Friday, June 23, 2006

நியூஸிலாந்து பகுதி 46

தேர்தல் திருவிழா ஆரம்பமாச்சு.

தொழிற்சங்கமும் அப்பத் தேர்தலுக்கு நின்னுச்சு.

அவுங்களுக்கு?

அதே ஆப்புதான். லிபரல் கட்சிக்கு ஓட்டுப் போட்டு உள்ளுக்குள்ளே இருந்த எதிர்ப்பைக் காமிச்சாங்க. மெஜாரிட்டி யாருக்கும் இல்லை. அப்பத்தான் ஒரு வேடிக்கை நடந்துச்சு. மொத்தம் 80 சீட்டுங்க. இதுலே லிபரல் கட்சி 33 இடமும். ரீஃபார்ம் 41 ம் ஜெயிச்சாங்க. சோஷலிஸ்ட் கட்சி Socialist Party, சோஷியல் டெமாக்ரேடிவ் கட்சி Social Democratic Partyன்னு மத்த கட்சிங்க ஒரு 6 ஸீட். பாதிக்கு மேலெ இருந்தாலும் , (அதான் 41 இருக்கே)லிபரல் பார்ட்டியும், ரீஃபார்ம் பார்ட்டியும் சேர்ந்து கூட்டு மந்திரிசபை அமைச்சாங்க. இந்த நாட்டின் முதல் கூட்டு மந்திரி சபை. (இன்னிக்கு இருக்கற நிலமையிலே திமுகவும், அதிமுகவும் கூட்டு சேர்ந்தா எப்படி இருக்கும் ?)
என்னடா கதை இப்படி ஆயிருச்சேன்னு பார்த்தா, ரெண்டு வருசத்துலே ஏன்னா லேபர் கட்சின்னு ஒண்ணு புதுசா ஆரம்பிச்சது 1916 ல். அடுத்து வந்த 5 தேர்தல்களிலெ இந்தக் கூட்டு அப்படியே இருந்துச்சு. ஆனா 1935 வருசத் தேர்தல் வந்துச்சு பாருங்க. எல்லாம் தலைகீழா மாறிப்போச்சு. இத ரெண்டு கட்சிகளுக்கும் சேர்த்து மொத்தமே 17 சீட்தான். 53 இடம் பிடிச்சு தொழிற்கட்சி லேபர் அரசாங்கம் முதல் முதலா நாட்டின் ஆட்சியைப் பிடிச்சது.
இதுவரை ஆண்ட லிபரலும் ரீபார்மும் என்னடா செய்யலாமுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தாங்க. மூனு வருசம்யோசனை. இனித் தனித்தனியா இருந்து ஒண்ணுத்துக்கும் ஆகாதுன்னு 1938 லே இந்த ரெண்டு கட்சிகளும் ஒண்ணாவே சேர்ந்து நேஷனல் கட்சியா பேரை மாத்திக்கிட்டாங்க.


நம்மூர்லே பார்த்துருப்போமே, கட்சி ரெண்டா ஒடைஞ்சுருன்னா, பிரிஞ்சு போனவங்களைத் தாய்க் கட்சியிலேஇருந்து போனவுங்கன்னு சொல்வாங்க. அப்புறம் அதுலே இருக்கறவங்களுக்குத் திருப்தி இல்லேன்னா இன்னும்அதுலே இருந்தும் பிரிஞ்சுபோய் இன்னொரு பேர்லெ புதுக் கட்சி...... இப்படி. ஆனா, இங்கே இதெல்லாம் உல்ட்டாவாஅதான் தலைகீழா நடந்துச்சு.

ரெண்டு பெரிய கட்சிகள் ஒண்ணு சேர்ந்துக்கிச்சு.

அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா.

ஒரு பக்கம் இப்படி இருக்குன்னா அடுத்த பக்கம் பொதுமக்கள் நிலமை எப்படி இருந்துச்சு?

குடும்பங்கள் பெருசா வளர்ந்துச்சு. ஒரு குடும்பமுன்னா ஆறேழு பிள்ளைகுட்டிங்க. சுகாதாரக்கேடு இருந்ததாலேயும், சுத்தமான பழக்கவழக்கம் இல்லாத்தாலேயும் சீக்குங்கள் பரவுச்சு. ஆயிரம்பிள்ளைங்க பிறந்தால், அதுகளுக்கு மொத வயசு முடியறதுக்குள்ளே அம்பத்தோரு பிள்ளைங்க மண்டையைப் போட்டுருதுங்க. அப்ப டாக்டரா இருந்த ப்ரெட்ரிக் ட்ரூபி கிங் Frederick Truby King என்றவர், தன்னுடைய மனைவியைத் துணைக்குச் சேர்த்துக்கிட்டு1907லே 'ப்ளங்கெட் சொசைட்டி' Plunket Society ன்னு ஒண்ணு ஆரம்பிச்சார்.பெண்கள், குழந்தைகள் ஆரோக்கியத்தைக் கவனிச்சு, அதுக்குண்டான சேவைகள் செய்யறதுக்குன்னு. தாய்சேய் நலன். இந்தஅமைப்பைச் சேந்த நர்சம்மாக்கள் வீடுவீடாப்போய் அம்மாக்களைப் பார்த்து பிள்ளைகளைச் சுத்தமாவச்சுக்கறது, எந்த மாதிரிஆகாரம் கொடுக்கணும், உடம்பு சரியில்லைன்னா என்ன செய்யணும்ன்னு சொல்லிக் கொடுத்தாங்க.


மூணுவருசம் கழிச்சு 1912லே, பள்ளிக்கூடப் பசங்களும் ஆரோக்கியமா இருக்காங்களான்னு பார்க்கறதுக்காக அரசாங்கத்தின் சுகாதார இலாக்கா மருத்துவ சோதனைகளைப் பள்ளிக்கூடத்துலேயே செய்ய ஆரம்பிச்சது.
அப்ப இங்கே டாக்டர்கள் ரொம்பக் குறைவா இருந்தாங்க. அவுங்களும் வெள்ளைக்காரங்களுக்கு மட்டுமே வைத்தியம் செய்வாங்களாம். மத்த இனம் அதாவது மவோரிகளுக்கு வைத்தியம் பார்க்க ஒரு சிலரைத்தவிரயாரும் விரும்பலை.


மவோரிகளுடைய வாழ்க்கைதான் ரொம்பப் பரிதாபமா ஆயிருச்சு. நல்ல நிலங்கள் எல்லாம் போச்சு. பாதியை இவுங்களே வித்தாங்கன்னா, பாதியை அவுங்க பிடுங்கிக்கிட்டாங்களே! கிராமத்துலேதான் இருந்தாங்கன்னாலும், நிலத்தையும் பறி கொடுத்தப்புறம் எங்கே போய் பயிர்பச்சைன்னு விளைவிக்கறது? கையிலே காசு இல்லை.

10 comments:

said...

மவோரிகளுடைய வாழ்க்கைதான் ரொம்பப் பரிதாபமா ஆயிருச்சு. நல்ல நிலங்கள் எல்லாம் போச்சு. பாதியை இவுங்களே வித்தாங்கன்னா, பாதியை அவுங்க பிடுங்கிக்கிட்டாங்களே! கிராமத்துலேதான் இருந்தாங்கன்னாலும், நிலத்தையும் பறி கொடுத்தப்புறம் எங்கே போய் பயிர்பச்சைன்னு விளைவிக்கறது? கையிலே காசு இல்லை.//

மாவோரிகளுடைய இன்றைய நிலை என்ன? அவர்கள் நம் தலித்துகளைப் போல்தான் நடத்தப்படுகிறார்களா?

said...

டிபிஆர்ஜோ,

இன்றைய நிலை நல்லாதான் இருக்கு. விரிவா அப்புறம் வருது.

said...

கட்சி அரசியல்னு எடுத்திட்டா எல்லா ஊர்லேயும் இதே கதைதானா?

said...

+

said...

உள்ளேன் டீச்சர். இப்போ வேற ஒண்ணும் சொல்ல தோணலை.

said...

துளசி,மாவோரி கதை நிச்சயம் மாறி இருக்க வேண்டும்.எல்லோரும் எப்போதும் கஷ்டப்பட மாட்டாங்கனு தோணுது. ஒத்துமை என்கிற வார்த்தையே இல்லாமப் போனதால தான் ரொம்ப சரித்திரமே மாறுது,இல்லை?

said...

சிஜி,

மனுஷனுடைய குணம் உலகம் பூராவும் ஒண்ணுதான்.
அதுதான் ரத்தம் ஒரே நிறம்.

said...

மணியன்,

நன்றி.

நானும் இப்பத்தான் நம்ம பதிவுக்கு + கிடைச்சதைப் பார்க்கிறேன்.

யாரும் ஓட்டே போடறதில்லை என்ற மனக்குறை இருக்குங்க(-:

said...

கொத்ஸ்,

'பிரஸெண்ட்' போட்டாச்சு.

said...

மானு,

சரியாப் பாயிண்டைப் புடிச்சீங்க.
இதேதான். ஒற்றுமை இல்லாமத்தான்
என்னென்னவோ நடந்து போகுது(-: