Friday, January 15, 2016

பொங்கல் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது!

லீவு லெட்டர்.  பொங்கல்  விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது!

கொஞ்சம்  வேலை நெருக்கடியாப் போயிருச்சு. அதனால்  நம்ம லக்ஸுக்கு மட்டும் புது உடை தைச்சேன்.  ஒருவழியா நேத்து இரவு  உடை அலங்காரம் முடிஞ்சது.  இன்றைக்குப் பொங்கல் பண்டிகைக்கு வழக்கம்போல்  ஊர் உலகத்துக்கு முந்திக்கிட்டு பொங்கல்கள் பொங்கியாச்.




சின்னதா ஒரு சேஞ்ச். பாயஸத்துக்குப் பதில்  பாஸுந்தி.

நம்மோடு  திருநாளைக் கொண்டாட நண்பர் வந்துருந்தார் . நம்ம பெருமாளுக்கும் தாயாருக்கும் ஸ்ரீஸூக்தம் சொல்லி முடிச்சு தீபாராதனை ஆச்சு.  அப்புறம் சாப்பாடு. சக்கரைப்பொங்கல், வெண் பொங்கல்,  மெதுவடை, சட்னி, சாம்பார், பாஸுந்தி, மாம்பழம், வெள்ளரிக்காய், ஆப்ரிகாட், ப்ளம்ஸ் வகைகளுடன்  உணவு!



விசேஷம் என்னன்னா, சாம்பாரில் போட்ட காய்கறிகள்     கத்தரி, பீன்ஸ், தக்காளி, வெங்காயம் எல்லாம் நம்ம வீட்டுத் தோட்டத்தில் இருந்து.   ஸாலட்டுக்கான வெள்ளரிக்காயும், சட்னியில் சேர்த்த கொத்தமல்லி, பச்சை மிளகாய்கள் எல்லாம் கூட நம்ம தோட்டத்து விளைச்சல்கள்.  கூடுதல் ருசின்னு நாங்களே சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போனோம்:-)




சூரியனும் போனால் போகட்டுமுன்னு  நாலுமணிக்கு வந்து எட்டிப் பார்த்தான்.  



 எல்லோரும் மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடுங்க.
நமக்கு ஒரு பயணம் வாய்ச்சுருக்கு.  பெருமாள் கூப்ட்ருக்கார்.  சிங்காரச்சென்னை எப்படி இருக்குன்னு  ஒரு பார்வை பார்த்துட்டுத் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளுக்குப் போறோம்.

அர்ரியர்ஸ் வச்சருக்கும் மாணவக் கண்மணிகள்  விடுமுறை காலத்தில் அதையெல்லாம் முடிச்சுருவாங்கன்னு  நினைக்கிறேன் :-)

அடுத்த மாதம் வரை  மகிழ்ச்சியாக  விடுமுறையைக்  கொண்டாடுங்கள்.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாளுக்கான வாழ்த்து(க்)கள்.


16 comments:

said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

said...

புத்தாடையில் ஜொலிக்கிறார் லக்ஷ்மி. இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்:)!

said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...

said...

இனிய வாழ்த்துகள்.

said...

பெருமாள் குடும்பமும், துளசி குடும்பமும் படு ஜோர்.
இந்தப் பொங்கல் கட்டாயம் இனிப்புதான். அன்புள்ளவர்களுக்கு எல்லாம் இனிதே.
ரஜ்ஜு கேடரிக்குக் கிளம்பியாச்சா.
அவனுக்கும் சேர்த்து இனிய பொங்கல் வாழ்த்துகள். பயணம் சுகமாக அமைய வாழ்த்துகள்..

said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

said...

ஆஹா !கொள்ளை அழகு காப்பர் சல்பேட் ப்ளூ கலர் பட்டு உடை ..அழகான அலங்காரம்
வீட்டு விளைச்சல் எப்பவுமே டாப் தான் ..சுவையும் ருசியும் அருமையாக இருக்கும் .
நானா நிறைய அர்ரியர்ஸ் வைச்சிருக்கேன் :) ஒரே அட்டெம்ப்டில் முடிக்கபார்க்கிறேன் :)
சந்தோஷமா ஊருக்கு போயிட்டு வாங்க ..

said...

ஆகா! அருமை. அருமை.

சென்னை உங்களை வரவேற்கிறது :)

said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

said...

என் கண்ணுக்குத்தான் சாம்பாரும் சட்னியும் தெரியலையா? (சன்னிதில) அல்லது, இது இரண்டும் பண்ணிக்கொண்டிருக்கும்போதே, மற்றவற்றை சன்னிதியில் வைத்துவிட்டீர்களா?

விக்ரகங்கள் அருமை. பொங்கல் வாழ்த்துக்கள்.

said...

படங்களும் பதிவும் மிகவும் பிரமாதமாக உள்ளன. பாராட்டுகள்.

தங்களின் இந்தியப்பயணம் இனிமையாக அமைய நல்வாழ்த்துகள்.

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

said...

I ran into you and Mr.Gopal in GRT Lotus service apartment in Venkatraman Street , Chennai. I am regular reader of your blog. I was staying there until yesterday. If you are going to be in Chennai for few more days, I would like to just come and say hi to you and Mr.Gopal.

said...

Hi Deiva.

What a surprise!!! We will be here for few more day.

said...

Hi Deiva.

What a surprise!!! We will be here for few more day.

said...

I was unable to meet you :( I was in and out of chennai few times with hectic schedule. Hope our paths cross again.