Monday, June 26, 2006

நியூஸிலாந்து பகுதி 47இந்த மவோரி கிராமங்களும் ரொம்பச் சின்னதுதான். 50 பேர் ஒரு கிராமத்துலே இருந்தாலே அதிகம். மண்ணு,மரப்பட்டைன்னு வச்சுக் கட்டிக்கிட்ட ச்சின்னச்சின்ன வீடுங்கதான். அடுக்களை எப்பவும் வீட்டுக்கு வெளியில்.கழிப்பறைகள் எல்லாம் கிடையாது. அக்கம்பக்கத்துலே வாய்க்கால் ஓடுனா அதுலே இருந்து குடிக்கத் தண்ணீர் எடுத்துக்குவாங்க. ஃப்ளாக்ஸ் செடிகளைத் தேடிப்போய் சேகரிச்சுப் பாய் முடையறது, கவுரி மரப் பிசினைச் சேகரிச்சு பெயிண்ட் கம்பெனிக்கு விக்கறதுன்னு அலைஞ்சாங்க. வேற வழி இல்லாமப் போனப்ப வேலை தேடி, வெள்ளைக்காரங்க நடத்துற பண்ணைகளில் சேர்ந்தாங்க கொஞ்சம் பேர். சிலர் டவுனுக்குப் போய் அங்கே எதாவது வேலை தேடிக்கிட்டு அங்கேயே இருந்துட்டாங்க. வயிறுன்னு ஒண்ணு இருக்குல்லையா?பிழைக்கணுமே!


அதுவரை ஆரோக்கியமா இருந்தவங்களுக்கு, 'வெள்ளைக்கார நோய்கள்' பரவ ஆரம்பிச்சது. தட்டம்மை, கக்குவான் இருமல், ப்ளூ காய்ச்சல்ன்னு வந்து நிறைய மவோரிங்க சாக ஆரம்பிச்சாங்க.


தன்னோட இன மக்கள் இப்படி இருக்கறதைப் பார்த்து மனசு வேதனைப்பட்டார் ஒருத்தர். இவர் பேர் Apirana Ngata. இந்த இனத்து முதல் பட்டதாரி. கேண்டர்பரியிலே பி.ஏ. முடிச்சுட்டு, ஆக்லாந்துக்குப் போய் வக்கீலுக்குப் படிச்சவர்.தம்மக்களுக்கு சேவை செய்யணுமுன்னு மவோரிங்க நிறைய இருக்கற பகுதியிலே இருந்து பார்லிமெண்டுக்கு வந்தவர்.


இன்னும் ஒருத்தரும் இதைப்போலவே நினைச்சார். இவர் ஒரு மருத்துவர். 'பீட்டர் பக்' ன்னு பேர் வச்சுக்கிட்டவர்.இவரோட மவோரிப் பேர் Te Rangi Hiroa. 'நேடிவ் ஹெல்த் ஆஃபீஸரா' வேலை செஞ்சவர். இவரும் இவரைப்போலவே வேலை செஞ்சுக்கிட்டு இருந்த இன்னோரு மவோரி டாக்டரான Maui Pomare வும் பார்லிமெண்டுக்குள்ளெவந்தாங்க. மவோரிகள் நிறைஞ்ச இடத்துலே கிழக்கு, வடக்கு, மேற்குன்னு தொகுதிகளிலே இருந்து வந்தவுங்க.


அப்பதான் ஆரம்பிச்சுப் பரவிக்கிட்டு இருந்த யங் மவோரி கட்சி( Young Maori Party)யைச் சேர்ந்தவுங்க இவுங்க மூணு பேரும். தங்களுடைய கல்வியறிவை வச்சு, தன் இனத்தை எப்படியாவது மேம்படுத்தணுங்கற வெறி இவுங்களுக்கு இருந்துச்சு. இல்லாட்டி இவ்வளோ படிச்சு என்ன பயன்?னு நினைச்சாங்க.


மொதல்லே, இந்த வெள்ளைக்காரங்களைப் பார்த்து தங்களுடைய வாழ்க்கை முறைகளைக் கொஞ்சம் மாத்திக்கணுமுன்னு தம் மக்களுக்குச் சொல்லி கொஞ்சம் மாத்துனாங்க. ஆனா அந்தக் காலக்கட்டத்துலே இது ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு.ஏற்கெனவே சொன்னபடி நிலம் இல்லை, வேலை வெட்டி இல்லை, காசு இல்லை இப்படி நிறைய இல்லைகள்.அரசாங்கமும் ஒரு கண்ணுக்கு வெண்ணெய், ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு வச்சது. வெள்ளைக்காரப் பண்ணை முதலாளிகளுக்கு அரசாங்கக் கடன் உதவி. வெள்ளைக்காரர்கள் இருக்கும் இடத்துலே புதுசுபுதுசா பள்ளிக்கூடம்,ஆஸ்பத்திரி. மவோரிகளுக்கு இது எதுவுமே இல்லை. தப்பித்தவறி புள்ளைங்களைப் படிக்க வைக்கலாமுன்னாபுத்தகம் வாங்கறதுக்கோ, உடம்பு சரியில்லாத புள்ளைகளை கவனிக்கக்கொள்ள டாக்டருங்களைத் தேடிப்போறதுக்கோ போதுமான வசதியும் இல்லை.


ஒரு கட்டத்துலே, எல்லா நிலச்சண்டைகளும் ஓய்ஞ்சபிறகு, 'வெளி ஆளுங்க பேச்சை இனியும் கேக்கக்கூடாது.நம்ம இனம்தான் நமக்கு உதவும் அதுனாலே நம்ம இனத் தலைவர்களே மேல்'ன்னு முடிவு செஞ்சாங்க. அப்ப இருந்தசில மவோரித் தலைவர்கள் சொந்தமா நமக்குன்னு ஒரு மதம் இருக்கணுமுன்னு தீர்மானிச்சு அதையும் செஞ்சாங்க.ஜனங்களுக்கும், அவுங்க மூதாதையர்களோட ஆவிகள் துணையும் கடவுள் துணையும் இருக்குன்னு ஒரு நம்பிக்கை வந்துச்சு.புது மதம் ஆரம்பிச்சது. ஸ்தாபகர் டெ கூட்டி ரிகிராங்கி( Te Kooti Rikirangi)
'யூதர்களுடைய பழைய ஏற்பாடு' போல இந்த மதமும் இப்படிச் சொல்லுச்சு.
" அதிகாரத்துலே இருக்கற மனுஷர்களாலே மவோரிகளின் நிலங்களும் உரிமைகளும் பறிக்கப்பட்டு, ரொம்பக் கேவலமாவும், அநியாயமாவும் மவோரி மக்கள் நடத்தப்பட்டிருக்காங்க.ஆனால் எப்படி யூதர்களைக் கடவுள் காப்பாத்துனாரோ அதே போல கடவுள் மவோரிகளையும் காப்பாத்துவார்.

இதுக்கு முதல் படியா வெள்ளைக்காரர்களை இனி ஒரு போதும் நம்பக்கூடாது"
"எனக்கப்புறம் உங்களை எல்லாம் வழிநடத்த இன்னும் 14 வருசத்துலே இந்த மலைகளிலெ இருந்து ஒரு மனுஷன் வருவார். அவர்தான் புது தீர்க்கதரிசி."னு சொல்லிட்டு டெ கூட்டி ரிகிராங்கி ஒருநாள் மரணமடைஞ்சார்.


ருஆ கெனானா Rua Kenana தான் புதுசா வந்த தீர்க்க தரிசி. இவரும் ஸ்தாபகர் சொன்னமாதிரியே தன் இன மக்களை யூதரோடு ஒப்பிட்டுப் பிரசங்கமெல்லாம் செஞ்சார். இவரைப் பின்பற்றிய Tuhoe ன்ற மவோரி குழுவைச் சேர்ந்த ஜனங்கள், நம்ம தான் அந்தக் காலத்துலெ கஷ்டப்பட்ட இஸ்ரேலி மக்கள் . இனிமே நமக்குன்னு ஒரு பேர் வேணும், அது இதுதான் Nga Iharaira ( the Israelites) அதுக்கப்புறம், இங்கே மாஉங்காபொஹடு Maungapohatu என்ற ஊர்லெ இருக்கற உரவெரா குன்றில் Urewera hills ஒரு கோயில் கட்டுனாங்க. மரத்தாலெயே வட்டமாக் கட்டுன இந்தக் கோயிலுக்கு புது ஜெருசலேம் New Jerusalemனு பெயர் சுட்டுனாங்க.


படங்கள்: அப்போ இருந்த மவோரிகளின் வீடும், புதுசாக் கட்டுன கோயிலும்.

28 comments:

said...

அது என்னங்க. அரசியல்ல வக்கீலுங்களும் மருத்துவர்களும் அப்படி வந்து விழறாங்க? நம்ம ஊரில் மட்டும்தான்னு நினைச்சா அமெரிக்கா வந்தா இங்கையும் அப்படித்தான் இருக்கு. உங்க ஊர் கதையைப் படிச்சா அங்கையும் அதே கதைதான்.

எதனா காரணம் இருக்கா?

said...

கொத்ஸ்,

சொன்னா நம்பமாட்டீங்க. இதை எழுதறப்ப நானும் இதையேதான் நினைச்சேன்.
'எப்படி வக்கீலுங்க அரசியலுக்கு வர்றாங்க'ன்னு......

இதுமட்டுமில்லை. எதுக்கு மனுஷன் புதுசுபுதுசா மதங்களைக் கண்டுபிடிக்கறான்னும்(-:

said...

சாதாரன மக்களைவிட வக்கில் மற்றும் மருத்துவர்களால் அதிகம் சிந்திக்க முடிகின்றது.பொதுநல நோக்கில் சமூகப்பணியில் ஈடுபடுகின்றனர், ஆனால் காலம் போகப்போகத்தான்..............

said...

வாங்க சிஜி.

நீங்க சொன்னதுபோலத்தான் இருக்கணும்.

நம்மூர்லேயும் சட்டம் படிச்சவங்கதானே வர்றாங்க. ஒருவேளை அதுலெ இருக்கற ஓட்டையைத் தெரிஞ்சுக்கிட்டு வர்றது பாதுகாப்போ?

said...

மதங்கள் கண்டுபிடிக்கிறது,வக்கீல்கள் அரசியலுக்கு வரது எல்லாம், ஏதாவது ஒரு நல்லது நடத்திடணும்க்ற வேகம்தான். எத்தைத் தின்னா பித்துத் தெளியும். சூழ்னிலை மாறணும்.புதிசா வந்தா உற்சாகமா வேலையாகும் என்று எல்லாம் தோணும் இல்லையா/வரும்போது இருந்த கருத்துக்கள் எல்லாம் வருடங்கள் ஓடினதும் வேறாகிவிடுகிறது.

said...

வாங்க மானு.

//வரும்போது இருந்த கருத்துக்கள் எல்லாம் வருடங்கள் ஓடினதும் வேறாகிவிடுகிறது.//

ஓஓஓஓ இதுதான் 'வரவர மாமியார்
கழுதை போல ஆனாளாம்'...?

said...

பின்ன?மாமியார் தேஞ்சு கழுதை, அதுவும் தேஞ்சு கட்டெறும்பு. இது பழசு. இங்கே மாமியார் வளர்ந்துடுவாங்க. அவங்க பாத்துக் கொள்ள வந்தவங்க கட்டெறும்பு ஆகிவிடுவாங்க. ஒரு புது fஃஆர்முலா இது.கட்டெறும்பும் கடிக்கும்னு படம் எடுக்கலாமா?:-))

said...

வார்த்தைகளின் வித்தை வக்கில்களுக்குத் தான் தெரியும். அரசியல் என்றால் மக்கள் மன்றத்தில் வாதாடவேண்டாமா ? தவிர சட்டம் பயின்றவருக்கு சட்டம் ஆக்குவதிலே ஆர்வம் இருப்பதில் வியப்பில்லையே.

said...

மானு,

//கட்டெறும்பும் கடிக்கும்//

டைட்டில் சூப்பர்

'சின்ன ராசாவே....கட்டெறும்பு உன்னைக் கடிக்குதா.....?'ன்னு பாட்டெல்லாம்
வந்துருச்சு, தெரியுமுல்லே?

said...

வாங்க மணியன்,

//வார்த்தைகளின் வித்தை வக்கில்களுக்குத் தான் தெரியும். அரசியல்
என்றால் மக்கள் மன்றத்தில் வாதாடவேண்டாமா //

வாய்ச்சொல்லில் வீரரா இருக்கணும். அப்படித்தானே?
ஆமாம், நம்மூர்லே 'ஒருத்தர்'சட்டசபையிலே பேசறப்ப, மத்தவங்க
தாளம் போடணுமாமே. அப்ப்டியா?

said...

//நம்மூர்லேயும் சட்டம் படிச்சவங்கதானே வர்றாங்க. ஒருவேளை அதுலெ இருக்கற ஓட்டையைத் தெரிஞ்சுக்கிட்டு வர்றது பாதுகாப்போ? //
அதே, தப்ப தப்பு இல்லாமல் செய்ய அவர்க்களால் தானே முடியும்.
வக்கீல் அரசியவாதி ஆவது. போலீஸ் திருடன் ஆவது. ஆனால் சில சமயத்தில் எத்தனக்கு எத்தன் வந்து இவங்களுக்கு ஆப்பு அடித்து விடுகின்றார்க்கள்.

அது போகட்டும்
என்னா இது,

//கேட்டதும் கொடுப்பவளே......

கீதையின் நாயகியே.....//

சின்னபுள்ளத் தனமால இருக்கு

said...

சூடான் என்ன ஜூடா இருக்கோ?

போலீஸ் திருடன் ஆனா டீச்சர் மாணவியா( சின்னப்புள்ளையா) ஆகக்கூடாதா?:-))))))

பின்னூட்டம் போடுங்கன்னு கேக்கறதைப் பார்க்கலையா?
அதான்........................

said...

ஒரு டீச்சர் எப்பவுமே மாணவி தான்(மற்றவர்க்களுக்கு பாடம் எடுக்க படித்து கொண்டே இருப்பதால்)

//பின்னூட்டம் போடுங்கன்னு கேக்கறதைப் பார்க்கலையா?//

பாத்தேன், அங்க நம்ம கிளப்பின சூட பாத்திங்கள........:))))

said...

பனி பொழியும் நியுஸிலாந்தோ, புழுதிப்புயலடிக்கும் பாலைவனமோ அரசியல் செய்ய அப்பிராணிகள் வேணும் தானே? இங்கு குவைத்தில் கூட 20% மண்ணின் மைந்தர்களுக்கு இன்னும் பாஸ்போர்ட் உரிமை/ஓட்டுரிமை கிடையாது!

நானும் தமிழ்ப் பதிவு ஒண்ணு ஆரம்பிச்சிருக்கேன். வந்து பாருங்க!harimakesh.blogspot.com

said...

வாங்க ஹரிஹரன்.

உங்க பதிவு பார்த்தேன். நல்லா வந்துருக்கு. வந்து ஜோதியிலே கலந்துக்கிட்டதுக்கு
வாழ்த்து(க்)கள்.

said...

நாகை சிவா,

பார்த்தேன்.

வாய் ( கை)தவறி அந்துமணின்னு சொல்லிட்டார். அதுக்கு இப்படியா?

said...

மவோரி என்பதைவிட மஒளரி என்றால் சரியான உச்சரிப்பாக இருக்கும் என்று தோன்றுகிரது. என்ன துளசி சரியா? (ஏம்பா ராசா 47 எபிசோடுக்கு பின்னாடி வந்து சொல்றியேன்னெல்லாம் கேக்கக்கூடாது, அப்புறம் இங்க உள்ள் ஈவில சொல்லி மாத்த வெக்க வேண்டிதா பூடும் பாத்துக்கோங்க)

said...

சுரேஷூ,

இங்கே இருக்கற நம்ம ' இவி' யிலே மஒளரி யின்னு சொன்னா 'ம ஒ ள ரி'
ஒளறலாப் போயிராதா? 'மெளரி' ன்னு சொன்னா உடனே சந்திர குப்தரா, சமுத்திர குப்தரான்னு
சந்தேகம் வந்துரும்.

தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த மவோரி, மவொரி என்ற வார்த்தைகள் முன்னேயே ஒரு 16 வருசத்துக்கு
முந்தியே பழக்கப்படுத்தி வச்சிருந்தார் ஒரு எழுத்தாளர். அதையே சொல்லிட்டாக் குழப்பம் வராதுன்னு பார்த்தேன்.
ஆனா ,இப்படி குழப்பமே, பின்னூட்டமா வருமுன்னு எதிர்பார்க்கலையே ராசா:-)

said...

குழப்பினதாலதான் அமிர்தம் கிடைச்சது. ஆஹா, மவோரி, மவொரி. மெளரி, மஒளரி, இன்னும் மவுரி ...மாறுதல் என்பது தவிர்க்க முடியாதது 16 வருஷதுக்கு முன்னாடி தப்பா சொன்னத துளசி மாத்திட்டாங்கன்னு ஒரு சரித்திர புகழ் கிடைக்குமே, நல்லா யோசிச்சு பாருங்க.

said...

சுரேஷூ,

இங்க ஒருத்தர் என்ன சொன்னார்ன்னா,

இந்த மவோரிகள்தான் அந்தக் காலத்துலே ( ராமாயணக் காலத்துலே) மரவுரி அணிஞ்சுக்கிட்டு இருந்த
காட்டு ஜனங்க. அதுலே இருந்துதான் இந்த மவுரி என்ற பேரே வந்துச்சுன்னு ஒரு போடு போட்டார்.
அதுக்கப்புறம்தான் நிலமெல்லாம் நகர்ந்து பூமி இப்ப இருக்கறதுபோல ஆயிருச்சுன்னு.

இது எப்படி இருக்கு!

said...

//
பின்ன?மாமியார் தேஞ்சு கழுதை, அதுவும் தேஞ்சு கட்டெறும்பு. இது பழசு. இங்கே மாமியார் வளர்ந்துடுவாங்க. அவங்க பாத்துக் கொள்ள வந்தவங்க கட்டெறும்பு ஆகிவிடுவாங்க. ஒரு புது fஃஆர்முலா இது
//
ம் ம் அனுபவம் பேசுது !! அங்க நீங்க வளர்ந்துட்டிங்கனு சொல்லுங்க :)

said...

//
'சின்ன ராசாவே....கட்டெறும்பு உன்னைக் கடிக்குதா.....?'ன்னு பாட்டெல்லாம்
வந்துருச்சு, தெரியுமுல்லே
//

'சின்ன ராசாவே....சித்தெறும்பு என்னை கடிக்குது அப்பிடினு கேட்டதாக ஞாபகம் . சரிதானே ??

said...

இன்று நீங்கள் எழுதுவது நேற்றைய வரலாறு
நாளை உங்களையும் எழுதும் இந்த வரலாறு

நூறு அடிக்க வாழ்த்துக்கள்

தத்துவம் 001 by மின்னல்

said...

அரசியலுக்கு சட்டம் தெரிந்திருப்பது;இலகுவாக இருந்திருக்கலாம்.மக்களுடன் அறிமுகம் அத்தோடு;வசதி, வைத்தியர்களையும் கொண்டு சென்றுதோ!
மிகச் சுவாரசியமாக சொல்கிறீங்க!
யோகன் பாரிஸ்

said...

வாங்க மின்னல். மொதமொதலா வந்துருக்கீங்க.

பேருக்கேத்த மாதிரியே வரும்போதே ஜொலிப்பா மூணு பின்னூட்டத்தோட ......!


இன்னும் கொஞ்ச நாளுலே( வருசங்கள்?) மாமியாரா ஆகப்போற நிலையில்
வளராம இருக்க முடியுங்களா?

'சித்தெறும்பு'தாங்க. அதுவும் வளர்ந்து கட்டெறும்பா ஆயிருச்சுன்னு வையுங்க:-))))


மின்னல் வரும்போது கூடவே வர்ற இடி மாதிரி, தத்துவ மழையும் ஜோரா இருக்கே!

நன்றிங்க.

said...

வாங்க யோகன்.

நீங்க சொல்றது போல இருக்கலாம். இவுங்களுக்கு மக்களின் உள்ளும் புறமும் தெரிய
ச்சான்ஸ் நிறைய இருக்குதானே?

said...

சட்டம் படித்தவர்களால்தானே சட்டத்தின் நுணுக்கங்களையெல்லாம் தேடிப்பிடித்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்?

இன்னொன்னும் சொல்லலாம்.. சட்டத்தை நன்றாக தெரிந்திருந்தால்தானே அதை வளைக்கவும் உடைக்கவும் முடியும்?

said...

டிபிஆர்ஜோ,

சரியாத்தான் பாயிண்டைப் பிடிச்சுட்டீங்க.

அப்படியெல்லாம் அரசியலுக்கு வர்றதுக்காகவே சட்டம் படிப்பாங்களா? இல்லே சட்டம் படிச்சதாலே அரசியலுக்கு வர்றாங்களா?