Monday, January 02, 2006

அப்பாடா......


ஓஹ்.... ஒரு வழியா இந்த கிறிஸ்மஸ், நியூ இயர் எல்லாம் முடிஞ்சதுப்பா.

அக்டோபர்லே ஆரம்பிச்சு நேத்துவரை நம்மளைச் சக்கையாப் பிழிஞ்சுட்டாங்க.

இன்னிக்குத்தான் அலுப்புதீர வென்னீர்லே சுகமா குளிச்சுத் துவைச்சுக் காத்தாட ஒரு குடை ராட்டினம் சவாரி!

13 comments:

said...

அட அட அட! என்ன அழகான டெடி பேர்ஸ். அதக் குளிப்பாட்டிப் பஞ்சு முட்டாய் மாதிரி தொங்க விட்டிருக்கீங்களே. இதே டிசைன்ல பஞ்சு முட்டாய் வித்தா நல்லாருக்குமுல்ல....

(அக்னி சாட்சியில் வரும் சரிதாவின் மதினி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல)

said...

என்னங்க துளசி.. அநியாயமா கிளிப்புல மாட்டி விட்டூட்டிங்களே.. பாவமா இருக்கு..

அது சரி.. எங்க ரெண்டு மூனு நாளா நீங்க நம்ம வீட்டுப்பக்கம் வர்ற அடையாளமே தெரிய மாட்டேங்குது.. ஏதாச்சும் கோபமா..

said...

ராகவன்,

யார் கண்டா இந்த மாதிரி பஞ்சு மிட்டாய் வந்தாலும் வந்துரும்.

said...

டிபிஆர் ஜோ,

அதையேன் கேக்கறீங்க. வீட்டுலே ஒரே விஸிட்டர்ஸ் கூட்டம்.

இப்ப வந்து பாத்தா நீங்க சவுத் மெயின் ரோடுலே இடம் பாத்துக்கிட்டு இருக்கீங்க:-)

said...

"அலுப்புதீர வென்னீர்லே சுகமா குளிச்சுத் துவைச்சுக் காத்தாட ஒரு குடை ராட்டினம் சவாரி.."//
- ஓ! அந்த குடை ராட்டினச் சவாரி போறது நீங்களா?

said...

"அலுப்புதீர வென்னீர்லே சுகமா குளிச்சுத் துவைச்சுக் காத்தாட ஒரு குடை ராட்டினம் சவாரி.."//
- ஓ! அந்த குடை ராட்டினச் சவாரி போறது நீங்களா?

said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் துளசி. நம்ம கதையும் டெடி கதைதான்

said...

// யார் கண்டா இந்த மாதிரி பஞ்சு மிட்டாய் வந்தாலும் வந்துரும். //

வருமா! வந்தா டேஸ்ட்டு பாக்கலாம். நியூசிலாந்துல வந்து...பெறகு எப்ப இந்தியாவுக்கு வர்ரது. நியூசிலாந்துல சாஃப்வேரு கம்பெனி இருக்கா?

said...

தருமி,

அது நானும் கோபாலும்தான்.

கவுன் போட்டுருக்கறதைக் கவனிக்கலையா?:-)

said...

தாணு,
அஞ்சால் அலுப்பு மருந்துன்னு ஒண்ணு கிடைக்குதாமே.
டாக்டருங்க அதையும் சாப்பிடலாமுல்லே:-)

said...

ராகவன்,

சாஃப்ட்வேர் கம்பெனி இல்லாத நாடும் ஒரு நாடா?:-)

said...

பஞ்சுமிட்டாய்கள் சூப்பர் அக்கா.

said...

குமரன்,

நன்றி. இன்னும் இருக்கற 'மிட்டாய்களை' யெல்லாம் வெய்யில் முடியறதுக்குள்ளே துவைச்சுத் தொங்கவிடணும்:-)