சுயேச்சை M.L.A.னு ஒரு படம் கிடைச்சது.
சமீபத்துலே நடந்த எலக்ஷன் திருவிழா இன்னும் பசுமையா மனசுலே இருக்கறதாலே இந்தப் படத்தை'நல்லாவே' ரஸிக்க முடிஞ்சதுங்க.
சத்தியராஜ் நடிச்ச படம்.அவரோடு நம்ம கவுண்டமணி இருக்கார். ஆமாம். க.மணிக்கு எதாவது உடம்பு சுகமில்லையா?
சத்தியராஜ் நல்லாவே, அதாவது அவருக்குக் கொடுத்த பாகத்தை நல்லாச் செஞ்சிருக்கார்.பிரகாஷ் ராஜ் இவரைவிடவும் அருமையா செஞ்சிருக்கார்.அப்புறம் ரெண்டுமூணு பெண்கள் இருக்காங்க. அதுலே ஒருத்தர் சேது படத்துலே வந்த அபிதாவாம்.ஷகீலாவும், இன்னொருத்தரும் ஒரு டான்ஸ் ஆடராங்க. பறவை முனியம்மா ஒருபாட்டு( கடவுளே, என்னெல்லாம் கவனிச்சு எழுதவேண்டியிருக்கு!)
மலையாள நடிகை கே.பி.ஏ.சி. லலிதாவும், நடிகர் ராஜன்.பி.தேவ் இருக்காங்க. மறந்துட்டேனே,மலையாள நடிகர் திலகன் வேற இருக்கார்.
எந்தக் கட்சி சார்பும் இல்லாம இருக்கற எனக்கே படம் பார்க்கும்போது சிலது புரியுதுன்னா, மத்தவங்களுக்கு இன்னும் நல்லாவே புரியலாம்:-))))
படத்தோட மொதல் ஸீன்லேயே நம்ம ஃபேவரைட் விஷயம் இருக்கு:-)))
எம்ஜிஆர் படப்பாட்டுங்க சிலதும் இருக்கு.
கிடைச்சாப் பாருங்க. ஒரு டைம்பாஸ்.
இப்பத்தான் பார்த்தேன். சுடச்சுட ஒரு பதிவு.( அப்புறம்ன்னா மறந்துருமுல்லெ!
Friday, June 02, 2006
M.L.A
Posted by துளசி கோபால் at 6/02/2006 06:13:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
//அப்புறம்ன்னா மறந்துருமுல்லெ!// இந்த ஒரு வரிதான் படத்துக்கான விமர்சணமனு எடுத்துக்கலாமா? :)
அக்கா,
என்னங்கக்கா இது மாதிரி பாடாவதி படம் எல்லாம் பாத்துட்டு. கொக்கி அப்படின்னு ஒரு படம் வந்து இருக்கு நல்லா இருக்கு பாருங்க அப்பறம் ஜெர்ரின்னு ஒரு படம் நல்ல காமெடி டரை பண்ணி பாருங்க.
சொல்லிட்டீங்
கல்லே
இதொ பர்க்கப்போறேன்
ஸாரி ஜோஸப் இடுகை 2 பார்த்துட்டு
போறேன்
சத்தியராஜ் படமா லாஜிக் மறந்து படத்தை பார்த்தால் வயிறு வலிக்க சிரித்து மகிழலாம். அவரின் அடிதடி மற்றும் வணக்கம் தலைவா பார்த்தீர்க்களா..........
இரண்டும் அருமையான டிபிக்கல் சத்தியராஜின் லொள்ளு படங்கள்.
//இந்தப் படத்தை'நல்லாவே' ரஸிக்க முடிஞ்சதுங்க.//
//கிடைச்சாப் பாருங்க. //
ஹ்ம்... (காத்து வருதா அதாங்க பெருமூச்சு).... தரவிறக்கமும் சரியா வர்லங்க:-))
//ஆமாம். க.மணிக்கு எதாவது உடம்பு சுகமில்லையா?//
ஹெப்பாடைட்டிஸ் B-ல விழுந்து எழுந்தப்புறம் கவுண்ட பெல் குச்சி மாதிரி ஆகீட்டாரு.நீங்க பாபா,சொக்கத் தங்கம் எல்லாம் பார்க்கலியா???
//பறவை முனியம்மா ஒருபாட்டு//
டீச்சர்.அது பரவை முனியம்மா...
//கே.பி.ஏ.சி. லலிதாவும்//
காதலுக்கு மரியாதைல ஷாலினியோட அம்மா,அலை பாயுதேல ஷாலினியோட மாமியார்???
//படத்தோட மொதல் ஸீன்லேயே
நம்ம ஃபேவரைட் விஷயம் இருக்கு:-)))//
ஓ....
சுடச்சுடவா?னல்லா தான் இருகு. திருட்டுப்பயலே விமரிசனம் போடலியே?நாச்சியாரிலே சம்திங் நியூ.
ஸாரி ஜோஸப் இடுகை 2 பார்த்துட்டு
போறேன்..//
அடடா.. புல்லரிக்குது..
எது முக்கியம்னு தெரிஞ்சிவச்சிருக்கற ஒரே ஆள் நீங்கதான்.. வாழ்க:)))
என்னங்க இது...இந்தப் படத்தையெல்லாம் எப்படிப் பாத்தீங்க? ஐயோ ஐயோ!
ராசா,
இப்படியும் எடுத்துக்கலாம்தான். நம்ம மக்களுக்கு மறதி என்ன புதுசா? அதான் அஞ்சு வருசத் தூக்கம்
இருக்கேங்க.
சந்தோஷ்,
அக்காவுக்கு ச்சாய்ஸ் ரொம்ப இல்லையேப்பா. ஐங்கரன் அனுப்ப அனுப்பத்தான் பார்க்கணும்.
வந்துரும் இன்னும் ரெண்டு மூணூ வாரத்துலே. ஒரிஜனல் மட்டுமே வாங்கறதாலே கொஞ்சம்
லேட் ஆயிருது.
சி.ஜி,
அங்கே தியேட்டர்லே ரிலீஸ் ஆச்சா என்ன?
நாகைசிவா,
நல்லாச் சொன்னீங்க. படம் பார்த்து வாழ்க்கை முறையைக் கத்துக்கப் போறோமா என்ன?
படம் பார்த்தமா, சிரிச்சோமான்னு இருக்கணும்.
நன்மனம்,
இங்கே தரவிற(ர)க்கம் எல்லாம் இல்லை. எல்லாம் ஒரிஜனலாக்கும்:-)))
நம்ம வீடியோ க்ளப்புக்கு அநேகமா எல்லாப் படங்களும் வாங்கறோம்.
சுதர்சன் ,
அலைபாயுதே, காதலுக்கு மரியாதை எல்லாம் பார்த்து எவ்வளோ நாளாச்சு?
ஞாபகம் இருக்கறது ஷாலினியும் மாதவனும் மட்டுமே.
அடடா... அவுங்க 'பரவை'யா?
பாபா, சொக்கத்தங்கம் எல்லாம் பார்த்ததுதான். இந்தப் படத்துலெதான் கவனிச்சிருக்கென்
பெல்லை. பாவம்.
என்னங்க டிபிஆர்ஜோ,
இப்படி எல்லாரையும் வளைச்சுப்போட்டா எப்படி?:-))))
ராகவன்,
உண்மையைச் சொன்னா பெரிய நடிகர்கள் படமுன்னு அரைச்ச மசாலாவையே
அரைக்கறதுக்கு, சத்தியராஜ் படங்கள் எவ்வளவோ தேவலாமுன்னு ஆகிப் போச்சுப்பா.
தலையைக் கழட்டி வச்சமா, படம் பார்த்தமான்னு போகுதுல்லே:-))))
அதுவுமில்லாம ஊர் நிறையத் தமிழ்ப்படம் ஓடும்போது ஏன் பேசமாட்டீங்க?
இங்கிட்டுவந்து பாருங்க. அப்பத்தெரியும். எது கிடைச்சாலும் பார்க்கன்னு ஆயிரும்.
வல்லி,
'திருட்டுப்பயலே' அநேகமா எல்லாருமே பார்த்துருவாங்க. அதனாலெ இங்கே 'எக்ஸ்க்ளூஸிவ்'
படங்களுக்கு மட்டுமே விமரிசனம்:-))))
இந்த மாதிரி படத்துக்கெல்லாம் விமர்சனம் போட்டீங்கன்னா நான் வந்து பின்னூட்டமெல்லாம் போட மாட்டேன். சொல்லிட்டேன்.
(அப்பாடா இதுக்கான கோட்டா ஆயிரிச்சில்ல?)
அம்மா,
//எந்தக் கட்சி சார்பும் இல்லாம இருக்கற எனக்கே படம் பார்க்கும்போது சிலது புரியுதுன்னா, மத்தவங்களுக்கு இன்னும் நல்லாவே புரியலாம்:-))))//
எந்த கட்சி சார்பும் இல்லாம் இருந்தா தான் படம்.
ஏதாவது கட்சி சார்பா இருந்தா நம்ம கட்சிய எதிர்க்கிறான், அது இதுன்னு ஏதாவது தோனும்.
மத்தபடி படமெல்லாம் ஹி... ஹி....
கொக்கி பாருங்க.
கொத்ஸ்,
தயாரிப்பாளர் கையைக் கடிக்காம ஓடற
படங்கள் சத்தியராஜ் படங்கள் தானாமே!
ஏம்ப்பா, ஒரு ஆயிரம் பதிவாளர்கள் பார்க்காததைப்
போட்டாத்தானே 'எக்ஸ்க்ளூஸிவ்' ஆகும்:-))))
( போடு சிரிப்பானை)
சிவமுருகன்,
நீங்கதான் படமே பாக்கறதில்லை. இங்கே இதையும் விட்டா
தமிழ்நாட்டுக்கும் நியூஸிக்கும் தொடர்பு விட்டுருமுல்லெ? :-)))
அட! சிரில். வாங்க வாங்க. நல்லா இருக்கீங்களா?
புதரகம் எப்படி இருக்கு? செட்டில் ஆயிட்டீங்களா?
அடுத்தமுறை கொத்ஸ் வீட்டுக்கு விஸிட் உண்டுதானே?
கொத்துப் பரோட்டா போட்டுருவாரு:-))))
எல்லாரும் கொக்கி கொக்கின்னு கொக்கி போடறீங்க.
வந்ததும் பார்த்துரணும். ரெண்டு மூணு வாரம் ஆயிரும்.
பார்க்கலாம்.
நல்லாயிருக்கோம் மேடம். புது வீடெல்லாம் பழசாயிடுச்சு. கொத்ஸ் வீட்டுக்கு கட்டாயம் போகணும். இப்படி சொதப்பிட்டேனேன்னு வருத்தப்பட்டேன்.
சிரில்,
//புது வீடெல்லாம் பழசாயிடுச்சு. //
இங்கேயும் போனவருசம் கட்டுன நம்மவீடு ஒரு வருசப் பழசா இருக்கு,
இன்னும் சில வேலைகள் பாக்கி இருந்தும்:-)))
இதல்லாம் கேட்கப்படாது...ஆமா!
நற.....நற
சி.ஜி,
படம் பார்க்கலைன்னா பரவாயில்லை. நாளைக்கு வகுப்பு வந்து சேருங்க.
துளசி அக்கா,
இப் பின்னூட்டம் உங்கள் பதிவு பற்றியல்ல. எனவே மன்னித்தருள்க.
செல்வராஜ் அண்ணைன் தளத்தில் உங்களுக்கும் நாளைக்கு திருமணநாள் எனச் சொல்லியிருந்தீர்கள்.
தங்களுக்கும் தங்களது துணைவருக்கும் என் இதயம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.
நன்றி.
அன்புடன்
வெற்றி
வெற்றி,
நன்றிங்க. ரொம்பக் கவனமாப் பின்னூட்டமெல்லாம் படிக்கிறீங்க போல:-)))))
ஆனாலும், 'வாழ்த்து' வந்தப்போ
சந்தோஷமாத்தான் இருக்கு.
மீண்டும் நன்றி.
திருமண நாள் வாழ்த்துகள்
இவ்வாழ்த்து கூறும் வாய்ப்பு நீண்ட காலத்திற்கு தொடர்வதாகுக!
பொறுமை திலகத்தைப் புகழ்கின்றேன் என்பதை அவரிடம் கூறவும்
சி.ஜி,
நாந்தான் வெறும் தங்க நகை கேஸ்.
கோபால் நீங்க சொன்ன 'பொறுமை என்னும் நகை' அணிந்து பெருமை கொள்ள வேண்டும் ஆண்கள் என்பதற்கு இலக்கணமாய் இருக்கார் :-)))))
வாழ்த்தியமைக்கு நன்றி.
யக்கா, பறவை முனியம்மா இல்லேக்கா. பரவை முனியம்மா. பரவை என்ற ஊர் மதுரைக்குப் பக்கத்தில் உள்ளது. கால்கரி சிவா இதப் பாக்காம விட்டுட்டாரே.
வழக்கமா Class க்கு போற மாதிரி "தளத்துக்குள்ள" வந்து மீதியை படிக்கலாம்னு ஆரம்பிச்சா, திருமண நாளுன்னு தெரிய வந்துது.
"இன்று போல் இனிய நினைவுகளுடன் எந்நாளும் இருக்க இருவருக்கும் 'மண தின' வாழ்த்துக்கள்.
இன்றய நினைவலைகளை எழுத்தாக படைக்கும் விருந்துக்காக காத்திருக்கிறேன்.
(கொசுவத்தி புகைய ஆரம்பித்து Flashback எழுத ஆரம்பிச்சாச்சா?
ஒரு வாரம், பத்து நாளைக்கு முன்னாலேயே ஏத்தி வச்சாச்சுன்னு சொல்லியிருந்தீங்க!)
திசைகள்-ஜூன், "ரோமாபுரியில்
காணாமற்போன சித்தார்த்" நன்றாக இருந்தது.பாராட்டுகள்
மகேஸ்,
நம்ம சுதர்சன் கோபால் இந்தப் பரவை/பறவை சொல்லிட்டார். நீங்க வேற
கால்கரி சிவாகிட்டே சொல்லிறாதீங்க. அவர் ஜிகர்தண்டா எடுத்துக்கிட்டு
அடிக்க வந்துறப்போறார்:-)))
மதி,
32 வருசமா ஒரே நினைவலைகள்தான்.
புதுசுபுதுசா எழுத ஒண்ணும் இல்லே:-))))
'திருமணங்கள் பஸ்ஸில் நிச்சயிக்கப்படுகின்றன'ன்னு கோடி காமிக்கலாம்!
சி.ஜி,
நன்றி. படிச்சுட்டீங்களா? கொஞ்சநாள் கழிச்சு இங்கே நம்ம தளத்துலே போடலாமுன்னு
இருந்தேன். போச்சு, ஒரு பதிவு:-))))
Post a Comment