Monday, June 19, 2006

பூசாரிணி?

கண்டதைக் கற்றால்.....


ஏங்க கண்டதைக் கற்றால் பண்டிதன் ஆவாங்களாமே. உண்மையா?


இது எப்படிங்க சரியாகும்? கண்டதையும் கற்றால் அறிவு வளர்ந்து(!!!!) பண்டிதன் ஆனாலும் ஆயிருவாங்களோ?

இல்லேன்னா, கண்டதை எழுதுனாலும் ...........?

எழுதறதுன்னு ச்சும்மா எழுதி வைக்கறதில்லை. அதை நாலு பேர் படிச்சுப் பாராட்டணும்.அப்படீன்னா அது அச்சுலே வந்தாத்தானே நாலு மனுஷா படிக்கமுடியும். எண்ணிப் பார்த்தா ரெண்டு கையிலே இருக்கற பத்து விரல்லே எண்ணிக்கற மாதிரிதானே பத்திரிக்கைகள் முந்தி வந்துக்கிட்டு இருந்துச்சு.


நாம எழுதி, அதுவும் நல்ல வெள்ளைக் காகிதத்துலே ஒரு பக்கம் மட்டுமே அடித்தல் திருத்தல் இல்லாம அழகா, புரியுற( எழுத்து புரியணும். கதை இல்லை!) எழுதி, அதுக்கு வேண்டிய ஸ்டாம்ப்பு ஒட்டி, இன்னும் அது அவுங்களுக்குப் பிடிக்கலைன்னா அதை அவுங்க திருப்பி அனுப்பறதுக்கும் தேவையான ஸ்டாம்ப்புன்னு உள்ளெவச்சு அனுப்பிட்டு, 'தேவுடு காத்து' இருக்கணும். இதுக்கெல்லாம் எவ்வளோ செலவுன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.


இப்ப இந்த இணையம் வந்தபிறகு, பரபரன்னு எழுதுனோமா, நம்ம பதிவுலேயே போஸ்ட் பண்ணிக்கிட்டமா,நாலுபேர் வந்து பார்த்தாங்களா, கையோடு பூமாலையோ, இல்லை அழுகல் முட்டையோ வீசிப்போட்டாங்களா,நமக்கும் நம்ம எழுத்தோட லட்சணம் புரிஞ்சு போச்சான்னு எல்லாமே ஏறக்கூடி வந்தா ஒரேநாள்தான் வெயிட்டிங்.


இப்படியெல்லாம் மக்கள்ஸைப் பரிசோதிச்சதுக்கு கூலி சரியாக் கிடைச்சிருச்சு.


'நீ ரொம்பப் படிச்சுக் கிழிச்சுட்டே. எழுதியும் ஏட்டைக் கெடுத்திட்டே. இனிமேப்பட்டு நீ ஒரு பண்டிதை ஆகக்கடவாய்'ன்னு அசரீரி சொல்லிருச்சு.

தேசிகள் உலகில் நான் ஒரு பண்டிட். இப்பத்தானே எடுத்தாங்க. அதனாலே நமக்கெல்லாம் நல்லாத் தெரிஞ்ச ஒரு வலைஞருக்கு அசிஸ்டெண்ட்டா( அப்ரண்ட்டீஸூ!) உத்தியோகம் கிடைச்சிருக்கு.


அதான் உங்ககிட்டே சொல்லிக்கலாமுன்னு இன்று ஒரு தகவல்.


அதுசரி, பெண்கள் பூசாரியா ஆகலாமா? கூடாதா?

16 comments:

said...

அடிப்படைத் தகுதிகள் இருந்தால் யாரும் பூசாரி ஆகலாம்

said...

வாழ்த்துக்கள்!! இனி தேசி பண்டிட்டில் இடம் பிடிக்க இந்த பூசாரிணி வரம் தர வேண்டும். :)
பெண்கள் சாமியாகவும் சாமியாரிணிகளாகவும் இருக்கும்போது பூசாரிணியாக என்ன தடை ?

said...

அஹோ வாரும் பெண்ணே பண்டிதையே. தேசிப் பண்டிட்,அஸிச்டண்ட்!!!
ஆமாம்! அப்படியே நமக்கும் ஒரு ஆபீஸ் பெண் ( முதிரிளம் பாட்டி) வேலை கிடைக்குமா? வர எழுத்தெல்லாம் படிக்கலாமே.
:-)
வாழ்த்துகள் துளசி.

said...

சிஜி,

அப்படியா சொல்றிங்க? அப்பச் சரி.

said...

மணியன்,

நன்றி, வருகைக்கும் கருத்துக்கும்.

said...

வல்லி,

எங்கே இருக்கு ஆஃபீஸ்? எல்லாம் இணையத்துலே துழாவறதுதான்:-)

said...

பெண்கள் பூசைகள் செய்யலாம் தவறில்லை. பெண்கள் செய்யக்கூடாது என்பது தவறான கருத்து. பெரும்பாலும் எல்லா மதங்களிலும் ஆண்கள் ஆளுமைதான் நிறைய. அந்த நிலை மாற வேண்டும். மாறும்.

வாழ்த்துகள் டீச்சர்.

said...

அசிஸ்டெண்ட்...யாரு நீங்க....ஏங்க்கா..இப்படி ஓட்டுறீங்க என்ன? :))

said...

ஐய்யய்யோ, டுபுக்கு, அப்ப நான் அஸிஸ்டெண்ட் இல்லையா? :-))))

said...

ராகவன்,
இப்பவே அந்த நிலை மாறிடுச்சு.

said...

"தமிழ்மணம்"...வருதே...

said...

சிஜி,

?????????????????

said...

இனிமே என் பதிவுகளை தேசிபண்டிட்டில் அடிக்கடி பார்க்கலாம். :-D

said...

கொத்ஸ்,

இப்படிவேற ஒரு எண்ணம் இருக்கா? :-))))

said...

வாழ்க தேசி பூசாரிணி..

அக்கா, அப்படியே நம்ம பதிவுகள் தேசியாகுறதுக்கு என்ன பண்ணணும்னு சொல்லுங்க.. அஸிஸ்டன்ட் பூசாரிணி கிட்ட சொல்லணுமா, இல்லை பூசாரி கிட்ட தான் கேட்கணுமா? :)

said...

பொன்ஸ்,

எல்லாம் இந்த அஸிஸ்டெண்ட் பூசாரிணிக்கு வைக்கிறப் படையலைப் பொறுத்து:-)))))

பதிவுகளைப் படிச்சுக்கிட்டே இருக்கறப்ப மனசுக்குள்ளே ஒரு 'லைட்' எரியும்.
அப்ப தேசியிலே சேர்த்துவிட்டுடறேன்.

'மனசுக்குள் மத்தாப்பூ'