யாரோ இங்கு நான் யாரோ
( வெளியில் வந்தபிறகு)
ஒன்று சேர்ந்தோமே
இன்பம் காண்போமே.......
இதென்ன வெளியில் வந்தபிறகு?
அதை விடுங்க. அப்புறம் பார்க்கலாம்.
சூப்பர் மார்கெட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கோம். அந்தந்த வாரம் என்னென்ன ஸ்பெஷல்லே இருக்குன்றதை மக்களுக்குச் சொல்லிரணுமா இல்லையா? அதுக்காக அவுங்க போடற ப்ரோஷர் வீட்டுவீட்டுக்கு நம்ம மெயில் பாக்ஸ்க்கே வந்துருதுதான். ஆனா யாருக்கு ஞாபகம் இருக்கு?ஒரு கடையின்னா பரவாயில்லை. அதான் ஏழெட்டு கடைங்க போட்டி போட்டுக்கிட்டு விளம்பரம் செய்யுதே.
இங்கே சேல்ன்னு சொன்னா ஒரு ரெண்டு மூணு சாமான் (எல்லாம் க்ரோஸரி அயிட்டங்கள்) உண்மையான விலை குறைவா இருக்கும். நாலைஞ்சு பக்கம் ஸேல் விளம்பரம் வந்தாலுமே நமக்கு வேண்டியது நாலைஞ்சு இருந்தாவே அதிகம்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...... இருங்க. பார்த்துட்டுச் சொல்றேன்.
ஆ... இருக்கு. கேட் ஃபுட். அப்புறம்...... சர்ஃப் கூட இருக்கு.
இப்படி எதாவது மாட்டுனாத்தான் உண்டு. இந்த மாதிரி சாமான்களுக்கு 'லிமிட்' வச்சுருவாங்க. லிமிட் 4 ஒன்லி(-:
இதுக்கெல்லாம் கவலைப்பட்டா முடியுமா? குடும்பம் எதுக்கு இருக்கு? இப்ப உதவி செய்யலைன்னா வேற எப்பஉதவப் போறாங்களாம்?
ச்சலோ ச்சூப்பர் மார்கெட். சேர்ந்தே உள்ளெ போறோம். சேர்ந்தே சாமான்களை டிராலியில் வைக்கறொம். ஆனா நமக்கு வேண்டியது(!) மட்டும் ரெவ்வெண்டு செட்.
செக் அவுட்டுக்கு வந்தாச்சு. இங்கேதான் நீ யாரோ, நான் யாரோன்னு பிரிஞ்சுடறோம். நீ நாலு டின், நான் நாலு டின்.தனித்தனியா காசு கொடுக்கறொம்( நம் குடும்பத்துக்கிட்டே இருந்து வாங்கியும் தரலாம்) சிலப்ப மனசாட்சி மிரட்டுதா? கவலை வேணாம். வெவ்வேற செக் அவுட்லே நிக்கலாம்.
ஆச்சு. வெளியே வரும்போது எல்லாம் ஒரே ட்ராலியில் ஒன்று சேர்(த்)ந்தோமே, இன்பம் காண்போமே!
சட்ட மீறல்ன்னு எதுவும் கிடையாது. அவுங்க லிமிட் பெர் ஃபேமிலின்னு போடலைதானே? ஒரு வேளை போட்டுருந்தா?.......... அப்ப இது ஒரு குடும்பமாவே இருக்காதோ?
அல்பமா இருகோமோன்னு நினைச்சுக்கிட்டே வெளியே வந்தா, நம்ம தோழி அங்கே நின்னுக்கிட்டு இருக்காங்க.பக்கத்துலே தள்ளுவண்டி நிறைய சாமான்கள்.
"ஏன் இங்கே தனியா நிக்கறீங்க?"
" கணவர் உள்ளெ போயிருக்கார், சோப் வாங்க"
" ஓ... லிமிட் இருக்கா?"
":-)))))))))))))))))))))))"
நமக்கு இப்படியெல்லாம் கஷ்டம் கொடுக்கக்கூடாதுன்னு இப்பப் புதுசா
செல்ஃப் செக் அவுட் அறிமுகப்படுத்தி இருக்காங்க.
இனி எல்லாம் தாமாய்.
Friday, June 09, 2006
நீ யாரோ.... இங்கு நான் யாரோ.....
Posted by துளசி கோபால் at 6/09/2006 05:31:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
இப்ப நாந்தேன் ப்ர்ஸ்ட்....
"இருக்கட்டும்..இருக்கட்டும் பார்த்துக்கிறென்
இதர்க்கொரு வழி நான் யோசிக்கிறேன்"
--எங்கெயோ பாட்டு சத்தம் கேட்குது
தள்ளுபடியிலெ கெடைக்கிற லாபமும்,
கூட அழைச்சுட்டுப் போறவங்களுக்கு
ஆவுர செலவும் சரியாயிடுமா?
வாங்க சிஜி.
எல்லாரும் கடைக்குப் போயிட்டாங்க போல இருக்கு:-))))
பலசரக்குலே என்ன பிரமாதமான செலவு?
:-))))
கூட வர்றவங்க பூனைக்குத்தானே சாப்பாடு. அதனாலே அவுங்கதான் நமக்குச் செலவு செய்யணும்:-)))
பலசரக்கு வாங்கிறதுலே கூட பல சரக்கு சொல்லி அசத்திடறீங்களே!
எதுக்கு துளசி லிமிட்டு? வேணும்கறதை வாங்க முடியாதா/
இதுக்காக இந்த அக்காவுக்கு ஒரு டிக்கட்டு அனுப்புங்க. நான் வந்து வாங்கித் தந்துட்டு ஓடி வந்துடரேன்.
அடுத்த வாரம் திருப்பி வரலாம். சரியா?
தாணு,
பலசரக்கு ஷாப்பிங் ரொம்ப போர்தான்.
அதுலே இதெல்லாம்தான் உயிர் ஊட்டறது:-)))
வல்லி,
தாராளமா வாங்க. ஆனா இந்த ஸேல் எல்லாம் வாராவாரம் வர்றதாச்சே.
பேசாம வந்துட்டு இங்கியே இருக்கறதுதான் பெட்டெர்.
உங்களுக்கும் ரெண்ட்டு பூனை பிடிச்சுத்தாரேன்:-))))
// 'லிமிட்' வச்சுருவாங்க. லிமிட் 4 ஒன்லி(-: //
பூனையைக்கூட்டிக்கொண்டு போனால் அதற்கும் தனியாக நாலு உண்டா ?
:-)))
ஞாயும் யாயும் யாராகியரோ
இதத்தான் வாலி அப்படி இப்பிடித் திருப்பிப் போட்டு நீ யாரோ இங்கு நான் யாரோன்னு எழுதீருக்காரு.
நீங்க என்னடான்னா அதுக்குப் புது விளக்கமே குடுத்திருக்கீங்க.
இதெல்லாம் தப்பில்லை. தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேற வேற தானுங்களே.
துளசியக்கா,
என்ன ஒரு அநியாயம்? உங்க ஊருக்கு வந்தா கண்டிப்பா இந்த மேட்டரை அந்த கடைக்காரர் கிட்ட போட்டுக்கொடுப்பேன்! :)))
வல்லி யா? வள்ளி யா?
லதா,
மிருகங்கள்(????) மால்களுக்குள்ளே அனுமதி இல்லை. விதி விலக்கு கைடு டாக்(guide dog)
மட்டும். கைடு கேட் இருந்தாக் கூட்டிட்டுப் போகலாம்.:-))))
இதுங்களை vetகிட்டே கொண்டு போறதே பெரும்பாடு. இதுலே கடைங்களுக்குப்
போயிட்டாலும்......
ராகவன்,
எல்லாம் 'புதுப்புது அர்த்தங்கள்'தான். ஆனாச் சொன்னீங்க பாருங்க,
//தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேற வேற//
இது ரொம்பக் கரெக்ட்.
வாங்க இளவஞ்சி.
வாலிபவயோதிகர் வகுப்பெல்லாம் எப்படிப் போகுது? கூட்டம்
நெரியுதுன்னு சொல்றாங்க:-))))
//உங்க ஊருக்கு வந்தா கண்டிப்பா இந்த மேட்டரை அந்த
கடைக்காரர் கிட்ட போட்டுக்கொடுப்பேன்! //
சரி. இந்த சாக்குலேயாவது வந்துட்டுப் போங்க.
நீங்களும் நாலு வாங்கிக் கொடுக்கலாம்:-)))
//வல்லி யா? வள்ளி யா? //
ஆங்........ மனுஷங்களுக்கு சந்தேகம் எப்படியெல்லாம் வருது பாருங்க!
பேரோட தலையா இருந்தா வள்ளி. 'வள்ளியம்மாள், வள்ளியப்பன் 'இப்படி.
'வாலா' இருந்தால் வல்லி. 'அம்சவல்லி. விஜயவல்லி, கனகவல்லி,மதுரவல்லி'இப்படி.
டீச்சர்,
நீங்க இங்க தள்ளுபடி இலவசம்ன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க. கிடைச்ச கேப்பில உங்க யானைச் சின்னத்தையே அமுக்கிக்கிட்டு போயிட்டாங்க இந்த யானையம்மா. (பின்னா தங்கக் காசு கொட்டும்போதுதானே பொன்ஸ்)
கொஞ்சம் என்னான்னு விசாரிங்க. நான் கேட்டா என்னையே மிரட்டறாங்க.
கொத்ஸ்,
கொஞ்சம் அசந்துரக்கூடாது போல இருக்கே.
என்னன்னு போய்ப் பார்க்கறென்.
ஆமா, தங்கத்துக்கு யானை அனுப்புனது நீங்கதானாமே.
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலை ஆட்டுறது.....?
கொத்ஸ், வத்தி வைக்கிற வேலை வேண்டாம்...:)
அக்கா, நல்ல வேளை லிமிட் - ஒரு பூனைக்கு நாலு டின் தான் அலவுடுன்னு சொன்னா, அப்புறம் பூனைக் குடும்பத்தைத் தேட வேண்டியதாகிடும் :)
இப்படி வேற கதையா? உங்களுக்கு இல்லாததையா அவங்களுக்கு குடுத்தேன்? அப்படியே குடுத்தாலும் அதை அவங்க எப்படி போட்டுக்கலாம்?
ஒரு சின்ன டெஸ்ட். அதுக்கே ஃபெயில் ஆயிட்டாங்களே. போயி முதல்ல அதைத் தட்டி கேளுங்க.
பொன்ஸ்,
பூனைக்கு நாலுன்னா எவ்வளொ தேவலையேம்மா.
இது ஆளுக்கு நாலு
கொத்ஸ்,
அது என்ன டெஸ்ட்?
தெரிஞ்சாத்தானே அதை 'தட்டி' கேக்க முடியும்?
இந்த மாதிரி கில்லாடித்தனமா யோசிக்கறதுக்கு உங்களுக்கு (ஐ மீன் பெண்களுக்கு) சொல்லியா குடுக்கணும்..
நாலு பேர கூட்டிக்கிட்டு போயி நவ்வாலுன்னாலும் பதினாறு ஆயிருச்சே..
நாலுன்னு போட்டவன்..ஹூம்..
டிபிஆர்ஜோ,
கரெக்ட். சிலப்ப மகளுக்கும் ஃபோன் போட்டுச் சொல்லி வாங்கிரலாம். பூனைச் சாப்பாட்டுக்குத்தான் எப்பவும் நான் ஆலாப் பறக்கறது.
நம்ம வீட்டுப் பூனை மட்டும் இல்லையே.தினம் நாலு விருந்தாளிப் பூனைகள் வேற வந்துருது. இதுலே நம்ம ஹெட்ஜ்ஹாக் வேற:-)))
//"நீ யாரோ.... இங்கு நான் யாரோ....." //
நீங்க துளசி கோபால்..
நான் ரசிகவ் ஞானியார் :)
ரசிகவ்,
இதான் நுனிப்புல்!!!!! ரெண்டாவது வரியைப் பார்க்கலையா? :-)))))
Post a Comment