Wednesday, June 28, 2006

நியூஸிலாந்து பகுதி 48

தில்லானா மோகனாம்பாள் படத்துலே இப்படி ஒரு வசனம் வரும். மனோரமா நடனம் ஆடத் தயாராகிக்கோயிலுக்குப் போய்க்கிட்டு இருப்பாங்க. அப்ப வில்லன் சொல்வார், 'அங்கே கோயில்லே திருவாரூர் மோகனாங்கிநடனம் இருக்கு. உன் ஆட்டம் அங்கே செல்லாது'ன்னு."அதுக்கென்ன? நான் ஒரு ஓரமா ஆடிக்கிட்டுப் போறேன். அவுங்களுக்கு ஒரு கூட்டமுன்னா எனக்கும் ஒரு கூட்டம்இருக்காதா?"ன்னு! அதே கதைதான் உலகம் பூராவும்.


பைத்தியத்தைச் சுத்திப் பத்துப்பேர்னு சொல்றது நினைவு இருக்கா. இது பைத்தியத்துக்கு மட்டுமில்லை.எது சொன்னாலும் அதுக்கும் சில பேர் இருப்பாங்கதான், இல்லையா?


புது மதத்துக்கும் கூட்டம் சேர்ந்துச்சு. 1000க்கும் மேலே இருக்காங்க. இந்தக் கோயில் இருக்கற இடம்வேற ரொம்ப தூரத்துலே ஒரு மலைமேலே இருந்துச்சுல்லையா, அதுனாலே அங்கே போன வெள்ளைக்காரங்க ஒண்ணு ரெண்டுபேர்தான்.


எல்லாச் சாமியாரையும்போல நம்ம ருஆ வைப் பத்தியும் பயங்கரமான கதைகள் வந்துச்சு. இதைக் கேட்ட வெள்ளைக்காரங்க யாரும் இந்தப் பக்கம் தலைவச்சுப் படுக்கலை. கதை கட்டிவிடறதும் பரவலா இருக்கற மனுஷ சுபாவம்தான் போல. தமிழ்நாட்டுலே 'சாமியார்' கதைகளை எவ்வளோ கேட்டுருக்கோம்.


அப்பப் பார்த்து உலக மகா யுத்தம் வந்துச்சு. முதலாம் யுத்தம். அப்ப, ருஆ சொல்லிட்டார்,'நீங்க யாரும் சண்டைபோடப் போக வேணாம். இங்கே நிலத்துக்காக நாம் போட்ட சண்டையே போதும். இனி நமக்குச் சண்டை ன்னு ஒண்ணும் கிடையாது. அந்தக் காலமெல்லாம் போச்சு'ன்னார்.


இதைக் கேள்விப்பட்ட வெள்ளையர்கள், 'ருஆ , ஜெர்மனிக்கு ஆதரவாப் பேசறார். இவர் நம்ம எதிரிதான்'னு வதந்தி கிளப்பி விட்டாங்க. இவரைப் பிடிக்க போலீஸ்படை வந்துச்சு. 70 போலீஸ் வீரர்கள் வந்தாங்களாம்.இது நடந்தது மார்ச் 1916.


ருஆ வுக்கு ரெண்டு மகன்கள் இருந்தாங்க. ஒருத்தர் ஃபாட்டு, ஒருத்தர் டோகொ ( Whatu & Toko)


போலீஸ், இவரைக் கைது செஞ்சப்ப, துப்பாக்கி வெடிச்ச சத்தம் கேட்டுச்சு. யார் யாரைச் சுட்டாங்கன்னு இதுவரைக்கும் தெரியாது. ஒரே மர்மம். ஆனா வெடிச் சத்தம் கேட்டதும் டோகோ தன்னுடைய துப்பாக்கியை வெளியே எடுத்து தடதடன்னு நாலு போலீஸை சுட்டுட்டார். மத்த போலீஸ் படை இவரை வளைச்சுச் சுட்டுக் கொன்னாங்க. இந்த துப்பாக்கிச் சண்டை ஓய்ஞ்சப்ப ருஆ, ஃபாட்டு, இன்னும் நாலுபேர்னு ஆறு ஆட்களைக் கைது செஞ்சாங்க.


ருஆ மேலே தேசத்துரோகம், ராஜத்துரோகம் குற்றம் சுமத்துனாங்க. கூடவே 'ஆ.. போனமாசம் 12 தேதி கைது செய்ய வந்தப்ப ஆள் கிடைக்கலையே'ன்னும் ஒரு 'குற்றம் சுமத்துனாங்க. இந்த வழக்கு 47 நாள் நடந்துச்சாம்.ஒண்ணரை வருஷம் கடுங்காவல். அப்புறம் ஒரு வருஷம் கடின உடல் உழைப்புன்னு தண்டனை கொடுத்தாச்சு.மக்கள் சிலருக்கு இது ரொம்ப அநியாயமாப் பட்டுச்சு. எட்டு ஜூரர்கள், இந்த தண்டனையே ரொம்ப அதிகமுன்னு மகஜர்கூட கொடுத்தாங்களாம்.


கேஸ் நடந்தப்ப ஆன செலவுக்கு இவரோட மதத்து மக்கள் எஞ்சி இருந்த அவுங்க நிலத்தை விக்கும்படி ஆச்சு.அரசாங்கம் ஒரு உதவியும் செய்யலை. 1918லே இவர் விடுதலை ஆகி வந்து பார்த்தா, மாஉங்காபொஹடு Maungapohatu செட்டில்மெண்ட்டுலே இருந்து ரொம்பப்பேர் வெளியேறி இருந்தாங்க. ஒரு சிலர் மட்டுமே சாமியார்க்கூட இருந்தாங்களாம். பதினெட்டு வருசம் கழிச்சு 1937லே சாமியாரும் செத்துப்போனார்.


இவர் ஜெயிலிலே இருந்தப்ப, இன்னொரு மதத்தலைவரும் புதுசா முளைச்சார். இவர் சாதாரணக் குடியானவர்தான்.இவருக்கு ஒரு அற்புதக் காட்சி தெரிஞ்சதாம், 1918 நவம்பர் 8ந் தேதி. 'மவோரிகளை ஒன்று சேர்'னு ஒரு அசரீரிவேறகேட்டுச்சாம். விஷயம் வெளியே பரவுச்சு. ஜனங்கள் இவரைத்தேடி இவரோட பண்ணைக்கு வந்தாங்க. கூட்டம்சேர ஆரம்பிச்சது. 1920 கிறிஸ்மஸ் பண்டிகையன்னிக்கு இவர் 'பேச்சை' கேக்க சுமார் மூவாயிரம் பேர் கூடுனாங்களாம்.


இவரோட பேர் டஹுபொடிகி வீரெமு ரடனா (Tahupotiki Wiremu Ratana). இவர் ஒரு இடத்துலே உக்காந்துக்காம,நாடெங்கும் சுற்றுப்பயணம் போனார். எல்லா மவோரி குழுக்களையும் சேர்த்துக்க ஆரம்பிச்சார். எண்ணி அஞ்சே வருசத்துலே 'ரடனா சர்ச்' உருவாச்சு.


மவோரிகளோட நிலையை அரசாங்கத்துக்கு எடுத்துச் சொல்லறதுக்கு மனச்சோர்வடையாத நல்ல திடமான ஆட்கள், சட்டசபையிலே இருக்கணுமுன்னு சொல்லி, ரடனா லேபர் கட்சிக்கு ஆதரவு தந்தார். 1928லே நாலு பேர் இவர் சார்பாதேர்தல்லே நின்னு ஜெயிச்சாங்க. அதுக்கப்புறமும் மவோரிகள் ஒண்ணா இணைஞ்சு செயல்படணுமுன்னு சொல்லிக்கிட்டேஇருந்தார். ஒற்றுமைதான் பலமுன்னு சொன்னது மக்களுக்குப் போச்சு. வெள்ளையர் உலகத்துலே எப்படித் தப்பிப் பிழைச்சுக்கறதுன்னு மவோரிகளும் புரிஞ்சுக்கிட்டாங்க. இவரும் 1939லே உலக வாழ்வை விட்டுப் போனார்.


இதுக்கிடையிலே இன்னொரு தலைமையும் தோன்றி வேற வழியில் மவோரி முன்னேற்றத்துக்குப் பாடு பட்டது.இளவரசி பூஆ. Princess Te Puea Herangi of Waikato


மவோரிகள் தங்களுக்கு ஒரு அரசரைத் தேர்ந்தெடுத்தாங்கன்னு முந்தி படிச்சோம் பாருங்க. அந்த வம்சாவளியிலேவந்த அரசர் King Tawhiao வோட பேத்தி இவுங்க. இவுங்க அம்மாத்தான் இந்த அரசரோட மூத்த பொண்ணு. பட்டத்துஇளவரசி. அம்மா சாகறப்ப இந்த இளவரசி பூஆவுக்கு 15 வயசுதானாம். ஆனாலும் தன்னுடைய தாயாரை ஆதரிச்சகுடிமக்கள் நலனுக்காக இவுங்க பொறுப்பேத்துக்கிட்டாங்களாம். இவுங்க இருந்த ஊர் வைக்காட்டோ. இந்தப் பகுதிமக்களுக்கு வெள்ளைக்காரங்கன்னா ஒரே எரிச்சல், கோவம். சண்டைபோட்டு நம்ம நிலத்தை எல்லாம் பிடுங்குன அக்கிரமக்காரர்கள் இவுங்க என்ற எண்ணம் ஆழமா வேரூன்றி இருந்துச்சு. 'வெள்ளைக்காரங்க சங்காத்தமே கூடாது.அவுங்க நடத்துற ஆஸ்பத்திரிக்குப் போகக்கூடாது. அவுங்க பள்ளிக்கூடத்துக்கு நம்ம புள்ளைங்களை அனுப்பக்கூடாது.அங்கே போனா வெள்ளைக்கார மொழிதான் பேசணும். அப்ப நம்ம மவோரி மொழி என்னாறது? நம்மை அழிச்ச மாதிரி நம்ம மொழியையும் இவுங்க அழிச்சுருவாங்க' ன்னு இருந்தாங்க.


இவுங்களுக்கு போறாத காலம் அப்ப. பெரிய அம்மை நோய் பரவுச்சு. எக்கச்சக்கமான மவோரிங்க செத்தாங்க. அந்தக் கிராமத்துலே மவோரிகள் எண்ணிக்கை கணிசமாக் கொறைஞ்சு போச்சு. 'பட்ட காலிலே படும்' பழமொழி பொய்யாகுமா?சில வருசங்கழிச்சு 'ஸ்பானிஷ் ப்ளூ' காய்ச்சல் கடுமையா வந்துச்சு. அந்த கிராமத்துலே 197 பேருக்குக் கடுங்காய்ச்சல்.காய்ச்சல் வராம தப்பிச்சவங்களும் இருந்தாங்க. வெறும் 3 பேர். 200 பேர் இருக்கற கிராமம் முழுசும் சுகமில்லாமக்கிடக்கு. அரசாங்கம், 'யாருக்கு வந்த விருந்தோ?'ன்னு விட்டேத்தியா இருந்துச்சு.


ரொம்ப அக்கிரமம்.

16 comments:

said...

ஒரு கிராமத்தையே நிற்கதியா விட்ட ஆட்சியாளர்களை என்ன சொல்ல:-(( அதுவும் ஒரு நோய் தாக்கி இருக்கிற சமயத்துல.

said...

குரூர புத்திதான். வேற என்ன சொல்ல?(-:

said...

மவொரிகளின் சோக வரலாறு....
வெள்ளையரின் வன்முறை வரலாறு..
பொறுப்பு அதிகமாயிட்டதாலே
வேகமா எழுதறீங்களா?

said...

வாங்க சிஜி.

ரெண்டு மூணு பகுதி தொடர்ச்சியா எழுத நேரம் கிடைச்சது. அதான் எழுதி வச்சிக்கிட்டேன். நிறையப் படிக்கணுமில்லையா
நானும்?

said...

உலகம் முழுவதும் வெள்ளையர் 'ஆட்சி' ஒரே போலத் தான் இருக்கிறது.

said...

ஆமாங்க மணியன்.
அவுங்களைப் பொறுத்தவரை எல்லாருக்கும் ஒரே முகம்தான் காட்டுவாங்க. ஆளாளுக்கு வேறன்ற பிஸினெஸ் எல்லாம் இல்லை.

அது எப்பவும் 'கொடூரமுகம்'தான்.

said...

இவ்வளவு கஷ்டப்பட்டவங்க;ளைப்
பத்தி எழுத நம்ம ஊரிலேருந்து போயி நமக்கு சொல்ல வேண்டி வருது. அதுவே நன்மைதான்.நம்ம ஊரு பத்தி எழுத யாரெல்லாமென்ன பாடு பட்டாங்களோ?

said...

200 பேர் இருக்கற கிராமம் முழுசும் சுகமில்லாமக்கிடக்கு. அரசாங்கம், 'யாருக்கு வந்த விருந்தோ?'ன்னு விட்டேத்தியா இருந்துச்சு.
ரொம்ப அக்கிரமம். //

அரசாங்கம் நாட்டிலுள்ள எல்லோருக்கும் பாதுகாவலர்ங்கறதெல்லாம் வெறும் பேச்சுக்குத்தான் போல.. ஒலகம் முழுசும் இதே நிலைதான்..

said...

// 'வெள்ளைக்காரங்க சங்காத்தமே கூடாது.அவுங்க நடத்துற ஆஸ்பத்திரிக்குப் போகக்கூடாது. அவுங்க பள்ளிக்கூடத்துக்கு நம்ம புள்ளைங்களை அனுப்பக்கூடாது.அங்கே போனா வெள்ளைக்கார மொழிதான் பேசணும். அப்ப நம்ம மவோரி மொழி என்னாறது? //

அட என்னங்க விஷயம் தெரியாத ஆளா இருக்காங்க. இதெல்லாம் அடுத்தவனுக்கு சொல்லிட்டு அவன்னவன் சைலண்டா தன் குழந்தையை ஆங்கிலம் படிக்க அந்த பள்ளிக்கூடம் அனுப்ப வேண்டாமோ?

நம்ம ஆட்களோட சகவாசம் வெச்சுருந்தா இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டாங்களோ என்னவோ.

said...

//உலகம் முழுவதும் வெள்ளையர் 'ஆட்சி' ஒரே போலத் தான் இருக்கிறது//

பிருஞ்சு வெள்ளையனை விட ஆங்கில வெள்ளையன் எவ்வளவோ மேல். சரிதானே அக்கா?

said...

மானு,

சரித்திரம்ன்றதே அந்தந்தக் காலக்கட்டத்துலே நடந்ததை ஆவணப்படுத்தி வைக்கறதுதான்.
ஆனாலும் அதுலேயும் நேர்மை வேணும். நடுநிலையா இருந்து பார்த்தவங்க எழுதறதுதான்
உண்மையான சரித்திரம். இல்லீங்களா?

காலப்போக்குலே எத்தனையோ 'உண்மைகள்' மறைக்கப்பட்டுச் சரித்திரத்தையும்
திரிச்சு எழுதி மக்களை திசை திருப்பறதும் நடக்குதுங்களே.

இங்கே 'சரித்திரம்'ன்னு சொல்றது 200 வருசத்துக்குள்ளெ அடங்கிடறதாலேயும், அதை
நிறைய ஆட்கள் எழுதிவச்சுட்டுப் போனதாலேயும், அதைப் பத்துன விவரங்கள் எல்லாம்
தாராளமா பொதுமக்களுக்குக் கிடைக்கறதாலேயும்தான் இப்படி எதோ எனாலே கொஞ்சமாவது
எழுத முடியுது.

நம்ம நாட்டுச் சரித்திரம் ஆயிரக்கணக்கான வருசங்கள் ஆச்சே.

said...

டிபிஆர்ஜோ,

//அரசாங்கம் நாட்டிலுள்ள எல்லோருக்கும் பாதுகாவலர்ங்கறதெல்லாம்
வெறும் பேச்சுக்குத்தான் போல.. ஒலகம் முழுசும் இதே நிலைதான்//

சரியாத்தான் சொன்னீங்க.

said...

கொத்ஸ்,

'உள்குத்து' வெளிக்குத்து இதெல்லாம் அப்பப் படிச்சிருக்க மாட்டாங்க. கொஞ்சம்
அப்பாவிங்களாத்தான் இருந்துருக்காங்க.

said...

குப்பு செல்லம்,

ப்ரெஞ்சு வெள்ளையர்களைப் பத்திக் கொஞ்சமாவது படிச்சுட்டுத்தான் நான் எதாவது
கருத்து(???) சொல்லமுடியும்.

அதுதானேங்க நியாயம்?

said...

துளசி, நீங்க சொல்றது உண்மையான வார்த்தை. யாரோ எழுதினதைத் தான் நாமும் படித்துவிட்டு,அதியே மறுபேச்சு பெசாமல் ஏற்றுக்கொண்டு,
மாறு பேச்சு வருவதையும் கேட்டுக்கொண்டுதான் இருக்கோம்.நேற்று ஜெயா டி வி யில் சரித்திர நல்லாசிரியர் ஒருவர் வந்து தான் சரித்திரப் பாடம் சொல்லிக் கொடுத்த விதத்தைச் சொன்னார்.அதுவும் ஒரு வித்தைதான்.
ஆயிரவருஷம் ஆயிர நாமம்;-0))

said...

மானு,

டிவியிலே சரித்திரப்பாடம்?

பரவாயில்லையே. நல்ல சேவைதான்.