களைத்த உடலைக் கணக்கில் வைக்காமல் உடம்புக்குள் இருக்கும் கடிகாரம் எழுப்பி விட்டுருச்சு. மணி என்னன்னு கழட்டிவச்சக் கை கடிகாரத்தைப் பார்த்தால் 11ன்னு சொல்லுது! நெசமாவான்னு பார்த்தால் நியூஸி டைம் மாத்தாமல் அப்படியே விட்டு வச்சுருந்துருக்கேன். அசல் மணி மூணரை.
மகளுக்கு வாட்ஸப்பில் 'எப்படி இருக்கே? நாங்க லோட்டஸுக்கு வந்தச்சு'ன்னு சேதி அனுப்பினால்.... 'அர்த்தராத்ரியில் என்ன செய்யறே?' ன்னு பதில் வருது:-)
கொஞ்சநேரம் வலை மேய்ஞ்சு ஃபேஸ்புக், மெயில்ஸ் எல்லாம் பார்த்துப் பொழுது போக்கிட்டு, பெட்டிகளில் இருந்து, பரிசளிப்பாகக் கொண்டுவந்தவைகளைத் தனியா எடுத்து வச்சோம். எங்கே போறோமோ.... அங்கே இருப்பவர்களுக்காக ஒன்னு என்ற வகையில் கொண்டு போனவைகள். அதில் முக்கால்வாசி சாக்லேட்டுகள்தான். வேறென்ன கிடக்கு இங்கே? கடையில் போய்த் தேடினாலும் கிஃப்ட் ஐட்டம் என்றால் ஃபோட்டோ ஃப்ரேம்கள்தான் அதிகம்:-( உண்மையைச் சொன்னால்... இப்பெல்லாம் எதுவும் கொண்டுபோகவே வேணாம். அங்கேயே உள்ளூர்க் கடைகளில் எல்லாமே கிடைக்குதே!
நம்மவர் டிவி ரிமோட்டை வச்சுக்கிட்டுச் சும்மா சானல்ஸ் மாத்திக்கிட்டு இருந்தாரா.... அப்போ ஜெயா டிவியின் தீம் ஸாங் வந்துச்சு. 'செந்தமிழ்நாடென்னும் போதிலே.... ' எனக்கு ரொம்பவும் பிடிச்ச பாட்டும், அதுக்குப் பொருத்தமான காட்சியுமா அட்டகாசமா இருக்கும்! அனுபவிச்சுப் பார்த்தேன். இங்கே யூட்யூபில் பார்ப்பதைவிட தெள்ளத்தெளிவா உள்ளூர் டிவியில் தெரிஞ்சது!!!! அதுக்குப்பிறகு புள்ளையார், சுப்ரபாதமுன்னு போய்க்கிட்டு இருந்ததும் அருமை. ஆனா அத்தோடு நிறுத்திக்கணும். அதுக்குப்பின்னால் வருபவை எல்லாம்............. ப்ச் :-( இன்றுன்னு பஞ்சாங்கம் சொல்லும் குரலைக் கேட்டாலே பத்திக்கிட்டு வரும்.
குளிச்சுத் தயாராகி ப்ரேக்ஃபாஸ்ட்டுக்குப் போனோம். லோட்டஸ் தரைத்தளத்தில் ரெஸ்ட்டாரண்ட் இருக்கு. முந்தி சென்னை24 என்ற பெயரில் இருந்ததை இப்போ க்ரீன்வேஸ் என்று மாத்தி இருக்காங்க. புது நிர்வாகம் போல! பக்கவாட்டில் இருந்த வாசலை அடைச்சுட்டு தெருப் பார்த்தமாதிரி வாசல் அமைச்சு, முன்னால் தோட்டத்தில் ஒரு சிமெண்ட் பெஞ்சு வேற! பார்க்கில் உக்காரலாம்:-)
உள்ளே எப்பவும் போல் தான் பஃபே ப்ரேக்ஃபாஸ்ட் என்றாலும் அதில் புதுசா ஒரு இனிப்பு வேற கூடுதலா இருக்கு! இட்லி, ரெண்டுவகை சட்னி, சாம்பார், உப்புமா இல்லைன்னா பொங்கல், வடைன்னு நமக்கும், சப்பாத்தி/ பரோட்டா அதுக்குண்டான ஸப்ஜி, கொஞ்சம் வேகவச்ச காய்கறிகள்னு நார்த்தீஸ்களுக்கும், ப்ரெட், ஜாம் , பட்டர், மஃப்பின், கப் கேக், க்ராய்ஸன்ட், கார்ன்ஃப்ளேக்ஸ்னு ஒரு பக்கமுமா யார் யாருக்கு எது வேணுமோ அப்படி எடுத்துக்கலாம்.கூடவே பப்பாளி, தர்பூசனி பழத்துண்டுகள், எதாவது ஒரு பழரசம், காஃபி, டீன்னு இருக்கும். தோசை வேணுமுன்னால், கேட்டால் செஞ்சு தர்றாங்க.
என்னதான் கொட்டிக்கிடந்தாலும் எனக்கு வேண்டியது இதுதான்:-)
இப்பெல்லாம் பல இடங்களிலும் ப்ரேக்ஃபாஸ்ட் இன்க்ளூடட் என்பதால் காலையில் உணவைத்தேடி வேறெங்கேயும் ஓட வேணாம் என்பது ஒரு ஆறுதல். பணியாளர்கள் எல்லாம் வழக்கம்போல் நார்த்தீஸ்களே! அதே போல தங்கி இருக்கும் வடக்கர்களும் நம்ம இட்லி வடை சாம்பாருக்குத்தான் முன்னுரிமை தர்றாங்க:-) ஸப்ஜியை யாருமே சட்டை செய்யலை!
ஒன்பதுமணிக்குக் கிளம்பி நேராப்போனது நம்ம அடையார் அநந்தபதுமனைத் தேடித்தான்! பெருமாள் அப்படிக்கப்படியேதான் கிடக்கிறார். யாரும் ஜருகு, மாறிக்கோ என்று சொல்லலை:-) நிம்மதியா கண்ணும் மனமும் நிறைய தரிசித்தேன். பிரகாரம் சுற்றிவந்து அனைத்து தெய்வங்களையும் நமஸ்கரிச்சு, திரும்பவும் மூலவர் முன்புறம் போட்டு வச்சுருக்கும் மரப்படிகளில் ஏறி உக்கார்ந்து இன்னும் ரசிச்சுப் பார்த்து, அவனுடன் பேசி முடிக்கக் கொஞ்சநேரம் ஆனது உண்மை.
கோவிலில் கட்டிடவேலை நடக்குது. அடுத்துள்ள தர்மபரிபாலன சபா கட்டடத்தையும் சேர்த்து நவக்ரஹ சந்நிதிக்கு மேலே மேல்தளம் கட்டிக்கிட்டு இருக்காங்க. கொடிமரத்துக்கு மேல் போட்டுருந்த கூரையை எடுத்துட்டதால் கோவிலைப் பார்க்கும்போதே ஒரே வெளிச்சமா, 'ஹோ' ன்னு இருக்கு!
பயணங்களில் முக்கியமா சென்னைப் பயணங்களில், சாமிக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவம் ஆசாமிகளுக்கும் கொடுப்பதே வழக்கம். சுற்றமும் நண்பர்களும் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?
கோவில் இருக்கும் அடையாரிலேயே நம் தோழிகள் சிலர் இருக்காங்க. இன்றைக்குப் போது விடியும்போதே ஃபோனில் கூப்பிட்ட தோழி, 'மத்யான சாப்பாட்டுக்கு மரியாதையா வந்து சேர்'னு சொல்லி இருந்தாங்க. அங்கேதான் இப்போ முதலில் போறோம், மதிய சாப்பாடு வேணாமுன்னு சொல்றதுக்கு :-)
தோழி வீட்டில் ஒரு இன்ப அதிர்ச்சி! எனக்காக ரெங்கன் காத்துக்கிட்டு இருந்துருக்கார் அங்கே! பார்த்த முதல் பார்வையிலேயே வாயடைஞ்சு நின்னேன் என்பதே வாஸ்தவம்!
இக்ஷ்வாகு குலதனமா ரெங்கவிமானம் , விபீஷணனுக்குக் கிடைச்சப்போ அவனுக்கு எப்படி இருந்துருக்கும் என்பது இப்ப எனக்குக் கொஞ்சூண்டு புரிஞ்சது :-)
என்ன கிடைச்சு என்ன? அவனால் ஒரு கடல் தாண்டிக் கொண்டுபோக முடிஞ்சதோ? இப்பப் பாருங்க.... ரெங்கனை, கடல்கள் தாண்டி நியூஸிக்குக் கொண்டுவந்து 'ப்ரதிஷ்டை' பண்ணியாச்:-)
நம்ம வல்லியம்மா இருக்காங்க பாருங்க, அவுங்க என்வசம் சேர்க்கச் சொல்லி ரெங்கனை அங்கே கொண்டுவந்து விட்டுட்டுப் போயிருக்காங்க. சம்பவம் நடந்து ஒரு மூணுமாசம் ஆகி இருக்கும். எனக்கு இது ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும் என்று சொல்லிப்போனதால் யாருமே மூச் விடலை!
தானா வந்த பெருமாள்னு உடனே அவனுக்குப் பெயர் வச்சாச்:-) நியூஸிக்குப் போகணுமுன்னு அவனே விருப்பப்பட்டு வர்றானே!
அப்ப மனசெல்லாம் நிறைஞ்சு போயிருந்துச்சு. ஒன்னும் சொல்லத் தோணலை. பத்திரமா பொதிஞ்சு கொண்டு போகணும் என்றதுக்குத் தோழியும் அவர் கணவரும், இங்கே ஒரு இடமிருக்கு. நல்லா பேக் பண்ணித் தருவாங்க என்றதால் அதுவரை அங்கேயே இருக்கட்டுமுன்னு சொல்லிட்டு நல்ல காஃபியா ஒன்னு குடிச்சுட்டுக் கிளம்பினோம்.
வல்லியம்மாவுக்கு நம் அனைவரின் சார்பில் நன்றி சொல்லிக்கறேன்.
தொடரும்......:-)