Tuesday, June 20, 2006

நியூஸிலாந்து பகுதி 45

ஒரு நாட்டோட முதுகெலும்பு என்னவா இருக்கும்? இதுலெ என்ன சந்தேகம்? விவசாயம்தான்.எல்லா ஜனங்களுக்கும் வயிறு காயாம சோறு இருந்தாத்தானே மத்ததைப் பத்தி நினைக்க முடியும்?


ரீஃபார்ம் பார்ட்டின்னு ஒண்ணு மும்முரமா அரசியலிலே ஈடுபட்டுச்சு. 20 வருசமா லிபரல் பார்ட்டிஆண்டாலும், மக்களுக்கு திருப்தி இல்லை. எப்பவும் எல்லாத்துலேயும் எல்லாரும் ஒரே கருத்துவச்சிருப்பாங்களா என்ன?பில் மாஸ்ஸெ இவரை, பார்மர் பில் மஸ்ஸென்னாத்தான்( Farmer William Massey) நிறையப்பேருக்குத் தெரியும். விவசாயி.அரசியல் ஆர்வம். ரீபார்ம் கட்சி ஆளு. கடினமான உழைப்பாளி. பண்ணையிலே உழைக்காம இருக்க முடியுமா?


ஒரு நாள் வைக்கோலை எல்லாம் பிட்ச்ஃபோர்க்( இதுக்குத் தமிழ் என்ன?) வச்சு சேகரிச்சுக்கிட்டு வயல்லேஇருக்கார். அப்ப அவருக்கு தந்தி வந்துச்சு. தந்தி டெலிவரி பண்ண வந்தவர், கரையிலெ நின்னுக்கிட்டுஇருக்கார். பிட்ச்ஃபோர்க்கை நீட்டுனதும் அதுலே அந்தக் காகிதத்தை வச்சார்.பிரிச்சுப் பார்த்தா.........அடுத்து வரப்போற இடைத்தேர்தலுக்கு நிக்கச் சொல்லி அழைப்பு வந்திருக்கு.


விட்டுறமுடியுமா? நின்னார். ஜெயிச்சார். அப்புறம் 1911 லே இந்தக் கட்சிக்குத் தலைவராவும் ஆனார்.அப்ப நடந்த தேர்தல்லே ரெண்டு கட்சிகளுக்கும் சரிசமானமா ஒட்டு விழுந்துச்சு. அப்படியும் லிபரல் கட்சியேஆட்சி அமைச்சாங்க. அதுலே ஏகப்பட்டக் குழப்பங்கள். ஒரே வருசத்துலே நம்பிக்கையில்லாத் தீர்மானம்கொண்டுவந்து அதுலே ஜெயிச்சு, ரீஃப்ஃஃர்ம் கட்சி ஆட்சியைக் கையிலே எடுத்துச்சு. பிரதமர் யாருங்கறீங்க?நம்ம 'ஃபார்மர் பில் மஸ்ஸெ' தான்.


அவர் செஞ்ச முதல் வேலை விவசாயிங்களுக்குத்தான். நிறையவிதத்துலே உதவி ஆரம்பிச்சது. அவுங்க உழைப்புலே விளைஞ்சது, உண்டாக்குனது எல்லாம் பிரிட்டனுக்கு ஏற்றுமதியாச்சு. இந்த சமயத்துலே நகரங்களும் வளர ஆரம்பிச்சது.டவுன் ஆளுங்க முணுமுணுக்கத் தொடங்குனாங்க. "இது நியாயமே இல்லை. எல்லாம் பண்ணைங்களுக்கே போனால்எப்படி? எங்களை யாரு பார்த்துக்குவா?" நியாயம்தான்.


டவுன்லே வீட்டு வாடகை, சாப்பாட்டு சாமான்கள், துணிமணிங்க எல்லாம் விலை ஏறிக்கிட்டேப் போகுது. ஆனாத் தொழிலாளிகளுக்கு சம்பளம் அதுக்கேத்தமாதிரி உயரலை. அப்படிக்கு அப்படியே இருக்கு. இதை இப்படியே விட்டாக் கஷ்டம்தான். பேசாம வேலை நிறுத்தம் செஞ்சாத்தான் சம்பளம் உயருமுன்னு சிலர் ஆரம்பிச்சாங்க. எல்லாருக்கும் வேலையும் கிடைக்கலை. வேலை தேடி அலையற கும்பல் வேறக் கூடிக்கிட்டே போகுது.


சுரங்கம், ரெயில்வே, துறைமுகம் இங்கெல்லாம் வேலை செய்யறவங்களுக்கு சம்பளமும் கம்மி, ஆபத்தும் ஜாஸ்த்தி. பாதுகாப்பு சரியில்லைன்னு அவுங்களும் வேலை நிறுத்தம் செய்ய நினைச்சாங்க. 1909 லே வெஸ்ட்கோஸ்ட் West Coast நிலக்கரி சுரங்க ஆட்களும்,வய்ஹி Waihi சுரங்க ஆட்களும் சேர்ந்து ஒரு தொழிற்சங்கம் ஆரம்பிச்சாங்க.ஃபெடரேஷன் ஆஃப் லேபர் Federation of Labour. தொழிற்சங்கமுன்னு சொன்னதும் சிகப்பு கலர் கவனத்துக்கு வருமுன்னு இதுக்கு'ரெட் ஃபெட்ஸ் Red Fedsன்னு பேர்.கம்யூனிஸ்ட் நாடுகளிலே நிறைய சிகப்புக் கலர் கொடிகள் இருக்காமே. எப்படியோ சிகப்புக்கும் கம்யூனிஸத்துக்கும் தொடர்பு ஏற்பட்டுப் போச்சு.


மூணுநாலு வருசம் இழுபறியிலெ போய்க்கிட்டு இருந்தப்ப வாய்ஹி சுரங்கத்தைச் சேர்ந்த சிலர், மொதலாளிகளோடு கூட்டு வச்சுக்கிட்டு இன்னொரு யூனியனை ஆரம்பிச்சாங்க. ரெண்டு யூனியனுங்களுக்கும் சண்டையின்னா சண்டை.அப்படி ஒரு சண்டை( யூனியன்களுக்குள்ளே யூனிட்டி இல்லாமப் போச்சு!) அரசாங்கம் பாதுகாப்பு கொடுக்க முன்வந்துச்சு.யாருக்கு? மொதலாளிங்க இருக்கற யூனியனுக்கு!
60 தொழிலாளர்களைப் புடிச்சு ஜெயிலிலே போட்டுச்சு. இந்தக் களேபரத்துலே ஒரு எஞ்சின் ட்ரைவரும், ஒரு போலீஸ்காரரும்செத்துட்டாங்க.
இதோட எல்லாம் ஓய்ஞ்சதா? அதெப்படி? அப்படிச் 'சட்'ன்னு முடியற விஷயமா இது?


இதுக்கு முந்தி 9 வருசம் இந்தமாதிரி வேலை நிறுத்தம் எல்லாம் இல்லாம ( 1894 - 1905) நல்லாப் போச்சு.அதுக்கப்புறம் 1906 லே ஒரே ஒரு வேலை நிறுத்தம். இப்ப என்னடான்னு எதுக்கெடுத்தாலும் வேலை நிறுத்தமுன்னு ஆயிருச்சே(-:


அதுவும் ரெண்டு சாவு வேற நடந்துருச்சு. இதைப் பார்த்துக்கிட்டு அரசாங்கம் சும்மா இருக்குமா? அடுத்த வேலைநிறுத்தம் வர்றதுக்குள்ளேயே அரசாங்கம் பக்காவா ஏற்பாடு செஞ்சது. கூடுதல் போலீஸ் கொண்டு வரணும். விசேஷப் பயிற்சிகொடுத்துச்சு. போலீஸ் வேலைக்கு ஆளுங்களைக் கூப்புட்டாங்க. எல்லாருக்கும் ஒரு குதிரையும், கையிலே தடியும்(Baton).இவுங்களை 'ஸ்பெஷல்ஸ்'ன்னு அரசு சொல்லுச்சு. ஆனா மக்கள் கூப்பிட்டது வேற பேருலே, மாஸ்ஸேஸ் கொசாக்ஸ்( Massey's Cossacks).


ஆக்லாந்து துறைமுக ஊழியர்கள் வேலை நிறுத்தம் 1913, நவம்பர் 8 லே ஆரம்பம் ஆச்சு. ஆயிரம் ஸ்பெஷல்ஸ்அங்கே போனாங்க. வேலை நிறுத்தத்தை முறியடிச்சாங்க. நாடு தழுவிய வேலை நிறுத்தம் வேணுமுன்னு ரெட்ஃபெட்ஸ் Red Feds, அறிவிச்சுக்கிட்டு இருந்துச்சு. டனேடின், வெலிங்டன், லிட்டில்டன் இப்படி இன்னும் சிலதுறைமுகங்களிலும் ஆக்லாந்துக்கு ஆதரவா வேலை நிறுத்தம் ஆரம்பிச்சாங்கதான்.


அரசாங்கத்துக்கும், மொதலாளிமாருங்களுக்கும் எதிரா ஒண்ணும் நடக்கமுடியாதுன்னு மக்களுக்குத் தெரிஞ்சுபோச்சு.அதேமாதிரிதான் ஆச்சு. ரெண்டே மாசத்துலே எல்லாரும் வேலைக்குத் திரும்பிட்டாங்க. மக்கள் சக்தின்றது எவ்வளோபெருசு. இந்த வேலை நிறுத்தமெல்லாம் அவுங்களுக்குப் பிடிக்கலை. அதே சமயம் அரசாங்கம் செஞ்சதை மனசு ஒத்துக்கவும் இல்லை. வச்சாங்க அரசாங்கத்துக்கு ஆப்பு.

எப்ப?

அடுத்த தேர்தல் வந்துச்சுல்லே, அப்ப.



(அதென்னவோ சரித்திர வகுப்புக்கு நேரமே வாய்க்க மாட்டேங்குதப்பா (-:. அதான் கையோட வகுப்பை எடுத்துட்டுஅப்புறமா ஆஸ்பத்திரிக்குப் போகலாம்)

14 comments:

said...

//அதான் கையோட வகுப்பை எடுத்துட்டுஅப்புறமா ஆஸ்பத்திரிக்குப் போகலாம்)//

ஆஸ்பத்திரிக்கா?? எதுக்கு??? :O(

said...

கிளாஸ் லீடர் என்ற முறையில்...

கோஸாக்ஸ் என்பவர்கள் கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருக்கும் ரஷ்யப் பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள். இவர்கள் அவர்களுடைய குதிரையேற்ற திறமைக்கும், இராணுவ நிபுணத்துவத்துக்கும் பெயர் போனவர்கள். குதிரை மீதேறி வந்ததால் நம் மாஸேயின் படையினரும் மாஸேயின் கொஸாக்ஸ் என அழைக்கப்பட்டார்கள்.

டீச்சர் படம் காண்பிக்கவில்லையே என வருத்தப்படுபவர்கள் இங்கு சென்று மாஸேயின் கோஸாக்ஸினரின் படங்களைக் காணலாம்.

சரிதானே டீச்சர்?

said...

ஷ்ரேயா,

விரல்லே அடி பட்டுருக்குல்லே, அதுக்குத்தான்:-)

said...

கொத்ஸ்,
உண்மையான லீடர்( கிளாஸுக்குத்தான்)ன்றதை மறுபடியும் நிரூபிச்சதுக்கு நன்றி.

படம் இருக்கு. ஸ்கேன் செஞ்சு போடலாமுன்னு இருந்தேன்.
இப்ப நீங்க போட்டுட்டதாலே
டீச்சருக்கு வேலை மிச்சம்:-)

said...

//"அதெப்படி? அப்படிச் 'சட்'னு முடியர விஷயமா இது?"//

அதெப்படி?அப்படிச் 'சட்'னு முடியர
விஷயமா இது?
யார் எழுதறாங்க? எதைப்பற்றி?

said...

கொழப்புறிங்க டீச்சர்....விரல்லெதான் வெட்டு...அதுக்கு கையோட் ஏன் பாடம் எடுக்கனும்? விரலோட க்ளாஸ் போங்க

said...

சிஜி,

ரெண்டு சாவு வுழுந்துருச்சுல்லெ. அது 'சட்'னு முடியற விஷயமா?


மாணவர்களுக்குக் குழப்பம் வரலாம், ஆனா குழப்பமே மாணவர்களா வந்துட்டா....?

( சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்):-))))

said...

ஆஸ்பத்திரினு நினைத்து வந்தேன். சரித்திர கிளாஸா எஸ்கேப்டா சிவா.............பிரசண்ட் போட்டு விடவும்....

said...

கதை சொல்லி சோறு ஊட்டுவாங்க, பார்த்திருக்கிறேன். த்ரில்லரை வைத்து ஒரு சரித்திர பாடம் நடக்குது இங்கே!!

நினைவெல்லாம் கோபாலாக இருக்கிறதே, சீக்கிரம் ஆஸ்பத்திரிக்குப் போகலாம் :)

said...

வாங்க சிவா & மணியன்

ஆஸ்பத்திரி போட்டாச்சு:-)

said...

வகுப்பு எடுத்துட்டு ஆஸ்பத்திரியா?
விரலை எடுத்துகிட்டு இல்ல போனிங்க. யூனியனிலே ( union )னொ யூனி வரது இல்லை.அதனாலே தான் ஒத்துமை இல்லை.அவரு .. சிஜி விரலு பொனா போகட்டும்,கையக்கொண்டுவாங்கனு சொல்றார் போல.:-))லேட்டாதான் பிரியுது.

said...

வல்லி,

பார்த்தீங்கல்லே....

வகுப்புலே வரவர லூட்டி அதிகமாப் போச்சுப்பா:-)))

said...

ஆப்பு வெச்சாங்களா? நம்மூர்லயும் ஆப்பு வெக்கிறாங்க ஒவ்வொரு தேர்தலுக்கும். ஆனா யார் வந்தாலும் நமக்கு ஆப்பு வெக்க மறக்க மாட்டேங்குறாங்களே!

said...

ராகவன்.
நம்மூர்லே மக்களுக்கு 'மறதி' அதிகமாச்சே!

கடைசி ஒரு மாசம், இல்லேன்னா கடைசி ரெண்டு வாரம் செஞ்சதுதான் ஞாபகம் இருக்குமாமே.
அப்பத்தானே வாக்குறுதிகளை அள்ளி வீசறாங்க.