Friday, June 02, 2006

கிடைக்கிறது......

கிடைக்கணுங்கிறது கிடைக்காமப் போகாது. கிடைக்காதுன்னு இருக்கறது கிடைக்காது.


ஞாயித்துக்கிழமை மத்தியானமா கடைக்குப் போலாமுன்னு கிளம்பிப் போய்க்கிட்டு இருக்கோம்.நம்ம வண்டிக்குப் பின்னாலெ வர்ற வண்டியிலே இருந்து ஹார்ன் அடிச்சு சிக்னல் கொடுக்கறாங்க.இங்கெல்லாம் ஹார்ன் சத்தம் கேக்கறதெ அபூர்வம். ஆம்புலன்ஸ் வண்டி ஹார்ன் சத்தம்தான் 'உய்ங் உய்ங்'ன்னு அடிக்கடி கேக்கும்.


'அடக் கடவுளே, யாருக்கோ ஆபத்து போல இருக்கே. உதவி வந்துக்கிட்டு இருக்குன்னு சொல்லிஅவுங்களைக் காப்பாத்து'ன்னு வேண்டிக்குவேன்.


இது என்னடா நமக்கே சிக்னல்?னு எங்க இவர், வண்டியை ஓரம் கட்டுனார். பின்னாலே வண்டியும் ஓரங்கட்டுனாங்க. இறங்கிப் போய்ப் பார்த்தா, கொஞ்சம் வயசான அம்மா ஓட்டுனர் இருக்கையிலே.


'உங்க வண்டியோட ஹப் தெறிச்சு ஓடுச்சு. நான் பார்த்தேன். அதான் சொல்லலாமுன்னு' சொன்னாங்க.


அடடா...' ரொம்ப தேங்க்ஸ்' னு சொல்லிட்டு வண்டியைச் சுத்தி(!)ப்பார்த்தா... ஆமாம். பாஸஞ்சர் பக்கம் முன் வீல் ஹப் காணொம்.

இதுக்கு முன்னே ரெண்டு தடவை ஹப்ங்க காணாமப் போயிருக்கு. ஏர்ப்போர்ட்லே பார்க் செஞ்சுட்டுமறுநாள் எடுத்தப்ப இப்படி நடந்திருக்கு. அப்புறம் விசாரிச்சதுலே இந்தத் திருட்டு(!) கொஞ்ச நாளாநடக்குதுன்னு சொன்னாங்க. செக்யூரிட்டி கெமரா எல்லாம் வச்சிருக்காங்கதான். ஆனாலும் இப்படி நடந்துக்கிட்டு இருக்கு.


இங்கே இதுக்குன்னே ( திருட்டுக்கு இல்லைங்க) ஹப்ங்களுக்குன்னே ஒரு கடை இருக்கு. ரெக்கர்ஸ்கிட்டே இருந்து நல்ல நிலமையில் இருக்கறதை வாங்கிவச்சு விக்கறாங்க. நாங்களும் அந்தக் கடையைத்தேடிப்போய் ரெண்டுதடவை வாங்கியும் போட்டோம். டொயோட்டா வண்டிகளுக்கு ரெக்கர்ஸ் கிட்டே வாங்குனாகொஞ்சம் விலை குறைவாச்சேன்னு போனா, நமக்குக் கிடைக்கவே கிடைக்கறதில்லை. நல்ல டிமாண்ட் இருக்காமே.


போனவழியாவே திரும்ப வந்து பார்த்தோம். எங்காவது இடது பக்கம் உருண்டோடியிருக்கணுமே! ஒண்ணையும்காணொம். இன்னொரு ரவுண்டு வந்தோம். ம்ஹூம். நம்ம தெரு, மெயின் ரோடு வந்து சேர்ற இடம்வரை ஒருக்காவும்,திரும்ப விட்டு வாசல்வரைக்கும் இன்னொருக்காவும் வந்து பார்த்தாச்சு.


இதெ நீங்க படிக்கிற நேரம்கூட ஆகியிருக்காது, நாங்க விவரம் கிடைச்சு வந்து பார்த்தது. எங்கே போயிருக்கும்?இதுவோ நாலு லேன் ரோடு. நடுவிலே மீடியன் ஸ்ட்ரிப் இருக்கு. நம்மூர் கார்டன் சிடின்றதாலே கொஞ்சம் இடம் கிடைச்சாலும் புல்லும், மரமும் நட்டு வச்சிரும் நகர சபை.


இனி தேடிப் பயன் இல்லை. நேரம்தான் போகுது. நாளைக்கு அந்தக் கடையிலே 20$ கொடுத்து ஒண்ணு வாங்கிப் போட்டுரலாமுன்னு முடிவு செஞ்சுட்டு, கடைகண்ணி எல்லாம் சுத்தி மூணுமணி நேரம் கழிச்சு வீட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கோம்.


நம்ம வீட்டுக்குக் கிட்டே மெயின் ரோடுலே வரும்போது, மனசும் கண்ணும் சொன்ன பேச்சைக் கேக்கமாட்டேங்குது.திரும்பத் திரும்பக் கீழே விழுந்து காணாமப்போன ஹப்பையே வட்டம் போடுது. தாங்க முடியலைப்பா இந்த இம்சை.கொஞ்சம் மெதுவாப் போங்க, இன்னொருக்காத் தேடலாமுன்னு சொல்லி வாயை மூடலை, அங்கே ரெண்டு பக்க லேனுக்கும் நடுவிலே மீடியன் ஸ்ட்ரிப்லே இருக்கற புல்தரையில் என்னவோ 'க்ரே'யாத் தெரிஞ்சது.
வண்டியை ஓரங்கட்டிட்டுப் போய்ப் பார்த்தா, நம்ம ஹப்தான்! இடது பக்கம் கழண்டது ரெண்டு லேன் எதிர்ப்புறமாத் தாண்டி இங்கே எப்படி வந்துச்சு?


இப்ப முதல் வரி உறுதியாயிருச்சு:-))))

'கிடைக்கணுங்கிறது கிடைக்காமப் போகாது. கிடைக்காதுன்னு இருக்கறது கிடைக்காது.'

இதெல்லாம் ஒரு பதிவான்னு யாரும் அடிக்கமாட்டீங்கன்ற ஒரு நம்பிக்கைதான்.

வாழ்க்கையின் முக்கியமான உண்மை அதான், 'கி.கி.போ.கி.இ.கி'ன்றது தெளிவாயிருச்சுல்லெ!

53 comments:

said...

இதையேதான் எம்மியும் சொல்வாங்க. கல்யாணத்துக்கு பூ order கொடுக்கப் போயிட்டு வீட்டுக்கு வந்து பாத்தா என் pendant காணம். 16 வயசாயிருக்கப்ப என் தோழி தந்தது - சைக்கிள் வேணும்னு நான் அம்மாகிட்டே "கேட்டது" தெரிஞ்சு, அவ கொடுத்த சைக்கிள் pendant.

எம்மிட்டே, காணோம்னு சொன்னதும், உங்க தத்துவத்தைத் தான் அவங்களும் எடுத்து விட்டாங்க. மனசே சரியில்ல. கல்யாணத்தன்னைக்கு அண்ணனும் அண்ணியும் ஒரு சின்ன நகைப்பெட்டி குடுத்தாங்க. திறந்து பார்த்தா.. என் pendant. பூ எடுக்கப் போகும் போது அண்ணி கண்டு எடுத்திருக்காங்க!!.. best gift ever! :O)

பி.கு: தத்துவம் சரிதான் போல!

said...

அது சரி... ஹப்னா என்ன?

said...

துளசி மேடம், எனக்கு இந்த நிமிஷம் தேவைப்பட்ட மிக மிக முக்கியமான ஆறுதலை, உங்க பதிவின் தத்துவம் (!) தந்தது, சரியான சமயத்தில். நன்றி.

said...

உ.மு.எ.தெ.ம.பு.ஒ.ம.ஒ க்கும்
இந்த கி.கி.போ.கி.இ.கி க்கும் கொஞ்சம் சம்மந்தம் இருக்கு போல இருக்கே!

அதாங்க!
உடம்பு முழுக்க எண்ணையைத் தேச்சுக்கிட்டு மண்ணுல புரண்டாலும் ஒட்ட்ற மண்ணுதான் ஒட்டும்!!

அடிக்க வராதீங்க!!

நான் ஜூட்! ;)))

said...

ஷ்ரேயா,

ஆமாம். நமக்குன்னு இருக்கறது கண்டிப்பாக் கிடைச்சிரும்.

முந்தியெல்லாம் 'சேல் முடிஞ்சிறப்போகுது. சீக்கிரம் போகணும். வித்துத் தீர்ந்துரும்'னு
அவசரப்படுவேன். இப்ப எல்லாம் அது மாறிடுச்சு. நமக்குக் கிடைக்கணும்ங்கற விதி இருந்தாக் கண்டிப்பாக் கிடைக்குமுன்னு தோணுது. இப்படி நினைக்கிறது நல்லதா கெட்டதான்னு தெரியலை.

said...

பொன்ஸ்,

நான் ஏதும் தப்பாச் சொல்லிட்டேனா?

எனக்குத் தெரிஞ்சவரை 'ஹப்'ன்னா கார்லே சக்கரத்தை முடுக்கியபிறகு, அந்த நட், போல்ட் எல்லாம் தெரியாம மறைக்கிற வீல் கவர்.

said...

கிருஷ்ணா,

இப்படியும் கூட சூசகமா நமக்குப் பதில் கிடைக்கறதும் உண்டு.

அருள்வாக்கு? :-))))

said...

:-)

said...

SK,

நீங்க சொன்ன தத்துவமும் சரிதான்.
எங்க அம்மாவும் சொல்வாங்க,'ஆத்து நிறைய தண்ணி போனாலும், நாய் நக்கிதான் குடிக்குமுன்னு'

ஒட்டறதுதானே ஒட்டும்.

said...

நன்மனம்,

தேங்க்ஸ்.

said...

துளசி மேடத்தின் காரோட ஹப்பா?
கொக்கா? மற்றவங்க காரோட ஹப்னா
விழுந்த இடத்திலெ ஒரு ரவுண்ட் அடிச்சு கிடந்திருக்கும்...இது இவுங்க காரோட ஹப் இல்லியா!
தத்துவம் நல்லா இருக்கு

said...

மேடம்,

ஒரு சிரிப்பான் போட்டதுக்கு இப்படி "தேங்க்ஸ்" அப்படினு ஒரு அடி கொடுக்கரீங்களே!

ஓ கிடைக்கணுங்கிறது கிடைக்காமப் போகாதா. சரி... சரி...:-)

said...

நன்மனம்,

கரெக்ட். கிடைக்கணுமுன்னு இருந்தது கிடைச்சிருச்சு.

ஆமாம் :-) இது சிரிப்பான்
அப்ப (-: அழுவானா?

? க்கு என்ன 'வான்'

சொல்லுங்க. இதுக்கே ஒரு பதிவு போட்டுரலாமே:-)))

said...

சி.ஜி,

இந்த 'மேடம்' வேணாம் ப்ளீஸ்.
அப்புறம் நானும் 'சிஜி ஸார்'னு சொல்லவேண்டி இருக்கும், ஆமாம்.

said...

துளசி மேடம்,
//கிடைக்கணுங்கிறது கிடைக்காமப் போகாது. கிடைக்காதுன்னு இருக்கறது கிடைக்காது.// சரிதான். அப்படின்ன ஏன் தேடறீங்க? :)

said...

அருள் குமார்,

'தேடுங்கள்.தேடினால் கண்டடைவீர்கள்'

இப்படியும் ஒண்ணு இருக்குல்லே?

அதனாலேதான்:-))

said...

சரிசரி விடுங்கள். நம்ம ஊர்லதான் எல்லாத்துக்கும் ஒரு பழமொழி வச்சிருக்கமே! :(

said...

பாருங்க இப்போ, தருமியோட பின்னூட்டம் ஒண்ணு கிடைக்கணும்னு இருந்திருக்கு!!! :-)) ))

said...

அருள் குமார்,

இது பழமொழியா? நான் வேற என்னவோ நினைச்சேன்!

said...

வாங்க தருமி.

எப்படி இருக்கீங்க? இப்பத்தான் சிவமுருகனோட திருவிளையாடலைப் படிக்கறப்ப உங்களை நினைச்சுக்கிட்டேன்:-))

எனக்கும் இப்படியெல்லாம் உங்களை விசாரிக்கணுமுன்னு இருக்கு பாருங்க:-)

said...

துளசி, கிடைக்கணும்கரது கிடைக்கும். அதுவரை பொறுமையா தேடணும் இல்லை/என்ன வேணா நடக்கட்டும்னு இருந்தால் நடக்காது. பொருளைத்தெடினால் அகப்படும். நம்ம ஹனுமான் சார் தேடின சீதை ரொம்ப்ப்ப்ப்ப்பாஆஅ நேரம் கழிச்சு தானே கிடைச்சாங்க. உங்க மனசுக்கு தஙமான ஹப்பு கிடைச்சு இருக்கணும். ஒரு ஃபேரி அங்கெ சுத்தினதா நூஸ்ல சொன்னாங்க.

said...

நூற்றுக்கு நூறு உண்மை.
ஏனக்கு கிடைக்கனும் என்று இருந்தால் கிடைப்பார் என்ற
தவ சாதனைதான் எனது காதல் கணவர்.

said...

வாங்க வல்லி.
இந்த ஃபேரி தங்க ஹப்பை எடுத்துக்கிட்டு சாதாரண ஹப்பை வச்சுருச்சுன்னு ந்யூஸ்லே சொன்னாங்களாமே.
உண்மையாவா?:-)))

said...

வாங்க கஸ்தூரி.

நல்லதே நடந்திருக்கு. மனம்போல வாழ்வு.

நல்லா இருங்க.

said...

சூப்பர் ஸ்டாரோட டயலாகுக்கே புது பொழிப்புரை சொல்லிட்டீங்களே....

said...

ஆமாம்.துளசி நான் கூடப் பார்த்தேன்:-))துளசிக்கு தன்னோட ஹப்பு கிடைச்சால் தான் சந்தொஷப்படுவாங்கனு பழசையே வைச்சிட்டுப் போயிட்டாங்களாம்.அரைக்காசு அம்மன் நு பேராம்.

said...

இது...இதைத்தான் ஜோஸப்பும் சொன்னார். ட்டீச்சரை மேடம் னு
சொல்றதுதானெ முறை? ஆனா ஸ்ட்டூடண்ட்டை சார் னு சொல்லப்படாது ஆமா[ட்டீச்சர் மட்டும்தான் வடிவேலுவை இமிடேட்
செய்யமுடியுமோ?]

said...

//இதெல்லாம் ஒரு பதிவான்னு யாரும் அடிக்கமாட்டீங்கன்ற ஒரு நம்பிக்கைதான்.//

சத்தியமா கேட்க மாட்டோம். இது போல பல பதிவுகளை போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
எப்படிங்க. இது எல்லாம் உங்களா மட்டும் முடியுது...........
பொன்ஸ், கேட்ட மாதிரி வர்கார்ந்து யோசிப்பீங்களோ....

said...

அது சரி..

வீல் ஹப்புக்கு சுத்தி, சுத்தி எவ்வளவு பெட் ரோல் போச்சி, இல்ல டீசலா?

அதாவது இந்த திருட்டு பிரச்சினை யூனிவர்சல் ப்ராப்ளம்தான். பணக்கார நாடு ஏழை நாடுன்னு இல்லே..

இங்க சின்னதா திருடுவான் அங்க பெரிசா திருடுவாம்பாங்க..

$20 திருட்டுக்கூட அங்க இருக்குங்கறது ஆச்சரியமாத்தான் இருக்கு.

said...

ரமணி,

நீங்க வேற. யேசு நாதர் சொன்னதுக்கும்கூட பொழிப்புரை சொல்லிருவொம்லெ:-))))
'தேடினால் கண்டடைவீர்கள்'

said...

வல்லி,
அரைக்காசு அம்மனா?

அதைப் பத்திச் சொல்லுங்களேன்.

said...

சி.ஜி,

நீங்க சொல்றது சாதாரணப் பள்ளிக்கூடம்.

இங்கே இது 'முதியோர் கல்வி':-))))
அதனாலே பேரே சொல்லலாம்.

( இங்கே யாருமே டீச்சர், ஸார்,ன்னு கூப்புடறதில்லை தெரியுமா? எல்லாரும் 'ஃபர்ஸ்ட் நேம் காலிங்' தான்:-)))

said...

நாகை சிவா,

பதிவு எழுத ஆரம்பிச்ச பின்னே, 'எதைப் பார்த்தாலும் இதை ஒரு பதிவாப் போட்டால் என்ன?'ன்னு
மண்டைக் குடைச்சல் வந்திருக்கு:-))))

said...

நாகை சிவா,
சொல்ல மறந்துட்டேன். உங்க புலி அட்டகாசமா இருக்கு.

said...

டிபிஆர்ஜோ,

எல்லாம் பெரிய திருடனுங்களா என்ன?

ஏதோ அந்த சமயத்துக்கு 20$ கிடைச்சாப் போதுமுன்னு இருக்கற
ச்சின்னத் திருடனுங்கதான்.

குடி, ட்ரக் தேவைகள்.

said...

//'கி.கி.போ.கி.இ.கி'//

அதானே! இப்போ இந்த பின்னூட்டம் வந்தாச்சே!

//ஆமாம் :-) இது சிரிப்பான்//

இதுவும் நான் தொடங்குன விளையாட்டுதான். அந்த பொன்ஸ் வந்து திட்டுமேன்னு பார்த்தா நீங்க வந்துட்டீங்க.

said...

//
( இங்கே யாருமே டீச்சர், ஸார்,ன்னு கூப்புடறதில்லை தெரியுமா? எல்லாரும் 'ஃபர்ஸ்ட் நேம் காலிங்' தான்:-)))//

ஆனா வயசு வித்தியாசம் பாக்காம அண்ணா அக்கான்னு கூப்பிடணுமே. அந்த ரூல்ஸ் இப்போ இல்லையா?

said...

// எனக்குத் தெரிஞ்சவரை 'ஹப்'ன்னா கார்லே சக்கரத்தை முடுக்கியபிறகு, அந்த நட், போல்ட் எல்லாம் தெரியாம மறைக்கிற வீல் கவர்.//

இந்த பூவிழி வாசலிலே படத்துல அடிக்கடி கீழ விழுந்து சத்யராஜ் போய் எடுத்து வருவாரே, அது தானே? அவ்ளோ டெக்னிகல் பேர் எல்லாம் தெரியாதுக்கா..

//பொன்ஸ், கேட்ட மாதிரி வர்கார்ந்து யோசிப்பீங்களோ....//
சிவா.. துளசி அக்காவோட பழைய பதிவெல்லாம் நீங்க படிச்சிப் பார்க்கிறது நல்லது.. இந்த மாதிரி கேள்வி எல்லாம் அப்புறம் கேட்க மாட்டீங்க..

//பதிவு எழுத ஆரம்பிச்ச பின்னே, 'எதைப் பார்த்தாலும் இதை ஒரு பதிவாப் போட்டால் என்ன?'ன்னு மண்டைக் குடைச்சல் வந்திருக்கு//
எனக்கும் கொஞ்ச நாள் ஆரம்பத்துல அப்படித் தான் இருந்துதுக்கா.. அப்புறம் இப்போ பின்னூட்டம் போட்டே நேரம் போய்டுது... :-).. புதுசா ஏதாச்சும் பார்த்தா தானே இப்படி யோசிக்க :) நம்ம தான் கணினியை விட்டு எழுந்துக்கிடறதே இல்லையே!! :)

said...

//இதுவும் நான் தொடங்குன விளையாட்டுதான். அந்த பொன்ஸ் வந்து திட்டுமேன்னு பார்த்தா நீங்க வந்துட்டீங்க//
ஏம்பா, எல்லாரும் என் பேரைச் சொன்னா எப்படி? கொத்ஸ், உங்களை நான் எங்க திட்டினேன்?

said...

கொத்ஸ்,

சிரிப்பான்
அழுவான்
இன்னுமென்னென்ன 'வான்'கள் இருக்குன்னு ஒரு லிஸ்ட் போடக்கூடாதா?

// இங்கே யாருமே டீச்சர், ஸார்,ன்னு கூப்புடறதில்லை தெரியுமா?
எல்லாரும் 'ஃபர்ஸ்ட் நேம் காலிங்' தான்:-)))//

//ஆனா வயசு வித்தியாசம் பாக்காம அண்ணா அக்கான்னு கூப்பிடணுமே
. அந்த ரூல்ஸ் இப்போ இல்லையா//

இந்த 'இங்கே' நியூஸியிலே. ஆனா தமிழ்மணம் உலகில் ரூல்ஸ் வேறயாம்.
இங்கே வயசு அனுசரிச்சு அக்கா, அண்ணா, தம்பி, தங்காச்சி, அம்மான்னு
கூப்புடணும்.

இல்லேன்னா நம்ம 'டமில் கல்ச்சர்' ஒத்துக்காது:-)))

said...

கிடைப்பது கிடைத்தே தீரும் என்பது உண்மை துளசி. சற்றே காலமாகலாம் ஆனால் நமக்கு (திறமைக்கும், உழைப்புக்கும்) கிடைக்க வேண்டிய பலன் கிடைத்தே தீரும். தமிழ் கலாச்சாரப்படி நான் இனிமே உங்கள டீச்சர்னுதான் கூப்பிடனுமா:)

said...

பொன்ஸ்,

'பூ விழி வாசலிலே ' பார்த்தேந்தான். ஆனா சரியா ஞாபகம் இல்லையேப்பா(-:

கொத்ஸ்க்கு பதில் கொடுத்ததுக்கு தேங்க்ஸ்.

இப்பத்தான் ஒரு 'ஞானஸ்நானம்' போய் வந்தேன். ச்சும்மாக் கண்ணைத் திறந்து
வச்சாலும் போதும். நம்மைச்சுத்தி 'சம்பவங்களோ சம்பவங்கள்'தான்.

காப்பி பிரச்சனை தீர்ந்துச்சா? இல்லேன்னா சொல்லுங்க. நு.ச. லே செஞ்சுரலாம்.

said...

பத்மா,

தமிழ் கலாச்சாரம் வேணாம். தமிழ்மணக் கலாச்சாரம் போதுமே.
இது எப்படி இருக்கு? 'யக்கா' (தமிழ்)

said...

அம்மா,
//எப்படி இருக்கீங்க? இப்பத்தான் சிவமுருகனோட திருவிளையாடலைப் படிக்கறப்ப உங்களை நினைச்சுக்கிட்டேன்:-))
//

எங்க வீட்டுக்கு வந்திங்கீளா?
ஒரு சிர்ப்பானாவது (:)) போட்டுட்டு போயிருக்கலாமே?

said...

//........முதியோர் பள்ளி......//
ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யா...ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யா...'மழலயர்பள்ளி'னு
போர்டு போட்டுகிட்டு முதியோர்பள்ளி
நடத்த ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யா
[வலைத்தளமே மழலைப்ப
பருவத்திலேதான் இருக்கு;
வலைப்பூவர் அனைவரும்
மழலையரே]

said...

பொன்ஸ், துரத்தி துரத்தி வந்து தீட்டுறிங்களே.
துளசி அவர்களின் அனைத்து பதிவுகளையும் தவறாமல் படிக்கின்றேன். History class தவிர. என்னவோ அந்த பதிவ பாத்த உடனே என் கல்லூரி ஞாபகம் வந்து விடுகின்றது. அதான் கல்லூரியை போலவே வகுப்பில் என்ன பாடம் எடுத்து கொண்டு இருக்கிறார்கள், நம்ம பசங்க எப்படி இஞ்சி திண்ண குரங்கு மாதிரி இருக்காங்கனு பாத்து ஒரு நக்கல் சிரிப்பை உதித்து விட்டு போயிகிட்டே இருக்குறேன்.

துளசியக்கா, புலி கமெண்ட்க்கு ரொம்ப தாங்கஸ்

said...

நாகை சிவா,

என்ன... ஹிஸ்டரி க்ளாஸ் தவிரவா?

அதுலே தானேப்பா முக்கிய விஷயமெல்லாம் வருது(-:

said...

கடேசில $20 ஹப்ப தேடுறேன் பேர்வழின்னு ரெண்டு மூணு ரவுண்டு அடிச்சி $20க்கு பெட்ரோல் போட்டீங்கன்னு சொல்லுங்க.. (இங்கல்லாம் எக்கச்சக்க விலை இப்போ)

*

"ஒரு சின்ன நகைப்பெட்டி குடுத்தாங்க. திறந்து பார்த்தா.. என் pendant."

இதான் சாக்குன்னு கண்டெடுத்ததையே கல்யாணப்பரிசா கொடுத்திட்டு பர்ஸையே திறக்காம எஸ்கேப் ஆகிடாங்களா?

*

"ஆத்து நிறைய தண்ணி போனாலும், நாய் நக்கிதான் குடிக்குமுன்னு" ஊரோடு ஒத்து வாழ்னு நீங்களும் ஒரு நாய் (பதிவில்லைன்னாலும்) பின்னூட்டமாவது போடணுமின்னு இருக்கு பாருங்க.

said...

இது அந்த வட்டமா தட்டு மாதிரி டயருக்கு நடுவுல பளபளன்னு சுத்துமே...அதான...அது இல்லைன்னா பிரச்சனையாகுமா? நாங்கூட அது அழகுக்கு வெச்சிருக்குன்னுல்ல நெனச்சேன். சரி. போன பொருள் திரும்ப வந்திருச்சு. அதுவே பெரிய விஷயம்.

சிவமுருகன், திருவிளையாடல் எழுதுறாரா? அத மொதல்ல பாக்கனுமே....எங்க எங்க........

said...

ராகவன்,
//...அது இல்லைன்னா பிரச்சனையாகுமா?//

பெரிய பிரச்சனை இல்லை. என்ன சேறு சகதி அடிச்சா மண்ணு போய் உக்காந்துக்கிட்டு நட்டெல்லாம் துருவாயிட்டாக் கஷ்டம்.

அப்புறம் அசிங்கமா நட்ஸ் தெரியும்.
அது இருக்கறது அழகுக்கும் பாதுகாப்புக்கும்தான்.

இப்ப அதுலே என்னென்னவோ புதுசுபுதுசா வந்திருக்கு. அதுவே ஒரு தனி வீல் மாதிரியெல்லாம் அலங்காரமாச் சுத்தும். திருவிழாலே காத்தாடி வாங்குவமே, அது போலெல்லாம்.

என்னங்க எல்லாம் ஒரே ஷோ தான்:-)))

said...

வாங்க முகமூடி.

ச்சும்மா ஒரு $1.50 தான் செலவாகி இருக்கும். எல்லாம் ஒரு ஆறேழு கிலோமீட்டர்தான் இருக்கும்.

இங்கேயும் பெட்ரோல் விலை ஏறிக்கிட்டேதான் போகுது. இப்ப லிட்டர் $1.79.

said...

துளசி அம்மாவிற்கு வணக்கம்.
தொலைத்தவர்களுக்குதானே பொருளின் அருமை தெரியும்.
இதுபோன்ற அனுபவப்பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
(துபாய்)ராஜா.

said...

வாங்க துபாய் ராஜா.

வணக்கம்.மொதமுறையா வந்துருக்கீங்க போல.

காணமப்போனது 'மனசுக்கு எவ்வளோ பக்கத்திலே இருக்கு'ன்றதை வச்சுத்தான்
ஒரு பொருளோட அருமையைக் கண்டுபிடிக்கலாம். இல்லீங்களா?