Thursday, June 08, 2006

நியூஸிலாந்து பகுதி 42

திடீர்னு ஒரு நாள் போலீஸ்காரங்க பள்ளிக்கூடத்துக்கு வந்தாங்க. பாடம் படிக்கவா?

சரியாப்போச்சு. படிக்கிற பசங்களோட பைகளைச் சோதனை போடறதுக்காக?

என்னத்தைத் தேடறாங்க? அப்பெல்லாம் இந்த மயக்க மருந்து விஷயங்கள் எல்லாம் இல்லையே? ம்ம்ம்ம்......... என்னவா இருக்கும்?


பிள்ளைங்கெல்லாம் ஒண்ணும் புரியாம இருக்குதுங்க. ஆ....ங்.... கிடைச்சிருச்சு,அவுங்க தேடி வந்த விஷயம். என்னவா ?

அட!! இது நம்ம 'உண்டி வில்'


நாமளும், புளியங்கா,மாங்கா அடிக்க உண்டிவில் வச்சிருந்தவங்க தானே?சிலர்அதுலே இந்த ஓணான், குருவியெல்லாம் அடிப்பாங்க. நான் கொஞ்சம் பரவாயில்லை.மா, புளி, இன்னும் ஒண்ணு. அது வாதாங்காய். பழமாயிருச்சுன்னா நல்லா ரோஸ்சிகப்பாஇருக்கும். உண்டிவில்லுலே ச்சின்னக் கல்லை வைச்சுக் குறி பார்த்து(!) அடிக்கறதுதான்.


பத்துபதினைஞ்சு முறை சரியாக் குறிபார்த்து அடிச்சா, ஒண்ணு ரெண்டாவது விழாதான்னுதான்.....


இங்கேதான் இந்த மரங்கள் எல்லாம் இல்லையே, பின்னே எதை அடிச்சுருப்பாங்க? உண்டிவில் வச்சுக்கறதுஒரு குற்றமா என்ன? போலீஸ் வந்திருக்கு?


பசங்க அடிச்சது பீங்கான், கண்ணாடியிலே செஞ்ச கப்புகளை. டெலிஃபோன் லைனை இழுக்கறதுக்காக,அங்கங்கே தந்திக்கம்பம் நட்டு அதுமேலே இந்தக் கப்புகளைப் பொருத்தி வச்சுருப்பாங்கல்லே. அதைத்தான் இந்தப் பசங்க உண்டிவில் வச்சு அடிச்சு நொறுக்கி இருக்குதுங்க.


இப்பத்தான் இங்கே தொலைபேசி, தபால், தந்தின்னு வர ஆரம்பிச்சு இருக்கு. புதுசா ஒரு சாமான், அதுவும் பளபளன்னு மின்னிக்கிட்டு உசரத்துலே இருக்கு. அது என்னவா இருக்குமுன்ற ஆர்வக்கோளாறுதான்.


ஒரு சின்னப் பள்ளிக்கூடத்துலேயே 30 உண்டிவில்லுங்க கிடைச்சதாம்.
இந்தக் காலக் கட்டத்துலேதான் சாரணர் இயக்கம் பள்ளிக்கூடத்துகளிலே அறிமுகம் ஆச்சு. ஸ்கவுட் & கைடுகள். இந்த இயக்கத்தை நடத்திக்கிட்டுப் போகக் காசு தேவையா இருந்ததாலே, சில வீட்டம்மாங்க சேர்ந்து பிஸ்கெட் தயாரிச்சு வித்திருக்காங்க. இதுக்குப் பேரே 'கேர்ள் கைடு பிஸ்கெட்ஸ்'.

இப்பக்கூட இந்த பிஸ்கெட்டுகளைத் தயாரிச்சு அப்பப்ப fund raising செய்யறாங்க. ஆனா தயாரிப்பு வீடுகளிலே கிடையாது. சில பிஸ்கெட் கம்பெனிகளே தயாரிச்சுக் கொடுத்துருது.


அவசர மருத்துவ உதவிக்கான ஆம்புலன்ஸ் சர்வீஸும்( St. Johns) பார்வை இல்லாதவர்களுக்கு உதவி செய்யறதுக்காகஒரு' பவுண்டேஷன் ஃபார் ப்ளைண்ட்'-ம் உருவாச்சு.


பிள்ளைப்பேறுக்கான மருத்துவ மனைகளை செயிண்ட் ஹெலன்ஸ்( St. Helen's) ன்னு சொன்னாங்க.இந்த பேர் வந்த காரணம் என்னன்னா, அப்ப இங்கே பிரதமரா இருந்த ஸெட்டனோட பொறந்த இடமாம்.இங்கிலாந்துலே லங்காஷைர்லே இருக்கற ஊராம்.


ரிச்சர்ட் ஜான் ஸெட்டன்( Richard John Seddon) பிரதமரானது 1893லே. பதிமூணு வருஷம் ஆண்டிருக்கார்.ரொம்பப் புகழ் வாய்ந்தவராம். இவருக்கு ஒரு பட்டப்பேர் கூட இருந்திச்சாம், கிங் டிக் (King Dick)பல நல்ல காரியங்களை நடைமுறையிலே கொண்டு வந்தார். அதுலே முக்கியமாச் சொல்ல வேண்டியது, முதியோர்களுக்கு பண உதவி.


இந்த ஓய்வு ஊதியத்தைப் பத்தி நிறையச் சொல்றதுக்கு இருக்கு. இப்ப இது எப்படி நடைமுறையிலே இருக்குன்னு அப்புறம் பார்க்கலாம். ஆனா, இதை ஆரம்பிச்சு வச்ச 1898 வருசத்துலே இருந்த மக்கள் உண்மையிலேயே கொடுத்து வச்சவங்கதான். வீட்டுப் புழக்கடையிலே சில காய்கறிச் செடிகளை நட்டு வச்சுட்டு, நாலைஞ்சு கோழிகளை வளர்த்துக்கிட்டாப் போதுமாம். கிடைக்கிற பென்ஷன் காசு யதேஷ்டம். அதுலேயும் உருளைக்கிழங்கெல்லாம் பயிர் செய்யணுமுன்றஅவசியம் கூட இல்லீங்க. சமைக்கிறப்ப வேண்டாத கிழங்குகளைத் தோட்டத்துலே வீசி எறிஞ்சாலே போதும். அதுபாட்டுக்கு மொளைச்சு வந்துருது.


தீ விபத்து நடந்தா, அதுக்குண்டான நஷ்டத்துக்கு ஈடு செய்ய ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனி இருந்தா நல்லதுன்னு நினைச்சார் பிரதமர் ஸெட்டன். அரசாங்கமே இந்த கம்பெனியை ஆரம்பிச்சது. மக்கள் மத்தியிலே அமோக வரவேற்பு. அதான் 13 வருசம் தொடர்ந்து பிரதமாராவே இருந்துருக்கார். இவ்வளவு நல்ல எண்ணங்கள் எல்லாம் இருந்தும், இவரைப் பத்துன ஒரு கரும் புள்ளி இருக்கு.


ஆசியாவைச் சேர்ந்தவர்கள் இங்கே வந்து குடியேற்றம் செய்யறது, இவருக்குப் பிடிக்கவே இல்லை. இங்கே தங்கச் சுரங்கத்துலே வேலை செய்யறதுக்காக நிறைய ச்சீனர்கள் வந்திருந்து, இங்கேயே தங்கிட்டாங்க. 19 வருசத்துக்குமுந்தியே இங்கே வர ஆரம்பிச்சவங்க இந்தச் சீனர்கள். அடுத்த ஏழு வருசத்துலே கணக்குப் பார்த்தப்ப 5000 ச்சீனர்கள் இருந்தாங்களாம்.


இந்தியாவும் ஆசியாக் கண்டத்துலேதானே இருக்கு. ஆனா இந்தியர்களான நம்மை இங்கே ஆசியர்கள்னு சொல்றது இல்லை.இன்னி வரைக்கும் அரசாங்கத்துலே இருக்கற எந்தப் படிமத்துலே பார்த்தாலும், இனம் என்ற பிரிவுலே ஆசியர்கள், இந்தியர்கள்னு தனித்தனியாத்தான் குறிப்பிட்டுக்கிட்டு இருக்காங்க.


சரி, நம்ம ஸெட்டனைப் பார்க்கலாம். இவருக்கு ஆசியர்கள், இந்தியர்கள்ன்னாலே வெறுப்பு. அதனாலே அப்ப இங்கிருந்த மேற்படி இனங்களுக்கு இந்தப் பென்ஷன் திட்டம் போய்ச் சேராமப் பார்த்துக்கிட்டார். ஆனாலும் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி மனுஷனுக்குக் கூடாதுல்லே?


உள்ளூர் தபால் சேவையும் ஆரம்பிச்சது. வெளிநாட்டுக்கும் கப்பல்லே தபாலை அனுப்புனாங்க. எல்லாத்துக்கும் ஒரே சார்ஜ் தானாம். அரசாங்கமே பல இலாக்காக்களை, சுகாதாரம், கல்வி, மக்கள் நலம், நில விவகாரம் இப்படிக் கவனிச்சது.


இந்த நாட்டோட நேஷனல் ஸ்போர்ட்டான ரக்பி ஆட்டத்துக்காக 'ரக்பி புட்பால் யூனியன்' ஆரம்பிச்சதும் இந்த சமயத்துலேதான்.


இங்கே இருக்கற 'மவுண்ட் குக்' மலைச் சிகரத்திலே மொதமொதல்லே ஏறியதும் இந்தக் காலக் கட்டதுலேதான்.இதுலே எல்லாம் ஏறி நல்லா பயிற்சி எடுத்துக்கிட்டுத்தான் நம்ம எவரெஸ்டு சிகரத்துலேயும் ஏறிட்டார் எட்மண்ட் ஹிலாரி. இவர் நியூஸிக்காரர்தான்.


இந்த மலைத்தொடர்களைப் பத்திக்கூட ஒரு கதை இருக்கு. அதை அடுத்த வகுப்புலே சொல்றேன்.

15 comments:

said...

//ஒரு சின்னப் பள்ளிக்கூடத்துலேயே 30 உண்டிவில்லுங்க கிடைச்சதாம்.//

அந்த பசங்களுக்கு "செல்லமா" அட்வைஸ் எல்லாம் ஒன்னு கொடுக்கலயா மிஸ்.:-)

said...

உள்ளேன் டீச்சர். ஆனா உண்டி வில்லெல்லாம் இல்லை. நல்லாப் பாத்துக்குங்க. :)

said...

நன்மனம்,

அப்பெல்லாம் போலீஸ்ன்னா ஒரு பயம் இருந்துருக்கும் போல.

இப்ப கதையே வேற.

'காவல்துறை உங்க நண்பன்' ஆயிருக்கு.

said...

வாங்க கொத்ஸ்.

உண்டி வில் இருந்தாலும் இப்ப ஒடைக்கறதுக்குக் கண்ணாடிக் கப் இல்லையேப்பா(-:

said...

அப்பவே உண்டிவில்லெ அங்கே அணுப்பி வச்சுட்டீங்களா?
திருவண்ணாமலையிலெ ரமனாஸ்ரமம் பக்கமுள்ள
வீடுகளில் எல்லாம் உண்டிவில் இருக்கும்...எல்லாம் நம்ப மூதாதையர் படையெடுப்பை மிரட்டதான்..அவுங்களும் உண்டிவில்ல கண்டா அம்பேல் ஆய்டுவாங்க

said...

சி.ஜி,

அப்பவே என்ன அப்பவே?

நான் போன ஜென்மத்துலே இங்கேதானே இருந்தேன். அப்ப நாலைஞ்சு கண்ணாடிக் கப்புகளை உடைச்சுட்டேன்(-:

'திருவண்ணாமலை முன்னோர்கள்.'

அந்தத் தியரி இப்ப மாறிப்போச்சாமே. அப்படியா?

said...

இன்னி வரைக்கும் அரசாங்கத்துலே இருக்கற எந்தப் படிமத்துலே பார்த்தாலும், இனம் என்ற பிரிவுலே ஆசியர்கள், இந்தியர்கள்னு தனித்தனியாத்தான் குறிப்பிட்டுக்கிட்டு இருக்காங்க.//

நம்மள பார்த்தா அவ்வளவு பயமாருக்கும்:)

said...

ட்டிபிஆர் உங்க பதிவுக்கு பின்னூட்டம் போட்டுட்டாரமே
என்ன சாம்பார் கொதிச்சுட்டு இருக்கா?

said...

அம்மா,
நல்ல ஊரு,
நல்ல பதிவு,
நல்ல ரசனை.

said...

ஆமாங்க டிபிஆர் ஜோ.

நீங்க சொன்னாப்புலே,ஒருவேளை உள்ளுக்குள்ளே இன்னும் இந்த பயம்
இருக்கோ என்னமோ?

said...

சிஜி,

கொதிக்கறதெல்லாம் ஒரு நாள் அடங்கிரும்.

பி.கு: இன்னிக்கு சாம்பார் இல்லை.

ஏங்க டிபிஆர் ஐ ச்சும்மாச்சும்மா வம்புக்கு இழுக்கறிங்க?

வகுப்புலே 'பசங்க' சும்மா இருக்கறதில்லை:-)))

said...

சிவமுருகன்,

நன்றி. எல்லாம் நல்லதுதான்.

said...

வரலாறு கூட கொஞ்சம் நியூசி யின் இயற்கை அழகை காண புவியியலும் 'சொல்லி'க் கொடுங்கள்.:)) முகப்புப் படம் அருமை. அதுதான் கேப்டன் குக் சிகரமா ?

said...

வாங்க மணியன்,
அது மவுண்ட் குக் சிகரமேதான்.

நியூஸி சுற்றுலாவுக்குன்னு ஒரு தனித்தொடர் போடற எண்ணம் இருக்கு. அப்ப அதுலே கொஞ்சம்
புவியியலையும் கலந்துறலாம்.:-))

said...
This comment has been removed by a blog administrator.