Sunday, January 15, 2006

பட்டை ஜுரம்.


பட்டை பட்டைன்னு ஒரு ரெண்டு வாரமா வந்துக்கிட்டு இருந்துதா, முதல்லே அது ஏதோதொழில்நுட்பம். நமக்கும் அதுக்கும் காத தூரமுன்னு இருந்துட்டேன். உதவிக்கு நம்ம'குடும்பத்துலே' யாராவது வருவாங்கன்ற அதீத நம்பிக்கை.


அதுலெகூடப் பாருங்க, பழைய அழிக்கணுமா வேணாமான்றதுதான் தலையைப் பிச்சுக்கறகேள்வியா இருந்துச்சு. நாள் இருக்கேன்னு பார்த்துக்கிட்டு இருக்கறப்பவே பரபரன்னு ஓடிப்போய் மீதி ரெண்டே நாள்தான்னு ஆனதும், என்னடா செய்யறதுன்னு பேய்முழிமுழிச்சுக்கிட்டு, அன்னிக்குக் காலையிலே எழுந்ததும், (அப்பத்தானே மூளை ஃப்ரெஷ்ஷாஇருக்கும்!) மறுபடி நிரல் ஒட்டு வேலையை கவனமாப் படிச்சேன். 'புரிஞ்சுபோச்சா'ன்னுகேக்கமாட்டீங்கன்னு நம்பறேன்.


வழக்கம்போல ஒண்ணும் புரியலை. கடவுள் மேலே பாரத்தைப் போடுன்னு பாட்டி சொன்னமுதுமொழியை மனசுலே வச்சுக்கிட்டு, என்னோட டெம்ப்ளேட்டை ஒரு காப்பி எடுத்துவச்சுக்கிட்டேன். எதாவது 'கடுபடு' (ஹிந்தி & மராத்தி வார்த்தை) ஆச்சுன்னா இந்தக் காப்பியை எடுத்து ஒட்டிறமாட்டேனா என்ன!


அதுக்கப்புறம் ஒண்ணாவது நிரல் பட்டையை எடுத்து, பழைய பட்டையை அழிச்சிட்டு அங்கே ஒட்டுப் போட்டேன்.அப்புறம் அதே போல ரெண்டாவது. அதுக்கப்புறம் இலவச இணைப்பாக் கொடுக்கறதுபோல ஒரு ச்சின்னப்பட்டை வேற இருந்துச்சு. அதையும் ஒட்டியாச்சு. முழு ப்ளொகையும் மறுபதிவும் செஞ்ச்சாச்சு.


'குட் ஆன் யூ' சொல்றதுபோலவும், 'ச்சீ ,நீ பேட் 'ன்றது போலவும் 'தம்ப்ஸ் அப் அண்டு டவுன்' படங்கள் வந்துச்சு.ஆச்சா, ஆஹா பட்டை வந்துருச்சுன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனாலும் மனசுலே பக் பக்.


குடும்பத்து ஆட்கள் யாராவது பார்க்கணுமே கடவுளேன்னு ஒரு மயில் பறக்கவிட்டாச்சு. குடும்பத்தில் ஒருத்தர்அதைப் பார்த்தே பார்த்துட்டார். தனிமடலிலே தொடர்பு கொண்டு உதவி வேணுமான்னு கேட்டாரா, அவ்வளோதான்.'ச்சிக்கெனப் பிடித்தேன்'. பாவம் மனிதர். எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து , சரி செய்யவேண்டிய உத்தியெல்லாம்சொல்லிக் கொடுத்தார். ஒரு வழியாப் போட்டாச்சுன்னு ஆசுவாசம் வர்றதுக்குள்ளே என்னவோ சில சிக்கல்கள்.


ஆனா ஒண்ணு, ஒவ்வொரு பதிவும் போட்டவுடனே கர்ம சிரத்தையா, நந்தவனத்தில் 'உர்ல்,அளி'ன்னதுலே போய் அளிச்சுருவேன்.


இதுக்கு நடுவிலே நம்ம ஷ்ரேயா வந்து கேட்டாங்க. எல்லாம் இந்தப் பட்டை விவரம்தான். அங்கேயும் என்னவோ குழப்பங்கள்.நாந்தான் 'எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்'போல கூடச் சேர்ந்துக் கொஞ்சமே கொஞ்சம் குட்டையைக் குழப்பிவச்சேன்.நமக்கு வந்த உதவிகளை அனுப்பிவச்சேனா, அங்கேருந்து அவுங்க டெம்ப்ளேட்டை நமக்கு அனுப்பி எதாவது தெரியுமான்னு கேட்டுட்டாங்க.


அதைப் பார்த்துத் தலை சுத்தி விழுந்தவ இன்னிக்குத்தான் எந்திரிச்சேன்னா பாருங்களேன். இந்தக் களேபரத்துலேபொங்கல் வந்ததும் தெரியலே, போனதும் தெரியலே. இன்னிக்கு 'மாட்டுப் பொங்கலாமே'!


இதுவரை எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நாலுவகைப் பட்டைங்கதான். அதுலே ரெண்டு, குறுக்கும் நெடுக்குமா நமக்கு நாமே திட்டத்தில் போட்டுக்கற ஆன்மீகப் பட்டைங்க.

மீதியிலே ஒண்ணு அடுக்களையிலே இருக்குற பட்டை. எனக்கு ரொம்ப நெருக்கம்.

அடுத்தபட்டை கொஞ்சம் பேஜாரானது. 100,200ன்னு மில்லியிலே கிடைக்கறது. தமிழ்நாட்டை விட்டுக் கேரளாவுக்குள்ளேநுழைஞ்சவுடனே தமிழ்லே எழுதிவச்சுருக்கற எழுத்தைப் பார்க்கலாம். அட, தமிழ் எழுத்துன்னு சந்தோஷம் வந்துரும்.'கள்ளு' படிச்சவுடனே வந்த சந்தோஷம் பொக்குன்னு போயிரும்.

ஆனா அந்தப் பட்டையெல்லாம் போடாதவங்களைக்கூட 'பட்டை பட்டை'ன்னு தவிக்கவச்சு ஜுரம் வரை கொண்டுவந்து விட்ட இந்தப் பட்டைதான் இப்போதைக்கு வெற்றி பெற்ற பட்டை.


பட்டையே உன் 'நாமம்' வாழ்க!

35 comments:

said...

நானும் இந்தப்பட்டையோட சரியா மாரடிச்சுப்போட்டன். (ஒண்டு ரெண்டு வலைப்பதிவா?)
போட்ட உடன ஒருக்கா வந்துது பட்டை. அதுக்குபிறகு இண்டைவரைக்கும் பட்டை வரேல.
நேற்றும் ஒரு முயற்சிக்குப்பிறகு ஏலாம விட்டிட்டன்.
பிறகு பாத்தா என்ர கணிணியிலதான் அந்தப்பட்டை வரமாட்டன் எண்டு நிக்குது. வேற கணிணியில என்ர பக்கத்துக்குப் பட்டை வருது.

நானறிய கனபேர் உந்தப் பட்டையோட நிண்டு மாரடிக்கினம். கேக்க சந்தோசமாக்கிடக்கு:-)

என்ன கோதாரியோ தெரியேல. தமிழ்மணத்தில பதிவு வந்தாச்சரிதானே எண்டிட்டு இருக்கிறன்.

said...

வசந்தன்,

உங்களுக்குமா இந்தப் பட்டை 'தண்ணி'காட்டிருச்சு?

நீங்கல்லாம் கணினி ஆக்களாச்சே!

said...

இப்பொழுது சரியாக வருகிறது முதலில் நானும் போட்டு மண்டையை உடைத்துக் கொண்டேன்.

said...

"ஆதிமூலமே!"ன்னு கத்தினேன். எங்கிருந்தோ வந்தார் (என் இதயம் கவர்ந்தவர்) மனோஹர உருவம். கவலற்க என்றார். கைகொடுத்தார். "பார்த்தி"ரா.

பட்டை அடிக்காமலே பட்டை அடித்துப்பின் இஞ்சி தின்றது போலமர்ந்திருந்த நான், மீசையை முறுக்கிவிட்டு எழுந்து நிமிர்ந்து அமர்ந்தேன்.

நானும் பட்டையிட்டுவிட்டேன், என் வலைப்பூவில்தான்.

said...

தளம் இல்லாதவர்களின் தளமே!
குரல் இல்லாதவர்களின் குரலே !
பட்டை போட்டுட்டுக் கூட பதிவு போட்டு விடலாம். ஆனால் இந்தப் பட்டை போடாமல் பதிவு போடவே மனம் வரவில்ல்லை. பட்டையும் வரவில்லை. விவரம் தெரிந்த நண்பர்களின் நேரடி வருகைக்காகக் காத்திருக்கிறேன். நீங்க போட்டிருக்கும் பட்டை சூப்பர்!

said...

இங்கே பட்டையோடு பல மேம்பட்ட டெம்ப்ளேட்டுகள் கிடைக்குமே. சத்தம் போடும் நேரத்தில் இதைச் செய்யலாம்.
http://16vayathinile.blogspot.com
http://avvaisanmuki.blogspot.com/
http://paanti.blogspot.com/

said...

இன்னொண்ணு: http://maaviiran.blogspot.com/

said...

அக்கா. என்னோட பலப்பல (சரி பற்பலன்னே சொல்லிடறேன். இல்லாட்டி வசந்தன் கோவிச்சுகுவார்) வலைப்பூக்களில் இந்தப் பட்டையைப் போட்டு முடிக்கிறதுக்குள்ள நீங்க குடும்பத்துலயிருந்து யாராவது உதவிக்கு வருவாங்களான்னு கேட்டது கேட்டுச்சு. இப்ப வரலாம்னு வர்றதுக்குள்ள நீங்களே பட்டையடிச்சு முடிச்சாச்சு. எனக்கு வேலை இல்லாம போச்சு. எல்லாம் இப்படித் தான் ஆச்சு. அதை நான் இப்பச் சொல்லியாச்சு. உங்க கோபமும் போச்சு. இல்லியா?

said...

என்னார்,

வருகைக்கு நன்றி.

ஞானவெட்டியாரே,

ஏகப்பட்ட பதிவுகள் வச்சிருக்கீங்க. உங்களுக்கு பட்டை போட்டுக்க ஒரு விசேஷப்பிரிவே
அனுப்பியிருக்கணுமே அந்த 'ஆதி மூலம்'!

ராம்கி,

மனந்தளராம இருங்க. நம்ம குடும்பத்திலே இருந்து யாராவது வந்துருவாங்க.

"ஏன், நீ உதவி செய்யலை?'ன்னு கேக்கமாட்டீங்கதானே?

அவ்வளவெல்லாம் தெரிஞ்சிருந்தா இப்படியா இருப்பேன்?

said...

காசி,

நீங்க சொன்ன பதிவுகளையெல்லாம் அப்பவே பார்த்தேந்தான். ஆனா, 'எல்லாம் நுழைஞ்சிருச்சு,
இன்னும் வால் மட்டும் நுழையலை' கதைதான்.

இதொக்க இத்திரி புத்திமுட்டாணு!


குமரன்,

அக்காவுக்கு எதுக்குக் கோபம் வரணும்? அப்படியே பொடி நடையா நம்ம ஸ்டேஷன்பெஞ்சு
ராம்கி வீட்டுலே போய் எட்டிப் பாருங்களேன். குடும்பம் உதவிக்கு வந்துக்கிட்டு
இருக்குன்னு சொல்லிட்டேன்

said...

பட்டை விஷயமா இன்னும் பலருக்கு சில கஷ்டங்கள் இருக்குன்னு புரியுது.

போற போக்கைப் பார்த்தால் 'பட்டை போடும் கழகம்'னு ஒரு கட்சிக்கு உறுப்பினர்கள் நிறையத்
தேறுவாங்க போல:-)

' இதுவரைப் போட்டுக்காத/ போடாதவங்களுக்கு உதவி எப்படி செய்யறதுன்னு தெரியலை.

வரிசையா இப்படி வந்து அக்கா முன்னாலே உக்காந்து நெத்தியைக் காமிங்க. போட்டு விடறேன் ன்னு
சொல்லிடவா?:-)

காசியே கதி!

said...

துளசி அக்கா,

உங்கள் புலம்பலுக்கு இங்கே விடையிருக்கிறது.

http://etheytho.blogspot.com/2006/01/blog-post.html

said...

நன்றி அழகப்பன்.

'முயற்சியே திருவினை ஆக்கும்'னு

மனசுலே சொல்லிக்கிட்டே உங்க சுட்டியைப் பார்க்கப்போறேன்.

said...

// என்ர கணிணியிலதான் அந்தப்பட்டை வரமாட்டன் எண்டு நிக்குது. வேற கணிணியில என்ர பக்கத்துக்குப் பட்டை வருது. // உங்கள் கண்ணியில் firewall நிறுவப்பட்டிருந்தால் அதில் disable scripts/javascript என்பது on என்று இருக்கலாம். அதனால்தான் அப்படி. உங்கள் firewall shutdown செய்து பாருங்கள். அப்படியும் பட்டை தெரியவில்லை எனில் உங்கள் பட்டை நிரலில் ஏதோ கோளாறு.

*

துளசி, இன்னமுமா? துளசி, ஷ்ரேயா, ராம்கி உங்களை மெயிலில் தொடர்பு கொள்கிறேன்.

said...

முகமூடி,

என்னோடது 'பட்டை' சரியா வருது. நம்ம ஷ்ரேயாவுக்குத்தான் வரலை.

அதான் ஒரு பதிவு போட்டேன்.

said...

அடப் போங்க'மா. இந்தப் பட்டையை விட அந்தப் பட்டை எவ்வளவோ மேல்! ஒண்ணும் 'ஏறவும்'மாட்டேங்குது; இறங்கவும் மாட்டேங்குது.

எல்லாத்தையும் கடாசிட்டு 'சித்தன் போக்கு; சிவன் போக்கு"ன்னு (by the by, அப்டின்னா என்னாங்க?) இருக்கேன். வர்ரது வரட்டும்; வராது போறது போகட்டும்னு ஒரு கையறு நிலைக்கு வந்தாச்சு...

வரும்போது எந்த ப்ளாக்கோடு வந்தாய்; போகும்போது எந்த ப்ளாக்கோடு போகப்போகிறாய்'...இல்லீங்களா~ :-(

said...

டீச்சர், மொதல்ல இந்த பட்டைய நான் கண்டுக்காமலேயே விட்டுட்டேன். நந்தவனம் பக்கமே போகாம இருந்து லூசுல விட்டுட்டேன். திடீர்னு தமிழ்மணம் மாயமா மறைஞ்சிருச்சு. அப்பத்தான் கொஞ்சம் திக்குன்னு ஆகி..உங்களுக்கு ஜோசப் சாருக்கு குமரனுக்கும் மயிலார அனுப்பினேன். குமரனுக்கு அது ராத்திரி வேளை. நல்லவேளைக்கு நீங்களும் ஜோசப் சாரும் ஒரு லிங்க் அனுப்புனீங்க. கிரேட். அந்த லிங்க்ல எல்லாமே குடுத்திருந்தது. அத அப்படியே அச்சுப் பிசகாமப் பின்பற்றுனதுக்குப் பலன்....நமக்கும் பட்டை. சூப்பரு பட்டை.

பட்டைப் பட்டையாகப் பாரார் பட்டையைப்
பட்டையாகப் பாரா தவர்

said...

நானும் தான் பலமுறை முயண்று இன்னும் சரிவராது முழித்துகொண்டிருக்கிறேன். டெப்லெட் ஐ மாத்தி , மேல கிழ என வெட்டி ஒட்டி என்னென்னவோ எல்லாம் செய்து கடைசியா இப்ப உதவி கேட்டு அதுவும் சரிவராம முழிச்சிட்டு இருக்கேன்.

said...

அடச்சே!
பட்டை... பட்டை.... பட்டை...
எங்க பாத்தாலும் பட்டை.
உங்களுக்குக் கதைக்க வேற கதையே இல்லையா?

மனுசருக்கு விசரக் கிளப்பிக் கொண்டு....

said...

பட்டையடிக் வைத்த காசியே காசி

said...

//பட்டை... பட்டை.... பட்டை...
எங்க பாத்தாலும் பட்டை.
உங்களுக்குக் கதைக்க வேற கதையே இல்லையா?//
பட்டையை காணாமல் எனக்கு விசர் வரும் போல் தான் இருக்கு. காசி அண்ணைக்கும் இரண்டு தடவை தனிப்பட்ட மடல் அனுப்பினேன். Index பக்கத்தில் ஒருவருக்கும் தெரியாதாம், தனிப்பட்ட பதிவுகளில் தானாம் தெரியும். எனக்கு அதுவும் தெரியவில்லையே. கணணி விற்பன்னர்கள்(!!) இதற்கு விரைவில் ஒரு தீர்வு காணுவார்கள் என நம்புறன்.

said...

தருமி,

// 'ஏறவும்'மாட்டேங்குது; இறங்கவும் மாட்டேங்குது..//

நீங்க எந்தப் பட்டையைச் சொல்றீங்க?

தமிழ்மணம் பட்டையின்னா நம்ம காசி இந்தப் பதிவோட பின்னூட்டத்துலே சில லிங்க்ஸ் கொடுத்துருக்கார் பாருங்க.
அதைப் படிங்க. (புரிஞ்சதும் எனக்கும் சொல்லிக்குடுங்க)

கையறுநிலைன்றதும், தத்துவங்கள் வசனகவிதையாய் வர்றதும் அட்டகாசம்தான் தருமி:-)

ராகவன்,

தொழில்நுட்பம் தெரிஞ்சவங்களுக்கு இந்தப் பட்டை போடறது/போட்டுக்கறது எல்லாம் 'ஜுஜுபி'ன்னு நிரூபிச்சிட்டீங்க:-)

ஜெயசந்திரன் அண்ணா,

ஆழ்வார்கள் போல 12 பதிவுகள். எல்லாருக்கும் பட்டை அடிக்க நேரமாகுமா ஆகாதா? இருங்க. குடும்பம் வந்துக்கிட்டு இருக்கு
உதவிக்கு. பொறுத்தார் பூமி 'ஆ(ள்)ழ்வாரா'மே?

வசந்தன்,
இன்னிக்குக் காணும் பொங்கல். 'யாராவது உங்களைக் காண வருவாங்க, உதவிக்கு'
இதுக்கெல்லாம் விசர் பிடிச்சிருமோ? பாய் வேணுமுன்னா அனுப்பட்டா?

நாவாய்,

இன்னுமா மூணு பதிவு முடியலை. சிக்கிரம் முடிச்சிட்டு இந்த ப.போ.க. உறுப்பினராகச் சேர்ந்திருங்க.
இந்த பவுல் இரவிசங்கர் உதவிப் புத்தகம்? வசந்தனுக்கும் சொல்லுங்க.

என்னார்,
'காசி'க்குப் போனால் பட்டை அடிக்கணும்தானே? இது ஆன்மீகப்பட்டையைக் குறித்து.

கனக்ஸ்,

//..........என நம்புறன்.//

said...

//ஜெயசந்திரன் அண்ணா,//

:0 அண்ணாவா???? நானா?? நான் சின்ன பையனுங்க. அண்ணா எண்டு சொல்லி அழுதிடுவேன் ஆமா

said...

ஜெயசந்திரன்,

சாரி. ராங் நம்பர்( ராங் நேம்!) இதே பேர்லே ஒரு அண்ணா இருக்கார். அவராக்கும்னு நினைச்சுட்டேன்.

எல்லாம் ஒரு பட்டை மயக்கம்:-)

அண்ணா....வாபஸ் வாங்கியாச்சு.
இப்பச் சரிதானே தம்பி?

said...

ஜெயச்சந்திரன்,
காசி மேலே தந்திருக்கும் இணைப்புக்களில் ஒன்றை முயன்று பார்க்கலாமே. நீங்கள் தற்போது பயன்படுத்தும் வார்ப்புருவும் அதிலுள்ளது.

துளசி, எனக்கு இப்பட்டை தொடர்பாக எப்பிரச்சினையுமில்லை. எனவே என்னை இந்த ஆட்டத்திலிருந்து விலக்கிவிடுங்கள்.:-)

said...

நன்றி துளசி. பாய் தேவைப்படல்லத்தானே??? ;O)

பட்டை வந்தபாடில்லை. வெள்ளிக்கிழமைக்குப் பிறகு பட்டை வெட்டும்/ஒட்டும்/திட்டும் படலம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. மக்களே - மழையில பாத்தீங்களா ஒரு வரிசை நட்சத்திரம் மின்னுதே தலைப்புக்குக்கிட்ட.. அங்கேதான் "பட்டையைப்" போட்டேன்.. இன்னும் வரல்ல!! :O(

said...

வசந்தன்,

நானே உங்களுக்கு மெயில் அனுப்பலாமுன்னு நினைச்சேன்,உங்க பதிவுலே போய்ப் பார்த்தப்ப 'பட்டை'யெல்லாம்
ஜோராய் வருதே. எதுக்கு புலம்பல்? னு .

said...

ஷ்ரேயா,
பட்டை '*****'க்குள்ளெ வரணுமுன்னு நிர்பந்திக்கறதுதான் பிரச்சனையோ என்னவோ?

ச்சும்மாச் சாதாரணமாப் போட்டுப் பாருங்க. எங்கே வந்தால் என்ன? எங்கேயாவது வந்தாச் சசரி இல்லையா?

said...

இந்தப் பதிவோட பின்னூட்டத்துலே சில லிங்க்ஸ் கொடுத்துருக்கார் பாருங்க.
அதைப் படிங்க"//
- அட நீங்க வேற! அதெல்லாமே blogger.com-ல ப்ளாக் வச்சிருக்கிற ஆளுகளுக்கு. நான் ஒரு weblogs.us கேசு! 'நம்ம வழி எப்பவுமே தனி வழின்'ன்னு போயிட்டு பேந்த பேந்த முழிக்கிற ஜென்மம். :-( என்ன ஜென்மமோ போங்க..

said...

நமக்கு பட்டைய ஏத்துனவுடனே ..சீ..மாத்துனவுடனே பளிச்சுண்ணு வந்துருச்சே.

இங்கே ஏன் ஒரே குயப்பமாகீது?

said...

தருமி,

நம்ம காசிகிட்டேதான் கேக்கணும் இந்த வெப்லொக் பத்தி.

ஜோ,
அதிர்ஷடம் இருக்கறவங்களுக்குத்தான் இப்படி 'குயப்பம்' இல்லாம வருமாம்:-)

said...

//Index பக்கத்தில் ஒருவருக்கும் தெரியாதாம், தனிப்பட்ட பதிவுகளில் தானாம் தெரியும். //

கனக்ஸ் அவர்களின் இந்த வரிகளைப் பார்த்து எனது பதிவில் போய் பார்த்தேன். ஏற்கனவே அங்கே பட்டை இருக்குது..நான் போட்ட "பட்டை" எனக்கே தெரியல..
நிரல் துண்டை ஒத்தி எடுத்து ஒட்டி முகப்புப் பக்கம் பார்த்து பட்டையைக் காணோம் பட்டையைக் காணோம்னு வெறுத்து விட்டு விட்டேன். துளசி தளத்துல புலம்பியிருக்கோமே யாராச்சும் வந்திருக்காங்களான்னு பார்த்தா, கனக்ஸ் வரிகள் கிடைச்சுது. உடனே தனிப்பதிவுக்குப் போய்ப் பார்த்தா பட்டை இருக்கிறது..

பட்டையோடு உதவ வந்த அனைவருக்கும் நன்றி..

said...

என்னக்கா இது?

காசி கொடுத்தாலும் நல்ல பண்பட்ட பட்டையத்தானே கொடுத்திருக்கார்? நானெல்லாம் ஏத்திகிட்டு சவுகரியமா இருக்கோமே!

said...

ராம்ஸ்,
//நானெல்லாம் ஏத்திகிட்டு சவுகரியமா இருக்கோமே! //

இது .....

ஏத்திக்கத் தெரியாதவங்களுக்கானப் பதிவு தம்பி.

யாருக்காவது இன்னும் கஷ்டமா இருந்தா, இப்படிப் போட்டதாலே 'குடும்பம்' உதவிக்கு வருமுல்லே! அதுக்காக...

said...

ராம்கி,

எல்லோரும் வாழவேண்டும் (வலை)உலகம் இன்புற்றிருக்கவேண்டும்.
நல்லோர்கள் எண்ணமிதே.....