Wednesday, June 08, 2016

பதிவர் சந்திப்பில் ஒரு பகீர் :-( (இந்தியப் பயணத்தொடர். பகுதி 44)

அஹோபிலம், காஞ்சிபுரம் பயணங்களை முடிச்சுக்கிட்டு, சென்னை வந்து இதோ அஞ்சு நாளாச்சு. அடுத்த பயணம் எல்லாம் தமிழ்நாட்டுக்குள்ளேதான். நாளைக்குக் கிளம்பலாமுன்னு ஏற்பாடு. இன்றைக்கு இன்னும் சில நண்பர்களை சந்திக்கணும்.  திரும்பி வந்தபின் நேரம் கிடைக்குமான்னு தெரியலை.  எங்கேயும் ஹொட்டேல்ஸ் புக் பண்ணிக்காமக் கிளம்புவதால்   திரும்பிவர முன்னே பின்னே ஆகலாம்.

பதிவர் குடும்ப அண்ணனுக்கு ஃபோன் போட்டேன். வழக்கம்போல் அண்ணிதான்  ஃபோன் எடுத்தாங்க. குரலைக் கேட்டதும்  'எப்ப வந்தீங்க?'
"நேரில் வந்து சொல்றேன். இப்ப வரலாமா?  கேக்கணுமா என்ன? "
அடுத்த அரைமணியில் வீட்டுக்குள் போயாச்சு. சிஜின்னு நான் கூப்பிடும் சிவஞானம் ஜி என்ற மூத்தபதிவர்  இவர். தமிழ்மணப் பதிவர்களுக்கு  இவரைத் தெரிஞ்சுருக்கலாம். 2006  மே முதல் 2008 ஆகஸ்ட் வரை  பதிவுகள் எழுதிக்கிட்டு இருந்தார்..............    அப்புறம்? ஒரு அப்டேட்டும் கிடையாது. ஆனால் துளசிதளத்தை மட்டும்  எப்படியும் வாசிச்சுடுவார்!


வினையூக்கின்னு ஒரு பதிவர் இருந்தாரே .. நினைவிருக்கோ? (பேய்க் கதை ஸ்பெஷலிஸ்ட்!)  அவர்தான் இவருக்குப் பதிவெழுத ஒரு ஊக்கியாகச் செயல்பட்டார். அவர் வெளிநாடு போனதும் இவருக்கு ஊக்கம் குறைஞ்சுருச்சு போல....

எல்லாப் பயணங்களிலும் சிஜியைக் கண்டுக்காம வந்ததே கிடையாது.  அதே போலத்தான் இப்பவும். மொத்தக்குடும்பமும் நம்மை அப்படியே  இன்னொரு அங்கமா  ஏத்துக்கிட்டாங்கன்னுதான்  சொல்லணும்.

ஹாலில்  அண்ணனைக் காணோம் என்றதும்  எங்கேன்னு கேட்டதுக்கு வந்த பதில்   அதிர்ச்சியைக் கொடுத்துருச்சு.  உடம்பு சரி இல்லை. ஸ்ட்ரோக் வந்து   மருத்துவமனையில் சிகிச்சை  எடுத்துக்கிட்டு, அங்கே இருந்து வீடு திரும்பி இருக்கார்!

உள் அறைக்கு ஓடிப்போய்ப் பார்த்தேன். அண்ணனுக்கும் தங்கைக்கும்  கண்களில் கங்கை :-(  மனசே சரி இல்லாமல் போச்சு.  அண்ணியைப் பார்த்தால்தான் இன்னும்  மனசில் வலி.  'இப்போ எவ்வளவோ தேவலை'ன்னு சொன்னாங்க.
'அதெல்லாம் நல்லா ஆயிடுவீங்கண்ணே...   பிஸியோ சொல்றமாதிரி  சின்னச்சின்னப் பயிற்சிகளைச் செய்யணும். இதுலே மட்டும் சோம்பலே கூடாது. மன உறுதி முக்கியமா வேணும். என்னாலே நடக்க முடியும்.  நடந்து காட்டறேன்னு  உறுதி எடுத்துக்குங்க.  அடுத்த பயணத்தில் நான் வரும்போது   நீங்கள் நடக்க ஆரம்பிச்சு  வாக் போகத் தொடங்கி இருக்கணும். உங்களுக்காக எம்பெருமாளிடம் நல்லா வேண்டிக்கறேன்'னு  சொல்லிக்கிட்டு இருந்தாலும் மனதுக்குள் ஒரு பதைப்பு இருக்கத்தான் செஞ்சது.
பேரன் சின்னக் குழந்தைதானே....  இன்னும் அஞ்சு வயசு  ஆகலை. நர்ஸரி  பள்ளிக்கூடம்  போக ஆரம்பிச்சாச்சு. இப்ப யூகேஜியில். தாத்தாவைப் படம் வரைஞ்சுருக்கான்.   தாத்தாவின் கைவிரல்களைப் பாருங்கன்னு சொன்னாங்க அண்ணி. குழந்தைகளுக்கு என்ன ஒரு கவனம் பாருங்க. அவுங்க கண்ணில் இருந்து எந்த ஒரு விஷயமும் தப்பவே முடியாது!
பொடிபோடும் வழக்கமுள்ள தாத்தாவின் விரல்கள்! ஹாஹா!
ஒரு முக்கால் மணி போல அங்கே இருந்து பேரன், மருமகள், அண்ணியார், அண்ணாவோடு  பேசிக்கிட்டு இருந்தோம்.  மகன் வேலைக்குப் போயிருந்தார்.
கொஞ்சம் மனச்சுமையோடு அங்கிருந்து கிளம்பி நேரா நம்ம அடையார் அநந்தபதுமன் கோவில்.  அடையார் பாலம் தாண்டும்போது  பாலத்தின் ஆரம்பத்தில் இருக்கும் சிற்பத்தைக் கவனிச்சு இருக்கீங்களா?  எனக்கு அது நம்ம கோகியின் நினைவைக் கொண்டு வரும். இப்போதும்தான்...   ப்ச்

பெருமாளிடம், சிஜியின் உடல், நலம் பெறணும் என்ற வேண்டுகோளை வச்சேன். கோவிலில்  விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு.
இவ்வளவு தூரம் வந்துருக்கோம்.  அப்படியே சித்ராம்மாவைப் பார்த்துட்டுப் போயிடலாமேன்னு திருவான்மியூர்.  எனக்கு இன்னொரு அப்பா அம்மான்னு சொல்லி இருக்கேனில்லையா... அவுங்கதான். சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷின் பெற்றோர்.  ஃபோனில் வரலாமான்னு கேட்டதும்,  'இது உன் வீடு. எப்ப வேணா வரலாம். கிளம்பி வா'ன்னு பதில். அடுத்த அஞ்சாவது நிமிட்டில் வீட்டின் காலிங் பெல்லை அடிச்சேன்:-)

எங்கிருந்து வர்றே?  ஃபோன் செஞ்சு  அஞ்சு நிமிஷம் கூட ஆகலையேன்னாங்க  மாமி.  கோவிலில் இருந்து வர்றவழியில்தான் ஃபோன் செஞ்சேன்னு உண்மையைச் சொல்ல வேண்டியதாப் போச்சு:-)
நலம் விசாரிப்புகள்,  மற்ற வீட்டு விவகாரங்கள், பயணம் எல்லாம் கொஞ்சம் கலந்துகட்டிப் பேசிட்டு  திரும்பி நியூஸி போகுமுன் நேரம் இருந்தால்  வருவேன்னு  சொல்லிட்டுக் கிளம்பினோம்.  எப்ப வந்தாலும் சாப்பிடாமல் கிளம்பிப்போறேன்னு   எப்பவும்போல் ஒரு திட்டும் கிடைச்சது:-)

ராமகிருஷ்ணா மடம் சாலையில் மயிலை வந்து சேர்ந்து,  விஜயா ஸ்டோர்ஸை எட்டிப் பார்த்துட்டு, சரவணபவனில் பகல் சாப்பாடு ஆனதும்,  மயிலைத் தோழி வீட்டுக்கு  ஒரு விஸிட்.  தோழி  அமெரிக்காவில் இருக்காங்க.  வீட்டுக்கு முன்னால் இருந்த காம்பவுண்ட் சுவரைக் கொஞ்சம் உயர்த்திக் கட்டி இருக்காங்க இப்போ.  பயங்கர ட்ராஃபிக் இருக்கும் ரோடாக இருக்கு!
வீட்டையும் தோட்டத்தையும் பார்த்துக்கும்  பணியாளரிடம்  நலம் விசாரிச்சுட்டுக் கொஞ்சம் படங்களை க்ளிக்கினேன்.  தோழிக்கு அனுப்பி வைக்கணும். செடிகள் நல்லாதான் இருக்கு. என் மனசுதான் வல்லியம்மாவையும் சிங்கத்தையும் நினைச்சுக் கொஞ்சம் பேஜாராச்சு.

கடைசி ஸ்டாப்பிங் அசோக்நகர். சந்தியா பதிப்பகம். புத்தகத் திருவிழா முடிஞ்சு தேர் இப்போதைக்கு நிலைக்கு வந்திருக்கு:-)  தொலைபேசினேன். பதிப்பாளர் இருந்தார்.  சூடான காஃபியோடு வரவேற்பு.
இப்போ ஒரு புதிய மாற்றம் என்னன்னா...  முந்திபோல் ஆயிரம் ரெண்டாயிரமுன்னு  புத்தகங்களை அச்சடிச்சு ஸ்டாக் வைக்காமல், தேவைக்கு ஏற்ப முன்னூறு நானூறு கூட அச்சுப் போட்டுக்கலாமுன்னு  சொன்னது எனக்குப் பிடிச்சு இருந்துச்சு.

அடுத்து  வரப்போகும் நம்ம புத்தகத்துக்கான ஏற்பாடுகளை விசாரிச்சுட்டு, சென்னை வெள்ள பாதிப்புகளைப் பற்றிப் பேச்சு வந்தது.   வெள்ளத்தால் பல பதிப்பகங்களுக்கு கஷ்டமாப் போயிருச்சுன்னவர், இங்கேயும் பல புத்தகங்கள் நனைஞ்சு போய் பாழாகிருச்சுன்னு  சில புத்தகங்களைக் காமிச்சார்.  ப்ச்.....
கவலைப்பட்டுக்கிட்டு இருக்கும்போதே...  'உங்களுக்கு ஒரு செக் கொடுக்கணுமே'ன்னு  இன்பத்தேனைக் காதில் பாய்ச்சினார்.   பேங்க் போய் அவஸ்த்தைப் பட நேரமில்லை. எனக்கு  காசாக வேணுமுன்னதும், இப்போ பேங்க் போய் வர ஆளும் இல்லை. சனிக்கிழமை வேற என்றதால்  கேஷ் எடுத்து வையுங்க.  ஊர் திரும்புமுன் ஒரு நாள் வர்றேன்னு  கிளம்பி அறைக்கு வந்து சேர்ந்தோம்.

இன்றைக்கு ரொம்பவே சுத்தியாச்சு. நாளைக்கு ஒரு பயணம் கிளம்பறோம். ஒரு பத்து நாளைக்கான துணிமணிகளுடன் காலையில் புறப்படத் தயாராகுங்க. நாங்களும்  சின்ன பெட்டியில்  வேண்டியவைகளை எடுத்து வச்சுட்டு, பெரிய பெட்டிகளைக் கீழே லாக்கர் ரூமில்  வச்சுட்டுக்  கிளம்பணும்.

காலை  எட்டரைக்கெல்லாம்  புறப்பட்டா நல்லது. சாலையில் கூட்டம் சேருமுன்  தாம்பரத்தைத் தாண்டிடணும். சரியா?

தொடரும்.........  :-)


Monday, June 06, 2016

மொதல்லே ஜெ.மோ. ரெண்டாவது துள்ஸி !!!!! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 43)

அம்மா எப்பவாவது  போகும்போதே இந்தக் கூத்துன்னா, தினம் தினம் வெளியே போகாமல் இருப்பது எவ்ளோ நல்லது பாருங்க!   தில்லக்கேணி மீசைக்காரனைப் பார்த்துட்டு வரலாமுன்னு காலையில்  கிளம்பிப் போய்க்கிட்டு இருக்கோம். அதென்னவோ இந்தப் பக்கம் போ அந்தப் பக்கம் போன்னு நம்மை  சுத்திச் சுத்தி விரட்டி இப்போ சிடிசெண்டருக்குப் பக்கம் போய்க்கிட்டு இருக்கோம்.




வழியெல்லாம் உலகில் எத்தனை வித வாழ்த்துகளும், பட்டப்பெயர்களும் இருக்கோ அத்தனை பேனர்கள்!   எல்லாத்தையும் இவுங்களே எடுத்துக்கிட்டா, வேற கட்சிகள் என்ன பண்ணுமாம்? இதுக்குன்னு தனியா ஒரு பிரிவை ஏற்படுத்தி, புதிய  சொற்களை அகராதியில் உண்டாக்கணும் போல!  செம்மொழியில் கிடைக்காமலா போயிரும்?

சிடி சென்டரைப் பார்த்தவுடன், மகளுக்கு வாங்க வேண்டிய லிஸ்ட்டில்  இருப்பதில் எதாவது கிடைக்குமோன்னு  அங்கே போனோம். கடைகளைப்  பத்துமணிக்குத் தான் திறப்பாங்களாம். அப்புறம் பார்த்துக்கலாமுன்னு  நேரா  பார்த்தசாரதிதான்.
முதலில் முன்மண்டபத்தில் சீதையைத் தேடினேன்.  விஷமிகள், செய்கையைப் பார்னு  ஆஞ்சி அழுதது :-(  நம்ம சனம் ஏன் இப்படிக் கேவலமா நடந்துக்குதுன்னு எரிச்சல்தான்.

தாயாரும் பெருமாளும் உக்கார்ந்திருக்கும் வாகனம் என்னவா இருக்கும்?

உள்ளே ஒரு கல்யாணம். மணமக்களை வாழ்த்திட்டுக் கொஞ்சம் க்ளிக்ஸ்.
இன்றைக்குக் கூட்டம் அவ்வளவா இல்லை...   தர்ம தரிசன வரிசை காலி! உண்மையா இதன் வழியாப் போறதுதான் எனக்குப் பிடிக்கும். நம்ம ராமரையும், ரங்கனையும்  சேவித்தபடியே  முட்டைக் கண்ணனை தரிசிக்கப் போகலாம்.  நம்முடைய  நேரப் பிரச்சனையால் சீக்ர தரிசனம் போனால்....   நேரா  மூலவர்தான் :-(

இப்பெல்லாம் பளீர் விளக்கு போட்டுருப்பதால்  தரிசனம் ரொம்ப இனிமையா இருக்கு. கொஞ்சநேரம் நின்னு ரசிச்சு, மன உருகி,  நாலு வார்த்தை பேசிக்கவும் முடிஞ்சது.  மனைவி, புள்ளை, பேரன்னு குடும்பத்தோடு இருப்பதால் அவரும் மகிழ்ச்சியாத்தான் இருக்கார்.  கையில் சக்கரம்கூடக் கிடையாது!

மூலவர் தரிசனத்துக்குப் பிறகு,  வழக்கம்போல்  தாயார், கஜேந்த்ர வரதர், யோகநரசிம்ஹர் னு  போய் கும்பிட்டதும், நேரா  நரசிம்ஹருக்கு எதிரில் இருக்கும்  முற்றத்தில்  கொடிமரத்தையும்,  பெரிய திருவடியையும் நமஸ்கரிச்சுட்டு, விடுவிடுன்னு  கோபுர வாசலுக்கு வெளியில்  நாலடி எடுத்து வச்சு  நம்ம பாரதியின் வீட்டையும் நின்ன இடத்தில் இருந்தே பார்த்து ஒரு கும்பிடும் போட்டுட்டுத் திரும்ப கோவிலுக்குள் வந்து நம்ம ஆண்டாளம்மாவுக்குத் தூமணி பாடிட்டுக் கடைசியாப் போய் நின்னது பிரஸாதக் கடையில்தான்:-)  இன்றைக்கு ஒரு சேஞ்சா இருக்கட்டுமேன்னு  அதிரசமும், லட்டும் வாங்கினேன். மூணு பேருக்கு மூணு என்ற கணக்கு :-)

திரும்பி பீச்  ரோடில்  வர்றோம். அப்ப நம்மவர் சொல்றார், அவருடைய நண்பர்(!) வீட்டுக்கு ஒரு நடை போயிட்டு வரலாமான்னு...  'அய்க்கோட்டே... எனிக்கு ஒரு விரோதமும் இல்லையாக்கும்'னு ராதாகிருஷ்ணன் சாலையில் திரும்பினோம்.

தொழிலதிபர்.  மகனும் க்ரிக்கெட்டில் ஸ்ரீலங்கா டீமில் (நம்ம ஐபிஎல் போல எதோ ஒன்னு) விளையாடறார். மகள் சட்டக் கல்லூரி மாணவி.  கலையோடு சம்பந்தப்பட்ட ஒரு  இடத்தில்  இருக்காங்க. நம்ம நாட்டியப் பேரொளி பத்மினியின் 'வீடாக இருந்த  இடத்தில்' இப்போ இவுங்க.  இவரை எனக்கும் தெரியுமென்றாலும், வீட்டுக்குப் போவதும், குடும்பத்தினரைச் சந்திப்பதும் இதுதான் முதல்முறை.
ஒருத்தரைப் பார்க்கப் போகும்போது ஒன்னும் வாங்கிக்கலையேன்னு  தோணுச்சு. கையில் பெருமாள் பிரஸாதம்தான் இருக்கே!  அதுக்கு மிஞ்சியா வேறொன்னு?

ஒரு அரைமணி நேரம் போதுமுன்னு நினைச்சது, பகல் சாப்பாடு வரை நீண்டு போயிருச்சு.

அங்கிருந்து  கிளம்பி இன்னொரு  பிரபல எழுத்தாளருடன் சந்திப்பு. நம்ம ஏகாம்பரி வீடுதான்!

செல்லில் சேதி அனுப்பியவுடன், முதலில் இனியை உள்ளே கொண்டுபோய்  விட்டுட்டு, அறைக் கதவைச் சாத்தி வச்சாங்க.  ' பூ 'மட்டும் வாங்கன்னார், வாலை ஆட்டியபடி:-)
போனபயணத்தில் விட்ட பேச்சை, சரியா அதே பாய்ண்ட்டில் இருந்து தொடர்ந்தோம்.  அப்பதான் ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தாங்க. ஏகாம்பரியின் தாய் எழுதியது. முதலில் இப்படி கையால்  கடிதம் எழுதும் பழக்கமே  மறைஞ்சுபோன காலக் கட்டத்தில் இருக்கும் நமக்கு,  இப்படி எழுதுன கடிதத்தைப் பார்ப்பதே ஒரு  புண்ணியம்!  அதுவும்  வாசகர் கடிதம் என்றால்..........  கேக்கவா வேணும்!

கடிதத்தின் தேதியைப் பாருங்கன்னாங்க ஏகாம்பரி.  13- 9-2015 8.35 P.M
ஆஹா.... இன்றைக்கு என்ன தேதி?  29 - 1- 2016.

இவுங்களோட முதல் கடிதம் நம்ம ஜெயமோகனுக்கு!  ரெண்டாவது அதிர்ஷ்டசாலி  இந்தத் துள்சி!

இப்படி  ஒரு பொக்கிஷம் கிடைச்சதும்,   மனம் அப்படியே நெகிழ்ந்து போயிருச்சு என்பது சத்தியமான உண்மை!

இப்பெல்லாம்தான் நாம்  வலையில்  எதை வாசிச்சாலும், (அதுவும் தெரிஞ்சவங்க எழுத்துன்னால்தான்!)  மனசில்  படுவதை  உடனே ஒரு சில சொற்களில் பின்னூட்டமா போட்டுட்டுப் போய்க்கிட்டே  இருக்கோம்.  நேரம் எடுத்து  விவரமா, விதரணையா  எழுத 'நேரம் எங்கே இருக்கு'ன்னு  இருந்துடறோமில்லையா? (இவுங்க  வலை வாசிப்பாளர் இல்லை என்பது கூடுதல் தகவல்!)
இவுங்களுடைய இன்னொரு பொழுதுபோக்கு...  கைப்பைகள் தயாரிப்பது. முழுக்க முழுக்க  ஹேண்ட்மேட்.  விற்பனைக்கா?  ஊஹூம்....  நட்புகள் சுற்றங்கள் விருந்தினர் என்று எல்லோருக்கும் கொடுக்கும்  அன்பு மனம்!
ஒரு நாலைஞ்சு  கைப்பைகளைக் கொண்டு வந்து  காமிச்சு எது பிடிக்குமோ அதை எடுத்துக்கச் சொன்னாங்க.  கரும்பு தின்னக் கூலியா?  மகளுக்கும் ஒன்னு  எடுத்துக்குங்கன்னதும் ரெட்டை மகிழ்ச்சி!  கிடைத்த பொக்கிஷத்தை எனக்கான கைப்பையில்  வச்சேன் :-)

அப்புறம்  மாடித்தோட்டத்துக்குப் போனோம். அங்கேயும் நான் இருக்கேனே :-) போனமுறை பார்த்தபோது  தலைக்கு மேலே வலை இல்லை. இப்போ பச்சை வலை அட்டகாசமா இருக்கு!   ரியல் மாடித்தோட்ட லுக் வந்துருச்சு :-) வீட்டுத்தோட்டம் என்பது  மனசுக்கு எவ்ளோ மகிழ்ச்சின்னு  அனுபவிச்சுப் பார்த்தால்தான் தெரியும்!


ஒரு பச்சை மிளகாய், ஒரு இணுக்குக் கருவேப்பிலை, ஒரு தக்காளின்னு  சமையலுக்குத் தேவைப்படும் சமயம் டக்னு பறிச்சுக்கிட்டு வரும்போது  ஒரு திருப்தி வரத்தான் செய்யுது எனக்கும்!  என்ன ஒன்னு....  என் தோட்டத்தில் 'நான்' இல்லை ! குளிர் கொன்னு போட்டுருது :-(
தோட்டம் போட இடம் இல்லைன்னாக்  கூட ரெண்டு மூணு தொட்டிகளில் செடிகளை  வளர்க்கலாம். கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும்! பால்கனி இல்லைன்னாலும், அடுக்களை ஜன்னல் கட்டையில் வச்சால் ஆச்சு! ஒன்னும் சரியா இல்லையா? நோ ஒர்ரீஸ்...  ஒரு பாட்டில் தண்ணியிலே ஒரு 'டெவில்ஸ் ஐவி'யைப் போட்டு வையுங்க! இதுதான் நம்மூர் மணி ப்ளான்ட் :-)
ஏகாம்பரி கையால் அருமையான காஃபி குடிச்சு, இன்னும் கொஞ்சம் பேச்சுன்னு  இப்போதைக்கு  முடிச்சதும் கிளம்பி  அறைக்கு வந்து சேர்ந்தோம். கொஞ்ச நேர ஓய்வு.

பொழுதன்னிக்கும் திறந்து மூடறதாலோ என்னவோ என் கைப்பையின் ஸிப்  மண்டையைப் போட்டுருச்சு.  போகட்டும் வேற வாங்கிக்கலாமுன்னு நம்மவர் தாராளமனசோடு சொல்றார். நானோ கருமி!  போனமுறை சென்னையில் வாங்குனதுதான் இது.  இப்பதான் ரெண்டாவது முறையாப் பயன்படுத்தறேன்.  எதுக்கும் இந்த ஸிப்பை ரிப்பேர் செஞ்சுக்கமுடியுமான்னு பார்க்கலாமேன்னு  பாண்டிபஸார் கிளம்பிப் போனோம்.

சென்னை கார்ப்பரேஷன் கட்டி விட்டுருக்கும்  வணிக வளாகத்தில் (நம்ம நாயுடு ஹாலுக்கு நேர் எதிரே  இருக்கும் மார்க்கெட் கட்டடத்தில்  )  செஞ்சுதருவாங்கன்னு  ஒரு கடையில் கிடைச்ச தகவலின் படிப் போனால் மாடியில்  ரெண்டுமூணு  பெட்டி, பை ரிப்பேர் கடைகள் இருந்துச்சு.  பத்தே நிமிசம்!  வேலை முடிஞ்சது. முப்பதே  ரூபாய்!  பெரியவருக்கு நன்றி சொன்னேன். கவனத்தில் வச்சுக்கவேண்டிய  இடம் !
இதுவரை இந்த வளாகத்துக்குள் வந்ததே இல்லை.....   மற்ற கடைகளில் ஒரு சுத்து.  சில கடைகள் நல்லாவே இருக்கு!  பசங்க அலங்காரத்துக்கு நீள் கூந்தல் ஆப்ட்டது! நம்ம ஜன்னுக்கு ஜடை போட்டுப் பார்க்கணும், ஒருநாள் :-)
ஆறடிக்கூந்தல் அத்தனையும் கடைச்சரக்கு:-)


பூக்கடைகளைத் தாண்டி வரும் சமயம், நகைக் கடையில்  ஜொலிக்கும்  க்ரீடங்களும், ஹாரங்களுமா ஒரு சின்ன பர்ச்சேஸ்.  இவ்வளவு தூரம் வந்துட்டு, வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் எதாவது ஒன்னு வாங்கிப்போகணுமா இல்லையா?


அப்படியே  குழந்தைகளுக்கான ரெடிமேட் உடை கடையில்  நம்ம ஜன்னுவுக்கு ஒரு பாவாடை சட்டை. நம்ம க்ருஷ்ணாவுக்குத்தான் எப்பவுமே  கிடைக்காது. குழந்தைக்கு  நான் தைச்சுப் போட்டுருவேன்.

சாமி விளக்கு (மின்சாரத்தில் இயங்குவது) தேடி ரத்னாவுக்குப் போனால்  டிஃபன் கேரியர்  வேணுமான்னார் நம்மவர் :-)  இவ்வளவு சமைக்க என்னால் ஆகாது. ஆள் அவுட்!  முதல்முறையா  வாயைத் திறந்து வேணாமுன்னு  சொன்னேன்:-)
அப்புறம் இன்னொரு கடையில் கிடைச்சது. அதிராம்பட்டினமாம் ஊரு! என்னை நினைவில் வச்சுக்குங்கம்மான்னார்.  அப்படியே  நினைக்கவும் செஞ்சேன்,  அடுத்த சில நாட்களில்!
எதிர்சாரியில் இருக்கும்  கீதா கஃபேக்குள் நுழைஞ்சு ராச்சாப்பாடு முடிஞ்சது! எனக்கொரு தோசை.  இவருக்கொரு ஊத்தப்பம்.  ரொம்பப் பழைய வியாபாரம். இதுவரை அஞ்சு முதலாளிகள் இருந்துருக்காங்க!   அஞ்சு தலைமுறைகளோ?



கல்லாவில் இருக்கும் பெரியவரை எனக்கு  2002 வில் இருந்து  பார்க்கிறேன். அப்போ ஸில்வர்பார்க் அபார்ட்மெண்டில் ஜாகை.  காலையில் முதல் வேலையா  வெங்கடநாராயணா ரோடில், சாக்ஷாத் நாராயணனைக் கும்பிட்ட கையோடு காஃபி குடிக்க  இங்கே வர்ற பழக்கம் வச்சுருந்தேன். புது டிகாஷனும் புதுப்பாலுமா சூப்பரா இருக்கும்!

சரி.  ஒருநாளைப்போல ஒருநாள் இருக்கா? இன்றைய தினம் முடிஞ்சது.  நாளைக்குப் பார்க்கலாம்!

தொடரும்.......  :-)