத் திரும்பப் போகலை போல. போய்ப் போய் வரச் சோம்பலோ என்னவோ?


காலையில் சுருண்டு கிடக்கறதைப் பார்த்துட்டு ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன். அப்புறம் தெரிஞ்சது ஆள் 'இருக்கார்'ன்னு. ராத்திரிவரை, டைம் டைமுக்குச் சாப்புட்டுக்கிட்டு 'டெக்'லேயே உலாத்திக்கிட்டு இருந்தார்.


ராத்திரி மழை ஆரம்பிச்சது. பொழுது விடிஞ்சு பார்த்தா வருசத்தின் முதல் பனி பெய்ஞ்சுக்கிட்டுஇருக்கு. ஹெட்ஜ்ஹாக்( பேரு முள்ளீ. நம்ம மானுவோட உபயம்) காணோம். பதுங்கிட்டார்போல.


நான் நல்ல நாளிலேயே நாழிப்பால். இதுலே ஸ்நோ வேறயா? கேக்கவே வேணாம். இணையப் பக்கம் சுத்தலாமுன்னு வந்தா எல்லாமே அவுட்.
முழு விவரம் இங்கே

இன்னிக்கு என்னோர ராசிக்குப் பலன் : சுகம். தினக் கேலண்டர்லே போட்டுருக்கு!!

கிடைச்ச நேரத்தைப் பாழ் செய்ய வேணாமேன்னு, முந்தி எழுதி முடிக்காம வச்சுருந்ததை முடிச்சேன்.படிச்சுப் பார்த்தா ,'நாட் பேட்'.


இருங்க, இருக்கு உங்களுக்கெல்லாம்:-)))))


நடுவிலே சில நிமிஷத்துக்கு கனெக்ஷன் கிடைச்சது( விடாமுயற்சியே வெற்றி தருமாமே!)இப்ப மறுபடி அவுட்.


திரும்ப வந்தா எங்க முதல் பனியை போடறேன்.

ஒரே படத்தைத் தவறுதலா ரெண்டுதடவை போட்டுட்டேன் போல. இப்ப இருக்கும் நிலைமையிலே எடிட் பண்ணா வம்புதான். அதுபாட்டுக்கு அது இருக்கட்டும். நீங்கள் அதைப் பார்க்கவேணாம்.

34 comments:

said...

ஆஹா! பனியா? ஒரு ஆறு மாசம் உங்க ஊரில் ஒரு வேலை பாத்துக் குடுங்க. இங்க பனி பெய்யும் போது இங்க. அங்க ஆரம்பிச்ச உடனே அங்க. நல்லாயிருக்குமில்ல.

said...

கொத்ஸ்,

வேலையா?..... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பரோட்டா போடற வேலையா இருந்தாப் பரவாயில்லையா?
அதுவும் கொத்(ஸ்)து பரோட்டா?:-))))

said...

ரெண்டு தடவை போட்டுட்டாலும் பரவால்லை. படம் நல்லாருக்கு.

ஹூம் பனி பெய்யறதையெல்லாம் பாக்க குடுத்து வச்சிருக்கோ என்னமோ?

உங்க உபயத்துல படத்துலயாவது பாத்துக்கறோம். சீசன் முடியற மட்டும் இடையில இந்த மாதிரி படங்களை போட்டுக்கிட்டே இருங்க:)

said...

இந்த மாதிரி படம் எல்லாம் போட்டு வளைகுடாக்காரர்களின் வயிற்றெரிச்சலை வாங்கி கொள்ளாதீர்கள் -:))))

(46 டிகிரி சென்டிகிரேட்)

said...

டிபிஆர்ஜோ,

இதென்ன இப்படிச் சொல்லிடீங்க. பேசாம ஒரு ஜூலை மாசம் கிளம்பி இங்கே வாங்க. பனியான பனி.
இப்பத்தான் சுற்றுலாக்கள் எல்லாம் மலிவு ஆயிக்கிட்டு வருதாமே.

said...

வாங்க மனசு.

46? அதுலே பாதியை உடனடியாக அனுப்பி வையுங்க.

வையுங்க?????

said...

சூப்பரா இருக்கு போட்டோ எல்லாம். குளிர் எல்லாம் ஒரு ரெண்டு நாளைக்குன்னா என்சாய் பண்ணாலாம். அதுவே ஒரு தொடர்ந்து இருந்தா கஷ்டம் தான்.

said...

வாங்க கார்த்திக்.

நீங்க சொல்றதென்னவோ நிஜம். தினமும் இப்படின்னா வேலைக்கு ஆகாதில்லையா? குளுருலே சமைக்கவும் சோம்பலாயிருது.

படங்கள், ஜன்னல் வழியா எடுத்தேன். வெளியே தலை காட்டமுடியலை.

said...

வையுங்க???

ஆஹா... வெண்பவிற்கு போட்டியா சிலேடை???

//குளுருலே சமைக்கவும் சோம்பலாயிருது//

பாவம் மாமா!!! or தப்பிச்சார் மாமா??

said...

மனசு,

தப்பிச்சார் மாமா:-))))

said...

பனியா....
இங்க வெயில் வெளுத்து வாங்குது. உங்களை மாதிரி வெளியில் தலை காட்டாமல் இருக்க தான் முயற்சி பண்ணுகின்றேன். ஆனால் முடியவில்லை. அனுபவிங்க, அனுபவிங்க.

said...

நாகை சிவா,

என்னங்க ரெண்டும் ரெண்டு எக்ஸ்ட்ரீமு.

இடைப்பட்டக் காலநிலையிலே இருக்கற ஊர் எதுவோ?

said...

விடாது பனி இணையத் தொடர்பை தடுத்தாலும் அடாது தமிழ் வலை பிணைப்பைத் தொடரும் பின்னூட்டநாயகியே! இன்று அலுவலங்கள் விடுமுறையா ..உங்கள் சுட்டியைப் பார்த்தால் எல்லா சாலைகளும் அடைபட்டிருக்கின்றன போல் இருக்கிறதே!
//பேசாம ஒரு ஜூலை மாசம் கிளம்பி இங்கே வாங்க. பனியான பனி.
இப்பத்தான் சுற்றுலாக்கள் எல்லாம் மலிவு ஆயிக்கிட்டு வருதாமே.//
விமானநிலையமே பனிமழையால் மூடப்பட்டுள்ளதாக உங்கள் சுட்டி கூறுகிறது. வந்து அங்கு strand ஆகிவிட்டால் ..?

said...

மணியன்,

விமான நிலையம்தான் மூடி இருக்கு. நம்ம வீடு இல்லை.

சீக்கிரமாக் கிளம்பி வாங்க. வலைப்பதிவர் மாநாடு நடத்தி நாளாச்சு:-))))

பள்ளிக்கூடங்கள் விடுமுறை. நாளைக்கு ஒருவேளை சரியாகும். கூரையிலிருந்து பெரிய பெரிய பனிக்கட்டிகள் உருகி விழ ஆரம்பித்துள்ளன. 'பொத் பொத்' என்று சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

said...

எங்கள் தந்தையார் சிறுவயதில் எங்களைக் கடித்த ஒரு வாசகம்:
தமிழ் 'பனி'யில் தெலுங்கு 'பணி' செய்தால், மலையாளப் 'பனி' வரும். :)

said...

மணியன்,

அதனால்தான் ஒரு 'பணி'யும் செய்யாமல் 'ச்சும்மா இருப்பதே சுகம்'
என்று இருக்கிறேன்:-)))))

said...

அம்மா,
இங்க தில்லி குளுர்லயே (டிச-பிப்) 12 டிகிரி தாங்க முடியல, எப்படி அங்க இவ்ளோ குளூர எப்படி தாங்க முடியுது.

அதோட இன்னொன்னு, நியுசிலாந்துல மனுசங்கள விட ஆடு அதிகமாமே? ஒரு மரியாதைக்குரிய மும்பை ந(ன்)பர் சொன்னார். உண்மையா?

said...

வாங்க சிவமுருகன். இன்னிக்கு 5 டிகிரிதான்.

ஆடுங்க ....உங்க நண்பர் சொன்னது உண்மை.
ஆளுக்கு 14 ஆடு இருக்கு.:-))))

இந்தவருசக் கணக்குலே குறைஞ்சுருச்சுன்னு (ஆளுக்கு 12) சொல்றாங்க.ஆனா இன்னும் உறுதிப் படுத்தலை.

said...

முதல்ல "வையுங்க" இப்ப "ஆடுங்க"

ஃபார்ம் ல இருக்கீங்க போல.

//விமான நிலையம்தான் மூடி இருக்கு. நம்ம வீடு இல்லை.//


வெளிக் கதவ மூடிக்கிட்டு டைனிங் ஹால் ல சாப்பிட கூப்பிடுற மாதிரில்ல இருக்கு???

said...

பனி விழும் மலர் வனம்
உங்கள் போட்டோ ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் நிரந்தரம்

பனியும் அழகு
பனிப் பொழிவும் அழகு
அந்தப் பனியைக் கைகளில் அள்ளி
உருண்டையாக உருட்டி....சப்புச் சப்பென்று வீசி விளையாடினால்....ம்ம்ம்...ஆசையிருக்கு அம்பாரி ஏற...ஆனை இருக்கு அரசங்கிட்டன்ன கதையாப் போச்சே

said...

அங்கே பனிமழையாலே நெட்டைப்பிடிக்க உங்களாலெ முடியல்லே. இங்கெ விளம்பரத்தாலெ என்னால் நெட்டைப் பிடிக்க முடியல்லே கம்ப்யூட்டரை ஓபன் செஞ்சாலெ ஒரு விளம்பரம் புல் ஸ்க்ரீனையும் அடைச்சுட்டு நிக்குது.இரவு வரை னெட் பார்க்கவெ முடியல்லே

said...

அக்கா !
இங்க கொழுத்துது இன்று31°c; நாளை33°cஆம்; இந்தக் கிழமையே! குளிச்சுக் கட்டுப்படியாவாது. மணி இரவு 11.45 ;ஒரு மரந்தடியுமாடவில்லை.சனம் பல்கனியில நிக்குது.
யோகன் பாரிஸ்

said...

//பரோட்டா போடற வேலையா இருந்தாப் பரவாயில்லையா?
அதுவும் கொத்(ஸ்)து பரோட்டா?:-))))//

இதுதான் area of expertise ஆச்சே. கூப்பிடுங்க. வந்துடறேன். அப்புறம் பச்சை மிளகாய், குளிருறைக்கப்பட்ட பரோட்டா எல்லாம் கிடைக்குமில்ல. பாருங்க என் தொழில் பக்தியை! :)

said...

மனசு,

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. 'காலிங் பெல்'ன்னு ஒண்ணு கதவுக்குப் பக்கத்துலே இருக்கும்ங்கறதை
மறந்துட்டீங்களா?

அதுலேயும் ஹிந்திப் பாட்டுப் பாடற பெல் ஆச்சேங்க:-)))

( அதுலே ஒரு பாட்டு 'மேரே அங்க்ணேமே துமாரா க்யா காம் ஹை' அநியாயத்துக்குப் போட்டு வச்சிருக்கான்!)

said...

ராகவன்,

நம்ம நாட்டுலெயே கூட சிம்லாவுலே எல்லாம் பனியே பனிதான். ஆனா எங்களுக்கும் அங்கேயெல்லாம் போகக்
கொடுத்து வைக்கலை. அப்பெல்லாம் உள்ளூர் பயணத்துக்கே ஆயிரம்தடவை யோசிக்கணும். ஐவேஜ் வேணாமா?

said...

சிஜி,
இங்கே இன்னிக்கும் நெட் விளையாட்டுதான் காமிக்குது. கிடைச்ச 'கேப்'லே ஒரு பதிவைப் போட்டுட்டேன்:-)

said...

யோகன்,
உங்க சம்மராச்சே. அப்படித்தான் இருக்கும். ஒரு ஜூன்மாசம் நான் அங்கே இருந்துருக்கேன். மூணே நாள்தான்.
ஆனாலும் காய்ச்சி எடுத்துருச்சு.

said...

கொத்ஸ்,

என்னே தொழில் பக்தி. ஆனால் இந்த //குளிருறைக்கப்பட்ட பரோட்டா // சமாச்சாரமெல்லாம்
கிடைக்காது. பச்ச மிளகாய் நோ ப்ராப்ளம்.

said...

ஜில்லுனு இருக்கு. ஆகா.. முள்ளீயை கேட்டதா சொல்லுங்க.

said...

ரமணி,
கட்டாயம் சொல்றேன். நேத்தும் இந்தப் பனியிலேயும் வந்துட்டுதான் போச்சு. இப்ப தினமும் அதுக்குன்னு ஃபோட்டோ செஷன் வேற:-)))

said...

அக்கா,
ரெண்டாவது முறை போட்ட படத்தை நான் பார்க்கலை..:)

நல்ல வேளை நான் நியூசில இல்லை.. இங்க மழை பெய்யறதே எனக்கு நல்லா குளிருது.. இந்தப் பனியை போட்டோவில பார்த்தாலே பயமா இருக்கு... எப்படித் தான் இருக்கீங்களோ?!!

முள்ளீ நல்லா இருக்கானா? அப்படியே போட்டோ எடுத்து வச்சி கடைசியா மொத்தமா போடுங்க.. உங்க சாப்பாட்டை சாப்பிட்டு எப்படி இருந்த முள்ளீ எப்படி ஆய்ட்டாருன்னு பார்ப்போம் :)

said...

பொன்ஸ்,

//.........எப்படி இருந்த முள்ளீ எப்படி ஆய்ட்டாருன்னு பார்ப்போம் :)//

அருமையான ஐடியா. தேங்க்ஸ்ப்பா.

said...

//முள்ளீ நல்லா இருக்கானா? //

முரளி என்றவொரு நண்பனை அவனது முள்ளம்பன்றி போன்ற தலையலங்காரத்திற்காக முள்றீ என பெயரிட்டது ஞாபகத்திற்கு வருகிறது:))

said...

மணியன்,

உங்க நண்பருக்குப் பொரை ஏறி இருக்கும்!