அந்த திருவாரூர் மோகனாங்கி என்னமாத்தான் ஆடுறாளுன்னு பார்த்துட்டு வாரேன். ஓட்டுக்கு விட்டதில் 51-49 லே தோத்துப்போயிட்டோம்:(
யார் அந்த கருங்காலி, கையிலே மாட்டணும்...மகனே....
முன்கதைச் சுருக்கம்: இங்கே!
கட்டுவோம் கட்டுவோமுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு வேலையை ஆரம்பிச்சுட்டாங்க. நாங்களும் ஒருபக்கம் அழுதுகிட்டே...... என்னதான் நடக்கும் நடக்கட்டுமேன்னு அப்பப்ப ஒரு நடை போய் இடத்தை எட்டிப்பார்த்துக்கிட்டு வர்றது, ' கடமை'களில் ஒன்னாச்சு.
யக், கண்ராவி,சகிக்கலை,ஊரையே அசிங்கம் பண்ணிட்டாங்க. , திருஷ்டி கழிஞ்சது, Eyesore, காசைக் கரியாக்கறாங்கன்னு அப்ப இருக்கும் மனநிலைக்கு ஏத்தமாதிரி பொருமிட்டு வருவோம். எதுக்குத் தலைவலி? போகாம இருக்கலாமுன்னா.... பாழாப்போன மனசு கேக்குதா?
Shigeru Ban என்ற ஜப்பானியர்தான் டிஸைனர். அட்டைவேலையிலே நல்ல பழக்கமும் அனுபவமும் இருக்கும்போல!
சின்னவயசுலே ஜப்பானைப் பத்தி 'டீச்சர்'' சொன்னது.... 'பூகம்பம் அடிக்கடி வருவதால் அங்கே அட்டையில் வீடு கட்டுகிறார்கள்' அதெல்லாம் இப்போ நினைவுக்கு வந்துச்சு. வீடென்ன வீடு...இங்கே கோவிலே கட்டுறாங்கப்பா.....
ஒரு ரெண்டுமூணு வருசத்துக்கு முந்தி போடிக்குப் போயிருந்தேன் அங்கே நம்ம சொந்தக்காரங்க ஒருத்தர் ( தமிழ் டீச்சர்) நியூஸியிலே அட்டைவீடா கட்டுவீங்கன்னு கேட்டாங்க. இல்லையே யாரு சொன்னான்னு கேட்டதோடு சரி. விஷயம் மட்டும் அப்போ தெரிஞ்சுருந்தால்..... அட்டையிலே வீடு கட்டமாட்டோம். கோவில்தான் கட்டுவோமுன்னு சொல்லி இருப்பேன்:-)
இன்னொரு சர்ச் (எல்லாம் இதே ஏஞ்சலிக்கன் பொறுப்பில் உள்ளதுதான்) இடிஞ்சு விழுந்துருச்சுல்லே அதே இடத்தை சரியாக்கிக் கட்ட ஆரம்பிச்சு இருக்காங்க. 2011 நிலநடுக்கம் ஊரில் ஒரு சர்ச்சை விட்டு வைக்கலை. அதுக்கு மத பேதமோ, வாதமா இல்லைன்னு காமிக்க இருந்த ஒரே ஹிந்துக் கோவிலையும் போட்டுத் தள்ளிருச்சு.
உள்ளுர் பத்திரிகை சும்மா இருக்குமா? இதுவுமில்லைன்னா வேற செய்தி? அட்டை வந்து இறங்கிருச்சு. அட்டையை அடுக்கிட்டாங்க.முகப்பு கண்ணாடி பொருத்தியாச்சு. இதுலே ஒரு கண்ணாடி பழைய கதீட்ரலில் இருந்து கொண்டு வந்தது. அது இதுன்னு பிட்ஸ் போட்டுக்கிட்டே இருந்துச்சு.
ஒருநாள் நேஷனல் டிவியில் செய்தி... பெரிய மழையினால் கார்ட்போர்டு நனைஞ்சு ஊறிப்போய், சர்ச்சில் தண்ணி நிக்குது. போச்சுடா.... அஞ்சு மில்லியன்:( ஆனால்....உள்ளூக்குள்ளே ஒரு சின்ன சந்தோஷம் வந்தது நிஜம்.
ரிப்பேர் செய்யறோமுன்னு வீடுகளுக்கு wrap போடுவது போல அங்கேயும் ப்ளாஸ்டிக் போர்வை சுத்துனாங்க.
அழிவு பார்க்க வந்துக்கிட்டு இருந்த டூரிஸ்ட் கூட்டம்.... இப்பெல்லாம் ஆக்கம் பார்க்க வருது. சுத்திப்பார்க்க மாடி பஸ்ஸெல்லாம் போட்டுருக்காங்க. இன்னும் பத்தே வருசத்தில் எங்களுக்கு ப்ராண்ட் நியூ சிட்டி, கேட்டோ!
ஆகஸ்ட் 15 க்கு அட்டைக்கோவில் திறப்பு விழா கோலாகலமாக நடந்துச்சு. மற்றநாள் சனிக்கிழமை தினப்பத்திரிகை முழுசும் இதுதான் செய்தி. அன்னிக்குப்போக முடியலைன்னு அடுத்த வீக் எண்ட் போனோம். பதிவின் முதல் வரி இங்கே வரணும்:-))))
பெரிய அட்டைக்குழாய்கள் 98. ஒவ்வொன்னும் 20 மீட்டர் நீளம். இதன் எடையே 120 கிலோ ஆகி இருக்கு. இங்கே அடிக்கும் காத்துக்கு இது தாங்காதுன்னு அட்டைக் குழாய்க்குள்ளே மரக்கம்பங்களையும் செலுத்தி இருக்காங்க. எல்லா குழாய்களுக்கும் பாலியூரித்தீன் பூச்சு உண்டு. (அப்படியும் ஒழுகியிருக்கு பாருங்க!)
இடிஞ்சு விழுந்த தேவாலயத்தில் இருந்த 'ரோஸ் விண்டோ' விலிருந்து சில பாகத்தை எடுத்து அட்டைக்கோவில் முகப்பில் வரும் 1.2 மீட்டர் உசரம் இருக்கும் முக்கோண ஜன்னலில் வைக்கலாம் என்று பழையதை படம் புடிச்சு அதை அப்படியே கண்ணாடியில் பதிச்சு கண்ணாடிக் காளவாய்லே சுட்டு எடுத்தாங்களாம்.
கண்டெய்னர்களை சுத்திவர வச்சு, அதன் மேல் சட்டம் அடுக்கிக் அட்டைக் குழாய்களைப் பொருத்தி இருக்காங்க. உள்பக்கமா கண்டெய்னர்களைத் திறந்து அறைகள் அமைச்சு, ஜன்னலும் வச்சதும் புது ஆட்களுக்கு வெளியிலிருந்து பார்க்கக் கட்டிடம் போலவே தெரியுது.
முன்வாசக்கதவு கடந்தால் ஒரு பெரிய ஃபோயர். சின்ன ஹால் போல இருக்கு. அடுத்த கதவைக் கடந்தால் சர்ச். 700 பேர்கள் கொள்ளும் என்கிறார்கள். எனெக்கென்னமோ சின்னதாத்தான் தெரியுது.
ரெண்டு பக்கமும் ஒல்லியா இருக்கைகள். (தனித்தனி நாற்காலிதான்) நேரெதிரே சுவற்றில் இருக்கும் மரச் சிலுவை. கீழே ஒரு நீண்ட மேடை. இதுதான் ஆல்ட்டர் இப்போதைக்கு! பழைய கோவிலில் இருந்து கொண்டுவந்த பருந்து ஸ்டேண்ட் ( இதன் சரியான பெயர் தெரியலை) இருக்கு.
பழைய கோவிலுக்கு நம்ம சிட்டி கவுன்ஸில் வருசத்துக்கு ரெண்டு லட்சத்து நாப்பதாயிரம் டாலர் (எல்லாம் மக்கள் கட்டும் வரிப்பணம்தான்) கொடுத்துக்கிட்டு இருந்துச்சு. கோவில் நம்ம சிட்டி ஐகான் ஆச்சே! இலவச சேவையா பழைய கோவிலை சரிப்படுத்திக் கட்டித்தர வல்லுநர்கள் பலர் நிலநடுக்கம் வந்த சமயமே முன்வந்தாங்க. பல நாடுகளில் இருந்தும் பொருளுதவியும் தரேன்னாங்க. நாங்களும் தனிப்பட்ட முறையில் தாராளமாத் தர்றோமுன்னு கெஞ்சினோம். ஆனா...... பிஷப் விக்டோரியாதான் எதுக்கும் சம்மதிக்கலை. கோவிலை இடிச்சே ஆகணுமுன்னு ஒத்தைக்காலில் நின்னாங்க. கோர்ட்டுக்குப் போனோம். தோற்றோம்:( ப்ரைவேட் சொத்து. அவுங்க என்னமும் செஞ்சுக்கலாமுன்னு தீர்ப்பு ஆச்சு.
ஆனால்.... இப்போ அந்தக் காசு 240,000 தர்றயான்னு கேக்கறாங்க. ஒரு ஒற்றைச் சொல்தான் நாங்க சொல்வோம்.. 'ஊஹூம்'....
அட்டைக்கோவில் நடத்த ஒரு நாளைக்கு $ 600 செலவாகுதாம். உண்டியலில் குறைஞ்சது அஞ்சு போட்டுட்டுப் போங்கன்னு சொல்றாங்க. கிம்மீ ஃபைவ் கிம்மீ ஃபைவ்.
அஞ்சு மில்லியன் என்பது இப்போ கிட்டத்தட்ட ஏழு மில்லியன் ஆகிப்போச்சுன்னு ஒரு சேதி. நமக்கென்ன அவுங்க காசுன்னு இருக்கலாமுன்னா.... அட்டைக் கோவிலுக்கு ஏழா???? இத்தனைக்கும், ஜப்பான்கார கட்டிடக்கலை நிபுணர் Shigeru Ban ஒத்தை பைஸா கூலியா வாங்கிக்கலை(யாம்) உலக நாடுகளின் முதல் அட்டைக்கோவில் என்ற பெத்த பேரு கிடைச்சுருக்கு.
'கட்டுனது எதுதான் பட்ஜெட்டுக்குள்ளே அடங்குது', சொல்லுங்க!
பழைய கதீட்ரல் முழுசும் இடிச்சு நிரவி புதுசு கட்டப்போறாங்களாம். பழைய கம்பீரமும் கலையழகும் இனி இல்லை. மாடர்ன் டிசைனாம். அதைக் கட்டி முடிச்சதும் அட்டைக்கோவிலை அங்கே மாத்திட்டு, கல்யாணம் கார்த்திகைன்னு அட்டையை ஃபங்ஷன் செண்டரா மாத்திருவாங்களாம். அதுவரை தாங்குனா ஆண்டவன் புண்ணியம்!