Wednesday, June 07, 2006

காலக் கணக்கு


குளிர் காலம் ஆரம்பமாச்சு. தினப்படி வருகை தரும் விருந்தாளிங்க எல்லாம்குளிர்கால நீண்ட உறக்கம் செய்யப் போயிட்டாங்க.

நம்ம வீட்டுலே, மீந்து போற ஜிகே சாப்பாட்டைத்தான் இதுங்களுக்குக் கொடுக்கறதுவழக்கம். மூணு, நாலுமாசம் தூங்கணுமேன்னு கிடைக்கறதையெல்லாம் விடாமச் சாப்பிட்டு நல்லா குண்டா ஆயிருந்தாங்க.


ஜூன் முதல் தேதியிலிருந்து யாரும் வரலை. இந்தநாள்தான் இங்கே அஃபீஷியல் விண்ட்டர் ஆரம்பம். அட. இதுகளுக்கு எப்படித் தெரியும் இன்னிக்கு ஜுன் முதல் தேதின்னு?


ரெண்டு நாளா வெளியிலே வச்ச சாப்பாடு அப்படியே தட்டுலே இருந்தது. இனிமே வச்சுப் பயன் இல்லைன்னு இருந்துட்டேன்.


முந்தாநாள் பார்த்தா......... ஒரு சின்னவர் வந்து சாப்பாடுத் தட்டைத் தேடறார்.விளக்கைப் போட்டதும் அப்படியே சுருண்டு, முகத்தையும் மறைச்சு வச்சுக்கிட்டார்.


உருண்டையா ஒரு ச்சின்னப் பந்து அளவுதான். சாப்பாடு வச்சதும், விளக்கைஅணைச்சுட்டு வந்துரணும். அப்புறம்தான் சாப்புடவே தொடங்குவார்.

இப்ப தினமும் வரார். அவரோட வீட்டுலெ யாரும் சொல்லித்தரலை போல இருக்கே.ஹைபர்நேஷன் டைம் வந்துருச்சுன்னு.

ஒருவேளை இவரே காலண்டரைத் தொலைச்சுட்டாரோ?

பாருங்க, எப்படி சுருண்டு இருக்கார்ன்னு? குழந்தைதானே? பாவம்.

23 comments:

said...

என்னது? முள்ளம்பன்றியா?

said...

நீங்க படமெடுக்கப் போறீங்கன்னதும் camera shy போல!! :O)

ஆமா.. என்ன சாப்பாடு வைப்பீங்க?

said...

ஒன்னுமே புரியலங்க..

said...

பொன்ஸ்,


//....முள்ளம்பன்றி...//

அந்த ஜாதியில் சேர்ந்ததா இருக்கலாம்.

இது நீங்க இப்ப இருக்கற இடத்துலே
இருக்கலாம். ராத்திரியில் மட்டுமே
வெளியிலே வரும்.

தோட்டத்து மூலையில், வேலிப்பக்கம் பாருங்க.

ஓஓஓஒ பேரைச் சொல்லியா?

HEDGE HOG

said...

ஷ்ரேயா,

வடை பாயஸத்தோடவும் சாப்பாடு வைக்கலாம்தான்.:-))))

வேணான்னு சொல்லிருமோ?

எல்லாம் நம்ம ஜிகேவோட 'கேட் ஃபுட்'தான்

said...

அடடா சும்மா சாப்பிட வந்தவங்களைப் போட்டு இப்படி படுத்தினா எப்படி?

said...

குப்பு செல்லம்,

இது ஒரு nocturnal பிராணி.

இங்கே
பாருங்க.

said...

கொத்ஸ்,

நியாயம்தான்........

ஓடக்கூடத் தெரியலை. 'பூனைக் கண்ணை மூடிக்கிட்டா பூலோகம் இருண்டு போயிரும்'னு தெரிஞ்சு வச்சிருக்கு:-)))

அப்'பிராணி'

said...

பாடமெல்லாம் படிச்சாச்சு
விடுமுறைக்கு இங்கு வருவதற்கு முன்பு எழுதப்பட்டவை யாவும் வேண்டும்
hedge hog விபரங்களுக்கு நன்றி

said...

உங்க வளர்ப்புகளில் இதுவும் ஒன்றா?
பார்ப்பதற்கு எம்மூர் echidna மாதிரி உள்ளது!!!!

said...

சி.ஜி,

நன்றி.

பாடமெல்லாம் தனி மடலில் அனுப்பி இருக்கு.

said...

கஸ்தூரிப்பெண்,

இதுவும் அதே ஜாதிதான். ஆனா மூக்கு அவ்வளோ நீளம் இருக்காது.

said...

hedgehogன்னாலும் முள்ளம்பன்னி வகையறாதான்.

நல்லா சுருண்டு படுத்திருக்காரு. சின்னப்புள்ளதான. லைட்ட அணச்சிருங்க.

பாலு கீலு...இல்லைன்னா சோத்துல தயிரோ பாலோ பெசஞ்சு போட்டா சாப்பிட மாட்டாரா? இல்ல...கறிகிறி எடுக்குற அன்னைக்கு எலும்பு கிலும்பெல்லாம் போடக் கூடாதா? போலீஸ் புடிச்சிருமா?

said...

ராகவன்,

//கறிகிறி எடுக்குற அன்னைக்கு எலும்பு கிலும்பெல்லாம் போடக் கூடாதா? போலீஸ் புடிச்சிருமா? //

:-)))))))))))

சிலநாள் இதுங்க அர்த்த ராத்திரியிலே ரோடைக் கிராஸ் செய்யறப்ப கார்லே அடிபட்டு ஹைவேஸ்லே கிடக்கும்போது பாவமா இருக்கும்.

ப்ரெட்டை பால்லே நனைச்சுக் குடுத்தாலும் நல்லா சாப்புடும்.

said...

ஹெட்ஜ் ஹாகா? ஹாம்ஸ்டெரொன்னு பார்த்தேன்.
அதோட லக்.
உங்க வீட்டைக் கண்டு பிடிச்சுசு.பாவம் .பார்த்தால் ஒரு குட்டி கம்பளி போத்தலாம் போலிருக்கு. ஹீட் பாட் வைக்கலியா/;-))இல்லாட்டா விருந்தாளிஙகளுக்குனு கெஸ்ட் ஹௌஸ் கட்டினாலும் கட்டுவீங்க,.

said...

சிலநாள் இதுங்க அர்த்த ராத்திரியிலே ரோடைக் கிராஸ் செய்யறப்ப கார்லே அடிபட்டு ஹைவேஸ்லே கிடக்கும்போது பாவமா இருக்கும்.//

என்ன பண்றது.. நமக்கு இருக்கற அவசரத்துல இவங்கள எங்க கவனிக்கறதுன்னு நினைச்சிருப்பாங்க?
இங்கயும் ECR ரோட்ல காலையில போகும்போது நிறையவே பாக்கலாம்.. முள்ளம்பன்றியில்ல.. அதத்தவிர எல்லாமே.. நாலு கால், ரெண்டுகால்.. மனசு கிடந்து அடிச்சிக்கும்..:(

said...

ஓ.. அப்போ சீரியசான மேட்டர் தானா? நாங்கூட எதோ வெளையாட்டுக்கு படம் புடிச்சுப் போட்டீங்கன்னு நெனச்சேன்...

-குப்புசாமி செல்லமுத்து

said...

வாங்க மானு.

ப்லோக்கர் மெயிண்டனன்ஸ்ன்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சு. அதான்
ஒண்ணும் பப்ளீஷ் செய்ய முடியாமப் போச்சு.

நாம கெஸ்ட் ஹவுஸ் கட்டுறவரைக்கும் இவுங்கெல்லாம் வெயிட் செய்ய மாட்டாங்கப்பா.
நேரா வந்து ஒரு இடத்தைத் தானே எடுத்துக்கறதுதான். இவுங்களுக்குப் போக மிச்சம்தான்
நமக்கு. இவுங்களுக்கும் இந்த மன்ணுலே ரைட் இருக்குல்லே!

said...

ஆமாங்க டிபிஆர்ஜோ.

மனுஷன் 'பறக்குற' வேகத்துலே இதுகளைப் பார்க்க முடியாதுல்லே. அதுவும் இருட்டு.
இதுங்க கலரும் மண் கலர்.

ஹைவேஸ் எல்லாம் எப்பவும் இருட்டாத்தான் இருக்கு. சிட்டி எல்லை தாண்டுனவுடனே
லைட் கிடையாதுல்லே!

எனக்குத் தெரிஞ்சு ஹைவேஸ்லே கூட விளக்குப் போட்டுருக்கறது பெல்ஜியத்துலேதான்.

said...

யோகன்,

நீங்க சொன்னது அத்தனையும் மிகச் சரி.
என்ன ஒண்ணுன்னா இதுங்க மேலே இருக்கற முள், நம்ம முள்ளம்பன்றி போல
உறுதியா கெட்டியா இருக்காது. பார்க்கதான் முள்ளெ தவிர, தொட்டா மிருதுதான்.
ஆனா எதிராளிக்குத் தெரியாதே இந்த ரகசியம். இது 'முள்ளை' காமிச்சவுடனே மத்த பிராணிங்க
பயந்து ஒதுங்கிருமாம்!

எவ்வளவு தந்திரம் பாருங்க. பிழைக்கும் வழி:-))))

said...

வாங்க குப்ஸ்.

( 'குப்பு செல்லம்'னு சொல்றதை விட இது ஸ்வீட்டாவும், ஷார்ட்டாவும் இருக்கே! எனி அப்ஜெக்ஷன்?)

சீரியஸ்தான் மேட்டர். இப்படி 3 மாசம் தூங்காம இருந்தா அதுங்க வாழ்க்கைமுறை மாறிடாதா?

எல்லோரும் தூங்கறப்ப இதுமட்டும் கொட்டக் கொட்ட முழிச்சிருந்தா எப்படி?

said...

You may like to see this link:

said...

மணியன்,

சுட்டிக்கு நன்றி.

பேசாம முள்ளீ( பேர் வச்சாச்சு)க்கும் ஒரு பதிவு ஆரம்பிச்சுறலாமா?