ஒரு முப்பத்தியஞ்சு நிமிசப் பயணத்தில் பாலாஜி ட்ரைவில் திரும்பி கோவில் வளாகத்துக்குள் நுழைஞ்சது வண்டி. என்ன ஒரு இருபத்தியொரு மைல் தூரம் இருக்கலாம். வெள்ளை கோபுரம் கண்ணைப் பறிக்குது! ஸ்ரீவெங்கடேஸ்வரா என்னும் பாலாஜி !
1989 இல் நம்ம ஆந்த்ரா நண்பர்கள் (மனவாள்ளே)சிலர் சேர்ந்து ஒரு கோவில் நமக்கு வேணுமுன்னு தீர்மானிக்கறாங்க. பெருமாள் இருக்காரே.... அவர் பெரிய ஆள். 'ஸ்வாமி, நீர் இங்கே வரப்போறீர்'னு சொன்னாப் போதும்.... மத்த ஏற்பாடுகளைத் தானே கவனிச்சுப்பார்! வசூல்ராஜாவாச்சே..... வர்ற வசூலை விட முடியுமோ? :-)
ரெண்டு வருஷமா இதுக்கான மீட்டிங், பணம் சேகரிப்புன்னு வேலை மெள்ள நடந்துக்கிட்டு இருக்கு. கோவில் ஒன்னு சின்னதாக் கட்டிக்கலாம். அதுக்கு ஒரு இடம் வேணுமேன்னு தேடும்போது.... பழைய சர்ச் ஒன்னு டிசம்பர் 1991 இல் ஏலத்துலே விற்பனைக்கு வருது! அதை வாங்கறாங்க. பாதிப்பணம்தான் கையில் இருக்கு. மீதிப் பணத்தை நாப்பத்தியஞ்சு நாட்களுக்குள் அடைக்கணுமாம்.
எல்லோருமாச் சேர்த்து மீதிக்கு கடன் வாங்கியாச்சு. ஜனவரி கடைசியில் இடத்துக்கான பத்திரம் கிடைச்சது! ரொம்ப சிம்பிளா பூஜைகளை ஆரம்பிச்சுக்கலாமுன்னு ஃபிப்ரவரி மாசம் படங்கள் வச்சு கோவில் ஆரம்பிச்சுருச்சு! மார்ச் மாசம் பொதுமக்களுக்காகக் கோவிலைத் திறந்து வுட்டாங்க!
அடுத்த எட்டாம் மாசம் திருப்பதியில் இருந்து பஞ்சலோக உற்சவர் வந்துட்டார். பூஜைகள் நடத்த பண்டிட் கூட வந்துட்டார். அவ்ளோதான்..... இருபத்தியஞ்சு பேர் கொண்ட கமிட்டி ஒன்னு ஆரம்பம் ஆச்சு. கோவிலுக்கான விதிமுறைகள், சட்டதிட்டங்கள் எல்லாம் உருவாக்கி பக்காவா ரெஜிஸ்டர் பண்ணிட்டாங்க.
அடுத்த ரெண்டாம் வருஷம், ஸ்ரீ கணபதி ஸ்தபதிகளோடு பேச்சு வார்த்தை நடந்து கோவிலுக்கான ப்ளான் தயாரிச்சு, ப்ரிட்ஜ்வாட்டர் ப்ளானிங் போர்டுக்கு அனுப்பி, அவுங்க அனுமதி கொடுத்ததும், பூமி பூஜை நடந்தது 1995 ஜூன் மாசம். மத்த ஏற்பாடுகள் நடந்து கட்டடம் கட்ட ஆரம்பிக்கவே பத்துப்பதினொரு மாச கர்பகாலம்! மளமளன்னு அதுக்குப்பிறகு நடந்ததெல்லாம் கனவு போலத்தான்!
சென்னை, ஆந்த்ரா, ஜெய்ப்பூர்னு சாமி சிலைகள் வரவு. ரெண்டு வருஷக் கடின உழைப்பு. ஜூன் 1998 லே கோவில் கும்பாபிஷேகம் நடந்துச்சு. அதுக்கு அடுத்த வருஷம் ராஜகோபுர வேலைகள் முடிஞ்சு ஜூலையில் மஹாகும்பாபிஷேகம்!
கோவில் கார்பார்க்கில் வண்டியை நிறுத்துனதும், பார்த்தால் முன்னால் இருக்கும் அலங்கார வளைவையொட்டி கட்டட சாமான்களும் சலவைக்கல்லுமா குவிஞ்சுருக்கு. கோவிலுக்கான விரிவாக்க வேலைகள் நடக்குதாம். இந்த அனுமதிக்காக அஞ்சு வருசமாக் காத்திருந்தாங்க. அக்கம்பக்கத்து மக்களும், 'அவுங்களுக்கு ஓக்கே'ன்னு சம்மதிக்கணுமே! எல்லோருமா எடுத்தவுடனே ஹிந்துக்கோவில் வரட்டுமுன்னு சொல்வாங்க?
முன்வாசலுக்கு முன்னால் தாமரைப்பூ வடிவத்தில் ஒரு குளம். செயற்கை நீரூற்று வேலை செய்யலை. நிறுத்தி வச்சுருக்காங்க.
கார் ஓட்டுநர் அஹமத், 'நான் காத்திருக்கேன். நீங்க போயிட்டு வாங்க'ன்னார். பக்கவாட்டு வாசல் வழியா உள்ளே போறோம். முன்ஹாலில் பெரிய ரங்கோலி !கொஞ்சம் பூச்செடிகள், வாழைக்கன்னுகள் எல்லாம் தொட்டிகளில்.
மாடிக்குப் படிகள் ஏறிப்போனோம். கொடிமரம் சந்நிதிக் கதவுக்கு முன்னால் இந்தப்பக்கம். பெரிய உயரமான கதவைத்தாண்டி உள்ளே, தகதகன்னு அலங்காரத்தோடு நம்ம வெங்கி! நின்ற திருக்கோலம்! அவருக்கு முன்னால் சின்னதா ஒரு சந்நிதி நம்ம பெரிய திருவடிக்கு!
பெருமாள் சந்நிதிக்குப் பின்னால் கொஞ்சம் இடம் விட்டு வலமும் இடமுமா ரெண்டு தனிச்சந்நிதிகள். வலதுபக்கம் ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மித் தாயார். இடப்பக்கம் நம்ம ஆண்டாளம்மா! அவுங்க சந்நிதிகளுக்கு ரெண்டுபக்கமும் இன்னும் ரெண்டு சந்நிதிகள். தாயார் சந்நிதிப்பக்கம் ஸ்ரீ சத்யநாராயணரும், ஆண்டாள் சந்நிதிக்குப் பக்கம் ஸ்ரீ விஷ்ணுதுர்கை.
நமக்கிடதுபக்கமும் நிறைய சந்நிதிகளா இருக்குன்னாலும், நான் பெருமாளை ஸேவிச்ச கையோடு வலப்புறமாத் தாயாரைத் தேடிப்போயிட்டேன். சரி அப்படியே வலம் வந்துடலாமேன்னு தொடர்ந்து போனால் ஸ்ரீ லக்ஷ்மி, துர்கை, சரஸ்வதி மூவருக்குமா ஒரு சந்நிதி, ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் சந்நிதி, ஸ்ரீராதாக்ருஷ்ணான்னு மூணு சந்நிதிகள் அடுத்தடுத்து!
அப்புறம் நம்ம ஸ்ரீராமர் அண்ட் கோ. அவருக்கு முன்னால் நம்ம ஆஞ்சி ஒரு சந்நிதியில்!
மறுபடிப் பெருமாளைக் கும்பிட்டுட்டு எனக்கிடப்பக்கம் விட்டுப்போன சந்நிதிகளுக்குப் போறோம். புள்ளையார், அம்பிகான்னு அடுத்தடுத்து ரெண்டு சந்நிதிகள். ஸ்ரீ சம்பத்து கணபதியாம்! (அமெரிக்கக் கோவில்களில் சம்பத்து கம்மியா என்ன? ) அந்த அம்பிகான்றது நம்ம பார்வதிதான்!
நாலடி தள்ளி ஸ்ரீநந்திகேஸ்வரர், அவருக்கு முன்னால் கொஞ்சம் பெரிய சந்நிதியில் நம்ம சிவன், லிங்க ரூபத்தில்!
அவருக்குப்பின்னே கொஞ்சம் இடைவெளிவிட்டு ஸ்ரீ ஐயப்பன், அடுத்த சந்நிதி ஸ்ரீசுப்ரமண்யஸ்வாமி வள்ளி தேவசேனாவுடன்! இவுங்களுக்கு அடுத்து சத்யநாராயணர் வந்துடறார்!
ஆஞ்சிக்குப் பக்கத்துக் குடித்தனம் நவகிரஹங்களுக்கு! பெரிய கதவுக்குள்ளே நுழைஞ்சதும் வலப்பக்க ஓரத்தில் !
எனெக்கென்னமோ நம்ம சண்டிகர் கார்த்திகேயஸ்வாமி கோவில்தான் சட்னு நினைவுக்கு வந்துச்சு. வெங்கடேஸ்வரா கோவில்னு பெருமாளையும் தாயார்களையும் மட்டுமே வைக்காமல் எல்லா தெய்வங்களையும் சுத்திவர வச்சு, சைவம், வைணவம்னு எல்லோருக்குமான கோவிலாவே வச்சுடறது தென்னிந்தியாவுக்கு அப்பாலே இருக்கும் வழக்கம் ஆச்சே!
உள்ளூர் மக்கள் சிலர் பெருமாளுக்கு முன் கண்மூடி அமர்ந்து கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க.
இன்னொருக்கா நம்ம வெங்கியைக் கண்குளிரப் பார்த்துடலாமேன்னு கொஞ்சம் கிட்டப்போய் நின்னப்ப, பட்டர்ஸ்வாமிகள் கூப்பிட்டு சடாரியும் தீர்த்தமும் கொடுத்தார்! கூடவே ஒரு பூவும், துளசியும்! மனம் நிறைஞ்சது உண்மை.
கதவுக்கு வெளியே மாடி லேண்டிங்லே ஒரு பக்கம் ஒரு டேபிளில் ஸ்வாமிப்ரஸாதம், ஒரு பெரிய பாத்திரத்தில்! பட்டர்பேப்பர் வச்சுருக்காங்க. நாமே எடுத்த வேண்டியதுதான்! சுடச்சுட வெண்பொங்கல்! ரெண்டு கரண்டி அளவு எடுத்துக்கிட்டோம். அப்புறம் சாப்பிடலாம்.
எதிர்ப்பக்கம் இருந்த ஆஃபீஸ் கவுன்டரில் பெருமாளுக்குக் கொஞ்சம் காசு கொடுத்ததும் ரசீது கொடுத்தாங்க. கோவில் ரொம்ப அழகா இருக்குன்னு பாராட்டிட்டு, படங்கள் விற்பனை உண்டான்னு கேட்டதுக்கு காலண்டர் ஒன்னு எடுத்துக் கொடுத்தார். அதுலேயே படங்கள் இருக்காம். கோவிலுக்குள் படம் எடுக்க அனுமதி இல்லைன்னு கீழேயே அறிவிப்பு இருந்தது.
காலண்டர் படங்களைத் தான் க்ளிக்கி இங்கே போட்டுருக்கேன். ஸ்கேன் செஞ்சுருந்தால் இன்னும் க்ளியரா இருந்துருக்கும், இல்லே?
அடுத்து இருந்த இன்னொரு கவுன்ட்டரில் பிரஸாத விற்பனை! லட்டு, மிளகுவடை வாங்கிக்கிட்டோம்.
கீழே படி இறங்கி வந்தால் கிஃப்ட் ஷாப்பும், ஒரு பெரிய ஹாலில் கேன்டீனுமா இருக்கு! 'நம்மவருக்கு இட்லி வடை சாம்பார், எனக்கு வடை ன்னு வாங்கி உள்ளே தள்ளிட்டு கூடவே ஒரு காபியும் குடிச்சுட்டு வந்தோம்.
கொஞ்சம் அதிக நேரம்தான் ஆகிருச்சுன்னு.... காத்துக்கிட்டு இருந்த அஹமத் கிட்டே ஒரு ஸாரி சொன்னோம். பரவாயில்லைன்னார்!
அடுத்த நாப்பதாவது நிமிட் நம்ம க்ரௌன்ப்ளாஸாவுக்கு வந்தாச்சு. வெயிட்டிங் சார்ஜ் சேர்த்துதான் வாங்கிக்கிட்டார். மறுநாள் ரெண்டு மணிக்கு வண்டி வேணுமுன்னு சொன்னதுக்கு அவரே வரேன்னுட்டார்! நல்லதாப் போச்சு. தெரிஞ்சவராவே இருக்கட்டுமே!
ஹொட்டேல் புழக்கடைத் தோட்டத்துலே போய் கொஞ்சநேரம் உக்கார்ந்துட்டு வந்தோம்.
நாளைக்குக் கிளம்பறதால் பாக்கிங் கொஞ்சம் செஞ்சுக்கணும்.
அப்ப ராச்சாப்பாடு? பெருமாள் ப்ரஸாதம்தான்.... வெண்பொங்கல் மிளகு வடை! டிஸ்ஸர்ட்.... லட்டு :-)
தொடரும்...........:-)