மொதல்லே படத்துலே இருக்கறதை நல்லாப் பார்த்துக்குங்க. ரொம்ப நாளா சாப்பாட்டுப் பதிவுன்னே போடலையேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேனா, அப்ப சாமியே வந்து, 'என்னத்துக்கு இப்படிக் 'கண்கலங்கி' நிக்குறே?. நானே ஏற்பாடு செஞ்சுடறேன். நீ சாப்பாட்டுக்குன்னே ஒரு பதிவு போட்டுக்கோ, போ'ன்னுசொல்லிட்டார்.
மெனு என்ன?
கேக் - முட்டை யில்லாத சைவக் கேக்
சப்பாத்தி ( எண்ணெய் இல்லாம சுட்ட ஃபுல்கா)
சாதம்
காலி ஃப்ளவர் கறி
பாலக் பனீர்
காராமணி உருளைக்கிழங்கு கறி
பருப்பு, பச்சைப் பயிறு சேர்த்த ஒரு பருப்புக் கறி( கொஞ்சம் குழம்பு போல இருக்கு)
க்ரீன் ஆப்பிள் சட்டினி
பால் பாயாஸம்
உன்மைக்குமே.....கூப்புட்டுப் போட்டாருங்க.
நேத்து ஞாயித்துக்கிழமை.( அப்ப இன்னிக்குத் திங்கக்கிழமையான்னு யாருங்க அங்கே குறுக்கே கேக்கறது?)
நம்ம ஊர் ஹரே கிருஷ்ணா கோயிலிலே ஒவ்வொரு ஞாயிறும் பூஜை முடிஞ்சதும் சாப்பாடு போடுவாங்க. அதுக்குயாராவது எதாவது காரணங்களுக்காக, ஸ்பான்ஸார் செய்றதும் வழக்கம். யாரும் கிடைக்கலேன்னா கோயிலே சோறு போட்டுரும்.
நேத்து, நம்ம வகையிலே சாப்பாட்டுக்கு ஏற்பாடு. விருந்துலே ஒரு அறுபதுபேர் கலந்துக்கிட்டாங்க. இதுக்காக ஒரு தொகையைக் கோயிலிலே நமக்குத் தெரிஞ்ச ஃபிஜி பெண்கள் ரெண்டு பேர்கிட்டே கொடுத்திருந்தோம். நேத்து பூஜை சமயத்துலே, உங்ககிட்டே கொஞ்சம் பேசலாமான்னு கேட்டாங்க. ஆஹா... அதுக்கென்ன? நமக்குத்தான்பேசறதும் கேக்கறதும் வெல்லமாச்சேன்னு போனேன்.
'இங்கே வழக்கமா விருந்து சமைக்கன்னே ஒரு குரூப் இருக்காங்க. அவுங்க யாரும் இன்னிக்கு ட்யூட்டியிலே இல்லை.ஆனா நாங்க எல்லாரும் சேர்ந்து விருந்தை ரெடி செஞ்சுட்டோம். நீங்க கொடுத்த தொகையிலே நிறையவே மீந்துபோச்சு. நாளைக்கு, உங்க பேர்லே விசேஷமா பகல் பூஜையில் 'கடவுளுக்குப் பிரசாதம்' சமைக்கப்போறொம். நீங்க வந்து அந்தப் பூஜையில் கலந்துக்கணும்னு சொன்னாங்க.
" அதனால் என்னங்க. பரவாயில்லை. உண்மையைச் சொன்னா, எங்க விசேஷநாள் நாளைக்குத்தான். ஞாயிறுன்னாகோயிலுக்கு நிறையப் பேர் வருவாங்களேன்னுதான் விருந்தை இன்னிக்கு ஸ்பான்ஸார் செய்யச் சொன்னோம்."
" பார்த்தீங்களா.... கடவுளே உங்களோட விசேஷத்துக்கு ரெட்டை விருந்து ஏற்பாடு செஞ்சுட்டார். நாளைக்குப் பகல் 12.30க்கு வந்துருங்க"
ஞாயிறு மெனுவும் ரொம்ப நல்லா இருந்துச்சு.( ச்சும்மாச் சும்மா லிஸ்ட்டைச் சொல்லவேணாமுன்னு....)கடவுளுக்கு அலங்காரமும் பிரமாதம். எல்லாம் நல்லபடி முடிஞ்சது.
இன்னிக்கு, வழக்கம்போல வீட்டிலே சாமியெல்லாம் கும்பிட்டுட்டுக் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். இதுநாள் வரை இங்கே பகல் 12.30க்கு ஒரு பூஜை நடக்குற விவரமே எனக்குத் தெரியாதுங்க.
சரியாப் பனிரெண்டரைக்கு, மூடியிருந்த திரை விலக, 'பட்டுக்கரு நீலத்தில், வெள்ளி நட்சத்திரங்கள் மின்னும் உடையலங்காரத்தில்' பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமனும் ஜொலிக்கிறாங்க. மனசு பாரதியை நினைச்சது. ஆரத்தி முடிஞ்சதும் இருக்கச் சொன்னாங்க.
இன்னொரு குடும்பம் வந்திருந்தாங்க. பேச்சுக் கொடுத்தப்பத்தான் தெரிஞ்சது அவுங்களும் தமிழ்க்காரங்கதான்னு. மலேசியத் தமிழர்கள். வெலிங்டன்னில் இருந்து இந்த ஊரைச் சுத்திப்பார்க்க வந்திருக்காங்க. இன்னிக்கு எங்களுக்கு அரசாங்க விடுமுறை. லாங் வீக் எண்ட். எதுக்குன்னா,மகாராணிக்குப் பொறந்த நாள். 'அசல் பொறந்த நாள்' போய் ஆச்சு ரெண்டு மாசம். ஆனா இப்பத்தான் நியூஸிக்கு.ஆஸிக்கு அநேகமா அடுத்த வாரம் இருக்கலாம். பாவம் அந்தம்மா, ரெண்டு மாசமா பொறந்துக்கிட்டே இருக்காங்க.
இந்த மலேசியன் குடும்பத்துலே ஒரு ச்சின்னக் குழந்தை (ரெண்டு வயசு இருக்கலாம்) இருந்துச்சு. அம்மா நிறைமாதக் கர்ப்பிணி. அவுங்களும் அங்கேயே சாப்புடலாமுன்னு சொல்லியாச்சு.
தாய்லாந்துலே இருந்து வந்த ஒரு ச்சீனப் பெண்மணியும் அவுங்க குழந்தையும் கோயிலுக்கு வந்திருந்தாங்க.
இப்படியாக ஒருச் சின்ன க்ரூப் சேர்ந்தாச்சு. கோயிலைச் சேர்ந்த ரெண்டு பெண்கள் ( விசாகா & ராதேஷ்யாம்)விருந்து பரிமாறி உபசரிக்க, அட்டகாசமான சாப்பாட்டை அருமையாச் சாப்புட்டுட்டு வந்தோம்.
நான் கேக்கலைங்க. சாமியே கூப்புட்டுக் கொடுத்தது. எதிர்பாராம எதாவது கிடைச்சா மனசுக்கு ரொம்ப சந்தோஷம் கூடிருது இல்லீங்களா? 'போகட்டும், இன்னிக்கு இதுகளுக்கு ஒரு விசேஷமான நாள்'னு நினைச்சுட்டார் போல. இருக்காதா பின்னே, 32 வருசம் ஆச்சுங்களே, கல்யாணம் கட்டி!
Monday, June 05, 2006
சாமி போட்ட சாப்பாடு..
Posted by துளசி கோபால் at 6/05/2006 03:20:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
79 comments:
படத்தோட போட்டுடீங்களா...நேரடியா
பரிமாறின மாதிரி இருந்தது.மகிழ்ச்சி
நேரடியா வாழ்த்திட்டோம்
வாழ்த்துக்கள் துளசிம்மா & கோபால் மாமா (அங்கிள்னா மாமா தானே? :O) )
//நேத்து ஞாயித்துக்கிழமை//
அப்ப முந்தா நேத்து சனிக் கிழமை!
வாழ்த்துக்கள் துளசி மேடம்! கோபால் சார் கிட்டயும் சொல்லிடுங்க.
கிருஷ்ணர் போட்டோ அருமை.
அம்மா,
32 ரொம்ப ராசியான நம்பர். வாழ்த்துக்கள் உங்களுக்கும்-ஐயாவுக்கும்,
எனக்கு எவ்ளோ சந்தோஷம் பாருங்க, இந்த நாளை என்னால் மறக்க முடியாத நாளாக்கிட்டீங்க, (எப்படின்னு கேக்றீங்களா?, வர்ர 7ம் தேதி எங்க அம்மா பொறந்த நாள்.)
பதிவுக்கு மேட்டர் கிடைக்கலியா...எடு(ப்பு) சாப்பாடு...
:) :)
துளசியக்கா கோபால் தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வாங்க சி.ஜி,
நன்றி நன்றி நன்றி.
ஷ்ரேயா,
அங்கிள்க்கு சித்தப்பா, பெரியப்பான்னு கூட அர்த்தம் இருக்கு:-)))))
வாழ்த்துகளுக்கு நன்றி.
பார்த்திபன்,
நாளைக்குச் செவ்வாய்க்கிழமையாக்கும்:-))))
நன்மனம்,
நன்றிங்க. நான் சொல்றதென்ன?
அவர் ஒரு பின்னூட்டப் பிரியர். நம்ம பதிவுகளைப் படிக்கிறாரோ இல்லையோ,
பின்னூட்டங்களைத் தவறாமப் படிச்சுருவார்.
அப்பப்பக் கேக்கறது இப்படித்தான்," என்ன சொல்றாங்க உன் ஆளுங்க?"
இது எப்படி இருக்கு?
சிவமுருகன்,
அம்மாவுக்கு ( உங்க அம்மாவுக்கு)என் வாழ்த்துகளைச் சொல்லுங்க.
அடுத்தவருஷம் 33. அதுவும் நல்ல நம்பர்தானே?
செந்தழல் ரவி,
சோறில்லாம எப்படிங்க? 'ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்' தானே?
சிபி,
வாங்க.
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.
பி.கு: எங்கே நம்பரைக் காணொம்?
பெரியோர்களே, தாய்மார்களே, அதாகப்பட்டது, வாழ்த்த வயதில்லாத காரணத்தால், வணங்கி, துளசி அக்கா, கோபால் மாமா தம்பதியர் மேன்மேலும் இந்த முக்கியமான மகிழ்வான, நிறைவான நாளை, பல வருடங்கள் கொண்டாடி, மகிழ்வார்கள் இறைவன் அருளால் எனச் சொல்லிக்கொண்டு, வாய்ப்பளித்தமைக்கு அக்கா அவர்களுக்கு நன்றிகூறி, இன்னும் பல வருடங்களுக்கு இந்த வாய்ப்பளிக்குமாறு வேண்டி, அமைகிறேன்...
வாழ்த்துக்கள் துளசிம்மா
மனமார்ந்த வாழ்த்துக்கள்! கல்யாண தின சாப்பாடு நன்றாக (பார்ப்பதற்குதான்) இருந்தது!!!!
“கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாம்” என்று ஒரு சிவாஜி பட பாடல் காதில் ரீங்கரிக்கவில்லையா?
அட! சொல்ல வந்த விஷயத்தை சொல்லாம போயிட்டேனே!
வாழ்த்துக்கள் மேடம்!
//கல்யாண தின சாப்பாடு நன்றாக (பார்ப்பதற்குதான்) இருந்தது!!!!
//
:-))
கிருஷ்ணா இன்னும் தேர்தல் பீதியிலிருந்து விடுபடலை போலிருக்கே!
இருக்காதா பின்னே, 32 வருசம் ஆச்சுங்களே, கல்யாணம் கட்டி!//
என்னங்க இது.. கடைசியில போனா போறதுன்னு சொல்றா மாதிரி சொல்றீங்க..?
முப்பத்திரண்டு வருசம்..
சாருக்கும் ஒங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
பகவான் சன்னதியில அந்த நாள விருந்து சாப்பாடோட கொண்டாடறதுக்கு குடுத்து வச்சிருக்கணுமே..
அட, என் தங்கையின் திருமணநாளுக்கு வாழ்த்துசொல்லிவிட்டு தமிழ்மணத்திற்கு வந்தால் இணைய அக்காவிற்கு திருமணநாள்!! உங்களுக்கும் கோபாலிற்கும் இதேபோல் தங்கவிழா கொண்டாட வாழ்த்துக்கள் !!
துளசியம்மா+ அங்கிள்.. இருவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
கிருஷ்ணா,
வாழ்த்துகளுக்கு நன்றி.
நான் சொல்லவந்ததைப் பார்த்திபன் சொல்லிட்டார் பாருங்க.
தூக்கத்துலே இருந்து எந்திரிங்க கிருஷ்ணா, எலக்ஷன் முடிஞ்சுருச்சு.
செல்வா, பார்த்திபன், ஜெயசந்திரன், மணியன், டிபிஆர்ஜோ,
எல்லோருக்கும் நன்றிங்க.
பார்த்திபன் மறதி நல்லதுதான். இல்லேன்னா 3 பின்னூட்டம் ஏறி இருக்குமா?:-))))
டிபிஆர்ஜோ,
//பகவான் சன்னதியில அந்த நாள விருந்து சாப்பாடோட கொண்டாடறதுக்கு
குடுத்து வச்சிருக்கணுமே//
ஆமாங்க. அதுவும் ஒரு துரும்பு எடுத்துப்போடாம! உக்காரவச்சுப் பரிமாறிட்டாங்க.
மணியன்,
உங்கள் தங்கைக்கும் எங்கள் வாழ்த்துகளைச் சொல்லுங்க.
ஏங்க கஸ்தூரிப்பெண், அது எந்த சினிமாவுலெ வந்துச்சுங்க?
வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
நன்றி அரவிந்தன்.
உங்க பேரைப் பார்க்கும்போது 'குறிஞ்சிமலர் அரவிந்தன் பூரணி' ஞாபகம் வருகிறது.
துளசி - கோபால் - 32 - இன்னும் இதுபோல பல்லாண்டுகள் நன்கு வாழ வாழ்த்துக்கள்
தருமி,
நன்றிங்க.
இன்னும் 32 ஆஆஆஆஆஆஆஆஆ?
அப்ப(வும்) பதிவு போட புதுசா ஐடியா கிடைக்குதான்னு பார்த்து வச்சுக்கணும்:-)))
//அம்மாவுக்கு ( உங்க அம்மாவுக்கு)என் வாழ்த்துகளைச் சொல்லுங்க.//
கண்டிப்பா சொல்லிட்றேன்.
//அடுத்தவருஷம் 33. அதுவும் நல்ல நம்பர்தானே?//
அத அடுத்த வருஷம் சொல்வேன்ல.
வாழ்த்துக்கள் துளசி மேடம்.
//இல்லேன்னா 3 பின்னூட்டம் ஏறி இருக்குமா?//
இதனால என்ன பிரயோசனம்? எனக்கு வெளங்கலையே!
சிவமுருகன்,
அப்பச் சரி. அடுத்தவருசம் கண்டிப்பாச் சொல்லிருங்க.
கட்டதுரை,
வாங்க. வாழ்த்துகளுக்கு நன்றி.
அது ஒண்ணும் இல்லீங்க. பின்னூட்டம் கூடியிருக்குன்னு சொல்றதுதான்.
வாழ்த்துக்கள்..
அப்படியே கிழக்கபார்த்து நின்னீங்கன்னா இங்க இருந்தே வாங்கிக்குவேன்.
அம்மா,
//வாழ்த்துக்கள்..
அப்படியே கிழக்கபார்த்து நின்னீங்கன்னா இங்க இருந்தே வாங்கிக்குவேன்.//
மண்ணிக்கனும். நான் மறந்துட்டேன்.
எனக்காக ஒன்ஸ் மோர்.
ராசா,
உங்களுக்கில்லாததா?
ஆமாம். எப்ப...................? நாள் குறிச்சாச்சுல்லே?
லாவண்யா சிணுங்கினாங்கனெல்லாம் வந்துகிட்டு இருக்கேப்பா:-)))))
வாப்பா சிவமுருகா,
இங்கே எப்பவுமே கிழக்கேதான் பாக்கறது,
இன்னிக்காச்சும் சூரியன் வருமா வருமான்னு:-))))
"கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்...
கோபாலன் இல்லாமல்......"
'அண்ணன் காட்டிய வழி' னு நினைக்கிறேன்
ஹீரோ யாரு?
சிவாஜி
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்....'
ஆமா சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
சூடிக்கொடுத்தது துளசி மாலை தானே
எம்மோ எனக்கு வாழ்த்த வயசில்ல அதனால வணங்குதேன்... உங்க வீட்டய்யா கல்யான நாள் பரிசா என்ன குடுத்தாக...? தட்டுல அடுக்கி வச்சிருக்க சமாச்சாரங்களயெல்லாம் பாத்தாலே விருந்து பலமா இருந்திருக்குமுன்னு தோனுது...
வாழ்த்துக்கள் துளசி. வருடத்தை மறந்துவிட்டால் உங்களுக்கும் எங்களுக்கும் இரண்டு நாளே வித்தியாசம்... நீங்கள் வணங்கும் இறைவன் உங்களுக்கு எல்லா இனிமைகளையும் இன்னும் பொழியட்டும். வாழ்கவே!
செல்வராஜ் பதிவுல நீங்க சொல்லியிருந்ததைப் பார்த்தபின்புதான் இங்கு வந்தேன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் துளசிம்மா. படம் நல்லாயிருக்கு. என் அம்மாவும் எதிர்பாராது நடக்கும் இந்தமாதிரி விடயங்களில் மிக மகிழ்ந்து போவார்கள்.
வாழ்த்துக்கள்
எங்க ஊர்ல இருக்க ராதா கிருஷ்ணர் மாதிரியே இருக்காரே உங்க ஊர் கிருஷ்ணரும். இங்கேயும் சாப்பாடு அருமையா இருக்கும்.
Wish you many more happy returns of the day. Thanks for the virtual feast
அண்ணன் ஒரு கோவில் என்ற படங்க!!
சி.ஜி,
இது வேற படம். நீங்க பாதி ரைட்.
கஸ்தூரிப்பெண் பதில் சொல்லிட்டாங்க.
'அண்ணன் ஒரு கோயில்'
துளசி மாலை ரொம்பச் சரி.:-)))))
போட்டுக்குங்க 100%
வாங்க நெல்லைக் கிறுக்கன்.
எல்லாம் கோயில்லேயே சமைச்சுக் கொடுத்ததுங்க.
பரிசுன்னு ஒண்ணும் வாங்கிக்கலை. அதான் 32 வருசத்துக்கு முன்னாலே செஞ்ச தப்பை
உணர்ந்து மவுனமா இருந்துட்டாரு போல:-))))
செல்வராஜ்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.உங்க வீட்டுலேயும் எங்க வாழ்த்து(க்)களைச் சொல்லுங்க.
எல்லாம் மனம் போல வாழ்வுதான்.
செல்வநாயகி,
இப்பக்கூடப்பாருங்க , நீங்க ரெண்டாவதுமுறை வாழ்த்துச் சொல்லி இருக்கீங்க.
இதுவும் எதிர்பாராதது. டபுள் டிப்:-)))
விக்கடு ஏஞ்சல்,
இந்தியாவுக்கு வெளியேன்னா, எல்லாக் கோயில்களிலும் இப்படிப் பளிங்குச்சிலைகள்தான்
இருக்குங்க. முந்திமாதிரி கற்சிலைகள் எல்லாம் தமிழ்நாட்டோடு சரி.
இது ஹரே கிருஷ்ணாக் கோயில். அதனாலே ராதா கிடையாது. பலராமரும் கிருஷ்ணரும்னு
அவுங்க நம்பிக்கை.
தெய்வா,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.( சங்க வேலைகள் இருந்தும்கூட நேரம் கிடைச்சதா?)
கிருஷ்ணன்,
நன்றிங்க.
கஸ்தூரிப்பெண்,
அங்கே பாருங்க, நம்ம சிஜி தப்புத்தப்பாப் படம் பேரைச் சொல்லிக்கிட்டு இருக்கார்.
அவருக்குப் பாதி மார்க்தான்.
ஆமாம், நீங்க சொன்னது சரியான படம்தானா? இதுலேதானுங்களே,
அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை அதன் தீபமன்றோ'ன்னு ஒரு
பாட்டு இருக்கு?
இந்தப் படம் நான் மிஸ் பண்ணதுலே ஒண்ணு.
அப்பெல்லாம் படம் ரொம்பப் பார்க்க ச்சான்ஸ் இல்லே. இப்பன்னா
வீடியோ க்ளப் நடத்திக்கிட்டுக் கண்டதையும் பார்த்துக்கிட்டு இருக்கேன்:-))))
எல்லாம் நேரம்தான்:-)))
லேட்டானாலும் பரவாயில்லைன்னு நம் எல்லார் சார்பிலும் துளசி அக்காவுக்கு நான் அனுப்பின வாழ்த்து அட்டையை பார்த்துடுங்க. ஆடியோவுடன் பார்க்கணும்.
http://www.hallmark.com/ECardWeb/ECV.jsp?a=2849951893790M000000N
ஆஹா உடனே பார்த்துட்டீங்களே பரவாயில்லை.
ரமணி,
அட்டகாசமான கார்டு. ரொம்ப அனுபவிச்சேன்:-)))))
பாதி செண்ட்டன்ஸ் இல்லீங்க. இப்பெல்லாம் 'நான் பேச நினைப்பதெல்லாம், நீ பேசிட்டே'தான்.
நம்ம நண்பர் ஒருத்தர் சொல்வார், கல்யாணம் ஆகி 7 வருசம் முடிஞ்சுருச்சுன்னா, ரெண்டு பேரும்
ஒரே மாதிரி சிந்திப்பாங்களாம்.
அந்த நண்பருக்கு நாங்க வச்ச பேர் 'சீயக்காப் பொடி'.
'ச்சும்மாவா சொன்னான் சீயக்காப் பொடி'ன்றது நம்ம வீட்டுலே அடிக்கடி புழங்கும் வசனம்.
அருமையான கார்டுக்கு நன்றி, அனைத்து தமிழ்மணம் நண்பர்களுக்கும்.
மனமார்ந்த வாழ்த்துகள் துளசி அக்கா. கண்ணனின் கருணையே கருணை. :-) ஒரு தடவைக்கு ரெண்டு தடவை தரிசனம் குடுத்துட்டு பிரசாதமும் ரெண்டு தடவையும் குடுத்திருக்காரே. உடலுக்கும் உயிருக்கும் அவனே உறுதுணை.
என்னங்க அக்கா. கிருஷ்ணரும் பலராமரும்ன்னு சொன்னது இந்தப் படத்துல இருக்கிறவங்களைத் தானா? அவங்க சைதன்ய மகாபிரபுவும் நித்யானந்தரும் இல்லையா?
// இப்பெல்லாம் 'நான் பேச நினைப்பதெல்லாம், நீ பேசிட்டே'தான். //
இப்படியெல்லாம் எழுதி மாமாவை ஒன்றும் பேசவிடாமல் செய்துவிடுவீர்களா ?
:-)))
உங்கள் திருமண நாளில் உங்கள் இருவருக்கும் எங்களின் வணக்கங்கள்.
குமரன்,
வாழ்த்துக்கு நன்றி. கண்ணன் கருணையை கணக்குப் பாராமல் தந்துட்டார்.
ஸ்ரீ சைதன்யாவும், நித்யானந்தரும் கண்ணன் பலராமனின் அவதாரங்கள்தான்னு
இங்கே ஒரு ஹரேகிருஷ்ணா இயக்கத்துத்தோழி சொல்றாங்க.
கடவுள், யார் யார் எப்படி நினைக்கிறாங்களோ அப்படியே இருக்கறவர்தானே?
எனக்கு இந்த ரெண்டு சாமிச்சிலைகளும் பெருமாளும் தாயாரும்தான்.
லதா,
வணக்கம்.
மாமா பேசிட்டாலும்..... ம்க்கும்.
வார்த்தைகளை வெளியே நாமதான் பறிச்செடுக்கணும்.:-))))
மஞ்சுளா,
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
அதுதான் 'கிடைக்கணும்ங்கறது' இல்லே?
பின்னூட்ட நாயகிக்கும் பின்னூட்டப் பிரியருக்கும் அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்.. :)
என்ன கலர் சாரி எடுத்தீங்கன்னு கேட்கலாம்னு இருந்தேன்.. அப்புறம் உஷாக்கா வந்தா என்ன கேட்பாங்க.. அதான்.. அப்போவே சொல்லுங்க :)
//தப்பு தப்பா.....//
'அண்ணன் காட்டிய வழி னு நினைக்கிறேன்'-அப்டீனுதான் சொன்னேன்"சந்தேகமா இருந்ததாலெதான் அறுதியிட்டு சொல்லலே
'அண்ணன் ஒரு தீபம்' சரிதான்
தப்பு தப்பு
அண்ணன் ஒரு கோவில் சரி
வாம்மா பொன்ஸ்.
என்னா .......கலர்..... சாரியா.......?
இங்கே ஏதும்மா இந்த சாரிக் கடை எல்லாம்? நாந்தான் ஒண்ணு வச்சுருந்தேன்.
மூணு வருசம் முந்தி. ஒண்ணும் சரியாப் போகலைன்னு கடையை மூடியாச்சு.
அதுக்கப்புறம்தான் 'எழுத' வந்தேன்:-)))))
மூணு மாசமுந்தி இந்தியா போயிட்டு வந்தேனில்லை. அப்பவே கொஞ்சம்(!)
புதுத்துணிகளை அடிச்சுக்கிட்டு வந்ததுதான். அதுலே இருந்து ஒண்ணொண்ணா
ரிலீஸ் ஆயிக்கிட்டு இருக்கு.
ஒரு விஷயம் படிச்சேன், கொஞ்ச நாளைக்கு முந்தி. அதுலே போட்டுருக்கு,
'அப்புறம் பயன் படுத்தலாமுன்னு புதுத்துணி, பர்ஃப்யூம், இதெல்லாம் எடுத்து வைக்காதே.
அந்த நேரம் வராமலேயே போகலாமு'ன்னு இருந்துச்சு. சொன்னது நம்மூர் ஆன்மீகவாதிங்க
இல்லைப்பா. வெள்ளைக்காரன். அதை மட்டும் தப்பாம அப்படியே எடுத்துக்கிட்டேன்:-)))))
என்னங்க சிஜி.
அண்ணனுக்கே இவ்வளோ குழப்பமா?:-))))
வாழ்த்துகள் டீச்சர். நீடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
முட்டையில்லாமக் கேக்கா? நல்லாருக்குமா? மெத்து மெத்துன்னு இருக்காதே!
டாப் ஐட்டம் கிரீன் ஆப்பிள் துவையல்தான். எப்படிச் செஞ்சாங்களாம்? ஆப்பிளைக் கழுவித் துண்டு துண்டா நறுக்கி, கடுகு உளுந்து போட்டு வெங்காயம் தக்காளி போட்டு வதக்கி ஆப்பிளையும் சேத்து, மெளகா போட்டு அரச்சிர வேண்டியதுதானா?
ராகவன்,
நானும் கேக்கணுமுன்னு இருந்தேன். ஆப்பிளைத் துருவி இருந்தாங்க. மொதல்லே மாங்காய்ன்னு நினைச்சுக்கிட்டோம். நல்லாத்தானிருந்தது. அடுத்த வாரம் கேட்டுட்டுச் சொல்றேனே.
கேக் நல்லா மெத்துமெத்துன்னுதான் இருந்துச்சு. கோயில் விஷயமாச்சே. முட்டையெல்லாம் கூடாதுல்லெ?
ஆமாம். உங்க 'கனவு'க்கு ஒரு பதில் போட்டுருந்தேனே. பார்க்கலையா?
துளசி நான் முன்னே போட்ட பின்னூட்டம் வரலியே. யென்பா? படம்,பதிவு,சாப்பாடு,விருந்தாளிங்க, பின்னூட்டங்கள் எல்லாமெ சூப்பர்.
வல்லி,
நீங்க அந்தப் பின்னூட்டமாப் போடாம தனி மடலிலே போட்டுட்டீங்க. அதான்
இங்கே பப்ளிஷ் ஆகலை.
அதான் இப்ப வந்துருச்சே:-)))))
நன்றிப்பா.
ஆமாம் துளசி அக்கா. உங்களுக்குச் சொன்னவர் சரியாத் தான் சொல்லியிருக்கார். சைதன்ய மகாபிரபுவும் நித்யானந்தரும் கண்ணன் பலராமன் இவங்க அவதாரம் தான். இன்னொரு சிறப்பு சைதன்ய மகாபிரபு கண்ணன், இராதை ரெண்டு பேரோட அம்சமாகவும் பிறந்தவர்; இராதையைப் போல பொன் நிறம் கொண்டவர்; அதனால அவருக்கு பொன் அவதாரம் (பொண் அவதாரம் இல்லைங்க) Golden Avatar என்றும் பெயர்.
வாழ்த்துக்கள் துளசி ! எங்களுக்கும் மே மாதம் தான் 25 வருடம். பிரமாண்டமா கொண்டாடியாச்சு ! எங்க சிலவில் தான் !!!
//'அப்புறம் பயன் படுத்தலாமுன்னு புதுத்துணி, பர்ஃப்யூம், இதெல்லாம் எடுத்து வைக்காதே.அந்த நேரம் வராமலேயே போகலாமு' //
அக்கா, இது நான் எப்போவுமே பின்பற்றும் கொள்கை.. இது துணிக்கு மட்டுமில்லைக்கா, சாப்பாட்டுக்கும் இதே.. சாக்லேட், ஐஸ்கிரீம், கேக், முறுக்கு இதெல்லாம் எங்க வீட்ல வாங்கி ஸ்டோர் பண்ணவே மாட்டாங்க :)))))) - எனக்குப் பயந்து தான்
(பதிவுகளுக்கும் அதே தான்.. அப்புறமா படிச்சிக்கலாம், பின்னூட்டம் போட்டுக்கலாம்னு விட்டா மறந்து போய்டுது :)))
குமரன்,
உங்க விளக்கமும் அருமைதான். பொன் அவதாரம்!
ரவியா,
நன்றி.
ஆமாம், 25க்கு என்ன ஸ்பெஷலாச் செஞ்சீங்க? ( உங்க செலவுலேதான்), அதைச் சொல்லலியே.
உங்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்து(க்)கள்
நாங்க ஒரு வொர்ல்ட் ட்ரிப் போய்வந்தோம்.( எங்க செலவிலேதான்)
பொன்ஸ்,
முந்தி நானும் அப்படிதான். புதுப் பொடவை வாங்கினா உடனெ கட்டிக்குவேன்.
இங்கே வந்தபிறகு, எதுனா விசேஷத்துக்கு இருக்கட்டுமுன்னு எடுத்து வச்சுடறது,
இல்லேன்னா, மொதமொதல்லே மகள் கட்டிக்கட்டுமேன்னு இருந்துடறது.
இதெல்லாம் 'தீனி'க்கு இல்லை. அது உடனுக்குடன்:-)))
துளசிம்மா,வாழ்த்த்க்கள்.லேட்டா வந்தாலும் வாழ்த்து சொல்லிட்டோம்னு ஒரு நிம்மதி.ரெண்டு நாளா கணிணி ரொம்ப தொல்லை தருது.அதனால நேத்தெ சொல்ல முடியாம போச்சு.தப்பா எடுத்துக்காதிங்க
மீனா,
நீங்க நினைச்சீங்கல்லே அப்பவே அந்த வாழ்த்துக்கள் இங்கே வந்து சேர்ந்துருச்சு.
கணினியைவிட மனசு இன்னும் வேகமாப் போகும்:-)))
ராகவன் முட்டையில்லா கேக் கேட்டிங்களே,நாஒரு ரெசிபி தரேன்.ரொம்ப இஸி.ரொம்ப நல்லா இருக்கும்.அதுல டைர்ஃபிள் புட்டீங் பண்ணா பறந்து போகும்.
அம்மா! பணிவுகளும் வணக்கங்களும்.
வாங்க மலைநாடான்.
வணக்கம். நல்லா இருக்கீங்களா?
ஆமாம். வணக்கம் சரி.
பணிவு ?
எதுக்குப்பா, நாம் எல்லாம் நண்பர்கள்தானே?
Happy anniversary. Many many happy returns of the day.
:)
பிரேமலதா,
'தேங்க்ஸ்'ங்க.
இடியாப்பமும் கொத்துபரோட்டாவுமா ஜாமாய்க்கிறீங்க போல:-)))
//நாங்க ஒரு வொர்ல்ட் ட்ரிப் போய்வந்தோம்//
எந்த ஊர் என்று என்னும் முடிவு செய்யவில்லை. (சுற்றங்களின் அன்பளிப்பும் எங்கள் பங்களிப்புடன் !!)
இந்தியா போய் வந்தவுடன் தான்.
:))
ரவியா,
பேசாம இங்கே நியூஸிக்கு வாங்களேன். புது அனுபவமா இருக்கும். எல்லாம் இயற்கையப்பா
இயற்கை.
துளசி, லேட்டா வாழ்த்தறதுக்கு மன்னிக்கணும். நீங்க ஜி-மெயிலில் என்னோட வாழ்த்தைப் பார்த்திருப்பீங்கனு நினைச்சேன். வரலியா? என்னோட வாழ்த்துக்கள்.
துளசி
ரொம்ப நாள் கழிச்சு பதிவு பக்கம் வந்தா பந்தியைக் காட்டி பலவீனப் படுத்தறீங்களே!
துளசி, என் பின்னூட்டமும் வாழ்த்தும் (மெயிலில்) வரவில்லையா, என்ன பிரச்னை, ப்ளாக்கர் ஏதாவது சொதப்பலா தெரியலியே!
கீதா,
டபுள் வாழ்த்துகளுக்கு நன்றி. ப்லோக்கர் மெயிண்டனன்ஸ்ன்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சு. அதான்
ஒண்ணும் பப்ளீஷ் செய்ய முடியாமப் போச்சு.
யோகன்,
நன்றி. அக்காவையே வாழ்த்திக்கிட்டு இருந்தா ஆச்சா? எங்களுக்கெல்லாம் கல்யாணச்
சாப்பாடு எப்பப் போடப்போறீங்க?
தாணு,
வாங்க. வராதவங்க வந்துருக்கீங்க. அதான் சாப்பாடு போட்டு ஒரு வரவேற்பு:-)))
romba late naan. :(
திருமண தின வாழ்த்துக்கள் துளசி & கோபால்!
anpudan,
Mathy
மதி,
அதெல்லாம் லேட் ஒண்ணும் இல்லை. அடுத்தவருசம் வரைக்கும்
32வது கொண்டாட்டம் இருக்கு:-))))
Post a Comment