Tuesday, July 12, 2005

பவர் ஆஃப் வுமன்!!!

இணையத்துலே ரெமோ, அந்நியன் & ரூல்ஸ் பத்தியெல்லாம் பல இடங்களிலே விவாதம் ச்சுடச்சுட நடந்துக்கிட்டு
இருக்கற இந்த சமயத்துலே யாருக்கும் தெரியாம வந்த ஒண்ணைப் பத்திச் சொல்லப்போறேன்!!!


ஜெயதேவின்னு ஒரு சினிமா இயக்குனர் இருக்கறது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்தானே? இந்தப் படமும்
அவுங்க இயக்குனதுதான். கதை, திரைக்கதை, இயக்கம் எல்லாம் அவுங்கதானாம்.

ஆத்மான்னு ஒரு பாடகர் இருக்கார். பாட்டு மட்டுமில்லை, ஓவியம், சிற்பம்னு பல கலைகளிலும் வெளுத்து
வாங்கறார்.

ஷ்யாம்னு ஒருத்தர் இந்தியாவுக்குப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு, மனைவியைக் கூட்டிக்கிட்டு வர்றார்.

மனைவி ஜோதிக்குப் பாடறதுலே விருப்பம் இருக்கு. ஆத்மா, ஷ்யாமோட குடும்ப (பெரியப்பாவோட நண்பர்)
நண்பர். அவரோட சேர்ந்து ஜோதி பாடறாங்க. பாடட்டும்.

ஷ்யாம் நல்லவனில்லைன்ற விஷயம் ஜோதிக்குத் தெரியவருது.அப்புறம்...

என்ன? சண்டைதான். ஜோதியைக் கொடுமைப்படுத்தறான். ஆத்மாவுக்கும் ஜோதிக்கும் தகாத உறவு இருக்கறதாச்
சொல்லி ஒரே டார்ச்சர். கடைசியிலே ஜோதியைக் கொன்னும் போட்டுடறான்.

ஜோதியோட வாழ்க்கையைக் கதையா எழுதறாரு ஆத்மா. புத்தகத்தோட பேரு 'மரணசாசனம்'. பெண் விடுதலையைப்
பத்தி அதிலே வலியுறுத்தறார்.

அதை எதிர்த்து எல்லா மதக்காரங்களும் வழக்குப் போடுறாங்க. இப்படிப் போகுது கதை.

நடிகர் லிஸ்டைப் பாப்போம்.

ஆத்மா - பாடகர் ஹரிஹரன் (முதல்முறையா நடிகராகியிருக்கார்)

ஷ்யாம்- ரியாஸ்கான்( குஷ்புவைக் கல்யாணம் செய்யறதைக் காமிக்கறப்பவே கெட்ட புருஷனா இருப்பான்னு
மனசுக்குள்ளே தோணுச்சு)

ஜோதி- குஷ்பு நடிப்பு பரவாயில்லை. ஆனா ஏகத்துக்கும் குண்டடிச்சு இருக்காங்க. அவுங்களுக்கு டப்பிங் யாரோ?
ஒட்டாதமாதிரி இருந்தது.

பெரியப்பா- லக்ஷ்மிரத்தன். இவர் வழக்கமா எல்லாப் படங்களிலும் பெரும்பணக்கார அப்பாவா வருவார். இதுலேயும்தான்
ஆனா, மொதமுறையா அடி உதை எல்லாம் வாங்கி செத்தும் போறார்.

படம் முழுக்க தி.க. பிரச்சார நெடி.பெண் விடுதலை பற்றிய பெரியாரோட கொள்கைகளைச் சொல்லியிருக்காங்க.
ஆத்மாவும் கறுப்பு உடை போட்டுக்கிட்டு புத்தகம் எழுதறார்.( மனசுக்குள்ளே வீரமணி வந்து போனார்)

படம் முழுக்க டொராண்ட்டோலே எடுத்திருக்காங்க. சி.என். டவர் நிறைய இடத்துலே வருது. நயாக்கரா அருவியும்
சில இடங்களிலே வருது. (கட்டாயம் கனடாவுக்கு ஒரு விசிட் அடிச்சுரணும். ரொம்பநாள் ஆசை.)

இசை வித்யாசாகர். ஹரிஹரனோட பாட்டுங்க நல்லா இருக்குதான், ஆனா மேற்கத்திய இசை கலந்து ஃப்யூஷன்
ம்யூஸிக் ஆகறதாலே மனசுலே நிக்கலை.

இந்திய ஜனத்தொகையிலே பாதிக்குப் பெண்கள் இருக்கறதாலெ 50சதமானம் இட ஒதுக்கீடு வேணுமுன்னு ஆத்மா
சொல்றாரு. எனக்கு இது ரொம்பவே பிடிச்சுருக்கு.( நான் எப்பவும் மனசுலே நினைச்சுக்கிட்டு இருந்ததுதான்!)

ச்சும்மா ஒருதடவை பார்க்கலாம்.

பி.கு:

நிஜமாவே ஒரு 'அந்நியன்' இருந்தாத் தேவலைன்னு இருக்கு. மனித ரூபத்துலே இருக்கற மிருகங்களைக் கொல்றதுக்கு!!!
10 comments:

said...

//இந்திய ஜனத்தொகையிலே பாதிக்குப் பெண்கள் இருக்கறதாலெ 50சதமானம் இட ஒதுக்கீடு வேணுமுன்னு ஆத்மா
சொல்றாரு. எனக்கு இது ரொம்பவே பிடிச்சுருக்கு.( நான் எப்பவும் மனசுலே நினைச்சுக்கிட்டு இருந்ததுதான்!)// And //நிஜமாவே ஒரு 'அந்நியன்' இருந்தாத் தேவலைன்னு இருக்கு. மனித ரூபத்துலே இருக்கற மிருகங்களைக் கொல்றதுக்கு!!!//அப்படிப் போடுங்க!

said...

"......இந்திய ஜனத்தொகையிலே பாதிக்குப் பெண்கள் இருக்கறதாலெ 50சதமானம் இட ஒதுக்கீடு வேணுமுன்னு....."

முப்பதுக்கே இங்கே தகராறு....ஹ்ம்ம்ம்... இருந்தாலும் பேராசைதான்..... :-) கட்சி வித்தியாசம் இல்லாம எல்லோரும் துளசி தளம் எங்கே என்று தேட ஆரம்பிக்கப்போகிறார்கள்..!!

உலகின் ஒரு கோடியில் உட்கார்ந்து கொண்டு உங்களுக்கு எங்கேயிருந்து இப்படி படமெல்லாம் கிடைக்கிறது துளசி? விமர்சனம் நல்லாயிருக்கு.

அருணா.

said...

"......இந்திய ஜனத்தொகையிலே பாதிக்குப் பெண்கள் இருக்கறதாலெ 50சதமானம் இட ஒதுக்கீடு வேணுமுன்னு....."

எந்த பதிவானாலும் சரி சாமர்த்தியமா பெண்கள் பிரச்சனைகளைக் கையாளுகிறீர்கள். வாழ்த்துக்கள்

said...

50% தானே எடுத்துக்குவோம்., நாம யார்க் கிட்ட கேட்கணும்!

said...

// ஜெயதேவின்னு ஒரு சினிமா இயக்குனர் இருக்கறது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்தானே? // வர வர நீங்க உண்மையத்தான் சொல்றீங்களா, இல்ல உங்க கற்பனை குதிரைய தட்டி வுட்டு எதுனா கத வுடறீங்களான்னே தெரிய மாட்டேங்குது...

// நிஜமாவே ஒரு 'அந்நியன்' இருந்தாத் தேவலைன்னு இருக்கு. மனித ரூபத்துலே இருக்கற மிருகங்களைக் கொல்றதுக்கு!!! // கவல படாதீங்க, முத்தினா தானா செத்து போயிடும்...

said...

'நல்ல'பின்னூட்டங்கள் தந்த ஷ்ரேயா,அருணா, கணேஷ், மரம் & முகமூடி அனைவருக்கும் நன்றி.

இப்பத் தனித்தனியா, சரியா?

அருணா,

உங்களுக்கு ஒரு தனி மெயில் போட்டிருக்கேன். பாருங்க.

கணேஷ், வாழ்த்துக்கு நன்றி. முன்னைவிட ஸ்ட்ராங்கா ஆகணும் பெண்கள். அதுதான் உடனடித் தேவை!

மரம்,
அப்படிப்போடு அருவாளை:-)

முகமூடி,

என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? பச்சப் புள்ளையா இருப்பீங்க போலெ. சந்தேகம் இருந்தா ஒரு வழி சொல்றேன்.
நேரம் இருக்கறப்ப தமிழ்சினிமா.காம் போங்க. அங்கே தமிழ்சினிமா இதுவரைன்னு ஒரு இடம் இருக்கும். அதுலே போனா
முகவரிகள் வரும். அதுலே டைரக்டர்கள் லிஸ்ட் இருக்கு. பாருங்க! பாத்துட்டுச் சொல்லுங்க.

said...

இந்தப் படத்தின் சில காட்சிகளை சன் டிவி டாப் 10-இல் பார்த்தேன். அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் பார்க்க வைக்கும் விமர்சனத்துக்கு நன்றி..

>>இந்திய ஜனத்தொகையிலே பாதிக்குப் பெண்கள் இருக்கறதாலெ 50சதமானம் இட ஒதுக்கீடு--

:->

said...

படத்தில் இடம்பெற்ற பாடல்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை?

said...

இப்படம் பற்றிய என்னுடைய பதிவை பார்த்தீர்களா?

கொஞ்சம் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருக்கிறேன்.

http://mauran.blogspot.com/2005/06/blog-post_18.html

said...

அன்புள்ள பாலா, சிநேகிதி, மயூரன்,

பின்னூட்டங்களுக்கு நன்றி.

சிநேகிதி,

அதான் இசை வித்யாசாகர். பாட்டு ஒண்ணும் மனசுலெ நிக்கலேன்னு சொல்லியிருந்தேனே.
அப்பப்ப ஹரிஹரன் 'ஹம்'செஞ்சு ராகத்தை இழுக்கறது நல்லா இருக்கு!

மயூரன்,

உங்க பதிவை இப்பத்தான் படிச்சேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. இல்லையா?