Thursday, June 29, 2006

விக்ரம் தர்மா

இந்தப்பேர் அநேகமா சினிமாப் பார்க்கறவங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும் தானே?'ஸ்டண்ட் மாஸ்டர்'


இவர் மாரடைப்பில் காலமானதாக இன்னிக்கு ஒரு நியூஸ் வந்திருக்கு. வயசு 50.


'டிஷ்யூம்' படம் பார்த்ததில் இருந்து 'ஸ்டண்ட் மாஸ்டர்'ன்னா எவ்வளோ ரிஸ்க் இவுங்க வேலையிலேன்னு மனசு நினைக்கத் தொடங்கி இருக்கு.


அவர் குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

21 comments:

said...

விக்ரம் தர்மா, கமலின் பல படங்களுக்கு ஆஸ்தான சண்டைப் பயிற்சியாளர்.

ஆழ்ந்த அனுதாபங்கள்

said...

ஆழ்ந்த வருத்தங்கள்...

said...

திறையுலகின் நல்ல கலைஞர்.

ஆழ்ந்த அனுதாபங்கள்:-(

said...

ஆமாம் துளசி.ஸ்டண்ட் மேன் என்றால் அவங்க எடுக்கும் ரிஸ்க் நிறைய. அதிலே டென்ஷன் வேற ஜாஸ்தி.
அதுதான் இவ்வளவு சீக்கிரம் இருதய நோய் வந்து கொண்டுபொய்விட்டதோ?வருத்தமாக இருக்கிறது.

said...

நல்ல திறமையான ஸ்டண்ட் மாஸ்டர்.
ஆழ்ந்த அனுதாபங்கள்

said...

ஆமாங்க,

இந்த சின்ன வயசுல..

வேலை பளுவுல தன்னோட ஒடம்ப கவனிக்க மறந்துருப்பார்..

பாவம்..

said...

துளசி, ஆசாத் ஸ்டண்டு கலைஞர்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கார். கிளப், மரத்தடி மற்றும்
அவரின் வலைப்பதிவில் இருக்கும். வெகு சுவாரசியமாகவும், நிறைய விஷயங்களையும் சொல்லியிருப்பார்.

said...

கானா பிரபா, செந்தழல் ரவி, நன்மனம், மானு, நாகை சிவா, டிபிஆர்ஜோ, உஷா

நன்றி.

இதைப் பத்திரிக்கையில் படிச்சவுடன் நம்ம ஆஸாத் ஞாபகம்தான் வந்தது.

said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

said...

துளசியக்கா,

நான் ஆசாத் வந்திருக்கேன் :)

நேத்து ராத்திரியே உக்காந்து தர்மா பத்தி எழுதி ஒரு பதிவு போட்டிருக்கேனே.

http://ennam.blogspot.com/2006/06/blog-post_28.html

அற்புதமான சண்டைக்கலைஞர்.

*

உஷாஜி,

ஹம்கோ ஆப்னே யாத் கியே, பஹூத் ஷுக்ரியா.

அன்புடன்
ஆசாத்

said...

டிஷ்யும் மாதிரி பாலச்சந்தரின் "ஒரு வீடு இரு வாசல்" பார்த்தீங்கன்னா துணை நடிக/நடிகையரின் துன்பங்கள் தெரியும்.

said...

இப்போதுதான் முந்தைய பதிவில் ஸ்டன்ட் விக்ரம் தர்மா எனப் பின்னூட்டியிருந்தீர்கள்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

said...

துளசிக்கா.

நேத்திக்கு செய்தி படிச்சதலருந்து மனசுக்குக் கஷ்டமா போச்சு. கமல் படம்னால விக்ரம் தர்மா எனக்கு நினைவுக்கு வந்துருவார்.

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

said...

வாங்க ஆஸாத் தம்பி.
நல்லா இருக்கீங்களா?

50 வயசுன்றது சாகற வயசு இல்லை. அதிலும் இந்த மாஸ்டர்ங்க எப்பவும் பயிற்சி செஞ்சு
உடம்பை ஃபிட்டா வச்சுக்குவாங்க தானே?

உடற்பயிற்சின்னு ஒண்ணும் செய்யாம இருக்கற என்னைப்போலுள்ளவங்களுக்கு
எச்சரிக்கை மணி அடிக்குதே.

உங்க பதிவைப் போய்பார்த்தேன். கலைஞனுக்கு நல்ல அஞ்சலி.

பதிவு எழுதுனப்பவே உங்க ஞாபகம் வந்தது.

said...

மனசு,

இந்தப் படம் பார்க்கலைங்க. நான் இப்பக் கொஞ்ச வருஷமாத்தான் ஒரு படம் விடறதுல்லை.
முந்தியெல்லாம் தமிழ்ப்படம் கிடைக்காத நிலைதான்.

ஆனா, மூன்று முடிச்சுலே ஒய்.விஜயா துணை நடிகையா வந்து சாவற சீன்லே நடிப்பாங்க.
அப்ப அங்கே நடக்குற சம்பவங்கள் ஓரளவு துணை நடிகர்கள் வாழ்க்கையைச் சொல்லுச்சு.

said...

நன்றி சிஜி.
அவர் பசங்கெல்லாம் இன்னும் சின்னப் பசங்க. 10,15 வயசுதானாம்.

said...

மணியன்,

நல்ல கலைஞர். குடும்பத்துக்கு மட்டுமில்லை, சினிமா உலகுக்கும் நஷ்டம்தான். ஹூம்....

சுந்தர்,

கமலுக்காக நிறைய படங்கள் செஞ்சுருக்கார். நம்ம ஆஸாத் பாருங்க எப்படி ஒரு
நல்ல பதிவு போட்டுருக்கார்ன்னு.

அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.

said...

கமல் கண்டெடுத்த திறமைசாலி. :(
உங்கள் மூலம்தான் செய்தி அறிந்துகொண்டேன்.

said...

வாங்க சிறில் அலெக்ஸ்.

நேத்து தினமலர்லெ ஒரு மூலையில் ச்சின்னதா ஒரு செய்தி பார்த்தேன். அதுக்கப்புறம் நம்ம 'ஆளுங்க'யாராவது
எழுதுறாங்களான்னு கொஞ்ச நேரம் பார்த்துட்டு, நான் ரெண்டு வரி எழுதுனேன்.

சினிமாவையே 'முதலா' வச்சுருக்கற இ பத்திரிக்கைகளில் தேடுனப்ப இன்னிக்கும் ஒண்ணும் வரலை.
தேசிய அவார்ட் வாங்குன கலைஞனுக்கே இப்படின்னா, மத்த சாதாரண ஸ்டண்ட்டு ஆளுங்க?

said...

விக்ரம் தர்மாவின் ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வேண்டுகிறேன். அவரது இழப்பைத் தாங்கும் வன்மையை இறைவன் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் சுற்றத்தாருக்கும் வழங்கட்டும்.

said...

நன்றி ராகவன்