Saturday, June 17, 2006

ஆ.............விரல்!!! 4 'சில்வர் ஹோண்டா'


திரும்பி, வீட்டுக்கு வரும் வழியில், கோபால் "இன்று ஏலம் விடுவதை வேடிக்கைப் பார்த்துவிட்டுப் போகலாம்" என்றதால் மறுபடியும் ஏலம் விடும் இடத்திற்குப் போனோம். அங்கே ஏலம் நடந்து கொண்டிருந்தது. ஒரு மேடை போன்ற அமைப்பு ஒளி வெள்ளத்தால் பளிச்சிட்டுக் கொண்டிருக்க, அதில் ஒரு கார் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அட்டகாசமான ஸூட் அணிந்திருந்த இளைஞன் அதை ஓட்டிக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு, 'ஸ்டைலாக' இறங்கிவந்து அதனருகே நின்றான். பின்னால் இருந்த பிரமாண்டமான திரையில் அந்தக் காரைப் பற்றிய விவரங்கள் பளிச்சிட்டன. எந்த வருடம், என்ன மாடல், எத்தனை கை மாறியது, எந்த கம்பெனி கார் என்ற அதன் 'ஜாதகம்' முழுதும் இருந்தது. 'மைக்'கிலும் அதன் வர்ணனை தொடர்ந்தது. பார்வையாளர்களுக்கு அதை மனதில் எடை போட்டுப் பெருமூச்சுவிட சில நிமிடஇடைவெளி தந்த பிறகு, அதற்கான ஏலம் ஆரம்பமானது.


முதலில், ஐயாயிரம் என்று ஆரம்பித்தார்கள். யாரும் வாயைத் திறக்காததால் நாலு, மூன்று, இரண்டு என்று இறங்கிவந்து, பின் ஆட்கள் கேட்க ஆரம்பித்ததும், இரண்டாயிரத்து ஐந்நூறு, மூவாயிரம் என்று உயரப் போக ஆரம்பித்து ஏழாயிரத்திற்கு முடிந்தது.அடுத்த வண்டி மேடைக்கு வரும் சில நிமிடங்கள் வரை அங்கிருந்த பார்வையாளர் அனைவரும், ஏதோ ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்போல அன்யோன்யத்துடன், ஏழாயிரம் ரொம்ப மலிவு. வாங்கியவன் அதிர்ஷ்டசாலி. வெளியே இதே வண்டி பத்துக்குக் குறையாது என்றெல்லாம் கருத்து மழை பொழிந்து கொண்டிருந்தனர். அடுத்த வண்டி வந்தது. எல்லாம் முன்போலவே. விலை மட்டும் கூடுவதும், குறைவதுமாகப் போய்க்கொண்டிருந்தது.


ஆனால் ஒன்று. அந்த விற்பனையாளர் வண்டிகளை வெகுவாக வர்ணனை செய்யும்போது, சும்மா வேடிக்கைப் பார்க்கப் போனவருக்கும் ஒரு வண்டியை வாங்க வேண்டுமென்ற துடிப்பு வந்துவிடும்! அந்த அளவுக்கு இருக்கும் அந்த வசீகரமான வர்ணனைகள்!


அப்போது, ஒரு வண்டி மேடைக்கு வந்தது. வெள்ளி நிறத்தில் ஒரு 'ஹோண்டா ஸ்போர்ட்ஸ் மாடல் கார்' மூன்று கதவு. அதன் வர்ணனையைக் கேட்கும்போதே ரொம்ப ஆசையாக இருந்தது. ஒளிவெள்ளத்தில் நிற்கும் வண்டி ஏதோ தேவலோகத்திலிருந்து வந்திறங்கிய புஷ்பக விமானம்போல ஜ்வலித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் கோபாலுக்கு ஒரு நப்பாசை வந்தது போலும்! மெதுவாக என்னிடம் " ரொம்ப நல்லா இருக்குல்லே! ஏலம் கேளு" என்றார். நம் வீட்டுலே இந்த ஏலம் கேக்கறது போன்ற முக்கியமான விஷயங்களிலே நான் தான் 'எக்ஸ்பர்ட்!'எல்லாம் இங்கே வந்து கற்றுக்கொண்ட அனுபவம்தான்!


"ஏங்க, இந்த வண்டி 3 கதவாச்சே, நமக்கு 5 கதவுதானே சரிப்படும்!"

"ரொம்ப குறைஞ்ச மைலேஜ். பார்க்க ரொம்ப நல்லா இருக்கு. விலையும் மலிவாதான் போய்கிட்டிருக்கு!"

"ஐயோ, இதை நான் அங்கே ஹாலில் இருந்தபோது கவனிக்கலையே ! உள்ளே 'இன்டீரியர்'எப்படி இருக்கோ!"

"இங்கே இருந்து பார்த்தா நல்லாதான் இருக்கற மாதிரி தெரியுது!"

"இதை வாங்கற எண்ணம் இருந்திருந்தா, ஏலம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலே ஓட்டிப் பார்த்திருக்கலாமே! ஸ்போர்ட்ஸ் கார் மாடல்என்பதாலே, ஸீட் குள்ளமா, உயரக்குறைவா இருக்குமே?"

"ஹோண்டா நல்ல கம்பெனிதான். இந்த வண்டியை நான் எடுத்துக்கறேன். நீ நம்ம 'டொயொடா'வை எடுத்துக்கோ. சரி, நீ கேக்கஆரம்பி!"


இரண்டு, மூன்று, நாலு, ஐந்து என்று ஏலம் ஏறிக் கொண்டே போகிறது. இப்போது எனக்கும், மற்றொரு ஆளுக்கும்தான் போட்டி.ஆறு என்று நான் கையை உயர்த்துகிறேன்! மற்ற ஆள் பேசாமல் இருந்தபோது, ஏலம் விடும் ஆள் சொல்கிறார், இனி நூறு நூறாய்கூட்டிச் சொல்லலாம் என்று.
மற்றொரு ஆள் "ஆறாயிரத்து நூறு" என்றவுடன், " பேசாம விட்டுடலாம். ரொம்ப ஏறிகிட்டே போகுது" என்றேன். கோபால்" இன்னும் நூறு சேர்த்துக் கேளு" என்றதும் என் கை உயர்ந்தது ஆறாயிரத்து இருநூறு என்று. அதன்பின் ஒரு சத்தமும் இல்லை.ஏலம் விடுபவர் இன்னும் யாராவது கேட்கவேண்டும்,அதுதான் 'ஃபைனல்' என்றவுடன் கோபால், பரவாயில்லை கேளு என்றார். கேட்டேன்,"ஆறாயிரத்து முன்னூறு" ஏலம் முடிந்தது. விதி நமக்கு முன்னால் நின்று கைகொட்டிச் சிரித்துக் கொண்டிருப்பது நம்கண்ணுக்குத் தெரியவேயில்லை!!!!


அதன் பின் அங்கேயுள்ள அலுவலகத்தில் சென்று முறைப்படி செய்ய வேண்டியவைகளைச் செய்யச் சொன்னார்கள். புதிய 'ரெஜிஸ்ட்ரேஷன்' எடுப்பது, 'ஃபிட்னஸ், 'ரோட் டாக்ஸ்' என்று மேலும் சுமார் 700 ம் சேர்த்து மொத்தம் 7,000 டாலர்கள்ஆனது. அன்று முன்பணம் 2000 கட்டிவிட்டு, மறுநாள் மீதிஉள்ள 5000க்கு வங்கிக் காசோலை கொண்டுவந்து தரவேண்டும் என்றும்,அதற்குள் அவர்களும் செய்யவேண்டிய ஃபார்மாலிட்டி' யை முடிப்பதாகவும் சொல்லப்பட்டது.


அதன்பின் 'நம் கார்' எங்கே என்று தேடி, அருகில் போய்ப் பார்த்துவிட்டு, நல்ல வண்டிதான். விலையும் பரவாயில்லை.என்று எங்கள் 'சாமர்த்தியத்தை' நாங்களே மெச்சிக் கொண்டு வீடு திரும்பினோம். மறுநாள் காலையில் நான் போய் வங்கிக் காசோலை எடுத்துவர வேண்டுமென்றும், கோபால் மதிய உணவுக்கு வீடு வரும்போது, அவருடன் ஏலம் நடந்த இடத்திற்குச் சென்று அதைக் கட்டிவிட்டு'புது' வண்டியை அவர் எடுத்துக் கொண்டு வந்துவிடுவார் என்றும், நான் மகளின் வண்டியை ( அதையல்லவா கடன் வாங்கியுள்ளோம்)எடுத்துக்கொண்டு வீடு திரும்புவது என்றும் 'பக்கா'வாக திட்டம் போட்டோம்!


இன்னும் வரும்

18 comments:

said...

எல்லா பார்ட்டும் போடும் வரை நான் இந்தப் தொடருக்குப் பின்னூட்டம் போட மாட்டேன்.. :)

said...

பொன்ஸ்,
இப்படி 'ஆன்னா ஊன்னா' கோச்சுக்கிட்டா நான் எங்கே போவேன்?(-:

said...

சீக்கிரம்,,,சீக்கிரம்,,,அடுத்த பதிவு ...?

said...

வாங்க தருமி. எப்படி இருக்கீங்க?
ரொம்ப நாளாக் காணொமே!

நாளைக்குப் போட்டுடறேன்.

said...

:-)

said...

விட்டதை பிடிச்சாச்சு! இனி நானும் அடுத்த நாள்/இடுகைக்கு காத்திருக்க வேண்டியதுதான்.

said...

"கோபாலு சொன்னாரு.... கோபாலு இன்னும் நூறு கூட்டச்சொனாரு"..... அப்டி இப்டி னு நூல் வுட்ரப்பவே தெரிஞ்சிடுச்சி...எதுவோ[விதியோ]
ஜிங்கு ஜிங்குனு ஆடப்போவுது னு"

said...

நன்மனம்,

நன்றி.( நம்ம பொழப்பு உங்களுக்குச் சிரிப்பா இருக்கு?)

said...

மணியன்,

ச்சின்னச் சின்னப் பதிவுகள்தான்.
நல்லதாப் போச்சு, இல்லையா?

said...

சிஜி,

விதியாகப்பட்டது வலியது...
அதை யாரும் வெல்ல முடியாது.....

said...

//"விதியாகப்பட்டது வலியது.......//
அதான் தெரியுமே
இந்தப் பதிவை படிக்க ஆரம்பிக்கும்போதே
நான் பொன்ஸ் தருமி நன்மனம் மணியன் எல்லோரும் "விதியாகப்பட்டது வலியது.....யாரும் தப்ப முடியாது"னு தெரிஞ்சுதானே ஆரம்பிச்சோம்........
இத நீங்கவேற சொல்லிக்காட்டணுமா?

said...

ஆனாலும் இது ரொம்ப ஓவர்ங்க துளசி. 2 பதிவை ஒன்ன போடரேன்னு சொன்னீங்க... இதுவா 2 பதிவு அய்யோ!! அய்யோ!!! ("வாலி" வர அஜீத் டயலாக் Styleல படிங்க ;)). சும்ம சொல்ல கூடாது நீங்க ஒரு பிரபல மெகா தொடர் எழுதரவங்களயே தூக்கி சாப்பிடரீங்க.. எங்க அந்த கார் ஆக்சிலரேட்டரை கொஞ்சம் நல்லா அழுத்துங்க... :D

said...

சிஜி,

விதியை மதியால் வெல்லலாமாம்:-)))

said...

ஜெயசங்கர்,

மக்களோட அன்புக்கட்டளையை மீறமுடியாது போல இருக்கேப்பா.

நாளைக்கு கட்டாயம் ரெண்டு.

said...

நன்றி! நன்றி!!! சவ்வு இழு இழுக்கறீங்கன்னு சொல்லறோமோன்னு தப்பா நெனச்சுக்காதீங்க!!! ஹி! ஹி!! சீச்கரம் மேட்டரை தெரிஞ்சுக்கற ஆர்வம்தான்.

said...

கதை இப்பத்தான் சூடு பிடிக்குது!
என்னவோ நடக்கக்கூடாதது நடக்கப்போகுதோன்னு ஒரு அச்சம்!
அடுத்த பதிவு எப்போ!?
வீக்கெண்டு, பிஸின்னு ஓடிராதீங்க!


அப்புறம்,
"ஆறு" போட அழைத்திருக்கிறேன்.

வருவீர்கள் என நிச்சயம் நம்புகிறேன்.
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றி!

said...

ஜெயசங்கர்,

அடுத்த பகுதி ரொம்பச் சின்னதா இருக்கு,அதனாலேயே ரெண்டாப் போட்டு மரியாதையைக் காப்பாத்திக்கறதுன்னு....... :-)

said...

SK

ஏற்கெனவே நாலு போட்டாச்சே! அதை எல்லாரும் சிலேட்லே இருந்து (எச்சி தொட்டு) அழிச்சாங்களான்னு தெரிஞ்சாத்தான் 'ஆறை'க் கடக்க முடியும்:-)