Sunday, July 17, 2005

ஒண்ணூம் புரியலை!

இன்னிக்கு தினகரன் லே ஒரு செய்தி. விநாயகமூர்த்தி எம்.எல். ஏ., நாலு மணிநேர
உண்ணாவிரதம் இருந்தாராம்.நம்ம நாட்டுலே எத்தனையோ ஏழைங்களுக்கு 24 மணிநேர உண்ணாவிரதம் எல்லாம் தண்ணிபட்ட
பாடாச்சே!

நானும் இன்னுக்கு கடைசியாச் சாப்பிட்டு இப்ப 5 மணி நேரமாச்சு. இனிமே ஆக்கணும். அதுக்கும்
ஒரு ம்ணி நேரமாவது ஆகிரும். அப்ப 6 மணி நேரம்'உண்ணாவிரதம்'தானே?

ஒண்ணூம் புரியலையேப்பா?

17 comments:

said...

MLAவை விட இரண்டு மணி நேரம் அதிகமாக உண்ணாமல் இருந்து சாதனை புரிந்த நம் துளசி அக்கா அடுத்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக நிற்க வேண்டும் என்று அன்போடு அழைக்கிறேன்.

said...

// இப்ப 5 மணி நேரமாச்சு. இனிமே ஆக்கணும். அதுக்கும் ஒரு ம்ணி நேரமாவது ஆகிரும். //

உஙகளை கண் கலங்காமல் காலம் முழுக்க காப்பத்துவேன் என்று சத்தியம் செய்து கல்யாணம் செய்து, இப்போது 5 மணிநேரம் பட்டினி போட்டது மட்டுமல்லாமல் இப்பொழுது உங்களையே ஆக்க வைத்து, ஆக்கும் போது வெங்காயம் உரிக்க வைப்பதன் மூலம் உங்களை கண்ணீர் சிந்தவும் வைத்து, இதன் மூலம் சத்தியத்தையும் மீறும் உங்கள் கணவரை கண்டித்து நான் 6 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கிறேன்...

என் உண்ணாவிரத்தத்தை முடித்து வைக்க விரும்புவோர் சிக்கன் 65, மட்டன் சுக்கா, பிரியாணி மற்றும் குவார்ட்டர் சகிதம் வருமாறு கேட்டுக்கொள்கிறேன்... போட்டோவுக்கு போஸ் குடுக்க ஒரு க்ளாஸ் ஆரஞ்ச் சூஸ¤ம் எடுத்து வரவும்

said...

நன்றி ரம்யா,

ஜெயிச்சவுடனே உங்களையே பினாமியாப் போட்டுரணும். எதுக்கும் சட்டம் தெரிஞ்சவுங்க இருந்தா ஒரு பாதுகாப்பு. அதுக்குத்தேன்.ஹி ஹி...

said...

ந்ன்றி முகமூடி.


//உஙகளை கண் கலங்காமல் காலம் முழுக்க காப்பத்துவேன் என்று சத்தியம் செய்து கல்யாணம் செய்து, இப்போது 5 மணிநேரம் பட்டினி போட்டது மட்டுமல்லாமல் இப்பொழுது உங்களையே ஆக்க வைத்து, ஆக்கும் போது வெங்காயம் உரிக்க வைப்பதன் மூலம் உங்களை கண்ணீர் சிந்தவும் வைத்து, இதன் மூலம் சத்தியத்தையும் மீறும் உங்கள் கணவரை...//

ஆள் ஊருலே இல்லை. அதான்... இருந்திருந்தா அவரே சமையலை முடிச்சு சாப்புடக் கூப்ட்டுருப்பாரே:-))))))

said...

//ஆள் ஊருலே இல்லை//

அதானே பார்த்தேன்... டெய்லி சமைச்சு போட்டுகிட்டே இருக்க முடியுமா? அதான் ஒரு சேஞ்சுக்கு டூர் போயிட்டாருக்கும். ஹும்.. கொடுத்து வெச்ச மனுஷர்! நமக்கெல்லாம் எங்கயிருந்து டூர் போக முடியுது சொல்லுங்க!!?

said...

மாயவரத்துக்காரரே,

டூர் இந்தியாவுலேதான். இன்னைக்குப் 'பெண்களூர்'லே தம்பி வூட்டுக்கு!

said...

// இருந்திருந்தா அவரே சமையலை முடிச்சு சாப்புடக் கூப்ட்டுருப்பாரே //

அட தேவுடா... நான் கூட பெண்டாட்டியர் சமையல் சாப்பிடும் (வெகுசில) பாக்கியவான்கள் சங்கத்துக்கு ஒரு (ஒரே ஒரு) உறுப்பினர் கிடைச்சிட்டாருன்னு ஒரு நிமிசம் சந்தோசப்பட்டுட்டேன்...

said...

துளசியக்கா நீங்க எங்கயும் டூர் போறது இல்லையா .

said...

யக்கோவ்... ஏதேனும் விரதம் இருந்திருப்பாரு.. அதை எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க!

said...

இதுக்குத்தான் சொல்றது - காலங்கார்த்தால எழுந்திருச்சதும் பேப்பர்லாம் (ஓ..நீங்க நெட்ல வாசிப்பீங்களோ) வாசிக்கக்கூடாதிங்றது. சொன்னா கேட்டாதானே!

said...

பரணித்தம்பி,

அவர் ஆஃபீஸ் வேலையாத்தான் போயிருக்கார். இடையிலே வந்த வீக் எண்டுக்கு மட்டும்
தம்பி வீட்டுக்கு ஒரு விசிட்.

என் டூர் அப்புறம் தனியாப் போவேன். எனக்கு ஒருவாரம், ரெண்டு வாரம் எல்லாம்
இந்தியாவுக்குப் பத்தாது. போனா ஒரு மாசமாவது போகணும்.

என்றும் அன்புடன்,
அக்கா

said...

நன்றி மூர்த்தித் தம்பி.

ஆமாம், 'விரதம்' எடுத்தது யாரு?

said...

என்னங்க தருமி,

'காலை எழுந்தவுடன் படிப்பு....'ன்னு பாரதி சொல்லிட்டுப் போயிட்டாரே.
நான் மறக்கலைங்க:-)

நீங்க?

துளசி.

said...

நேற்று இரவு 9மணிக்கு சாப்பிட்டேன். இதோ இன்றைக்கு காலையில் 9 மணி தாண்டியாச்சு. இன்னும் கோப்பியே குடிக்கவில்லை.(காலையில் 7.30 க்கு குடித்த வெந்நீர் கணக்குல சேருமா? )அப்படியே பார்த்தாலும் கிட்டத்தட்ட 10 மணித்தியாலம் நான் "உண்ணா விரதம்" இருந்திருக்கிறேன். :o(

said...

ஆங்ங்ங்ங்...... ஷ்ரேயா இதுதானே லொள்ளுன்றது. 'தூங்கறப்ப உண்ணாவிரதம் என்பதை நான் தினமும் செய்யறேனே! கனவுலே சாப்புடறது கணக்குலே வராதுல்லெ?

துளசி.

said...

நீங்க கனவுலே சாப்பிட வேற செய்வீங்களா? என்ன சாப்பாடு? டைகர் பாமா?

நான் கனவு கண்டா அது ரேஞ்சே தனி. இருங்க எதுக்கும் இந்த வாரம் கனவு வரும்தானே.எடுத்து விடுறேன்.

said...

காத்திருக்கேன்.