Monday, June 05, 2006

No அப்பா, அம்மா.

இன்னிக்குப் பொழுது விடிஞ்சது இப்படி.

இனிமே அப்பா, அம்மான்னு எல்லாம் கிடையாதா? அப்ப 'மதர்ஸ் டே. ஃபாதர்ஸ் டே' கிரீட்டிங் கார்டு, கிஃப்ட் ஐட்டம் வியாபாரம் எல்லாம் போச்சா?

இல்லே ரெண்டு பேருக்குமாச் சேர்த்து ஒரு நாள் வந்துருமா?

இதைப் பாருங்க.

மாறுதல் இல்லாமல் மனுஷ வாழ்க்கை இல்லை.

உண்மைதான். அதுக்காக........ இப்படியா? ஒண்ணுமே புரியலையே

15 comments:

said...

இது தான் முற்ப்போக்கு சிந்தனையோ!!!!!,

எல்லா சமுதாய சீர்திருத்தங்களும் முடிந்த(?) நிலையில் புதிய சிந்தனாவாதிகளின் செயலா? இல்லை பரபரப்புக்காக செய்த செயலா? எது எப்படியோ, நான்காவது தூணுக்கு ஒரு ஈரு கிடைத்தது.

said...

ridiculous,.. nothing else,.

Understand your concern. Feel the same way too.

said...

என்னத்தெ சொல்ற்து?
எதைச்சொன்னா நாலு பேரு திரும்பிப்
பார்ப்பாங்க எனும் மெண்டாலிடி

said...

"ஒரு பஸ்ஸும் பாவம் கோபாலு"ம்
என்ற மாதிரி இண்ட்ரெஸ்டிங் இடுகையை எதிர்பார்த்தா எதையொ போட்டுட்டீங்க. பரவயில்லெ.சமூகப் பிரச்சினை ஒன்றை எழுப்பியிருக்கீங்க

said...

இருங்க! வேகமாகப் போய் ஒரு இஞ்சி சோடா குடித்து விட்டு தொடர்கிறேன்.
ம்…ஹ்ம்ம்ம்ம்ம்ம்!!!
பாட்டியம்மா, அடிக்கடி சொல்லும். பாம்பு திங்கிற ஊருக்கு போனால் நடு துண்டம் நமக்கு என்று சொல்லணும்.
வேறு என்ன செய்வது??

said...

கஸ்தூரிப்பெண் என்ன சொல்ல வர்ராங்க? புரியல்லே

said...

நீங்க போட்டது ஆரம்பப்பள்ளி.

புதிய தெற்கு வேல்ஸிலே(NSW) சில டே கேர்களில் பிள்ளைகளுக்கு நீங்க சொல்லியிருக்கறது மாதிரியான அறிவுறுத்தல்களும் நடைமுறைப்படுத்தப் படுதாம். இதெல்லாம் டென் மச் என்டு காச்மூச்சென்று சத்தம்.

said...

நன்மனம், ஜெயந்தி, சி.ஜி,

பார்த்தீங்களா.... மனுஷ சிந்தனை எப்படிப் போகுதுன்னு.

குழப்பமா இருக்குங்க.
என்ன பேரண்ட்டோ, என்ன பேரண்டமோ?

கஸ்தூரிப்பெண்,

அந்த நடுக்கண்டம் எதுன்னு காமிச்சீங்கன்னா புண்ணியம்.

சிஜி இப்ப மஹாக் குழப்பத்துலே இருக்கறார், ( நானும்தான்)

ஷ்ரேயா,

இது இன்னிக்கு நம்மூர் பேப்பர்லே வந்துச்சு. அது என்னாங்க இப்படியெல்லாம்
உங்க ஊர்லெ ஆரம்பிக்கிறீங்க? :-)))))

said...

ஜீரணிக்க கடினமான விஷயம்தான்.
ஆனாலும் என்ன செய்வது,
ரிஷிமூலம், நதிமூலம் ஆராயவா முடியும்!!!

said...

same-sex parents //

அப்படீன்னா..?

இயற்கைக்கு முரணான ஒரு குடும்ப அமைப்பு.. இது கொஞ்சம் விசித்திரமானதுதான்.. இல்லையென்று சொல்லவில்லை..

ஆனால் ஒரு முன்னேறிய சமுதாயமும், அதனுடைய அரசும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் அடைந்துவிட்டதாக எண்ணும்போது.. அதை ridiculous என்று நாம் எப்படி விமர்சிக்கலாம்..

அது தவறா இல்லையா என்பதை விமர்சிக்க நாம் யார்? அது அவரவர் தனிப்பட்ட விஷயம் இல்லையா? டெஸ்ட் ட்யூப் பேபியா என்று நினைத்திருந்த காலமும் ஒன்று இருந்ததே.. அது இப்போது சர்வசாதாரணமாக ஆகிவிடவில்லையா?

ஒரே செக்ஸைச் சார்ந்தவர்கள் செய்துக்கொள்ளும் திருமணம் சட்டபூர்வமானதாக அங்கீகரிக்கும் சமுதாயத்தில் அவர்களுடைய குழந்தைகளையும் ஏற்றுக்கொள்ளுமே..

அதில் தவறு இருக்கிறதா இல்லையா என்பது வேறு விசயம்..

But, I don't think that it is fair on our part to judge them..

said...

டிபிஆர்ஜோ,

'இதுவும் இருக்கட்டுமு'ன்னு வச்சுக்காம அப்பா, அம்மான்ற பேர் வேணாமுன்னு சொல்றதுதான்
குழப்பத்துக்குக் காரணம்.
தாயை வச்சே ஆயிரம் பழமொழி இருக்கே, அதையெல்லாம் என்ன செய்யறது?

said...

அம்மாவும் அப்பாவும் இல்லாமல் என்னதான் புதிதாகக் கண்டு பிடிக்கப் போகிறார்கள்?இத்தனை முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் ஏற்கனவே இருக்கிற அம்மா அப்பாவுக்கும் வேற பெயர் வைப்பார்களோ/

said...

அங்கீகரிக்கப்பட்ட விஷயங்கள் என்று யோசித்தால், ஒரு காலத்தில் விண்ணப்ப படிவங்கள் இப்படி வந்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!

தாய்/கள்:
தந்தை/ள்:
மரபுத்தாய்:
மரபுத்தந்தை:
தத்தெடுத்த தாய்:
தத்தெடுத்த தந்தை:
கடவுள் தாய்(Godmother):
கடவுள் தந்தை (God father):
பாதுகாப்புத்தாய்:
பாதுகாப்புத்தந்தை:

said...

வல்லி,
அம்மா அப்பாவை அப்படியே விட்டுட்டு, புதுசா உண்டான உறவுகளுக்கு வேற பேர் வச்சா
குழப்பம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.

யார் விரும்புனாலும் விரும்பாட்டாலும் சமூக மாற்றங்கள் வந்துக்கிட்டுத்தான் இருக்கும்.
இல்லீங்களா?

said...

கஸ்தூரிப் பெண்,

ஆமாங்க. சீக்கிரமே வந்தாலும் வரும்.
அடுத்த சந்ததி இதை இன்னும் எளிமையாப் புரிஞ்சுக்கும்.