Wednesday, January 06, 2016

எங்கூர் தோட்டத்தின் பெயர் ஹேக்ளி பார்க்.

எப்படியும் வருசத்துக்கு ரெண்டு முறையாவது  நம்மூர் தோட்டத்துக்குப் போய் வர்றது வழக்கம் என்றாலும்,  போனவருசம் இது தப்பிருச்சு. எங்கூர் கோடை காலம்  டிசம்பர் முதல் ஃபிப்ரவரி வரை. அதுக்கு முன்னால் மூணுமாசம் செப்டம்பர் முதல் நவம்பர் வரை வசந்த காலம்.  அப்போதான் டாஃபடில் பூக்கள் பூத்துக் குலுங்கும்.  வசந்த கால ஆரம்பத்துலே இதுதான் முதலில் பூக்க ஆரம்பிக்கும்.

இந்த வசந்தமும், இப்போ நடந்து(!)கிட்டு இருக்கும் கோடையும் ஒன்னும் சொல்றாப்லெ இல்லே. ஒரே மழையும் குளிருமா........  ப்ச்.


இந்தத் தோட்டத்துக்கு  மக்கள் கூட்டம் வரும் முக்கியமான நாள் க்றிஸ்மஸ் தினம்தான். அன்றைக்குக் கடைகள் எல்லாம் மூடிக்கிடக்கும்.  ஊர் மக்கள்ஸ் பாதிப்பேர் சாவகாசமா க்றிஸ்மஸ் லஞ்ச் முடிச்சுட்டு தோட்டத்துக்கும்,  மிச்சம் மீதி இருக்கும் சனம் வெய்யில் நல்லா இருந்தால் பீச்சுக்கும் போயிருவாங்க. நாமும் தோட்டம் போகும் வகை என்றாலும், இந்த க்றிஸ்மஸ் தினம்,  பகல் ஒரு  ஒன்றுகூடலுக்குப் போக வேண்டியதாப் போச்சு.

 இண்டியன் கல்ச்சுரல் க்ரூப் நடத்துச்சு.  அங்கே போய் நான்  யெல்லோ டாக்ஸி ஓட்டிட்டு வந்தேன்னு சொன்னால் நம்புவீங்களா?

தவறவிட்ட தோட்ட உலாவை புதுவருசப் பகலுக்கு வச்சுக்கிட்டோம். புதுக் கேமெரா ஒன்னு புத்தாண்டுப் பரிசாகக் கிடைச்சது.  தங்க்ஸ் படம் எடுக்கும் அழகைப் பார்த்து மயங்கி ரங்ஸ் கொடுத்தது :-) சோதனை செஞ்சு பார்க்கணும். அவுட் டோர் படப்பிடிப்பு  எப்படி வருதோ?

லஞ்ச் முடிச்சு ஒரு  சின்னத் தூக்கம் முடிச்சுக் கிளம்பும்போதே  மணி நாலரை. இது பிரச்சனை இல்லை. இப்போ சம்மர் என்பதால் இரவு பத்துவரை வெளிச்சம்(கவனிங்க. சூரியன் இல்லை, வெறும் வெளிச்சம் ) இருக்கும்.  சூரியனைத்தான் தேடிக்கிட்டு இருக்கோம் என்பது உண்மை. நல்லவேளையா மழை இல்லை.




எப்பவும் கண்ணைப் பிடிச்சு நிறுத்தி அண்ணாந்து  பார்க்க வைக்கும் பெரிய பெரிய மரங்கள்!  தோட்டத்தைச் சுத்தி  அகழி மாதிரி ஓடும் ஏவான் நதியில் படகோட்டிக்கிட்டு இருந்தாங்க சிலர். க்ளிக்:-)




தோட்டத்துக்குள்ளே போய்க்  கொஞ்சதூரம் நடக்கும்போதே ஒரு கல்யாணப் பார்ட்டி. ஃபோட்டோ செஷனுக்கு வந்துருக்காங்க. கூட்டத்தில் சட்னு  கவனத்தை இழுத்தது ஒரு புடவை. அநேகமா எதாவது சௌத் ஆஃப்ரிகனாக இருக்குமுன்னு சொன்ன கோபால் என்னை அங்கே போக விடலை.  ஐயோ... என்ன புடவைன்னு தெரியலையேப்பா..........




சின்னதா ஒரு ட்ரோனை வச்சுக்கிட்டு மேலே பறக்கவிட்டுப் படம் எடுத்துக்கிட்டு இருந்தாங்க. ஃபொட்டொக்ராஃபர் சொல்படிக்கு  மணமகளின் ஆட்டம்.  இருந்த இடத்தில் இருந்தே சில க்ளிக்ஸ். அதான் 30 X  Zoom இருக்கே   இந்த   Canon  Powershot SX710 HS மாடலில்.  புடவை ஒரு இடத்துலே நின்னுட்டாலும்...........  கூட்டத்தில் காணாமப் போயிட்டாங்க:-( நல்ல கூட்டம்தான் கிட்டத்தட்ட 15 பேர்!)


இன்னொரு பகுதியில் ஒரு வெதர் ஸ்டேஷன் இருக்கும். இருந்துச்சு. பக்கத்தில் இருக்கும் அறையை  இந்த 28 வருசத்தில் இன்னைக்குத்தான் போய் எட்டிப் பார்த்தோம்.  நேஷனல் க்ராவிட்டி  பேஸ் ஸ்டேஷன்னு பெயராம்!  என்னதான் செய்யறாங்கன்னு தெரியலையேன்னு  தேடினதும் ஆப்ட்ட விவரம் க்ரேட்!


ஜன்னலூடாக  எட்டிப்பார்த்து க்ளிக்கினதில்  க்றைஸ்ட்சர்ச் மேக்னெடிக் அப்ஸர்வேட்டரி 1901- 1969 னு கெமெராக் கண்ணில் பட்டுச்சு. 1970 இல் இருந்து  வேற இடம் பார்த்துப் போயிட்டாங்களா என்ன?  பூட்டுன கதவைப் பார்த்துட்டு அப்படியே  மழை அளக்கும் இடத்தையும் க்ளிக்கிட்டு வேற பக்கம் நடந்தோம்.

GNS.
New Zealand Crown Research Institute. It focuses on geology, geophysics, and nuclear science.  New Zealand's leading provider of Earth, geoscience and isotope research and consultancy services.

நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுநாமி, இதைப்போன்ற பேரிடர்களை  அவை வருமுன்பே கவனிச்சு எச்சரிக்கை விடுவாங்களாம்! இதற்கான ஆராய்ச்சி மையமாம்!  என்னென்னவோ பெரிய பெரிய விளக்கங்கள் சொன்னாலும் லேசாப் புரிஞ்சது போலவும், ஒன்னுமே புரியாததைப்போலவும்தான் எனக்குப் பட்டது.  எதோ பெரிய இடத்துச் சமாச்சாரம். இயற்கையை விட பெருசு வேற ஒன்னு இருக்கா? அதுதானே சாமி! இல்லையோ?
 எதிர்பக்கத்தில் நியூஸி க்றிஸ்மஸ் மரமான  பொஹுட்டுக்காவா!  இன்னும் முழுசாப் பூக்கலை. இன்னொருபக்கம் குழந்தைகளுக்கான  விளையாட்டுக் குளம். நீச்சல் அடிக்குமளவு ஆழமெல்லாம் கிடையாது. ஒரு அடி ஆழம் இருந்தால் அதிகம்:-)சறுக்குமரம் அது இதுன்னு அந்தப்பகுதி முழுசும் பச்சப்புள்ளைங்க ஏரியா!



இன்னும் பத்து மீட்டர் நடந்தா இன்னொரு குளம். இது இயற்கை. வாத்துகளுக்கானது. இதுக்குள் இருக்கும் மரங்களில் Shag பறவைகளின் கூடுகள் ஏராளம்.  கரையெல்லாம் கடல்புறாக்கள். எனக்கு ரொம்பவே பிடிச்ச இடம் இது.  அமைதியை இங்கே கண்டதாக  சிலர் சொல்லிட்டுப் போயிருக்காங்க. நமக்குதான் அமைதியே கிடையாதே. மனக்கூச்சல் அதிகமில்லையோ?


பதினெட்டு  வருசம் இந்தத் தோட்டத்தில் வேலை செய்தவருக்கு  ஒரு நினைவுச்சின்னமா   மக்னோலியா மரம் நட்டு வச்சு, அவர்  பெயரையும் பொறித்து வச்சுருக்காங்க. நன்றி மறவாமை!  இவர்தான்  இங்கே அமைதியைக் கண்டவர்!

சிட்டுக்குருவியார்  சாப்பாடு தேடிப் புழுவைக் கண்டடைந்தார்!


நிலநடுக்கத்தில் முறிந்த மரம் இப்போ நமக்கு  உக்காரும் ஆசனமா இருக்கு. ரெண்டு சின்னப்பூக்கள் என்னோடு!

இங்கே இன்னொரு விருப்பமான இடம் கன்ஸர்வேட்டரிகள். ஒன்னு சீஸனல் மலர்கள். இன்னொன்னுலே  வாழை, காஃபி,  சொர்க்கப்பறவைகள் செடிகள்  இப்படி எல்லாமே   ட்ராப்பிக்கல் சமாச்சாரங்கள். இதில் ஒரு பகுதியாத்தான் கள்ளிகள். நிலநடுக்கம் காரணம் பழுதான பகுதி என்பதால்  கடந்த அஞ்சு வருசமா மூடிக்கிடக்கு :-(  ரெண்டும்   திறந்திருப்பது காலை 10 முதல் 4 மணி வரை மட்டுமே!  இப்போ  மணி  அஞ்சேகால். இன்றைக்கு உள்ளே போகக்  கொடுத்து வைக்கலை. அதுக்காக விட்டுறமுடியுமா? கண்ணாடி வழியாக க்ளிக்ஸ் :-)

இதுக்கு  ரொம்பப் பக்கத்துலேதான் புதுக் கட்டிடமா ஒரு விஸிட்டர்ஸ் சென்ட்டர். விசேஷமே இங்கே இருக்கும் கேஃபேதான்.  அங்கே போய் ஆளுக்கொரு காஃபி.

மெள்ள நடந்து  அந்தாண்டை போனப்பதான்  செண்டுப்பூக்களைப் பார்த்தேன். இவ்ளோ செடிகளை இங்கே பார்த்த நினைவே இல்லை. Hydrangea!   ஹைட்ராஞ்சியான்னு பெயர்.  கிழக்கு ஆசியாவில் அதிகமாம்.  இமயமலையில் கூட இருக்காம்.  ஆஹா.... குளிருக்கு அஞ்சாத வகை!




பலவித நிறங்களில் இருக்கும் செண்டுகள் எல்லாம்  மண்ணுக்கேத்த மாதிரி பூக்குமாம்! நம்ம வீட்டில் ஒரு சின்னச்செடி வச்சு நாலு வருசமாகுது. ரெண்டு வருசம் கழிச்சு மொட்டுகள் வந்தப்ப என்ன நிறமா இருக்குமோன்னு ஒரு  எதிர்பார்ப்பு.  ஆனால் பூத்தது வெள்ளை. அப்ப வீட்டுக்கு வந்த தோழி,  வெவ்வேற உரம் போட்டால்தான் கலர்ஸ் வருமுன்னு சொல்லிட்டுப் போனாங்க.



அப்புறம்தான் தெரிஞ்சது, மண்ணில் இருக்கும் அமிலத்தன்மைக்கு ஏற்ப நிறங்கள் உருவாகுமுன்னு.  ஆரம்பத்தில் எல்லாம் வெள்ளையாத்தான்  வருமாம். இன்னொரு வருசக் காத்திருப்பில் நம்ம வீட்டுச் செடி  லேசான பிங்க் நிறத்தைக் கோடிகாட்டி இருக்கு.





இந்தக் கணக்கில் பார்த்தால் இங்கே இந்தத் தோட்டத்தில் இருக்கும் இத்தனை நிறங்களுக்கு  யார் என்ன செஞ்சாங்கன்னு தெரியலையே!  இந்தத் தோட்டம் நம்ம நகரசபையின் பொறுப்பிலும் பராமரிப்பிலும் இருக்கு என்பதால்  விவரம் தெரிஞ்ச தோட்டக் கலைஞர்களை  வேலைக்கு வச்சுருக்காங்க.  காசுக்குப் பஞ்சமா என்ன?



நமக்கு அதெல்லாம் கட்டுப்படி ஆகுமோ? நம்ம தோட்டக்காரர் வேற மாதிரி. கத்தரியோடு தோட்டப்பக்கம் போனாலே நான் அலறி அடிச்சுக்கிட்டுப் பின்னாலேயே ஓடவேண்டி இருக்கும்.



அப்பதான்  கோவிலுக்கு இன்றைக்குப் போகலாம்னு சொன்னார் கோபால். நாளைக்குத்தானே சனிக்கிழமைன்னு  யோசிக்கும்போதே.... புது வருசத்தை முன்னிட்டுன்னு காதில் விழுந்தது.   சரின்னு கிளம்பி  ரோஸ் கார்டன் பகுதியில் நாலைஞ்சு க்ளிக்ஸோடு  ஷூட்டிங்கை  முடிச்சுக்கிட்டு  வீடு வந்துட்டோம்.






ஊருக்கு நடுவிலே  165 ஹெக்டெர் நிலம் (சுமார் 408 ஏக்கர்! 1.61 சதுர கிலோ மீட்டர் அளவு) தோட்டத்துக்குன்னே ஒதுக்கி  இருக்காங்க  நகரை நிர்மாணித்த (1856 இல் )  காலத்துலேயே!  இத்தனை வருசம் இங்கே வசித்தாலும் பலமுறை வந்து போனாலும் முழுசும் ஒன்னுவிடாம சுத்திப் பார்க்கலை இன்னும்.

வருசம் 365 நாளும் திறந்திருக்கும் இடங்களில்  இதுவும் ஒன்னு!  அனுதினமும் காலை 7 மணிக்குத் திறந்துருவாங்க.  அடைக்கும் நேரம்தான்  பருவங்களை அனுசரிச்சு, நவம்பர்  முதல் ஃபிப்ரவரி வரை  மாலை 9 மணி,  மார்ச்  மாதம் முழுசும் மாலை 8.30,  ஏப்ரலில் இருந்து  செப்டம்பர் வரை  மாலை 6.30, பின்னே அக்டோபர் மாசம்  முழுசும் 8.30 இப்படி.........

கிறைஸ்ட்சர்ச் நகருக்கு  விஜயம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் தவறவிடக் கூடாத இடம் இது!



Monday, January 04, 2016

என் சொத்து விவரம்!

இந்த புதுவருச ஆரம்பத்தில் உருப்படியா செஞ்ச ஒரு வேலை.... நம்ம நூலகத்தைப் பார்வையிட்டு புத்தகங்களின் பெயர்களை எழுதி வச்சதுதான்.  பிந்தொடரும் பயணங்களில்  வாங்கிய புத்தகங்களையே மீண்டும் வாங்காம இருக்க இது ஒரு முன்னேற்பாடு.




புத்தகக்கடைக்குப்போனதும், பட்டிக்காட்டான் முட்டாய்க்கடையைப் பார்த்தமாதிரி ஒரு பிரமிப்பு வந்துரும் எனக்கு. எதையெதை வாங்கணுமுன்னு நினைச்சுக்கிட்டுப் போனதெல்லாம் அப்படியே மறந்து போயிரும். திருப்பதி வேங்கடவனிடம் இன்னின்ன  சொல்லணுமுன்னு யோசிச்சுக்கிட்டுப்போய்  அங்கே போனதும் எல்லாத்தையும் மறந்து நின்ன காலம் ஞாபகம் வருது. இப்பெல்லாம்  நிக்கவிட்டாத்தானே சொல்றதுக்கு :-(
அதிகமா ஒன்னும் இல்லைதான். இதுலேகூட கடன் கொடுத்த புத்தகங்களை அடிச்சுக்கிட்டுப் போனவங்களும் இருக்காங்க.

பட்டியல் தயாரிப்பு,  தமிழ்ப் புத்தகங்களுக்கு  மட்டும்தான்.

 ஆங்கிலப் புத்தகப் பட்டியலைத் தமிழ்ப்புத்தாண்டு சமயம் செஞ்சு முடிக்கணும்.

பார்க்கலாம். இந்த வருசப்பயணத்தில் என்னோடு நியூஸிக்கு வர யார் யார் தயாரா இருக்காங்கன்னு !

என்ன ஒரு மகிழ்ச்சின்னா இப்போது கைவசம் இருக்கும் எல்லாப் புத்தகங்களையும் வாசிச்சு முடிச்சாச்சு.

இவைகள் இல்லாமல் கணினியில்  வாசிப்புதான்  அதிகம். வலையில் இல்லாத சமாச்சாரமா?


வெள்ளையானை எட்டு பகுதிகள் வாசிச்சு முடிச்சாச். கனமான பொருள் என்பதால்.... நிறுத்தி நிதானமாகத்தான்.

ராயபுரத்தில் இருக்கும் கத்தோலிக் சர்ச் பற்றி இதன்மூலம்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.  போய்ப் பார்க்கணும். நாங்க எப்பவும் சி எஸ் ஐ. சர்ச்சுக்குத்தான் போவது பழக்கம்.




இதுவரை வாசிச்சது கடுகளவு.  வாசிக்க வேண்டியது மலை அளவு. பிரமிப்பா இருக்கு,  முடியுமான்னு!

எனக்கு மட்டுமில்லை, நம் அனைவருக்கும் வாசிப்பு தொடரணுமுன்னு  வேண்டிக்கறேன்.  

சரி. பட்டியலைப் பார்க்கலாம். நம்ம  எஸ் ரா சொன்ன நூற்றில் சிலது(ம்)  இருக்கு என்பதில் மகிழ்ச்சி!

ஆன்மிகம்

சம்ப்ரதாய விரத பூஜாவிதானம்
சிவனருட்செல்வர்
தெய்வத்தின் குரல், 1 2 3 6
தெய்வதேனமுது
பகவத்கீதை
பாகவதம்
ஸ்ரீவிஷ்ணுசகஸ்ரநாம பாஷ்யம்
அர்த்தமுள்ள இந்துமதம்  1  & 2
கீதாச்சாரம்... பிரபுபாதா
தென்கலை  நித்யானுசந்தாநம்
திருக்கைலாயம் த்ரிசனம்
கீதை சொல்லும் பாதை
மஹாபாரதம்
ராமாயணம்
நலம்தரும் நாராயணீயம்
தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்
பாடிக்களித்த 12 பேர்
ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம்- கிரி பப்ளிகேஷன்ஸ்
ஹிந்துமதம்
ப்ரம்மா
மஞ்சுநாதர் கோயில் கத்ரி
மங்களாதேவி மங்களூர்
கோகர்ணா தலபுராணம்
ஸ்ரீரங்கம்  டெம்பிள்
அபிராமி அந்தாதி
லார்ட் ஸ்ரீ அநத்தேஸ்வரா உடுபி
தியாகராஜ  கீர்த்தனைகள் 2 புத்தகங்கள்
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பொருள்  வேளுக்குடி
திருநீர்மலை தலவரலாறு
திருப்பாவை
திருமலை திருப்பதி  தலபுராணம்
சுப்ரபாதம்    பெரிய எழுத்து ப்ரிண்ட்
தன்னையறியும் விஞ்னானம்  பிரபுபாதா
க்ருஷ்ணா.  ப்ரபுபாதா
குந்தி மஹாராணியின் போதனைகள்
பத்துமலை  தலப்புராணம்
திருக்கண்டியூர்
நாதன்கோயில்  நந்திபுரவிண்ணகரம்
108 வைணவ திருத்தல மகிமை நர்மதா பதிப்பகம்
ஸ்ரீவைஷ்ணவம்
--------------------------------------------------------------------------
பாரதியார் கவிதைகள்
திருக்குறள் தெளிவுரை
========================

அசோகமித்ரன்

மானஸரோவர்
1945 இல் இப்படியெல்லாம் இருந்தது
கரைந்த நிழல்கள்
=========================

தமிழ்வாணன்

மச்சங்களும் அதன் பலன்களும்
வீட்டு விஷயங்கள்
செலவில்லாத வைத்தியம்
ஸ்வீட் வகைகள்
பலகாரவகைகள்
அவசியமான 600 மருத்துவக்குறிப்பு
உடல்பருமனைக்குறைக்க சுலபமான வழிகள்
சத்துள்ள காய்கறி பதார்த்தங்கள்
வயிற்றுக் கோளாறுகள்
விதவிதமான முட்டைச் சமையல்
உடல்நலக்குறிப்புகள்
வீட்டுக்குறிப்புகள்
கனவுகளுக்குப் பலன்
ஊறுகாய் வகைகள்
-----------------------------------------------------

சமைத்துப்பார்  1,2,3
===========================
பாலகுமாரன்

இரும்புக்குதிரைகள்
துளசி
மாலை நேரத்து மயக்கம்
புருஷவதம்
கரையோர முதலைகள்
=====================
லா ச ரா

ஜனனி
புத்ர
கல் சிரிக்கிறது
சிந்தாநதி
கங்கா
கழுகு


----------------------------------------
ஜானகிராமன்

அம்மா வந்தாள்
ஜானகிராமன் சிறுகதைகள் தொகுப்பு  1,2
மரப்பசு
நளபாகம் ஜானகிராமன்
மோகமுள்
மலர்மஞ்சம்
========================

ஜெயமோகன்

வாழ்விலே ஒருமுறை  ஜெ.மோ
ஜெமோ சிறுகதைகள் முழுத்தொகுப்பு
பிந்தொடரும் நிழலின் குரல்
விஷ்ணுபுரம்
காடு

அறம்
இரவு   ஜெமோ
ரப்பர்  ஜெமோ
கன்யாகுமரி  ஜெமோ
ஏழாம் உலகம்
கொற்றவை
============================

ஜெயந்தி சங்கர்

நியாயங்கள் பொதுவானவை   ஜெ
திரைகடலோடி  ஜெ
குவியம்  ஜெ
தூரத்தே தெரியும் வான் விளிம்பு  ஜெ
முடிவிலும் ஒன்று தொடரலாம்  ஜெ
திரிந்தலையும் திணைகள்
பெருஞ்சுவருக்குப்பின்னே   ஜெ
வாழ்ந்து பார்க்கலாம்  ஜெ
நெய்தல்  ஜெ
மிதந்திடும் சுயபிரதமைகள்   ஜெ
ஏழாம் சுவை  ஜெ
பின்சீட்  ஜெ
மனுஷி  ஜெ
மனப்பிரிகை  ஜெ
நாலேகால் டாலர்  ஜெ
==============================
சுஜாதா

வைரங்கள்
மீண்டும் ஜீனோ
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
கணையாழியின்  கடைசிப்பக்கங்கள்
சுஜாதா கதைகள் 1,2 3
மாயா
வஸந்த் வஸந்த்
ஆதலினால் காதல் செய்வீர் சுஜாதா
கரையெல்லாம் செண்பகப்பூ
ஒரு நடுப்பகல் மரணம்  சுஜாதா
தப்பித்தால் தப்பில்லை சுஜாதா
================
புதுமைப்பித்தன் 

முழுத்தொகுப்பு  103 சிறுகதைகள்
புதுமைப்பித்தன் சிறு கதைகள்
=====================
எஸ்.ரா

துணையெழுத்து  எஸ் ரா
அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது
நெடுங்குருதி  எஸ் ரா *
துயில்  எஸ்ரா
எஸ்ரா கதைகள்
உபபாண்டவம்
மழைமான்  எஸ்ரா

=================
வண்ணதாசன்

ஒளியிலே தெரிவது
முத்துக்கள் 10
சில இறகுகள் சில பறவைகள்  வண்ணதாசன்
மனுஷா மனுஷா   வண்ணதாசன்
கனிவு  வண்ணதாசன்
சின்னு முதல்சின்னு வரை  வண்ணதாசன்
கலைக்கமுடியாத ஒப்பனைகள்  வண்ணதாசன்
உயரப்பறத்தல்  வண்ணதாசன்

=============================
இரா முருகன்

 கதைகள் தொகுப்பு
மூன்றுவிரல் இராமு
ராயர் காப்பி க்ளப்  இராமு

==========================
நீல்கண்ட்

மஹான்
வே ஃபேரர்
Seriously searching Siva  
==========================================
பாலபாரதி

சாமியாட்டம்  பாலபாரதி
அவன்  அவள் அது
ஆட்டிஸம்
துலக்கம்
===============
மதுமிதா


இரவு  
பருவம்
அக்கமஹாதேவி  கவிதை
காலம்

===============
சுந்தர ராமசாமி


ஒருபுளியமரத்தின் கதை  - சுந்தர ராமசாமி
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - சுந்தர ராமசாமி
ஜே ஜே சில குறிப்புகள்
=====================================

மற்றும்....  இவை


ராகசிந்தாமணி - பதிவர் சிமுலேஷன்
அடியாள்
மகாபலிபுரம்
மணிக்கொடி  2 பாகம்( ஜோதிர்லதா கிரிஜா)
மழைத்துளி நிலா  விமலா ரமணி

 மதன் ஜோக்ஸ்
பாலங்கள் சிவசங்கரி
 சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது  சிவசங்கரி
மாமியார்   பானுமதி
வாரம் ஒரு தகவல்  தென்கச்சி

சிரிப்போம் சிரிப்போம்
ரிலாக்ஸ் ப்ளீஸ் சுகபோதாநந்தா
அசத்தல் நிர்வாகிக்கு  அற்புதவழிகள்   அருணா சீனிவாசன்
கிளிமுற்றம்  இரா வசந்தகுமார்
யதாஸ்தானம்

கொல்லனின் 6 பெண்மக்கள் -  கோணங்கி
வனங்களில் விநோதங்கள்  லதானந்த்
வாடிவாசல் - சி சு செல்லப்பா
உருள்பெருந்தேர்

ஸி ஐ டி சந்த்ரு -  தேவன்
சீனுப்பயல் - தேவன்
மல்லாரிராவ் கதைகள்- தேவன்
சொல்லாததும் உண்மை  ப்ரகாஷ்ராஜ்
மலரும் உள்ளம்  1 & 2

விக்கிரமாதித்தன் கதை
 வினாவிடை  க்ருபானந்த வாரியார்
ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம்  முருகேசபாண்டியன்
வாடாமல்லி   சு.சமுத்திரம்
சிந்திப்போம் சிந்திக்க வைப்போம்

துளசிதளம் எண்டமூரி
மீண்டும் துளசி   எண்டமூரி
பிரமலைக்கள்ளர் வாழ்வும் வரலாறும்
சோதனையும் சாதனையும்
தொல்காப்பியப் பூங்கா

ஓநாய் குலச்சின்னம்  (தமிழாக்கம். சி. மோகன்)
அலையோசை  - கல்கி
தமிழ்ப் பழமொழிகள்  தொகுப்பு - கி வா ஜ
 சுப்ரமணியராஜூ கதைகள்
கிருஷ்ணன்நம்பி ஆக்கங்கள்

கிருஷ்ணப்பநாயகர் கௌமுதி
சாப்பாட்டுக் கடை  கேபிள் சங்கர்
சாப்பாட்டுப் புராணம்  சமஸ்
நகரத்தின் கதை  (சிங்கை சித்ரா ரமேஷ்)
லிண்ட்ஸே லோகன்  ஒய்ஃப் ஆஃப் மாரியப்பன்  வா. மணிகண்டன்

நிலவொளியில் பனித்துளிகள்
கடவுளின் காலடிச்சத்தம் - சங்கரநாராயணன்
மனக்குப்பை  சங்கரநாராயணன்
முன்னணியின் பின்னணிகள் -  சங்கரநாராயணன்
டாலர் நகரம் - ஜோதிஜி

இருவாட்சி  இலக்கிய த் துறைமுகம்
நகர்வலம்   ஞாநி
சரிதாயணம் - பாலகணேஷ்
ஆரண்யநிவாஸ் - ராமமூர்த்தி
Maori Myth

பல்லவர் காசுகள்
நாயக்கர்  கால காசுகள்
டிசம்பர் தர்பார்   எல்லே ராம்
என் பெயர் ரங்கநாயகி
கருங்கல் கோட்டை சிங்கராயன் கதைகள்

அவனும் இவனும்
பலநேரங்களில் பலமனிதர்கள் - பாரதிமணி
துளசிமாடம்-  நா.பா.
நான் வித்யா  - வித்யா
தலைகீழ் விகிதங்கள்-  நாஞ்சில்நாடன்

இப்போது அலை  இங்கு வருவதில்லை -  கிருஷ்ணன் ரஞ்சனா
கூப்பிடுவது எமனாக இருக்கலாம்  - வாமு கோமு
செவக்காட்டுமக்கள் கதைகள் - கழனியூரான்
ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு - எழில்வரதன்
ஊர்க்கதைகள் - நீலகண்டன்

கோபல்ல கிராமம் - கி.ரா
 கோபல்ல கிராமத்து மக்கள் - கி.ரா
கோணல்பக்கங்கள்  - சாரு
கிராமங்கள் பேசுகின்றன
ஜன்னலொட்டி அமரும் குருவிகள் - நாகரத்தினம் கிருஷ்ணா

தமிழா
பிரதாபமுதலியார்  சரித்திரம்
நல்லா எழுதுங்க நல்லதையே எழுதுங்க
கள்ளம் - தஞ்சை பிரகாஷ்
அடைமழை - ராமலக்ஷ்மி
இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி

வாழ்வின் விளிம்பில் ஜி எம் பாலசுப்ரமணியன்
சோளகர் தொட்டி - பாலமுருகன்
காலம்
விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்
காலங்காலமாய்  சா.கந்தசாமி

அள்ள அள்ள  பணம்
நாளை பிறந்து இன்று  வந்தவள்
மூலிகைகலைக் களஞ்சியம்
பூமியின் பாதிவயசு
புலிநகக்கொன்றை

என் நிலைக்கண்ணாடியில் உன்முகம் சொக்கன்
வசந்த மேகம் -லக்ஷ்மி
தசாவதாரம்  - பொன்னம்மாள்
Transcendence  Dr. Abdul kalam


PIN குறிப்பு: 1  தமிழ்வாணன் புத்தகங்களான்னு  நினைப்பவர்களுக்கு:  இவையெல்லாம் 1978 இல் பூனா வாழ்க்கையில் வாங்கியது. அப்பெல்லாம் VPP யில் புத்தகம் வாங்கிக்கலாம்.

2     ஐயோ   பாவம்..... இவ்ளோதானான்னு நினைப்பவர்கள் புத்தகங்களை  எனக்கு  அனுப்பலாம்.
===========================================



Friday, January 01, 2016

2016


நமக்கு மட்டும் வருசப்பிறப்புகளுக்குப் பஞ்சமே இல்லை! இந்தியர்கள்  பல மாநிலங்களில்  இருந்து இங்கே குடியேறி இருப்பதால் வருசம் முழுசும்  எதாவது ஒன்னு தொடர்ந்து  வந்துக்கிட்டே இருக்கு. இதைப்பற்றி முந்திகூட சொல்லி இருக்கேன். மல்ட்டிக்  கல்ச்சுரல்  சொஸைட்டி பாருங்க.   ஆங்கிலப் புத்தாண்டில் ஆரம்பிச்சு  தீபாவளிக்கு மறுநாள்  வரை புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்தான்.  இப்படி இருந்தும்கூட இந்தியாவுக்கு ஒரு வருசப்பிறப்புன்னா அது உகாதியன்றுதான்னு ஒருத்தர் புஷ்கரில் சொன்னார்!

New year's Eve நிகழ்ச்சியா நம்மூரில் ஒரு கச்சேரி :-)
பதினோரு மணிக்குக் கிளம்பிப்போய் ரெண்டு பாட்டு கேட்டுட்டு பட்டாஸ் பார்த்துட்டு வந்து இந்தப் பதிவைச் சுடச்சுட வெளியிடுகின்றேன்.




Happy New Year  !   


இந்த  ஜனவரி  முதல் தேதி நாம் கொண்டாடும் ஆங்கிலப் புத்தாண்டு முதல்  டிசம்பர் 31 இரவு  கொண்டாடப்போகும் நியூ இயர்ஸ் ஈவ் வரை  சகலருக்கும் நாட்கள் நல்லபடி அமையட்டும் என  நம்  துளசிதளத்தின் மூலம் உங்கள் அனைவரையும் வாழ்த்துகின்றேன்.