பழைய ஹிந்தி சினிமாங்களிலே பார்த்தீங்கன்னா, அநேகமா எல்லாக் கதாநாயகன்களும் பியானோ வாசிச்சுக்கிட்டுப் பாடுவாங்க. மியூசிக்குக்குச் சம்பந்தமே இல்லாம ரெண்டு கை விரல்களையும் அந்த பியானோவின் கீகளில் 'பேங் பேங்'குன்னு அடிச்சு அடிச்சு வாசிப்பாங்க. இந்த வியாதி நம்ம தமிழ்ப் படங்களுக்கும் மெதுவா வந்துச்சு. மேட்டுக்குடி ஆளுங்க காமிக்கறதுக்குத்தான் இந்த பியானோ.
வெள்ளைக்காரர்கள் ஆட்சியிலே வந்த எத்தனையோ விஷயத்துலெ இந்த பியானோவும் ஒண்ணு. அப்புறம் இதைத் தூக்கிட்டு அல்லாட முடியாதுன்னு கிடார் சினிமாவுலே இடம் புடிச்சுக்கிச்சு. அப்படியும் கொஞ்சநாள்(வருஷம்?) முன்னாலே வந்த பாரதிராஜா படத்துலே, நாயகன் (மேட்டுக்குடியாச்சே!) பனிமலையிலும் பியானோ வாசிச்சுக்கிட்டு இருப்பார்:-)))))
இங்கேயும் பியானோ வந்துருச்சு. மொத்தம் எட்டு லட்சம் ஜனத்தொகை இருந்த நாட்டுலே 43,000 பியானோ இருந்துச்சாம் 1901 கணக்கின்படி. 1400 பியானோ டீச்சருங்க அப்ப இருந்தாங்களாம். இப்பவும் பியானோ படிக்கறதும், வீடுகளில் பியானோ வச்சுக்கறதும் பரவலா இருக்குதான்.
நம்ம வீட்டுலேயும் மகள் படிக்கறப்ப ஒரு பியானோ 100$க்கு வாங்கிப்போட்டோம். கொஞ்சநாள் கழிச்சு அதை ட்யூன் பண்ண வந்தவர், அடுத்த ட்யூனிங்( ரெண்டு மூணு வருசத்துக்கு ஒருதடவை)வரை இது தாங்குனா அதிர்ஷ்டமுன்னு சொல்லிட்டுப் போனார். ரொம்பப் பழசாம். இதுவே பழைய வயலின்னா மதிப்பு எகிறி இருக்குமாம். சரி உடைச்சு அடுப்புலே வைக்கலாமுன்னா விறகு அடுப்பு இல்லாமப் போச்சு! சரி. வீட்டுக்கு ஒரு அலங்காரமா இருந்துட்டுப் போகட்டுமுன்னு விட்டுட்டோம். அப்புறம் அதுக்கும் ஒருஆஃபர் வந்து வித்துட்டோம். அது ஒரு தனிக்கதை. இப்ப நம்ம பியானோ ஸ்ரீலங்காவுலே எங்கியோ இருக்கு!)
அது கிடக்கட்டும். நாம புது அரசாங்கம் என்ன செஞ்சதுன்னு பார்க்கலாம்.
1880களிலே குடிவகைகள் ரொம்ப சல்லிசா இருந்துச்சு. காட்டம் வேற கூடுதல்.வயசு வித்தியாசம் பார்க்காம மதுவை வித்துக்கிட்டு இருந்தாங்களாம். இளவயசுப் பசங்க மது குடிக்கறதும், குடிச்சுட்டு அட்டகாசம் செய்யறதையும் பார்த்து மனம் வெறுத்துப்போன சில பொம்பளைங்க, Women's Christian Temperance Union'என்ற பேருலே ஒரு சங்கம் நிறுவி, மக்கள்கிட்டே எடுத்துச் சொல்லி, சின்ன வயசுப் பசங்களுக்கு மது விற்பனை செய்யறதி நிறுத்துனாங்க. 'எங்களுக்கு மட்டும் ஓட்டுப்போடற உரிமை இருந்துச்சுன்னா இந்த குடியையே மொத்தமா நிறுத்திருவோம்'னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. எந்த நாடா இருந்தாலும், 'குடி குடியைக் கெடுக்கும்'ன்றது உண்மைதானே?
இந்த சங்கத்தோட கிறைஸ்ட்சர்ச் கிளையின் தலை(வி)தான் கேட் ஷெப்பர்ட்.(இவுங்களைப் பத்தி நியூஸிலாந்து பகுதி 14லிலேசொல்லி இருக்கேன்) முப்பதாயிரம் பேர்கிட்டே கையெழுத்து வாங்கி ஒரு மகஜர் கொடுத்து, பல போராட்டத்துக்குப் பிறகு 1893 லே பொம்பளைங்களுக்கு ஓட்டுரிமை கிடைச்சது. உலகத்துலேயே இதுதான் மொத நாடு. ஆனானப்பட்ட இங்கிலாந்து அமெரிக்காவுலே எல்லாம் அதுவரை பொம்பளைங்களுக்கு ஓட்டுப்போடற உரிமையே இல்லை.
புது அரசாங்கம் நிறைய பள்ளிக்கூடங்க கட்டுச்சு. இதுக்கெல்லாம் காசு? அதான் இங்கெத்து இறைச்சி, பால்பொருட்கள் எல்லாத்துக்கும் இங்கிலாந்துலே பயங்கர மார்கெட் இருந்துச்சுல்லே. மொதல் முறை இறைச்சி கொண்டுபோன கப்பல்சரியா 98 நாள் பயணம் பண்ணி இருக்கு. இப்பத் தெரிஞ்சுபோச்சு, எத்தனை நாள் செல்லும், எப்படியெப்படிக் கொண்டு போலாம்ன்ற விஷயம் எல்லாம்.
தொழிற்சாலைகளுக்குன்னு சில சட்டதிட்டங்கள் போட்டாங்க. எத்தனை மணிநேர வேலை, எந்த வயசுலே வேலைக்குப் போகலாம், குறைஞ்சபட்ச சம்பளம் இதுக்கெல்லாம் நிர்ணயம் ஆச்சு.பொண்ணுக்கு எத்தனை வயசுப்பா? 14 பூர்த்தியாச்சா? அப்பத்தான் வேலை. பையனுக்கு வயசு 16 தானா? அப்போ வாரம் 48 மணி நேரம் மட்டும் வேலை செய்யலாம். ஓவர்டைம் எல்லாம் இல்லை.பொம்பளைங்களுக்கும் இதே ரூல்தான். 48 மணிநேர வேலை. சாயந்திரம் 6 மணிக்கு மேல் பொம்பளைங்க வேலை செய்யக்கூடாது.
இந்த்ச் சட்ட திட்டம் எல்லாம் பல மொதலாளிகளுக்கு இஷ்டமே இல்லை. தகராறு, வாக்குவாதம், ஸ்ட்ரைக்ன்னு எதாவது அப்பப்ப நடந்துக்கிட்டு இருந்துச்சு. மத்தியஸ்த்தம் செய்ய அரசாங்கமே சின்னச் சின்ன கோர்ட்டுகளை நிறுவுச்சு. கட்டப் பஞ்சாயத்து?
அரசாங்கம், பெரிய பெரிய விஸ்தாரமான நிலங்களை வாங்கி அதையே துண்டு( தோள் துண்டு இல்லீங்க)போட்டுச் சின்னச் சின்ன பண்ணைகளா மாத்துச்சு. இங்கே நார்த் கேண்ட்டர்பரியிலே ஒரு 34000 ஏக்கர் இடம் வாங்கி, அதை 650 பண்ணைகளா ஆக்குனதும், புதுசா வந்த குடும்பங்கள் அதை வாங்கி செட்டில் ஆனாங்க. பால்பண்ணை, ஆட்டுப்பண்ணை, மாட்டுப் பண்ணைன்னு ஆச்சு. இதுக்கு அப்ப செவியட் எஸ்டேட்ன்னு பேர். இப்ப செவியட் டவுன். புதுசுபுதுசா இப்படி ஊருங்களும் உருவாச்சு. ஊர் ஊருக்குப் பள்ளிக்கூடம், லைப்ரரின்னு நல்லகாலம் ஆரம்பிச்சது. ஆனால் டீச்சருங்க பாடுதான் கஷ்டம். ஒவ்வொரு வகுப்புக்கும் தொன்னூறு, நூறுன்னு பிள்ளைங்க. மேய்க்கறதுக்குள்ளே தாவு தீர்ந்துரும். எவ்வளவுதான் கண்டிப்பான டீச்சரா இருந்தாலும் புள்ளைங்க அடங்கறதுல்லையே.பின்னே எதுக்கு இருக்கு தோல்வார், குச்சி எல்லாம்? அடி பின்னறதுதான். நம்ம ஊர்லேயும் அந்தக் காலத்துலே புள்ளைங்களைப் பள்ளிக்கூடத்துலே சேர்த்துட்டு, பெத்தவங்களே ' சொன்ன பேச்சு கேக்காட்டா கண்ணை மட்டும் விட்டுட்டு தோலை உரிச்சுருங்க'னு டீச்சருங்க கிட்டே சொல்வாங்களாம்.
பொண்ணுங்களுக்கும் படிக்க ஆர்வம் வந்து அவுங்களும் படிச்சாங்க. 'டனேடின்' ஊரைச் சேர்ந்த 'எதில் பெஞ்ஜமின்'தான் சட்டம் படிச்சுப் பாஸ் ஆன மொதல் பொண் வக்கீல்.
'பேக்ட்டரி வேலைதான் நல்லா கிடைக்குதே. என்னாத்துக்கு வீட்டுவேலைக்குப் போறது? வீடுங்களிலே வேலை ஜாஸ்த்திப்பா. அதுவும் துணிகளைத் தொவைச்சு எடுக்கறதுக்குள்ளே பிராணன் போயிருது. வெளியே இருக்கற கொட்டகையிலே தாமிரப் பாத்துரத்துலே தண்ணியைக் கொதிக்க வச்சு அதுலே துணிகளை முக்கி ஊறவச்சுத் துவைக்கணும். வீட்டு வீட்டுக்கு வெள்ளாவி வச்சுக்கிட்டு இருக்கறது போல. இந்தக் குளுருலே யாராலே இப்படி மெனெக்கெடமுடியுது?' பொண்ணுங்களுக்கு விருப்பமே இல்லாமப் போச்சு.
வீடுகளுக்கு சுவத்துலே 'வால் பேப்பர்' போடறதும் அப்பத்தான் ஆரம்பிச்சது. பழைய நியூஸ் பேப்பர்களைப் பசைதடவி சுவத்துலே ஒட்டிக்குவாங்க. இதனாலே குளிர் கொஞ்சம் மட்டுப்பட்டது.
கழிப்பறைங்க வீட்டுக்கு வெளியிலே கட்டிக்கிட்டாங்க. சின்ன ஷெட்ங்க. உள்ளெ 'லாங் ட்ராப்' வசதி. நம்ம ஊர்லேயும் காந்திகிராமக் கக்கூஸுங்க இப்படித்தானே இருந்துச்சு.
டவுன்லே மட்டும் சாக்கடை கழிவுகள் எல்லாம் 'Night Cart' ராத்திரி வண்டியிலே வந்து சேகரிச்சுக்கிட்டுப் போய் ஒரு இடத்துலே கொட்டிருவாங்களாம். கடல்கரை அடுத்து இருக்கற இடமுன்னா எல்லாக் கழிவும் கடல்லே போயிரும்.

20 comments:
இப்பத்தான் நியுசிலாந்து பற்றி உங்கள் பதிவுகளபார்க்கிறேன். அருமையான தகவல்கள். இனிமையான பதிவு. இடையிடையே துணுக்கு.. அருமை ...அருமை...
கூடவே... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் எல்லாம் சேர்த்துக்கணும்.
//....அரசாங்கமே ..... கட்டப் பஞ்சாயத்து?//
:-)
வாங்க சிரில்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
இந்த நியூஸி பதிவு இதுவரை 40 தான் போயிருக்கு.
ப்ளொக் பதிய ஆரம்பிச்சதுக்கு 'உருப்படியா' எதாவது எழுதலாமுன்னுதான் ஆரம்பிச்சேன். இது என்னடான்னா நீண்டுக்கிட்டே போகுது.
சரித்திரத்தைச் 'சட்'னு சொல்ல முடியாதில்லைங்களா?
நன்மனம்,
அரசாங்கம்ன்றது எது? நாமதானே?:-))))
நமக்காக அரசாங்கமா, இல்லே அரசுக்காக நாமா?
வேலை நடக்கணுமுன்னா இப்படி எதாச்சும் செஞ்சாத்தான் உண்டு. ஒவ்வொண்ணுக்கும் கமிஷன் போட்டுக்கிட்டு இருந்தா.....?
துளசி
ஒரு நாட்டின் நாகரீக வளர்ச்சியும்,
கலாச்சாரமும் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படயில் அமைவது தெளிவாகின்றது
பழைய பகுதிகள்[1முதல் 30 முடிய]
படிக்க என்ன செய்வது?
[விடுபட்ட பாடங்களை கவர் செய்யனுமெ]
சி.ஜி,
உங்க மெயில் ஐடி அனுப்புங்க. பப்ளீஷ் செய்ய மாட்டேன். அதுக்கு
அனுப்பி வைக்கறேன். எல்லாம் ப்ரைவேட் ட்யூஷந்தான்.
இங்கே முந்தி ஒருத்தர் சொன்னார், சரித்திர டீச்சர் குண்டா இருக்க மாட்டாங்க. ஏன்னா ட்யூஷன் காசு வர ச்சான்ஸே இல்லைன்னு. அதைப் பொய்யாக்கலாம்:-))))
மெயில் ஐடி எப்படி அணுப்புவது?பின்னூட்டத்தில் போடுவதா?அல்லது உங்களுக்கு மெயில் அனுப்புவதா?
இங்க ஒருத்தர் இப்ப இப்படி சொல்றார்:"பொதுவா ஹிஸ்டரி ட்டீச்சர்ஸ் குண்டா இருக்க மாட்டாங்க.
அப்டி இருந்தா வீட்டுலெ ம்ற்றவங்க
நிறய சம்பதிக்றதெல்லாம் இவுங்களே............."
சிஜி,
பின்னூட்டமாவே போடுங்க. அதான் அதை பப்ளீஷ் செய்யமாட்டேன்னு சொல்லி இருக்கேன்லெ.
சொன்ன அந்த ஒருத்தர் யாரோ?
அது போட்டும். அங்கே டிபிஆர்ஜோ புதுப் பதிவு போட்டுட்டாரே.
எவ்வளவுதான் கண்டிப்பான டீச்சரா இருந்தாலும் புள்ளைங்க அடங்கறதுல்லையே.பின்னே எதுக்கு இருக்கு தோல்வார், குச்சி எல்லாம்? அடி பின்னறதுதான்.//
அப்ப ஒங்கக்கிட்டயும் இதெல்லாம் இருக்குன்னு சொல்லுங்க:)
அது போட்டும். அங்கே டிபிஆர்ஜோ புதுப் பதிவு போட்டுட்டாரே. //
அப்படீன்னா..? நீரு அங்க போம்யான்னு சொல்றீங்களோ ஜி! கிட்ட.. பாவங்க அவரு.. ஒவ்வொரு பதிவிலயும் பின்னூட்டம் போட்டு, போட்டு சோர்ந்து போயிருப்பாரு.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கட்டும்:)
அங்க ட்பிஆர் ஜோசப் சூரியன் 90
புதுப்பதிவு போட்ருக்காராமே,....
ஹே ஹே
டிபிஆர்ஜோ,
இப்ப குச்சி, தோல்வார் எல்லாம் கிடையவே கிடையாது.
இங்கே நம்ம சொந்தப் பிள்ளைங்களையே அடிக்க முடியாது. அது ஒரு க்ரைம்.
அப்புறம் எங்கே அயலார் புள்ளைங்களைப் பின்னுறது?
சி.ஜி,
நான் 'சூரியன்' படிக்கறதில்லை. ஊருக்குப் போய் வந்தப்ப அது மடமடன்னு எக்கச்சக்கமாயிருச்சு. சரி. புத்தகமா வரும்போது வாங்கிரணுமுன்னு முடிவு செஞ்சுட்டேன்.
ஒரு புத்தகம் கேரண்ட்டி பர்ச்சேஸ்!!!!
//ஆனால் டீச்சருங்க பாடுதான் கஷ்டம். ஒவ்வொரு வகுப்புக்கும் தொன்னூறு, நூறுன்னு பிள்ளைங்க. மேய்க்கறதுக்குள்ளே தாவு தீர்ந்துரும். எவ்வளவுதான் கண்டிப்பான டீச்சரா இருந்தாலும் புள்ளைங்க அடங்கறதுல்லையே.//
எல்லாரும் எங்களி ம்ஆதிரி நல்ல பசங்களா இருப்பாங்களா? என்ன டீச்சர் நான் சொல்லறது?
துளசி நல்ல பாடம்.காலம் காலமா கஷ்டப்படறதெல்லாம் பிள்ளைங்களும் பெண்களும் தானா?சி.ஜி. சாருக்கு அனுப்பும்போது எனக்கும் ஒரு காப்பி அனுப்புங்க. நீங்களா? குண்டா? யாரு சொன்னது?நாம வேணும்னா கனமில்லாத லேசான இளைய(?) அம்மாக்கள் சங்கம் ஆரம்பிக்கலாமா?
//எல்லாரும் எங்களி ம்ஆதிரி நல்ல பசங்களா இருப்பாங்களா? என்ன டீச்சர் நான் சொல்லறது? //
ஆமாம் கொத்ஸ்.
இப்பப் பாருங்க, அரியர்ஸ் கேட்டுக்கேட்டுப் படிக்க ஆசைப்படறாங்க நம்ம வகுப்புலே:-)))
மானு,
தனிமடல்லே அனுப்பறேன்.
//எவ்வளவுதான் கண்டிப்பான டீச்சரா இருந்தாலும் புள்ளைங்க அடங்கறதுல்லையே.பின்னே எதுக்கு இருக்கு தோல்வார், குச்சி எல்லாம்? அடி பின்னறதுதான்//
அங்க சொன்னதுதான் இங்கயும்.
பக்கத்தோட ஆரம்பத்தில இருக்கற யானையப்பாத்தாலே எங்க ஹிஸ்டரி டீச்சர் ஞாபகம் வராதா எங்களுக்கு.
அது டான்ஸ் ஆடுதா இல்ல உதைப்பேன்- னு சொல்லுதா, தெர்லியே.
ஐய்யோ, ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
டீச்சர் அடிக்காதீங்க.
பெருசு,
நம்ம யானைங்க என்ன சொல்லுதுன்னா....
'வாங்க சந்தோஷமா ஆடிக்கிட்டே சரித்திரம் படி(டை)க்கலாம்' ன்னு.
நல்ல பதிவு.
நன்றி சிவமுருகன்
Post a Comment