Monday, June 09, 2014

எதிர்பாராதவை!!!

மறுநாள் வெள்ளிக்கிழமை.  மைத்துனர், அண்ணன், தாம்பரம் அத்தை வீடுகளுக்கு விஜயம். நாம்  காசி, ப்ரயாகை, அயோத்யா வென்று (??)  வந்த வரலாறு,  சூதர்களால் பாடப்படும் என்று காத்திருக்க முடியுமா?  நாம்தான்  பாடிக் 'கொல்லணும்'!!!  ஒவ்வொரு வீடும் கடந்தபோது  அங்கங்கே கொஞ்சம்கூடுதல் மசாலாக்கள் தூவப்பட்டன சுவைக்காக:-)  கடைசியில் கவிதாயினி காற்றுவெளி வீட்டுச் சந்திப்புடன் அன்றைய சுற்றல் நிறைவடைந்தது.

இன்றுதான் சென்னை புத்தகத் திருவிழா தொடக்கம். முதல்நாள்  எல்லாக் கடைகளும் வந்திருக்காது என்பதால் மறுநாள்  சனிக்கிழமை  திருவிழா விஸிட் வச்சுக்கலாமுன்னு திட்டம். நம்மதோழிகள்  கூட்டத்துக்கு  அனைவரும் வருகன்னு 'அழைப்பிதழ்'  அலைபேசி வழியே   சொல்லியாச்சு .
அப்படியே கிளம்பிப்போகாம,  முதலில்  எழுத்தாளர் சந்திப்பு மனசுக்கு  விருந்து,  அப்புறம் பசிக்கும் வயிற்றுக்கு விருந்து, கடைசியில்  கண்களுக்கும் கருத்துக்குமா ஒரு பெரிய விருந்து (புத்தகத்திருவிழா!) என்று முப்பெரும் விருந்துகளா ஒரு ஏற்பாடு.

முதலில் ஆரம்பிச்சவுடன் ஆர்வத்துடன்  'வரேன் வரேன்'னு சொன்ன  மக்கள்ஸ்,  தீர்க்கமா சிந்திச்சு  ஒவ்வொருத்தரா ஜகா வாங்கினது வேற கதை.

  இதுலே நம்ம அலைகள் அருணா,  கொஞ்சம் லேட்டா வர்றேன்னு சொல்லி அதுக்கான காரணத்தையும் சொன்னாங்க.

ஒரு கல்யாணத்துக்குப் போகவேண்டி இருக்காம்.  அறுபதாம் கல்யாணம். நல்லது. நமக்குத்தான் வாழ்த்த வயசும் மனசும் இருக்கேன்னு  'வாழ்க மணமக்கள்'  என்றேன். உங்களுக்கும் தெரிஞ்சவங்கதான்ப்பா என்றதும்  ஆர்வம் தலை தூக்குச்சு. யார் யார்?

"அதாம்ப்பா, உங்க அறுவதுக்கு வந்துருந்தாங்களே....  ராஜகோபால், அவருடைய தங்கைக்கு.பெயர் மறந்து போச்சு....அழைப்பிதழைப் பார்க்கணும் "

"அதெல்லாம் வேணாம்.  மாப்பிள்ளை பெயர் ஆராவமுதன் தானே? "

"கரெக்ட். எப்படிப்பா இவ்ளோ சட்னு?"

"ஹ ஹஹ் ஹா... அதான் துளசி!  பொண்ணு நமக்கு ரொம்பவே வேண்டப்பட்டவங்கதான்.  நாம் இந்தியா வந்த  சேதி அவுங்களுக்குப் போகலை.  அதெல்லாம் நோ ஒர்ரீஸ். எங்கே எப்போன்னு சொல்லுங்க."

 "****  ***  ****  ***** "

 "ஓக்கே. கல்யாண ஹாலில் சந்திக்கலாம். அங்கிருந்து நேரா  முதல் விருந்து."


முழுத் தகவல் கிடைச்சதும் மனசுக்குள்ளே எழுதிக்கிட்டேன். அப்புறம் தாம்பரம் அத்தை வீட்டுக்குப் போனப்போ, புதுசா முளைச்சுருக்கும் நாதெள்ளா பளிச்ன்னு கண்ணில் பட்டுச்சு. அங்கே போய்  ஒரே மாதிரி ரெண்டு பரிசுப்பொருட்கள் வாங்கிக்கிட்டோம்.  ஒன்னு பரிசு கொடுக்க.  அப்ப இன்னொன்னு? இதுவும் பரிசு கொடுக்கத்தான். நமக்கு நாமே திட்டம்:-)


சனிக்கிழமை வைகுண்ட ஏகாதசி.  அன்று காலையில்  கிளம்பி கல்யாண ஹாலுக்குப் போறோம்.  தெரு திரும்பினால்,  தேசிகாச்சாரி ரோடு. கொஞ்சதூரத்தில் எதிர்கொண்டழைக்க வர்றான் 'அவன்' !  கருட வாஹனம்!  வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கி ஓடினேன்.  எல்லாக் கோவில்களிலும் இன்னிக்குக் கூட்டம் அம்மும்நாள்.  சொர்க்கவாசல் எல்லாம் கனவுதான். பேசாம துவாதசிக்குத் தரிசிக்கலாமுன்னால்..... அதெல்லாம் ஒன்னும் வேணாம். இன்னைக்கே பார்த்துக்கோன்னு ......  அப்படி ஒரு கருணை!




நான் பார்த்தேன்னு தெரிஞ்சதும்  போதுமுன்னு பக்கத்துத் தெருவில் திரும்புமுன்  சட்னு க்ளிக்கினேன். பின்னழகுதான் பிடிபட்டது!

கிடைச்சவரை மகிழ்ச்சியேன்னு  தலையைத் திருப்பினால் நம்ம சேஷாத்ரி!  'என்ன இது, நம்ம   அடையார் பதுமனை விட்டுட்டு  இங்க?' ன்னால், கல்யாணப்பிள்ளை இவருக்கு நண்பராம். நினைவுக்கு  வந்துருச்சு.   (இப்போ சிலவருசங்களா ரெண்டு பேரும்  தமிழ்நாட்டுக்கோவில்களில்  போய் ப்ரபந்தம்  சொல்லும் கோஷ்டியில் !)

மேலே படம்: நம்ம சேஷாத்ரி 

"அட! ஆமாம்.  அப்ப நீங்க பிள்ளை வீட்டுக்காரர்!!"


ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமம்,  ஸ்ரீ  ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்நிதி.  இங்கிருந்துதான் கிளம்பிப் போயிருக்கார் உற்சவர்!  மூலவர் சர்வ அலங்காரத்தோடு நிகுநிகுன்னு  ஜொலிக்கிறார். அச்சு அசல் அவனே!  ஜருகு சொல்லவோ, கைப்பிடித்துக் கடாசவோ  யாரும் இல்லை:-)   நிம்மதியா தரிசனம் ஆச்சு.

இங்கிருக்கும் கல்யாணஹாலுக்குத்தான் போகணும். இது ரெண்டாம் முறை. போன விஸிட், நம்ம வல்லியம்மாவின் பேரன் உபநயனம்.  அப்பவும் பெருமாளின் தரிசனம் திவ்யமா அமைஞ்சது!

ஹாலுக்குள் நுழையறோம்.  விழாச்சடங்கு மும்முரமா நடக்க, ஏறிட்டுப் பார்த்த கல்யாணப்பெண்ணுக்கு, முகத்தில்  டென் தௌஸண்ட் வாட் !  ஹைய்யோ!!!  இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டொம்லெ:-)))

உள்ளே போய் இடம் பிடிச்சு உக்கார்ந்த அடுத்த விநாடி,  மணமகளின் இளைய மகன், ஓடோடி வந்து விசாரிக்க ஆரம்பிச்சதும், எல்லாம் அப்புறம் சொல்றேன்னு  அவரை  மணமேடைக்கு  அனுப்பினேன்:-)  அதுக்குள்ளே, கல்யாணப் பொண், டிஃபன் சாப்பிடப்போன்னு கையால் சைகை காமிக்கிறாங்க.

விழா நல்லபடியா சாஸ்த்திரப்படி  நடந்தது.  வாத்தியார் ஸ்வாமிகளிடம், 'எங்க அக்கா  வந்துருக்கா.  எங்க அக்கா  வந்துருக்கா.  நமஸ்காரம் பண்ணிக்கறோ'முன்னு  சொல்லிச் செஞ்சப்ப மனம்  இளகினது உண்மை.  பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ,இவளுக்கு எப்படித் தெரியும் என்ற கேள்வியும் வியப்பும்  கண்களில் தொக்கி நின்றன:-)

நம்ம பூனா வாழ்க்கையை என் செல்லச் செல்வங்களில் எழுதுனபோதும், ரெடிமேட் வந்த சமயங்களிலும்  நம்ம கும்பகோணம் கோமளா மாமியைப் பத்தி நிறையச் சொல்லி இருக்கேனோல்யோ?  அந்த மாமிக்கு நான்  மகள் என்ற வகையில்  கல்யாணப்பொண்ணுக்கு நான் அக்கா! இப்ப  புரிஞ்சு போயிருக்குமே:-)

நண்பர்கள் உறவினர்கள் என்ற கூட்டத்தில் கலந்து கொஞ்சம் கதை பேசிட்டுக் கிளம்பிட்டோம். இ(வி)ருந்து  சாப்பிடலைன்னு  லேசாக் கோபம், பொண்ணுக்கு.  நம்ம  தோழிகள் அறைக்கு வந்து காத்திருக்கப் போறாங்களேன்னு  எனக்கு உள்ளூற சின்னதா பதைப்பு.  கையில் ஒரு ஜாங்கிரியை எடுத்துக்கிட்டு கிளம்பினோம். இன்னொருக்கா ஸ்ரீநியின் தர்ஷன் ஆச்சு.

உண்மைக்குமே மனசு மகிழ்ச்சியால் நிரம்பி வழிஞ்சது. கோமளா  மாமி.......  எப்பேர்ப்பட்ட புண்ணியாத்மா!!!  மாமின்னு நான் கூப்பிடும் என் அம்மா.  நான் ஃபிஜியில் இருந்து எழுதும் கடிதத்தை,  கிணத்தடி வெயிலில் நின்னு  வெறுமனே உத்து உத்துப் பார்த்து  நெஞ்சோடணைத்து   கண்களில் நீர் ததும்ப   மீண்டும்  மீண்டும் பார்த்துக்கிட்டே இருப்பாங்களாம். இது மாமியின் மருமகள் சொன்னது. மாமிக்குக் கண்பார்வை ரொம்ப மோசமாப்போன தருணம். அப்புறம் மாமிக்குப் படிக்கவும் தெரியாது.  மனம் நிறைய அன்பைத்தவிர வேறொன்னும் இல்லாத ஒரு ஜீவன்.  

வேடிக்கை என்னன்னா, தகவல் கொடுத்த தோழி  அங்கே வரவே இல்லை !!! அட ராமா!!!!

பிரபலங்கள் வரிசையில் நம்மைத்தவிர வேறொருவரும் வந்துருந்தார்:-)


கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது:-)

தொடரும்......:-)


12 comments:

said...

புதுசா முளைச்சுருக்கும் நாதெள்ளா பளிச்ன்னு கண்ணில் பட்டுச்சு. அங்கே போய் ஒரே மாதிரி ரெண்டு பரிசுப்பொருட்கள் வாங்கிக்கிட்டோம். ஒன்னு பரிசு கொடுக்க.
>>
யாருக்காவது பரிசளிக்கனும்ன்னா நீங்க நாதெள்ளாஆவுலதான் வாங்குவீங்களா!? அப்படின்னா ஜூலை 19க்கு நம்ம வீட்டுக்கு வாங்களேன். அன்னிக்கு எங்க கல்யாண நாள்.

said...

வாங்க ராஜி.

ஆஹா.... ஜூலை 19 ஆஆஆஆஆஆ நோ ஒரீஸ்ப்பா. உங்களுக்கும் நாதெள்ளாவில் வாங்கினால் போச்சு

அட்வான்ஸ் கல்யாண நாள் வாழ்த்து(க்)கள்.

இந்தக் கல்யாணத்துக்குப் பரிசு வாங்கியது கோமளா மாமிக்கு வாங்குனதாகவே நினைப்பு. அதான் கொஞ்சம் கையை சுருக்காமல் விட்டுட்டேன்:-)))

said...

நல்ல கல்யாணம்தான்.

said...

//'எங்க அக்கா வந்துருக்கா. எங்க அக்கா வந்துருக்கா. நமஸ்காரம் பண்ணிக்கறோ'முன்னு சொல்லிச் செஞ்சப்ப மனம் இளகினது உண்மை.//


அருமை அருமை ், நல்ல சர்ப்ரைஸ்

கருட சேவையும் அருமை

said...

அதெப்படி கல்யாணப்பெண்ணின் டென் தௌஸண்ட் வாட்ஸைக் கூட அப்படியே க்ளிக் பண்ணியிருக்கீங்க? சூப்பர் டீச்சர். நெகிழவைத்த நிறைவான தருணங்கள்... அப்புறம் அந்த பிரபலம்.. தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் வரதராஜன் அவர்கள்தானே?

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

நல்லதுதான். பின்னே? 60 ஆச்சே:-)

said...

வாங்க கைலாஷி.

கோவில்களில் கூட்டம் அலைமோதுமேன்னால்... இங்கே

'அவனே' நேரில் வந்துட்டானேன்னு இன்னும் கூட வியப்பே!!!

said...

வாங்க கீத மஞ்சரி.

கையில் ரெடியா இருந்த கெமெராதான் காரணம்:-)))

எஸ்ஸு! அவரேதான்.

அவர் நியூஸ் வாசிச்சு நான் பார்க்கலை:( அஃபீஸியலா இந்தியாவை விட்டு 33 வருசமாச்சே.

நாடகத்தில் நடிக்கிறார்னு தெரியும்.

said...

டி.டி. யில் நியூஸ் வாசித்தார்....

இனிமையான அதிர்ச்சி மணப்பெண் கண்களில் தெரிகிறது - சரியான நேரத்தில் எடுத்த புகைப்படம்! :)

said...

இனிய நட்புகள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அதுக்குத்தான் கையில் கெமெராவை ரெடியா வச்சுக்கறது:-)))))

said...

வாங்க மாதேவி.

நன்றீஸ்ப்பா.