Saturday, June 10, 2006

எவ்ரிடே மனிதர்கள் - 5

மோர் உண்டோ?
-------------------------


இப்படிக் கேக்கறதுலே என்ன தப்பு?


தப்பு இல்லைதான். ஆனா ஒரு தடவை இல்லை ரெண்டு தடவை கேட்டா தப்பே இல்லைதான். ஆனா இதுவே ஆயிரம் தடவைன்னா? (ச்சும்மா ஒரு பேச்சுக்கு தான் இந்த ஆயிரம் கணக்கெல்லாம்). அதுவும் கல்யாண விருந்துலே! என்ன, கல்யாண வீட்டுலையா? அப்ப இது டூ மச். கல்யாண விருந்துலே மோர் இல்லாம இருக்குமா?


ஏன், இல்லாமலும் இருக்கலாமே! குழப்பறேனா? இது ஒரு கிறிஸ்தியானிகள் வீட்டுக் கல்யாணம். பொண்ணு வீட்டுலே கல்யாண விருந்து. பிரியாணியும், இன்னும் என்னென்னவோ நான்வெஜ் அயிட்டங்களுமா விருந்து தூள் பறக்குது.


நாமோ பையன் வீட்டு சைடு! அதாங்க, நம்ம அவராச்சனுக்குக் கல்யாணம். கூட வேலை செய்யற நண்பர்களை விட்டுறமுடியுமா? இந்த செட்டுலே ரெண்டு பேருதான் ஏற்கெனவே, அதாவது செட் சேர்றதுக்கு முன்னேயே கல்யாணம் ஆனவங்க. நம்ம கிருஷ்ணமூர்த்திக்கு ரெண்டு வயசுலே ஒரு பையன்கூட இருக்கான். இன்னொருத்தர் நாங்க. போன வருசம் கல்யாணம் முடிச்சோம்.


பொண்ணு வீடு பக்கத்து ஊர். அதனாலே கல்யாணத்துக்குப் போகவர, மாப்பிள்ளையே வண்டி ஏற்பாடு செஞ்சுருந்தார். நாங்களும் பரிசுப் பொருள்களை எடுத்துக்கிட்டுப் புறப்பட்டாச்சு. இதுலே என்ன ஒரு 'சிக்கல்'ன்னா நாங்க எல்லாருமே வெஜிடேரியன்கள். அதனாலே ஒரு ச்சின்னத் தயக்கம் இருந்துச்சுங்க. மாப்பிள்ளை சொல்லிட்டாரு, 'அதெல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது. உங்களுக்கு ஸ்பெஷலா சாப்பாட்டுக்குச் சொல்லி இருக்கு. கவலைப்படாம கல்யாணத்துக்குவந்து சேருங்க'ன்னு.


இதோ அங்கே போய்க்கிட்டே இருக்கோம். போய்ச் சேர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். அதுவரைக்கும் நம்ம கிருஷ்ணமூர்த்தியைப் பத்திச் சொல்லவா?

அவருக்குச் செட்டிநாட்டுலேக் காரைக்குடிபக்கம். பொண்ணும் அந்தப் பக்கத்துலெ இருந்துதான் எடுத்தாங்களாம்.பொண்ணு வீட்டுலே கொஞ்சம் செல்வாக்கு அதிகமாம், அவரே சொன்னதுதான்.


நாங்க, காதல் கல்யாணம். ரெண்டு வீட்டுப் பக்கமும் ஆதரவு இல்லை. அதனாலே ரொம்ப அடக்கி வாசிச்சுக்கிட்டு இருந்தோம்.ரொம்பச் சாதாரண வாழ்க்கை முறைதான். செட்டாக் குடித்தனம். அலட்டிக்க எல்லாம் முடியாது. வருமானத்துக்குள்ளேயேஎல்லாம் அடக்கி வைக்கணும். ச்சும்மா சொல்லக்கூடாது....அப்படி வைக்கத் தெரிஞ்சவளாக்கும் நான்! க்கும்


ஒரு நாள் கிருஷ்ணமூர்த்தியோட வீட்டுக்குப் போயிருந்தோம். கேள்விப்பட்டதையெல்லாம் வச்சு, கற்பனை செஞ்சுக்கிட்டுப் போனது 100 % தப்பாப் போச்சு. பாயைக் கொண்டு வந்து விரிச்சாங்க அவுங்க மனைவி. கொஞ்ச நேரம் பேச்சுலே போனது. ஒவ்வொரு வார்த்தையிலும், 'கவனமா' அகங்காரத்தோட பேசுனாங்க. இன்னிக்கு என்ன சமையல்னு கேட்டாங்க.நானும், பீன்ஸ் பொரியல், ரசம்னு சொன்னேன்.


"ரசம்ன்னா எங்க வீட்டுலே தக்காளி ரசம்தான்."


"அப்படீங்களா? நாங்களும் ரசத்துலே தக்காளி போடுவோம்"

" ஊஹூம்... நாங்க தக்காளியை அப்படியே கையாலே நசுக்கிக் கரைச்சு ரசம் வைப்போம்"சரிதான், இவுங்ககூடப் பேசிக்க ஒண்ணுமில்லைன்னு மெதுவாப் பேச்சை மாத்திட்டேன். காஃபி கொண்டு வரேன்னு சொன்னாங்க. வேண்டாங்க, தண்ணி மட்டும் தாங்கன்னு சொல்லிட்டு, அவுங்களுக்கு உதவியா அடுக்களைப் பக்கம் போனேங்க. போனா...... என்னாத்தைங்க சொல்றது?


எங்க வீடே மேலுங்க, பாத்திரம் பண்டமுன்னு அழகா அடக்கமா இருக்கு. முக்கியமா சுத்தமா பளிச்சுன்னு இருக்கு.ஆனா இங்கே?...............என்னத்தைப் பெரிய இடமோ?


அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, அவர் மனைவி ஊருக்குப் போயிட்டாங்க. இவர் மட்டும் தனியா இருந்தார். அப்ப அவருக்கு உடம்பு சரியில்லாமப்போய் ஜுரமாப் படுத்துக்கிட்டார். மழைக்காலம் வேற. சொல்லணுமா?எங்க இவர்தான், போய்ப் பார்த்துட்டு வந்து, பாவமா இருக்குமா. கொஞ்சம் ரசம்சாதம் செஞ்சு கொடுக்கலாமுன்னு சொன்னார். நானும் அவசர அவசரமா சாதம், ரசம், ஜுரக்காரருக்குத் தொட்டுக்க எளிதாயும், ருசியாவும் இருக்கட்டுமேன்னுபருப்புத் துவையல் செஞ்சேன். அப்பெல்லாம் மிக்ஸியெல்லாம் நம்ம ஐவேஜுலே இல்லாத அயிட்டம். இருக்கவே இருக்கு அம்மிக்கல். அடிக்கற மழையிலே தனியாக் குடையும், சோறுமாப் போகவேணாமுன்னு நானும் கூடவே போனேன்.


நிஜமாவே மனுஷர், பாவமாப் பாயிலே படுத்துக்கிட்டு இருக்கார். அப்பத்தான் நல்லாப் பார்க்கறென், அங்கெ ஒரு கட்டில்கூட இல்லைங்க. ச்சில்லுன்னு இருக்கு தரையெல்லாம். செல்வத்துக்கும், அந்த வீட்டுக்கும் சம்பந்தமே இல்லாதது போலஇருந்துச்சுங்க. அவர் வீட்டுக்குத் தகவல் அனுப்புனாராம். ஆனா அவுங்க தனியா வரமுடியாதுன்னுட்டு வரலையாம்.அதுக்கப்புறம் அந்தம்மா ரெண்டு மாசம் கழிச்சுத்தான் வந்தாங்க. இவர்தான் போய்க் கூட்டிட்டு வந்திருக்கார்.


சரி சரி. கல்யாணவீடு வந்துருச்சு. எல்லாரும் இறங்குங்க. இந்தக் கல்யாணத்துக்குக்கூட மனைவியைக் கூட்டிட்டுவரலை அவர்.
உள்ளே நுழைஞ்சதும், எல்லாருக்கும் கலர் உடைச்சுக் கொடுத்தாங்க. அப்புறம் பக்கத்துலே இருக்கற சர்ச்சுலே கல்யாணம். மாப்பிள்ளை கூடவே நடந்து போனோம். அங்கெ அவுங்க சம்பிரதாயப்படிக் கல்யாணம். மோதிரம் மாத்துனாங்க. தாலியும் கட்டுனாங்க. அப்புறமும் நிறையப் பாட்டுக்கள் பாடுனாங்க. மூணுநாலுவாட்டி ஜெபம் செஞ்சாங்க. நாங்களும் ஒண்ணும் சரியாப் புரியலைன்னாலும், அங்கே இருக்கற மத்தவங்க செய்யறதையெல்லாம் காப்பி அடிச்சுக்கிட்டே இருந்தோம். முட்டி போட்டு, எழுந்து, பாட்டுப் பாடி, திரும்பவும் முட்டு குத்தல், ஜெபம், பாட்டுன்னு இருந்ததுலே பசி கபகபன்னு வந்துருச்சு.


கறிமீன் தின்னாதவங்களுக்குன்னு கல்யாண வீட்டுக்குப் பக்கத்து வீட்டுலே சாப்பாடுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க.எங்களையெல்லாம் மாப்பிள்ளையே அங்கே கூட்டிக்கிட்டுப் போனார். அப்பவே இவர் ஆரம்பிச்சுட்டார்,'மோர் உண்டோ?'ன்னு.


சாப்பாடெல்லாம் பரிமாற ஆரம்பிச்சதும் பருப்புச் சாதத்துலேயே இன்னொருக்காக் கேட்டார் மோ.உ?' இருக்கு. இதோ கொண்டு வர்றோம்' ன்னு சொல்லிட்டு உள்ளே போனாங்க ஒருத்தர். போனவர் போனவர்தான்.ரொம்ப நேரமா வரலை. அதுக்குள்ளெ நம்ம 'கி.மூ.' 'மோ.உ' ன்னு கேட்டுத் தள்ளிட்டாரு! 'மோருக்காக ஒருத்தர் பக்கத்து வீட்டுவரை போயிருக்கார். கொஞ்சம் பொறுத்துக்குங்க'ன்னு சொன்னாங்க.இதென்ன சிட்டியா? பக்கத்து பக்கத்துலே ஒட்டிக்கிட்டு வீடுங்க இருக்கறதுக்கு? கிராமம். ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்குமே வேலி சுத்திக்கிட்டுப் போக அஞ்சு நிமிஷ நடை!


இங்கேயோ, ஒரு ஜீவன் மோருக்காகத் துடிக்குது, துவளுது. அதைப் பாக்கப் பாக்க எங்களுக்கெல்லாம் மானக்கேடா இருக்கு. வந்த இடத்துலெ ஒண்ணு இல்லேன்னா ச்சும்மா வாயை மூடிக்கிட்டு இல்லாமஇப்படி இருந்தா எப்படிங்க? ஒரு வேளை, ஒரே ஒரு வேளை, அந்த மோரை ஊத்திக்கலேன்னாதான் என்ன?


நாங்க சொன்னதையெல்லாம் காதுலே வாங்குற நிலமையிலேயே கி.மூ.இல்லை.


பாவம், அலறிஅடிச்சுக்கிட்டு வேகவேகமா ஒரு ச்சின்னச் சொம்புலே மோர் கொண்டுவந்து கொடுத்தார் ஒருத்தர்.எங்கே அலைஞ்சு வாங்கி வந்தாரோ?


எங்களுக்கு இருந்த வெறுப்புலே, நாங்க யாருமே மோர் ஊத்திக்கலை. இதெயெல்லாம் கொஞ்சம்கூட சட்டை செய்யாம மோர் சாதம் சாப்பிட்ட கி.மூ. ஒண்ணுமே நடக்காதமாதிரி கம்பீரமாப் போய்க் கையைக் கழுவிக்கிட்டு வந்தார்.


அதுக்கப்புறம் சம்பிரதாயமான பேச்சுகள் எல்லாம் முடிஞ்சு நாங்க திரும்ப எங்க ஊருக்கு அதெ வண்டியிலே வந்து சேர்ந்தோம்.
டவுனுக்குள்ளே ஆரம்பத்துலேயே நம்ம கி.மூ வோட வீடு இருக்கறதாலே, அவர்தான் மொதல்லே இறங்கிக்கிட்டார்.அப்பத்தான் கவனிச்சோம், கல்யாணப் பரிசா அவர் கொண்டு வந்திருந்த ச்சின்ன பேக்கெட், அவரோட சட்டைப் பாக்கெட்டிலேயே இருந்தது.


"அடடா.... கிஃப்டைக் கொடுக்க மறந்துட்டீங்க போல இருக்கே?"


ஆமாமாம். இவர் பண்ண கலாட்டாலே அது எப்படி ஞாபகம் இருக்கும்? மனசுக்குள்ளெ முணுமுணுக்கறென்.


" இல்லை. சாப்பாடே சரியில்லை. ஒரு மோருக்கு என்ன பாடு படவேண்டியதாப் போச்சு. அதான் கொடுக்கவேணாமுன்னு திருப்பிக் கொண்டு வந்துட்டேன்"


"......................."


-----------
அடுத்த வாரம்: Betty

நன்றி: தமிழோவியம்

29 comments:

said...

பாத்தீங்களா?

இந்த கி.மூ. இன்னைக்கி நிறைய பேர் இருக்காங்க வாய் சவடாலடிச்சிக்கிட்டு..

அவரோட காரக்டர ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க..

said...

வாங்க டிபிஆர்ஜோ.

ஆமாங்க. அப்ப ச்சின்னவயசு எங்களுக்கு. அனுபவம் போதாது. எல்லாத்தையும் வாயை 'ஆ'ன்னு தொறந்துக்கிட்டு நம்பறதுதான்:-)))

said...

அல்பங்கள்.இவை தற்பொழுது அதிகரித்து வருகின்றன,

said...

பாவம்ங்க அந்த கி.மு.

தாளிச்சு எடுத்திட்டீங்க... தாளிச்சத வேஸ்ட் பண்ணாம அந்த "மோர்" ல போட்டு கொடுத்திடுங்க.....

அட கோபால் க்கு இல்ல கி.மு க்கு

said...

நீங்கள் விவரித்திருக்கும் கி மு தம்பதியினரை சாதாரணமாக நிறையவே பார்க்கலாம். தங்கள் குடும்ப வட்டத்திற்குள்ளேயே கிணற்றுத்தவளையாக இருந்து கொண்டு பொது இடங்களிலும் மற்ற கலாசாரங்களை எதிர்கொள்ளும்போதும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் எரிச்சலூட்டக் கூடியதுதான்.
//கறிமீன் தின்னாதவங்களுக்குன்னு //
இது கரிமீனல்லே :)

said...

உள்ளேன்!

கொண்டு வந்த பின்னூட்டத்தை கையோட எடுத்துக்கிட்டுப் போறேன். :)

said...

//இலவசக்கொத்தனார் said...
உள்ளேன்!

கொண்டு வந்த பின்னூட்டத்தை கையோட எடுத்துக்கிட்டுப் போறேன். :) //

மிஸ், மிஸ், பிடிங்க உங்களுக்கு சொந்தமானத எடுத்துக்கிட்டு போறாரு.:-))

ஆகா, கொத்ஸ், நாங்கல்லாம் இன்னும் அப்ரசிண்டுங்கதான். விலாசிட்டீங்க.:-))

said...

சிஜி,

நன்றி.( உதவிக்கு வந்ததுக்கு)

said...

மனசு,

உங்களுக்குப் பெரியமனசுங்க. ஆனா
இப்ப கி.மூ. எங்கே இருக்காருன்னே தெரியலைங்களே.

said...

மணியன்,

கருத்துக்கு நன்றி.
ஆமாம். எது சரி? கறி மீனா இல்லே கரி மீனா?

நாந்தான் கறிக்கும் மீனுக்கும் நடுவிலே இடைவெளி இல்லாம விட்டுட்டேன். அதாலெ அர்த்தம் மாறிப்போச்சா?

வேகம் பறயணும்,கேட்டோ.

said...

கொத்ஸ்,ஆமாம். நீங்க கி.மூ. கிட்டே ட்ரெயினிங் எடுத்தீங்களா?:-))))

said...

நன்மனம்,

கொத்ஸ்தான் இனிமே க்ளாஸ் லீடர்:-))))

said...

துளசி, கி.மூ சவடால் பேச்சில் மட்டும் தானா.எனக்குத் தெரிந்த ஒரு அம்மா கூட இப்படித்தான்.பிறந்த வீட்டுப் பணப் பெருமை தாங்காது. தங்க பொம்மை கொலு வைத்ததாகச் சொல்லுவார்கள்.

said...

ஹா..ஹா..இந்த மாதிரி ஆளுங்களை ரொம்பவே பார்த்திருக்கேன்.

அதுசரி...ச்சின்ன வயசில கேட்ட,பார்த்த கதைகளே இப்பத் தான் ஒண்ணொண்ணா வருதா???

ஹூம்...எப்படியும் ஒரு அம்பது வாரம் வருமா இந்தத் தொடர்???

வழக்கம் போலவே கலக்குங்க...

said...

மானு,

தங்கப் பொம்மையா? பேஷ் பேஷ்.
அப்புறம் அதைச் சுத்திப் போலீஸ் பொம்மையை வச்சிருப்பாங்களோ?

said...

சுதர்ஸன்,

//எப்படியும் ஒரு அம்பது வாரம் வருமா இந்தத் தொடர்???//

அதெப்படி? கடைசியாப் பார்த்தது உங்களைத்தானே. நீங்க அம்பதுக்குள்ளே இல்லையே.

உங்க நம்பர் 516:-)))

தமிழோவியக்காரங்க போரடிச்சு நிறுத்தச் சொல்லும் வரைன்னு வச்சுக்கலாமா?:-)

said...

//கொத்ஸ்தான் இனிமே க்ளாஸ் லீடர்:-))))//

ஆஹா. நன்றி டீச்சர். எனக்கு இப்படி ஒரு பொறுப்பை அளித்து கௌரவப்படுத்திய உங்கள் பெருமைக்கு எந்த வித களங்கமும் வராமலும், பெருமைமிக்க இவ்வகுப்பின் பாரம்பரியத்தை நிலைநாட்டவும் அயராது உழைப்பேன் என உறுதி கூறும் இக்கட்டத்திலே.... சோடா குடுங்கப்பா.

அப்புறம், பசங்களா நாளயிலேர்ந்து நீங்க போர்ட் எல்லாம் துடைச்சி க்ளீனா வைக்கணும். அப்புறம் டெய்லி எனக்காக சாப்பாடு எடுத்துக்கிட்டு வரணும். முன்னாடி பெஞ்ச்காரங்களா, என் ஹோம்வொர்க் எல்லாம் நீங்கதான் பண்ணி எடுத்துக்கிட்டு வரணும்.

என்னை லீடரா ஏத்துகிற உங்களுக்கு இனிமே உங்க எல்லாருக்கும் ரெண்டு ரூபாய்க்கு நோட்டும் இலவசமா பஞ்சு மிட்டாயும் தர ஏற்பாடு பண்ணறேன். இதான் எனக்கு முதல் வேலை.

அப்புறம் போன கிளாஸ் லீடர் அப்புறப்படுத்திய போட்டோ எல்லாம் திரும்பி அந்த கிழக்கு சுவரில் மாட்டி வையுங்க. மறந்துறாதீங்க. நம்ம வகுப்பில நிறையா பேரு பெயில் ஆனதுக்கு அதான் காரணம்.

இதெல்லாம் செய்யுங்க, நான் தில்லியில் இருக்கிற டீச்சரை,ச்சீ, தள்ளி இருக்கிற டீச்சரை பார்த்துட்டு வரேன்.

said...

சூப்பருங்க..........
என்ன ஒரு தனித்தன்மை.
இப்படிப்பட்ட உள்ளங்களை நானும் பலமுறை கடந்து உள்ளேன்.
இப்பொழுது அவர்களை கண்டால் ஒதுங்கவும், ஒதுக்கவும் செய்கின்றேன்.

said...

முந்திக் காலத்துலே ஒரு பழமொழி சொல்வாங்க. ஒரு துரும்பைக் கிள்ளிப்போட்டு,
'நீ மாமியார்'னு அதுக்குச் சொல்லிட்டாப் போதுமாம். ஆடுஆடுன்னு ஆடிருமாம்.

அந்தக் கதையால்லே இருக்கு, நம்ம 'கொத்ஸ் க்ளாஸ் லீடர்'னு சொன்னது!!!!!

அப்பப்ப 'உள்ளேன் உள்ளேன்'ன்னு சொல்லிட்டு, வகுப்புலே இருந்து தப்பிச்சு நிறைய
எலக்ஷன் மீட்டிங் வேற போயிருக்கறார். யாரும் கோள் முட்டலை. அப்பட்டமாத் தெரியுது.

லீடர் பதவி மறு பரிசீலனையில் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்ளும் இந்த நேரத்தில்
( ஐய்யய்யோ..... இதுதான் ஆபத்து. இவுங்களோட பேசிப்பேசி இவுங்களை மாதிரியே ஆயிட்டேனே....)

said...

வாங்க நாகை சிவா.

மக்கள்ஸ் எல்லாருக்கும் வெவ்வேறு குணநலன்கள் இருக்கறது இயற்கைதானே. இப்பெல்லாம்
நானும் கண்டும் காணாமலும் தான் போயிடறேன்.

said...

எனக்கு ஒரு உறவுக்காரர் இப்படித்தான்,
எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும், வெந்நீர் இருக்கான்னு போட்டுத் துளைச்சு எடுத்திடுவார்!
இவருக்காக, ஃப்ளாஸ்க்கில் வெந்நீர் எடுத்துக்கொண்டு போய், போன இடத்தில் மானமாய்த் திரும்பி வந்த நேரங்கள் பல உண்டு!!

said...

ஆ.வி.யில் முன்பு கோபுலுவின் "கேரக்டர்" என ஒரு தொடர் வரும்.

அந்த வர்ணனைக்கு ஏற்ற மாதிரி, கோபுலு ஒரு படமும் போடுவார்.

அதைப் பார்த்தாலே, முழு கேரகடரும் விளங்கி விடும்.

அது போன்ற ஒரு படம் இல்லாததுதான் குறை!!

{எப்பவாவது நம்ம பக்கமும் வந்தா கொஞ்சம் தெம்பா இருக்குமில்லை!]

said...

வாங்க SK.

என்ன இப்படிச் சொல்லிட்டீ ங்க. உங்க பக்கம் வராமலா இருக்கேன்.
எல்லாம் வந்து பார்த்துட்டுப் போறதுதான்.

வந்த அடையாளம் மட்டும் வைக்கறதுல்லேப்பா.

உண்மையைச் சொன்னா 'அனுபவி ராசா அனுபவி' பிடிச்சிருதுச்சு:-)))

said...

நானும், இந்த கிஃப்ட் மறந்து கொண்டுந்திட்டேனு சொலிக்கிட்டு மூக்கபுடிக்க திண்ணுட்டு அப்புறம் அதுல சொள்ளை, இதுல சொள்ளைன்னு வர ஜன்மங்களை பார்த்துருக்கேன்.

ஓ உங்க எவ்ரிடே மனிதர்கள் சீர்யல் பதிவி இதான்னா, இன்னைக்கு தான் படிக்கிறேன்!

said...

வாங்க உதயகுமார்.

அப்பப்ப சந்திச்ச மனிதர்களைப்பத்திக் கொஞ்சம் சொல்லலாமுன்னுதான் இந்தத் தொடர்.
நம்ம SK சொன்னாப்புலே ஒரு கோபுலு கிடைச்சிருந்தாருன்னா விசேஷமா இருக்கும்.

said...

டீச்சர்,
கருப்பாக இருப்பதால் அது கரிமீன் தான். சிவப்பாய் இருக்கும் இறால் செம்மீன். அதிக இறைச்சி கிடைக்கும் வெள்ளை லகான் கோழியை கறிக் கோழி என்பார்கள். கரிமீன் ஃப்ரையும் பொளிச்சதும் அசலாயிட்டு இருக்கும் கேட்டோ :)

நீங்க கறியும் மீனும் என்று சொல்ல வந்தீர்களோ ?

said...

மணியன்,

ஆணோ? ( அங்கெனெயாணோ?)

அடடா... இந்த கரி மீனுக்கு இவ்வளோ இருக்கா? செம்மீன் மட்டும்தான் இதுவரை தெரியும்(-:

ஏதாயாலும் இப்போள் நல்லோணம் மனசிலாயி. நன்னி கேட்டோ.

said...

அக்கா, நீங்க எழுதினதுலயே இந்த கி.மூ தான் ரொம்ப பிடிச்சிருந்திச்சி.. அப்படியாவது அந்த கவரைக் கொடுக்க மறந்துட்டேன்னு ஏதாச்சும் சொல்வார்னு பார்த்தா, இப்படி பட்டுன்னு போட்டு உடைச்சிட்டாரு !! :)

said...

பொன்ஸ்,

ஒரு விதத்துலே இந்த மாதிரி ஆளுங்களை நம்மலாம். எல்லாத்துலேயும் ஒரு வெளிப்படை.

உள்குத்து விவகாரமெல்லாம் இல்லை.