Saturday, May 27, 2023

நம்மவருக்குப் புதுசா ஒரு....... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 53

பொழுது விடியும்போதே  ரொம்பவே பாஸிட்டிவ் திங்கிங்.....   பதினொரு மணிக்கு டாக்டரைப் பார்க்கணும்.  கிளம்பலாமுன்னுருவார்.  மூட்டையைக் கட்டலாம்....   சலோ!

ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு,  பத்தரைக்கு வண்டியை வரச்சொல்லிட்டு....  தினசரியைப் பிரிச்சால்.... காசியில் தமிழ்ச்சங்க அறிவிப்பு !  ஆஹா......   யார் யார் தமிழகத்தில் இருந்து போறாங்களோ தெரியலையே....   என்ன இருந்தாலும் பாக்கியசாலிகள்தான் !   (நம்ம வித்யா சுப்ரமண்யம்  போனாங்கன்னு  அப்புறமா அவுங்க பதிவைப் பார்த்தப்போ தெரிஞ்சது !)
ஆஸ்பத்ரிக்குப் போனோம்.  டாக்டர் கார்த்திக் ,  BP செக்கப் பண்ண   ட்யூட்டி நர்ஸைக் கூப்பிட்டார்.  நம்மைப் பார்த்து அவுங்களுக்கும் மகிழ்ச்சி. நலம் விசாரிச்சுட்டு,  செக் பண்ணிட்டு டாக்டரிடம்  சொல்லிட்டுப் போனாங்க.  'இந்த வயசுக்கு இது சரி'தான் என்ற வகையில் நல்லாவே குறைஞ்சுருக்கு.   வெர்ட்டிகோ மாத்திரைகளை மறக்காமல் எடுத்துக்கச் சொன்னார். கொஞ்ச நாள் ஆகுமாம். இது சரியாகறதுக்கு... அதுவரை மருந்தை நிறுத்தப்டாது! 
எடுத்துக்கவேண்டிய மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகமோன்னு ஒரு சம்ஸயம் எழுப்பினதுக்கு,  ஒரு மூணு நாள்  இப்படியே எல்லா மாத்திரைகளையும்  எடுத்துக்குங்க.  அதுக்கப்புறம் இன்னொரு செக்கப் பண்ணிட்டு, என்ன  செய்யலாமுன்னு சொல்றேன்னார்.  எப்படியோ  கொஞ்சம் மனக்கவலை குறைஞ்சது. 

இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடிக்க நம்மவருக்கு ஒரு  சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுக்கலாம்.  ச்சலோ பாண்டிபஸார்! பூர்விகா கடைக்குள்  போய்  லேட்டஸ்ட் செல்ஃபோன் என்னன்னு பார்த்தால்  S22 Ultra இருக்குன்னு எடுத்துக் காமிச்சார். (நான் ஏற்கெனவே நியூஸியில் பார்த்துவச்சுட்டுப் போயிருந்தேன். இங்கே ரெண்டு சிம் போட்டுக்கும் மாடல் கிடையாது ) கொஞ்சம் அதைபற்றி விசாரிச்சுட்டு, கூடுதல் ஸ்டோரேஜ் வேணுமுன்னு (512gb )  சேர்த்து பணம் கட்டியாச்சு.  கடைக்கு முன்னால் பார்க்கிங் என்பதால் நம்மவரும் கூடவே  மெல்ல நடந்து வந்துட்டார். தினமும்  அறுபதடி நடக்க வச்சது இப்போ எவ்ளோ நல்லதா போச்சுப் பாருங்க. 

அந்த மாடலை எடுத்துவர ஆள் அனுப்புனாங்க. கொஞ்சநேரத்துலே  வந்துட்டார். இப்ப வாங்கின ஃபோனுக்கு போனஸா ஒரு ஸ்மார்ட் வாட்ச் கிடைக்குமாம்.  நம்ம செல்லை ஒரு மணி நேரம்  பயன்படுத்தினதும்,  அது ரெஜிஸ்டர் ஆகும். அப்போ  வாட்ச் கடைக்கு  அனுப்புவாங்க.  வந்ததும் தகவல் சொல்றேன்னார். இதெல்லாம் எனக்கு ஒன்னுமே புரியாது....   இண்டியா சிம் அந்த J7 லேதானே இருக்கு. அதை எடுத்து புதுசுலே  மாத்தியாச்சு. புதுசை எடுத்து 'நம்மவர்' கையில்  கொடுத்தேன் !

இப்போ பழைய செல் சமாச்சாரங்களை இதுலே மாத்திக்கணும்.  அந்த வேலை இப்போ இல்லையாம்.  ஃபோன் ரெஜிஸ்டர் ஆனதும்தான்  மாத்த முடியுமாம். உங்களுக்கு சாம்ஸங்கிலிருந்து மெஸேஜ்  வரும்.  நாளைக்கு இதே நேரத்தில் வாங்க. எல்லாம் மாத்திக்கலாமுன்னார். 

ஓ...   ஐஸியூ வில் இருக்கும் பேஷிண்டின் நிலையைக் கேட்டால்  இன்னும்  24 மணி நேரம் கழிச்சுத்தான் சொல்லமுடியுமுன்னு ஆஸ்பத்ரியில் சொல்றாப்படியோ !  

அதுவரை  என் ஃபோன் டம்மிதான். கெமெராவாத்தான் பயன்படுத்திக்க முடியும் ! லோட்டஸ் போனால் வைஃபை கிடைக்கும்னு  மனசைச் சமாதானப்படுத்திக்கிட்டேன்.

என்னோட S9+   இதே கடையில்தான் முந்தி வாங்கினோம்.  அப்போ இங்கே இருந்தவர்கள் யாருமே இப்போ இங்கில்லை....  
லஞ்சுக்காக பக்கத்துலே இருந்த  பாலாஜி பவனுக்குள்ளே போனோம்.  விஜிக்கும் நம்மவருக்கும் மினி மீல்ஸ். எனக்கு மனம் நிறைஞ்சதால் பசியே இல்லை.  புது செல்லின் வரவைக் கொண்டாடவேணாமா ? ரெண்டு ஜாங்கிரி. ஒன்னு அவுங்க இருவருக்கும். ஒன்னு முழுசா எனக்கும்!  நம்மவருக்குப் புது ஃபோன் வர்றதுலே எனக்கு இவ்ளோ மகிழ்ச்சியா !!!  இவ்ளோ நல்லவளாகவா இருக்கேன் !!!!!  
'அந்த ஒரு மணி நேரம்' எப்பப்போகுமுன்னு காத்திருக்கணும்.....
சாப்பாடானதும் லோட்டஸில் இவரை விட்டுட்டு, நான் மட்டும் கிளம்பி பாண்டிபஸார் வணிக வளாகத்துக்குப் போனேன். எப்போ கிளம்புவோமுன்னு இன்னும் சரியாத் தெரியலை.  திடுக்குன்னு  கிளம்பணுமுன்னால்.....  நியூஸியில் கிடைக்காத சில  சமாச்சாரங்களை வாங்கிக்கணும்.  கொஞ்சம் சிக்கனக்காரி என்பதால் போரடிக்கும் பழசைப் புதுசா மாத்திக்கணும்.  
அங்கே ஒரு கடையில் நம்ம தேவைக்குக் கிடைச்சது.   நான் போனபோது அந்தக் கடையில் மூணு பெண்கள் கடைக்காரரிடம் பேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க.  மலேசிய மக்கள். இந்தியாவில் நல்லா விலைகுறைச்சுக் கேக்கலாமுன்னு சொல்லி அனுப்பியிருப்பாங்க போல .  அவர் சொன்ன விலையில்  முக்கால் பங்கைக் குறைக்கச் சொல்லி மல்லுக்கட்டறாங்க.  நான் போய்  நின்னதும், 'அக்கா.... இங்கே பாருங்கக்கா.... இப்படிக் குறைச்சுக் கேட்டா எப்படிக்கான்னு என்னாண்டை முறையிடுறார் தம்பி' !   டௌரிகல்யாணம் விசு மாதிரி  பேரத்துக்கு நடுவில் புகும்படி ஆச்சு. 
கொஞ்சம் வியாபாரமும் ஆச்சு.  !  மலேசிய மக்களைப் பார்த்ததும் என் மலேசியத்தோழிகள் எல்லாம் மனசுக்குள் வந்து போனாங்க.....

 பேரம் எல்லாம் ப்ளௌஸ் பின்னால் கட்டிவிடும் குஞ்சலத்துக்குத்தான்.....   கழுத்து லூஸா இருந்ததைச் சரி பண்ணறதுக்காக  ஆரம்பிச்சது, இப்போ பயங்கர ஃபேஷன் சமாச்சாரமா மாறி இருக்கு. தேவையோ இல்லையோ எல்லாத்துக்கும் குஞ்சலம் கட்டியே ஆகணும்.   விலை உயர்ந்ததுகூட வேணாம். தைக்கும் துணியிலேயே, வெட்டும்போது   சின்னத்துண்டு விழுமே  அதுவே போதுமாம். நம்ம டெய்லர் கூட  என்னோட துணிகளில்  வச்சுத் தச்சுருக்கார்.  அதையெல்லாம் ஊருக்குப்போய் பிய்ச்சு எடுக்கணும்.  நம்ம ரஜ்ஜுவுக்கு விளையாடும் கயிறு :-)

இப்போ இது நம்ம தம்பி கடையா ஆகிப்போனதால் நானும் கொஞ்சம் நிறையவே வாங்கினேன். கனமில்லாதவைகள்தானே !  கைக்கெட்டும் தூரத்தில் ஏகப்பட்ட 'தேவையானவை' குமிஞ்சுருக்கு இந்த வளாகத்தில்.  இந்த டிக்கெட் அப்க்ரேடு சரியானால் இன்னும்  இருபதும் இருபதுமா நாப்பது கிலோ கிடைக்கும். பிரச்சனையில்லாமக் கொண்டு போகலாம்.  ஆனால்  இடம் இருக்குன்னு சொல்லமாட்டேங்கிறாங்களே...... நாப்பது கிலோவுக்கு இன்னும் என்னென்ன வாங்கலாமுன்னு  மனசு எடைபோட்டுக்கிட்டு இருக்கு.... நல்லதா ஒரு வெங்கல உருளி,  லக்ஷ்மி வாங்கின கடையில் பார்த்த  பொம்மைகள்..... நல்ல கனமான அடியுள்ள தோசைக்கல்..... ஹைய்யோ ஹைய்யோ....
நாலு மணி போல நம்ம பூனா மாமி  மகளும் மருமகனும் வந்தாங்க.   கொஞ்ச நேரத்தில் மாமியின் மகனும் வந்தார். மாமியின் மக்கள் என்றாலும்  மாமி என்னை ஸ்வீகாரம் பண்ணிட்டதால் அண்ணன் தங்கைதான்.  
இப்படி எல்லோரையும் சேர்த்துப் பார்த்தே பலவருஷங்களாச்சு. பழங்கதைகள் பேசுவதும்  இனிமைதான் !  பூனாவில் நாங்க இவுங்களோடு சேர்ந்து சுத்தாத இடமில்லை! ராஸ்தாபெட் கலகலத்துப்போகும் அப்போல்லாம் !  மருமகன்தான்  கொஞ்சம் 'ஙே'ன்னு இருந்தார்.  ஆறுமணிபோல அவுங்களும் கிளம்பிப் போனாங்க. லோட்டஸில் அட்டகாசமா வளர்ந்துருக்கும் மணிப்ளாண்ட் ரொம்பவே பிடிச்சுப்போச்சாம் ! 
அதுலே இருந்து ஒரு கிள்ளு ! திருடிக் கொண்டுபோனால் காசு வராதுன்னேன்.  நாம் பூனாவில் இருந்த காலத்தில்,  பூனா மாமி குடும்பம்  மெட்ராஸுக்கு இடம் மாறினாங்க.  அப்போ  மகள் டால்டா டப்பாவில் வளர்ந்த மணிப்ளாண்ட் செடி நம்மாண்டை வந்தது.  நாங்க ரெண்டு பேரும்  சட்னு  இதை நினைச்சோம்.  நான் அதைத் தொட்டியில் மாத்திக் கயிறு கட்டி பால்கனியில் விட்டுருந்தேன்.  ரொம்ப நல்லா வளர்ந்து அதுவே ஒரு அடையாளமா ஆகிப்போச்சு நம்ம வீட்டுக்குன்னு சொன்னேன் !

நமக்கு வரவேண்டிய மருந்து ஒன்னு இன்னும் பாக்கி இருந்தது ஆஸ்பத்ரி பார்மஸியில் .  ரெடியா  இருக்குன்னு தகவல் அனுப்பினாங்க.  போய் அதை வாங்கிக்கிட்டு அப்படியே டின்னருக்கு வேறெங்காவது போகலாமுன்னார் நம்மவர். கொஞ்சம் குஷியா இருக்கார் போல !  ஞானாம்பிகாவில்  அவுங்களுக்கு நெய் ரோஸ்ட் & ரவா தோசை.  எனக்கு இடியப்பம்.  அங்கே பாதாம் பால், எனக்கு காஃபி !

இப்பெல்லாம் எல்லா இடங்களிலும் மஞ்சக்கலர் ப்ளேட்களா  இருக்கே... என்ன காரணமா இருக்கும்? வாஸ்துவா இல்லே   தட்டுகளில்  குழம்பு கறிகளில் இருக்கும் மஞ்சள் ஒட்டுமே... அதனாலா.........

தொடரும்...........:-)

Friday, May 26, 2023

நம்மவருக்குப் புதுசா ஒரு....... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 53

பொழுது விடியும்போதே  ரொம்பவே பாஸிட்டிவ் திங்கிங்.....   பதினொரு மணிக்கு டாக்டரைப் பார்க்கணும்.  கிளம்பலாமுன்னுருவார்.  மூட்டையைக் கட்டலாம்....   சலோ!     

ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு,  பத்தரைக்கு வண்டியை வரச்சொல்லிட்டு....  தினசரியைப் பிரிச்சால்.... காசியில் தமிழ்ச்சங்க அறிவிப்பு !  ஆஹா......   யார் யார் தமிழகத்தில் இருந்து போறாங்களோ தெரியலையே....   என்ன இருந்தாலும் பாக்கியசாலிகள்தான் !   (நம்ம வித்யா சுப்ரமண்யம்  போனாங்கன்னு  அப்புறமா அவுங்க பதிவைப் பார்த்தப்போ தெரிஞ்சது !)

ஆஸ்பத்ரிக்குப் போனோம்.  டாக்டர் கார்த்திக் ,  BP செக்கப் பண்ண   ட்யூட்டி நர்ஸைக் கூப்பிட்டார்.  நம்மைப் பார்த்து அவுங்களுக்கும் மகிழ்ச்சி. நலம் விசாரிச்சுட்டு,  செக் பண்ணிட்டு டாக்டரிடம்  சொல்லிட்டுப் போனாங்க.  'இந்த வயசுக்கு இது சரி'தான் என்ற வகையில் நல்லாவே குறைஞ்சுருக்கு. 

  வெர்ட்டிகோ மாத்திரைகளை மறக்காமல் எடுத்துக்கச் சொன்னார். கொஞ்ச நாள் ஆகுமாம். இது சரியாகறதுக்கு... அதுவரை மருந்தை நிறுத்தப்டாது!  எடுத்துக்கவேண்டிய மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகமோன்னு ஒரு சம்ஸயம் எழுப்பினதுக்கு,  ஒரு மூணு நாள்  இப்படியே எல்லா மாத்திரைகளையும்  எடுத்துக்குங்க.  அதுக்கப்புறம் இன்னொரு செக்கப் பண்ணிட்டு, என்ன  செய்யலாமுன்னு சொல்றேன்னார்.  எப்படியோ  கொஞ்சம் மனக்கவலை குறைஞ்சது. 

இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடிக்க நம்மவருக்கு ஒரு  சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுக்கலாம்.  ச்சலோ பாண்டிபஸார்! பூர்விகா கடைக்குள்  போய்  லேட்டஸ்ட் செல்ஃபோன் என்னன்னு பார்த்தால்  S22 Ultra இருக்குன்னு எடுத்துக் காமிச்சார். (நான் ஏற்கெனவே நியூஸியில் பார்த்துவச்சுட்டுப் போயிருந்தேன். இங்கே ரெண்டு சிம் போட்டுக்கும் மாடல் கிடையாது ) கொஞ்சம் அதைபற்றி விசாரிச்சுட்டு, கூடுதல் ஸ்டோரேஜ் வேணுமுன்னு (512gb )  சேர்த்து பணம் கட்டியாச்சு.  கடைக்கு முன்னால் பார்க்கிங் என்பதால் நம்மவரும் கூடவே  மெல்ல நடந்து வந்துட்டார். தினமும்  அறுபதடி நடக்க வச்சது இப்போ எவ்ளோ நல்லதா போச்சுப் பாருங்க. 

அந்த மாடலை எடுத்துவர ஆள் அனுப்புனாங்க. கொஞ்சநேரத்துலே  வந்துட்டார். இப்ப வாங்கின ஃபோனுக்கு போனஸா ஒரு ஸ்மார்ட் வாட்ச் கிடைக்குமாம்.  நம்ம செல்லை ஒரு மணி நேரம்  பயன்படுத்தினதும்,  அது ரெஜிஸ்டர் ஆகும். அப்போ  வாட்ச் கடைக்கு  அனுப்புவாங்க.  வந்ததும் தகவல் சொல்றேன்னார். இதெல்லாம் எனக்கு ஒன்னுமே புரியாது....   இண்டியா சிம் அந்த J7 லேதானே இருக்கு. அதை எடுத்து புதுசுலே  மாத்தியாச்சு. புதுசை எடுத்து 'நம்மவர்' கையில்  கொடுத்தேன் !

இப்போ பழைய செல் சமாச்சாரங்களை இதுலே மாத்திக்கணும்.  அந்த வேலை இப்போ இல்லையாம்.  ஃபோன் ரெஜிஸ்டர் ஆனதும்தான்  மாத்த முடியுமாம். உங்களுக்கு சாம்ஸங்கிலிருந்து மெஸேஜ்  வரும்.  நாளைக்கு இதே நேரத்தில் வாங்க. எல்லாம் மாத்திக்கலாமுன்னார். 

ஓ...   ஐஸியூ வில் இருக்கும் பேஷிண்டின் நிலையைக் கேட்டால்  இன்னும்  24 மணி நேரம் கழிச்சுத்தான் சொல்லமுடியுமுன்னு ஆஸ்பத்ரியில் சொல்றாப்படியோ !  

அதுவரை  என் ஃபோன் டம்மிதான். கெமெராவாத்தான் பயன்படுத்திக்க முடியும் ! லோட்டஸ் போனால் வைஃபை கிடைக்கும்னு  மனசைச் சமாதானப்படுத்திக்கிட்டேன்.

என்னோட S9+   இதே கடையில்தான் முந்தி வாங்கினோம்.  அப்போ இங்கே இருந்தவர்கள் யாருமே இப்போ இங்கில்லை....   

லஞ்சுக்காக பக்கத்துலே இருந்த  பாலாஜி பவனுக்குள்ளே போனோம்.  விஜிக்கும் நம்மவருக்கும் மினி மீல்ஸ். எனக்கு மனம் நிறைஞ்சதால் பசியே இல்லை.  புது செல்லின் வரவைக் கொண்டாடவேணாமா ? ரெண்டு ஜாங்கிரி. ஒன்னு அவுங்க இருவருக்கும். ஒன்னு முழுசா எனக்கும்!  நம்மவருக்குப் புது ஃபோன் வர்றதுலே எனக்கு இவ்ளோ மகிழ்ச்சியா !!!  இவ்ளோ நல்லவளாகவா இருக்கேன் !!!!! 

 'அந்த ஒரு மணி நேரம்' எப்பப்போகுமுன்னு காத்திருக்கணும்.....
சாப்பாடானதும் லோட்டஸில் இவரை விட்டுட்டு, நான் மட்டும் கிளம்பி பாண்டிபஸார் வணிக வளாகத்துக்குப் போனேன். எப்போ கிளம்புவோமுன்னு இன்னும் சரியாத் தெரியலை. 

 திடுக்குன்னு  கிளம்பணுமுன்னால்..... எப்படி ?  அதுக்கு முன்னே   நியூஸியில் கிடைக்காத சில  சமாச்சாரங்களை வாங்கிக்கணும்.  கொஞ்சம் சிக்கனக்காரி என்பதால் போரடிக்கும் பழசைப் புதுசா மாத்திக்கணும்.  
அங்கே ஒரு கடையில் நம்ம தேவைக்குக் கிடைச்சது.   நான் போனபோது அந்தக் கடையில் மூணு பெண்கள் கடைக்காரரிடம் பேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க.  மலேசிய மக்கள். இந்தியாவில் நல்லா விலைகுறைச்சுக் கேக்கலாமுன்னு சொல்லி அனுப்பியிருப்பாங்க போல .  அவர் சொன்ன விலையில்  முக்கால் பங்கைக் குறைக்கச் சொல்லி மல்லுக்கட்டறாங்க.  நான் போய்  நின்னதும், 'அக்கா.... இங்கே பாருங்கக்கா.... இப்படிக் குறைச்சுக் கேட்டா எப்படிக்கான்னு என்னாண்டை முறையிடுறார் தம்பி' !   டௌரிகல்யாணம் விசு மாதிரி  பேரத்துக்கு நடுவில் புகும்படி ஆச்சு.  கொஞ்சம் வியாபாரமும் ஆச்சு.  !  மலேசிய மக்களைப் பார்த்ததும் என் மலேசியத்தோழிகள் எல்லாம் மனசுக்குள் வந்து போனாங்க.....

 பேரம் எல்லாம் ப்ளௌஸ் பின்னால் கட்டிவிடும் குஞ்சலத்துக்குத்தான்.....   கழுத்து லூஸா இருந்ததைச் சரி பண்ணறதுக்காக  ஆரம்பிச்சது, இப்போ பயங்கர ஃபேஷன் சமாச்சாரமா மாறி இருக்கு. தேவையோ இல்லையோ எல்லாத்துக்கும் குஞ்சலம் கட்டியே ஆகணும்.   விலை உயர்ந்ததுகூட வேணாம். தைக்கும் துணியிலேயே, வெட்டும்போது   சின்னத்துண்டு விழுமே  அதுவே போதுமாம். நம்ம டெய்லர் கூட  என்னோட துணிகளில்  வச்சுத் தச்சுருக்கார்.  அதையெல்லாம் ஊருக்குப்போய் பிய்ச்சு எடுக்கணும்.  நம்ம ரஜ்ஜுவுக்கு விளையாடும் கயிறு :-)

இப்போ இது நம்ம தம்பி கடையா ஆகிப்போனதால் நானும் கொஞ்சம் நிறையவே வாங்கினேன். கனமில்லாதவைகள்தானே !  கைக்கெட்டும் தூரத்தில் ஏகப்பட்ட 'தேவையானவை' குமிஞ்சுருக்கு இந்த வளாகத்தில்.  இந்த டிக்கெட் அப்க்ரேடு சரியானால் இன்னும்  இருபதும் இருபதுமா நாப்பது கிலோ கிடைக்கும். பிரச்சனையில்லாமக் கொண்டு போகலாம்.  ஆனால்  இடம் இருக்குன்னு சொல்லமாட்டேங்கிறாங்களே...... நாப்பது கிலோவுக்கு இன்னும் என்னென்ன வாங்கலாமுன்னு  மனசு எடைபோட்டுக்கிட்டு இருக்கு.... நல்லதா ஒரு வெங்கல உருளி,  லக்ஷ்மி வாங்கின கடையில் பார்த்த  பொம்மைகள்..... நல்ல கனமான அடியுள்ள தோசைக்கல்..... ஹைய்யோ ஹைய்யோ....

நாலு மணி போல நம்ம பூனா மாமி  மகளும் மருமகனும் வந்தாங்க.   கொஞ்ச நேரத்தில் மாமியின் மகனும் வந்தார். மாமியின் மக்கள் என்றாலும்  மாமி என்னை ஸ்வீகாரம் பண்ணிட்டதால் அண்ணன் தங்கைதான்.   இப்படி எல்லோரையும் சேர்த்துப் பார்த்தே பலவருஷங்களாச்சு. பழங்கதைகள் பேசுவதும்  இனிமைதான் !  பூனாவில் நாங்க இவுங்களோடு சேர்ந்து சுத்தாத இடமில்லை! ராஸ்தாபெட் கலகலத்துப்போகும் அப்போல்லாம் !  மருமகன்தான்  கொஞ்சம் 'ஙே'ன்னு இருந்தார்.  ஆறுமணிபோல அவுங்களும் கிளம்பிப் போனாங்க. லோட்டஸில் அட்டகாசமா வளர்ந்துருக்கும் மணிப்ளாண்ட் ரொம்பவே பிடிச்சுப்போச்சாம் ! அதுலே இருந்து ஒரு கிள்ளு ! திருடிக் கொண்டுபோனால் காசு வராதுன்னேன்.  நாம் பூனாவில் இருந்த காலத்தில்,  பூனா மாமி குடும்பம்  மெட்ராஸுக்கு இடம் மாறினாங்க.  அப்போ  மகள் டால்டா டப்பாவில் வளர்ந்த மணிப்ளாண்ட் செடி நம்மாண்டை வந்தது.  நாங்க ரெண்டு பேரும்  சட்னு  இதை நினைச்சோம்.  நான் அதைத் தொட்டியில் மாத்திக் கயிறு கட்டி பால்கனியில் விட்டுருந்தேன்.  ரொம்ப நல்லா வளர்ந்து அதுவே ஒரு அடையாளமா ஆகிப்போச்சு நம்ம வீட்டுக்குன்னு சொன்னேன் ! 

நமக்கு வரவேண்டிய மருந்து ஒன்னு இன்னும் பாக்கி இருந்தது ஆஸ்பத்ரி பார்மஸியில் .  ரெடியா  இருக்குன்னு தகவல் அனுப்பினாங்க.  போய் அதை வாங்கிக்கிட்டு அப்படியே டின்னருக்கு வேறெங்காவது போகலாமுன்னார் நம்மவர். கொஞ்சம் குஷியா இருக்கார் போல !  ஞானாம்பிகாவில்  அவுங்களுக்கு நெய் ரோஸ்ட் & ரவா தோசை.  எனக்கு இடியப்பம்.  அங்கே பாதாம் பால், எனக்கு காஃபி !

இப்பெல்லாம் எல்லா இடங்களிலும் மஞ்சக்கலர் ப்ளேட்களா  இருக்கே... என்ன காரணமா இருக்கும்? வாஸ்துவா இல்லே   தட்டுகளில்  குழம்பு கறிகளில் இருக்கும் மஞ்சள் ஒட்டுமே... அதனாலா.........
தொடரும்...........:-)

Wednesday, May 24, 2023

மகள் தயவால் ரங்கத்தைச் சுத்திப் பார்த்தோம் !!!! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 52

இந்தத்  தென் தமிழகம்  போகும் பயணம் ரத்தாகினதில் எனக்கு ரொம்பவே மனவருத்தம்தான்.  இந்த முறை ரங்கனைப் பார்க்கப்போகும் வழியில் கொஞ்சமா ஒரு திருப்பத்தில் போகணும். போற வழியில் ஒரு தோழியை சந்திக்கணுமுன்னு  ஏற்பாடு செஞ்சுருந்தேன்.  அது நடக்காதுன்னதும் தோழிக்கு சேதி அனுப்பித் துக்கப்பட்டாச்சு.  தோழி என்ன தோழி.... என் மகள்னும் சொல்லலாம்.
ஆஸ்பத்ரி சமாச்சாரம் தெரிஞ்சதில் இருந்து அவுங்களும் 'அப்பா எப்படி இருக்கார்'னு கேட்டுக்கிட்டே இருக்காங்க.  'வீட்டுக்கு வந்தாச்சு'ன்னு சொன்னதும், 'பெருமாள் காப்பாத்திட்டார்மா,  'நான் போய் அர்ச்சனை பண்ணிட்டு வரேன், நட்சத்திரம் சொல்லுங்கன்னாங்க'ன்னதும்... எனக்கு மனசு நிறைஞ்சு போச்சு.  அவுங்களுக்கும்  ஒரு ஒன்னேகால் மணி நேரப்பயணம் இருக்கே.... 'அதெல்லாம் வேணாம். உங்க ஊர்லே இருக்கும் பெருமாள் கோவிலில் அர்ச்சனை செஞ்சால் போதுமு'ன்னேன்.

மறுநாள், ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு  வந்து  ஓய்வா உக்கார்ந்திருக்கும்போது, செல்லில் கூப்பிட்டு  'ஒரு லைவ் வீடியோ போடறேன், பாருங்க'ன்னாங்க.  பார்த்தால் ரங்கா கோபுரம் !   உடம்பே விதிர்விதிச்சுப் போச்சு.  நாங்கள்  சேர்ந்து பார்க்க ஆரம்பிச்சோம்.  கோவிலைச் சுத்தியுள்ள வீதிகளைக் காமிச்சுக்கிட்டே போறாங்க. கோவிலுக்குள்ளும் பல பகுதிகள், ராஜகோபுரம் பார்த்ததும்  கண்ணில்  சின்னதா ஒரு அருவி........ என்னாலே நம்பவே முடியலை.... நான் ஸ்ரீரங்கத்தில் சுத்திக்கிட்டு இருக்கேன் என்பதை !  ரங்கா ரங்கா.....
சுமார் 40 நிமிட்ஸ் இருக்கும்.....   அப்பதான் சொல்றாங்க.... 'நீங்க உங்க இஷ்டக்கோவிலைப் பார்க்க எவ்வளவோ ஆசையா இருந்துருப்பீங்க. பயணம் ரத்து என்றதும் எனக்கே தாங்க முடியலைம்மா. அதான்  இங்கே வந்து  உங்க ரெண்டு பெயருக்கும் அர்ச்சனை பண்ணிட்டேன். ப்ரசாதங்களை இப்போ கூரியரில் அனுப்பறேன்மா. நாளைக்கு வந்துரும்'ன்னதும்.... பெத்த மகளைவிடப் பாசம் காண்பிக்கும் உறவைக் காமிச்சுக்கொடுத்த  பெருமாளை  மனசில் நிறுத்திக் கைகூப்பினேன்.  நம்மவரும் அப்படியே நெகிழ்ந்து, கரைந்து சிலைபோல உக்கார்ந்துருந்தார். பார்த்தால் கண்ணில்  தளும்பி நிக்குது  கண்ணீர். 

மறுநாள் பார்ஸல் வந்துருச்சு. பரபரன்னு பிரிக்கிறேன்....  தாயாரின்  ப்ரசாதமாகத் தாமரைமொட்டு பார்த்ததும்  கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்  .....  ஹைய்யோ!!!!
ரெங்கன் கயிறை உடனே கையில் கட்டிவிட்டேன். காப்பு !
ப்ரஸாதம் வந்து சேர்ந்த விவரத்தை மகளுக்குச் சொல்லிட்டு  நம்ம ஆஞ்சி முன்னால் உக்கார்ந்து அஞ்சு நிமிஷ தியானம் ஆச்சு. இனி எல்லாம் சுகமேன்னு மனசு கூவுச்சு !

இன்னிக்கு ரொம்ப லேட் லஞ்ச். பசியே இல்லை..... ஆனாலும்  நம்மவர் மருந்துகள் சாப்பிடவேணுமே..... 
 
சாப்பாடு ஆனதும் 'கொஞ்ச நேரம் தூங்கப்போறேன்'னார்.  'ஆஹா.... நல்லது. அப்படியே செய்யுங்க. நான்  கொஞ்சநேரம் வெளியே போயிட்டு வரேன்'னு  கிளம்பிட்டேன். ஙேன்னு முழிச்சவரிடம்.... 'பயப்படாதீங்க .  ப்ரெஷர் ஏறிடப்போகுது. கனமான பொருட்களை வாங்க மாட்டேன்'னு  துப்பட்டாவைப் போட்டுத் தாண்டவேண்டியதாப் போச்சு. 

நேபாள் பயணத்தில் மணிப்பித்து பிடிச்சுருச்சுன்னு  சொன்னேனே... அது குறையவே இல்லை.  விண்டோ ஷாப்பிங் செஞ்சுக்கணும்.  ரொம்பப் பிடிக்கறமாதிரி ஏதாவது அமைஞ்சால்  வாங்கலாம்.   மணிகளுக்குப் பெயர்போன நாராயணா பேர்ல்ஸ் பார்த்ததும்   கொஞ்சம் வேடிக்கை. அதிலொன்னு பிடிச்சுருந்தது.  இன்னொரு  நெக்லெஸ் அழகு. மகளுக்கு வேணுமுன்னா வாங்கலாம். ஆனால் சட்னு வாங்க முடியாதே. ப்ரிஅப்ரூவல் வேணுமே.... ' படம் எடுத்துக்கவா'ன்னு கேட்டதுக்கு முதலில் தயங்கினாங்க.  என் நிலையைக் கோடி காமிச்சு 'மகள் சரின்னு சொன்னால்  நாளைக்கு வந்து வாங்குவேன்'னதும் சரின்னாங்க. 
லோட்டஸுக்குத் திரும்பி வந்து,  படத்தை அனுப்பினதும்,  மகள் அதைப்பற்றி விவரம் கேட்டாள். குஷன் கட்   நவரத்தினம் என்றதும் 'ஓ நைன் ஜெம்ஸ்' நல்லா இருக்கு'ன்னுட்டாள்.    லேட் லஞ்ச் ஆனதால்  டின்னர் லைட்டா இருக்கட்டுமுன்னு  டோஸ்டட் ப்ரெட் & பால். 
நம்மவரை இப்ப ரெண்டுமூணு நாட்களா  சுமார் முப்பதும் முப்பதும் அறுபதடி நடக்க வச்சுக்கிட்டு இருக்கேன்.  ரெண்டு அறைகள் நமக்குன்னு  இருக்கே.  ஒரு கோடியில் இருந்து மறுகோடிவரை  எதையும் பிடிச்சுக்காமல் நேரா நடக்கணும். எப்படி இருக்கு நடை என்பதை சின்ன வீடியோவா எடுத்துக் காமிச்சேன்.  தடுமாறாமல் நடக்கும் பயிற்சி.  கால்கள்  ரொம்ப வீக்கா இருக்காம்.  அப்ப நடக்க நடக்கத்தான் பலம் வரும் இல்லையோ.....    
     
ஆச்சு ஒரு வாரம் ஆஸ்பத்ரியில் இருந்து வந்து!  ஒரு செக்கப் போக வேணும். எல்லாம்  சரின் னால்.... நம்ம டிக்கெட்டை மாத்தி எடுத்துக்கிட்டு உடனே கிளம்பிறணும்.  பொதுவா ஏர்ப்போர்ட்டுக்குள்ளேயே நிறைய நடக்கவேண்டி இருக்கும் என்பதால்தான் அந்த நடைப்பயிற்சி :-)

டிக்கெட்டை மாத்தி எடுக்க, முதலில்  விமானத்தில் இடம் இருக்கான்னு  பார்க்கணும். ஆன்லைனில் பார்த்தால்  எல்லா ஃப்ளைட்டும்  ஃபுல்லி புக்டு.  இது என்னடா  நியூஸிக்கு வந்த வாழ்வு !!  அப்க்ரேடு பண்ணிக்கிட்டாவது போயிடலாமுன்னு பார்த்தால் அதுவுமே இல்லை.  ஒருநாளுக்கு மட்டும் சென்னை- சிங்கையில்  இருக்கு. இப்பெல்லாம்  சென்னையில் இருந்து  சிங்கைக்குப் பகல் நேர ஃப்ளைட்தான் எடுக்கறோம்.  நாலரை மணி நேரம்தானே.... ரொம்பக் கஷ்டமில்லை.  ஆனால்  நமக்கு முக்கியம் சிங்கை - நியூஸி.  திரும்பிப்போகும்போது சுமார் பத்துமணி நேரம். அதுவும் ராத்ரியில் . பொதுவாகவே தூக்கமும் இருக்காது, கால் நீட்டவும் முடியாது..... இந்த அழகிலே தலைசுத்தல் வேற .... ப்ச்....

'வெர்ட்டிகோதான் காரணமுன்னு சொல்லிட்டாங்கதானே.... நாம் போய்  உனக்குக் காதுக்குப் பார்த்த அதே டாக்டரைப் பார்க்கலாமே'ன்னாரா... அதுவுஞ்சரின்னு,  வண்டியை வரச்சொல்லிட்டு வந்ததும் கிளம்பினோம். பர்கிட் ரோடு, டாக்டர் சுந்தர் க்ருஷ்ணன். கையோடு ஸ்கேன் ரிப்போர்ட் கொண்டுபோயிருந்ததால் பார்த்துட்டு,  ஆஸ்பத்ரியில் இப்பக் கொடுத்துருக்கும் அதே மருந்தை எடுத்துக்கச் சொன்னார். இப்படித்தான்  சொல்வார்னு நான்  நினைச்சுருந்தேன். ஆனால் இவரிடம் சொல்லலை. எத்தைத்தின்னால் பித்தம் தெளியும் என்று இருப்பவரிடம் நெகடிவா எதுக்குச் சொல்லணும் ? 

அப்ப சொல்றார்,  ஆன்லைனில்  சிலசமயம் சரியா விவரம் இருப்பதில்லை. பேசாம சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆஃபீஸில் கேட்கலாம்.  வலையில் பார்த்தால்  டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைன்னு இருக்கு.  அதுலே இருக்கும் நம்பருக்குப் ஃபோன் செஞ்சால் பதிலே இல்லை.  வண்டிதான் இருக்கே... நேரில் போனால் ஆச்சுன்னு  எலியட்ஸ் ரோடுலே போய் அந்த ஆஃபீஸ் இருக்குமிடத்தைக் கண்டுபிடிச்சால்.... சுத்தம்.   ஃபோயரில் நோட்டீஸ் ஒட்டிட்டுப் போயிட்டாங்க. வாட்ச்மேன் சொன்னார், கோவிட் ஆரம்பிச்சதுமே மூடிட்டுப் போயிட்டாங்களாம்!
எனக்கு இன்னும் பழைய பெயர்கள்தான் நினைவில் இருக்கு. நான்  சென்னையை விட்டுட்டு வந்தபோது இருந்த பெயர்கள். அது ஆச்சே 48  வருசம் ! அதுக்கப்புறம் எத்தனையோ முறை  மெட்ராஸ் போனாலும், மாறிகிட்டே இருக்கும்  புதுப்பெயர்கள் மனசில் நிக்கறதில்லை, கேட்டோ !

வந்தது வந்தோம், அடுத்தாப்லே இருக்கும் ஹேமில்டன் ப்ரிட்ஜ் வரை போகலாமுன்னு  ஐடியாக் கொடுத்தேன். சென்னையில் நடந்த சதுரங்கப்போட்டி விளையாட்டை முன்னிட்டு இந்தப் பாலத்தை செஸ்போர்ட் டிஸைனில் பெயின்ட் செஞ்சுருக்காங்கன்னு  அப்போ வலையில் பார்த்த நினைவு. 

'பாலத்துக்கிட்டே பார்க்கிங் இருக்காது'ன்னார் இன்றைய ட்ரைவர் விஜி. அண்ணனும் தம்பியுமா மாறி மாறி நம்மைப் பார்த்துக்கிறாங்க:-)  வண்டியை விட்டு இறங்க வேணாம். ச்சும்மாப் ப்போய் வரலாமுன்னதும் அப்படியே ஆச்சு. 

பீச் ரோடு பார்த்தால் வரும் மகிழ்ச்சி, இப்பவும்  வந்ததுதான்.  இங்கேயும் மெட்ரோ வருதுன்னு  அங்கங்கே  தடுப்புகள் வச்சுருக்காங்க. பாலம் கடந்து போய், உடனே திரும்பி அதே வழியில் வந்தோம்.  சின்னதா ஒரு வீடியோ எடுத்தேன்.  வேகத்தால் சரியா வரலைன்னு தோணுது.

எதுக்கும் ஃபேஸ்புக்கில் போட்டு வைக்கிறேன். சுட்டி இதுதான்.

https://www.facebook.com/1309695969/videos/1324567298476116/

திரும்பி லோட்டஸ் வருமுன் நேரா பாண்டி பஸார் ,  நான் மட்டும் சட்னு இறங்கிப்போய் நேத்துப் பார்த்துவச்ச நெக்லெஸையும் கூடவே இன்னொன்னு நம்ம ஜன்னுவுக்கும் வாங்கிக்கிட்டேன்.  பில் அடைக்கும்போதுதான்.... நேத்துப் பார்த்துவச்ச கடையின் உள் அலங்காரம் வேற மாதிரி இருந்ததேன்னு தோணுச்சு.   விசாரிச்சால்.... ரொம்பச் சரி..... தகப்பன் மறைவுக்குப்பின் பிள்ளைகள்  அதே பெயரில் தனித்தனிக் கடைகளை ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு வர்றாங்களாம்.  அடப்பாவமே... நேத்து கொடுத்த வாக்கைக் காத்துலே விட்டுட்டேனே....   ப்ச்....

லோட்டஸ் வந்ததும் விஜியை,  சாப்பிட்டுவந்து ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு நாங்க அறைக்குப் போயிட்டோம். கீழே இருந்து சாப்பாடு வந்தது.  

சாயங்காலமா  நம்ம டாக்டர் கார்த்திக் கொடுத்த நம்பருக்குப் ஃபோன் செஞ்சால்  வேற வேலையாப் போயிருக்காராம்.  எப்படி இருக்கீங்கன்னு விசாரிச்சுட்டு, மறுநாள்  நேரம் கொடுத்தார். 

 அப்போதான் நம்ம டெய்லர்  செல்லில் கூப்பிட்டுத் துணிகள்  ரெடின்னார்.  நான் போய் வாங்கி வரேன்னு சொன்னேன்.  நம்மவரும்....  கூடவே  கிளம்பி வண்டியிலே இருக்கேன்னார்.  துணிகளை வாங்கினதும்  பில் செட்டில் செய்யும்போது, ஸார் எப்படி இருக்கார்னு விசாரிப்பு.  வெளியே வண்டியில் இருக்கார்னதும்,  வந்து பார்த்துப் பேசிட்டுப்போனார். 28 வருஷமா நமக்குத் தைக்கிறார் என்பதால்  பரஸ்பர அன்பு இருக்கு !
நாளைக்குச் செக்கப்பில் எல்லாம் சரியா இருக்கணுமே.....    பெருமாளே......

தொடரும்.....:-)