Friday, April 03, 2020

மன்னன் வீட்டு மாப்பிள்ளை ! (பயணத்தொடர் 2020 பகுதி 35 )

சின்னாம்ணின்னு சொல்றதைப்போல  Kagemni ன்னு ஒரு மன்னர்வீட்டு மாப்பிள்ளை அடுத்தாப்லெதான் இருக்கார்.  இந்த ஏரியாவில்  குன்றுகள் ஏராளம், அதுக்குள்ளேயும் வெளியேயுமா  சமாதிகளும் ஏராளம். அதுலே ஒன்னுதான் இப்போ நாம் போய்ப் பார்க்கறோம்.
நீதிபதி, பூஜாரின்னு அரசாங்கத்துலே பெரிய பதவிகளில் இருந்தவர். மன்னருடைய சொத்துபத்து நிர்வாகம் எல்லாம் இவர் பொறுப்புலேதான்.

பொறுப்புலே இருக்கறவனுக்குப் பொண்ணைக் கட்டிக்கொடுத்தால் .... பணத்தை எடுத்துக்கிட்டு ஓடமாட்டாந்தானே? எல்லாம் விவரமாத்தான் இருந்துருக்கார் மன்னர், இல்லே?
முதல்லே பார்த்த சமாதி மாளிகைன்னால், இது பங்ளா ! ஏகப்பட்ட அறைகள்.  மகனுக்கு அஞ்சு அறை, மனைவிக்கு அஞ்சு அறைன்னு ஒதுக்கியாச்சு. பெரிய கூடங்கள்!  அப்புறம் சாமான்செட்டு வச்சுக்க,  அதுக்கு இதுக்குன்னு அதுபாட்டுக்குப் போகுது !
வாசலைத்தாண்டி  கூடத்துக்குள் நுழைஞ்சதுமே  க்ரூப் டான்ஸ் ஆடிக்கிட்டே நம்மை  வரவேற்கிறாங்க!!   எல்லா சுவர்களிலும் செதுக்குச் சிற்பங்கள்.....   

அப்பத்திய  மக்களுடைய அன்றாட  வேலைகளும்,   வாழ்க்கை முறைகளையும் புரிஞ்சுக்கலாம்.  மாடுன்னா செல்வம்தானே.....  ஏகப்பட்ட மாடுகள் !

குட்டிப்பாப்பாக் கன்னுக்குட்டியைக் குழந்தைபோல முதுகில் சுமந்துக்கிட்டுப் போறார் ஒருத்தர்.  பன்னி ஒன்னைத் தூக்கி வச்சு அதைக் கொஞ்சறார் ஒருத்தர். அதுக்குப் பாலோ என்னமோ , ஒரு  ஜக்லே கொண்டு வர்றார் ஒருத்தர், வாத்துகளுக்குத் தீனி போடறார் ஒருத்தர் இப்படி.... மிருகநேயம் நல்லது!


நைல்நதியில் படகுலே போய் மீன் பிடிக்கறாங்க.  முக்கிய உணவு மீனாக இருக்கும்போல.... அந்த மீன்களும் ஏராளமா, என்னைப் பிடிச்சுக்கோன்னு தானாவே படகாண்டை வந்து நிக்குதுகள். முறம் மாதிரி கூடை ஒன்னுலே அப்படியே வாரிக்க வேண்டியதுதான் !


தூண்டிலில் ஒரு முள்  போட்டுப் பிடிச்சா டைம் வேஸ்டுன்னு  அஞ்சு கொக்கி ஒரே தூண்டிலில்.  எப்படியாப்பட்ட டைம் மேனேஜ்மென்ட் பாருங்க !  ( படத்தில் ஒரு வெட்டுக்கிளி, தவளை இருக்கு, தெரியுதா? )


எல்லாம் பெரிய பெரிய சைஸ் மீனுங்களே!  கழியில் தொங்க விட்டு ரெண்டு பேராத் தோளில் சுமந்து போறாங்க. அப்போதைய ஆட்கள் கூட ரொம்ப உயரமாவும் திடகாத்திரமாவும்  இருக்காங்க. ஊளைச்சதையோ, தொப்பையோ காணோம் !

ஆடு, கோழி, வாத்துன்னு  புடிச்சுக்கிட்டுப் போறாங்க.  வகைவகையான சாப்பாட்டுப் பொருட்களைக் கடவுளுக்குப் படையல் போடறாங்க. அப்படியே சமாதியில் இருக்கும்  மன்னர்களுக்கும் கொண்டு போய் வச்சுருவாங்களாம். அவுங்களுக்கு  அடுத்து வரப்போகும் பிறவிக்குத் தேவைப்படுமேன்னுதான்.....


அப்பத் தயிர்வடை, தினசரி பேப்பர் எல்லாம் கூட இந்த  எண்ணத்தினால்தான் போல ! 
குளிக்க பாத் டப் கூட இருக்கு இங்கே! (சமாதியின் உள்ளே கிடக்கறவரும் குளிச்சுச் சுத்தபத்தமா இருக்கவேணும்! )
ஒரு இடத்துலே பலி கொடுக்கன்னே ரெண்டு கற்சுவர். இடையிலே  நிக்கவச்சா அசையமுடியாதுன்னு ரெய்னா சொன்னப்ப , மனசுக்குக் கொஞ்சம் பேஜாராப் போச்சு. ப்ச்.....
ஆளுங்ககிட்டே வேலைவாங்க மேஸ்த்ரி கூடக் கையில்  சின்னக் கோல் வச்சுக்கிட்டு நின்னு பார்க்கறார்.  சனத்தை மேய்ச்சுக்கறதும் கஷ்டம்தான், இல்லே!
ஏகப்பட்டச் சுவர்சிற்பங்கள் இருப்பதால் நின்னு பார்த்துப் புரிஞ்சுக்கிட்டு ரசிக்க நேரம் எடுக்கும்.  இந்த சிற்பங்கள் செதுக்கி இருக்கும் கல்கூட  கொஞ்சம் வேற வகையா இருக்கு....  ஒரு மெரூன் கலர்.....

இங்கே ம்யூஸியம் கூட ஒன்னு இருக்கு.  ஆனால்  ரொம்ப முக்கியமானவைகள் கய்ரோ பெரிய ம்யூஸியத்தில் இருப்பதால் அங்கே போகும்போது பார்க்கலாம். இன்றைக்கு இன்னும் சில இடங்களுக்குப் போகணும்னு ரெய்னா சொன்னாங்க. அதுவுஞ்சரி. அவுங்களுக்கும் ஒரு  ஒர்க் ஆர்டர், ஐட்டினரி எல்லாம் இருக்குமுல்லெ?
இந்த வளாகம் ரொம்பவே பெருசு. ஒழுங்கா நிக்கும் ப்ரமிடுகள், வெறும் கற்குவியலா நிக்கும் ப்ரமிடுகள்னு  நிறைய இருக்கு!
பொட்டல் காட்டில் போற பாதையில் செக்யூரிட்டின்னு  சின்ன கூண்டுக்குள்ளே ஆர்மி உக்கார்ந்துருக்கு. குளிர் மட்டுமில்லே, வெயிலும் கொடுமைதானே... ப்ச்.... இந்தாண்டை ஒரு செல்லம்.... என்ன பொழைப்புடா.....
வந்த வழியாவே திரும்பிப்போறோம்னு  கண்ணில் பட்ட கட்டடங்கள்  சொல்லுது.  சுமார் ஒரு மணி நேரப் பயணம் இருக்காம்.

தொடரும்...... :-)



Wednesday, April 01, 2020

படிவச்ச ப்ரமிடு, ஏறிப்போகலாமா? (பயணத்தொடர் 2020 பகுதி 34 )

டிக்கெட் ஆஃபீஸெல்லாம் ரொம்ப முன்னாலேயே இருக்கு.   அதுக்கப்புறமும் ஆறேழு நிமிட் ட்ரைவ் போனாட்டுதான் ப்ரமிட்  கண்ணுலே படும்.   இங்கே நுழைவுக்கட்டணம் நூத்தியெண்பது ஈஜிப்ட் பவுண்ட்.  இந்த இடம் Archaeological site. (தொல்லியல் அகழ்வாராய்ச்சி நடந்த இடம்)  ஹேராம் படத்தின் ஆரம்பத்தில்  மண்ணுக்குள்ளே தோண்டிப் பார்த்துக்கிட்டு இருக்கும் ஸீன் ஞாபகம் இருக்கோ ? (ஐயோ.... என் சினிமாவே...... )

இந்தப்பகுதிக்குள் நுழையும்போதே படிக்கட்டுப்ரமிட் கண்ணுலே பட்டது. அட...   மாடிப்படி மாதிரி ஏறிப்போயிடலாம், இல்லே?   ஊஹூம்.... ஒவ்வொரு படிக்கட்டும் அம்மாஉயரம்.....  ஒரு ஏணி வச்சுக்கிட்டுப் படிக்கட்டுலே ஏறணும்.

ஆறு படிகள்.  Pyramid of Djoser என்று பெயர்.  மன்னர் Djoser காலத்துலே கட்டுனதாம். 4700 வயசு!  பார்க்கச் சின்னதாத் தெரிஞ்சதேன்னு இருந்தால் இதன் உயரம்  62.5 மீட்டராம்!  (அதானே.... தூரத்துலே இருந்து பார்த்தால் சின்னதாத் தெரியாம? )
 இதுக்குப் பக்கமா ஆராய்ச்சியில் கண்டெடுத்த  பெரிய கூடத்துக்கு இப்போ முகப்பு வாசல் வச்சுச் சுவர் எழுப்பி இருக்காங்கன்னு நினைச்சால் இல்லையாமே ! அஞ்சாயிரம் வருஷமா இப்படியேதானாமே !!! உள்ளே போனால்.... நல்லா விளைஞ்சு நிற்கும்  மூங்கில்களைக் கட்டுன கட்டு போல தூண்கள் !  நாப்பது தூண்களாம். இவ்ளோ நெருக்கமாக ஏன்  கட்டி இருக்காங்கன்னு தெரியலை....ஒவ்வொரு தூணுக்கும் பின்னால் சுவர் எழுப்பி அதுபோய் சுத்துச்சுவரில் சேர்ந்துருது அதனால்  ரெவ்வெண்டு தூண்களுக்கிடையில் சின்னச் சின்ன அறைகள்! எதுக்காக  இருக்கும்? சவச்சடங்குக்கான கட்டடமாமே இது!



சுவர்களையெல்லாம்  கொஞ்சம் கூட பிசிறே இல்லாத கற்களால் கட்டி வச்சுருக்காங்க.  எந்த மெஷீன் வச்சு இப்படி வெட்டி இருப்பாங்க?  ஆச்சரியம்தான் போங்க.  தூண்களைக் கடந்து அந்தாண்டை போனால்.... அகழ்ந்து  போட்ட கற்கள் அங்கங்கே.... ஒருபக்கம் இன்னும்  கட்டடங்கள் இருக்கு!

நான்பாட்டுக்குப் படங்களை எடுத்துக்கிட்டு இருந்தேனா.... திடீர்னு திரும்பினா.... இவர் கல்மேலே ஏறி நின்னு கையைத் தூக்கிக் காத்துலே  எதையோ  எடுக்கறாரே.... ஹாஹா....    நம்ம ரெய்னா  இவர் ப்ரமிட்டைத் தொடறதை க்ளிக்கறாங்க. கைடு....  ஃபோட்டோ ட்ரிக்ஸ் எல்லாம் தெரிஞ்சுருக்கு :-)


பாதம் வச்சக் கட்டைச்சுவர் ! 

சுத்திக்கிட்டு அந்தாண்டை போறோம். கொஞ்சம் நல்ல கூட்டம்தான் இங்கே!  பார்க்கிங்லே நிறைய வண்டிகள் ! கூட்டம்  வர்றதால்  நினைவுப்பொருட்கள்  விற்பனையும் நடக்குது.  பூனை இவுங்களுக்கு சாமி, தெரியுமோ ?  அழகழகா இருக்குன்னாலும்  வாங்கலை.... ப்ச்....
என்னவோ தெரியலை... இங்கேயும் ஒரு செல்லம் ப்ரமிடுக்குக் காவலா நிக்குது!  ஒருவேளை.....  கடந்து போன ஜன்ம வாசனை....  'அந்தக் க்ளியோவோ?'
இந்த வளாகம் ரொம்பவே பெருசு.  இடப் பத்தாக்குறைக்கு இடமே இல்லாததால் எல்லாமே  தள்ளித்தள்ளிக் கட்டி விட்டுருக்காங்க. ஒரு இடத்தில் இருந்து இன்னொன்னுக்குப் போக நடக்கலாம்தான். ஆனால் அடிக்கிற வெயிலில்  நடக்கறது கஷ்டம் எனக்கு. அதனால் இந்தக் கார்ப்பார்க்லே இருந்து அந்தக் கார்ப்பார்க் வண்டியிலேன்னுதான் போறோம்.

Mereruka Tomb னு  போர்ட் வச்சுருக்காங்க.
நிறைய சனம் வர்ற இடமான்னு தெரிஞ்சுக்க  ஒரு சிரமமே இல்லை. நினைவுப்பொருட்கள் கடை இருந்தால்.... சனம் புழங்குற இடம் :-)
இங்கே ப்ரமிடுகளைத் தவிர  எக்கச்சக்கமான சமாதிகள் வேற !  யாராக இருந்தாலும் கடைசியில் மண்ணுக்குள்ளேன்னுதானே ? ஆனால் இங்கே என்னன்னா....   மன்னர்கள் , மந்திரிகள்னு முக்கியமானவர்கள் உடலை எல்லாம்  மம்மிஃபைடு பண்ணி, அதைக் கொண்டு போய் சமாதிக்குள்ளே வைக்கிறேன்னு....நீளமாப்போகும் குன்றுகளின் அடியில்   சுரங்கம் வெட்டி, அதுக்குள்ளே போய்  பெரிய பங்ளா மாதிரி விதவிதமான அறைகள் எல்லாம்  கட்டிவிட்டு, நடுநாயகமா மம்மியை, ஸ்பெஷல்  அறையில் வச்சுட்டு வந்துருக்காங்க.

இப்ப நாம் பார்க்கும்  சமாதியும் இந்த வகைதான். ஒவ்வொன்னுக்கும் ஒரு பணியாளர் வேற !  நாம் வாங்குன டிக்கெட்டை அங்கங்கே  காமிச்சுக்கணும். நீளமாப்போகும் சுரங்கப்பாதையில் போறோம். கொஞ்சம் சரிவா இருக்கு.    உள்ளே போகப்போக உயரக்குறைவான பாதை என்பதால்  கொஞ்சம் தலை குனிஞ்சு நடக்கணும்.


மரப்பலகை போட்ட சரிவுப்பாதை.  கால் வழுக்காமல் இருக்க மரப்பலகையில்  இரும்புச்சட்டம் அடிச்சு வச்சுருக்காங்க.  கை பிடிக்கு மரச்சட்டம். மெள்ளத்தான் இறங்கினேன். கொஞ்ச தூரத்துக்குக் கல்தரை, அப்புறம் மரப்பலகை சரிவுன்னு  போறோம்.
கடைசியில்  உடம்பை ரெண்டா மடிக்கத்தான் வேணும்:-) குனிஞ்சபடியே   அந்தப்பக்கம் போயிட்டால் நிமிரலாம்.  பெரிய தொட்டிமாதிரி இருக்கு. அதுக்குள்ளேதான்  மம்மிஃபைடு பண்ண உடலை வச்சுருவாங்களாம். இப்ப மம்மி அதுக்குள்ளே இல்லை. காலித்தொட்டிதான்.

சுவர்களில் எல்லாம் பழங்காலத்து சித்திர வடிவில் இருக்கும் எழுத்துகள் (Hieroglyphic Alphabet ) என்னமோ சேதி சொல்லிக்கிட்டு இருக்கு. இப்பெல்லாம்  எது என்னன்ற விளக்கம் எல்லாம் வந்துட்டாலும் நின்னு வாசிச்சு முடிக்க இந்த ஜன்மம்  போதாது !
வாசலில் இருந்த பணியாளர்.... நம்ம கூடவே வந்து 'கைடு' வேலை செய்யறார். 'செல்லைக்கொடு. நான் படம் எடுக்கறேன்'னு உதவிக்கரமும் !  ஏன் விடுவானேன்? பதிலுக்கு  நாமும் கொஞ்சம் உதவிக்கரம் நீட்டத்தானே வேணும், இல்லையோ?




காலையில் நம்ம ஹொட்டேலில் இருக்கும் பேங்கில் கொஞ்சம் காசு மாத்தி எடுத்து வச்சுக்கிட்டதும் நல்லதாப் போச்சு.  கைச்செலவுக்கும், இப்படி அங்கங்கே பதிலுதவி செய்யறதுக்கும்  வேணும்தானே?
வாசல் வரை கூடவே வந்து வழியனுப்பி வச்சார் இந்த 'கைடு'

நம்ம ரெய்னா,  நாம் வர்றவரை.... வெளியில்  உக்கார்ந்துருந்தாங்க. இருக்கைன்னு தனியா ஒன்னும் வேணாம். அதான் எங்கே பார்த்தாலும்  கல் அடுக்கிக் கிடக்கே....

அடுத்துப் போனது...........  இன்னொரு....

தொடரும் ........ :-)